DESK TOP PUBLISHING. என்பதின் சுறுக்கமே DTP, முந்தைய காலத்தில் பிரிண்டிங் சம்பந்தமான வேலைகளை கையினால் அச்சு கோர்த்து செய்துவந்தனர். அதனை நவீன படுத்தும் வகையில் மாறிவரும் கணிப்பொறி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் இந்த DTP , இது மூன்று மென்பொருள்கள் உள்ளடக்கியது ஆகும். முதலில் அதன் பயன்களை காண்போம்.
பயன்கள்:
பயன்கள்:
1. லெட்டர் தலைகள் தயாரிப்பது,
2. பில்புக்குகள் தயாரிப்பது.
3. பிட் நோட்டிஸ் தயாரிப்பது.
4. வால் நோட்டிஸ் தயாரிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்புகள் வடிவமைப்பது.
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்யலாம்.
8. மாதிரிப்படிவங்கள் உருவாக்குவது. .
9. LOGO உருவாக்குவது, (நிறுவனத்தின் குறியீடு)
10. விசிட்டிங் கார்டுகள். (அறிமுக அல்லது முகவரிச்சீட்டு)
11.காலன்டர்கள் தயாரிப்பது. ( நாள்காட்டி)
12. டைரிகள், புத்தகங்கள் உருவாக்குவது.
12. குடும்ப/ நண்பர்கள் திருமண அழைப்பு பத்திரிக்கைகள் தயாரிப்பது..
DTP யை வியாபரங்களின் விளம்பரத்திற்காகவும், கல்லூரி மாணவர்களின் புராஜெக்ட் வொர்க் போன்றவைகளுக்காகவும், அலுவலகங்களில் மாதிரிப்படிவம், வார,மாத, நாள் இதழ் போன்ற பத்திரிக்கைகளுக்காகவும், பேக்குகள், துணிகள் போன்றவற்றிற்கு டிசைன் செய்வதற்காகவும், இன்னும் பல நல்ல விசயங்களுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
DTP யின் அடங்கிய மென்பொருட்கள்:
பெரும்பான்மையான இடங்களில் DTP என்றால் மூன்று மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
1.ADOBE PAGEMAKER
2.COREL DRAW
3.ADOBE PHOTOSHOP
இந்த மூன்று மென்பொருட்கள் மூலம், மேலே சொன்ன அனைத்து வேலைகளையும் முடித்து விடலாம்.
1.ADOPE PAGEMAKER :
இந்த மென்பொருள் மூலம் BOOKS, VISITING CARDS, BILL BOOK , NOTICE , FORMS, INVITATION போன்ற வேலைகளை சுலபமாக செய்யலாம்.
2. COREL DRAW:
இந்த மென்பொருள் மூலம் அனைத்துவகையான மல்டி கலர் வேலைகளும், ரப்பர் ஸ்டாம்ப் டிசைன்களும், பேக்குகள்,பைககள் போன்றவற்றின் டிசைன்கள் மற்றும் லோகோக்கள்(LOGO) தயாரிக்கலாம்.
3. PHOTOSHOP:
இதன் மூலம் புகைப்படங்களில் என்னென்ன மாற்றங்கள் தேவையோ அனைத்தையும் செய்யலாம். பேனர்கள் டிசைன், புத்தகங்களில் முன்பக்கம் டிசைன், இன்னும் பல வகையான வேலைகளையும் செய்யலாம்.
ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக அடுத்த தொடரில் காண்போம்…..
மறுமொழியொன்றை இடுங்கள்