இஸ்லாம்தளம்

மார்ச்31, 2009

அசத்தியம் அழிந்தே தீரும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்குர்ஆனும், ஸஹீஹான ஹதீஸ் தொகுப்புகளும் 1400ஆண்டுகளுக்கு மேலாக இறையருளால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அல்குர்ஆனின் மொழியாக்கமும், ஸஹீஹான ஹதீஸ்கள் தொகுப்பும் நமது முன்னோர்களுக்கு முழுமையாக கிடைத்தனவா என்றால் இல்லை. மாறாக இஸ்லாமிய நூல்கள் என்ற பெயரில் பல கட்டுக்கதைகள் நிரம்பிய நூல்களே உலா வந்து கொண்டிருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை அவற்றில் சில:

1.ஜெய்தூன் கிஸ்ஸா, 2.ஷம்ஊன் கிஸ்ஸா 3.விரகு வெட்டியார் கிஸ்ஸா 4.நான்கு பக்கீர்ஷா கிஸ்ஸா 5.தமிமுல் அன்ஸாரி கிஸ்ஸா 6.பெண் புத்தி மாலை 7.ராஜமணி மாலை 8.ரசூல் மாலை 9.மீரான் மாலை 10.பப்பரத்தி மாலை 11.தாரு மாலை 12.முஹையித்தீன் மாலை 13.அதபு மாலை 14.முனாஜாத் மாலை 15.நூறு மசாலா 16.வெள்ளாட்டி மசாலா 17.குறமாது 18.தரிக்குவ் ஜன்னா 19.திருமுடி இறக்கிய ஹதீது 20.மஸ்தான் ஸாகிப் பாடல் 21.சலவாத்து பாட்டு 22.மெய்ஞானரத்தின அலங்கார சிந்தனை 23.முகையித்தீன் ஆண்டவர்கள் சத்துரு சங்காரம் 24.ஞானரத்தின குறவஞ்சி 25.சீறாப்புராணம் 26.பர்னபாஸ் பைபிலிருந்து காப்பி அடித்த சில பிக்ஹூ சட்ட நூல்கள் மற்றும் பிக்ஹூ கலைக் களஞ்சியம் இன்னும் பல குர்ஆன் ஹதீஸுடன் முரண்படும் பல மஸாயில் தொகுப்புகள்.

மேற்காணும் நூல்களைப் படித்த நமது முன்னோர்களில் பலர் அவை குர்ஆன் ஹதீஸுக்கு உட்பட்டவையே என நம்பிக்கைக் கொண்டனர். அதற்குக் காரணம் அவற்றை ஒத்துப் பார்ப்பதற்கு குர்ஆன், ஹதீஸ் மொழியாக்கம் அன்று முழுமையாக எளிதில் கிடைக்கவில்லை. அதன் விளைவு றைவனுக்கு இணைவைத்தலும் மற்றும் பில பித்அத்களும் வணக்கம் என்ற பெயரில் இரண்டறக் கலந்து விட்டன. மேலும் பிறமதச் சடங்குகளை பல்வேறு பெயரில் கடமை என்ற நம்பிக்கையில் நமது முன்னோர்கள் அரங்கேற்றினர். அதற்கு சில உலமாக்களும் துணை போனார்கள்.

உதாரணமாக தாயத்து அணிவது, பால்கித்தாப் என்ற ஜோஸியம் பார்ப்பது, றை இல்லம் நோக்கி தொழ வர வேண்டியவர்கள் இணை இல்லம் (தர்ஹா) நோக்கி ஓடியது, இறைவனிடம் கேட்பதற்கு பதிலாக இறந்தவர்களிடம் கேட்பது, வீடு கட்ட துவங்கும்போதும், நிலை வைக்கும்போதும் பிற மத சடங்குகளைச் செய்வது அல்லது செய்ய அனுமதியளிப்பது, இறந்தவர்களுக்கு 7, 10, 40 மற்றும் வருட பாத்திஹா ஓதுவது, இருட்டு திக்ரு, ராத்திபு மற்றும் அர்த்த பேதங்கள் நிறைந்த சலாத்துன்னாரியா முதல் சுப்ஹான மவ்லூது போன்ற கவிதைகள் பாடுவது சடங்குகள் சம்பிரதாயங்கள் ஆகியன.

ஆனால் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ப்போது குர்அன், ஹதீஸ் மொழியாக்கம் தமிழில் எளிதாக கிடைப்பதால் நிச்சயம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. ஆயினும் மக்களிடையே பெருகிவரும் விழிப்புணர்ச்சிக்கு எதிராக சில புரோகிதரர்கள் அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆனை மொழிபெயர்ப்புடன் படிக்காதீர்கள். அரபியில் ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உள்ளன ஆதலால் குர்ஆன் உங்களூக்கு விளங்காது என்பதாக கூறும் இவர்களுக்கு அல்லாஹ் குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியாதவாறு முத்திரை வைத்து விட்டான் போலும்.

அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

(மனிதர் சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு ந்த குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கியிருக்கிறோம். எனவே (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டா? (அல்குர்ஆன் 54:17)

எனவே குர்ஆன், ஹதீஸ்களை முழுமையாக நன்கு படியுங்கள்.அப்போது தான் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை அறிய முடியும். மேலும் (குர்ஆனை) சத்தியத்தை அறிந்து பின்பற்றினால்தான் மறுமையில் வெற்றி காண முடியும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அத்தகைய நல்பாக்கியத்தை தந்தருள்வானாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஈமானைப் பாழாக்கும் செயல்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சி வானங்களிலும், பூமியிலும் உள்ளது. அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ, துணை செய்பவனோ வேறு எவருமில்லை. இதை நீங்கள் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)

நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வருகிறது. இப்படித்தான் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பிக்கை (ஈமான்) கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய க்கால கட்டத்தில் முறையான மார்க்க அறிவு இல்லாத எத்தனையோ முஸ்லிம்கள் புரியும் மூடப் பழக்கங்களும், அனாச்சாரங்களும் நம்முடைய இறை நம்பிக்கையைத் தகர்த்து சின்னாபின்னப் படுத்துவதை கண்டு வருகிறோம்.

உதாரணமாக, உலக ஆதாயம் கருதி தமிழகம் முழுவதும் பரவலாக ஓதப்பட்டு வரும் மவ்லூது, புர்தா, தர்கா நிகழ்ச்சிகள் இறந்தவர்களுக்காக செய்யும் சடங்குகள் முதலியவைகளை ஆராயும்போது முஸ்லிம் சகோதரர்கள் தம்மை அறியாமலேயே ஷைத்தானின் கோரப்பிடியில் சிக்கி ஈமானை இழக்கிறார்கள். இவ்வுலக தேவைகளையும், மறுஉலக தேவைகளையும் பூர்த்தி செய்து தருபவன் அல்லாஹ் ஒருவன்தான்.

ஒரு உண்மை முஸ்லிம் அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய நல் அமல்களைச் செய்து அவனது திருப் பொருத்தத்தைப் பெருவதில்தான் கவனமாக இருப்பான். அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் ஏவியவற்றை எடுத்து நடந்து, தடுத்தவற்றை விட்டும் முழுமையாகத் தவிர்த்து நடப்பான். முஸ்லிம்களுக்கு இம்மை, மறுமை இரு உலக தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான். இதில் எந்த முஸ்லிமுக்கும் சந்தேகமே இருக்க முடியாது.

அல்லாஹ்வின் மகத்தான பண்புகளை அவனது படைப்புகளுக்கு கொடுத்து இயற்றப்பட்ட கவிகளுக்கு மார்க்க அறிவு குறைந்த பொதுமக்கள் தான் பலியாகிறார்கள் என்றில்லை, கற்றறிந்த “மவ்லவிகளும்” இந்த ஷிர்க்கான கவிதைகளுக்கு துணைபோவதை நாம் சர்வ சாதரணமாகக் காண்கிறோம்.

மவ்லிதும், புர்தாவும் பகழ்பாக்கள் எனவே அதனை ஓதுவதில் தவறில்லை என்று மவ்லவிகள் கூறுகின்றனர். எந்த முஸ்லிமாவது தம் வீட்டில் ரசூல்(ஸல்) அவர்களது புகழ் பாடவேண்டும் என்ற நிய்ய(எண்ண)த்தில் தான் மவ்லிது, புர்தா ஓதுகிறாரா? இல்லை….. நிச்சயமக இல்லை. ரபிய்யுல் அவ்வல் 12 நாட்களிலும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் முறை வைத்து ஏற்பாடு செய்கிறார்களே, இது நபி(ஸல்) புகழ் பாடவா? (அது புகழே அல்ல என்பது வேறு விஷயம்)

தங்களுக்கு பரகத் வருவதற்கும், கஷ்டங்கள் நீங்குவதற்கும் தான் மவ்லிது, புர்தாக்களை ஓதி வருகிறார்கள். இந்த நிய்யத்து ஈமானையே பாழாக்கி விடும் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?

மேலும் வெள்ளி, திங்கள் கிழமை இரவுகளில் ஓதப்பட்டு வரும் புர்தா நிகழ்ச்சிகளில் வினோத வேடிக்கைகளை செய்து காட்டுகிறார்கள். புர்தா மஜ்லீஸ் நடைபெரும் ஊரில் பல குடும்பங்களிலிருந்து “பாட்டிலில் தண்னீரை ஊற்றி” அந்த சபையில் வைத்துவிடுவார்கள். புர்தாவை ஓதுபவர்கள் அனைவரும் அப்பாட்டிலில் ஊதி சப்ளை செய்யும் காட்சி ஈமானுள்ள முஸ்லிம்கள் வெட்கித் தலை குனியச் செய்யும் காட்சியாகும்.

தண்னீரை அருந்தும் முன்பு அதனை ஊதிக் குடிக்காதீர்கள் என்று சொன்ன நபி (ஸல்) அவர்களின் ஹதீதை மறந்துவிட்டார்கள் போலும்!

நபி (ஸல்) அவர்கள் தண்னீர் பாத்திரங்களில் மூச்சு விடப்படுவதையும் அல்லது அதில் ஊதப்படுவதையும் தடை செய்துள்ளார்கள். (அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)

சமீப காலங்களில் மவ்லிது, புர்தா கவிதைகளின் அர்த்தங்கள் வெளிவந்து உள்ளன. இவற்றை கவனமாக ஊன்றிப் படிக்கும் எண்ணற்ற முஸ்லிம்கள் தமது தவறிலிருந்து விலகி, தவ்பா கோருவதை பார்த்து வருகிறோம். ஆனால் மவ்லவிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பலர் தெளிவு பெறுவதைக் காண முடிவதில்லை. காரணம் அவர்கள் குழப்பத்தில் இருந்தால்தானே தெளிவு பெருவதற்கு! அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். மவ்லிது புர்தா கவிதைகளின் அர்த்தங்கள் அனைத்துமே அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது என்றாலும் இந்த ஷிர்க், பித்அத்தான செயல்களுக்கு துணை போகக் காரணம்? அவர்கள் இந்த உலகத்தின் அற்ப சுகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அல்லாஹ் தன் திருமறையில் மிக அழகாக இதை விளக்குகிறான்.

“எனினும் நீங்களோ மறுமை சிறப்பானதாகவும், நிலையானதாகவும் இருக்கும் நிலையில் (அதை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்” (அல்குர்ஆன் 87:16,17)

மவ்லிது, புர்தா, தர்கா நிகழ்ச்சிகள், இறந்தவர்களுக்காக செய்யும் சடங்குகள் முதலியவை ஷிர்க், (இணை வைத்தல்) பித்அத்(புது வழி) என்பதை அறிந்தும் அதை விட்டும் விலக முடியாத இக்கட்டான மன நிலையில் இருக்கும் சில சகோதரர்களையும் பார்க்கிறோம். இவ்வளவு காலம் “நன்மைகள் வரும்” என்ற நிய்யத்தில் ஓதி வந்தவர்கள் இப்போது திடீரென்று நிறுத்திவிட்டால் “ஏதேனும் ஆபத்துக்கள்” வந்து விடுமோ, எதிர் பாராத கஷ்டத்தில் சிக்கி விடுவோமோ என்று அஞ்சி தொடர்ந்து ஓதி வருகிறார்கள். இத்தகைய எண்ணம் நமது ஈமானையே அழித்துவிடும் என்பதை கவனத்தில் வையுங்கள்!

நன்மையும், தீமையும் தருவது அல்லாஹ் ஒருவனே என்ற நம்பிக்கையில் உறுதியாக இருங்கள். வல்ல அல்லாஹ் உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஈமானுடன் வாழ்ந்து ஈமானுடன் மரணிக்கச் செய்வானாக! மேலும் அவனது நேர்வழியில் நடத்தாட்டுவானாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஷிர்க்கின் தோற்றம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனிதனின் வாழ்க்கை வ்வுலகில் தவ்ஹீதை  அடிப்படையாகக்  கொண்டு  துவங்கியதா? அல்லது ஷிர்க்கை அடிப்படையாகக் கொண்டு துவங்கியதா? மனிதன் முதலில் ஓரிறைக் கொள்கையாளனாக இருந்து பின்னர் பல தெய்வ வழிபடு செய்பவனாக மாறினானா? அல்லது பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஓரிறைக்  கொள்கைக்கு மாறினானா என்பதை நாம்  முதலில்  அறிய வேண்டும்.  இதற்குத் தெளிவான விளக்கத்தைத்  திருகுர்ஆன் கூறுவதைப்  பார்ப்போம்.  “மனிதர்கள்  ஒரே சமுதாயமாகவே இருந்தனர்” (அல்குர்ஆன்2:213)

இந்த திருவசனத்தின்படி மனிதன் முதலில் தவ்ஹீது (ஏகத்துவம்) வாதியாகவே இருந்திருக்கிறான் என்பது தெளிவகின்றது. இதே கருத்தைத் தான் ஹதீஸும் வலியுறுத்துகிறது.”நான் அடியார்களைத் தூயவர்களாகவே படைத்தேன் ஆனால் ஷைத்தான் தவ்ஹீதை  விட்டும்  அவர்களைத்  திசைதிருப்பி விட்டான். அவர்களுக்கு (என்னால்) அனுமதிக்கப் பட்டிருந்தவைகளை ஷைத்தான் ஹராமானது  என்று காட்டிவிட்டான்” என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இயாழ் இப்னு அஹ்மது, நூல்: அஹ்மது

ஆரம்பத்தில் மனிதன் ஓரிறைக் கொள்கைவாதியாகவே இருந்தான். பின்னர்தான் பல தெய்வ வணக்க வழிபாடுகளில் மூழ்கிவிட்டான் என்பதை மேற்கூறிய இறை வசனமும் நபி மொழியும் தெளிவு படுத்துகின்றன.

ஷிர்க்கின் (இணை வைத்தல்) மூலகாரணம் என்ன?

ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதன் ஓரிறைக் கொள்கையுடையவனாகவே இருந்து வந்தான். அந்தத் தவ்ஹீதைத் பிரச்சாரம் செய்த நல்லடியர்களை அளவுக்கு அதிகமாகக் கண்ணியப்படுத்தி, கடவுள் நிலைக்கு அவர்களை உயர்த்தியதுதான் “ஷிர்க்” (இணை வைத்தால்) தோன்ற மூல காரணமாக இருந்தது. இந்த உண்மையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

“நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள்! மேலும் ‘வத்து’ ‘சுவாவு’  ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’ ஆகிய தெய்வங்களை நீங்கள் விட்டு விடாதீர்கள்!” என்று அவர்கள் (நூஹ் நபியின் சமூகத்தினர் கூறினார்கள்) (அல்குர்ஆன் 71:23)

இந்தத் திரு வசனத்தில் கூறப்பட்ட ‘வத்து’ ‘சுவாவு’ ‘யஹூது’ ‘யவூக்’ ‘நஸ்றா’  ஆகியோர் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த நல்லடியார்கள் என்றும், அவர்கள்  மரணமடைந்த பின்னர் அவர்களையே மக்கள் கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டனர் என்றும், ஆரம்பத்தில் நினைவுச் சின்னம் எழுப்பினர்; பின்னர் அடுத்த தலை முறையினர் அவர்களையே வணங்க முற்பட்டு விட்டனர் என்றும் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் தந்தனர். (நூல்: புகாரி- தப்ஸீர் பகுதி)

அன்று நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்கள் இணைவைக்க முற்பட்டதற்குக் காரணம் எதுவோ, அதே காரனத்தினால் தான் இன்றும் பெரும் பகுதியினர் ஷிர்க்கில் வீழ்ந்து  கிடக்கின்றனர். நபி(ஸல்) தம் உம்மத்தினர் ஷிர்க்கில் விழக்கூடாது என்றூ எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அத்தனையையும் மீறி நல்லடியார்கள் மரணித்த பின் அவர்களின் அடக்கஸ்தலத்தில் பல தகாத செயல்களை செய்யத் துவங்கிவிட்டனர்.

எத்தனையோ பள்ளிவாசல்கள் நிர்வாகம் நடத்த போதிய பொருளாதாரம் இன்றி திணறிக் கொண்டிருக்க, கப்ருகளை நிர்வாகம் செய்யப் பொருளாதாரம் குவிந்து கொண்டிருக்கிறது. அல்லாஹ்வை வணங்க நூறு பேர் வருகின்றனர் என்றால் அவனது அடிமைகளை வணங்க ஆயிரக்  கணக்கானோர் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

இறைவா! “என்னுடைய கப்ரை வணக்கஸ்தலமாக ஆக்கி விடாதே” என்று நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்துள்ளார்கள் என்றால் அது நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதைப் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ் அவர்களின் துஆவை ஏற்று அவர்களின் அடக்கஸ்தலத்தை வணங்குமிடமாக ஆக்காமல் பாதுகாத்துக் கொண்டான். ஆனால் மற்ற கப்ருகள் அந்த நிலைக்கு மாறி விட்டன!

“நாங்கள் கப்ரை வணங்கவா செய்கிறோம்?” என்று நம்மில் சிலர் கேட்கின்றனர். வணங்குவது என்றால் தொழுவது மட்டும் தான் என்று  இவர்கள் எண்ணியுள்ளனர்.  தங்களின் தேவைகளை நிறை வேற்றும்படி பிரார்த்தனை செய்வதும் வணக்கம் என்பதை என்றுதான் உணவார்களோ? சிலைகளுக்குச் செய்யப்படுவது போல் அலங்காரங்களூம் அபிஷேகங்களும், வேறு பெயர்களில் இங்கேயும் நடக்கத்தான் செய்கின்றன. சிலைகள் முன்னே சிலர் பக்தி சிரத்தையோடு நிற்பது போலவே கப்ருகளின் முன்னிலையிலும் இவர்கள் நிற்கின்றனர். இந்நிலை உணர்ந்து தவ்ஹீத் அடிப்படையில் மக்கள் வாழ அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.


மேலும் விளக்கத்திற்கு
வலிமார்களிடம் உதவி?


மன்னிக்கப்படாத பாவம்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

கஃபதுல்லாஹ் இடம் பெயர்ந்ததா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இமாம் ஹஸன் பஸரீ அவர்களின் காலத்தில், அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்றபோது, காஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! எங்கே என்று விசாரித்த போது ராபியாபஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்றுவிட்டதாகச் தெரிந்ததாம். இது கதை சுருக்கம். இந்தக் கதை பல வகைகளில் விரிவு படுத்தப்பட்டு பலவிதமக சொல்லப்படுகின்றது. இந்த  கதை சரியானது தானா! என்று நாம் ஆராய்வோம்!

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுச் செய்வதற்காக ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு மக்காவுக்குத் தம் தோழர்களுடன் புறப்பட்டனர். ஹுதைபியா என்ற இடத்தில் வைத்து அவர்கள் தடுக்கப்படுகின்றார்கள்! கஃபதுல்லாஹ்வை சந்திக்க வெண்டும் என்ற பேராசையில் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் மக்கத்து காபிர்கள் தடுத்துவிட்டனர். கஃபதுல்லாவை எவருக்காகவும் நடந்து வரக்  கூடியதாக இருந்தால், இந்த இக்கட்டான நிலையில் நபி (ஸல்) அவர்களைத் தடுத்தபோது அவர்களை நோக்கி வந்திருக்க வேண்டுமே! அல்லாஹ்வின் திருத் தூதருக்காக நடந்து வராத கஃபதுல்லா ராபிஆபஸரியா(ரஹ்) அவர்களுக்காக,  அதுவும் எவ்வித அவசியமும் இல்லாமல் அவர்களை வரவேற்பதற்காக சென்றதென்றால் இதை எவராவது ஏற்க இயலுமா? எண்ணிப் பாருங்கள்.

அதன் பின் இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்களும், அவர்களின் ஆருயிர்த்  தோழர்களும் மக்காவுக்குச் சென்றபோது மக்காவின் எல்லையில் நபி (ஸல்)  அவர்களையும், அவர்களின் தோழர்களையும் வரவேற்க கஃபதுல்லா மக்காவின் எல்லைக்கு இடம் பெயர்ந்து வரவில்லை! ஒருவரை வரவேற்பதற்காக காஃபதுல்லா இடம் பெயர்ந்து வருமென்றால் அல்லாஹ்வின் தூதர் அல்லவா வரவேற்கப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்!

அதன்பின் நாற்பெரும் கலீபாக்கள், ஸஹாபாக்கள், தாபியீன்கள், நாற்பெரும்  இமாம்களெல்லாம் ஹஜ்ஜுச் செய்ய வந்திருக்கின்றார்கள்! அவர்களை எல்லாம் வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்து வரவில்லையே! இதை எப்படி ஏற்க இயலும்? திருக்குர்ஆன் வசனங்களும் இந்தக் கதை பொய்யானது என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

கஃபதுல்லாவை இப்ராஹீம் (அலை), இஸ்மாயில் (அலை) இருவரும் கட்டி முடித்தபோது அவர்களிடம் கஃபதுல்லாவின் நோக்கம் என்ன என்பதை அல்லாஹ் தெளிவாக சொல்கிறான். எவரையும் வரவேற்க இடம் பெயர்ந்து செல்வதை அதன் நோக்கங்களில் ஒன்றாக ஆக்கவில்லை.

(கஃபா என்னும்) வீட்டை மக்களுக்கு ஒதுங்கும் இடமாகவும் நாம் ஆக்கினோம். இன்னும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்.(அல்குர்ஆன் 2:125)

கஃபதுல்லவை நோக்கி மக்கள் வரும்போது மக்களின் ஒதுங்குமிடமாக அதை அல்லாஹ் ஆக்கியுள்ளதாக கூறுகிறான். கஃபதுல்லாவைத் தேடி மக்கள் செல்லும் போது அது அங்கே  இல்லையானால் மக்களுக்குச் சிறிது நேரம் அது ஒதுங்குமிடமாக இல்லாமல் போகின்றதே! அல்லாஹ்வின் உத்தரவாதத்தைப் பொய்யாக்கக் கூடிய இந்தக் கதையை யாராவது நம்ப இயலுமா?

இன்னும் என் வீட்டைச்சுற்றி வருபவர்கள், தனியாக அமர்ந்து தியானிப்பவர்கள், ருகூவு செய்பவர்கள், சுஜூது செய்பவர்கள் ஆகியோருக்குத்  தூய்மையாக  அதனை  வைத்திருக்க  வேண்டும்  என்று இப்ராஹீமி டமிருந்தும்  இஸ்மாயிலிடமிருந்தும் உறுதிமொழி வாங்கினோம் (அல்குர்ஆன் 2:125)

தவாபு செய்பவர்கள், அங்கே தொழ வருபவர்கள், தியானிப்பவர்கள்  ஆகியோருக்காகவே கஃபதுல்லாவை நிர்மானிக்கப்பட்டது என்று அதன்  நோக்கத்தையும் அல்லாஹ் இந்த   வசனத்தில் கூறுகிறான். ஆனால் இந்த கதையின்படி திக்ரு செய்வதற்காகவும், தவாபு செய்வதற்காகவும், தொழுவதற்காகவும் அங்கே சென்று ஹஸன் பஸரீ (ரழி)அவர்களுக்காகவும், அவர்களைப் போன்ற பல்லாயிரம் மக்களுக்காகவும் கஃபதுல்லா அங்கே இருக்கவில்லை. அதாவது எந்த நோக்கத்திற்காக கஃபாவை அலலாஹ்  நிர்மாணிக்கச் செய்தானோ அந்த நோக்கத்திற்காக கஃபா அங்கே இல்லை  என்று இந்தக் கதை உணர்த்துகின்றதே! இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

பக்கா (என்ற மக்கா)வில் உள்ள அந்த வீடுதான், (இறைவணக்கத்துக்கென) மக்களுக்காக வைக்கப்பட்ட முதல் வீடாகும். (அல்குர்ஆன் 3:96)

இந்தத் திருவசனம் கஃபதுல்லா மனிதர்கள் இறைவனை வணங்குவதற்கென ஒரு இட்த்தில் வைக்கப் பட்டிருப்பதையும், கஃபா மக்கள் அனைவருக்கும் பொதுவனது. எந்த தனி நபருக்கும் விஷேச மரியாதை செய்ய நடந்து வராது என்பதையும் உனர்த்துகின்றது.

அது பரகத்து மிக்கதாகவும், உலக மக்கள் அனைவருக்கும் நேர்  வழியாகவும் இருக்கிறது, (அல்குர்ஆன் 3:96)

மக்கள் அனைவருக்கும் நேர்வழியாக இருக்கின்ற மக்கள் அனைவருக்கும் பரக்கத்து நிறைந்ததாகவும் இருக்கின்ற கஃபதுல்லாவைத்தான் மக்கள் தேடிச் செல்லவேண்டும் என்பதை நமக்கு விளக்குகின்றது. இந்தக் கதையின்படி பரக்கத்தைப் பெறுவதற்காக அதை தேடிச் சென்றுள்ள மக்களுக்காக காட்சிதரவில்லை என்றால் குர்ஆனின் உத்தரவாதம் இங்கே பொய்யாக்கப்பட்டுள்ளது.

இன்னும் அதற்குரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கின்ற மக்கள் அவ்வீடு செல்ல வேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக ஆக்கிவிட்டு, அந்தக் கடமையை நிறைவேற்ற அவ்வீட்டைத் தேடி வருகின்ற மக்களுக்காக அந்த இடத்தில் அல்லாஹ் வைக்காமலிருப்பானா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வீடு எவரையும் தேடி வராது என்பதையும் இந்தத் திரு வசனம் உணர்த்துவதை நாம் காணலாம்.

இந்தக் கதை திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுகின்றன. அல்லாஹ்வின் நோக்கத்தையும், அவனது உத்தரவாதத்தையும் பொய்ப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் கூற்றுக்கு முரணாக இருக்கும் இந்தக் கதை எப்படி உண்மையாக இருக்க இயலும்? எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பின்வரும் இறை இவசனம் மிகவும் தெளிவகவே இந்தக் கதையை பொய்யாக்கி விடுகின்றது.

அல்லாஹ் சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு நிலையான தலமாக ஆக்கியிருக்கின்றான். ( அல்குர்ஆன் 5:97)

இந்த திரு வசனத்தில் கியாமன் லின்னாஸ் மக்களுக்கு நிலையான தலமாக ஆக்கிவிட்டதாக அல்லாஹ் ஆணி அடித்தாற்போல் சொல்லி விடுகின்றான். மனிதர்களுக்காக அது ஒரு இடத்தில் நிலையாகவே இருக்கும்,  இடையில்  இடம்  பெயர்ந்து  செல்லாது  என்பதை  மிகவும்  தெளிவாகவே  அல்லாஹ் சொல்லி விடுகின்றான்.  இந்தக் கதை  பொய்யானது.  ஒரு முஸ்லிம்  இதை நம்பக்கூடாது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

மனிதர்களை உயர்த்துவதற்காக அவர்களின் மரணத்திற்குப்பின் பல கதைகள் கட்டிவிடப்படுவது வாடிக்கையாகவே  நடந்து வருவதாகும். ஆனால் ரபியா பஸரிய்யா(ரஹ்) அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்ந்திருந்த  காலத்திலேயே  இது போன்ற கதைகள் கட்டிவிடப்பட்டன. இதை செவியுற்ற ராபிஆ பஸரிய்யா(ரஹ்) அவர்கள் இவற்றைக் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்! இவை ஷைத்தான் மக்களுடன் விளையாடுகிறான் என்று கூறிவிட்டார்கள். இந்தக் கதையின் நாயகியாகிய அவர்களே திட்டவட்டமாக இது போன்ற கதைகளை மறுத்துள்ளது இந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான சான்றாகத் திகழ்கின்றது.

ராபிஆபஸரிய்யா (ரஹ்) அவர்கள் இப்படி மறுத்துள்ளதை ஸனதுடன் இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் தனது தல்பீஸு இப்லீஸ் என்ற நூலில் 383  ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருகுர்ஆனுடன் மோதும் இதுபோன்ற கதைகளை நம்புவதும், பேசுவதும்  குர்ஆனையே மறுப்பதாகும். இதுபோன்ற பொய்களை நம்புவதைவிட்டும் அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக! ஆமீன்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

இறையில்லங்களைப் பாழாக்குவோர்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُوْلَـئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلاَّ خَآئِفِينَ لهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ

இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிகளில் அல்லாஹ்வின் பெயரைச்  சொல்லித் துதிப்பதைத் தடுத்து, அவற்றை பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தைகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயிகளில்  நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையில் இவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (2:114)

சராசரி அறிவு படைத்தவனுக்கும் புரியும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது. ஆயினும் இவ்வசனம் தமிழக முஸ்லிம்களால் புரிந்துக் கொள்ளப்படவில்லை.

ஏழாண்டுகாலம் மதரஸாக்களில் படித்த தமிழக முல்லாக்கள் மார்க்கத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைப் பற்றித் தாங்களே பறைசாற்றிக் கொள்ளும் உலமாக்கள் சபை தமிழகத்து பள்ளிகள் தோறும் ‘நான்கு மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழவோ தொழவைக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று அறிவுப்புப் பலகை தொங்க விட்டு தீன் (?) பணி செய்து வருகின்றனர்.

அல்லாஹ்வுடைய தெளிவான வசனத்தை புரிந்தாலும் இறைவனைபற்றிச் சிறிதும் அச்சமின்றி அவனது பள்ளியைப் பாழாக்குவோர் மார்க்கத்தின் காவலர்களாம்! மனிதர்களில் செய்யும் கொடுமைகளில் மிகப்பெரும் கொடுமை அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்கு தடைவிதிப்பதாகும்.

அல்லாஹ்வின் பள்ளியில் எந்தச் நாட்டைச் சேர்ந்தவனும் அதில் தொழலாம். எந்த மொழி பேசுபவனும் தொழலாம், துதிக்கலாம். உலகம் முழுவதும்   இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும்தான் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்கு தடை விதிக்கப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இத்தகையகக் கொடுமைக்காரர்களுிக்கு மேற்கண்ட வசனம் கடுமையான எச்சரிக்கை விடுகின்றது.

உலகிலேலே மிகவும் கொடுமைக்காரர்களாக அவர்கள் இறைவனால் கருதப்படுவார்கள்.
இப்படித் தடுப்பவர்கள் பள்ளிக்கு பயந்து செல்லும் நிலை உருவாகும்.
இந்த உலகத்திலேயே இழிவை அவர்கள் அடைவார்கள்.
மறுமையில் கடுமையான வேதனையைச் சந்திப்பார்கள்.

மறுமையின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இறைவனைப் பற்றி அச்சம் உள்ளவர்களுக்கும் இந்த எச்சரிக்கை மிகப் பெரிய விஷயமாகும்.

أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى  أَوْ أَمَرَ بِالتَّقْوَى  أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّى  أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَى  كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ  نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ  فَلْيَدْعُ نَادِيَه  سَنَدْعُ الزَّبَانِيَةَ

தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா? ஓர் அடியாரை அவர் தொழும்போது, நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்துக்கொண்டும் அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும் அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நீர் பார்த்தீரா? நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அப்படியல்ல; அவன் விலகிக் கொள்ளவில்லையானல், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். (96: 9-18) பள்ளிவாசலில் இறைவனைத் தொழுவதற்கு  தடை விதிக்கும் கொடுமைக்காரர்களுக்கு எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இது!

நீன் உன் சபையினரை உனக்குத் தலையாட்டும் மூடர் கூட்டத்தை அழைத்து வா!  நானும் எனது நரக காவலாளிகளை  அழைக்கிறேன் என்ற எச்சரிக்கையை  பொருட்படுத்தாத இவர்கள் தொழுபவனுக்குத் தடை விதிக்கிறார்களே! தடுப்பவன் குடிக்கிறான் என்பதற்காகவா? சாரயக்கடை ஏலம் எடுத்திருக்கிறான் என்பதற்காகவா? சினிமாக் கொட்டகை நடத்துகிறான் என்பதற்காகவா? வட்டிக்கடை வைத்திருக்கிறான் என்பதற்காகவா? ஊர்ப்பணத்தைச் சுரண்டி வாழ்கிறான் என்பதற்காகவா? பள்ளிவாசல் சொத்துக்களை தன் பெயருக்குப் பட்டா போட்டுக் கொண்டான் என்பதற்காகவா?  நிச்சயமாக இல்லை. இத்தகையக் கொடுமைக்காரர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படுகின்றது.


யாரைத் தடுக்கிறார்கள்? இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவனை, வரதட்சனை  வாங்கக்கூடாது என்று கூறுபவனை, வீன் விரயமும் ஆடம்பரமும் கூடாது என்பவனை, குர்ஆன் போதனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பவனை, நபியை மட்டும் முன் மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்பவனை, இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சக்கூடாது என்பவனைத் தடுக்கிறார்கள். இப்போது மேலே உள்ள வசனத்தை மீண்டும் ஒருமுறை படியுங்கள்!

நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று என்று எழுதி வைக்கும்  இவர்கள் அவர்களே எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபும் பள்ளிக்கு தொழ வருபவர்களைத் தடுக்குமாறு கூறவில்லை. தடுக்கக் கூடாது என்றே சொல்கின்றன.

கத்தம், பாத்திஹா, தாயத்து, தட்டு என்று மக்களைச் சுரண்டி பிழைப்பதற்கு   ஆபத்து என்பதனால் தான் இந்தக் கூப்பாடு! நேரடியாக இதைக் கூற முடியாதவர்கள் மத்ஹபின் காவலர்கள் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கிறார்கள் அவ்வளவுதான்!

தங்களின் புரோகிதத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்த முல்லாக்கள் தவறான வழிகாட்டும்போது தொழுகையாளிகளைத் தடுக்கும்மாறு கூறும்போது அதற்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் நிற்கும் நிர்வாகிகளும், ஜமாஅத்தார்களும் இறைவனது எச்சரிக்கைக்கு உரியவர்களாகிறார்கள். மேலே கண்ட வசனங்கள் இத்தைகைய சமுதாயத்திற்கு பொருந்தக் கூடியதுதான். சமுதாயத்தின் துணையில்லாமல் இந்த முல்லாக்கள் எதையும் செய்ய முடியாது. தடுக்கத் தூண்டியவர்களும் தடுத்தவர்களும் அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்களே.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

Older Posts »