இஸ்லாம்தளம்

ஜனவரி31, 2009

இறைவன் மன்னிக்காத குற்றம்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனித குலத்துக்கு வழி காட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாமென்பது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கை. ஏக இறைவனை ஏற்று, அவன் வழி காட்டியாகத் தேர்ந்தெடுத்த இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை!

இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ”காஃபிர்கள்” அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றிச் சரியாக உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதற்குப் பகரமாக மறுமையில் சொர்க்கத்தை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.

இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.

இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் இவ்வாறு கூறுகிறது. இதில் யாருக்காகவும், எதற்காகவும் எவ்வித சலுகையும் இல்லை. எனவும் உலக மக்கள் முன் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது.

இது பற்றி திருக்குர்ஆன் வசனங்களிலும், நபிமொழிகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, ”இஸ்லாத்தை ஏற்காதவர்களையெல்லாம் இஸ்லாம் மறுமையில் தண்டிப்பதாகச் சொல்கிறது பாருங்கள்” என விமர்சிக்கின்றனர். திருக்குர்ஆன் முழுவதையும் மறுக்கும் இவர்கள் சில வசனங்களை மட்டும் நம்புகிறார்களா? ஆச்சரியந்தான்!

இறைவன் மன்னிக்காத குற்றம்.
ஏக இறைவனை மறுத்தவர்கள், பல கடவுட்க் கொள்கையுடைவர்கள் இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று இஸ்லாம் பார்க்கவில்லை. ”இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள்” என்ற வட்டத்திற்குள் ஒன்று சேர்த்து, இவர்கள் செய்த நன்மைகளும், தீமைகளும் மறுக்கப்படுகிறது. ஏக இறைவனுக்கு இணை வைத்தவர்களின் செயல்பாடுகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக மறுத்து விடுகிறான் – இணை வைத்தவர்கள் ஏக இறைவனை மறுத்தது போல!

இறைவனுக்கு இணையாக எதையும் எவரையும் வணங்கக்கூடாது! இஸ்லாம் இந்தக் கொள்கையை அடிப்படையாக நிறுவியுள்ளது. ஓரிறைக் கொள்கையின் அஸ்திவாரத்தின் மீது இஸ்லாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஓரிறைக் கொள்கையைப் புறக்கணித்தவர்கள், இறைவனால் புறக்கணிக்கப்படுவார்கள் எனும் போது அவர்களின் நன்மைகள், தீமைகள் கணக்கிடப்பட வேண்டும் என்பதும் அர்த்தமற்றதாகும்.

ஏக இறைவனை ஏற்க மாட்டோம், ஆனால் நல்லவன், கெட்டவன் என்ற கோணத்தில் இறைவன் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது. இஸ்லாம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை! இறைவனுக்கு இணை கற்பிப்பதை, பெரும் பாவங்களின் வரிசையில் முதல் இடத்தில் இஸ்லாம் நிறுத்தியுள்ளது.

”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (திருக்குர்ஆன், 004:048,116)

”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.” (திருக்குர்ஆன், 004:116)

லுக்மான் தம் புதல்வருக்கு, நல்லுபதேசம் செய்யும் போது ” என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன், 031:013)

”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.” (திருக்குர்ஆன், 005:72)

ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயல்பாடுகளை:- பெரும் பாவம், வழிகேடு, மாபெரும் அநீதியாகவும் இறை வசனங்கள் குறிப்பிடுகிறது. இறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரும் மன்னிக்கப்பட மாட்டார், இணை கற்பித்தவருக்கு சொர்க்கம் விலக்கப்பட்டுள்ளது என்பதும் இறைவனின் வாக்கு!

முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும்.
எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவருடைய நல்லறங்கள் அழிந்து விடும், அவர் நஷ்டமடைந்தவராவார். இதற்கு முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என விதி விலக்கு இல்லை!

”இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தனது அடியார்களில் தான் நாடியோரை, இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். (பின்னர்) அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.” (திருக்குர்ஆன், 006:088)

”நம்பிக்கை கொண்ட பின்னர் மறுத்து, பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் மன்னிப்பு ஒரு போதும் எற்கப்படாது. அவர்களே வழி தவறியவர்கள்.” –

– (ஏக இறைவனை) ”மறுத்து, மறுத்தவராகவே மரணித்தவர்கள் பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.” (திருக்குர்ஆன், 003:090,091)

இறைத்தூதர்களுக்கும் இதே எச்சரிக்கை!

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

இறைவனுக்கு இணை கற்பிப்பவர் அவர் எந்த மதத்தவராக இருந்தாலும், அவரின் நல்லறங்கள் – நன்மைகள் அழிக்கப்படும் என்று சொல்லி, இதில் இறைத்தூர்களுக்கும் எவ்வித சலுகையும் வழங்கவில்லை என ஆணித்தரமாக இறைச் சட்டங்களைப் பதித்துள்ளது இஸ்லாம்.

அன்புடன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

பிரிவு: விமர்சனம் விளக்கம் |


addthis_pub = ‘islamkalvi’;
addthis_logo = ‘http://www.addthis.com/images/yourlogo.png&#8217;;
addthis_logo_background = ‘EFEFFF’;
addthis_logo_color = ‘666699’;
addthis_brand = ‘IslamKalvi.com’;
addthis_options = ‘favorites, google, email, digg, delicious, myspace, facebook, live, more’;

57 Responses to “இறைவன் மன்னிக்காத குற்றம்.”

  1. வஹ்ஹாபிon 12 Oct 2006 at 2:38 pm 1

    ஷிர்க் என்னும் இணை கற்பித்தலுக்கு சுருக்கமான ‘நறுக்’ பதிவு.

    வாழ்த்துகள்!

  2. பாபுon 12 Oct 2006 at 2:46 pm 2

    //முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும்.

    எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவருடைய நல்லறங்கள் அழிந்து விடும், அவர் நஷ்டமடைந்தவராவார். இதற்கு முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என விதி விலக்கு இல்லை!//

    தொடர்புடையதாக திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை இன்று கண்டேன்:

    நிச்சயமாக, விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், கிறிஸ்தவர்களும், ஸாபியீன்களும் (அவர்களில்) எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து, நற்கருமத்தையும் செய்தார்களோ அத்தகையவர்கள்-அவர்களுக்கு கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு (மறுமையைப் பற்றி) எவ்விதப் பயமுமில்லை; (இன்னும் உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அது பற்றி) அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள். (002:62)

    மேலும் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  3. திருவடியான்on 12 Oct 2006 at 3:11 pm 3

    அபு,

    “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ” என்று சாவைப் பற்றிச் சொல்வர். அதாவது மறுமை என்று ஒன்று இருக்கிறதா என்று, சத்தியமாக இந்த உலகில் யாருக்கும் தெரியாத போது, அறியாத போது.. இல்லாத ஒன்றை நாம் நம்பி என்ன ஆகப் போகிறது.

    ஏன் சுவனம் நரகம் என்ற கற்பனைக் கதைகளை நாம் நம்ப வேண்டும். மாறாக.. இப்பூவுலகில் 100 சதவீதம் சரியாக வாழ்ந்த மனிதன் யாருமில்லை, இனியும் பிறக்கப் போவதில்லை. ஆக நடப்புலகில் வாழ்வதற்குரிய ஒரு ஒழுங்கினை இஸ்லாம் போதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

  4. Jafar Alion 12 Oct 2006 at 7:24 pm 4

    உங்களுடைய வலைப்பூவிற்கு மிகத் தேவையான பதிவு இது என்பது என் கருத்து. அல்லாஹ் எல்லோருக்கும் அருள்பாலிக்கட்டும்!

  5. Dharumion 12 Oct 2006 at 10:59 pm 5

    என் சிறு வயதில் நான் சார்ந்திருந்த மதமும் இதே கோட்பாட்டைத்தான் சொல்லி வந்தது. காந்திகூட நரகத்துக்கா போவார் என்று எனக்கு (catechism) வேத பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது. நல்லவேளை இப்போது அப்படியெல்லாம் சொல்லுவதில்லை. ஒரு மழுப்பலான பதிலே வரும்.

    பிறப்பால் வேறொரு மதத்தில் பிறந்து, வளர்ந்து நம் மதத்தைப் பற்றிய தெரிதல் இல்லாமலேயே வளர்ந்த ஒரு நல்ல மனிதருக்கும் இத்தனை கொடூரமான தண்டனைதானா என்று அன்று கேட்டதும் நினைவுக்கு வருகிறது.

    இன்று அப்படி ஒருவன் இஸ்லாமைப் பற்றிய தெரிதல் ஏதும் இல்லாது வாழ்ந்து முடிப்பதும் அந்த “இறைவனின் வல்லமையால்”தானே இருக்க முடியும். இதில் அந்த மனிதனின் தவறாக எதைச் சொல்ல முடியும்?

    முகமதுவின் பிறப்புக்கு முந்திய மனிதர்கள் என்ன ஆவார்கள்?

    இன்றாவது communication எல்லாம் நல்லா இருக்கு. இது எதுவும் இல்லாத காலத்தில் (கி.பி. 1000 என்று கொள்வோமே) நம் இன்றைய இந்தியாவில் பிறந்த நம் முன்னோர் என்ன ஆவார்கள்?

    இஸ்லாமைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தது அந்த பாவப்பட்ட மனிதனின் தவறா? அல்லது அப்படி அவனை அப்படிப் படைத்த இறைவனின் தவறா?

  6. ஜோ / Joeon 12 Oct 2006 at 11:22 pm 6

    //இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.//

    இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருப்பதையே அறியாமல் இவ்வுலகில் பலர் இருக்கலாம் .அல்லது பிறப்பு ,அல்லது இருப்பிடத்தின் காரணமாக இஸ்லாம் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம் .அவர்கள் இஸ்லாமை நிராகரித்ததாக எப்படி சொல்ல முடியும் ?அவர்களுக்கும் தண்டனை தானா? அவர்கள் செய்த குற்றம் என்ன ?

  7. அபூ முஹைon 13 Oct 2006 at 1:06 am 7

    வஹ்ஹாபி, உங்கள் வருகைக்கு நன்றி!

    ராஜ், உங்கள் வருகைக்கு நன்றி!

    திருக்குர்ஆன், 002:062வது வசனம் பற்றி முன்பு விளக்கப்பட்டிருக்கிறது

    ”அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களின் நல்லறங்கள் அவர்களுக்கு உண்டு.

    நீங்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாமல் உங்களின் நல்லறங்கள் ஏற்கப்படாது என்பதையே திருக்குர்ஆன், 002:062வது வசனம் விளக்குகிறது.

    மேலும் விளக்கம் தேவையெனில் எழுதுங்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  8. இப்னு பஷீர்on 13 Oct 2006 at 1:32 am 8

    //”கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ” என்று சாவைப் பற்றிச் சொல்வர். அதாவது மறுமை என்று ஒன்று இருக்கிறதா என்று, சத்தியமாக இந்த உலகில் யாருக்கும் தெரியாத போது, அறியாத போது.. இல்லாத ஒன்றை நாம் நம்பி என்ன ஆகப் போகிறது. //

    மறுமை இருக்கிறது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. உலகின் எல்லா மதங்களுமே மறுமை, சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி போதிக்கத்தான் செய்கின்றன.

    மறுமை இருக்கிறது என்பதை நம்பி, அதற்கேற்றாற்போல் வாழ்வை சீர்படுத்தி நல்ல மனிதனாக வாழ்ந்து, உயிர்நீத்தபின் மறுமை என்ற ஒன்று இல்லை என்பது தெரிய வருமானால், அதனால் எனக்கு நஷ்டம் ஒன்றுமில்லை. அதே சமயம், மறுமை என்பதே கிடையாது என்ற எண்ணத்தில் என் மனதுக்கு தோன்றியவாறு வாழ்ந்து பின் மறுமையை நான் சந்திக்க நேர்ந்தால் அன்று மிக நஷ்டமடைந்தவனாக இருப்பேன்.

    அதனால், மறுமை இருக்கிறது என்று நம்பி வாழ்வதே புத்திசாலித்தனம்.

  9. அபூ முஹைon 13 Oct 2006 at 2:00 am 9

    திருவடியான் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    //ஏன் சுவனம் நரகம் என்ற கற்பனைக் கதைகளை நாம் நம்ப வேண்டும். மாறாக.. இப்பூவுலகில் 100 சதவீதம் சரியாக வாழ்ந்த மனிதன் யாருமில்லை, இனியும் பிறக்கப் போவதில்லை. ஆக நடப்புலகில் வாழ்வதற்குரிய ஒரு ஒழுங்கினை இஸ்லாம் போதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?// – திருவடியான்.

    மனிதன் தவறே செய்ய மாட்டான் என்று இஸ்லாம் சொல்லவில்ல. மனிதன் தவறு செய்வான் என்பதால் அவனுக்கு வழிகாட்டல் அவசியமாகிறது. செய்த தவறை திருத்தித் திருந்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் நீ தண்டிக்கப்படுவாய் என்றே இஸ்லாம் கூறுகிறது.

    நல்லவனும், கெட்டவனும் ஒரு போதும் சமமாக மாட்டார்கள். முறையாக வாழ்க்கை நெறியை மேற்கொள்ளும் நல்லவனுக்கு அவனுடைய முயற்சி கடினமாகவே இருக்கும் இந்த நேர்மையான முயற்சிக்குப் பரிசு வழங்கும் நாள், இறைவனின் முன்னால் ஒன்று கூடும் மறுமைநாள்.

    நேர்மையான வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளாத தீயவனுக்குத் தண்டனை வழங்கும் நாள் மறுமைநாள்.

    இந்த மறுமையை யாரும் பார்த்து விட்டு மறுமையை நம்பவில்லை! மறுமையை நம்பாமல் இறை நம்பிக்கை முழுமை பெறாது என்று இஸ்லாம் போதிக்கிறது. அதனால் முஸ்லிம்கள் மறுமையை நம்புகிறார்கள் – நம்ப வேண்டும்.

    மறுமையை நம்பாதவர்களை இஸ்லாம் நிர்ப்பந்திக்கவில்லை! மறுமைநாள் என்பதே இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் அதைப் பார்க்கவில்லை என்பதால் அந்நாளை நம்பவில்லை.

    மறுமைநாளை நம்புபவர்களும் அந்நாளைப் பார்த்துவிட்டு நம்புவதாகச் சொல்லவில்லை. இருக்கிறது, அல்லது இல்லை என்பதை உறுதிபடுத்தும் காலம் இறைவனிடம் இருக்கிறது. அதுவரை அவரவரின் நம்பிக்கை அவர்ளுக்கு.

    இது பற்றி சுருக்கமாக முன்பு நான்கு பகுதி எழுதியிருக்கிறோம்.

    ஜாஃர் அலி உங்கள் வருகைக்கு நன்றி!

    இப்னு பஷீர் உங்கள் வருகைக்கு நன்றி! மறுமை நாளின் நம்பிக்கை கொள்வதன் அவசியத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  10. அபூ முஹைon 13 Oct 2006 at 2:05 am 10

    tamilreber உங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தை தமிழில் எழுதும்படிக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி!

  11. திருவடியான்on 13 Oct 2006 at 3:06 am 11

    அபுமுஹை.. தங்களின் விலாவாரியான விளக்கத்திற்கு நன்றி.
    அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அடுத்தவரை அது பாதிக்காத வரையில் சுமுகமான சூழலே நிலவும்.

    அதெப்படிங்க… பொறுமையா, அமைதியா, தெளிவா எல்லாவிதமான வாதங்களுக்கும் பதில் சொல்றீங்க. நீங்க வெகுஜனத் தொடர்புத் துறையில் இருக்கிறீர்களா?..

  12. செந்தில் குமரன்on 13 Oct 2006 at 4:01 am 12

    இறைவன் அன்புமயமானவர் என்று தான் எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்து வேறு எந்த மதமும் தன்னுடைய மார்கத்தை பின்பற்றாதவர்களுக்கு தண்டணைகள் கிடைக்கும் என்று சொல்வதில்லை. மேலும் உங்களுடைய இன்னொரு பதிவில் மனிதனின் கருத்துக்கள் இறைவன் கருத்துகளாக மாறி விட்டதால் மற்ற வேதங்கள் அழிந்ததாக கூறி இருந்தீர்கள். இந்தக் கருத்து மனிதனின் கருத்தாகவே தோன்றுகிறது.

    இந்து மதத்திலும் இது போன்ற கருத்துக்கள் வேதத்தில் உண்டு. வேதங்களின் அந்தக் கருத்து போலவே இதுவும் எனக்கு மூடத்தனமாக படுகிறது.

  13. அபூ முஹைon 13 Oct 2006 at 4:25 am 13

    தருமி, மற்று ஜோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

    இருவரும் ஒரே மாதிரியானக் கேள்வியையே கேட்டிருக்கிறீர்கள். இங்கே ஒரு உதாரணத்தை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

    பள்ளியில் சேர்ந்து தொடர்ந்து அந்த வருடத்தின் இறுதி வரை படித்த மாணவனுக்குத்தான், தேர்வு நடக்கும் போது கேள்வித்தாள் கொடுக்கப்படும். பள்ளிக்கே செல்லாத மாணவன் பரீட்சை எழுத வேண்டிய அவசியமில்லை, கேள்வித்தாளும் அவனுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது.

    ”இஸ்லாம் பற்றி எதுவும் அறிந்திராத மக்களுக்கு ”இறைவனுக்கு இணை கற்பிக்கும்” சட்டம் பொருந்துமா? என்றே கேட்கப்பட்டிருக்கிறது”!

    //இன்றாவது communication எல்லாம் நல்லா இருக்கு. இது எதுவும் இல்லாத காலத்தில் (கி.பி. 1000 என்று கொள்வோமே) நம் இன்றைய இந்தியாவில் பிறந்த நம் முன்னோர் என்ன ஆவார்கள்?

    இஸ்லாமைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தது அந்த பாவப்பட்ட மனிதனின் தவறா? அல்லது அப்படி அவனை அப்படிப் படைத்த இறைவனின் தவறா?// -தருமி

    //இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருப்பதையே அறியாமல் இவ்வுலகில் பலர் இருக்கலாம் .அல்லது பிறப்பு ,அல்லது இருப்பிடத்தின் காரணமாக இஸ்லாம் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம் .அவர்கள் இஸ்லாமை நிராகரித்ததாக எப்படி சொல்ல முடியும் ?அவர்களுக்கும் தண்டனை தானா? அவர்கள் செய்த குற்றம் என்ன ?// – ஜோ

    தருமி மற்றும் ஜோ இவர்களின், இந்தக் கேள்வி மிகப் பழமையானக் கேள்வி. கி.மு சுமார் 2000 ஆண்டு வாக்கில், இறைத்தூதர் மோசே என்ற மூஸா(அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது ஃபிர் அவ்ன் இதேக் கேள்வியைத்தான் மூஸா நபியிடம் கேட்டான்…

    ”மூஸாவே உங்களிருவரின் இறைவன் யார்”? என்று கேட்டான் (திருக்குர்ஆன், 20:49)

    ”ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்” என்று கூறினார். (திருக்குர்ஆன், 20:50)

    ”முன் சென்ற தலைமுறையினரின் நிலை என்ன”? என்று அவன் கேட்டான். (திருக்குர்ஆன், 20:51)

    ”அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் உள்ளது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்” என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன், 20:52)

    ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த நபி மோசே (அலை) அவர்களிடம் ”நீர் பிரச்சாரம் செய்யும் இந்த ஓரிறைக் கொள்கையை இதற்கு முந்தய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லையே அவர்களின் நிலை என்ன”? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

    அது பற்றி இறைவன் நன்கு அறிந்தவன் அவன் தவறு செய்ய மாட்டான், எதையும் மறக்கவும் மாட்டான் என்றும் மிகத் தெளிவாகத் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.

    ஒரு விஷயத்தைத் தெரியாதவர் – அதைப்பற்றி அறிந்திராதவர், அதை எப்படிப் பின்பற்ற முடியும்? தெரியாத விஷயத்தை ஒருவர் பின்பற்றவில்லை என்பதற்காக அவரைத் தண்டித்து இறைவன் தவறு செய்பவனல்ல என்பதை மேற்கண்ட இறை வசனங்களிலிருந்து விளங்கலாம்!

    ஓரிறைக் கொள்கை பற்றி அறியாததால் பின்பற்றவில்லையா? அல்லது அறிந்தே பின் பற்றவில்லையா? என்பதையும் இறைவன் மறந்து விட மாட்டான் என்பதும் இறைவனால் அறிவிக்கப்படுகிறது.

    இதையே தருமி, மற்றும் ஜோ அவர்களுக்கும் விளக்கமாக வைக்கிறேன் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  14. அபூ முஹைon 13 Oct 2006 at 5:04 am 14

    குமரன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    //இந்து மதத்திலும் இது போன்ற கருத்துக்கள் வேதத்தில் உண்டு. வேதங்களின் அந்தக் கருத்து போலவே இதுவும் எனக்கு மூடத்தனமாக படுகிறது.// – குமரன் எண்ணம்.

    அவரவர் எண்ணங்களில் தோன்றுவதை அவர் ஏற்றுக் கொள்வது நம்பிக்கை! அதுவே மற்றவருக்கு மூட நம்பிக்கை!! சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

    *********************

    சுல்தான் உங்கள் வருகைக்கு நன்றி!
    நீங்கள் எழுதிய விளக்கங்கள் வருவதற்கு முன் எம்முடைய விளக்கங்கள் மறுமொழியில் பதியப்பட்டு விட்டது.

    //தருமி ஐயாவுடைய கேள்விக்கு நான் இங்கு பதிலளித்துள்ளேன்.

    அன்பின் அபூமுஹை!, தேவையேற்படின் மேலதிக விபரம் தாருங்கள்.// – சுல்தான்.

    நீங்கள் எழுதிய மறுமொழியை நிறுத்தி வைத்துள்ளேன் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  15. அபூ முஹைon 13 Oct 2006 at 11:15 am 15

    //நீங்க வெகுஜனத் தொடர்புத் துறையில் இருக்கிறீர்களா?..//

    திருவடியான், நம்மள எங்காவது கொண்டு போய் கவுத்தறாதீங்கய்யா! ஆமா.. வெகுஜனத் தொடர்புத் துறைன்னா என்ன..? 🙂

    அன்புடன்,
    அபூ முஹை

  16. எழில்on 13 Oct 2006 at 11:59 am 16

    சகோதரர் அபுமுஹை,

    எனது எள்ளல் என்று சில வரிகளை குறித்திருக்கிறீர்கள். அது உங்களுக்கு எள்ளலாக பட்டிருக்கலாம் என்பதனை உணரும்போதிலும், அவற்றில் எள்ளலை வைத்து எழுதவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன்.

    ஆரம்பத்திலேயே “இன்னாருக்கு இந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் இந்த நியதிகள்” என்று எழுதிவைத்து அதனை ஆரம்பத்திலிருந்தே பாதுகாத்திருக்கலாம் என்று எழுதியிருந்தேன்.

    அல்லா அப்படி செய்யாததற்கு “அது அல்லாவின் நியதி” என்று பதில் கூறியிருக்கிறீர்கள். இதுவரை அழகாக உதாரணம் மூலம் விளக்கி வந்த தாங்கள் இங்கே வேறு வழியின்றி “அது அப்படித்தான்” என்று முடித்திருக்கிறீர்கள். இது எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. இது ஒரு பதிலாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எந்த கேள்விக்கும் விளக்கம் எழுத வேண்டாமே? “அது அப்படித்தான்” என்று முடித்திருக்கலாம் அல்லவா?

    நண்பர் சிராஜுதீன் என்ன பதில் கூறுகிறார் என்று காத்திருக்கிறேன்.


    இந்து மதத்தில் குரு என்ற கருத்து உண்டே தவிர இறைதூதர் என்ற கருத்து இல்லை. குரு சொல்வது ஒரு ஆசிரியர் சொல்வது போன்றது. ஐன்ஸ்டீனுக்குச் கணிதம் சொல்லித்தந்த குருவை விட ஐன்ஸ்டீன் என்ற சீடன் அதிகம் அறிந்தார். அவர் குருவாக இருந்து இன்னும் பல ஐன்ஸ்டீன்களை உருவாக்குவார். அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள். இவர்களுக்கு அடித்தளமாக வேதங்கள் இருக்கின்றவே தவிர வேதங்களே கட்டிடங்கள் அல்ல.

    இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.

    எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.

    தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று வருந்தும் இறைவன், தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று கோபம் கொள்ளும் இறைவன், இறைவன் என்ற கருத்துருவத்துக்கு ஒவ்வாதது என் கருத்து.

    அதே வேளையில் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் காரணமாய் இறைவனை தொழும் இப்பிறவி பாக்கியம் பெற்று பலர் அவ்வாறு பாக்கியம் பெற்றிராத பலரை இறைவனை நோக்கி திருப்புகிறார்கள்.

    அப்படிப்பட்ட ஒரு குருவாகவே என் கண்ணுக்கு ஜனாப் முகம்மது நபிகள் தெரிகிறார். வாழ்க்கையில் குருவுக்கு வந்தனம் செய்யவேண்டும். ஆனால், குருவையும் தாண்டி சிந்திக்கத்தான் குரு சொல்லித்தர வேண்டும். குரு சொன்னதில் வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு மேலே சிந்திக்க, பரிணாமம் அடைய மறுப்பவன், குருவுக்கு துரோகம் இழைக்கிறான். குரு சூரியனை காட்டுகிறார். சீடன் விரலை மட்டுமே பார்க்கிறான்.

    நன்றி

  17. ravi srinivason 13 Oct 2006 at 12:32 pm 17

    இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாமல் ஒருவர் வாழ முடியும்.பகுத்தறிவு கொண்டு நல்லது, கெட்டது அறிந்து கொண்டு ஒழுக்கம்மிக்க நல்ல வாழ்க்கை வாழ முடியும்.மதத்தின் பெயரால்
    அச்சுறுத்துவது, இந்த இறைவனை தொழாவிட்டால் நரகத்திற்குப் போவாய் என்பதெல்லம்
    தேவையே இல்லை.மதவாதிகளான உங்களைப் போன்றோர் நம்பிக்கையின் அடித்தளமாக
    அச்சுறுத்தலையும், பயத்தையும் முன்னிறுத்துகிறீர்கள். பல ஞானியரும், தத்துவ வாதிகளும்
    காட்டும் பாதை வேறு. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது உங்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையும்,
    அச்சமும் சேர்ந்தே இருப்பதாக உணர்கிறேன். என்னைப் பொருத்த வரை மத நம்பிக்கை இல்லாமல்
    ஒருவர் வாழ முடியும், பலர் அப்படி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து கற்க வேண்டியவை அனேகம்.
    மத நம்பிக்கையற்ற மார்க்சும், பெரியாரும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியுன், இன்ன பிறரும் கூறியுள்ளவை எனக்கு இந்த மதங்களை விட மிக அர்த்தமுள்ளவையாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றன.
    இப்படியெல்லாம் சிந்திப்பதே இறை விரோதம், இறை நிந்தனை என்று கூட உங்களுக்குத்
    தோன்றலாம்.

  18. அறிவுடைநம்பிon 13 Oct 2006 at 1:22 pm 18

    அபு,

    1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபாட்டை மட்டும் வலியுறுத்துவதோடு நில்லாமல் ஏன் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டும்?

    2) யூதமதத்திற்குப்பின் கிறித்தவமும், அதன்பின் இசுலாமும் உங்கள் இறை மார்க்கமாகச் சொல்கிறீர்கள்.நிற்க, முசுலிம்களின் பார்வையில் யூதர்களும், கிறித்தவர்களும் கூட உங்களவர்தானே? அவற்றையும் பின்பற்றலாமா?

    மன்னிக்கவும், நான் இந்து மதத்தின் மூடநம்பிக்கை போதனைகளிலிருந்து அயர்வுற்று மதங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையில் உள்ளவன். உங்கள் பார்வையில் நான் யார்? காபிரல்லாத எவரும் முசுலிமா? இவற்றை அறிந்துகொள்ளவே கேட்கிறேன்.

    நன்றியுடன்,

  19. அபூ முஹைon 13 Oct 2006 at 1:45 pm 19

    சகோதரர் எழில்

    உங்கள் மறுமொழியின் முற்பகுதி ”இறைவனின் நியதிகள்” என்ற பதிவிற்குரியது இந்தப்பதிவில் சேர்த்துள்ளீர்கள். இதை அங்கு பேசுவதுதான் சரியாக இருக்கும் முடிந்தால் இந்தக் கருத்தை அங்கேயே சொல்லுங்களேன்!

    உங்கள் மறுமொழியின் அடுத்த பகுதியில் உங்கள் நம்பிக்கைப் பற்றி எழுதியுள்ளீர்கள். அதோடு மனிதனின் சுதந்திரமான சிந்தனைக்கு இஸ்லாம் தடை செய்திருப்பது போலவும் உங்கள் கருத்து பிரதிபலிக்கிறது. இது விஷயமாக நாளை எழுதுகிறேன் நன்றி!

    ரவி சிரினிவாஸ், மற்றும் அறிவுடை நம்பி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் கருத்துக்கும் நாளை மறுமொழியில் பதிலளிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

    அன்புடன்,
    அபூ முஹை

  20. அபூ முஹைon 14 Oct 2006 at 9:43 am 20

    சகோதரர் எழில்,

    //இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.//

    சுய புத்தியோடுதான் இதை எழுதினீர்களா..? உங்களின் மேற்கண்ட கருத்து மொத்த உலக முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையைத் தகர்த்தெறிகிறதே கவனித்தீர்களா..?

    ”முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவார்” என்று சாட்சி கூறுகிறேன். இந்த வாக்கியத்தை ஏற்காமல் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியாது. ஆனால் நீங்களோ ”அல்லாஹ்வின் தூதர்” என்று சொல்லக்கூடாது என்று எழுதியுள்ளீர்கள். அதுவும் இறுதி இறைத்தூதர் என்பதும் மிகத்தவறு என்றும் சொல்லியுள்ளீர்களே..? எதன் அடிப்படையில் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது. விளக்கம் தாருங்கள்.

    //இந்து மதத்தில் குரு என்ற கருத்து உண்டே தவிர இறைதூதர் என்ற கருத்து இல்லை. குரு சொல்வது ஒரு ஆசிரியர் சொல்வது போன்றது. ஐன்ஸ்டீனுக்குச் கணிதம் சொல்லித்தந்த குருவை விட ஐன்ஸ்டீன் என்ற சீடன் அதிகம் அறிந்தார். அவர் குருவாக இருந்து இன்னும் பல ஐன்ஸ்டீன்களை உருவாக்குவார். அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள். இவர்களுக்கு அடித்தளமாக வேதங்கள் இருக்கின்றவே தவிர வேதங்களே கட்டிடங்கள் அல்ல.//

    உங்கள் மதத்திலிருக்கும் அதே கருத்துதான் இஸ்லாத்திலும் இருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. எந்த விஞ்ஞானியானாலும், சீடரானாலும் உலக விஷயங்களில் குரு, சிஷ்யன் என இருப்பதை இஸ்லாம் மறுக்கவில்லை! உலக விஷயங்களில் புதிய கண்டு பிடிப்புகள், தொழில்கள், விவசாயங்கள் போன்றவற்றில் இறைத்தூதரைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

    மார்க்கமல்லாத உலக விஷயங்களில் என்னை விட நீங்களே நன்கறிந்தவர்கள் என்று இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லியுமிருக்கிறார்கள்.

    கல்வி கற்கும் மாணவன் ஆசிரியரைக் குரு என்று சொல்வதிலும், அவரை மதித்து கண்ணியப்படுத்துவதையும் இஸ்லாம் சொல்லித்தந்துள்ளது. தொழில்களைக் கற்றுத்தருபவர்களையும் குருவாகக் கருதுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் இறைத்தூதர்கள் – என்பது இறைவன் மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கும் உயர் பதவி – இறைச் செய்தியைப் பெற்று அதன்படி தாமும் வாழ்ந்து காட்டி, மக்களையும் இறை மார்க்கத்தின் பக்கம் அழைத்தவர்கள்.

    என்ன முயன்றாலும் மனிதர்களால் அறிந்த கொள்ள முடியாத, எந்த விஞ்ஞானியின் சிந்தனைக்கும் எட்டாத சில மறைவான விஷயங்களையும் இறைவனிடமிருந்து பெற்று அதைப் பற்றி மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவர்கள் இறைத்தூதர்கள். எத்தனை குருமார்கள் ஒன்று சேர்ந்தாலும் இறைத்தூதர் என்ற அந்தஸ்தை ஒரு போதும் அடைய முடியாது. ஏனென்றால், இந்தப் பதவி இறைவன் மட்டுமே தெர்ந்தெடுத்து வழங்கும் பதவி மனிதர்களுக்கு இதில் எவ்வித பங்குமில்லை!

    //எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.//
    – இதை விளங்கும்படி விவரமாகச் சொல்லுங்கள்! ”யாரை உயர்த்தி யாரைத் தாழ்த்தினான் இறைவன்..?”

    //தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று வருந்தும் இறைவன், தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று கோபம் கொள்ளும் இறைவன், இறைவன் என்ற கருத்துருவத்துக்கு ஒவ்வாதது என் கருத்து.// – தன்னை வணங்கவே மனிதர்களைப் படைத்ததாக இறைவன் சொல்கிறான்! அப்படியிருக்கும்போது தனக்கு மாறு செய்தவர்களை தண்டிப்பேன் என்பதில் என்ன குறை கண்டீர்கள்..?

    //அதே வேளையில் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் காரணமாய் இறைவனை தொழும் இப்பிறவி பாக்கியம் பெற்று பலர் அவ்வாறு பாக்கியம் பெற்றிராத பலரை இறைவனை நோக்கி திருப்புகிறார்கள்.//

    – எங்கே! உங்கள் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் இப்பிறவியின் காரணத்தின் அடிப்படையை கொஞ்சம் விளக்குங்களேன் தெரிந்து கொள்வோம்!

    //அப்படிப்பட்ட ஒரு குருவாகவே என் கண்ணுக்கு ஜனாப் முகம்மது நபிகள் தெரிகிறார். வாழ்க்கையில் குருவுக்கு வந்தனம் செய்யவேண்டும். ஆனால், குருவையும் தாண்டி சிந்திக்கத்தான் குரு சொல்லித்தர வேண்டும். குரு சொன்னதில் வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு மேலே சிந்திக்க, பரிணாமம் அடைய மறுப்பவன், குருவுக்கு துரோகம் இழைக்கிறான். குரு சூரியனை காட்டுகிறார். சீடன் விரலை மட்டுமே பார்க்கிறான்.//

    இஸ்லாம் ஒரு போதும், நம்பிக்கை என்ற வட்டத்திற்குள் நிறுத்தி சிந்திக்காதே, மாற்றுக் கருத்து கொள்ளாதே என்று மக்களை முடக்கியதில்லை. சிந்தித்து, விவாதித்துத் தெளிவு பெற்ற பின், ”விரும்பியவர் ஏற்கட்டும், விரும்பியவர் மறுக்கட்டும்” என்ற கருத்து சுதந்திரத்தை வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.

    எனவே குருவையும் தாண்டி சிஷ்யன் சிந்தித்து, குருவையும் தாண்டி சாதனை செய்வதில் இஸ்லாத்துக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எல்லாரும் ஒரு வகையில் குருவாகவும், ஒரு வகையில் சிஷ்யனாகவும் இருக்கிறோம்.

    ஆனால் இறைத்தூதர் என்ற தகுதியில் இறைத்தூதர்கள் மட்டுமே இருக்க முடியும். மார்க்க விஷயத்தில் வேறு எவருடையக் கருத்தும் புறக்கணிக்கத்தக்கது. வரிக்கு வரி இறைத்தூதர் மட்டுமே பின்பற்றத்தக்கவர். மார்க்கத்தில் இறைத்தூதர் குருவாக இருக்கிறார் என்று பொருள் கொள்வதில் ஆட்சேபனை இல்லை! ஆனால் இறைத்தூதர் என்று சொல்வது தவறு, குரு என்று சொல்ல வேண்டும் என்ற உங்களின் பொடு போக்கானக் கருத்தை முஸ்லிம்கள் சார்பாக ஆட்சேபிக்கிறேன்!

    ஜனாப் முஹம்மது நபிகள் உங்கள் கண்ணுக்கு குருவாகத் தெரிந்தால் தெரிந்து விட்டு போகட்டும். இஸ்லாத்தை நம்பிக்கை கொள்ளாத நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கருதிக் கொள்ளலாம். இறைவனைத் தவிர வணக்கத்தை யாருக்கும் செலுத்த மாட்டோம், அவர் இறைத்தூதராக இருந்தாலும் சரியே!

    மற்றவை சகோதரர் எழில் அவர்களின் விளக்கங்களைக் கண்ட பின்… நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  21. எழில்on 14 Oct 2006 at 11:08 am 21

    மிக்க நன்றி சகோதரர் அபுமுஹை

    நிச்சயம் இவற்றைப்பற்றி பேசலாம்.
    அதற்கு முன்னால் ஒரு சின்ன மன பரிசோதனை செய்யலாம்.

    நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

    அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?

  22. பாபுon 14 Oct 2006 at 3:42 pm 22

    எழில்,

    //இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.//

    வேடிக்கை மனிதரய்யா நீர், இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்கவே வலைப்பதிவு தொடங்கிவிட்டு 90% அதன்படியே செய்துவிட்டு நான் செய்வது ‘எள்ளலாக’த் தோன்றினாலும் ‘எள்ளல்’ இல்லை என்கிறீர். என்ன ஒரு கள்ளத்தனம்? நீங்கள் மிகவும் மதிக்கிறவர்களைப் பற்றியும் யாரும் எதுவும் எழுதிவிட்டு ‘எள்ளலா’க த் தோன்றினாலும் ‘எள்ளல்’ இல்லை என்று சொன்னால் அதையும் நம்புவீர்கள் போலும்.

    அதென்ன, லாஜிக்கலாக சாத்தியமுள்ள, இறைத்தூதர் கருத்தை மறுக்கத்துணிகிற/வம்பு வளர்க்கிற உம்மால் ‘ஆணுக்கும் ஆணுக்கும் அவதாரமே பிறக்கும்’ கடவுள் எந்த கேடுகெட்ட வடிவிலும் அவதாரமெடுக்கலாம் என்ற நாற்றத்தையெல்லாம் கிரகிக்க முடிகிறது?

  23. பாபுon 14 Oct 2006 at 4:04 pm 23

    //உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்? //

    ‘காலத்தை’ தன் கரத்தில் வைத்திருக்கிற இறைவன் தன் தூதருடைய விடயத்தில் அத்தாட்சிகளை அனுப்பி உண்மையை நிலைநாட்டுகிறான். அநேக தீர்க்கதரிசிகள் இறை அத்தாட்சிகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்கள். நோவா, யோசேப், மோஸஸ், ஜீஸஸ், முஹம்மது போன்ற தூதர்கள் எல்லோருமே ‘சோதனை’யில் வென்று தம்மை நிரூபித்தவர்கள் தாம்.

  24. சவூதி தமிழன்on 14 Oct 2006 at 10:05 pm 24

    சகோ அபூமுஹை

    எழில் என்பவர், உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவரை அவரது திசை திருப்பும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம். அநேகமாக இவர் இப்போது ‘உள்வாங்கு’கிறார் என நினைக்கிறேன்.

  25. இப்னு பஷீர்on 15 Oct 2006 at 6:25 am 25

    //இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.//

    படைப்பாளன் தனது உயர்ந்த படைப்பாகிய மனிதனுடன் தொடர்பு கொள்ள, தனது வழிகாட்டுதல்களை தெரிவிக்க, தேர்ந்தெடுத்த வழிமுறைதான் தூதுத்துவம் என்பது. ‘தாம் குரங்கின் வழித்தோன்றல்கள்’ என இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இது விளங்காமல் போனதில் வியப்பொன்றுமில்லை.

    //இந்து மதத்தில் குரு என்ற கருத்து உண்டே தவிர இறைதூதர் என்ற கருத்து இல்லை. குரு சொல்வது ஒரு ஆசிரியர் சொல்வது போன்றது. ஐன்ஸ்டீனுக்குச் கணிதம் சொல்லித்தந்த குருவை விட ஐன்ஸ்டீன் என்ற சீடன் அதிகம் அறிந்தார். அவர் குருவாக இருந்து இன்னும் பல ஐன்ஸ்டீன்களை உருவாக்குவார். அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள். இவர்களுக்கு அடித்தளமாக வேதங்கள் இருக்கின்றவே தவிர வேதங்களே கட்டிடங்கள் அல்ல.//

    ஒரு உதாரணத்திற்கு, இவ்வுலக வாழ்வை மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு பயணத்திற்கு ஒப்பிடுவோம். பயணத்தை வடிவமைத்த இறைவனே பயண வழிகாட்டியாக ஒரு வேதத்தை அருளி, செயல்முறை விளக்கத்திற்காக தனது தூதரையும் அனுப்பியிருக்கிறான். இறைவனின் வழிகாட்டுதல்களைத்தான் இறைத்தூதர் போதிக்கிறார்.

    குரு என்பவர் அப்படி அல்ல. அவர் தனது சிற்றறிவுக்கு எட்டிய ஞானத்தை மட்டும்தான் அவரால் போதிக்க முடியும். அது சரியான வழியா அல்லவா என்பதைக்கூட அவரால் உறுதிப் படுத்த இயலாது. ஏனெனில் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’.

    இறைவனின் வழிகாட்டுதல்களைக் கொண்ட இறைத்தூதரே குருக்களிலெல்லாம் மிக மேலானவர். அவரது போதனைகள் இருக்கும்வரை இன்னொரு குருவிற்கு வேலையில்லை.

    //எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.//

    இறைவனுக்கு முன் எல்லோரும் சமமானவரே. இறைவனிடத்தில் மிகச்சிறந்தவர் மனிதர்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான் என்பது இஸ்லாமின் கொள்கை.

    //அதே வேளையில் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் காரணமாய் இறைவனை தொழும் இப்பிறவி பாக்கியம் பெற்று பலர் அவ்வாறு பாக்கியம் பெற்றிராத பலரை இறைவனை நோக்கி திருப்புகிறார்கள்.//

    என்ன.. டார்வின் முற்பிறவி இப்பிறவி பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறாரா? தற்செயலாக தோன்றிய ஒருசெல் உயிரியிலிருந்து பல்கிப் பெருகியதாக நம்பப்படும் உயிரினங்களுல் முற்பிறவி, இப்பிறவி என்பதெல்லாம் உண்டு என்று இன்னுமா நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

  26. இப்னு பஷீர்on 15 Oct 2006 at 6:50 am 26

    //இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாமல் ஒருவர் வாழ முடியும்.பகுத்தறிவு கொண்டு நல்லது, கெட்டது அறிந்து கொண்டு ஒழுக்கம்மிக்க நல்ல வாழ்க்கை வாழ முடியும்.//

    வாழலாம்தான். ஆனால், இந்த ‘நல்லது / கெட்டது’ என்பது நாட்டிற்கு நாடு, காலத்திற்கு காலம், கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் மாறுபாடு அடையும் ஒரு விஷயம். உங்களுக்கு நல்லதாக தெரியும் ஒன்று எனக்கு கெட்டதாக தெரியலாம். இதை யார்தான் வரையறை செய்ய முடியும் இறைவனைத் தவிர?

    //மதத்தின் பெயரால்
    அச்சுறுத்துவது, இந்த இறைவனை தொழாவிட்டால் நரகத்திற்குப் போவாய் என்பதெல்லம்
    தேவையே இல்லை.மதவாதிகளான உங்களைப் போன்றோர் நம்பிக்கையின் அடித்தளமாக
    அச்சுறுத்தலையும், பயத்தையும் முன்னிறுத்துகிறீர்கள். பல ஞானியரும், தத்துவ வாதிகளும்
    காட்டும் பாதை வேறு. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது உங்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையும்,
    அச்சமும் சேர்ந்தே இருப்பதாக உணர்கிறேன்//

    ஒரு தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் மாணவனுக்கு ‘இந்தத் தேர்வில் தவறி விடுவோமோ’ என்ற அச்சம் கொஞ்சமாவது இருந்தால்தான் அவனால் தன்னை ஒழுங்காக தயார் செய்து கொள்ள முடியும். அந்த அச்சத்தைத்தான் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வலியுறுத்துகிறது.

    //என்னைப் பொருத்த வரை மத நம்பிக்கை இல்லாமல்
    ஒருவர் வாழ முடியும், பலர் அப்படி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து கற்க வேண்டியவை அனேகம்.//

    வாழ முடியுமே! ஆனால் மரணத்திற்கு பிறகு என்ன நிகழ்கிறது என்பதை யாரும் உறுதி படுத்தாத சூழ்நிலையில், நான் முன்பு சொன்னதுபோல, ‘மறுமை இருக்கிறது’ என்ற நம்பிக்கையில் வாழ்வை அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

    //மத நம்பிக்கையற்ற மார்க்சும், பெரியாரும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியுன், இன்ன பிறரும் கூறியுள்ளவை எனக்கு இந்த மதங்களை விட மிக அர்த்தமுள்ளவையாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றன.
    இப்படியெல்லாம் சிந்திப்பதே இறை விரோதம், இறை நிந்தனை என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.//

    இவர்களின் கொள்கைகள் இஸ்லாம் மார்க்க கொள்கைகளுக்கு முரண்படாத வரையில் இவற்றை ஏற்றுக் கொள்ள முஸ்லிம்களுக்கு தடையேதும் இல்லை. மார்க்கத்திற்கு முரண்படும் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

  27. இப்னு பஷீர்on 15 Oct 2006 at 7:04 am 27

    //அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//

    தூதரை அனுப்பியவனுக்குத் தெரியாதா அவரை எப்படி மெய்ப்படுத்துவது என்று? தனது உண்மையான தூதரை தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தும் பொறுப்பு இறைவனுக்கே உண்டு.

  28. அபூ முஹைon 15 Oct 2006 at 7:42 am 28

    /இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாமல் ஒருவர் வாழ முடியும்.பகுத்தறிவு கொண்டு நல்லது, கெட்டது அறிந்து கொண்டு ஒழுக்கம்மிக்க நல்ல வாழ்க்கை வாழ முடியும்.மதத்தின் பெயரால் அச்சுறுத்துவது, இந்த இறைவனை தொழாவிட்டால் நரகத்திற்குப் போவாய் என்பதெல்லம் தேவையே இல்லை.மதவாதிகளான உங்களைப் போன்றோர் நம்பிக்கையின் அடித்தளமாக அச்சுறுத்தலையும், பயத்தையும் முன்னிறுத்துகிறீர்கள். பல ஞானியரும், தத்துவ வாதிகளும காட்டும் பாதை வேறு. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது உங்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையும்,
    அச்சமும் சேர்ந்தே இருப்பதாக உணர்கிறேன். என்னைப் பொருத்த வரை மத நம்பிக்கை இல்லாமல்
    ஒருவர் வாழ முடியும், பலர் அப்படி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து கற்க வேண்டியவை அனேகம்.
    மத நம்பிக்கையற்ற மார்க்சும், பெரியாரும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியுன், இன்ன பிறரும் கூறியுள்ளவை எனக்கு இந்த மதங்களை விட மிக அர்த்தமுள்ளவையாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றன. இப்படியெல்லாம் சிந்திப்பதே இறை விரோதம், இறை நிந்தனை என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.// –

    – ரவி சிரினிவாஸ், உங்கள் கருத்துக்கு நன்றி!

    இறைத்தூதுப் பணியின் முக்கியப் பிரச்சாரம் ”அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதுதான்” திருக்குர்ஆனின் பல வசனங்களில், இதைக் காணலாம். ஏன்னா..? நாளைக்கு ”எனக்கு, எவரும் ஓரிறைக் கொள்கை பற்றி எச்சரிக்கவில்லை” என்று நழுவி விடுவான் என்பதால் மனிதனை எவ்வளவு அச்சமூட்டி எச்சரிக்க முடியுமோ அந்தளவுக்கு இஸ்லாம் எச்சரிக்கிறது.

    மனிதன் வாழ்வதற்கு – அதாவது உயிர் வாழ்வதற்கு தண்ணீர், உணவு இவைகள் போதும். மதங்கள் அவசியமில்லை பகுத்தறிவும் அவசியமில்லை! பகுத்தறிவில்லாத மற்ற உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன. மதங்கள் இல்லையென்றால் மனிதன் செத்து விடுவான் என்று நாம் சொல்லவில்லை.

    நீங்கள் மேற்கோள் காட்டும் ஞானியரும், தத்துவவாதிகளும் ஒத்தக்கருத்தில் இருக்கிறார்களா? பெரியார் இஸ்லாத்தை சிபாரிச செய்திருக்கிறாராமே அதை ஏன் நீங்கள் பின்பற்றுவதில்லை? சரி போகட்டும்.

    இந்த உலகில் எவ்வளவோ அக்கிரமங்கள். அநியாயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, மோசடிகள், எளியவனை வலியவன் நசுக்குவது உட்பட அநீதிகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதில் அதிசயம் என்னவென்றால். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவன் பணபலத்தால் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறான்.

    தப்பித்துக் கொள்வது மட்டுமல்ல இந்த உலக வாழ்க்கையில் சகல வசதிகளோடு எல்ல சொளகர்யங்களையும் பெற்று ஜாலியாக வாழ்கிறான். இவர்களோடு அயோக்கிய அரசியவாதிகளையும் சேர்த்துக் கொள்வோம்.

    இவர்களுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா..? இதற்கு உங்கள் பகுத்தறிவு என்ன தீர்ப்பு சொல்கிறது?

    தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளும் அக்கிரமக்காரனுக்கும், அநியாயக்காரனுக்கும் தண்டனையே கிடையாது என்றால் நல்லவனாய் வாழ்வதில் என்ன புண்ணியம்..? இதையும் உங்கள் தத்துவவாதிகளிடம் கேட்டுச் சொல்லுங்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  29. அபூ முஹைon 15 Oct 2006 at 7:45 am 29

    அன்பின் இப்னு பஷீர், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி! ரமளான் மாதத்தின் கடைசி வாரம் இது. பெருநாள் நெருங்கி, பெருநாள் விடுமுறைக்கு இன்னும் 3 நாட்கள் மீதமிருக்கிறது. விடுமுறைக்கு முன் முடிக்க வேண்டிய வேலைப்பளு கூடிவிட்டது. எழுத நேரமில்லை நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  30. புதுப் பார்வைon 15 Oct 2006 at 8:12 am 30

    சகோதரர் அபூமுஹை! உங்களின் இந்தப் பதிவும் பதிவு சார்ந்த கருத்தோட்டங்களும் பிற மத சகோதரர்களுக்கு அவசியமானதாகும். குறிப்பாக சகோதரர் எழில் நடுநிலையோடு கருத்துக்களை சிந்திப்பார் என்று நம்பலாம். சிந்திக்க வேண்டும்.

    இறைத்தூதர்கள் பற்றியும் அவர்களை கண்டெடுத்து அவர்கள் மீது மனிதர்கள் வைக்க வேண்டிய நம்பிக்கைப் பற்றியும் இன்னும் சற்று ஆழமாக எழுதப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். கருத்து வைக்கும் மாற்றுமத சகோதரர்களை குத்திக் காட்ட வேண்டாம். அவர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் விளக்குவதே நமது கடமை.

    தொடருங்கள்.

  31. புதுப் பார்வைon 15 Oct 2006 at 8:17 am 31

    //இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருப்பதையே அறியாமல் இவ்வுலகில் பலர் இருக்கலாம் .அல்லது பிறப்பு ,அல்லது இருப்பிடத்தின் காரணமாக இஸ்லாம் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம் .அவர்கள் இஸ்லாமை நிராகரித்ததாக எப்படி சொல்ல முடியும் ?அவர்களுக்கும் தண்டனை தானா? அவர்கள் செய்த குற்றம் என்ன ? //

    இது பரவலாக சிந்தனைவாதிகளின் மனதை குடையும் கேள்வியாகும். ஆனால் இறைவன் நீதி மிக்கவன். **எந்த ஒரு சமுதாயத்திற்கும் சத்தியத்தை எத்தி வைக்காதவரை அவர்களை தண்டிக்க மாட்டேன்** என்று குர்ஆனில் கூறுகிறான் (வசன எண் நினைவில்லை. தெரிந்தவர்கள் குறிப்பிடவும். எனவே பழங்குடி மக்கள் காட்டுவாசிகள் போன்றவர்களுக்கு இஸ்லாம் எப்படி தெரியும்? என்ற கேள்வி நம்மைப் பொருத்தவரை நியாயமாக தெரிந்தாலும் இறைவன் ஏதோ ஒரு விதத்தில் அவனைப் பற்றியும் – அவனை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் எத்தி வைக்கத்தான் செய்வான்.

  32. அபூ முஹைon 15 Oct 2006 at 8:52 am 32

    //அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//

    சகோதரர் எழில்,
    முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகிறோம். அதற்கான சான்றுகள் வரலாற்று நிகழ்வுகளில் பதியப்பட்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று, அன்றைய இஸ்லாத்தை சாராத அறிஞர்களும் அடையாளம் கண்டு இஸ்லாத்தைத் தழுவினார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தாம் என எதிரிகளும் சரியாக அடையாளம் கண்டிருந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் பதியப்பட்டள்ளன.

    சகோதரர் எழில் அவர்கள் சற்று அவகாசம் எடுத்து இவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தெரியாது என்றால் அதைத் தெரியப்படுத்துங்கள், நோன்புப் பெருநாள் விடுமுறை கழிந்து தனிப்பதிவில் அவற்றை விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்!

    நன்றி
    அன்புடன்,
    அபூ முஹை

  33. அபூ முஹைon 15 Oct 2006 at 9:45 am 33

    //அபு,
    1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபாட்டை மட்டும் வலியுறுத்துவதோடு நில்லாமல் ஏன் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டும்?

    2)யூதமதத்திற்குப்பின் கிறித்தவமும், அதன்பின் இசுலாமும் உங்கள் இறை மார்க்கமாகச் சொல்கிறீர்கள்.நிற்க, முசுலிம்களின் பார்வையில் யூதர்களும், கிறித்தவர்களும் கூட உங்களவர்தானே? அவற்றையும் பின்பற்றலாமா?

    மன்னிக்கவும், நான் இந்து மதத்தின் மூடநம்பிக்கை போதனைகளிலிருந்து அயர்வுற்று மதங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையில் உள்ளவன். உங்கள் பார்வையில் நான் யார்? காபிரல்லாத எவரும் முசுலிமா? இவற்றை அறிந்துகொள்ளவே கேட்கிறேன். நன்றியுடன்,// – அறிவுடை நம்பி

    ஐயா அறிவுடை நம்பி அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி!

    இஸ்லாத்தை எற்றுக் கொண்ட முஸ்லிம்கள் என்ன பாவங்கள் செய்தாலும் அதை இறைவன் மன்னிக்கிறான் என்றும். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் என்ன நன்மைகள் செய்தாலும் அவற்றை இறைவன் ஏற்றுக் கொளவதில்லை எனவும் சில இஸ்லாத்தின் எதிரிகள் தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு விளக்கமாகவே ”இறைவன் மன்னிக்காத குற்றம்” என்ற தலைப்பில் இந்தப் பதிவை எழுதினேன்.

    இறைவனுக்கு இணை வைத்தல் என்ற குற்றத்தைச் செய்தவர்களின் நல்லறங்களை இறைவன் அழித்து விடுவான். இணை கற்பித்தல், முஸ்லிமல்லாதவர்கள் செய்தாலும் சரி. முஸ்லிம்கள் செய்தாலும் சரியே! இறைத்தூதர்கள் செய்தாலும் அவர்களின் நல்லறங்களும் அழிந்து விடும் என்றே இறைவன் கூறுகிறான். இதில் இஸ்லாம் எவ்வித பாகுபாடின்றி நூல் பிடித்த மாதிரி நேர் கோட்டில் நடுநிலையாக சட்டங்களை வகுத்துள்ளது என்பது வெள்ளிடை மலை. ஆனாலும் பாருங்கள் சில அறிவுசீவிகளின் பின்னூடடங்கள் எப்படியிருக்கிறது..?

    //1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபாட்டை மட்டும் வலியுறுத்துவதோடு நில்லாமல் ஏன் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டும்?//

    மனிதனுக்கு எது நல்லது என்பது மனிதனைப் படைத்த இறைவனுக்குத்தான் தெரியும். மனிதன் வெறும் மந்திரத்தைச் சொல்லும் சடங்காக இஸ்லாத்தை உபயோகித்தால் போதும் என்று கருதாமல், அவனுக்கு எல்லா வகையிலும் இறை மார்க்கமான இஸ்லாம் வழிகாட்டுகிறது.

    //2) யூதமதத்திற்குப்பின் கிறித்தவமும், அதன்பின் இசுலாமும் உங்கள் இறை மார்க்கமாகச் சொல்கிறீர்கள்.நிற்க, முசுலிம்களின் பார்வையில் யூதர்களும், கிறித்தவர்களும் கூட உங்களவர்தானே? அவற்றையும் பின்பற்றலாமா?//

    இது முற்றிலும் தவறானக் கருத்துக்கள். யூதர்களும், கிறித்தவர்களும் ஆப்ரஹாம் என்ற இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்வார்கள். ஆனால் நபி இப்ராஹீம் (அலை) யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை நேர்மையான முஸ்லிமாக அவர் இருந்தார் என்று இஸ்லாம் கூறுகிறது.

    யூத, கிறித்தவ மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. இது பற்றி ”யூத, கிறித்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்?” என்ற தொடரில் விளக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!

    மற்ற மதத்தில் நீங்கள் அயர்வுற்றது அது உங்கள் சொந்த விவகாரம். நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  34. எழில்on 15 Oct 2006 at 9:49 am 34

    உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோதரர் அபுமுஹை,
    என்னுடைய முழு கேள்வியையும் படித்தீர்கள் என்று கருதுகிறேன்.

    உங்களுக்காக மீண்டும் முழுமையாக கேட்கிறேன்.

    //நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

    அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?
    //

    இந்த கேள்வி முகம்மது நபி பெருமானார் பற்றியோ குரானில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதோ அல்ல. அதற்கும் முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கும்போது நான்கு பேர்கள் நானே உண்மையான இறைதூதர் என்று கோரினால், எப்படி உண்மையான இறைதூதரை கண்டு பின் செல்வீர்கள் என்பதே கேள்வி.

    உங்கள் பதிலுக்கு முன்கூட்டிய நன்றி

    அன்புடன்
    எழில்

  35. அபூ முஹைon 15 Oct 2006 at 10:18 am 35

    //இந்த கேள்வி முகம்மது நபி பெருமானார் பற்றியோ குரானில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதோ அல்ல. அதற்கும் முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கும்போது நான்கு பேர்கள் நானே உண்மையான இறைதூதர் என்று கோரினால், எப்படி உண்மையான இறைதூதரை கண்டு பின் செல்வீர்கள் என்பதே கேள்வி.//

    சகோதரர் எழில்

    இந்தக் கேள்வியை ஏதாவது கேஜி படிக்கும் குழந்தைகளிடம் கேளுங்கள்.

    நன்றி
    அன்புடன்,
    அபூ முஹை

  36. அபூ முஹைon 15 Oct 2006 at 10:28 am 36

    ஐயா kulakkodan, உங்கள் வருகைக்கு நன்றி!

    நான் useless என்றால் நீங்கள் எந்த அளவுக்கு உபயோகமானவர் என்பதை அறிவிக்கலாமே..? நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  37. எழில்on 15 Oct 2006 at 10:42 am 37

    //இந்தக் கேள்வியை ஏதாவது கேஜி படிக்கும் குழந்தைகளிடம் கேளுங்கள்.

    நன்றி
    அன்புடன்,
    அபூ முஹை//

    நன்றி சகோதரர் அபுமுஹை

    ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

    நன்றி
    நட்புடன்
    எழில்

  38. அபூ முஹைon 15 Oct 2006 at 10:46 am 38

    வாங்க புதுப்பார்வை, வலைப்பூவைப் பற்றிய உங்கள் பார்வையும் புதுசாத்தான் இருக்கு.

    //கருத்து வைக்கும் மாற்றுமத சகோதரர்களை குத்திக் காட்ட வேண்டாம். அவர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் விளக்குவதே நமது கடமை.// – புதுப்பார்வை

    நாமும் பொறுமையாகத்தான் சொல்லி வருகிறோம். அப்படியிருந்தும் கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாதவர்கள் நம்மை ஒருவர் ”யூஸ்லெஸ்” என்று சாடியிருக்கிறார். இவர் யாருக்கு எவ்வளவு ”யூஸாக” இருந்தார்னு, வாங்க கேட்டுச் சொல்லுங்கப்பா..?

    அன்புடன்,
    அபூ முஹை

  39. அபூ முஹைon 15 Oct 2006 at 10:54 am 39

    //நன்றி சகோதரர் அபுமுஹை
    ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா//
    – எழில்

    நீங்கள் கேட்ட கேள்விக்கும் சேர்த்தே இங்கு தெளிவு கிடைக்கும்.

    //சகோதரர் எழில் அவர்கள் சற்று அவகாசம் எடுத்து இவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தெரியாது என்றால் அதைத் தெரியப்படுத்துங்கள், நோன்புப் பெருநாள் விடுமுறை கழிந்து தனிப்பதிவில் அவற்றை விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்!// – அபூ முஹை

    அன்புடன்,
    அபூ முஹை

  40. இப்னு பஷீர்on 16 Oct 2006 at 9:00 am 40

    //அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//

    ‘இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? ‘

  41. வாசகன்on 16 Oct 2006 at 3:01 pm 41

    ராஜ் said…
    //உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்? //

    ‘காலத்தை’ தன் கரத்தில் வைத்திருக்கிற இறைவன் தன் தூதருடைய விடயத்தில் அத்தாட்சிகளை அனுப்பி உண்மையை நிலைநாட்டுகிறான். அநேக தீர்க்கதரிசிகள் இறை அத்தாட்சிகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்கள். //

    மிஸ்டர் எழில்,
    ராஜ் அளித்த பதில்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையா?
    இறைவனை நீங்கள் நம்பினால் தன்னுடைய இறைத்தூதரை அவன் உண்மைப்படுத்துவான் என்பதும் விளங்கும். போலிகளும் வரலாற்றில் தூக்கி எறியப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.

    உங்களுடைய இக்கேள்வியின் மூலம் என்ன வாதிக்க/சாதிக்க வருகிறீர்கள்?

    இப்னு பஷீர் என்பவரும் தன் புதிய பதிவில் அருமையாக விளக்கமளித்துள்ளாரே, பார்த்தீர்களா?

  42. Dharumion 20 Nov 2006 at 10:18 am 42

    “You are either with us or with them”. 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?

    இப்போது உங்கள் பதிவின் இரண்டாம், மூன்றாம் பத்திகளை வாசித்துப் பாருங்கள். இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் – ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?

  43. அபூ முஹைon 21 Nov 2006 at 9:44 am 43

    தருமி உங்கள் மறு வருகைக்கு நன்றி!

    //இப்போது உங்கள் பதிவின் இரண்டாம், மூன்றாம் பத்திகளை வாசித்துப் பாருங்கள். இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் – ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?// – தருமி.

    நீங்கள் எழுதியதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ”விரும்புவர் நம்பட்டும், விரும்புவர் மறுக்கட்டும்” என்ற பிறகு இது இறைவனால் வார்த்தைகள்” என நம்புவதும், நிராகரிப்பதும் அவரவர் சுய சிந்தனைக்கு. ஆனால் இங்கே எஞ்சியிருப்பது தர்க்க ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் எது சரி? என்பது பற்றி வாருங்கள் பேசலாம்.

    பேசலாமெனில், மறுமையை நம்புவதில், நம்பி செயலாற்றுவதிலும் மனித குலத்துக்கு அளப்பறிய நன்மைகள் இருக்கின்றன என்பது என் கருத்து. (நான் முஸ்லிம் என்பதாலும் மறுமையை சரிகாணும் நிர்ப்பந்தம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம்) இது பற்றி இதே பதிவின் ரவி சிரினிவாஸ் பின்னூட்டத்தில் மறுமையை நம்பாதவர்களை நோக்கி சில கேள்விகள் வைத்திருக்கிறேன், நீங்கள் மறுமையை நம்பாதவராக இருந்தால் அதற்கான விளக்கங்களை எனக்கு அறியத் தாருங்கள்! அப்படியே பாவம், புண்ணியம் இரண்டும் சமமாகி விடுமா? நல்லவன், கெட்டவன் இருவரும் சமமாகி விடுவார்களா? என்பதையும் சேர்த்தே சொல்லி விடுங்கள்!

    மறுமையை நம்புவதால் மனித குலத்துக்கு என்னென்ன நன்மைகள்? என்பதை மீண்டும் விளக்குகிறேன், நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  44. Dharumion 21 Nov 2006 at 10:29 am 44

    மன்னிக்கணும்; நீங்க சொல்ல வர்ரது எனக்குப் புரியவில்லை.

    //மறுமையை நம்பாதவர்களை நோக்கி சில கேள்விகள் வைத்திருக்கிறேன்,..//

    நானும் இதைப் பற்றிய என் கருத்தை, ஆபிரஹாமிய மதங்கள் சொல்லும் நித்திய பரிசு / தண்டனை பற்றிய என் கருத்தை கிறித்துவத்திற்கு எதிரான என் பதிவில் சொல்லியுள்ளேன். காண்க.

  45. Dharumion 21 Nov 2006 at 10:32 am 45

    தொடர்கிறேன்.

    நான் கேட்ட கேள்வியே வேறல்லவா? அதற்கும் நீங்கள் அளித்துள்ள பதிலில் ஏதும் விடைகாண முடியவில்லை.

    இன்னொரு சந்தேகம்; உங்களிடம் பதில் இருக்குமென நினைக்கிறேன். பைபிள்-குரான் சம்பந்தப் பட்டது. தனி மயிலில் அனுப்ப முயல்கிறேன். நன்றி

  46. அபூ முஹைon 21 Nov 2006 at 11:48 am 46

    //தொடர்கிறேன்.

    நான் கேட்ட கேள்வியே வேறல்லவா? அதற்கும் நீங்கள் அளித்துள்ள பதிலில் ஏதும் விடைகாண முடியவில்லை.//

    முதல் பத்தி.

    //இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ”காஃபிர்கள்” அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றிச் சரியாக உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதற்குப் பகரமாக மறுமையில் சொர்க்கத்தை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.//

    இரண்டாம் பத்தி.

    //இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.//

    தருமி நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பத்திகளும் இறைவன் கூறியதாகத்தான் எழுதப்பட்டுள்ளது. நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் இறைவனின் வார்த்தைகள். நிராகரித்தவர்களுக்கு இஸ்லாம் முஹம்மது என்ற மனிதரின் வார்த்தைகள் என்று நீங்கள் சொல்வதாகப் புரிந்து கொண்டேன். உங்கள் எழுத்தும் அப்படித்தான் இருக்கிறது. அப்படியில்லையா? அப்போ நான் தவறாக விளங்கிக் கொண்டேனா?

    //இன்னொரு சந்தேகம்; உங்களிடம் பதில் இருக்குமென நினைக்கிறேன். பைபிள்-குரான் சம்பந்தப் பட்டது. தனி மயிலில் அனுப்ப முயல்கிறேன். நன்றி//

    அனுப்புங்கள் தெரிந்தால் விளக்கம் தருகிறேன். பொதுவானது என்றால் மறுமொழியிலேயே நீங்கள் பதியலாம் நன்றி.

    அன்புடன்,
    அபூ முஹை

  47. Dharumion 23 Nov 2006 at 1:05 am 47

    1. Revelation என்ற பைபிளில் இருக்கும் பகுதி குரானிலும் உண்டா?

    2. எப்படியிருப்பினும், இப்பகுதி பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து யாது?

    இன்னுமொரு கேள்வியும் உண்டு; உங்கள் பதிலைப் பொருத்து அதை அமைக்க வேண்டியதுள்ளாதால் பிறகு கேட்கிறேன்.

  48. அபூ முஹைon 23 Nov 2006 at 12:52 pm 48

    //1. Revelation என்ற பைபிளில் இருக்கும் பகுதி குரானிலும் உண்டா?//

    நீங்கள் கேட்டுள்ளது போல் திருக்குர்ஆனில் அதற்கெனத் தனிப் பகுதியில்லை!

    //2. எப்படியிருப்பினும், இப்பகுதி பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து யாது?//

    திருக்குர்ஆன் முழுவதுமே வெளிப்பாடுதான் – வேத வெளிப்பாடு. இறைவனிடமிருந்து பெற்ற வஹி எனும் இறைச் செய்தியை மனிதர்களுக்கு தெரிப்படுத்துவது, இதுதான் முஸ்லிம்களின் கருத்து!

    ”நூஹுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் வஹி அறிவித்தது போலவே உமக்கும் வஹி அறிவித்தோம்” (திருக்குர்ஆன், 004:163)

    மேலும் ஹதீஸ் நூல்களில் வஹி – வெளிப்பாடு பற்றிய பகுதிகள் இடம் பெற்றுள்ளது. அது, ஹதீஸ் நூல்களைத் தொகுத்த ஆசிரியர்கள் அவ்வாறுத் தலைப்பிட்டு அந்தப் பாடங்களை இடம் பெறச் செய்திருக்கிறார்கள். நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  49. Dharumion 24 Nov 2006 at 11:12 am 49

    Revelation 13:16-17
    He causes all, both small and great…
    என்று ஆரம்பிக்கும் வாசகங்கள் பற்றி உங்கள் கருத்து..?

  50. அபூ முஹைon 24 Nov 2006 at 12:07 pm 50

    தருமி, நீங்கள் பொடி வெச்சு எழுதுவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை! எதுவாக இருந்தாலும் நேரடியாக விளக்கமாக எழுதுங்கள்.

    ”வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று (முஹம்மதே) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! ”அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக! ”குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா? அவர்கள் அல்லாஹ் படைத்ததுப் போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன். அவன் தனித்தவன், அடக்கியாள்பவன்” என்று கூறுவீராக!

    ”வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரைகள் ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (திருக்குர்ஆன், 013:016,017)

    நீங்கள் குறிப்பிட்டுள்ள 013வது அத்தியாயத்தின் 016,017வது திருக்குர்ஆன் வசனங்கள். இதில் உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமென்பதை சும்மா உடைச்சு சொல்லுங்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  51. Dharumion 25 Nov 2006 at 1:45 am 51

    நான் கேட்டது பைபிளின் வெளிப்: 13: 16-17.
    நீங்கள் குரானிலிருந்து அந்த மேற்கோளைக் கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

    //..பொடி வெச்சு எழுதுவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை!..//

    அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? 🙂

    விசயம் என்னென்னா எனக்கு ஒரு மயில் வந்தது. அது பவர் பாயிண்டில் வந்திருக்கிறது. அதை உங்களுக்கு மயிலில் அனுப்பி உங்கள் கருத்தைக் கேட்க நினைத்தேன். அதனால் தான் முதலில் தனி மயிலி என்று கூறியிருந்தேன். உங்களுக்கு அதில் ஏதும் பிரச்சனை உண்டா என்னவென்று தெரியவில்லை. அதனால்தான் முதலில், பைபிளில் உள்ளது உங்கள் நூலிலும் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டால்தான் அதை உங்களுக்கு பார்வர்ட் செய்வதில் அர்த்தம் இருக்குமா இல்லையா என்று தெரியும். அதனால்தான் இந்த தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் முயற்சி.

  52. அபூ முஹைon 25 Nov 2006 at 9:57 am 52

    //அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)//

    இப்போ புரிந்து கொண்டீர்களா? நான் உங்கள மாதிரி இல்லே! உங்களுக்கும் மேல்! :)))

    பைபிள் பத்தி எதுவும் தெரியாத ஞான சூன்யம் நான். அதனால் நீங்கள் குறிப்பிட்ட வெளிப்பாடு, 13: 16-17 பைபிள் வசனங்களை தமிழில் அறியத்தாருங்கள். இன்ஷா அல்லாஹ் திருக்குர்ஆனோடு ஒப்பிட்டுப் பார்த்து விளக்கம் எழுதுகிறேன்.

    மேலும், இது தனி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு நம் இருவரின் தனிப்பட்ட விஷயமில்லை. இரு மதங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அதை பொதுவாக வைத்துப் பேசலாம் என்பதே என் விருப்பம். மற்றபடி நீங்கள் புரிந்து கொண்ட மாதிரி 🙂 எனக்குப் பிரச்சனை எதுவுமில்லை நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  53. Dharumion 25 Nov 2006 at 11:46 pm 53

    ////அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)//

    இப்போ புரிந்து கொண்டீர்களா? நான் உங்கள மாதிரி இல்லே! உங்களுக்கும் மேல்! :)))//

    விடுங்க.. இந்த விஷயத்துல நமக்குள்ள எதுக்குப் போட்டி !!:)

    பிரச்சனை என்னவென்றால் என் கேள்வி ஒரு பவர் பாய்ண்டில் இருக்கிறதே..என்பதுதான்.

    அதற்குப் பிறகு வருவோம். பைபிளின் அந்த வாக்கியங்களைத் தருகிறேன். அதற்கு ஒப்பாக குரானில் இருக்கிறதா என்று மட்டும் சொன்னால் பயனுள்ளதாயிருக்கும்.

    வெளிப்; 13; 16-17

    “16. சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.

    17. இவ்வாறு அந்த விலங்கைன் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக் கொள்ளாத எவராலும் விற்கவே வாங்கவோ முடியவில்லை.

    18.இதைப் புரிந்து கொள்ள ஞானம் தேவை. புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.

  54. அபூ முஹைon 26 Nov 2006 at 8:44 am 54

    //வெளிப்; 13; 16-17

    “16. சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.

    17. இவ்வாறு அந்த விலங்கைன் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக் கொள்ளாத எவராலும் விற்கவே வாங்கவோ முடியவில்லை.

    18.இதைப் புரிந்து கொள்ள ஞானம் தேவை. புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு. //

    மேற்கண்ட, பைபிள் கூறும் கருத்தில் திருக்குர்ஆனில் வசனங்கள் இல்லை!

    அன்புடன்,
    அபூ முஹை

  55. Dharumion 26 Nov 2006 at 9:54 am 55

    நன்றி
    தடங்கலுக்கு வருந்துகிறேன் 🙂

  56. Dharumion 23 Jan 2007 at 3:46 am 56

    இன்னொரு சந்தேகம்; அதை இங்கே கேட்பதில் ஒரு வசதி. அதனால் இந்தப் பழைய பதிவுக்கே, தொடர்ச்சியாக இருக்கட்டுமே என்று வந்துள்ளேன்.

    இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.

    சரியாகச் சொல்லியுள்ளேனா?

    மேலும் அறிந்தவை: முஸ்லீம் ஒன்றுக்கு மேல் பெண்களை மணம் செய்யலாமென்றாலும் அவர் தான் மணக்கப் போகும் பெண்ணை / பெண்களை நல்லபடியாகக் காப்பாற்றும் அளவுக்கு வசதியோடு இருக்கவேண்டியது அவசியம்.

    (கேள்வி: 1)அந்த அளவு தரித்திரத்தில் வாழ்ந்தவரென்றால் அவரால் எப்படி அத்தனை பெண்களை மனைவியாக்க முடிந்தது? அது தடை செய்யப்பட்டதல்லவா?

    நபி இறந்த பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் நபிக்கு வழித்தோன்றல்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால் அவரது சொத்தின் மேல் அவரது மனைவியர்களுக்கு எந்த வித பாத்தியதையும் கிடையாது என்று சொல்லிவிட்டதாகவும் வாசித்தேன்.

    (கேள்வி: 2)இறந்தபிறகு தர்க்கம் வரும் அளவு சொத்தை விட்டு விட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறதே? பரம ஏழையாயிருந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவரிடம் எப்படி dispute வரும் அளவு சொத்து?

  57. அபூ முஹைon 25 Jan 2007 at 1:12 pm 57

    தருமி உங்கள் வரவுக்கு நன்றி!

    முந்தாநாள் அனுமதித்தப் பின்னூட்டம் இன்றுதான் தமிழ் மணம் திரட்டியில் தெரிகிறது உங்கள் கேள்விக்கு இங்கு விளக்கம் எழுதியுள்ளேன்!

    அன்புடன்,
    அபூ முஹை

இஸ்லாம் குறித்த விவாதங்கள்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் குறித்த காரசாரமான விமரிசனங்கள் பல வலைப்பதிவுகளில் நடைபெற்று வருகிறது. ‘இஸ்லாத்தைப்பற்றி மற்றவர்கள் விமரிசனம் செய்யக்கூடாதா?’ என்ற கேள்வியும் அவ்வப்போது எழுகிறது. நான் மார்க்க அறிஞனல்ல என்றாலும், நானறிந்த வரையில் ஒரு சிறு விளக்கத்தை தரலாம் என்று நினைக்கிறேன். யாரையும் பழிப்பதோ, குத்திக்காட்டுவதோ என் நோக்கமல்ல என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

விமரிசனம் என்பது இஸ்லாத்திற்கு புதியது அல்ல. நபிகளாரின் காலத்திலிருந்தே அது கடுமையான கண்டனங்களையும் விமரிசனங்களையும் சந்தித்தே வந்திருகிறது. அவற்றிற்கான தக்க பதில்களும் விளக்கங்களும் அவ்வப்போது அளிக்கப்பட்டும் வந்துள்ளன. ஒருவகையில் இஸ்லாம் இத்தகைய விமரிசனங்களை வரவேற்கிறது என்று கூட சொல்லலாம். எனவே, இஸ்லாத்தை குறித்து யார் வேண்டுமானாலும் விமரிசனம் செய்யலாம். விவாதம் ஆரோக்கியமானதாக நடைபெற கீழ்க்கண்ட சில அடிப்படைகளை புரிந்து மனதில் இறுத்திக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

1. முதலில் ஒரு ஸென் கதையைப்பார்ப்போம்: ( நன்றி: கங்காவின் ‘தினம் ஒரு ஸென் கதை)

“கோப்பையை காலி செய்”
ஒரு பல்கலைக் கழக பேராசிரியர் சிறந்த ஸென் துறவியை சந்திந்து அவரிடம் ஞானம் பற்றி தெளிவு பெறுவதற்காக சென்றார். துறவி அமைதியாக தேனீரினை கோப்பையில் ஊற்றிக் கொண்டு இருந்த போது, பேராசிரியர் ஸென் புத்த மதத்தை பற்றியும் தியானம் பற்றியும் தனக்கு தெரிந்ததை பற்றி வலவல வென்று பேசிக் கொண்டிருந்தார். பேராசிரியரின் கோப்பையின் விளிம்பு வரை தேனீர் ஊற்றிக் கொண்டு இருந்த துறவி, நிறுத்தாமல் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தார். கோப்பையில் இருந்து வழியும் தேனீரை கவனித்துக் கொண்டிருந்த பேராசிரியர், ஒரு நிலைக்கு மேல் பொறுக்காமல் “கோப்பை நிறம்பி விட்டது. இதற்கு மேல் அதில் இடம் இல்லை” என்றார். அதற்கு துறவி “நீயும் இந்த கோப்பை போல் தான்”, “நீ எப்போழுது உனது கோப்பையை காலி செய்து இடம் வைக்கிறாயோ, அப்போது தான் உனக்கு ஞானம் பற்றி என்னால் கூற முடியும்” என்றார்.

ஆக, இஸ்லாம் பற்றி நன்கு விளங்கிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் முதலில் தங்கள் கோப்பைகளை காலி செய்து கொள்வது நல்லது. விவாதத்தின்போது வெளிப்படும் புதிய கருத்துக்கள், புதிய கோணங்கள், புதிய விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மனதில் இடம் வேண்டுமல்லவா?

2. விவாதத்தின் கருப்பொருள்:

இஸ்லாத்தின் கருத்துக்களோடு முஸ்லிம்களின் சொல், செயல் ஆகியவற்றை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை. பின்லாடனாக இருந்தாலும், கொமைனியாக இருந்தாலும், நாகூர் ரூமியாக இருந்தாலும், நானாக இருந்தாலும் இந்த நிலைதான். இறைத்தூதர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கானவர்கள். நபிகளாரின் சொல் செயல் அனைத்துமே இஸ்லாமாக இருந்தது.

ஆக, விவாதிக்கப்படும் பொருள் இஸ்லாத்தின் கருத்தா அல்லது முஸ்லிம்களின் சொல், செயல்பாடுகளா என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.

3. ஆதாரம் ப்ளீஸ்..

இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும் ஹதீஸும்தான். எனவே உங்கள் சந்தேகங்களை முடிந்தவரை ஆதாரங்களுடன் எடுத்து வையுங்கள். குர்ஆன் வசனங்களை யாராவது உங்களுக்கு தவறாக விளக்கி இருக்கலாம். ஹதீஸ் என நீங்கள் நம்பி இருந்த ஒரு செய்தி வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம். அதனால், ‘நான் ஆதாரம் காட்டினால் நீங்கள் இஸ்லாத்தை விட்டு விலக தயாரா?’ என்பது போன்ற சவால்களை தவிர்க்கவும்.

‘முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள்’ என்பது போன்ற பொதுப்படையான வாக்கியங்களையும் (generalised statements) தவிர்க்கவும். இத்தகைய விவாதங்களுக்கு முடிவென்பதே கிடையாது.

4. விளக்கம் கிடைக்க தாமதமாகலாம்:

பொதுவாக இஸ்லாத்தை வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும் கேள்விகளும் சந்தேகங்களும் முஸ்லிம்களுக்கு தோன்றுவதில்லை. அவற்றிற்கான விளக்கங்களும் அவர்களிடம் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை. அத்தகைய கேள்விகளை எதிர் நோக்கும் முஸ்லிம்கள் உணர்ச்சிவசப்படாமல் மார்க்க நூற்களையும் மார்க்க அறிஞர்களையும் அணுகி தக்க விளக்கம் பெற்று பதிலளிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். அதனால், நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தக்க விளக்கம் கிடைக்க தாமதமாகலாம். ஆனால் இஸ்லாத்தில் அத்தகைய கேள்விகளுக்கு பதிலில்லை என்ற முடிவுக்கு வந்து விட வேண்டாம்.

5. முகமூடிகள் ஜாக்கிரதை:

இணையத்தில் நிறைய முகமூடிகள் உலவுகின்றனர். இஸ்லாமிய பெயர்களை வைத்துக்கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்புபவர்களும் அவர்களுள் இருக்கலாம். அதனால் பெயரை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விட வேண்டாம். அத்தகையோர் வெளிப்படுத்தும் கருத்துக்களை சற்று உன்னிப்பாக கவனித்தால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.

ஆகவே, வாருங்கள் நண்பர்களே! ஒன்று சேர்ந்து இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்!

<!– tag script Begins

tag script end –>

பிரிவு: பொதுவானவை |


addthis_pub = ‘islamkalvi’;
addthis_logo = ‘http://www.addthis.com/images/yourlogo.png&#8217;;
addthis_logo_background = ‘EFEFFF’;
addthis_logo_color = ‘666699’;
addthis_brand = ‘IslamKalvi.com’;
addthis_options = ‘favorites, google, email, digg, delicious, myspace, facebook, live, more’;

66 Responses to “இஸ்லாம் குறித்த விவாதங்கள்!”

  1. rajon 25 May 2005 at 9:01 pm 1

    சரியான நேரத்தில் பதியப்பட்ட மிக சரியான பதிவு. மிக தேவையான பதிவும் கூட. இஸ்லாம் தொடக்க காலம் தொட்டே எதிர்ப்புகளை சந்தித்து வந்திருக்கிறது. தமிழ் உலகில் இப்படிப்பட்ட நேரடி விவாதங்கள் நிகழ்வது எனக்கு தெரிந்தவரை இது தான் முதல் முறை. இதனைக் கொண்டு இஸ்லாத்தை பலர் சரியாக புரிந்துக் கொள்ள வாய்ப்புகள் பல உண்டு.
    நிச்சயமாக இது இஸ்லாத்தின் மீதான புதிய தக்குதல் அல்ல. எனவே விவாதத்தில் ஈடுபடுவோர்-குறிப்பாக முஸ்லிம் சகோதரர்கள் உணர்ச்சி வசப்படாமல், முன் வைக்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை- தேவையானால் மார்க்க அறிஞர்களின் ஆலோசனை கேட்டபின் பதிவு செய்யும் பட்சத்தில் நேர்மையுள்ளோர் நிச்சயம் ஏற்று கொள்ளத்தான் செய்வார்.
    இஸ்மாயில் , சிங்கை

  2. Salahuddinon 25 May 2005 at 11:10 pm 2

    நன்றி இஸ்மாயில், நேரம் கிடைக்கும்போது சவுத் பிரிட்ஜ் ரோடு ஜாமிஆ சூலியாவிற்கு வாங்களேன், சந்திக்கலாம்.

    -சலாஹுத்தீன்

  3. BABUon 31 May 2005 at 1:19 am 3

    Appreciating you for a timely article.
    Yes! Anybody wishes to discuss for anything they have to clearout their mind as mentioned in the zen story.

    The nesakumars and other critics are entirely filled with hatred only and that also against Islam only – already in their thoughts and it reflects in their wordings.

    We Should not forget that nandalaalaa’s are having equal views on bothsides and they are more welcomeable for decent debates, though there are some false informations from them.

    See some hindutva’s are vulgarly attacking iSlamic personnels and nobody come forward to condemn it.

    When Kaanchi film personally hits out Hindu personnels (even with evidence of recent matters), it seems to be these fanatics has no option expcept to attack ISlam with unlawful and vulgar means.

  4. Salahuddinon 31 May 2005 at 1:46 am 4

    Babu,

    Thanks for your comments. Baseless arguments will not be welcome by anyone. To entertain them is merely waste of time. At the same time muslims must be prepared to engage in healthy debates and discussions about Islam. I personally see this as a learning experience.

    – Salahuddin

  5. நல்லடியார்on 31 May 2005 at 3:00 am 5

    சல்மான் ருஷ்டி, தஸ்லீமா மற்றும் பலர் எழுதிய படைப்புகளெல்லாம் அவர்களை பிரபலப்படுத்தவில்லை. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தூற்றியபோது ‘கெளரவ சிடிசன்சிப்’ கொடுக்க மேலை நாடுகள் போட்டி போட்டன. மாறாக ஏனைய மதங்களை விமரிசிப்பவர்களுக்கு முஸ்லிம் உலகில் அங்கீகாரம் கொடுப்பதில்லை என்பதுதான் இஸ்லாத்திற்கும் ஏனைய மதவெறியர்களுக்கும் உள்ள வேறுபாடு. (பார்க்க: குறுகிய காலத்தில் பிரபலமாவது எப்படி?)

    ஆரோக்கியம், நேசகுமார் போன்றோர் நிச்சயமாக ஒரு குழுவாக திட்டமிட்டு இஸ்லாத்தை தூற்றுகிறார்கள். அதற்குதான் ‘தாரகை’ பட்டங்கள்.

    இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் வைக்கப்படும் போது இன்றைய முஸ்லிம்களில் உதாரணம் இல்லாமல் போனது நமது துரதிஷ்டம். குர்ஆன், ஹதீஸ் வழியில் தெளிவு படுத்த முயன்றாலும் கட்டுக்கதைகள், இக்காலத்திற்கு ஏற்றவையல்ல என ஒதுக்கும் பாரபட்சம்.

    பழுத்த மரம்தான் கல்லடி படும் என்பது நடுநிலையாளர்களுக்கு தெரியும். ஆக, இஸ்லாத்தின் மீதான் அவதூறுகளால் தங்கள் மூட கொள்கைகளுக்கு மருந்திட்டுக் கொள்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் நடு நிலையாக எழுதுவோம்.

  6. Salahuddinon 31 May 2005 at 3:09 am 6

    //பழுத்த மரம்தான் கல்லடி படும் //

    உண்மையான வார்த்தைகள்!

  7. இறைநேசன்on 31 May 2005 at 3:18 am 7

    மிகவும் அவசியமான பதிவு இது. வாழ்த்துக்கள்.

  8. wichitaon 31 May 2005 at 3:31 am 8

    Rushdie and Taslima were well known much before the later contriversies.It was Midnights Children which propelled Rushdie
    and Satanic Verses came later.
    Taslima was known for her writings
    that exposed the harsh realities.
    Please dont try to distort facts
    just because you hate both Rushdie
    and Taslima.
    Why is that women are barred from voting in some countries ruled in the name of islam.is it in conformity with islam.There is no need to beat around the bush in answering to this and be specific.

  9. wichitaon 31 May 2005 at 3:33 am 9

    It was Midnights Children which propelled Rushdie
    and Satanic Verses came later.

    it should be
    It was Midnights Children which propelled Rushdie to global
    attention and praise.Satanic Verses came later.

  10. Salahuddinon 31 May 2005 at 3:47 am 10

    Dear Wichita,

    //Why is that women are barred from voting in some countries ruled in the name of islam.is it in conformity with islam.//

    As far as I know, there are no restrictions in Islam barring women from voting. But I have no ready answer to your question,’Why is that women are barred from voting in some countries ruled in the name of islam’. Please also consider my comment: நடைமுறையில் முஸ்லிம்களின் சொல், செயல் அனைத்தும் எல்லா நேரங்களிலும் இஸ்லாத்தின் அடிப்படைகளை சார்ந்து இருப்பதில்லை. இது ஒரு கசப்பான உண்மை.

    In muslim countries such as Pakistan, Indonesia & Malaysia, muslim women have been prime ministers and ministers.

  11. Salahuddinon 31 May 2005 at 4:19 am 11

    Thanks Wichita,

    Because of your question I learnt something new. This is what I found:

    “The Qur’an has prescribed the following principle in deciding about issues related to the collective affairs of the Muslims:

    “Their (Muslim’s) affairs are decided through consultation among them” (Al-Shu’ra’ 42: 38)

    One of the most important corollary of the above directive is that in all such collective issues where there is a difference of opinion among the Muslims because of which a unanimous decision cannot be arrived at, the opinion of the majority of the Muslims shall be made the collective law in a Muslim state.

    As far as the issue of “voting rights” is concerned, the Qur’an in the same verse (Al-Shu’ra’ 42: 38) has clearly given the right of participating in the referred consultation to all Muslim citizens irrespective of the gender.

    it is quite obvious that the Qur’an does not deprive women of voting rights. During the times of the Prophet and those that immediately followed, women normally stayed away from issues related to the state or those related to other collective issues. Thus, the issue of women’s voting rights never arose in those times. In contrast, today’s women, with their wider exposure have not only become more interested in political and collective issues but have also become active in these spheres. In these circumstances, there seems to be no basis of saying that Islam does not give voting rights to women.”

    Excerpts from: http://www.understanding-islam.com/rs/s-052.htm

    – Salahuddin

  12. புலிப்பாண்டிon 31 May 2005 at 4:35 am 12

    தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாய்கள்….

  13. Salahuddinon 31 May 2005 at 4:38 am 13

    புலிப்பாண்டி தன் சுய அறிமுகத்தை ஏன் இங்கே பதிந்திருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை!

  14. நல்லடியார்on 31 May 2005 at 5:19 am 14

    மிருக ஜாதியைச் சார்ந்த ‘புலி’ பாண்டியை இனி புலி பன்டி (பன்றி) என்றழைப்போம்.

  15. அதிரடிon 31 May 2005 at 5:32 am 15

    இஸ்லாம் மற்ற மதங்களை மதிப்பதில்லையென்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதற்கு உங்கள் பதில் என்ன நண்பர்களே?

    இளையவன்

  16. Salahuddinon 31 May 2005 at 5:58 am 16

    இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. இஸ்லாத்திற்கும் மற்ற மதங்களுக்கும் கொள்கையளவில் பெரும் வேறுபாடுகள் உண்டு. மற்ற மதங்களின் பெரும்பாலான கொள்கைகள் இஸ்லாத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதால், அது மற்ற மதங்களை மதிப்பதில்லை என்று ஆகாது. தன்னை சந்திக்க வந்த ஒரு கிருஸ்துவ பாதிரியார் வழிபாடு செய்ய தனது பள்ளி வாசலிலேயே நபிகள் நாயகம் அவர்கள் இடம் ஒதுக்கி தந்திருக்கிறார்கள்.

    – சலாஹுத்தீன்

  17. contivityon 31 May 2005 at 10:34 pm 17

    சலாஹுத்தீன்,

    ராஜின் கருத்தையே பிரதிபலிக்கிறேன். நேச குமார், ஆரோக்கியம், இப்போது புதிதாக புலிப்பாண்டி, ஈரோடு இவர்கள் அறிய வேண்டியது என்னவென்றால், 1400 ஆண்டுகளுக்கும் மேலாக பலருடைய சொல்லடிகளையும் விமர்சனங்களையும் தாங்கி அதற்கு தகுந்த பதில்களையும் தந்து வளர்ந்தது தான் இஸ்லாமிய மார்க்கம். உங்களுக்கு ஏற்படும் ஐயங்களுக்கு இறைவேதம் மற்றும் நபிவழியில் விடையிறுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்.. உங்களில் எத்தனை பேர் நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளீர்?

  18. அதிரடிon 01 Jun 2005 at 12:46 am 18

    கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ அல்லது இந்துக்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ இஸ்லாமியர்கள் தங்கள் மதநெறி அடிப்படையில் வாழ்வதற்கோ அல்லது ஒரு மசூதியைக்கட்டுவதற்கோ எந்தவிதத் தடங்கலுமில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது.

    இளையவன்

  19. BABUon 01 Jun 2005 at 4:38 am 19

    //கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ அல்லது இந்துக்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டிலோ இஸ்லாமியர்கள் தங்கள் மதநெறி அடிப்படையில் வாழ்வதற்கோ அல்லது ஒரு மசூதியைக்கட்டுவதற்கோ எந்தவிதத் தடங்கலுமில்லை. ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது//

    இவையெல்லாம் ஒரு நாட்டின் அரசியலமைப்புக்கு காரணப்பட்டது என்று நினைக்கிறேன்.
    துபாய் மற்றும் அல்பேனியா போன்ற முஸ்லிம் பெரும்பான்மையான நாடுகளில் சர்ச்சுகளும் கோவில்களும் உள்ளன.
    அந்நாட்டின் அரசியலாளர்களால் தீர்மானிக்கப்படுகிற மதச்சார்பு தன்மையை பொறுத்தவை அவை.
    ஆனால் மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே ஒரு மசூதியை இடித்திருக்கிறோம் நாம்.

  20. G.Ragavanon 01 Jun 2005 at 5:57 am 20

    நல்ல திரிதான். ஒரு மதத்தைப் பற்றி விளக்கும் நேர்மையான திரியாக இது திகழ எனது வாழ்த்துகள்.

    இஸ்லாத்தைப் பற்றி எனக்கு நிறைய தெரியாது. ஆகையால் கேட்பதற்கும் ஒன்றுமில்லை.

    இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பு மிகுந்த வருத்தத்திற்குரியது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கண்டிப்பாக நடுநிலையாளர்கள் இத்தகைய நிகழ்வுகளை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். குரல் எழுப்பினார்கள். இன்னும் எழுப்புவார்கள்.

    ஆனால் பொதுவாகவே இஸ்லாத் மீது உலகளாவிய அளவில் ஒரு தீவிரவாதத் தோற்றம் இருப்பது உண்மைதான். அது எவ்வளவு தூரம் சரியென்று என்னால் சொல்ல முடியவில்லை.

    ஆனால் ஒரு ஐயமுண்டு. ஆஃப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை இடித்தது பற்றி. அது எதனால் அப்படி? காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது! அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன?

    அன்புடன்,
    கோ.இராகவன்

  21. Salahuddinon 01 Jun 2005 at 10:34 pm 21

    இளையவரே! (வேற யாரையோ அழைக்கிற மாதிரி இருக்கே, பரவாயில்லையா?)

    //இஸ்லாமியர்கள் அதிகமாக வாழ்கின்ற நாட்டில் மற்றைய மதத்தோருக்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே. உதாரணத்துக்கு சில அரேபிய நாடுகளுக்கு எங்கள் மத அடையாளங்களுடன் போகமுடியாது.//

    இத்தகைய அரசியலமைப்பு தொடர்பான விஷயங்களை விளக்கும் அளவுக்கு நான் அறிந்தவனல்ல. ஒரு சில கருத்துக்களை இங்கு சுட்டிக்காட்டி உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.

    – நீங்கள் குறிப்பிடும் இஸ்லாமிய நாடுகள் அங்கு பணிபுரிய வருவோரிடையே எந்த மத வேறுபாடும் காட்டுவதில்லை. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் திறமையின் அடிப்படையில் உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். மற்ற மதத்தினரின் உரிமைகளை மறுக்கும் நாடு என்றால், ‘முஸ்லிம்கள் மட்டும்தான் இங்கு பணி புரிய அனுமதி உண்டு’ என்று சொல்லியிருக்கலாமே!

    – உரிமைகளைப்பற்றி பேசும்போது, நமது தாய் நாட்டு குடிமக்கள் என்ற முறையில் பெறும் உரிமைகளுக்கும், வேறொரு நாட்டிற்கு பணியாற்ற செல்லும்போது அங்கு பெறும் உரிமைகளுக்கும் வித்தியாசமுண்டு என்பதை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

    சலாஹுத்தீன்

  22. Salahuddinon 01 Jun 2005 at 11:25 pm 22

    ராகவன், உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி!

    //ஆஃப்கானிஸ்தானில் பாமியன் புத்தர்களை இடித்தது பற்றி. அது எதனால் அப்படி? காரணம் ஒரு அரசாங்கமே அப்படிச் செய்தது! அது குறித்து மற்றைய முஸ்லீம்களின் நிலை என்ன?//

    நல்ல கேள்வி இது. ஆஃப்கானிஸ்தானின் அப்போதைய தலிபான் அரசு புத்தர் சிலைகளை இடித்தது வருத்தத்திற்குறிய ஒரு செயல்தான். பிறர் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றை ஏசாதீர்கள் என்று கட்டளையிடும் இஸ்லாம், அவர்கள் வணங்கும் புத்தர் சிலை போன்றவற்றை இடிக்கச் சொல்லியிருக்குமா? பிற சமூகத்தினருடன் இணக்கத்துடன் வாழும்படி இஸ்லாம் வலியுறுத்தியிருப்பதற்கு பல ஆதாரங்களை நாம் காட்ட முடியும்.

    புத்தர் சிலை இடிப்பைப்பற்றி தலிபான் தலைவர் ஒருவர் கொடுத்திருந்த பேட்டியை இணையத்தில் படித்த ஞாபகம். (இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இங்கு குறிப்பிடுகிறேன். அவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது).

    அவர் சொல்லியிருந்தார்: தலிபான் அரசு பதவியேற்ற பிறகு நாட்டிற்கு அப்போதைய அவசியத்தேவையானவற்றை பட்டியலிட்டு திட்டம் தீட்டிக்கொண்டிருந்த சமயம். கல்வி வளர்ச்சி அவற்றுள் ஒன்றாக இருந்தது. அரசு இந்த திட்டப்பணிகளை நிறைவேற்ற வெளி நாடுகளிலிருந்து நிதி உதவியை எதிர் பார்த்துக்கொண்டிருந்தது. அப்போது ஆஃப்கானிஸ்தான் வந்த வெளிநாட்டுக்குழு ஒன்று பல மில்லியன் டாலர் செலவில் புத்தர் சிலைகளை புணரமைக்க அனுமதி கேட்டது. அரசு அந்தப்பணத்தை கல்விப்பணிகளுக்காக தந்துதவும்படி கேட்டுக்கொண்டது. ஆனால் அந்த குழுவோ பிடிவாதமாக சிலைகளுக்காக மட்டுமே அந்த பணத்தை செலவு செய்ய முடியும் என்று கூறி மறுத்து விட்டது. இதனால் கோபமடைந்த தலிபான் அரசு சிலைகளை தகர்க்கும்படி உத்தரவிட்டது.

  23. G.Ragavanon 01 Jun 2005 at 11:53 pm 23

    உங்கள் ஐயம் எனக்கும் வருகிறது. அந்த தாலிபான் அமைச்சர் சொல்லியிருப்பது ஒப்புக்காக இருக்கும். நாட்டு மக்கள் ஆதரவுக்காக இருக்கலாம். நம்மூரிலும் அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் அல்லவா. குதிரை பேரத்திற்காக ஆட்சியைக் கலைத்தோம் என்று.

    ஆனாலும் அது துன்பியல் நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை.

    எனக்கு மற்றொரு ஐயம். பொதுவாகவே நம்மூரில் ஒரு பேச்சுண்டு. இந்தியா பாகிஸ்தான் மேட்ச் நடந்தால் இந்துக்கள் இந்தியாவிற்கும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்பதே அது. எனக்கு முஸ்லீம் நண்பர்கள் இல்லை. இருந்திருந்தால் அவர்களிடம் கேட்டிருப்பேன். இங்கே பெங்களூரில் பாகிஸ்தான் ஜெயித்த போது பட்டாசு வெடித்த ஓரிரு சமயங்களும் உண்டு.

    நான் கேட்க வருவது…பாகிஸ்தானைப் பொருத்தவரைக்கும் இந்திய முஸ்லீம்கள் என்ன நினைக்கின்றார்கள்? காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன?

  24. நல்லடியார்on 02 Jun 2005 at 2:00 am 24

    ராகவன்,

    பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடும் போது அதற்கு ஆதரவு செய்யும் இந்தியர்களை மதவாத, தேச துரோக முத்திரை குத்துவது நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்தான்.

    அதே நாம், இலங்கைக்கோ அல்லது தென் ஆப்பிரிக்காவுக்கோ ஆதரவாக பேசினால் அவர்களை யாரும் ஒன்றும் சொல்வதில்லை.

    விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதங்களுக்கு எதிரான போட்டியாக்கியது யார்?

    பாகிஸ்தானை இந்தியாவிலிருந்து பிரித்ததே தவறு என்பது எனது கருத்து. மேலும் அவர்களுடன் பிரிந்து சென்ற முன்னாள் கிழக்கு பாகிஸ்தானியர்களை அவர்கள் பாகிஸ்தானியராகவே பார்க்கவில்லை. விளைவு பங்களாதேஷ் தோற்றம்.

    பர்தாவை அணிவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது பெண்கள். அதை திணிப்பது பெண்ணடிமை என்று சில மேதாவிகள் சொல்கிறார்கள். அதே கண்ணோட்டம் காஷ்மீரிகளுக்கும் பொறுந்தும்தானே. இந்தியாவுடன் இருப்பதா அல்லது காஷ்மீருடன் இருப்பதா என முடிவு செய்ய வேண்டியது அம்மாநில மக்கள் தான் என்பது எனது கருத்து.

    இந்தியாவின் எந்த மாநிலமும் இந்தியாவிலிருந்து விலகக் கூடாது என்பதே எனது அவா.

  25. Salahuddinon 02 Jun 2005 at 5:39 am 25

    //பாகிஸ்தானைப் பொருத்தவரைக்கும் இந்திய முஸ்லீம்கள் என்ன நினைக்கின்றார்கள்? காஷ்மீர் விவகாரத்தில் அவர்களது நிலையென்ன?//

    ராகவன்,

    ஒரு இந்திய முஸ்லிம் என்ற வகையில் எனது கருத்தை சொல்கிறேன். பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்களின் கருத்தும் இவ்வாறுதான் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன்.

    காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கிடையேயான ஒரு அரசியல் பிரச்னை. மதம் இங்கு எந்த வகையிலும் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இந்த பிரச்னையில் எந்த முடிவு இந்தியாவிற்கு அனுகூலமாக இருக்குமோ அதைத்தான் நான் விரும்புவேன். பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு என்பதால் இந்திய முஸ்லிம்களெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதெல்லாம் தவறான, அடிப்படையற்ற வாதம். அப்படியானால் இரண்டு முஸ்லிம் நாடுகளுக்கிடையில் (ஈராக், குவைத்திற்கிடையில் ஏற்பட்டதுபோல..) பிரச்னை தோன்றினால் அந்த நாட்டு முஸ்லிம்கள் எந்த நாட்டை ஆதரிப்பார்கள்?

  26. G.Ragavanon 02 Jun 2005 at 7:57 am 26

    // பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் விளையாடும் போது அதற்கு ஆதரவு செய்யும் இந்தியர்களை மதவாத, தேச துரோக முத்திரை குத்துவது நிச்சயமாக பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு என்பதால்தான். //

    இருக்கலாம் நல்லடியார். எனக்கும் கிரிக்கெட்டும் ஏழாம் பொருத்தம். ஆனால் என்னுடைய ஆவல் இந்தியா வெற்றி பெற வேண்டுமென்று இருந்தாலும், நன்றாக விளையாடுகின்றவர் வெற்றி பெறுவார்கள் என்பது நான் ஏற்றுக் கொண்ட பட்ட ஒன்று. விரும்பிய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உரிமை யாருக்கும் உண்டு.

    // விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் மதங்களுக்கு எதிரான போட்டியாக்கியது யார்? //
    இந்த விஷயத்தில் இரண்டு பக்கத்திலும் தவறு நடக்கிறது என்பதே எனது கருத்து. விளையாட்டை மைதானத்திலேயே விட்டுவிட வேண்டும். மைதுனம் வரை வந்தால் கந்தல்தான் மிஞ்சும்.

    // பர்தாவை அணிவதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டியது பெண்கள். அதை திணிப்பது பெண்ணடிமை என்று சில மேதாவிகள் சொல்கிறார்கள். அதே கண்ணோட்டம் காஷ்மீரிகளுக்கும் பொறுந்தும்தானே. //
    இந்தக் கருத்தில் எனக்கு முழு சம்மதம் உண்டு. பர்தா விஷயத்திலும் சரி. காஷ்மீர் விஷயத்திலும் சரி. உங்களுக்கு முதல் விஷயத்தில் இல்லை என்று புரிகிறது. இதைப் பற்றி வேறொரு திரியில் கருத்திட்ட நினைவு. என்னைப் பொருத்த வரையில் இருக்கும் தட்ப வெட்ப நிலைக்குத் தக்க உடைகளை விரும்பிய விதத்தில் நாகரீகமாக அணிந்து கொள்ளும் உரிமை எந்தப் பெண்ணுக்கும் உண்டு. அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹி ஹி நீங்கள் பாராட்டும் மேதாவிகளில் நானும் ஒருவன்.

  27. G.Ragavanon 02 Jun 2005 at 8:05 am 27

    சலாஹுதீன், என்னுடைய கேள்விகளை அறியாமையின் வினாக்கள் என்றே எடுத்துக் கொண்டு விடை சொல்கின்றீர்கள். மிக்க நன்றி. தெரிந்து கொள்வதற்காகக் கேட்பதுதான் எல்லாம். கேட்டால்தானே தெரியும்.

    பாகிஸ்தான் இந்தியா பிரிவினை வெறும் அரசியல் பிரச்சனைதான். அதில் மதம் புகுந்து சீரழித்து விட்டது. என்ன செய்ய? இன்றைக்கு ஒருத்தரையொருத்தர் வெறுக்கும் நிலை.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இதை அனைவரும் உணர வேண்டும். ஆனால் கூடி வாழ்வதும் நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவுல் கொண்டு வா. இருவரும் ஊதி ஊதித் தின்போம் என்று இருக்கக் கூடாது.

    இரண்டு முஸ்லீம் நாடுகளுக்கிடையே போர் என்று சொன்னீர்கள் அல்லவா. கிட்டத்தட்ட அப்படிப்பட்ட சூழ்நிலை ஆஸ்திரியாவிற்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்டது. ஜெர்மனி மிகவும் இலகுவாக ஆஸ்திரியாவை வழிக்குக் கொண்டு வர…பல ஆஸ்திரியர்கள் வருத்தம் மட்டுமே கொள்ள முடிந்தது. Sound of Music என்ற திரைப்படம் இதைப் பின்னணியாக வைத்து வந்தது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? அடடா! என்ன அருமையான இசைக் கோர்ப்பு.

    சரி. இன்னொரு கேள்வி. இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. இந்த தலாக் பற்றி நிறையப் புகார்கள் வருகின்றனவே. ஆண்களால் தலாக்க பெண்ணின் அனுமதி தேவையில்லை. ஆனால் பெண்கள் விலகி வாழ ஆண் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதாமே. உண்மையா? எதற்காக அப்படி ஒரு சட்டம்?

  28. அபூ முஹைon 02 Jun 2005 at 9:06 am 28

    சரி. இன்னொரு கேள்வி. இப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. இந்த தலாக் பற்றி நிறையப் புகார்கள் வருகின்றனவே. ஆண்களால் தலாக்க பெண்ணின் அனுமதி தேவையில்லை. ஆனால் பெண்கள் விலகி வாழ ஆண் அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதாமே. உண்மையா? எதற்காக அப்படி ஒரு சட்டம்?

    ராகவன் அவர்களுக்கு!
    மிக அவசியமாகத் தொழிலில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் கணனியின் தொடர்பு மிகக் குறைந்து எழுத்துப்பணி மிகவும் சுணங்கி விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பழைய நிலையில் மீண்டும், தொடர்ந்து எழுத முடியும் என்று கருதுகிறேன் (இறைவன் நாடட்டும்)

    இஸ்லாத்தில் பெண்களின் விவாகரத்து உரிமை பற்றி தலாக் ஓர் விளக்கம் என்ற அடுத்த பதிவில் உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும். பெண்கள் விலகி வாழா ஆண்கள் அனுமதிக்க வேண்டும் என்பது தவறான புரிதலே தவிர அந்த நிலை இஸ்லாத்தில் இல்லை. தலாக் – விவாகரத்துச் செய்யும் முறையில் (கணவன், மனைவி) இருவருக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கிறது – உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை.

  29. G.Ragavanon 02 Jun 2005 at 11:56 pm 29

    கண்டிப்பாக அபு முஹை.. நீங்கள் விரைவில் எழுத வேண்டும். இறைவன் அருள் புரியட்டும். ஆனாலும் பணி பெரிது. அதற்குத்தான் முன்னுரிமை.

    உங்கள் விளங்கங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

  30. நல்லடியார்on 03 Jun 2005 at 4:30 am 30

    அன்பின் ராகவன்,

    கருப்பு துணியால் உடலை போர்த்தி முஸ்லிம் பெண்களெல்லாம் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு பிரமையே. உண்மையில் தனக்கு தோதான துணிகளில்தான் ‘பர்தா’ அணிந்து சாதாரணமாக இதர பெண்களைப் போல்தான் இருக்கிறார்கள். வேண்டுமென்றால் உங்கள் வீட்டுப் பெண்களை விட்டு ஏதாவது முஸ்லிம் பெண்ணிடம் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். அவர்களும் இதைத்தான் சொல்வார்கள்.

    சரிகைப்பட்டு துணிகளால் கிடைக்கும் அசெளகரியத்தை விட ‘பர்தா’ வினால் இல்லை என்பதுதான் உண்மை. இஸ்லாம் பெண்களுக்கு ‘வாழ்க்கைக்கு’ அவசியமான எல்லா உரிமைகளையும் வழங்கியுள்ளது. ஒரு சில முஸ்லிம்கள் அவற்றை பெண்களின் மீது கடுமையாக சுமத்துகிறார்கள் அல்லது அத்தகைய முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமை எது என அறியாமல் இருக்கிறார்கள். என்பதே அத்தகைய குற்றச் சாட்டுகளுக்கு காரணம்.

    எங்களுக்கும் சகோதரிகளும், மணைவி, தாய் உண்டுதானே. என்னமோ முஸ்லிம்களெல்லாம் கல் நெஞ்சக் காரர்கள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள். ‘பெண்ணுரிமை ஒரு இஸ்லாமிய பார்வை’ என எழுதிவரும் தொடரை என் பதிவில் படிக்கிறீர்களா? மறக்காமல் கருத்திடவும்.

  31. ஜாபர் (சபாமர்வா)on 04 Jun 2005 at 5:12 am 31

    அருமையான விவாதங்கள்!

  32. BABUon 04 Jun 2005 at 6:53 am 32

    Dear All,
    யார் மனமும் புண்படாமல் இங்கு விவாதம் சுமூகமாகச் செல்வதைப் பார்க்கிறேன். மகிழ்ச்சி.
    ஒரு வேளை ‘நேசமா’க வந்து (இஸ்லாம் மீது மட்டும்) வெறுப்பை கக்குபவர்களும் ‘ஆரோக்கியமா’க வந்து அழுக்கைத் திணிப்பவர்களும் வராததால் இருக்கலாம்.

    விவாதம் என்று வரும் போது உள்ளதை உள்ளபடி (வார்த்தை விளையாட்டு செய்யாமல்) அழகுற மொழிந்தால் எல்லோரும் நிறையத் தெரிந்துக்கொள்ளலாம். நட்பும் வளரும்.

  33. BABUon 05 Jun 2005 at 6:28 am 33

    //ஆனால் பொதுவாகவே இஸ்லாத் மீது உலகளாவிய அளவில் ஒரு தீவிரவாதத் தோற்றம் இருப்பது உண்மைதான். அது எவ்வளவு தூரம் சரியென்று என்னால் சொல்ல முடியவில்லை.//

    ராகவன் அண்ணாவின் கருத்து சிந்தனையைத் தூண்டுகிறது.

    தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவரவர் மதத்துக்கே இழுக்கு சேர்க்கிறார்கள் என்பதே உண்மை.
    அது பின் லேடனோ புஷ்ஷோ மோடியோ பால் தாக்கரேயோ யாராக இருந்தாலும் சரி.

    (ஆனால் பின்லேடன்களை காட்டியே ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஓரங்கட்டவும் மாபெரும் இஸ்லாம் மார்க்கத்தை குற்றஞ்சாட்டவும் மகிழ்வுடன் முன்வருகிறன ஃபாசிச சக்திகள்)

    நம்மில் பலருக்கும் பின்லேடன் பயங்கரவாதியாக தெரிகிற அளவுக்கு ‘மோடி’களும் ‘தாக்கரே’க்களும் தெரிவதில்லை. காரணம் ஜனநாயகத் திரையைத் துளைத்துச் செல்லும் சக்தி ‘பார்வைகளுக்கு’ இல்லை.

  34. Pakruon 07 Jun 2005 at 12:00 pm 34

    I fully agree with this timely advice to the people who interested in debate or to know more about the ultimate islam, However We as muslims have huge responsibility to understand our religion thorougly to face any kind of questions and not only for argument but for to clear the misconceptions within us.It is very unfortunate islam nowadays portrayed as extremism by the west purposely, But Allah will answer for all the bushes and blairs soon and this world realize the true power of islam inshaallah. Till then all true believers bear all the critisizms for allah and as much as try explain to the people who really interested in islam.

  35. Salahuddinon 07 Jun 2005 at 11:08 pm 35

    ராகவன்,

    Sound of Music பற்றிய அறிமுகத்திற்கு நன்றி. இங்கு கிடைக்கிறதாவென அவசியம் தேடிப்பார்க்கிறேன்.

    உங்கள் கேள்விகளை தயங்காமல் இங்கு முன் வையுங்கள். உங்களுக்கு பதிலளிக்கும் சாக்கிலாவது நாங்களும் இஸ்லாத்தைப்பற்றி நன்கு தெரிந்து கொள்கிறோம். விளக்கங்கள் அளித்துவரும் அபூமுஹை மற்றும் நல்லடியாருக்கு நன்றிகள்!

    ஜாபர் (சபாமர்வா), babu, pakru, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

    – சலாஹுத்தீன்

  36. G.Ragavanon 08 Jun 2005 at 1:41 am 36

    // தலாக் – விவாகரத்துச் செய்யும் முறையில் (கணவன், மனைவி) இருவருக்குமிடையில் வித்தியாசங்கள் இருக்கிறது – உரிமையில் வித்தியாசம் ஏதுமில்லை. //

    அபுமுஹை, ஒரு ஆண் திருமண ரத்திற்கு தலாக் சொல்கின்றார்கள். பெண்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

    திருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா?

    // எங்களுக்கும் சகோதரிகளும், மணைவி, தாய் உண்டுதானே. என்னமோ முஸ்லிம்களெல்லாம் கல் நெஞ்சக் காரர்கள் போல் சித்தரிக்கப் படுகிறார்கள். ‘பெண்ணுரிமை ஒரு இஸ்லாமிய பார்வை’ என எழுதிவரும் தொடரை என் பதிவில் படிக்கிறீர்களா? மறக்காமல் கருத்திடவும். //

    நல்லடியார், அந்தத் தொடரை இன்னும் படிக்கவில்லை. படித்து விட்டு கருத்திடுகிறேன். நன்றி.

  37. BABUon 08 Jun 2005 at 6:44 am 37

    Dear Raghavan,

    please read http://abumuhai.blogspot.com/2005/06/2.html
    ABUMUHAI clearly explained the queries on divorces of muslim couples

  38. G.Ragavanon 08 Jun 2005 at 8:13 am 38

    சுட்டிக்கு மிக்க நன்றி பாபு.

    பெண்களுக்கும் அந்த உரிமை இருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆனாலும் ஒரு ஐயம். பெண்கள் குலா செய்ய விரும்பி தலைவரை (நீங்கள் இவருக்குக் கொடுத்த பெயர் மறந்து விட்டது. மன்னிக்கவும்.) சந்தித்து முறையிட்டால் நடக்கும். சரி. ஒருவேளை அந்தத் தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்? ஒருவேளை அந்தப் பெண்ணால் அந்தத் தொகையை (திருமணத்தின் போது பெற்றது) கொடுக்க முடியாவிட்டால்?

    ஆணும் தன்னிச்சையாக தலாக் செய்யாமல், அவரும் அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. இது எனது கருத்து அவ்வளவே.

    அன்புடன்,
    கோ.இராகவன்

  39. BABUon 09 Jun 2005 at 5:09 am 39

    I think there is a good answer for Br.Raghavan’s queries. Salahuddin or Abumuhai can explain better.

  40. அபூ முஹைon 09 Jun 2005 at 9:56 am 40

    சலாஹுத்தீன் அவர்கள் பெயர்தான் முதலில், ராகவன் அவர்களின் சந்தேகங்களுக்கு அவரே விளக்கமளிக்க வேண்டும். நான் இடையில் சேர்ந்து கொள்கிறேன், நன்றி

  41. contivityon 09 Jun 2005 at 1:10 pm 41

    திரு விச்சு அவர்கள் தன்னுடைய பதிவில் இஸ்லாம் குறித்த சில சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரையில் சிறு விளக்கங்களை அளித்து இருக்கிறேன். என் விளக்கங்களில் பிழை இருப்பின் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.
    நான் மார்க்க அறிஞன் அல்லன்.
    நன்றி

  42. அபூ முஹைon 11 Jun 2005 at 2:24 am 42

    சரி, ராகவன் அவர்களின் சந்தேக வினாக்களுக்கு நாமே விளக்கமிளிப்போம்.

    //*ஒரு ஆண் திருமண ரத்திற்கு தலாக் சொல்கின்றார்கள். பெண்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?*//

    முதலிரண்டு முறை தலாக் சொல்லும் தவணைகளில் தலாக் சொல்லப்பட்டப் பெண்கள் மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரைக் காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புபவர்களாக இருந்தால் அப்பெண்கள் – தங்கள் கர்ப்ப அறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை – குழந்தை உருவான விஷயத்தை மறைக்க அவர்களுக்கு அனுமதி இல்லை. அவர்களின் கணவர்கள் இந்தக் கெடுவுக்குள் தலாக் விடப்பட்டப் பெண்களை திரும்ப அழைத்துக் கொள்ளலாம். இது 2:228 குர்ஆன் வசனத்தின் கருத்தாகும்.

    மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் கருத்தரித்திருக்கிறார்களா என்பதை அறியவும், மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் காலவரையறைக்குள் கணவன், மனைவி இருவருக்கும் நல்லிணக்கம் ஏற்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம். இது முதல் இரண்டு தவணை தலாக் முறைக்கு மட்டுமே பொருந்தும்.

    தலாக் சொல்லப்பட்டப் பெண்கள் இவ்வாறு காத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை.

    மற்ற சந்தேகங்களுக்கும் தொடர்ந்து விளக்கமளிப்போம் (இறைவன் நாடட்டும்) அதற்குமுன் ராகவன் அவர்கள் எழுதிய கருத்தோட்டத்தில் எனக்கு ஏற்படும் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கட்டும்.

    //*ஆணும் தன்னிச்சையாக தலாக் செய்யாமல், அவரும் அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. இது எனது கருத்து அவ்வளவே.*//

    ”அக்குறிப்பிட்டவரின் வழியாகவே செய்ய வேண்டுமென்று இருந்தால் சரியாக இருக்குமெனப் படுகிறது. சரியாக இருக்குமெனப் படுகிறது” என்பதற்கு சரி, சரி இல்லை என்பதை எப்படிப் புரிய வேண்டுமென்பதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களைச் சொல்லுங்களேன் ராகவன்.

    அன்புடன்,
    அபூ முஹை

  43. G.Ragavanon 15 Jun 2005 at 12:11 am 43

    விளக்கங்களுக்கு நன்றி அபுமுஹை. நான் இதைப் பார்க்காமல் இருந்து விட்டேன். அதான் தாமதம்.

    என்னுடைய கேள்வி என்னவென்றால்….ஒரு பெண் மணவிலக்கு கேட்கையில் ஒரு நடுவர் வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. அது சரியே. காரணம் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று பார்க்க ஒரு நடுவர் தேவை. (இந்துத் திருமண விலக்குகளில் நீதிமன்றம் நடுவராக இருப்பது போல).

    அதே போல ஒரு ஆணும் தன்னிச்சையாக தலாக்காமல்…ஒரு நடுவர் வழியாகவே செய்வதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும். இல்லையென்றால் இதை சிலர் துர்ப்பிரயோகம் செய்யவும் வழியுண்டு. ஆகையால் என்னுடைய கருத்துப் படி ஆணுக்கும் தன்னிச்சையாக தலாக்க உரிமை இருக்கக் கூடாது. நடுவர் வழியாகவே சாதக பாதகங்களை அலசிச் செல்ல வேண்டும். இதற்கு எதிராக இஸ்லாத் இருக்குமானால் அதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அது தவறு என்றே எனக்குப் படுகிறது.

    அடுத்த கேள்வி. ஒரு முஸ்லீம் பெண் மணவிலக்கிற்காக இந்திய நீதிமன்றங்களை நாடலாமா? அதை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறதா?

  44. அபூ முஹைon 17 Jun 2005 at 1:48 am 44

    ராகவன், உங்களின் சந்தேக வினாக்களுக்கு முதலில் பதில் எழுதிவிடுகிறேன்!

    1.//*ஒருவேளை அந்தத் தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்?*// 2. //*திருமணமான முஸ்லீம் பெண்கள் திருமண ரத்திற்கு நீதிமன்றத்தை நாடலாமா?*// இந்த இருண்டு கேள்விகளுமே ஒன்றோடொன்று தொடர்புடையதுதான்.

    ஒரு பெண் தன் கணவனைப் பிடிக்காமல், அவனிடமிருந்து முற்றாக விலகிவிட முடிவு செய்து அந்தச் செய்தியை ஊர்த் தலைவரிடம் முறையிட்டால் – அந்தப் பெண்ணின் விருப்பத்தை மறுத்து பலவந்தமாக அவளின் கணவனோடு வாழ்ந்தாக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

    இங்கே ஊர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவளது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கருத்தை அப்பெண்ணின் மீது திணிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் இவர்கள் மீது திருக்குர்ஆன் மூன்று குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறது.

    ”எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பாளர்கள்தாம்.” (5:44)

    ”எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள்.” (5:45)

    ”அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.” (5:47)

    எனவே, ”தலைவர் ஒத்துக் கொள்ளாவிட்டால்?” என்ற பேச்சுக்கே இடமில்லை. கணவனிடமிருந்து மணவிலக்கை விரும்பி, தலைவரிடம் ஒரு பெண் முறையிட்டால் அத்தலைவர் மறு பேச்சுக்கே இடமில்லாமல் திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். இதுவே இஸ்லாத்தின் சட்டம்.

    இச்சட்டத்தை முறைகேடாக ஒருவர் பயன்படுத்தினால் அது அவரின் அறிவில்லாத் தன்மையையே வெளிப்படுத்தும். ஒரு முஸ்லிம் செய்யும் முறைகேடான செயலை, சட்டத்தை நோக்கித் திருப்புவது அறிவுடைமையல்ல என்பதை விளங்க வேண்டும். (ஏற்கெனவே தலாக் ஓர் விளக்கம்-1 பதிவில் இதை நாம் எழுதியுள்ளோம்)

    ”குலா” மூலம் மணவிலக்குப் பெறும் முயற்சியில் பெண்ணுக்கு அநீதம் இழைக்கப்பட்டால் அவர் தாராளமாக இந்திய நீதி மன்றங்களின் உதவியை நாடலாம். இதைக் கூடாது என்று சில அறிவிலிகள் கூறுவார்கள், இது நியாயமற்ற விதண்டா வாதம். குலா முறை விவாகரத்து இஸ்லாம் வழங்கிய பெண்களுக்கான உரிமை, இந்த உரிமையை மறுத்து நிராகரித்தவர்களுக்கெதிராவே நீதி மன்றத்தின் உதவியை நாடுகிறார்.

    பெண்களுக்கான உரிமையை மறுத்தத் தனி நபரோ அல்லது சமுதாயமோ இவர்களே இஸ்லாத்தின் பார்வையில் கடுமையானக் குற்றவாளிகள். (எல்லா விஷயங்களையும் ஒரே பின்னூட்டத்தில் சொல்லாமல் தனித் தனியாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கருதி இன்னும் இரண்டு பின்னூட்டங்களில் சொல்லமென்று எண்ணுகிறேன். நன்றி!)

    அன்புடன்,
    அபூ முஹை

  45. G.Ragavanon 20 Jun 2005 at 12:46 am 45

    நன்றி அபுமுஹை….ஆனால் உங்கள் கருத்துகள் எனக்கு முழுமையான விடையைத் தரவில்லை.

    குலா மூலம் ஒரு பெண் விவாகரத்து கோரினால் மறுக்கப் படவே மாட்டாது என்று உறுதி கூறியுள்ளீர்கள். அப்படி மறுக்கப் பட்ட சமயத்தில் நீதி மன்றத்தை நாடினால் தவறில்லை என்றும் கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

    ஆனால் தலாக் பற்றிய கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை. ஆகையால் அதில் பேச்சை வளர்க்காமல் எனது கருத்தைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

    குலா எவ்வகையில் செய்யப் படுகிறதோ. அதே வகையில்தான் தலாக்கும் செய்யப் பட வேண்டும். தன்னிச்சையாக எந்த ஆணும் தலாக் செய்யக் கூடாது. அப்படி இருந்தால்தான் என் கருத்துப் படி சரி. இல்லையென்றால் தவறுதான். குற்றம்தான்.

  46. அபூ முஹைon 22 Jun 2005 at 6:50 pm 46

    ராகவன்! நீங்கள் அவசரப்பட்டிருக்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

    தலாக், குலா இண்டுமே கணவன், மனைவி இருவரின் தன்னிச்சையாகவே நடக்கிறது. திருமணத்தின் போது ஊரறியப் பெற்றுக் கொண்ட மஹர் தொகையை, மணவிலக்குப் பெற நாடும் மனைவி அதே ஊரறிய மஹர் தொகையைத் திரும்ப செலுத்த வேண்டும். இந்தக் காரணத்துக்காகவே குலாவைத் தேர்ந்தெடுக்கும் மனைவி தலைவரிடம் தனது மணவிலக்கைப் பற்றித் தெரிவிக்கிறார் – வாங்கிய மஹரை தலைவரிடம் ஒப்படைக்கிறார். இதுதான் குலாவின் ஏதார்த்தம்.

    இது தலைவரை நடுவராக ஏற்றுக் கொண்டதாகாது. இவர்களின் வாழ்க்கை ஓப்பந்தம் பதிவு செய்யப்பட்ட திருமணப் புத்தகத்தில், குலா மூலம் இத்திருமணம் ரத்தாகிவிட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக – அதுபோல் தலாக் சொல்லி தவணைகள் முடிந்து விவாகரத்து உறுதி செய்யப்பட்டால் கணவன் அதைத் தலைவருக்கு தெரிவித்தாக வேண்டும். இதுவும் இவர்களின் திருமணம் பதிவு செய்யப்பட்ட புத்தகத்தில், தலாக் மூலம் இந்தத் திருமணம் ரத்தாவிட்டது என்பதைக் குறிப்பிடுவதற்காக.

    எனவே தலாக், குலா இரண்டிலும் நடுவர் என்பது கிடையாது – இனிமேல் சேர்ந்து வாழ இயலாது என்று பிரிந்திட முடிவுவெடுக்கும் கணவன், மனைவி இருவருமே தலாக் – குலாவை சுதந்திரமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் இதில் நடுவராக எவரும் தலையிட முடியாது – தலையிடக்கூடாது.

    இங்கு நாம் பரிசீலித்துக் கொண்டிருப்பது தலாக்கும், குலாவும் உரிமையில் சமமாக இருக்கிறதா? என்பதைப் பற்றி மட்டுமே. அதில் வேறுபாடு இல்லை என்பது தெளிவு.

    பொதுவாக, எப்படி சட்டம் இயற்றினாலும் அது பற்றிய மனிதனின் சிந்தனையில் எழும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க முடியாது. தலாக், குலாவுக்கு நடுவர் இருந்தால் நல்லது என்பது ராகவனின் கருத்து.

    செய்து கொண்ட ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்ள நடுவரை ஏற்படுத்திக் கொள்வது ஓப்பந்த முறைக்கேப் புறம்பானது மட்டுமல்லாமல் தலாக், குலா சுதந்திரத்தை, நடுவர் என்ற பெயரில் மூன்றாவது மனிதரிடம் ஒப்படைப்பது தவறு என்பது என்னுடைய கருத்து.

    //*ஆனால் தலாக் பற்றிய கேள்விக்கு ஒன்றும் சொல்லவில்லை.*//

    தலாக் பற்றிய உங்கள் கேள்விக்கு ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது!

  47. dondu(#4800161)on 22 Jun 2005 at 7:37 pm 47

    சலாஹுத்தீன் அவர்களே, எனக்கு இங்கு சில சந்தேகங்கள் உண்டு. மெஹர் என்பது பெண்ணுக்கு திருமணம் முன்பே கொடுத்து விடுகிறார்களா அல்லது கொடுத்ததாகக் கூறி அதன் கட்டுப்பாடு கணவனிடமே உள்ளதா. இஸ்லாமிய ஆண்கள் வரதட்சினையே பெருவதில்லையா? எது அதிகம்? மெஹரா வரதட்சிணையா? மெஹரைத் திருப்பித் தர சொல்பவர்கள் வரதட்சிணைக்கும் அவ்வாறே கூறுவார்களா? நான் படித்த செய்தி ஒன்றில் குலாவுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சம்மதம் தெரிவிக்காது தலைவர் தன்னை படுத்துவதாக ஒரு இஸ்லாமியப் பெண் கூறியிருந்தார். அதற்கு அப்பெண் செய்யக்கூடியது என்ன? நீதிமன்றத்துக்கு போக முடியுமா? அதற்கும் அவர் சார்ந்த சமூகத்தின் கட்டைப் பஞ்சாயத்து விடவில்லை என்றும் படித்தேன். எதற்கு வம்பு? பேசாமல் இரு பாலருக்கும் ஒன்று போலவே உரிமை கொடுத்து விடுவது சிறந்ததல்லவா?
    மேலும் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் ஏட்டளவிலேயே உள்ளன. இதே நிலை மற்ற மதங்களில்தான் என்றாலும் அங்கெல்லாம் அவை தவறு என்றும் மாற்றப்பட வேண்டியவை என்பதும் ஆட்சேபக் குரல்களில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய மதத்திலோ ஒரு மாற்றமும் தேவையில்லை என்ற ஒரு காப்ளசென்ட் மனப்பான்மை தென்படுகிறது. இது ஆரோக்கிய மனப்பான்மை என்று நினைக்கிறீர்களா?
    இப்போது விபசாரத்துக்கு வருவோம். வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? அதுவும் கல்லடிகள் டூ மச். கசையடிகள் கொடுக்கலாம் இன்னொருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். என்ன இதெல்லாம்?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்
    ப்ளாக்கர் எண் 4800161
    (எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)

  48. Salahuddinon 22 Jun 2005 at 8:34 pm 48

    டோண்டு அவர்களே! உங்கள் கேள்விகளுக்கு நன்றி. அவை அனைத்திற்கும் விரிவாக பதில் எழுத விரும்புகிறேன். வேலை மிகுதியினால் உடனடியாக எழுத முடியவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

    – சலாஹுத்தீன்

  49. நல்லடியார்on 22 Jun 2005 at 9:57 pm 49

    டோண்டு சார்,
    மஹர் பற்றிய உங்களின் கேள்விக்கு எனது கருத்தையும் பதியவிரும்புகிறேன்.

    பெரும்பாலான முஸ்லிம்கள் மஹர் என ஒரு சிறிய தொகையை பகிரங்கமாகக் கொடுத்துவிட்டு, வரதட்சினையாக அதைவிட அதிக தொகையை ‘கறந்து’ விடுகிறார்கள். அதுவும் ஆசிய முஸ்லிம்களிடமே இப்பழக்கம் உள்ளது. இது அவ்வாறு செய்யும் தனிப்பட்ட நபரின் தவறுதானே தவிர,மதத்தின் தவறல்ல.

    கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது. அத்தகைய பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மனிதாபிமானமுள்ள யாரும் உதவலாம். துரதிஷ்டவசமாக, அத்தகைய சில முஸ்லிம் பெயர் தாங்கிகளால் இஸ்லாம் விமரிசிக்கப் படுவதுதான் கொடுமை.

    //வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?//

    உங்களின் கருத்து எனக்கு வியப்பைத் தருகிறது!

  50. G.Ragavanon 23 Jun 2005 at 12:58 am 50

    ////வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்?//

    உங்களின் கருத்து எனக்கு வியப்பைத் தருகிறது! ////

    நல்லடியார். இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் கூடுகிறார்கள். அது படித்த மட்டத்தில் நடக்கும் பொழுது பரிசுப் பொருட்களாகப் பரிமாற்றம். ஏழைகளிடத்தில் பணமாகப் பரிமாற்றம். அவ்வளவே. இதில் மதம் எங்கிருந்து வந்தது? விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குவதுதான் சிறந்தது. அது பல இன்றைய பிரச்சனைகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும்.

  51. G.Ragavanon 23 Jun 2005 at 1:02 am 51

    விளக்கத்திற்கு மிக்க நன்றி அபுமுஹை.

    வரதட்சணை என்ற கொடுமை ஒழிய வேண்டும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.

    அப்படியே இந்த மெஹர் பற்றிச் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

    என்னுடைய இஸ்லாமிய நண்பன் மூலம் அடியார் என்பவர் எழுதிய “என் இனிய இஸ்லாம்” என்ற புத்தகம் கிடைத்தது. அதில் இந்த மெஹரைப் பற்றி விளக்கமாக இல்லை. அதனால்தான் உங்களிடம் கேட்கிறேன். மேலும் அந்த நண்பர் தமிழில் குரான் கிடைக்கிறது என்றும் அதை எனக்கு அவரே தருவதாகவும் கூறினார். நண்பர் தமிழர் இல்லையென்பதால் இரண்டு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார். ஒருவேளை அதில் விளக்கமாகக் சொல்லப் பட்டிருக்கலாம்.

  52. BABUon 23 Jun 2005 at 6:47 am 52

    நல்ல கேள்விகள். நல்ல விளக்கங்கள். நயத்தகு நன்றிகள்.

    வெற்றிகரமான ஒரு விவாதத்தை இங்கு பார்க்கிறேன். மகிழ்சி.நானும் நிறையத் தெரிந்துக்கொள்வதால்.

  53. அபூ முஹைon 24 Jun 2005 at 1:52 am 53

    //*அப்படியே இந்த மெஹர் பற்றிச் சொல்லுங்களேன். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.*//

    வரதட்சணை வாங்காதீர்கள் என்பதையும் தாண்டி, மஹர் என்ற மணக்கொடையை ஆண்கள் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது இஸ்லாம். இதையறியாத முஸ்லிம்களிலுள்ள ஆண்வர்க்கம் மானமிழந்து பெண்களிடம் வரதட்சணைக்காகக் கையேந்தி நிற்கின்றனர்.

    இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள மஹர் உரிமையை இந்தியா போன்ற நாடுகளில் பெண்களும் பயன்படுத்திக் கொள்ளவில்லை, ஆண்களும் கண்டு கொள்ளாமல் வசதியாக மறைத்து விட்டார்கள்.

    ”நீங்கள் பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை) களை மகிழ்வோடுக் கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதெனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (திருக்குர்ஆன், 4:4)

    இந்த வசனத்தை ஒருமுறைக்கு பலமுறைப் படித்துப் பாருங்கள் – மணப்பெண்ணுக்கு, மணமகன் என்பவன் மணக்கொடை வழங்க வேண்டும் என்பதை, மேலதிகமாக எவருடைய விளக்கமும் தேவையில்லாத அளவுக்கு நேரடியாகவே விளங்கிக் கொள்ளலாம்.

    இல்லற வாழ்க்கையில் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதால் மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை இஸ்லாம் பெண்களுக்கே வழங்கியுள்ளது.

    இன்று முஸ்லிம்களிடையே நடைமுறையிலிருக்கும் 101 அல்லது 1001 ரூபாய் என்று புத்தகத்தில் எழுதிக்கொள்ளும் மஹர் தொகையை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. மணப்பெண்தான் மஹர் தொகையை நிர்ணயிக்க வேண்டும். இதில் மற்றவரின் குறுக்கீடுகள் இருக்கக்கூடாது.

    உமர் (ரலி) ஆட்சி காலத்தில் பெண்கள் மஹர் தொகையை அதிகமாகக் கேட்கிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது ஆட்சித் தலைவராக இருந்த உமர் (ரலி) அவர்கள் மஹர் தொகையை அதிகரிக்கும் பெண்களின் செயலைக் கண்டிக்கும் வகையில் ”இனிமேல் மஹராக நாம் ஒரு தொகையை நிர்ணயிப்போம்” என்று கூறினார். இதைக் கண்டித்து ஒரு பெண்மணி ”மஹர் தொகையை அல்லாஹ்வே நிர்ணயிக்காத போது அதை நிர்ணயிப்பதற்கு நீங்கள் யார்? என்று கேட்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் இறைவனுக்கு நன்றியைச் செலுத்தி மஹர் தொகையை நிர்ணயிக்குபடி போடுவதாகச் சொன்ன சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

    திருமணத்திற்குப்பின் கணவனால் கைவிடப்படுவோம் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டே ஒரு பெண் மஹர் தொகையைத் தீர்மானிக்க வேண்டும். பெண்களின் வசதிகளின் ஏற்றத் தாழ்வைக் கொண்டு தொகை பல ஆயிரங்களிலிருந்து சில லட்சங்கள் வரை மஹர் தொகையாகப் பெற்றுக் கொள்ளலாம், பெற்றுக் கொள்ளும் தொகையை பணமாகவோ, தங்கமாவோ தன்னிடமே வைத்துக்கொள்ளலாம், அல்லது ஏதேனும் தொழிலில் முதலீடு செய்து லாபம் மீட்டலாம்.

    முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போன வரதட்சணை என்பது இஸ்லாம் ஏற்படுத்தியதல்ல. வரதட்சனையாக சல்லிக்காசு பெறாமல், பெண்களுக்கான மஹர் – மணக்கொடையைக் கொடுத்து மணமுடிக்க வலியுறுத்துகிறது இஸ்லாம். இங்கே மாற்ற வேண்டியது சட்டத்தையல்ல! – வரதட்சணையில் சொகுசு கண்ட மனிதர்களே மாற வேண்டும்! என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

    (மஹர் – விரிவாக எழுத வேண்டிய விஷயம் பின்னூட்டத்திற்காக சுருக்கியே விளக்கியுள்ளேன் மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எழுதவும் நன்றி!)

    தமிழ் குர்ஆன் இந்த சுட்டியில் பெறலாமே!

    http://www.tamililquran.com/suraindex.asp

    அன்புடன்
    அபூ முஹை

  54. contivityon 24 Jun 2005 at 2:53 pm 54

    மிக கண்ணியமான முறையில் விவாதிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி..

    காழ்ப்புணர்ச்சி, விதண்டாவாதம் நாகரீகமின்மை இவற்றையே மூலதனமாக வைத்து சிலர் எழுதிவரும் அவதூறுகளை அனைத்து அன்பர்களும் புரிந்து கொண்டு புறந்தள்ள வேண்டும்.

    அபூமுஹை அவர்கள் கூறியது போல சில இஸ்லாமிய பெயர் தாங்கிகள் செய்யும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் இஸ்லாத்தையே களங்கப்படுத்த முனைவது அறிவீனம்.

    ராகவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி..

  55. நல்லடியார்on 26 Jun 2005 at 3:30 am 55

    டோண்டு சார்,

    விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் இணைவதில், எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. எனினும், இங்கு தனி மனித சுதந்திரமா? ஒழுக்கமா என்று பார்க்கும் போது, ஒழுக்கத்தையே முன்னிறுத்துவோம்.

    செக்ஸ் உணர்வு மிகுந்துவிட்டால் மகளுடனோ, தாயுடனோ அல்லது சகோதரியுடனோ புணர்வதில்லை.(மண்ணிக்கவும் வேறு உதாரணம் கிடைக்கவில்லை) இங்கும் நீங்கள் சொன்ன அதே கருத்து பொறுந்தும்தானே? எனினும் சமூக கட்டுப்பாடுகளும்,மனசாட்சியும்,உறவு முறைகளும் தடுக்கிறது. அந்த வகைதான் மதத்தின் குறுக்கீடும்.

    மத கட்டுப்பாடுகள் சில சமயம் தனி மனித உரிமைகளில் தலையீடு செய்வது மாதிரி இருக்கும், ஆனால் அதில் சமூக நலனை முன்னிறுத்தி அத்தகைய சில குறுக்கீடுகள் அவசியமாகிறது.

    மேலும், ஒருவன் தன் செக்ஸ் உணர்வை எந்தெந்த வகையிலெல்லாம் தீர்த்துக் கொள்ளலாமெனவும் இஸ்லாம் வரையறுத்துள்ளது. இது அனேகமாக எல்லா மதங்களுக்கும் பொது. இங்கு செக்ஸ் உணர்வு தடுக்கபடவில்லை என்பதை கவனிக்கவும்.

    //விபச்சாரத்தை சட்ட பூர்வமாக்குவது தான் சிறந்தது. அது பல இன்றைய பிரச்சனைகளிடமிருந்து விடுதலை பெற்றுத் தரும்.//

    உங்கள் கருத்துடன் நான் மாறுபடுகிறேன் ராகவன், இதே கோரிக்கையைத்தான் ஓரின சேர்க்கையாளர்களும் வைக்கிறார்கள். இதர குற்றவாளிகளும் இவ்வாறு கேட்கத் தொடங்கி விட்டால், சமூக அமைதி கெடாதா?

    நன்றி.

  56. நல்லடியார்on 26 Jun 2005 at 3:41 am 56

    ஒருவனுக்கு செக்ஸில் திருப்தி கிடைக்காத போழ்து மணைவியை விடுத்து வேறு பெண்ணுடன் உறவு கொள்வது விபச்சாரம் என்கிறோம். அத்தகைய சூழலில் அவன் நான்கு மணைவியர் வரை (நால்வரையும் நீதமாக நடத்த முடியுமெனில் மட்டுமே) திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது செக்ஸை தனித்துக் கொள்ள உள்ள சட்டரீதியான அங்கீகாரம்தானே?

    ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்வதை நான் விபச்சாரத்துடன் ஒப்பிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

  57. Salahuddinon 26 Jun 2005 at 10:18 pm 57

    டோண்டு சார்,

    உங்களின் கேள்விகளுக்கு அபூமுஹை, நல்லடியார் ஆகியோர் பதிலளித்திருந்தும் எனது கருத்துக்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.

    //மெஹர் என்பது பெண்ணுக்கு திருமணம் முன்பே கொடுத்து விடுகிறார்களா அல்லது கொடுத்ததாகக் கூறி அதன் கட்டுப்பாடு கணவனிடமே உள்ளதா.//

    மஹர் என்பது மணமகன் மணமகளுக்கு திருமணத்தின்போது பணமாகவோ, பொன் போன்ற பொருளாகவோ அளிக்கவேண்டிய ஒரு கட்டாயக்கடமை. இதன் தொகை அல்லது அளவை நிர்ணயம் செய்யும் உரிமையும் மணமகளுக்குத்தான் உண்டு. பொதுவாகவே, மனைவியின் சொத்துக்கள், பணம் (மஹர் தொகை உட்பட) ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் கணவனுக்கு கிடையாது, அந்த மனைவியே விரும்பி ஒப்படைத்தாலொழிய.

    குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

    நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடையை) மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அத்தியாயம் 4: வசனம் 4)

    இவையெல்லாம் இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் உள்ளவை. அவை எல்லா முஸ்லிம்களாலும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே!

    //இஸ்லாமிய ஆண்கள் வரதட்சினையே பெருவதில்லையா?//

    இந்த கேள்விக்கு ‘இல்லவே இல்லை’ என்று பதில் சொல்லால் அது உண்மையல்ல. இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் வரதட்சிணை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நடைமுறையில் அவ்வாறல்ல என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை. நல்லடியார் குறிப்பிட்டதுபோல ஆசிய முஸ்லிமகளிடையே மட்டும்தான் இந்த பழக்கம் காணப்படுகிறது. ஆனால் ஒரு 10/15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைமையோடு ஒப்பிட்டால் தற்போது இத்தகைய மனப்போக்கு மாறிவருவதை காணலாம். இளைஞர்களிடைய ஒரு விழிப்புணர்வு தோன்றிவருவதையும் வரதட்சிணை இல்லா திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும்கூட நம்மால் உணர முடியும்.

    எனது கருத்து என்னவெனில், இந்திய கண்ணோட்டத்தில் வரதட்சிணை என்பது ஜாதி, மதம் கடந்து வியாபித்திருக்கும் ஒரு சமூக கொடுமை. எல்லா சமூகத்தினரியேயும் ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படும்வரை இதை ஒழிக்க இயலாது.

    //எது அதிகம்? மெஹரா வரதட்சிணையா?//

    நடைமுறையில் மஹரை விட வரதட்சிணையே அதிகமானதாக இருக்கிறது. முஸ்லிம்களிடையே வரதட்சிணை எனும் பழக்கம் மறைந்துவரும் காலத்தில் மஹர் முக்கியத்துவம் பெரும்.

    //மெஹரைத் திருப்பித் தர சொல்பவர்கள் வரதட்சிணைக்கும் அவ்வாறே கூறுவார்களா?//

    வரதட்சிணை என்பது இஸ்லாமிய திருமணச்சட்டங்களில் இல்லாத ஒன்று என்பதால் இதற்கு சட்டபூர்வமான பதில் எதுவும் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனால் குர்ஆன் மஹரைப்பற்றி குறிப்பிடும்போது இவ்வாறு கூறுகிறது: “மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்தபோதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக்கொள்ளாதீர்கள் (அத் 4: வசனம் 20). இதன் அடிப்படையில் பார்க்கும்போது கொடுத்ததையே திரும்ப கேட்கக்கூடாது என்ற நிலையில் மணமகளிடமிருந்து பெற்ற ஒன்றை தானே வைத்துக்கொள்ள ஆசைப்படுவதும் கூடாதுதானே?

    //நான் படித்த செய்தி ஒன்றில் குலாவுக்கு ஐந்து வருடங்களுக்கு மேல் சம்மதம் தெரிவிக்காது தலைவர் தன்னை படுத்துவதாக ஒரு இஸ்லாமியப் பெண் கூறியிருந்தார். அதற்கு அப்பெண் செய்யக்கூடியது என்ன? நீதிமன்றத்துக்கு போக முடியுமா? அதற்கும் அவர் சார்ந்த சமூகத்தின் கட்டைப் பஞ்சாயத்து விடவில்லை என்றும் படித்தேன்.//

    மணவிலக்கிற்காக ஒரு பெண் தலைவரை அணுகினால், அவர் அத்தம்பதியினரிடையே சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம். அது நடக்காது என தெரியவந்தால் அவர் அப்பெண்ணுக்கு மணவிலக்கு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். இதுதான் அவர் செயல்படக்கூடிய சாத்தியக்கூறுகள். ஐந்து வருடங்களுக்கு மேல் இழுத்தடிப்பது அநியாமே.

    //எதற்கு வம்பு? பேசாமல் இரு பாலருக்கும் ஒன்று போலவே உரிமை கொடுத்து விடுவது சிறந்ததல்லவா?//

    பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதுகுறித்து எழுதுகிறேன்.

    //மேலும் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் ஏட்டளவிலேயே உள்ளன. இதே நிலை மற்ற மதங்களில்தான் என்றாலும் அங்கெல்லாம் அவை தவறு என்றும் மாற்றப்பட வேண்டியவை என்பதும் ஆட்சேபக் குரல்களில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இஸ்லாமிய மதத்திலோ ஒரு மாற்றமும் தேவையில்லை என்ற ஒரு காப்ளசென்ட் மனப்பான்மை தென்படுகிறது. இது ஆரோக்கிய மனப்பான்மை என்று நினைக்கிறீர்களா?//

    முன்பே குறிப்பிட்டதுபோல் இஸ்லாமியச் சட்டங்களுக்கும் முஸ்லிம்களின் நடைமுறைக்கும் பெருமளவில் வேறுபாடு இருப்பது உண்மையே. ஆனால் மாற்றம் தேவைப்படுவது முஸ்லிம்களின் மனங்களில்தானே தவிர சட்டங்களில் அல்ல.

    //இப்போது விபசாரத்துக்கு வருவோம்.//

    இது குறித்த எனது கருத்தை பிறகு எழுதுகிறேன்.

    – சலாஹுத்தீன்

  58. G.Ragavanon 26 Jun 2005 at 11:29 pm 58

    // உங்கள் கருத்துடன் நான் மாறுபடுகிறேன் ராகவன், இதே கோரிக்கையைத்தான் ஓரின சேர்க்கையாளர்களும் வைக்கிறார்கள். இதர குற்றவாளிகளும் இவ்வாறு கேட்கத் தொடங்கி விட்டால், சமூக அமைதி கெடாதா? //

    இது குறித்து அறிவியல் பூர்வமாக விளக்க எனக்குத் தகவல் பற்றாது. ஆனால் பொதுப்படையாகச் சொல்கிறேன்.

    ஓரினச் சேர்க்கையோ ஈரினச் சேர்க்கையோ எதுவாயினும், இருவர் விரும்பிப் புணர்வது அவர்கள் விருப்பம். வன்புணர்ச்சியாகவும் அடுத்தவருக்கு இடைஞ்சலாக இல்லாத வகையிலும் நடந்தால் சரியே என்பது எனது கருத்து. இவர்களைக் குற்றவாளிகள் என்று என்னால் கருத முடியவில்லை. அது அவர்கள் விருப்பம்.

  59. G.Ragavanon 26 Jun 2005 at 11:32 pm 59

    // ஒருவனுக்கு செக்ஸில் திருப்தி கிடைக்காத போழ்து மணைவியை விடுத்து வேறு பெண்ணுடன் உறவு கொள்வது விபச்சாரம் என்கிறோம். அத்தகைய சூழலில் அவன் நான்கு மணைவியர் வரை (நால்வரையும் நீதமாக நடத்த முடியுமெனில் மட்டுமே) திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இது செக்ஸை தனித்துக் கொள்ள உள்ள சட்டரீதியான அங்கீகாரம்தானே?
    //

    சரி. ஆணுக்கு மட்டும்தான் ஒருவருடன் செக்ஸில் திருத்தியில்லாமல் போகுமா? ஒரு பெண்ணுக்கு அந்தத் திருப்தியின்மை வந்தால்?

  60. நல்லடியார்on 27 Jun 2005 at 3:38 am 60

    ராகவன், ‘திருப்தியின்மை’ என நான் சொன்னது என் தெளிவற்ற விளக்கம் என நினைக்கிறேன்.

    ஆணோ,பெண்ணோ ஒருவரை ஒருவர் திருப்தி படுத்த முடியாத பட்சத்தில் விவாக ஒப்பந்தம் தொடர்வதில் அர்த்தமில்லை. இதற்கு ஒரே தீர்வு, விவாக விலக்கு பெறுவதுதான்.

    நடைமுறை சிக்கலைத் தவிர்க்க, மணைவியின் அனுமதியுடன் ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அனுமதி (நான்குவரை) உண்டு. இங்கு மணைவி அனுமதிக்காத பட்சத்தில் அந்த வழியும் இல்லை.

    வாய்ப்பு கிடைத்தால் பலதாரமணம் விஷயத்தில் ஆண்-பெண் பேதம் பற்றி பிறகு விவாதிப்போம்.

    நான் முழுதும் இஸ்லாத்தை அறிந்தவன் அல்ல. தங்கள் போன்றோருக்கு விளக்குவதன் மூலம் நானும் தெளிவடைகிறேன். என் கருத்துக்களை இஸ்லாமிய சட்டங்களுடன் ஒப்பிட்டு, அதில் என் தவறு இருப்பின், அதனை திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை.

    நன்றி.

  61. G.Ragavanon 27 Jun 2005 at 5:37 am 61

    நல்லடியார்…..நான் அறிந்து கொள்ளவே கேள்வியைக் கேட்டேன்.

    என்றைக்குமே நாம் கற்றது கைமண்ணளவுதான் நல்லடியார். உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன்.

    இஸ்லாம் பெண்களுக்குப் பலதார மணத்தை எதிர்க்கிறது என்று சொல்லி முடிப்பது அல்ல எனது நோக்கம். இது பெரும்பாலும் எல்லா மதங்களிலும் பார்க்கும் பண்பு. பாஞ்சாலியை ஒத்துக் கொண்ட சமுதாயம் வேறொரு பெண்ணை அப்படி ஒத்துக் கொள்ளாது. இது நம்ம ஊர்ப் பிரச்சனைதான். அதையும் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.

    சரி. நீங்கள் விரும்பிய வகையில் பிறகே விவாதிப்போம்.

    அன்புடன்,
    கோ.இராகவன்

  62. Salahuddinon 28 Jun 2005 at 9:56 pm 62

    டோண்டு சார்,

    //இப்போது விபசாரத்துக்கு வருவோம். வயது வந்த ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் தங்கள் விருப்பத்திற்கிணங்க சேருகின்றனர். அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். அதில் மதம் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? அதுவும் கல்லடிகள் டூ மச். கசையடிகள் கொடுக்கலாம் இன்னொருவர் திருவாய் மலர்ந்தருளுகிறார். என்ன இதெல்லாம்//

    நான் புரிந்துகொண்டது சரி என்றால், இதில் இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன. (1) இஸ்லாமிய தண்டனை முறைகள் மிக கடுமையானவை (டூ மச்). (2) விபச்சாரம் என்பது ஒரு தண்டனைக்குறிய குற்றமே அல்ல. இந்த இரண்டிற்குமே பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

    பொதுவாகவே இஸ்லாமிய சட்டங்கள் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டவை. சமூக நலனின் அடித்தளம் குடும்ப அமைப்பு என்பதும் இஸ்லாத்தின் கொள்கை. ஒரு செயல் அல்லது குற்றம் எந்த அளவுக்கு சமூக நலனை சீர்குலைப்பதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு தண்டனைகளும் கடுமையாகவே இருக்கும். உதாரணத்திற்கு சொல்வதானால், போதைப்பொருள் கடத்துவோருக்கு சிங்கப்பூரில் மரணதண்டனை வழங்கப்படுவதை குறிப்பிடலாம். மேம்போக்காக பார்த்தால் இது ஒரு சாதாரணமான குற்றமாகத்தான் தெரியும். ‘இவன் கொண்டு வந்து விக்கிறான். போதைக்கு அடிமையான சிலபேரு வாங்கி உபயோகிக்கிறான். இது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?’ என்று கூட கேட்கலாம். ஆனால் சற்று கவனித்துப்பார்த்தால் நமக்கு உண்மை புரியும். போதைப்பொருள் இலகுவாக கிடைக்கத்தொடங்கினால் அது ஒரு தலைமுறையையே சீர்கெடுத்துவிடும். கடுமையான தண்டனையைக் கொண்டுதான் இதை தடுக்க முடியும் என்றால், சமூக நலனை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை.

    விபச்சாரம் என்பது நீங்கள் சொல்வது போல் ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் விருப்பத்திற்கினங்க சேரும் செயலாகத்தெரியவில்லை. முக்கியமாக அதில் அந்தப்பெண்ணின் விருப்பம் இருக்குமா என்பது பெரிய கேள்விக்குறி. விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களின் பேட்டிகள், உண்மைச்சம்பவங்கள் ஆகியவற்றை படித்தால் அவை பெரும்பாலும் கண்ணீர்க்கதைகளாகவே இருக்கின்றன. அப்பாவி பெண்களை கடத்திச்சென்றோ, கட்டாயப்படுத்தியோ விபச்சாரத்தில் ஈடுபடச் செய்த கதைகளை நாம் அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கிறோம். அல்லது சில பெண்களே வறுமையின் காரணமாகவோ, சூழ்னிலையின் காரணமாகவோ இத்தகைய இழி நிலைக்கு ஆளான செய்திகளையும் காண்கிறோம். ‘சும்மா ஜாலிக்காக’ இதில் ஈடுபடும் பெண்களும் இருக்கிறார்கள்தான்.

    விபச்சாரம் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட ஊர்களில் கூட அதில் ஈடுபடும் எல்லா பெண்களும் தங்கள் விருப்பப்படிதான் இதில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்லமுடியாது. அங்கீகரிப்பட்ட தொழிலாக இருந்தாலும் இது எக்காலத்திலும் ஒரு கௌரவமான தொழிலாக ஆகாது. இதில் நிறைய வருமானம் கிடைக்கும் என்பதற்காக எந்த பெண்ணாவது ‘ நான் வளர்ந்து ஆளான பிறகு இந்தத் தொழிலில் ஈடுபடப்போகிறேன்’ என்றோ, எந்தப் பெற்றோராவது ‘என் மகளை வளர்த்து இந்த தொழிலில் ஈடுபடச்செய்வேன்’ என்றோ கனவு காண்பதில்லை.

    ஆக, சில சபலம் பிடித்த ஆண்களின் இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காக பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கும் பரிதாபம்தான் விபச்சாரம். அந்தப்பெண்கள் தங்கள் இளமையைத் தொலைத்த பிறகு அவர்களை யார் கவனிப்பார்கள்.? அவர்களுக்கென குடும்பமோ, குழந்தைகளோ இல்லாத நிலையில் அவர்களின் கதி என்ன?

    விபச்சாரம் மலிந்து கிடக்கும் இடத்தில் திருமணங்களின் எண்ணிக்கை குறையும். சமூக சீர்கேடுகள் பெருக வாய்ப்பு உருவாகும். குடும்ப அமைப்பே சீர்குலையும். ஒட்டு மொத்த சமுதாய நலனும் கேள்விக்குறியாகும்.

    அதனால்தான் இஸ்லாம், திருமண பந்தத்தை ஊக்குவித்து விபச்சாரத்தை தூண்டும் எல்லாவழிகளிலும் தடைக்கற்களை போட்டு வைத்துள்ளது. அவற்றையும் மீறி அதில் ஈடுபடுபவர்களை கடுமையான தண்டனைகளைக்காட்டி எச்சரிக்கிறது.

    – சலாஹுத்தீன்

  63. நல்லடியார்on 28 Jun 2005 at 11:01 pm 63

    நன்றி சலாஹுதீன்,

    விபச்சாரம் பற்றி எனக்குத் தெரிந்து இதைவிட எதார்த்தமாக சொல்ல முடியாது.

    இதுவல்லாமல் எனது பதிவில், மகளை கெடுத்து 3 குழந்தைகளைப் பெற்றவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டதை குறிப்பிட்டு, இது நியாயமான தண்டனையா? என கேட்டு, தனி மனிதனின் குற்றங்களை அவன் மதத்துடன் இணைத்து விமரிசிக்கக் கூடாது (எல்லாம் மதம் படுத்தும் பாடு என்று காஞ்சி பிலிம்ஸ், ஒரு சம்பவத்துடன் மதத்தை இணைந்து விமரிசித்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி) எனது கண்ணோட்டத்தை எழுதி இருந்தேன்.

    இதற்கு இடப்பட்ட பின்னூட்டங்களில், சமீபத்தில் இம்ரானா என்ற மருமகளை கற்பழித்த மாமனாருக்கு தேவ் பந்த் உலமாக்கள் அநீதியான தீர்ப்பு வழங்கியதையும் பற்றிய விவாதம் எழுந்தது. அதைப்பற்றியும் இங்கு விவாதித்தால் நன்று என நினைக்கிறேன்.

    குர்ஆனிலும் ஹதீஸிலும் மிகத்தெளிவாக திருமணம் செய்ய தடை செய்யப்பட்டவர்களைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் கற்பழிப்புக்கும் மிக மிக தெளிவான தண்டனை குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும், தேவ் பந்த் உலமாக்கள் எவ்வாறு அந்த பெண்ணைக் கெடுத்த மாமனாருக்குத் திருமணம் செய்து வைக்க தீர்ப்பு வழங்கினார்கள்?

    Dondu அவர்கள் கேட்பது போல், கற்பழித்தவனுக்கு ‘லட்டு’ போல பெண்ணையும் அல்லவா கொடுத்தீர்கள் என்பதற்கு இஸ்லாமிய வழியில் என்ன விளக்கம் சொல்வது?

    என்னைப் பொறுத்தவரை, இந்த தீர்ப்பு ரொம்பவும் துரதிஷ்டவசமானது. முதலில் கற்பழித்தவனை, அதற்கு இஸ்லாம் பரிந்துறைத்துள்ள தண்டனை வழங்க அனுமதித்திருந்தால், மேற்கொண்டு விவாதமே தேவை இல்லை.

    அநீதி இழைக்கப் பட்ட பெண்ணை, அநீதி இழைத்தவனுக்கே பரிசாக கொடுப்பது எனக்கு இஸ்லாமிய வழியாகப் படவில்லை.

    எனினும், சில உலமாக்களும், இஸ்லாமிய பெண்கள் அமைப்பும் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருவது ஆறுதலாக இருக்கிறது. இதையும் இஸ்லாத்தை கண்ணை மூடிக்கொண்டு விமரிச்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  64. அபூ முஹைon 29 Jun 2005 at 1:11 am 64

    நல்லடியார், ஸலாஹூத்தீன், விபச்சாரம் பற்றி இருவரும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள் இன்னும் கொஞ்சம் ஆழமாக எழுத வேண்டும். இது பற்றி நானும் என் கருத்தை பதிக்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)

    நல்லடியார்!
    இஸ்லாத்திற்கெதிரான தேவ்பந்த் உலமாக்களின் தீர்ப்பைப் புறக்கணியுங்கள், கற்பழித்தவனுக்கு மரண தண்டனையும் – திருமணம் செய்யத்தகாத உறவைத் (தெரிந்தே) திருமணம் செய்தால் அதற்கும் மரண தண்டனைதான். மகனின் மனைவி தந்தைக்கு மணமுடிக்க விலக்கப்பட்டவள். இன்ஷா அல்லாஹ் இது பற்றி விரிவாக அலசுவோம்.

    அன்புடன்,
    அபூ முஹை

  65. நல்லடியார்on 29 Jun 2005 at 1:32 am 65

    //இஸ்லாத்திற்கெதிரான தேவ்பந்த் உலமாக்களின் தீர்ப்பைப் புறக்கணியுங்கள்//

    மனிதர்களில் தவறிழைபவர்கள் உண்டு. இதில் உலமாக்கள் விதிவிலக்கல்ல. இதையே காரணமாக வைத்து, இஸ்லாமிய சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற கோஷங்களும் எழும்பியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    தேவ்பந்த் தீர்ப்பு ஒன்றும் திருத்த முடியாத தீர்ப்பாக எனக்குப் படவில்லை. எனினும் உங்கள் விளக்கத்தையும் அறிய ஆவல்!

    கற்பழித்தவனுக்கு இஸ்லாமிய தண்டனையை பரிந்துறைத்திருந்தாலும், அது விமரிசிக்கப் படும். ஆக மொத்தத்தில் உலக்கைக்கு ஒரு பக்கம் அடி, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி கதைதான் போங்க!

  66. Salahuddinon 29 Jun 2005 at 1:38 am 66

    //மருமகளை கற்பழித்த மாமனாருக்கு தேவ் பந்த் உலமாக்கள் அநீதியான தீர்ப்பு//

    தேவ்பந்த் உலமாக்கள் எதன் அடிப்படையில் இத்தகைய தீர்ப்பை வழங்கினார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராக உள்ளது.

    – சலாஹுத்தீன்

ஹஜ் வழிகாட்டி தமிழில் (பவர் பாய்ண்ட் ஃபைல்)

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஹஜ் வழிகாட்டி தமிழில் (பவர் பாய்ண்ட் ஃபைல்)

வீட்டிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ

Filed under: ISLAM — islamthalam @ 12.24

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ ولاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ بِاللهِ

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன், மேலும் அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

(நூல்கள்: அபூதாவூது 5095, திர்மிதி 3426)

اَللَّهُمَّ إِنِّي اَعُوْذُ بِكَ اَنْ اَضِلَّ اَوْ اُضَلَّ اَوْ أَزِلَّ اَوْ أُزَلَّ اَوْ أَظْلِمَ اَوْ أُظْلَمَ اَوْ اَجْهَلَ اَوْ يُجْهَلَ عَلَيَّ

அல்லாஹும்ம இன்னி அஊது பிக அன் அளில்ல அவ் உளல்ல. அவ் அஜில்ல அவ் உஜல்ல. அவ் அழ்லிம அவ் உழ்லம. அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.

பொருள்: யா அல்லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது (பிறரால்) நான் வழி தவறச் செய்யப்படல், அல்லது நான் பிசகிவிடுதல் அல்லது (பிறரால்) நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத்து விடல் அல்லது (பிறரால்) நான் அநீதமிழைக்கப்பட்டு விடல், அல்லது நான் அறிவீனனாக ஆகிவிடல் அல்லது (பிறரால்) அறிவீனம் என்மீது ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

(நூல்: அபூதாவூது 5094)

வீட்டில் நுழையும் போது ஓதும் துஆ

Filed under: ISLAM — islamthalam @ 12.24

اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ ، بِسْمِ اللهِ وَلَجْنَا ، وَبِسْمِ اللهِ خَرَجْناَ ، وَعَلىَ رَبِّناَ تَوَكَّلْناَ،

(அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரல் மௌலஜி, வகைரல் மஃக்ரஜி, பிஸ்மில்லாஹி வலஜ்னா, வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா, வஅலா ரப்பினா தவக்கல்னா.)

பொருள்:

இறைவா! (இந்த வீட்டில்) நுழைவதின் நன்மையையும் புறப்படுவதின் நன்மையையும் உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம். நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

(நூல்: அபூதாவூத் 5096)

Older Posts »