இஸ்லாம்தளம்

பொன்மாலைப் பொழுது

அன்றொரு வியாழனின் இனிய மொன்மாலைப் பொழுது, மறுநாள் விடுமுறையாதலால், Holiday ஐ Holy day-யாக வரவேற்றுக் குதூகலத்துடன் தேனீரை ருசித்துக் கொண்டே தொலைக்காட்சியை ரசித்தவாறு கல்யாணம் பண்ணிய பிரம்மச்சாரிகள் (Bachlors) அறையில் அமர்ந்திருந்தோம். தொலைக்காட்சி சிறுவர்கள் நிகழ்ச்சியில் ஒரு ஒல்லிப்பிச்சான் மாணவன் வீரபாண்டி கட்டபொம்மனாக சூளுரைத்துச் சென்றான். அடுத்து ஏதோ ஒரு வித்யாலயா மாணவிகளின் பரத நாட்டியம் – தா.. தை.. தத்.. தா..

அந்நேரத்தில் A.R.ரஹ்மானின் சமீபத்திய மெட்டொன்றை கர்ணக்கடூரத்தில் சீட்டியடித்து பாடிக்கொண்டு, சகோதரன் அலிபாபா அதிரடியாக பிரவேசம் செய்யவே,  தொலைக்காட்சிப் பக்கம் பார்த்தவன், “ச்சே யாங் காக்கா இந்த சாமி பாட்டையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கியளுவோ!.. சேனலை மாத்துங்க!” -ன்னான்.

மாற்றினோம்.

ஆடைப் பஞ்சத்தில் இரண்டரை டஜன் பெண்மனிகள் “மே.. மாதம்… 98-ல்.. மேஜர் ஆனேனே..” என்ற தத்துவப்(?!) பாடலை பாடி பேஜார் பண்ணிக்கொண்டிருக்க, “ஆங்.. இது ஓகே!” என்று அனைவரும் ஏகோபித்த குரலில் ஏற்றனர்.

ஆக கலைக்கும் பிறமதக் கடவுளுக்கும் வித்தியாசம் தெரியாததாலா? அல்லது மற்ற மத ஆச்சாரம்தான் கூடாதது, தவிர ஆபாசம் தேவலாம் என்ற மனப்போக்கா?

இதைப் படிக்கும் வாசகரான உங்கள் கருத்து என்ன?

<!– tag script Begins

tag script end –>

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: