DTP இன் அவசியம் பற்றி எனது நண்பர் தமீம் அன்சாரி எழுதியதை இங்கு பார்க்கலாம்.
நண்பர் அபூபக்கரின் வேண்டுகோளுக்கிணங்க எனக்குத் தெரிந்த சில விஷயங்களை நான் இங்கே தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இன்றைய சூழலில் சிட்டியில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் DTP சென்டர்கள் கண்டிப்பாக இருக்கிறது. இன்னும் பல பேருக்கு அது பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு வியாபரத்தின் நுழைவாயிலும் இதுதான். இதனால் நமக்கு கிடைக்ககூடிய பயன்கள் பல, அ வைகளாவன …
1. லெட்டர் பேட் தயாரிப்பது.
2. விசிட்டிங் கார்ட் தயாரிப்பது.
3. பில்புக் தயாரிப்பது.
4. பிட் நோட்டிஸ் அடிப்பது.
5. பேனர்கள் தயாரிப்பது.
6. ரப்பர் ஸ்டாம்ப் டிசைன் செய்வது,
7. போட்டோக்களில் மாற்றங்கள் செய்வது.
என அடுக்கிக்கொண்டே போகலாம். இதனை முறையாக கற்றுக்கொண்டால் இந்த துறையில் சிறந்தவராக ஆக முடியும். அதற்கு தங்களிடத்தில் முழுமையான ஆர்வமும் அதற்குரிய முயற்சியும் இருந்தால் போதும். எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ளவும் நம்மிடத்தில் வெட்கம், பெருமை, பொறாமை , அலுப்பு ஆகியவைகள் இருக்க கூடாது என்பார்கள்.
நான் பார்த்த வரையில் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ள கடுமையான பயிற்சியிம் அவசியம். நாம் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டால் அதனை உடனே செய்து பார்க்க வேண்டும். பிறகு செய்யலாம் என்று நினைத்தால் அந்த ‘பிறகு’ எப்பொழுது என்றே தெரியாமல் போய்விடும்.
கணிப்பொறி துறையை பொறுத்த வரையில் பொதுவான ஒரு IDEA வும், ஆங்கில அறிவும் இருந்தால் போதுமானது. அதாவது தாங்களுக்கு என்ன தேவை என்பதை ஆங்கிலத்தில் மாற்றம் செய்து பார்த்தால் அது குறிப்பிட்ட மெனுவில் கிடைக்கும். அதை போல் இந்த டிடிபி துறையில் வேகமும், நுண்ணிய வேகமும் இருக்க வேண்டும். இதை பெற வேண்டுமானல் பயற்சி அவசியம்.
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன வென்றால் நமக்கு தேவையான option எதில் இருக்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்பதுதான். அதைத்தான் நான் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
DTP – DESK TOP PUBLISHING:
DTP என்றால் என்ன? அதன் கோர்வைகள் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? அதை எங்கு/எப்படி பயன்படுத்துவது ? என நாம் அடுத்த கட்டுரையில் காண்போம்….
Thanks : Mr. Thameem From Saudi..
மறுமொழியொன்றை இடுங்கள்