இஸ்லாம்தளம்

செப்ரெம்பர்1, 2009

பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1) பிறையைக் கண்டே நோன்பு நோர்க்கவும் விடவும் செய்யுங்கள். மேகம் (பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி) 2) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால் (அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி) விளக்கம்: ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்திற்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு, அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாட்களை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. ”மாதம் முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் வரும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக