இஸ்லாம்தளம்

ஜூலை8, 2009

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1676. மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6114 அபூ ஹுரைரா (ரலி).

1677. நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம்பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்” என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், ‘நான் பைத்தியக்காரன் அல்லன்” என்றார். போய்விடும். ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’ (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம்

புஹாரி :6115 ஸூலைமான் பின் ஸூரத் (ரலி).

அல்லாஹ் அதிக ரோஷக்காரன்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1755. ”அல்லாஹ்வை விட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால்தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்கமானவை அனைத்திருக்கும் அல்லாஹ் தடைவிதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. எனவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் இப்னு முர்ரா (ரஹ்) கூறினார்: நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா (ரஹ்) அவர்களிடம் ‘இதை நீங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக்) கேட்டீர்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், ‘இதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிட்டார்களா?’ என்று கேட்க, அவர்கள், ‘ஆம்” என்று பதில் கூறினார்கள்.

புஹாரி :4634 அம்ர் பின் அபூவாயில் (ரலி).

1756. நிச்சயம் அல்லாஹ் ரோஷம் கொள்கிறான். அல்லாஹ்வின் ரோஷம் என்பது, அவன் தடைவிதித்துள்ள ஒன்றை (தடையை மீறி) இறை நம்பிக்கையாளர் செய்வதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5223 அபூ ஹுரைரா (ரலி).

1757. அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 5222 அஸ்மா (ரலி) .

<!– tag script Beginsகுறிச்சொற்கள்: , , , , ,

tag script end –>

அல்லாஹ்விடம் கேட்கும் துஆ.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1715. நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். ‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு” என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 6338 அனஸ் (ரலி).

1716. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாக” என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப் படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை.) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6339 அபூஹுரைரா (ரலி).

<!– tag script Beginsகுறிச்சொற்கள்: , , , , , , ,

tag script end –>

அல்லாஹ்வைச் சந்திக்க நாடுவோரை….

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1719. நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று கூறினார்கள்.

புஹாரி :6507 உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி).

1720. அல்லாஹ்வைத் தரிசிக்க விரும்புகிறவரை சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். எவர் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

புஹாரி :6508 அபூ மூஸா (ரலி).

<!– tag script Beginsகுறிச்சொற்கள்: , , , ,

tag script end –>

நல்லறங்கள் தீயவைகளை அழித்து விடும்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1758. ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றி விடும்” (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

புஹாரி :526 இப்னு மஸ்ஊது (ரலி).

1759. நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்து விட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்” என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகைதொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (தொழுதேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அல்லாஹ் ‘உம்முடைய பாவத்தை’ அல்லது உமக்குரிய தண்டனையை’ மன்னித்து விட்டான்” என்றார்கள். நேரம் வந்தபோது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள்

புஹாரி :6823 அனஸ் (ரலி).

<!– tag script Beginsகுறிச்சொற்கள்: , , , , , ,

tag script end –>