இஸ்லாம்தளம்

மே14, 2009

நோயாளியை நலம் விசாரித்தல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளிகளை நலம் விசாரிக்குமாறும், ஜனாஸாவை பின் தொடரவும், தும்மியவருக்கு பதிலளிக்கவும், சத்தியம் செய்தவருக்கு உபகாரம் செய்யவும், அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவி செய்யவும், அழைப்பை ஏற்று பதிலளிக்கவும், ஸலாமைப் பரப்புமாறும் நபி அவர்கள் எங்களை ஏவினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள், ”முஸ்லிமின் மீது ஒரு முஸ்லிமுக்குரிய கடமைகள் ஐந்து” என கூறியபோது நபி அவர்களிடம் அது என்ன? என்று கேட்கப்பட்டது. நபி அவர்கள் கூறினார்கள், ”அவரை நீ சந்தித்தால் ஸலாம் கூறு, அவர் உன்னை அழைத்தால் ஏற்றுக்கொள், உன்னிடம் அவர் நல்லுபதேசத்தை எதிர்பார்த்தால் அவருக்கு உபதேசம் செய், அவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று கூறினால் (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதில் கூறு, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரி, அவர் மரணித்தால் (ஜனாஸா) உடன் செல்.” (ஸஹீஹ¤ல் புகாரி)

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். நீ எனக்கு உணவளிக்கவில்லை” என்று அல்லாஹ் கூறுவான். மனிதன் எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கெப்படி நான் உணவளிக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், ”நீ அறிவாயா? எனது இன்ன அடியான் உன்னிடம் உணவளிக்கக் கேட்டான். நீ உணவளிக்கவில்லை. உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால் அதன் நன்மையை என்னிடத்தில் பெற்றிருப்பாய்” என்று கூறுவான்.

”ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை” என்று கூறுவான். அம்மனிதன் ”எனது இரட்சகனே! நீ அகிலத்தாரின் இரட்சகன். உனக்கு நான் எப்படி நீர் புகட்ட முடியும்? என்று கேட்பான். அல்லாஹ் ”எனது இன்ன அடியான் உன்னிடம் தண்ணீர் புகட்டுமாறு கேட்டான். உனக்குத் தெரியுமா? நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய்” என்று கூறுவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி அவர்கள் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிம், சகோதர முஸ்லிமை நலம் விசாரிக்க காலையில் செல்வாரேயானால் எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக மாலைவரை துஆச் செய்வார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்வார்கள். அவருக்கென சுவனத்தின் கனிகள் தயாராக வைக்கப்படும்.” (ஸ¤னனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்களுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல்நலம் குன்றியபோது நபி அவர்கள் அவனிடம் நலம் விசாரிக்கச் சென்று அவனது தலைமாட்டில் அமர்ந்தார்கள். பின்பு அச்சிறுவனிடம் ‘நீ இஸ்லாமை ஏற்றுக்கொள்’ என்று கூறினார்கள். அச்சிறுவன் அருகிலிருந்த தனது தந்தையைப் பார்த்தான். அவர் ”நீ அபுல் காஸிமுக்கு கட்டுப்படு!” என்று கூறினார். அச்சிறுவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். நபி அவர்கள், ”இச்சிறுவரை நரக நெருப்பிலிருந்து காத்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்” என்று கூறியவர்களாக வீட்டை விட்டு வெளியேறினார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் எவரையேனும் நோய் விசாரிக்கச் சென்றால் அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு ஏழுமுறை பின்வரும் துஆவைக் கூறுவார்கள்: ”உமக்கு ஷிஃபா அளிக்க வேண்டுமென மகத்தான அர்ஷின் இரட்சகனான, மகத்தான அல்லாஹ்விடம் நான் கேட்கிறேன்.” (அல் அதபுல் முஃப்ரத்)

அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றால் தமது வலது கரத்தால் அவரை தடவிக் கொடுத்து அல்லாஹ்¤ம்ம ரப்பன்னாஸ், அத்ஹ¢பில் பஃஸ, இஷ்ஃபி, அன்த்தஷ்ஷாஃபீ, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக, ஷிஃபாஅன் லாயுஃகாதிரு ஸகமா” என்று பிரார்த்திப்பார்கள். அதன் பொருள், ”யா அல்லாஹ்! மனிதர்களின் இரட்சகனே! நோயைப் நீக்குவாயாக! அறவே நோயில்லாமல் குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.” (ஸஹீஹ¤ல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்கள் ஒரு கிராமவாசியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி அவர்கள் நலம் விசாரிக்கச் சென்றால் ”கவலைப்பட வேண்டாம்! இறைவன் நாடினால் இது (உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்” என்று கூறுவார்கள். (ஸஹீஹ¤ல் புகாரி)

நபி அவர்கள் கூறினார்கள்: ”பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளிகளை நலம் விசாரியுங்கள்; கைதிகளை விடுவியுங்கள்.” (ஸஹீஹ¤ல் புகாரி)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

உபரியான வணக்கம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி அவர்கள்,  “இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்” என்றார்கள். உடனே அவர், “அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?” என்றார். அதற்கு அவர்கள், “நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை” என்றார்கள்

அடுத்து, “ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் “என்று நபி அவர்கள் கூறினார்கள். உடனே அவர், அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?” என்றார். அதற்கு அவர்கள், “நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி அவர்கள்  ஸகாத்  பற்றியும்  சொன்னார்கள்.  அதற்கு   அவர், “அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?” என்றார். அதற்கு அவர்கள் “நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை” என்றார்கள். உடனே அந்த  மனிதர், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட  கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்” என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி அவர்கள், “இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகின்றார்கள் :
நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி,” என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே  கணக்கின்  அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : தமீமுத் தாரி(ரலி) நூல்: தாரமீ

உங்களில் ஒருவர் தன் நற்செயலினால் (மட்டும்) சொர்க்கத்தில் புகமுடியாது’ என்றார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா? எனக் கேட்டனர். அதற்கு, ஆம் நானும் தான், என்றாலும் இறைவன் தன் அருளால் என்னை பாதுகாத்துக் கொண்டான். எனவே வணக்கத்தில் பேணுதலாகவும், இரவும் பகலும் நெருங்குங்கள். மேலும், இவற்றில் (வணக்கங்களில்) நடுநிலையை மேற்கொள்ளுங்கள்!. என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: முஸ்லிம், புகாரி

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

வித்ரு தொழுகை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

“நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவின் முற்பகுதியிலும் இரவின் நடுப்பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுதார்கள். ஸஹர் நேரம் வரை வித்ரு தொழுதுள்ளார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதி, நஸயீ

“இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

“உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்

“வித்ரு தொழுகை அவசியமானது. எவர் ஏழு ரக்அத்கள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஐந்து ரக்கத்துகள் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும். எவர் ஒரு ரக்அத் தொழ விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்யட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, அபூதாவூத்

“நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ

“மூன்று ரக்அத்கள் வித்ரு (தொழுதால்) மக்ரிபைப் போல் தொழாதீர்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்” அறிவிப்பவர்: அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: பைஹகீ

“நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள்” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். கடைசி ரக்அத்தில் மட்டுமே உட்கார்ந்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். ஆறாவது ரக்அத்திலும் ஏழாவது ரக்அத்திலும் மட்டுமே உட்காருவார்கள். ஏழாம் ரக்அத்தில் ஸலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூத், நஸயீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒன்பது ரக்அத்கள் வித்ரு தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து விட்டு ஒன்பதாம் ரக்அத்தில் சலாம் கொடுப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், நஸயீ

இரவில் நீங்கள் தொழும் தொழுகைகளில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸயீ

“உங்களில் எவரேனும் இரவில் (பின் நேரத்தில்) தொழ முடியாது என அஞ்சினால் வித்ரை தொழுது விட்டு உறங்குங்கள். இரவின் கடைசியில் எழலாம் என்று எவருக்கு நம்பிக்கையுள்ளதோ அவர் இரவின் கடைசியில் வித்ரைத் தொழட்டும்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சபித்தல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்

“அதிகம் சபிப்பது உண்மையானவனுக்கு அழகல்ல!” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

ஒரு அடியான், ஏதாவது பொருளை சபித்தால், அந்த சாபம் வானத்தை நோக்கி உயரும், அப்போது வானத்தின் வாசல்கள் அடைக்கப்படும். பிறகு அந்த சாபம் பூமியை நோக்கி இறங்கும். அப்போது பூமியின் வாசல்களும் அடைக்கப்படும். பிறகு அது வலது இடது புறங்களின் பக்கம் திரும்பும். அங்கும் வழி கிடைக்காததால், யார் மீது சபிக்கப்பட்டதோ அவரின் பக்கம் திரும்பிச் செல்லும். அவர் அதற்கு தகுதியற்றவராக இருந்தால், சொன்னவரிடமே திரும்பிச் சென்று விடும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) அபூதாவூத்

‘அல்லாஹ் சபிப்பானாக! அவனின் கோபம் உண்டாகட்டும்! என்றோ, நெருப்பைக் கொண்டோ: ஒருவருக்கொருவர் சபிக்க வேண்டாம்!” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமூரா (ரலி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

அதிகம் சபிப்பவர்கள் ‘மறுமை நாளில்” பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

‘ஒரு முஃமினை திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மென்மை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையையே நேசிக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மென்மையானவன். மென்மையையே நேசிக்கிறான். கடினத் தன்மைக்கும், வேறெந்த பண்புகளுக்கும் அளிக்காத நற்கூலியை மென்மைக்கு அளிக்கிறான். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “மென்மை ஒரு விஷயத்திலிருந்தால் அதை அலங்கரிக்கவே செய்யும். மென்மை எந்த விஷயத்தில் அகற்றப்பட்டுள்ளதோ அதைக் கோரப்படுத்திவிடும்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: ஒரு கிராமவாசி மஸ்ஜிது (நபவி)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார் அவரைத் தடுப்பதற்கு மக்கள் ஆவேசமடைந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்! அவரது சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். நீங்கள் இலகுபடுத்தவே அனுப்பப்பட்டீர்கள். சிரமப்படுத்த அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “நற்செய்தி கூறுங்கள்! வெறுப்படைய செய்யாதீர்கள், எளிதாக நடந்து கொள்ளுங்கள், சிரமப்படுத்தாதீர்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக ஜரீர் இப்னு அப்துல்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: “எவர் மென்மையை இழந்தாரோ அவர் நன்மையை இழந்தார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஆயிஷாவே! மென்மையாக நடந்துகொள். அல்லாஹ் ஒரு குடும்பத்தினருக்கு நன்மையை நாடினால் அவர்களுக்கு மென்மையின்பால் வழிகாட்டுகிறான்.” மற்றோர் அறிவிப்பில்: “ஒரு  குடும்பத்தினருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: “ஒரு சமுதாயத்தின் மீது அல்லாஹ் நன்மையை நாடினால் அவர்களிடம் மென்மையைப் புகுத்துகிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (முஸ்னதுல் பஸ்ஸார்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “நரகத்திற்கு ஹராமாக்கப்பட்ட ஒருவரைப் பற்றி அல்லது எவர் மீது நரகம் ஹராமாக்கப்படுமோ அவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மக்களை நெருங்கியிருக்கும் மென்மையான, இலகுவான, நளினமான ஒவ்வொருவர் மீதும் நரகம் ஹராமாக்கப்படும்.” (ஸுனனுத் திர்மிதி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் எல்லா விஷயங்களிலும் உபகாரத்தை விதித்திருக்கிறான். நீங்கள் கொலைத் தண்டனையை நிறைவேற்றினால் அழகிய முறையில் நிறைவேற்றுங்கள். பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுத்துக் கொள்ளுங்கள். உங்களில் ஒருவர் கத்தியை நன்கு தீட்டிக் கொள்ளட்டும். அதனால் பிராணிகளுக்கு (சிரமத்தை) இலேசாக்குங்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம்)


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த