இஸ்லாம்தளம்

மே10, 2009

பிரார்த்தனை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!

பின்னர் அவரை அடுத்து ஒரு ஆடவர் தொழுது முடித்தார். அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தார். நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது ஸலவாத்தைக் கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் அவரிடம், தொழுது முடித்தவரே! துஆச் செய்வீராக! (ஒரு சமயம் உம்முடைய துஆ அங்கீகரிக்கப்பட்டு) நீர் பதிலளிக்கப்படலாம் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: ஃபுளாலத் பின் உபைத் رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்: திர்மிதீ

அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

(உங்களுடைய பிரார்த்தனை அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதி கொண்டவர்களாக அல்லாஹ் அழைத்துப் பிரார்த்தனை புரியுங்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா  رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: திர்மிதீ

அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறு (யாரும், எதுவும்) இல்லை. நிச்சயமாக நான் எனக்கே அநீதி இழைத்துவிட்டேன். எனவே, என் பாவங்களை எனக்கு நீ பொருத்தருள்வாயாக! என்று ஒரு அடியான் கூறும்போது, அவனைப்பற்றி பெருமிதங்கொள்கிறான். என்னுடைய அடியான் நிச்சயமாக அவனுக்கு ஒரு இரட்சகன் இருக்கிறான், அவன்தான் பாவங்களை பொருத்தருள்வான். (பாவிகளுக்கு) தண்டனை வழங்கிடுவான் என்பதை அறிந்து கொண்டான் என்று (அல்லாஹ் வாகிய) அவன் கூறுகிறான். அறிவிப்பாளர்: அலீ பின் அபீதாலிப் رَضِيَ اللَّهُ عَنْهُ, நூல்:ஹாகிம்

உங்களில் ஒருவர் பிரார்த்தனைச் செய்யும்போது கேட்பதை உறுதியாகக் கேட்கட்டும். யாஅல்லாஹ்! நீ நாடினால் கொடு என திண்ணமாக அவர் சொல்லவேண்டாம். ஏனெனில், அவனை நிர்ப்பந்திக்கச் செய்பவர் யாரும் இல்லை என அல்லாஹ்வின்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரீ, முஸ்லிம்

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள், பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். என்னை அழையுங்கள். நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். (அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:அபூதாவூத், திர்மிதி)

நிச்சயமாக உங்கள் இறைவன் நித்திய ஜீவன். கொடையாளன். அவனுடைய அடிமைகளில் யாரேனும் அவனிடம் (எதையேனும் கேட்டு) கையேந்திவிட்டால் அதனை வெறுங்கையாக திருப்பிவிட அவன் வெட்கப் படுகிறான். (அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாாிஸி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அபூதாவூத், திர்மிதி)

ஒரு முஸ்லிம், பாவச்செயல் மற்றும் இரத்த பந்த உறவுகளை முறிக்காத எந்தப் பிரார்த்தனையை இறைவனிடம் கேட்டாலும் அதற்கு இறைவன் (மூன்றில்) ஏதேனும் ஒரு விதத்தில் பதில் அளிக்கிறான்.1) அவன் கேட்டதை கொடுத்து விடுகிறான். 2) மறுமைக்காக அதன் நன்மையை சேர்த்து வைக்கிறான். 3) பிரார்த்தனையின் அளவு அவனுக்கு ஏற்படும் தீங்கை போக்கிவிடுகிறான்.

என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது ஒரு நபித்தோழர், அல்லாஹ்வின் தூதர்صلى الله عليه وسلم அவர்களே! நாங்கள் அதிகமாக பிரார்த்தனை செய்யப் போகிறோம் என்றார்கள். அதற்கு நபிصلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ்வும் மிக அதிகமாக்குவான் என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஹாகிம்)

இம்மண்ணுலகில் இருக்கும் எவரும் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அல்லாஹ் அதை கொடுக்காமல் இருப்பதில்லை. ஆனால் அவர் பாவமானவற்றையும் உறவினரை பகைப்பதையும் பிரார்த்திக்காதிருக்க வேண்டும். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஹாகிம்)

உங்களுடைய உயிருக்கோ, பிள்ளைகளுக்கோ, பொருள்களுக்கோ பாதகமாக நீங்கள் பிரார்த்தித்துவிடாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் நேரமாக அது இருப்பின் உங்களுக்கே எதிரான அந்தப் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். (அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் : முஸ்லிம்)

உங்களில் எவரேனும் பிரார்த்தனை செய்தால் அதனை வலியுறுத்திக் கேட்கட்டும். நீ விரும்பினால் தா! என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனெனில் அவனை நிர்ப்பந்தம் செய்வோர் எவருமில்லை. (அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல் : புகாரீ)

நான் என்னுடைய இரட்சகனிடம் பிரார்த்தனை செய்தேன், ஆனால் அவன் அதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறி அவசரப்படாதவரை உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். (அறிவிப்பவர் : அபூஹரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரீ, முஸ்லிம்)


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அண்டை வீட்டார்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம் பெண்களே! அண்டை வீட்டாருக்கு கொடுக்கும் பொருள் அற்பமாக இருப்பதாக (கொடுக்காமலிருக்க) வேண்டாம். சிறிதளவு இறைச்சி ஒட்டிக் கொண்டிருக்கும் எலும்புத் துண்டாக இருப்பினும் சரியே! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அண்டை வீட்டுக் காரர் அவரது எல்லையில் ஒரு மரக்குச்சி நடுவதை ஆட்சேபிக்க வேண்டாம் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடியவர் தம் அண்டை வீட்டாரைத் தொல்லை படுத்த வேண்டாம் என்று என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவ்விருவரில் யாருக்கு (முதலில்) அன்பளிப்புக் கொடுக்கவேண்டும் என்று கேட்டேன், அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் எந்த வீட்டின் வாசல் உனக்கு மிக அருகில் உள்ளதோ அந்த வீட்டாருக்கு என்று விடையளித்தார்கள் . ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி

அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு அண்டை வீட்டார் பற்றி ஜப்ரீல்(அலை) என்னிடம் வலியுருத்திக்கொண்டே இருந்தனர். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி), இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

அபூதர்! நீ குழம்பு சமைத்தால் (அது குறைவாக இருந்தால்) அதில் தண்னீரை அதிகப்படுத்தி உண் அண்டை வீட்டாரையும் கவனித்துக் கொள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூதர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். முஸ்லிம்

எவரது தொந்தரவிலிருந்து அண்டை வீட்டார் அச்சமற்று இருக்க முடியவில்லையோ அவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக ஈமான் கொண்டவராக மட்டார். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள். புஹாரி, முஸ்லிம்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஜமாஅத் தொழுகை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூச் செய்கிறார். பின் தொழுகையைத் தவிர வேறெந்த நோக்கமுமின்றி மஸ்ஜிதுக்குச் செல்கிறார். அப்போது அவர் எடுத்து வைக்கும் எவ்வொரு அடிக்கும் அவரது அந்தஸ்து (தரஜா) என்று உயர்த்தப்படுகிறது. ஒரு பாவம் அழிக்கப்படுகிறது. அவர் தொழ ஆரம்பித்தால் மலக்குகள், “இறைவனே! இவர் மீது அருள் புரிவாயாக! இவருக்கு மன்னிப்பளிப் பாயாக!” என்று துஆச் செய்கிறார்கள். இது அவர் உளூவுடன் இருக்கும் வரையிலாகும். அவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் காலமெல்லாம் தொழுகையிலேயே இருப்பவராவார். (ஸஹீஹுல் புகாரி)

“எவர் அதிகாலையில் அல்லது மாலையில் மஸ்ஜிதுக்குச் சென்று வருவாரோ அவர் சென்று, திரும்பும் காலமெல்லாம் அல்லாஹ் சுவனத்தில் வீட்டைக் கட்டுகிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இதனால்தான் அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் ஜமாஅத்துடன் தொழுவதில் பேராசை கொண்டிருந்தார்கள். இதுபற்றி அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: “எவருக்கு கியாமத் நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துமோ அவர் தொழுகைகளை அதற்காக பாங்கு சொல்லப்படும் இடங்களில் பேணிக்கொள்ளட்டும். அல்லாஹ் உங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். தொழுகைகள் அந்த நேரிய வழிமுறையில் உள்ளதாகும்.” பின் தங்கியவன் (முனாபிக்) தனது இல்லத்தில் தொழுவது போன்று நீங்கள் உங்களது வீடுகளில் தொழுதால் உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டீர்கள். உங்களது நபியின் வழிமுறையை விட்டுவிட்டால் நீங்கள் வழிதவறி விடுவீர்கள். வெளிப்படையான முனாபிக் (நயவஞ்சகர்)தாம் ஜமாஅத் தொழுகையிலிருந்து பின்தங்கிவிடுவார் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம். அதனால் நடக்க சக்தியற்ற மனிதர், இருவர் துணைகொண்டு அழைத்து வரப்பட்டு தொழுகையின் அணிவகுப்பில் நிறுத்தப்படுவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

உபை இப்னு கஅப் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், “நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே!” என்று கூறப்பட்டபோது அவர் கூறினார்: “நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் எவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்” என்றார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், “(உமக்கு நீர் விரும்பும்) அது அனைத்தையும் என்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக!” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் அவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார். (ஸஹீஹுல் புகாரி)

உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: “இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். பஜ்ருத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நயவஞ்சகர்களுக்கு பஜ்ரு மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டின் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத்தொழுவதைவிட 27 மடங்குமேலானதாகும்.” (ஸஹீஹுல்புகாரி)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

இரத்த பந்தம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அபூ அய்யூப் அன்சாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தினுள் நுழையச் செய்யும் ஒர் அமலை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், “”நீர் அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காதிருப்பது, தொழுகையை நிலை நாட்டுவது, ஜகாத்தை கொடுத்து வருவது மற்றும் இரத்த பந்துக்களோடு இணைந்திருப்பது” என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “”எவர் தன்னுடைய இரணம் விசாலமாக்கப்பட வேண்டுமெனவும், ஆயுள் நீளமாக்கப்பட வேண்டுமெனவும் விரும்புகிறாரோ அவர் தனது இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழட்டும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் கூறுகிறார்கள்: “”தனது இரட்சகனை அஞ்சி, இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்பவருடைய ஆயுள் நீளமாக்கப்படும், செல்வங்கள் பெருகும், அவரை அவரது குடும்பத்தினர் நேசிப்பார்கள்.” (அல் அதபுல் முஃப்ரத்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “ஒரு கூட்டத்தில் உறவுகளைத் துண்டித்து வாழ்பவன் இருந்தால் அந்தச் சமுதாயத்தினர் மீது அல்லாஹ்வின் அருள் இறங்காது.” (ஷு”ஃ புல் ஈமான் அல் பைஹகீ)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “”மறு உலகில் அல்லாஹ் தண்டிப்பதுடன் இவ்வுலகிலும் தண்டனை தருவதற்கு மிகத் தகுதியான குற்றம் உறவுகளைத் துண்டிப்பதை விடவும், அக்கிரமம் செய்வதை விடவும் வேறொன்றுமில்லை.” (ஸுனன் அபூதாவூத், ஸுனனுத் திர்மிதி, முஸ்னத் அஹ்மத்)

அல்லாஹ் அருளியதாக நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “”நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (இரத்த பந்தத்தை)ப் படைத்தேன். அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன். யார் அதைச் சேர்த்துக் கொள்கிறார்களோ நானும் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறேன். எவர் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன்.” (ஸுனன் அபூதாவூத்)

ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?” என்று கேட்டார். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: “உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஆம்ரு இப்னு ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் அறிவிப்பதாவது: “”இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்” என நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறினார்: “”அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்” என்று கூறினார். அதற்கு நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: “”நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்” என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஜகாத்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

624 நபி(ஸல்) அவர்கள் தம்மை யமன் நாட்டிற்கு அனுப்பியபோது ”ஒவ்வொரு முப்பது மாடுகளுக்கும் ஜகாத்தாக ஒரு வருடக் காளை அல்லது பசு வாங்க வேண்டும். வயது வந்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு தீனார் ஜகாத்தாக வாங்க வேண்டும் அல்லது அதன் விலை மதிப்புள்ள துணி வாங்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் தமக்குக் கட்டளையிட்டார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா

இங்கு அஹ்மதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. திர்மிதீயில் இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மவ்ஸூல் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

625 ”முஸ்லிம்களிடமிருந்து அவர்களுடைய தண்ணீருக்கும் ஜகாத் வாங்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம்முடைய தந்தையிடமிருந்தும் அவர் தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அஹ்மத்

”அவர்களுடைய ஜகாத்தை அவர்களுடைய வீடுகளிலிருந்து பெற வேண்டும்” என்று அபூதாவூதில் உள்ளது.

626 ”எந்த ஒரு முஸ்லிம் மீதும் அவன் (சவாரிக்காக) வைத்திருக்கும் குதிரை மற்றும் அவனுடைய அடிமைக்காக ஜகாத் செலுத்துவது கடமையல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

”அடிமையின் மீது ஸதக்கத்துல் ஃபித்ரைத் தவிர்த்து எந்த ஜகாத்தும் கடமை இல்லை” என்றும் முஸ்லிமில் பதிவாகியள்ளது.

627 ”காடுகளில் மேய்ந்து கொள்ளும் ஒட்டகங்களில் ஒவ்வொரு நாற்பதிற்கும் இரண்டு வருடங்கள் பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம் ஐகாத் ஆகும். இதைக் கணக்கிட்டு (ஜகாத் கொடுக்காதிருக்க) அவர்கள் அவற்றைப் பிரித்துக் கொள்ளக் கூடாது. எவர் ஜகாத்தை இறைவனிடம் நற்கூலியை எதிர்பார்த்து கொடுக்கின்றாரோ, அவர் அதற்கான கூலியைப் பெற்றுக் கொள்வார். எவர் ஜகாத் கொடுக்கவில்லையோ, அவரிடமிருந்து நாம் அதைக் கண்டிப்பாக வாங்குவோம். அவருடைய சொத்தின் ஒரு பகுதி நம் இறைவனால் வலியுறுத்தப்பட்ட விஷயங்களில் ஒன்றாகும். அதில் இருந்து எதுவுமே முஹம்மதின் குடும்பத்தாருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, பஹஜ் இப்னு ஹகீம் தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ

நஸாயீ மற்றும் ஹாகிம்மில் ஸஹீஹ் எனும் தரத்திலும், ஷாஃபிஈயில் முஅல்லக் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

628 ”உன்னிடம் இருநூறு திர்ஹம் இருந்து, அவற்றின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால், அவற்றிலிருந்து ஐந்து திர்ஹம் ஜகாத்(கடமை) ஆகும். உன்னிடம் இருபது தீனார்கள் வரும் வரை நீ ஜகாத் கொடுக்க வேண்டியது இல்லை. இருபது தீனார்கள் மட்டும் இருந்து, அவற்றின் மீது வருடம் ஒன்று கழிந்து விட்டால், அரை தீனார் அவற்றிலிருந்து ஜகாத் ஆகும். அதற்கு மேல் எவ்வளவு அதிகமானலும் அதைக் கணக்கிட்டு ஜகாத் கொடுப்பது கடமையாகும். வருடம் ஒன்று கழியாத எந்த ஒரு சொத்தின் மீதும் ஜகாத் கடமை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மர்ஃபூ எனும் தரத்தைப் பெற்றுள்ளதா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

629 ”ஒருவர் ஒரு சொத்தைப் பெற்ற பின்பு அதன் மீது வருடம் ஒன்று கழியாமல் ஜகாத் இல்லை” என்று திர்மிதீயில் இடம் பெற்றுள்ளது.

இது மவ்கூஃப் எனும் தரத்தில் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

630 ”வேலை வாங்கப்படும் காளை மாடுகளில் மீது ஜகாத் கடமை இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அலீ(ரலி) அறிவிக்கிறார். அப+தாசீத், தாரகுத்னீ

இது மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

631 ”அநாதையுடைய சொத்துக்கு எவர் பொறுப்பேற்றுள்ளாரோ அவர் அதை வியாபாரம் (தொழில்) செய்து பெருக்கிக் கொள்ளட்டும். ஜகாத் அதை விழுங்கும் அளவிற்கு விட்டுவிட வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) வாயிலாக அறிவிக்கிறார். திர்மிதீ, தாரகுத்னி

632 மக்கள் ஜகாத்தை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து கொடுக்கும் போது ”யா அல்லாஹ்! இவர்களுக்கு கருணை செய்வாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள் என, அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

633 அப்பாஸ்(ரலி) அவர்கள் தம்முடைய ஜகாத்தை அதன் நேரம் வரும் முன்பே செலுத்துவது சம்பந்தமாக கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு அவ்வாறு செய்ய அனுமதி வழங்கினார்கள் என்று அலி(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ, ஹாகீம்

634 ”இருநூறு திர்ஹத்திற்கும் குறைவாக வெள்ளி இருப்பின் அதன் மீது ஜகாத் இல்லை. ஒட்டகங்கள் ஐந்திற்கும் குறைவாக இருப்பின், அவற்றின் மீதும் ஜகாத் இல்லை. ஐந்து வஸ்க்கிற்குக் குறைவாக உள்ள பேரிச்சம் பழத்தின் மீதும் ஜகாத் இல்லை. என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

635 முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ”ஐந்து வஸக் அளவிற்கும் குறைவாக உள்ள பேரிச்சம்பழம் மற்றும் தானியங்களுக்கு ஜகாத் இல்லை” என்று அபூசயீத்(ரலி) அவர்கள் அறிவித்ததாக புகாரி முஸ்லிம் உள்ளது.

636 ”மழைத்தண்ணீர், ஊற்றுத் தண்ணீர் ஆகியவற்றால் பாசனம் செய்யப்படும் நிலம் அல்லது ஈரத் தன்மையுள்ள நிலத்தின் மூலம் செய்யப்படும் வேளாண்மையில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் கடமையாகும். தண்ணீர் இறைத்துப் பாசனம் செய்யப்படும் நிலத்திலிருந்து வரும் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கு ஜகாத் (கடமை) ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் தம் தந்தை இப்னு உமர்(ரலி) வாயிலாக அறிவிக்கிறார். புகாரி

தானாக விளையும் வேளாண்மைக்குப் பத்தில் ஒரு பங்கும், சால்(பை) அல்லது கால்நடைகள் மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படும் நிலத்தின் வேளாண்மையில் இருபதில் ஒரு பங்கும் ஜகாத் கடமை என்று அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

637 ”தானியங்களில் வாற்கோதுமை, கோதுமை, திராட்சை, பேரிச்சை ஆகியவற்றைத் தவிர்த்து வேறு எந்த வேளாண்மைக்கும் ஜகாத் வாங்க வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமூஸா அல் அஸ்அரி(ரலி) மற்றும் முஆத்(ரலி) அறிவிக்கின்றனர். தப்ரானி, ஹாம்கி

638 வெள்ளரிக்காய், தர்பூசணிப்பழம், மாதுளை மற்றும் ‘கஸப்’ எனும் ஒரு வகைப் புல் ஆகியவற்றிற்கு (ஜகாத் இல்லை) என நபி(ஸல்) அவர்கள் சலுகை அளித்ததாக முஆத்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

639 ”நீங்கள் (ஜகாத்தை) மதீப்பிடு செய்ய (வசூலிக்கச்) சென்றால், மூன்றில் ஒரு பகுதியை விட்டு, விட்டு (மற்றவற்றில் ஜகாத்தைப்) பெற்றுக் கொள்ளுங்கள். மூன்றில் ஒரு பங்கை விடாவிட்டால் நான்கில் ஒரு பங்கை(யாவது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அப+ தாசீத், நஸாயீ மற்றும் திர்மிதீ

இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

640 பேரிச்சம் பழத்தில் ஜகாத் மதிப்பீடு செய்து (வசூலிப்பது) போன்றே திராட்சையிலும் ஜகாத் மதிப்பீடு செய்து (வசூலித்துக்) கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அதற்குரிய ஜகாத் காய்ந்த திராட்சை (ம்ஸ்மிஸ்) ஆக வாங்கப்பட்டது என அத்தாப் இப்னு அத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாசீத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது முன்கதிஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

641 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார். அவருடன் கையில் அவருடைய மகள் இருந்தாள். அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன. நபி(ஸல்) அந்தப் பெண்மணியிடம் ”நீ இதற்கு ஜகாத் கொடுத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ”இல்லை” என்றார். ”மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்டவுடன்) அவர் அவற்றைக் கழற்றிக் கொடுத்து விட்டார் என்று அமீர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அபூதாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீ

இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

642 தங்கத்தால் செய்யப்பட்டிருந்த ஒருவகை நகையை நான் அணிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ”இதுவும் (சேகரித்துப் பதுக்கி வைக்கும்) புதையல் ஆகுமா?” என்று அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, ”அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், தாரகுத்னீ. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

643 நாங்கள் வியாபாரத்திற்காகத் தயாரிக்கும் பொருட்களிலிருந்து ஜகாத்தை எடுத்துச் கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என, ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

644 ”புதையலில் (மற்றும் சுரங்கப் பொருட்களில்) ஐந்தில் ஒரு பகுதி ஜகாத் ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

645 பாழடைந்த ஓர் இடத்திலிருந்து ஒருவருக்குக் கிடைத்த புதையலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுகையில், ”அதை நீ மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து பெற்றிருந்தால் (யாருடையது எனக் கேட்டு) அதை அறிவிப்புச் செய்! மக்கள் வசிக்காத பகுதியிலிருந்து அதைப் பெற்றிருந்தால் அதன் ஐந்திலொரு பங்கு ஜகாத் ஆகும்” என்று கூறினார்கள் என, அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இப்னு மாஜா. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

646 ‘கபலிய்யா’ எனும் சுரங்கத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் ஜகாத் வாங்கினார்கள் என பிலால் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்