இஸ்லாம்தளம்

ஏப்ரல்18, 2009

குர்ஆனும் விஞ்ஞானமும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24


அழியும் சூரியன்

சூரியனின் ஒளி அதன் மேற்பரப்பில் நிகழும் ஒருவித இரசாயன் செயல் முறையினால்தான் (Chemical Process)  ஏற்படுகின்றது. இந்த இரசாயன செயல்முறை கடந்த 500 கோடி வருடங்களாக தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த இரசாயன செயல் முறை முடிவுக்கு வந்துவிடும். அப்பொழுது சூரியன் தன் ஒளியை  முழுமையாக இழந்து அணைந்து விடும். இதனால் புவியில் உயிரினங்கள் யாவும் அழிவை சந்திக்கும். சூரியன் வாழ்வு நிரந்தரமானது அல்ல என்பதை பின் வரும் வசனம் கூறுகிறது.

وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَّهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையறைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது;  இது யாவற்றையும் மிகைத்தோனும், நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். 36:38 سورة يس

இங்கு கையாளப்பட்டுள்ள  ‘முஸ்தகர்’ என்ற சொல்லுக்கு பொருள் தீர்மானிக்கப்பட்டுவிட்ட ஓர் இடத்தை அல்லது காலத்தைக் குறிப்பதாகும். எனவே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்து செல்லும் சூரியனானது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் சென்றிடும். அதன் பின்னர் அது ஒரு முடிவுக்கு வந்து விடும் அல்லது அணைந்துவிடும்.

இக்கருத்தினை இன்னும் தெளிவாக எடுத்துரைக்கும் வசனங்கள். 13:2, 35:13, 39:5

அனைத்துப் பொருட்களிலும் இணைகள்

وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். 51:49 سورة الذاريات

இந்த இறைவசனம் மனிதர்கள், மிருகங்கள் செடிகொடிகள் பழவகைகள் என்ற இனங்களையும் கடந்து மற்றவற்றிலும் பாலினம் இருக்கிறது என்பதை கூறுகிறது. நாம் அன்றாடம் பயன் படுத்தும் மின்சாரம் கூட Negative, Positive  என அமைந்திருப்பதை காணலாம்.

سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். 36:36 سورة يس

இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் இணைகள் உள்ளடங்கி நிற்கின்றன என்பதை இறைமறை கூறுகின்றது. ஆனால் சில உண்மைகளை இப்பொழுது அறியாமல் இருக்கலாம். எதிர் வரும் காலங்களில் அவன் அவற்றைக் கண்டு பிடித்து உலகிற்கு அறிவிக்கக்கூடும்.

முதுகந்தண்டிற்கும், விலா எலும்பிற்கும் இடையே

فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ  خُلِقَ مِن مَّاء دَافِقٍ  يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. 86:5-7 سورة الطارق

கரு வளர்ச்சியின் படிநிலையில் ஆண் மற்றும் பெண்ணுடைய உற்பத்தி உறுப்புகள்,  அதாவது ஆணிண் விதைப்பையும் (Testicles) பெண்ணின் கருவகமும் (Ovary) சிறுநீரகத்திற்கு (Kidney) அருகிலிருந்தே வளர்ச்சி அடையத் தொடங்குகின்றன. இச்சிறுநீரகம் முதுகந்தண்டிற்கும் 11வது, 12வது விலா எலும்புகளுக்குக் நடுவே அமைந்துள்ளது.

பின்னர் இந்த உறுப்புகள் கீழ்நோக்கி அமைகின்றன. பெண்ணின் கருமுட்டைப்பை இடுப்பருகில் அமைந்துள்ளது. ஆணின் விதைப்பை பிறப்பிற்கு முன்பிருந்தே தொடைக்கும் அடிவயிறுக்கும் இடையிலுள்ள (Groin) பாதை வழியே அண்ட கோசத்தை (Scrotum) நோக்கி கீழறங்கி விடுகிறது. ஆயினும் ஆணின் உற்பத்தி ஊறுப்புகள் அடிவயிறு பகுதியில் அமைந்துள்ள முக்கிய இரத்த நாளத்திலிருந்தே நரம்பு மண்டலத்தையும், இரத்த ஓட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றன. இந்த இரத்த நாளம் முதுகந்தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் நடுவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

கருவறையின் மூன்று இருட்திரைகள்

خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنْ الْأَنْعَامِ ثَمَانِيَةَ أَزْوَاجٍ يَخْلُقُكُمْ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ خَلْقًا مِن بَعْدِ خَلْقٍ فِي ظُلُمَاتٍ ثَلَاثٍ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ لَا إِلَهَ إِلَّا هُوَ فَأَنَّى تُصْرَفُونَ

سورة الزمر 39:6

அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காகக் கால் நடைகளிலிருந்து எட்டு (வகைகள்) ஜோடி, ஜோடியாகப் படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத்தவிர, வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுவீர்கள்? سورة الزمر 39:6

டாக்டர் கீத் மூர் அவர்களின் ஆய்வுப்படி திருக்குர்ஆன் குறிப்பிடும் மூன்று இருள் திரைகள் இவையே!

தாயின் அடிவயிறு (Abdominal wall)

கருப்பையின் சுவர் (Uterine wall)

குழந்தையை சுற்றி இருக்கும் சவ்வுப்படலம் (Amniotic membrane)

உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டிகள்

‘முக்தா’ படிதரத்தில் கரு உள்ளபோதே அதனை ஒரு கத்தியைக் கொண்டு வெட்டினால், அதன் உள்ளுறுப்பு இருகூறாக வெட்டப்பட்டு விடும். அப்பொழுது அக்கருவிற்குள் பெரும்பாலான உறுப்புகள் உருவாக்கப்பட்டதையும், அதே நேரத்தில் வேறு சில உறுப்புகள் உருவாக்கப்படாமலும் இருப்பதை கண்டு கொள்ளலாம்.

எனவே அக்கரு ஒரு முழுமையான படைப்பா அல்லது முழுமையடையாத படைப்பா என்ற கேள்வி எழுகின்றது. கரு உருவாக்கம் (Ebroyogenesis) பற்றிய படித்தரத்தை அதாவது உருவாக்கப்பட்டது உருவாக்கப்படாததும் எனும் நிலையை திருக்குர்ஆன் தரும் வர்ணனைத் தவிர சிறந்ததொரு வர்ணனை காண இயலாது இதனை பின் வரும் வசனத்தை பாருங்கள்.

يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ

மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்டுவது  பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக்கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்.) 22:5 سورة الحج

விஞ்ஞான ரீதியாகவே கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் உயிரணுக்களில் (Cells) சில வித்தியசாபடுத்தப்பட்டும் சில வித்தியாசப்படுத்த படாமலும் உள்ளதை பார்க்கிறோம்.

செவி,பார்வைப் புலன்கள்

வளர்ந்து வரும் கருவில் முதலில் உருவாவது செவிப்புலனேயாகும். 24வது வாரத்திற்கு பின்னர் கருக்குழந்தை (Foetus) ஒலிகளை கேட்கத் தொடங்குகிறது. இதனைப் பின் தொடர்ந்து பார்வைப்புலனும் 28வது வாரத்த்தில் கண்ணின் விழித்திரை (Retina) வெளிச்சத்தை உணரும் தன்மையையும் பெறுகின்றது. கருவில் உருவாகும் இப்புலணர்வை இறைமறை இப்படி எடுத்துறைக்கிறது.

وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்: (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும். 32:9 سورة السجدة

إِنَّا خَلَقْنَا الْإِنسَانَ مِن نُّطْفَةٍ أَمْشَاجٍ نَّبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக; அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அத்தஹர் 76:2

இந்த வசனங்களிலிருந்து பார்வைப் புலனுக்கு முன்பு செவிப்புலனை குறிப்பிடுவதை பார்க்கலாம். எனவே நவீன  கருவியல் கண்டுபிடிப்புகள் குர்ஆன் வர்ணனைகள் பொருந்திப் போவதை காணலாம்.

தோலில் அமைந்திருக்கும் வலி உள்வாங்கிகள் (Pain-receptors)

உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூலையில்தான் உள்ளது என்று எண்ணினர். ஆனால் அண்மைக்கால கண்டுபிடிப்புகள், வலி உள்வாங்கிகள் (Pain-receptors) தோலில் அமைந்திருப்பதால்தான் ஒரு மனிதன் வலியை உணர்கிறான் என்று நிரூபித்துள்ளன. இந்த (Pain-receptors) இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்திட இயலாது.

தீக்காயங்களால் துன்புறும் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர், அந்நோயாளியின் தீக்காயத்தின் அளவை கண்டறிய ஒரு குண்டூசியால் குத்திப் பார்க்கின்றனர். நோயாளி வலியை உணரும் பட்சத்தில் நோயாளி லேசான தீக்காயங்களோடு தப்பினார் என டாக்டர் மகிழ்ச்சி அடைகிறார். காரணம் தீக்காயங்களால் உள்வாங்கிகள் (Pain-receptors) பழுதாகாமல் நல்ல நிலையில் உள்ளது என்பதை எடுத்து காட்டுகின்றது. இதற்கு மாறாக நோயாளி குண்டூசியினால் வலியை உணராமல் இருந்தால் அந்த தீக்காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதோடு உள்வாங்கிகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது.

إِنَّ الَّذِينَ كَفَرُواْ بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُواْ الْعَذَابَ إِنَّ اللّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا

யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;  அவர்கள் தோல்கள் கருகிவிடும்  போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதெற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக்கொண்டே இருப்போம்- நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். 4: 56 سورةالنساء

தாய்லாந்தில் உள்ள (Chieng Mai University) பல்கலைகழகத்தில் உடர்கூறு துறையின் தலைவர் Prof. Tagatat Tejasen என்பவர் தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நீண்ட காலம் ஆய்வு மேற்கொண்டவர். 1400 ஆண்டுகளுக்கு முன் இந்த அறிவியல் உண்மை திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளதை அவரால் ஆரம்பத்தில் நம்பவே முடியவில்லை.  இந்த மிகத் துல்லியமான அறிவியல் பேருண்மை  திருக்குர்ஆனில் பொதிந்து கிடப்பதை கண்ட பேராசியரியர் தெஜாசன் ஆச்சரியப்பட்டார்.

இந்த இறைவசனம் அவர் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி சவூதியின் தலைநகர் ரியாதில் (Scientific Signs of Quran and Sunnah) எனும் தலைப்பில் நடபெற்ற எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் தெஜாசன் இஸ்லாத்தின் ஏகத்துவ கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதாக பகிரங்கமாக முழங்கினார்.

நன்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்த இங்கே கிளிக் செய்யவும்

1 பின்னூட்டம் »

  1. beatifu

    பின்னூட்டம் by arshad — மே7, 2011 @ 12.24


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: