இஸ்லாம்தளம்

மார்ச்30, 2009

இறந்தவர்களுக்காக…!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம் எவராவது இறந்து விட்டால் அவரது உறவினர்கள் அவருக்காக” பாத்திஹா ஓதுதல்” என்ற பெயரில் பெரிய சடங்கு செய்கின்றனர். இது திருமண வீடோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு மரணம் அடைந்தவர் வீட்டின் நிலை ருக்கும்.

அடக்கம் செய்து வந்த பிறகு இறந்த நாளிலிருந்து 3ம் நாள்,10ம் நாள், 40ம் நாள், அரை வருட பாத்திஹாக்கள், ஒரு வருட பாத்திஹாக்கள் என்று விஷேசம் நடைபெரும். சில ஊர்களில் 10,20,30 என்று நாட்கணக்கிலும், ஏன் சில ஊர்களில் தினமும் இரவு மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு 40 நாட்களுக்கும்  பாத்திஹாக்கள் ஓதி வருவர்.

இது உண்மையில் இஸ்லாம் அறிமுகப்படுத்திய நடை முறையா? என்றால்ல்லை ந்த பாத்திஹாக்கள் ஊருக்கு ஊர் வித்தியாசப்படுவதிலிருந்து து மார்க்கதில் ல்லாத ஒன்றும் ,பித்அத் என்றும் அறியலாம்.

ரசூல்(ஸல்) அவர்கள் இறந்தவர்களுக்கு இது போன்ற பாத்திஹாக்களை ஓதும்படி கற்றுத்தரவில்லை.றந்தவர்களுக்கு ஏதாவது நன்மை போய் சேரவேண்டுமென்று தான் மக்களில் பலர் பாத்திஹாக்களை ஓதி வருகின்றனர்.றந்தவர்களுக்கு என்ன செய்யலாமென்று னி ஹதீஸ் ஆதாரங்களைப் பார்ப்போம்.

துஆச் செய்தல்

மைய்யித்தை அடக்கி விட்டு அங்கே நின்ற நபி(ஸல்) அவர்கள் உங்களின் சகோதரருக்காக பாவமன்னிப்பு கேளுங்கள். அவருக்கு உறுதியைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். (இப்னு உமர்(ரழி) அபூதாவூத்,ஹாகிம்)

குடும்பத்தாரோ இறந்தவருக்கு தான் துஆக் கேட்காமல் கபுருக்கு அருகில் இமாம் பாத்திஹா ஒத மற்றவர் ஆமின் கூறும் நடைமுறையையே காணுகிறோம்.

அடுத்து இறந்தவருக்காக அவரது குழந்தைகள் துஆச் செய்யவேண்டும்.

ஒரு மனிதன் இறந்துவிட்டால் அனைத்தும் நின்றும் விடுகின்றன. நன்மையைத் தொடர்ந்து தரும்படியான இவன் செய்த தர்மம், பிறர் பயன்படும் கல்வி, இவனுக்காக துஆச் செய்யும் இவனது குழந்தை ஆகிய மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம், அஹ்மத்)

இந்த ஹதீஸில் பிள்ளைகள் துஆச் செய்ய வேண்டுமென்பதை அறிகிறோம் ஆனால், நடைமுறையோ கூலிக்கு ஆள் பிடித்து பாத்திஹா என்ற பெயரில் பத்தி, சாம்பிராணி, கறி, சோறு என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.

தர்மம் செய்தல்

எனது தாய் மரண வேளையில் இருந்தார்கள். அவர்கள் பேசியிருந்தால் தர்மம் செய்யும்படிச் சொல்லியிருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்களுக்காக நான் தர்மம் செய்தால் அவர்களுக்கு பலன் தருமா? என்று ஒருவர் கேட்டார். ஆம் என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தர்கள். (ஆயிஷா(ரழி) புகாரி, முஸ்லிம்)

எனது தந்தை சிறிது சொத்தை வஸிய்யத் எதுவும் செய்யாமல் விட்டு விட்டு இறந்துவிட்டர். அவருக்காக நான் அதை தர்மம் செய்தால் அவருக்கு (அல்லாஹ்) பகரமாக்குவானா? என்று ஒருவர் கேட்டார், அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள். அபூஹுரைரா (ரழி) முஸ்லிம், அஹ்மத்)

நோன்பு வைத்தல்

அல்லாஹ்வின் தூதரே! என் தாயாருக்கு ஒருமாத நோன்பு வைப்பது தம்மீது கடமையாயிருக்க இறந்துவிட்டனர். நான் அதை அவர்களுக்காக நிறைவேற்றலாமா? என்று ஒருவர் கேட்டார். உனது தயாருக்கு கடன் ருந்தால் அதை அவர்களுக்காக நிறைவேற்றத் தானே செய்வாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானல் நிறைவேற்றப்பட அதிக தகுதி வாய்ந்தது அல்லாஹ்வின் கடன்(நோன்பு) ஆகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புஹாரி, முஸ்லிம்)

ஹஜ் செய்தல்

என் தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார்கள், ஆனால் இறக்கும்வரை அதை நிறைவேற்றவில்லை. அவர்களுக்காக நான் ஹஜ் செய்யலாமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஜுஹைனா என்ற கிளையைச் சேர்ந்த ஒரு பெண் கேட்டார் அதற்கு என்று நபி(ஸல்) அவர்கள், நீ அவர்களுக்காக ஹஜ்செய். எனவே ந்த(ஹஜ்) கடனையும் நிறைவேற்று. அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகக் தகுதி வாய்ந்தது என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி)புஹாரி)

ஒரு மூமின் இறந்து விட்டால் அவரது பிள்ளைகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருக்காக துஆச் செய்வது, அவருக்காக தர்மம் செய்வது, ஹஜ், நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றலாம் என்பதை மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம். அல்லாஹ் நம் அனைவரையும் நபி வழியில் நடக்க துணைபுரிவானாக ஆமின்!

இஸ்லாத்தின் பெயரால் தீர்ப்புகள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்னும் அவர்கள் தங்கள், இறைவனுடைய வசனங்களைக்கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின்மீது விழமாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)

அல்லாஹ்வின்  இந்த திருவசனம் சிந்தனையின் மேன்மையை  நமக்கு தெளிவு  படுத்துகின்றது. திருமறைக் குர்ஆனையே ஆழ்ந்த கவனத்துடன் கவணிக்கவேண்டும்  என்னும்போது  மற்றவர்களின் சிந்தனைகள், அவர்களின் சன்மார்க்கத் தீர்ப்புகள் எந்த அளவு பரிசீலிக்கப்படவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. யார் எதைச் சொன்னாலும், அதனை மார்க்கம் என்று எண்ணிக் கொள்கின்ற மனநிலை நம்மவரிடம் காணப்படுவதால் இஸ்லாத்தில் இல்லாத பல சட்டங்கள் இஸ்லாத்தின் பெயரால் உலா வரத்துவங்கிவிட்டன.

மக்களை வழி நடத்திச் செல்லவேண்டிய உலமாக்களில் பெரும் பகுதியினர் சரியான வழி காட்டத் தவறியதோடு தவறான வழியையும் இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்தினர். இன்னும் அவ்வாறு அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

ஒரு இஸ்லாமியனுக்கு ஏற்படுகின்ற நியாயமான சந்தேகங்களுக்கு அவன் மார்க்க மேதைகள் என்று கருதப்படுவர்களிடம் விளக்கம் கேட்கும்போது கூடும் என்றோகூடாது என்றோ ஒரு வார்த்தையில் பதில் தருகின்ற நிலைமையைத்தான் நாம் காணமுடிகின்றது. பெரும்பாலான அரபிக்கல்லூரிகளும், இஸ்லாமிய பத்திரிகைகளும், தனிப்பட்ட ஆலிம்களும் இந்த நிலையைத்தான் மேற்கொண்டுள்ளனர். குர்ஆனின் எந்த வசனத்தின் அடிப்படையில், எந்த ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறு ஒரு முடிவை எடுத்தனர் என்று குறிப்பிடுவதில்லை. குறிப்பிடுவது தேவை இல்லை என்றும் கருதுகின்றனர். கூடும் அல்லது கூடாது என்று முடிவு எடுப்பது தங்கள் அதிகாரத்தில் உள்ளது என்று கருதுகின்றனரோ என்னவோ?

இன்னும் சில அறிஞர்கள் தங்கள் தீர்ப்புக்கு ஆதாரமாக ஏதோ கடந்த காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலைத் குறிப்பிட்டு அதில் இப்படி உள்ளது என்று தீர்ப்பு  வழங்குகின்றர். சரியான ஆதாரங்களுடன் தீர்ப்பை வழங்கி விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். எந்த நூலிலிருந்து இந்த தீர்ப்பை பெற்றனரோ, அந்த நூலாசிரியர், குர்ஆனின் எந்த வசனத்தை, எந்த ஹதீஸை ஆதாராமாகக் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கின்றாரோ அதனை மக்கள் முன்னே வைப்பதில்லை.

ஒரு அரபிக் கல்லூரி கூடும் என்று கூறியதை இன்னொரு அரபிக் கல்லூரி கூடாது என்று தீர்ப்புத்தருவதும், ஒரு பத்திரிகை கூடாது என்றதை இன்னொரு பத்திரிகை கூடும் என்று கூறுவதும், இரு சாராரும் இரு வேறு அரபிக் கிதாபுகளை ஆதாரம் காட்டுவதும், ஒன்றுமறியாப் பாமரன் குழம்பி போவதுதான் இதனால் கண்டபலன்.

பாமரமக்களும் இதுபற்றி பெரிதாக அக்கரை எடுத்துக்கொள்வதில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் இப்படிச் செய்யச் சொல்லி இருக்கின்றார்களா? என்று  கேட்பதில்லை. அப்படிக் கேட்கும் உரிமைக்கூட தனக்கு இருப்பதாக கருதுவதுமில்லை. மாறாக ஆலிம்கள் சொல்லி விட்டால் அதை ஏற்பதைத் தவிர வேறு வழியே தனக்கு இல்லை என்று கருதிக்கொள்கின்றனர்.

எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ,முஸ்லிம்)

உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன் அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்,இரண்டு எனது வழிமுறை. என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மாலிக் இப்னு அனஸ்(ரழி) முஅத்தா)

அவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை மாறாக சட்டமியற்றும் அதிகாரம் மார்க்க  அறிஞர்களிடம் உள்ளதாக கருதிகொள்கின்றனர். இந்த எண்ணத்தின் காரணமாகவே யூத கிறித்தவர்கள் தவறான வழியில் செல்லத் தலைப்பட்டனர். இதற்கு ஆதாரமாக பின் வரும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

அவர்கள் (யூத கிறித்தவர்கள்) தங்கள் மதகுருக்களையும், பாதிரிகளையும் கடவுள்களாக ஆக்கிவிட்டனர். (அல்குர்ஆன் 9:31) என்ற திரு வசனம் இறங்கியபோது, கிறித்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தின் இனைந்த “அதீ இப்னு ஹாதம் என்ற நபித் தோழர்” அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே (கடவுள்களாக  ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகின்றானே!) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களும் கருதினீர்கள் அல்லவா? அதுதான் அவர்களை கடவுள்களாகக் கருதியதற்கு நிகரானது என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.(அஹ்மத், திர்மிதீ)

இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற எவருக்கும் உரிமையில்லை. மார்க்க அறிஞர்கள்  சொல்லி விட்டார்கள்  என்பதற்காக  அதற்குரிய ஆதாரங்களை  அறிய முற்படாமல் பின்பற்றுவது மிகப்பெரிய குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்கும்.

அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:185) என்று கூறுவதற்கிணங்க, எளிமையான மார்க்கமாகிய இஸ்லாம் நமக்கு சிரமமாகிப் போனதும் இதனால் தான். பிறப்பிலிருந்து இறப்புவரை அத்தனை காரியங்களையும் நம்மவருக்கு சிரமமானதாக ஆக்கப்பட்டுவிட்டது. ஒரு சிலர் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்திய போலி சடங்குகளிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. நீங்களாக உங்கள் மீது சிரமத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வும் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடுவான். என்ற நபி மொழியும் இதற்கு போதிய சான்றாகும். (அனஸ் (ரழி) அபூதாவூத்) அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சாத்தான் வேதம் ஓதுகிறது

Filed under: ISLAM — islamthalam @ 12.24

தூய இஸ்லாம் இன்று பெரும்பான்மை முஸ்லிம்களால் இறைமறுப்புக்கு ஒப்பாகிவிட்டது. நபி வழியை குழிதோண்டிப் புதைத்துவிட்டு பிஅத்தை (மார்க்கத்தில் புதிதாக ஒன்றை) சுன்னத் என்ற பெயரில் அறங்கேற்றி விட்டார்கள். ஹராம் ஹலாலாகவும் சபிக்கப்பட்டவை பரகத்களாகவும் பரகத் தரக்கூடியவைகள் லஃனத் (சபிக்கப்பட்டவை)களாகவும்  முஸ்லிம்களால்  மாற்றப்பட்டு விட்ட்ன.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில், நபித் தோழர்கள், தாபியீன்கள் வாழ்ந்த பொற்காலத்தில் ருந்த அசல் மார்க்கம் இன்று காணப்படவில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வழிகேட்டில் வீழ்த்தும் செயல்களாக கருதப்பட்டவை இன்று நேர்வழி காட்டிகளாக கருதப்படுகின்றன. இந்த மாற்றம் ஏன் ஏற்பட்டது? எப்படி ஏற்பட்டது என்று ஆராயும்பொழுது திருமறை  இதற்கான பதிலை தருகின்றது.

“ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரிகளிலும் (மார்க்க போதகர்)  சந்நியாசிகளிலும் அனேகர் மக்களின் சொத்துகளைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும்  அல்லாஹ்வின்  பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்”  அல்குர்ஆன் 9:34

அன்று சீஸர், கிஸ்ரா போன்ற ரோம், பாரசீக பேரரசுகளிடம் “கராஜ்” வரி வசூழித்து வாழ்ந்தவர்கள்  நபிதோழர்கள்.ன்று நபிதோழர்களின் வாரிசுகளும், நபி மார்களின் வாரிசுகளும் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் பெரியார்களின் கபுரடியில் உண்டியலை வைத்து உல்லாசமாக வாழ்கிறார்கள்.

“நீங்கள் உண்பதில் மிகச் சிறந்தது, உங்கள் உழைப்பின் மூலம் உண்பதேயாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர். ஆயிஷா (ரழி)  திர்மிதீ,  நஸயீ, அபூதாவூது.

ஹலான முறையில் உழைத்து உண்பது ன்று தர்ஹா வியாபாரிகளுக்கு ஹராமாக மாறிவிட்டது.  உண்டியல் காணிக்கை மட்டும் இவர்களுக்கு ஹலாலாகி விட்டது.

இன்றைய தர்காக்களின் தலமைகளாகவும், தரீக்காகளின் பரம்பரைகளாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் மவ்லவிகள், ஆலிம்கள், லெப்பைகள், ஹஜ்ரத்கள். இவர்கள் அழகாக குர்ஆன்  ஓதுவார்கள். நீண்ட ஜுப்பா, பச்சை தலைப்பாகையுடன் நடமாடும் வெளி வேடக்காரர்கள். குர்ஆனின் பொருளை திரித்து வழிகேட்டிற்கு  மக்களை அழைப்பார்கள்
.
விசுவாசிகளே! தொழுகை முடிவு பெற்றால் பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். அல்குர்ஆன் 63:10 என்று அனைத்து விசுவாசிகளுக்கும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். ஆனால் இன்றைய மார்க்க உலமாக்கள், அல்லாஹ்வின் கட்டளையை அப்பட்டமாக மீறி,  உடலுழைத்து ஹலாலை உண்ணுங்கள் என்ற நபி (ஸல்) அவர்களது கட்டளையை மீறி மார்க்க அறிஞர்களாக உலா வருகிறார்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்களே ஆலிம்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மாறாக அவனது கட்டளைக்கு மாறு செய்து ஹராமான வருவாயை உண்ணுகிறார்கள்.

எங்கே மய்யித் வீடு என்று கத்தம் பாத்திஹாவிற்கு ஓடுகிறார்கள். மீலாது விழாக்களில் கூலிக்கு பேசுவது, கூலிக்கு மெªலூது, புர்தா ஓதுவார்கள். கல்யாணம், கத்னா, காது குத்து, பந்தக்கால் நடுதல், பைனான்ஸ், லாட்டரி கடை திறப்பு அத்தனையிலும் முதல் ஆளாக  நீண்ட துஆ  ஓதி காசு பார்ப்பர். இவர்களைப் போலவே யூத கிறிஸ்தவ சமூகங்களிலும் பாதிரிகள், துறவிகள் மக்களின் பொருளை அநியாயமாக விழுங்கியதாக குர்ஆன் 9:34 வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். இங்கு நடைபெறும் மோசடிகள் யூத, கிறிஸ்தவர்களிடமிருந்து அடிக்கப்பட்ட அப்பட்டமான காப்பி என்பதை இவ்வசனம் தெளிவு படுத்துகின்றது. இவர்கள் அப்பாவி முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி இவர்கள் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். அல்லாஹ் நேர்வழி காட்டுவனாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

போற்றுதலுக்குரியவர்கள் யார்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில், நிச்சயமாக யார் கைவசம் என் உயிர் இருக்கின்றதோ அவன்மீது ஆணையாக”உஹத் மலையளவு தங்கத்தை எவர் தர்மம் செய்தபோதும் என் தோழர்களின் நிலையை அடைய முடியாது, ஏன் அதில் பாதியளவு கூட அடையமுடியாது” என்று நபிகள் (ஸல்) அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்)

சோதனை
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சத்திய ஸ்லாத்தை  அரபுத்  தீபகற்பத்தில் முழங்கியபோது, அவர்களுக்கு ஏற்ப்பட்ட ன்னல்களும், அவர்கள் மீது வீசப்பட்ட ழிசொற்களும் வசைமாரிகளும் கொஞ்ச நஞ்சமல்ல! அவர்கள் சத்தியத்தைச் சொன்னதற்காக அவர்களின்  குடும்பத்தையே  சமூகப் பரிகாசம்  செய்தனர்.  பொருளாதாரத் தடை விதித்தனர். அவர்களின் உறவினர் கூட எவ்வித உதவியும் செய்யக்கூடது  என்று  கட்டுப்பாடு  விதித்தனர். மண்ணை  வாரி றைத்தது  ஒரு கூட்டம்.  பைத்தியம் என  பட்டம்  சூட்டி  மகிழ்ந்தது  ஒரு  கூட்டம்.  அவர்கள்  நடந்து  செல்லும்  பாதையில்  முள்ளை  பரப்பி வைத்து  விட்டு மறைந்து  நின்று  ரசித்துக் கொண்டிருந்தது ன்னொருமொரு  கூட்டம். இரத்தம் சிந்தும்  அளவுக்கு  கல்லால்  எறிந்து, கடுமொழி  கூறி நின்றது தாயிப் நகரில் ஒரு கூட்டம். அவர்களுக்கு ஏற்ப்பட்டது போன்ற ஒரு துன்பம் உலகில் எந்த மனிதனுக்கும் ஏற்பட்டதில்லை எனலாம். தனால்தான் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்”எனக்கு ஏற்ப்பட்ட சோதனைகளும் துன்பங்களூம், துன்பத்தில் வீழ்ந்து கிடக்கின்ற ஸ்லாமியருக்கு ஆறுதல் அளிக்கட்டும் என்று கூறினார்கள்”(அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான்
இப்னு காசிம்(ரழி) நூல்: மூஅத்தா)

தியாக பெருமக்கள்

த்தைகைய இக்கட்டான சூல் நிலையில்தான் ஒரு கூட்டத்தினர் இஸ்லாத்தை ஏற்றனர். ஸ்லாத்தை ஏற்றால் தங்கள் உயிரே பறிக்கப்படலாம், தங்கள் குடும்பம் சின்னா பின்னப்படுத்தப் படலாம்  சித்திரவதை செய்யப்படலாம் என்று தெரிந்திருந்தும், அவர்கள்ஸ்லாத்தை  ஏற்றனர். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காரணத்துக்காக இரு கால்களும்  இரண்டு ஒட்ட்கங்களில் பிணைக்கப் பட்டு, இருவேறு திசைகளில் அந்த ஒட்டகங்கள் விரட்டப்பட்டு  இருகூறாக  கிழிக்கப் பட்டனர். கடும் மணலில்  கிடத்தப் பட்டு, பெரும் பாறைகளை அவர்களின்  நெஞ்சங்கள் மீது வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப் பட்டவர்களூம் உண்டு. பெண் என்று பாராமல், மர்ம ஸ்தானத்தில் அம்பெய்து படுகொலை செய்யப்பட்ட பெண்களும் ருந்தனர். தூக்கு மேடையில் ஏற்றப்பட்டனர் சவுக்கால் அடிக்கப்பட்டனர்.

சொந்த நாட்டிலிருந்து வெறுங்கையுடன் விரட்டி அடிக்கப்பட்டனர். அகதிகளாகச் சென்றவர்கள் மதினாவில் நிம்மதியாக ருப்பதைப் பொறுக்க முடியாமல் போர்க்களத்துக்கு அழைக்கப்பட்டனர். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயங்கவில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த மண்ணுலகை விட்டுப் பிரிந்தபோது, தீனுல் இஸ்லாம் இந்த உலக மக்களுக் கெல்லாம் சென்றடைய வேண்டும் என்பதற்காக,பயண  வசதியற்ற  காலத்திலேயே  கடும் பயணம் மேற்கொண்டனர். மொழி தெரியாதநாடுகளுக்குச் சென்றனர். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் காட்டிய வழியில் நடந்து காட்டிஉலகில் ஸ்லாமிய  பேரொளியை பாய்ச்சினர். அவர்களின் தியாகங்கள் சொல்லி முடியாது.

ஒவ்வொருவருடைய வரலாறும் ஒரு வீர  காவியம். தியாகத்தின் வடிவமாகத் திகழ்ந்தவர்கள் அந்த நபித்தோழர்கள். சமீபகாலமாக ந்தத் தியாகத் தோழர்களின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. உஹது மலையளவு செலவு செய்தாலும், எவராலும் ஸஹாபக்களின் மதிப்பில் பாதியளவைக்கூட அடைய முடியாது என்று நபிகள்(ஸல்) அவர்கள் சொல்லியிருக்க அவர்களுக்கு பல நூற்றாண்டு களுக்குப் பின் தோன்றியவர்களுக்கு ஆலிம்களே அதிக முக்கியத்துவம் தருவது வியப்பாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் உள்ளது.

ந்த உம்மத்தில் (சமுதாயத்தில்) மிகச் சிறந்தவர்களாகிய  ஸஹாபாக்களின் வரலாறுகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் காட்டும் அக்கறையை விட, றை நேசர்கள் என்று இவர்களாகவே முத்திரைக் குத்திகொண்ட சிலரின் வரலாறுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் சில அறிஞர்கள் காட்டும் அக்கறை விந்தையாகவே உள்ளது.

ஒரு ஆலிம் தன்பயானை துவக்கும் முன் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் உரைத்து விட்டு”முஹ்யித்தீனே கைப்பிடியுங்கள்”என்று கூறி உரையைத் துவக்குகின்ற அவல நிலயைத் காண்கிறோம். “உலகத்து மாந்தரின் ஈமானை ன்னொரு தட்டிலும், அபூபக்கரின்(ரழி) அவர்களின் ஈமானை இன்னொரு தட்டிலும் வைத்து எடை போட்டால் அபூபக்கர் (ரழி) ஈமானே கனமுள்ளதாகும்” என்ற நபி மொழி கூட வர்களுக்கு தெரியாமல் போனது ஏன்?

றந்து போன யாரையும் அழைத்து உதவி தேடலாகாது என்பது ஒருபுறமிருக்க, அப்படி அழைத்துக் கையைக் பிடிக்கச் சொல்பவர்கள் மனதில் ப்றாஹீம் (அலை) போன்ற உயர்ந்த நபிமார்கள் நினைவுக்கு  வராமல் போனது ஏன்? மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க வேண்டியவர்கள் மக்களிடமிருந்து மார்க்கத்தைக் கற்றுக்கொள்கின்றனர். மக்கள் எந்த நம்பிக்கையில் உள்ளனரோ அதற்கொப்ப தங்கள்  கருத்துக்களையும் அமைத்துக் கொள்கின்றனர். அந்தோ! பரிதாபம்!

அவ்லியாக்கள் என்று சிலரை அவர்கள் பெயரால் முனாஜாத்துகள்,கிஸ்ஸாக்கள், மவ்லிதுகள் எழுதி மக்களிடம் பரப்பி வருவதின் நோக்கம் என்ன? அவர்களின் மீது கொண்ட பற்றோ, பாசமோ அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். அப்படியானால் உண்மையான  காரணம் என்ன?

தாங்கள் செய்கின்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்களுக்கு வர்கள் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸையோ, ஸஹாபாக்களின் வாழ்க்கையையோ ஆதாரங்காட்ட முடியாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடக்காத ஒன்றை ட்டுக்கட்டிக் கூற இயலாத அளவுக்கு அது அன்றைய நல்லவர்களால் பாதுகாக்கப்பட்டுவிட்டது. இல்லாததைச் சொல்லி எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. அந்த வரலாறுகள் அல்லாஹ்வின் அருளால் ன்று வரை பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளன. கியாமத் நாள் வரைக்கும் அது பாதுகாக்கப்பட்டே ருக்கும்.

தனால் தான், மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கிக்கொண்டே ஒரு சிலர் மீது தனி கவர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மீது மக்களை பக்தி கொள்ளச் செய்து, அவர்கள் பெயரால் ந்த வியாபாரத்தை  நன்றாக நடத்திக்கொண்டுள்ளனர்.

ஸ்லாமிய ஷரீஅத்துக்கு புறம்பாக அந்த மகான்கள் நடந்ததாக எழுதப்பட்டுள்ளதே! பேசப்படுகின்றதே! அவர்கள் அவ்லியாக்களாக இருப்பின் அப்படி நடந்திருக்க மாட்டார்களே! என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்பதில்லை. மக்களூக்குத் தெளிவுபடுத்தப்பட வேண்டியவைகளை குர்ஆனை, ஹதீஸை, சஹாபாக்களின் வரலாறுகளை தெளிவு படுத்தாத வரை ந்தநிலை நீடிக்கத்தான் செய்யும். அல்லாஹ் ந்த நிலையிலிருந்து நம்மை காப்பானாக! ஆமீன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பழி சுமத்தும் இழி செயல்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் ருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது.

ஆதிக்கம் செலுத்துபவர்கள் அன்பு காட்டி பார்க்கின்றனர். அதற்கு அடிபணிய வில்லையானால் ஆசை காட்டி பார்க்கின்றனர். அதற்கும் மசியவில்லையானால் குற்றம் குறை ஏதும் ருக்கின்றதா? என்று பார்க்கின்றனர். இருந்து விட்டால் அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அரட்டி மிரட்டி அடி பணிய வைக்கின்றர். இதிலும் தோல்வி அடைந்துவிட்டால் பழி சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டு அடக்க முயல்கின்றனர்.

து குறித்து அல்லாஹ் தன் திருமறையில் மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஏழை மனிதர்கள் யார் என வினவினார்கள் (அதற்கு தோழர்கள்) எங்களில் பொருள் வசதி ல்லாதவர்தான் ஏழை மனிதர் என பதிலளித்தார்கள்; அது சமயம் நபி (ஸல்) அவர்கள் கியாமத் என்னும் இறுதி நாளில் (நீங்கள் கூறிய நபர் அல்ல) அந்நாளில் ஏழை மனிதர் உலகிலிருந்து தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளையும் கொண்டு வருவார். அத்துடன் அவர் எவரையாவது திட்டியிருப்பார். எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார். எவருடைய பொருளையாவது சாப்பிட்டிருப்பார். எவரையாவது அநியாயமாக கொன்றிருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார்.

ஆக த்தகு குற்றங்களையும் கொண்டு வருவார். பின்பு இவருடைய நன்மைகளிலிருந்து (இவரால்) அநீதம் இழைக்கப்பட்டவருக்கு (நன்மை) வழங்கப்படும்; (இவரால்) மற்றொரு அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும். (இப்படியே) இவருடைய நன்மைகள் எல்லாம் முடிந்துவிடும். (ஆனால்) மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மீதமிருக்கும்; (ஆகவே) அம்மக்களின் குற்றங்களை அவர் மீது சுமத்தப்படும்; பின்பு அவரை நரகில் போடப்படும். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)

தப்பெண்ணம் கொண்டு பழி சுமத்தும் ழி செயல் தான் நபித்தோழர்களையும், நபி உறவினர்களையும் ஷஹீதாக்கப்பட தூண்டுகோலாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. எவனாவது எவனுடைய குறையையேனும் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து தக்க ஆதராமின்றி அவதூறு கூறுவானோ, வீண் பழி சுமத்துவானோ அவனது அந்தரங்க குறைகளை அல்லாஹ் அவனுடைய வீட்டிலேயே வைத்தே வெளிப்படுத்தி விடுவான்.

அவரவர் தத்தமது குறைகளைத் தேடித் திருத்தி கொள்பவரே அறிவாளி; அடுத்தவர் குறை தேடி பழி சுமத்துபவர் அறிவிளி. வல்ல நாயன் பிறர் மீது பழி சுமத்தும் ழி செயலை விட்டும் மனித சமுதாயத்தைப் பாதுகாப்பானாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த