இஸ்லாம்தளம்

மார்ச்28, 2009

முஸ்லிம் என்றால்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம் என்றால் இனத்தின் பெயரா? சற்று சிந்தனை செய்யுங்கள்! நீங்கள் முஸ்லிம் என்று சொல்லுகின்ற வார்த்தையின் கருத்தென்ன? மனிதன் தன் தாய் வயிற்றுலிருந்தே இஸ்லாத்தை தன்னோடு கொண்டு வருகிறானா? முஸ்லிமுடைய மகன் முஸ்லிமுடைய பேரன் என்னும் அடிப்படையில் ஒரு மனிதன் முஸ்லிமாகிறானா?

ஆங்கில சமூகத்தில் பிறந்ததால் ஒருவன் ஆங்கிலேயனாகிறான். பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகிறான். ஹரிஜன் மகன் ஹரிஜனாகிறான்; இப்படி முஸ்லிமுக்கு பிறந்தவன் முஸ்லிமாகிறானா? பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா? இவற்றிற்கு நீங்கள் என்ன விடை கொடுப்பீர்கள்?

இல்லை நன்பரே! பிறப்பினால் ஒரு மனிதன் முஸ்லிமாவதில்லை; இஸ்லாத்தை கடைப்பிடிப்பதன் மூலம்தான் ஒருவன் முஸ்லிமாகிறான்; இஸ்லாத்தை கடைபிடிக்காவிட்டால் ஒருவன் முஸ்லிமாவதில்லை; என்றுதானே சொல்வீர்கள். ஒரு மனிதன் ராஜாவாக இருந்தாலும், ஆங்கிலேயனாக இருந்தலும், பிராமணனாக இருந்தாலும், கருப்பராக இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் அவனும்  முஸ்லிமாக விளங்குவான். முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தை பின்பற்றுவதை விட்டுவிட்டால் அவன் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியே போய்விடுவான்! அவன் ஸையித் வம்சத்தில் வந்தவனாயிருந்தாலும் சரி.

ஏன் அன்பர்களே, என் கேள்விக்கு இப்படித்தானே பதில் கொடுப்பீர்கள்? அப்படியானால் உங்கள் பதிலிலிருந்தே ஓர் உண்மை தெளிவாகிறது. உங்களுக்கு கிடைத்திருக்கிற இந்த அருட்கொடை இறைவன் வளங்கியுள்ள கொடைகளிலேயே மிகப் பெரிய அறுட்கொடையாகும். இந்த அருட்கொடை உங்கள் தாய் தந்தையிடமிருந்து தானாக வந்த வாரிசு சொத்து அல்ல! விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாழ்நாள் முழுவதும் ஓட்டிக்கொண்டிருக்கின்ற பிறப்புரிமையல்ல. அதை அடைவதற்கு நீங்கள் முயற்சி செய்யவேண்டும். முயற்சி எடுத்தால் அது உங்களுக்கு கிடைக்கும். அதை நீங்கள் அலட்சியம் செய்தால் அது உங்களிடமிருந்து பறிக்கப்படும்.  (இறைவன் நம்மை காப்பாற்றுவானாக!)

முஸ்லிமுடைய வீட்டில் பிறந்து, முஸ்லிம்களுக்கு இருப்பது போன்ற பெயர்களைத் தமக்குச் சூட்டிக்கொண்டு, முஸ்லிம்கள் அணியும் ஆடைகளை அணிந்துகொண்டு தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்கிறவன் எவனும் உண்மையில் முஸ்லிம் அல்லன். ஏனெனில் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு முஸ்லிமல்லாதவனுக்கும் இடையிலுள்ள அடிப்படை வேற்றுமை பெயர், உடை ரீதியானதல்ல!இவ்விருவருக்கும் இடையில் அடிப்படையான வேற்றுமை அறிவு ரீதியானதாகும்.

ஒரு முஸ்லிமுக்கு மிகப்பெரிய ஆபத்து என்றால் அது இஸ்லாத்தின் அறிவுரைகளை அவன் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்; திருக்குர்ஆன் எதைக் கற்று கொடுத்தது  நபி (ஸல்) அவர்கள் அறிவுரைகளை அவன் உணர்ந்து கொள்ளாமல் இருந்தால் இந்த அறியாமையின் காரணத்தால் அவன் தானே வழிகெட்டுப்போக முடியும்; அல்லது தஜ்ஜாலினாலும் வழி கெடுக்கப்படவும் முடியும்; என்றாலும் அறிவு என்ற விளக்கு இருந்தால் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அவனால் இஸ்லாத்தின் நேரிய பாதையைப் பார்த்துக் கொள்ள முடியும். வாழ்வின் ஒவ்வோர் கட்டத்திலும் இறைமறுப்பு, இணைவைத்தல், வழிகேடு, பாவம், கெடுதிகளை அறிவு பெற்ற மனிதனால் அவற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியும். வழிகெடுப்பவன் யார் என்று அவன் கூறுகின்ற ஒன்றிரண்டு விஷயங்களைக் கேட்டதும் அவன் வழிகெடுப்பவன் என்பதைத் தெரிந்து கொள்வான். தான் அவனை பின்பற்றக் கூடாது என்பதையும் உணர்ந்து கொள்வான்.

அப்படியானால் நீங்கள் முஸ்லிமாக இருப்பதற்கு மூல அறிவின் விஷயத்தின் ஏன் அலட்சியம் செய்கிறீர்கள். உங்களில் ஒவ்வொருவரும் மெளலவியாகி (அறிஞராகி) பெரிய பெரிய நூல்களை படிக்க வேண்டும் என்றோ பத்து ஆண்டுகளைக் கல்விக்காக செலவிட வேண்டுமென்றோ உங்களிடம் நான் சொல்லவில்லை. நீங்கள் முஸ்லிமாவதற்கு இவ்வளவு தூரம் படிக்க வேண்டிய தேவையில்லை. ஒரு நாளில் ஒரு மணி நேரமாவது மார்க்க அறிவு பெருவதற்காக செலவிடுங்கள். திருக்குர்ஆன் எந்த நோகத்திற்காக என்ன அறிவுரையைக் கொண்டு வந்திருக்கிறது என்பதை தெளிவாகக் தெரிந்து கொள்ளுங்கள். ரசூல் (சல்) அவர்கள் எதை அழித்து, அதன் இடத்தில் எதை நிலைப்படுத்தினார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.  (அல்லாஹ் துணை செய்வானாக!)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

குர்ஆன், ஹதீஸ் பயிற்சி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் பிரதிநிதிகளாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளைகளூள் ஒன்று. முஸ்லிம்களாகிய நம்மை அகில உலகிற்கும் முன்மாதிரிச் சமுதாயமாக அமைத்திருப்பதாகவும் குர்ஆனிலே அல்லாஹ் கூறுகிறான். நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்றுள்ள பணிகளை ஒவ்வொரு முஸ்லிமான ஆணும்,பெண்ணும் செய்வது கடமை என்பதையும் ஹதீஸ்களின் மூலம் நாம் அறிகிறோம்.

ஆனால் நமது நிலை என்ன? கொடுத்த வாக்குறுதியில் நாம் சரியாக இருக்கிறோமா? குடும்ப வாழ்க்கையை இஸ்லாமிய அடிப்படையில் அமைத்து விட்டோமா? பொய் சொல்லுதல் புறம் பேசுதல் போன்ற காரியங்களிலிருந்து விலகி விட்டோமா? மூடப் பழக்க வழக்கங்களிலுருந்து முற்றாக ஒதுங்கி விட்டோமா? இஸ்லாமிய வாழ்க்கையில் முழுமையாக நாம் நுழைந்து விட்டோமா?

இக்கேள்விகளுக்கெல்லாம் மறுமையில் நாம் பதில்  சொல்லக் கடமைப்பட்டவர்கள். ஆகையால் தினசரி திருக்குர்ஆனை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தமக்கு தெரிந்த மொழி பெயர்ப்புகளில் தினசரி ஒரு பக்கம் வீதம் படித்து, சிந்தித்து, உணர்ந்து செயல்பட்டால் நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ் கூறும் உண்மையான முஸ்லிம்களாக மாற முடியும். (இன்ஷா அல்லாஹ்)

குர்ஆன் மொழி பெயர்ப்புகளையும், ஹதீஸ்களையும் தினசரி ஒருசில நிமிடங்களைப் ஒதுக்கிப் படித்து வாருங்கள். சிந்திக்க ஆரம்பியுங்கள். வருடக் கணக்கில், அதுவும் இளமையில்ச் செலவிட்டுப் படித்தவர்கள் மட்டுமே விளங்க முடியும் என்ற தப்பான எண்ணத்தை விட்டு விடுங்கள். குர்ஆன், ஹதீஸ் படித்து சரியான உமதேசங்களை அறிந்து கொள்ளுங்கள்.

எழுதப் படிக்கத் தெரியாத, நாகரீகமற்ற மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த மிகவும் பின் தங்கியிருந்த ஒரு சமூகம் நபி(ஸல்) அவர்களின் 23 ஆண்டு கால உழைப்புக்குப் பின் ஒப்புயுற்வற்ற ஒர் உன்னத சமுதாயமாக உயர்ந்தது. மனித சமுதாயத்தையே நேர்வழியில் இட்டுச் செல்லும் ஒரு மகத்தான பதவியை அடைந்தது. குர்ஆன், ஹதீஸைக் கொண்டு மட்டுமே அச்சமுதாயத்தினர் அவ்வற்புத ஞானத்தைப் பெற்றிருந்தனர். முஸ்லிம்கள் இன்று அத்தகைய இறை கொடுத்த நேர்வழியை விட்டு, வழி தவறி மனித அபிப்பிராயங்களால் உண்டான மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள் போன்ற பல வழிகளில் சென்றமையால், மிகக் கீழானதொரு நிலையை அடைந்துள்ளனர்.

எனவே, நபி(ஸல்) அவர்களின் காலத்து அதே எளிய நேர்வழி முறைகளைக் கடைப்பிடித்து, எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற பாகுபாடின்றி, அனைவரும் மார்க்க அறிவு பெற, எல்லா பகுதிகளிலும் மார்க்கத்தை தெரிந்து கொள்ள குர்ஆன், ஹதீஸ் பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்து நடத்தி வாருங்கள். தெரிந்த மொழியிலுள்ள குர்ஆன், ஹதீஸ் மொழிபெயர்ப்புகளை அதற்காகப் பயன்படுத்துங்கள். படிக்க தெரியாதவர்கள் பிறர் படிப்பதைப் காது தாழ்த்திக் கேளுங்கள்.இந்த முயற்சி நல்ல பலனைத் தருகிறது. முஸ்லிம் சகோதர, சகோதரிகளைச் சுய சிந்தனையாளர்களாக மாற்றுகிறது என்பதை அனுபவத்தின் மூலம் அறிந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறோம்.

திருக்குர்ஆனின் பக்கமும் நபி மொழிகளையும் படித்து அதன்படி நமது வாழ்வையும் அமைத்துக்கொள்ள வேண்டும். நமக்கு அறிமுகமான, உறவினரான, ஒவ்வொரு முஸ்லிமிடமும் தினசரி குர்ஆனைப்பற்றி பேசும் பழக்கத்தை இன்ஷாஅல்லாஹ் நாம் ஏற்படுத்திக் கொள்வோமாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

நாம் தடுமாறினால்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நாம் முஸ்லிம்கள், நடுநிலைச் சமுதாயம், நீதையையும், நியாயத்தையும், தர்மத்தையும் தரணியில் நிலை நாட்ட தோற்றுவிக்கப்பட்ட உன்னத சமுதாயம். நாம் தடுமாறினால் தரணியே தடுமாறிவிடும்.

இக்கட்டான க்கால கட்டத்தில் முஸ்லிம்களாகிய நாம் நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிப்பது கண்டிப்பான கடமையாகும். அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனை நாம் பற்றிப்பிடிக்க வேண்டும். ஒற்றுமை காக்க வேண்டும். குர்ஆனையும், ஹதீஸையும் பற்றிப ிபிடித்து அதன்படி நடப்பது மட்டுமே ஒற்றுமை காக்கும் வழியாகும். குர்ஆனையும், ஹதீஸையும் தங்கள் கருத்துப்படி வளைத்து மறைத்துச் செயல்படுவதே ஒற்றுமை காக்கும் வழி என்ற ஷைத்தானின் போதனையை தூர விலக்கவேண்டும்.

மாற்று மதத்தாரை, அரசியல்வாதிகளைத் தூற்றுவதால், பழிப்பதால், கரித்துக் கொட்டுவதால் லாபம் நமக்கில்லை என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் சமுதாயம்தான் துன்பத்திற்குள்ளாக நேரிடும். எனவே, மாற்று மதத்தினர், மற்றும் அரசியல் வாதிகளின் குறைகளை, நயவஞ்சகச் செயல்களை, அவர்களின் அநியாய அக்கிரமங்களைப் பக்கம் பக்கமாக எழுதுவதை விட்டும், பேசித்ிதிரிவதை விட்டும், முஸ்லிம்கள் பத்திரிகைகளும், முஸ்லிம்களும் விடுபடவேண்டும்.

அதற்குமாறாக அல்லாஹ்வை தனது எஜமானனாகவும், நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராகவும், தங்கள் வாழ்வில் வரும் சோதனைகளை நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் தீர்க்க முயலவேண்டும். அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ள நடைமுறைகளையும் ஹதீஸ்களையும் பற்றிப்பிடிக்க வேண்டும். அந்தக் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக முன்னோர்களின் பெயரால் தங்களிடையே காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச்சடங்குகள், சம்பிர தாயங்கள், பிளவுகள், பிரிவுகள் அனைத்தையும் அகற்றி ஒற்றுமையுடன் உன்னத வாழ்க்கையை, மிக நிதானத்துடன் கடைபிடிக்க முஸ்லிம்கள் கடமைப் பட்டுள்ளார்கள்.

குர்ஆனையும், ஹதீஸையும் ஒப்புக்கொண்டுள்ள முஸ்லிம்கள் அந்த குர்ஆனும், ஹதீஸும் போதிக்கும் நீதியை, நியாயத்தை, நேர்மையை, சத்தியத்தை, தர்மத்தை,  நேர்வழியைக் கடைபிடித்து ஓரணயில் ஒன்று பட முன்வராத நிலையில், குர்ஆனையும், ஹதீஸையும் ஒப்புக்கொள்ளாத மாற்று மதத்தாரிடமும் அரசியல் வாதிகளிடமும் நீதியை, நியாயத்தை, நேர்மையை, சத்தியத்தை, தர்மத்தை, நேர்மையை எதிர்பார்ப்பது முறையா? என்று முஸ்லிம்களிடம் கேட்டு முடிக்கிறோம்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

கண்மூடி பின்பற்றாதீர்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்களில் பெருங்கூட்டம் மார்க்கம் என்ற பெயரில் யாராவது எதையாவது சொன்னால் கண்மூடிப் பின்பற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஸ்லாமிய மர்க்கத்தை என்னதான் குர்ஆன், ஹதீஸ் கொண்டு விளக்கினாலும், எடுத்துக் கொடுத்தாலும் விரல் விட்டு என்ணும் அளவிற்கு ஒரு சிலரைத் தவிர எஞ்சியவர்கள் யாரையாவது ஒருவரை சார்ந்து நிற்பதையே வழமையாக்கிக் கொள்கிறார்கள். தெளிவாகச்  சொன்னால் ஆளை  மாற்றுகிறார்களே தவிர “தக்லீதை விடுவதாக இல்லை.

நாம் விரும்புவதாக இருந்தாலும், மறறவர்கள் விரும்புவதாக ருந்தாலும், அதற்கேற்றவாறு ஒருவர் குர்ஆன், ஹதீஸுக்கு சுய விளக்கம் கொடுத்தால் அது நேர்வழியாகிவிடாது. அதற்கு மாறாக குர்ஆன், ஹதீஸை நமக்கு  விளங்கும் வகையில் சொல்ல வேண்டும். மற்றபடி அவரது சுய விளக்கத்தின்படி நாம் அரை குறையாக விளங்குவதாகருக்கக்கூடாது. ஒரு வேளை அவர் சொல்வது நமக்கு தெளிவாக புரியவில்லை. ஆனால் அவர் ரொம்ப படித்தவர், அறிந்தவர், பெரிய பேச்சாளர் அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று அவரை  நம்பி அதைச் செய்ய மார்க்கத்தில் அனுமதி இல்லை. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பிச் செயல்படுவது கண்மூடி பின்பற்றுவதாகும்.

அரபி படித்த பண்டிதர்களே மார்க்கத்தை விளங்க முடியும் என்ற அய்யாமுல் ஜாஹிலியத் நம்பிக்கையை உங்களின் காலுக்குக் கீழ் போட்டு மிதித்து விடுங்கள். இது உண்மையானால் அபூஜஹீலும், அவனைச் சார்ந்த தாருன்நத்வா உலமா பெருமக்களுமே அன்று குர்ஆனை மிகத் தெளிவாக விளங்கி இருக்க வேண்டும். அதற்கு மாறாக அரபி கசடறக் கற்ற அந்த அரபி பண்டிதர்கள் அல்குர்ஆனை விளங்க முடியவில்லை.

அதே சமயம் எழுதப் படிக்க தெரியாத சாதாரண மக்கள் அல்குர்ஆனை விளங்கி ஈமான் கொண்டு உன்னத பதவிகளை அடைந்தார்கள். இது தெளிவான ஆதாரப்பூர்வமான வரலாறு ஆகும். இதனை நன்கு ஞாபகத்தில் வைத்து வீண் பிதற்றலுக்கு செவி சாய்க்காதீர்கள். இதைப் படிக்காதீர்கள், அதைப் படிக்காதீர்கள், குர்ஆன் பாமரர்களுக்கு விளங்காது அதற்கு பல கலைகள் தெரிந்து இருக்கவேண்டும் என்றும் பிதற்றுவார்கள்.

மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயல்கிறார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம் (அல்குர்ஆன்  29:69)

அல்குர்ஆன் வசனங்களையும், ஆதரப்பூர்வமான ஹதீஸ்களையும் உங்கள் முன் எடுத்து வைத்துவிட்ட மாத்திரத்தில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் உங்களுக்கும் நேரடித் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. ஹதீஸ்களைப் பார்த்து விளங்கிச் செயல்படும் கடமை உங்கள் மீது உள்ளது. அதற்கு முன்பும் இக்கடமை ருக்கத்தான் செய்கிறது. ஆனால் இப்போது குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை நேரடியாக பார்த்துவிட்டதால், அந்தக் கடமை உங்கள் மீது  இன்னும் அழுத்தமாக ஏற்ப்பட்டு விட்டது. இதற்குப் பிறகும் குர்ஆன், ஹதீஸ் படி செயல்படுவதும், செயல் படாதிருப்பதும் உங்களைச் சார்ந்ததேயாகும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

இந்த இழி நிலை மாறுமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ன்றைய இந்திய முஸ்லிம்களுக்கு மிக அவசியத் தேவை ஒற்றுமையாகும். அந்த ஒற்றுமைக்கு பங்கமாக இருப்பது முஸ்லிம்களின் தியாக உணர்வற்ற நிலையாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் தங்களின் அற்ப உலக சுகம் நாடி, பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் அடிமைபட்டு, தங்களுக்கு வழங்கப்படும் பெட்டிகளைக் குறியாகக்கொண்டு ஈமானை இழந்து விலை போகின்றனர்.

முஸ்லிம்களை சொர்க்கத்திற்கு வழி நடத்திச் செல்ல வேண்டிய மவ்லவிகளோ, மறுமையையும், அல்லாஹ்வையும், மறந்து மார்க்கத்தையே தங்களின் பிழைப்புக்குரிய வழியாக ஆக்கிக் கொண்டனர். அதனால் தங்களின் வயிற்றை நிறைக்க மார்க்கத்தை திரித்து மற்ற மதங்களைப்போல் ஸ்லாத்தையும் வெற்றுச் சடங்குகள், அனாச்சாரங்கள் நிறைந்த ஒரு மதமாக ஆக்கிவிட்டனர். அவர்கள் தங்களின் வயிறுகளில் நரக நெருப்பையே நிரப்பிக்காள்கின்றனர். (அல்குர்ஆன் 2:174) என்ற இறை வசனத்தை மறந்துவிட்டனர்.

முஸ்லிம்களை வழி நடத்திச் செல்லும் அரசியல் தலைவர்களிடமும், இவர்களிடமும் இஸ்லாம் அடிப்படையாகவே போதிக்கும் தியாக உணர்வு இல்லை என்றால், சாதாரண முஸ்லிம்களிடம் தியாக உணர்வு இருக்கவா போகிறது. இதை நாம் எதிர்பார்க்க முடியுமா?

இந்த நிலை மாற வேண்டுமானால் முஸ்லிம்கள் இவர்கள் பின்னால் கண்ணை மூடிக்கொண்டு குருட்டுத் தனமாகச் செல்வதைக் கைவிடவேண்டும். ஒவ்வோரு ஆணும், பெண்ணும் சுய சிந்தனையாளர்களாக மாறவேண்டும். வ்வுலக வாழ்க்கை பிரச்னைகளை இந்த அரசியல்வாதிகளையும், மத புரோகிதரர்களையும் நம்பி விட்டு விட்டு இவர்கள் உறங்கினால் இவர்கள் வயிறு நிறையுமா? இவ்வுலகத் தேவைகள் பூர்த்தியாகுமா? நிச்சயமாக ஆகாது. அற்பமான அழியும் இவ்வுலக வாழ்கையே இந்த அரசியல் வாதிகளைக் கொண்டு, மதப்புரோகிதரர்களைக் கொண்டு கைகூட வழியில்லை என்கின்றபோது மறு உலக வாழ்கையை இவர்களிடம் நம்பி ஒப்படைத்தால் நிறைவேறுமா? எவ்வளவு பெரிய மதியீனம்.

அழியும் வ்வுலகத் வாழ்கைக்கு யாரையும் நம்பாமல் தனது கையே தனக்கு உதவி என்று உறுதி கொண்டு செயல்படும் மனிதன், அழியாத நிந்திய மறு உலக வாழ்கையை மட்டும் இந்த முல்லாக்களை நம்பி ஒப்படைப்பது எவ்வளவு பெரிய மதியீனம். ஷைத்தானுடைய எவ்வளவு பெரிய சூழ்ச்சி? இதைவிட ஒரு ஆபத்தான நிலை இருக்க முடியுமா?

எனவே அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே ந்த சுய நல வாதிகளான அரசியல் தலைவர்களையும் மதப்புரோகிதரர்களையும் நம்பிச் செயல்படுவதைக் கைவிடுங்கள். உங்களது நல்வாழ்வில் உங்களை விட அக்கறையுள்ள யாரும் ருக்க முடியாது. நீங்களே நேரம் ஒதுக்கி முயற்சி செய்யுங்கள். குர்ஆன், ஹதீஸ் தாராளமாகவே விளங்கும். குர்ஆன், ஹதீஸ் விளங்காது என்று கூறி உங்களை ஏமாற்றி வருவது அவர்களின் சுயநலம் கருதியே அவ்வாறு சொல்லுகின்றனர்.

சாதாரண மக்களால் விளங்க முடியாத மார்க்கத்தை அல்லாஹ் மக்களுக்குத் தரவில்லை. எளிதில் புரியும் மார்க்கத்தையே தந்துள்ளான். அதன் ரவும் பகலைப் போன்று வெட்ட வெளிச்சமானது. தேவை உங்கள் முயற்சி மட்டுமே.உள்ளத் துணிச்சலோடு நேரடியாக குர்ஆன், ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை பாருங்கள். அவை உங்களோடு பேசும். உங்களுக்கு நேரிய வழியைக் காட்டும். இந்த முயற்சி நல்ல பலனைத்தரும். முஸ்லிம்களை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் என்பதை நீங்கள் அனுபவத்தின் மூலம் அறிந்து ஏக இறைவனுக்கு நன்றி செலுத்துவீர்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த