இஸ்லாம்தளம்

மார்ச்27, 2009

தர்ஹா மாயை?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ன்றைய முஸ்லிம்கள் பெரும் தொகையினர் தர்கா மாயையில் சிக்கி கத்தம் பாத்திஹா, மெªலூது, கந்தூரி போன்ற சடங்குகள் என்று மூழ்கியுள்ளனர். தர்ஹா என்ற பெயரில் இறந்தவர்களின் அடக்கஸ்த்தலங்கள் இல்லாத ஊரே இல்லை என்ற அளவுக்கு முஸ்லிம்கள் தர்ஹாக்களை கட்டி நிரப்பி இருக்கிறார்கள். ஒரு சில ஊர்களில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தர்ஹாக்கள் இருப்பதையும் காணலாம். அதே போல் மாதம் ஏதாவது ஒரு அவுலியாவின் பெயரால் மெªலூதோ, பாத்திஹாவோ ஓதத் தவறுவதில்லை.

ஸ்லாமிய மாதங்களை நபி (ஸல்) கற்றுத் தந்த முறைப்படி நமது பெண்கள் சொல்லுவதில்லை. மாறாக ரசூலுல்லாஹி மெªலூது பிறை, அப்துல் காதிர் ஜீலானி மெலலூது பிறை, நாகூரார் மெªலூது பிறை என்று சரளமாக கூறும் அளவிற்கு முஸ்லிம் பெண்களிடம் தர்ஹா மோகம் மலிந்து காணப்படுகிறது.

தற்கு காரணம் முல்லாக்கள் தங்களின் சுய நலம் காரணமாக முஸ்லிம் பெண்களை படிப்பறிவு இல்லாமல் ஆக்கியதுதான். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? பெண்களுக்கு நாலு எழுத்து எழுதத் தெரிந்தால் காதல் கடிதம் எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்றெல்லாம் பயமுறுத்தி பெண்களை படிக்காத மக்களாக ஆக்கிவிட்டார்கள். அவர்களின் உள்நோக்கம் பெண்கள் படிப்பறிவு இல்லாமல் இருந்தால் தான் மூடச்சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு மதி மயங்கச் செய்து அவை மூலம் கை நிறைய பொருள் திரட்டலாம் என்பதே.

கிறிஸ்தவ புரோகிதரர்கள் மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள் என்று அல்லாஹ் 9:34 வசனத்தில் கூறியிருப்பதுபோல் முஸ்லிம் புரோகிதரர்களும் முஸ்லிம்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள். அப்படிப்பட்ட மூடச் சடங்குகளில் தான் தர்ஹா- சமாதிச் சடங்குகள் அவுலியாக்கள் கபுறுகளில் உயிருடன் ருக்கிறார்கள். நீங்கள் அங்கு போய் கேட்பதையெல்லாம் காது கொடுத்து கேட்கிறார்கள். உங்களது எல்லா தேவைகளையும் அவர்கள் பூர்த்தி செய்து தருகிறார்கள். அவர்களிடமே கேளுங்கள் என்று தவறான உபதேசம் செய்து பெண்களை சாரை சாரையாக படை எடுக்க வைத்துள்ளனர்.

நபி (ஸல்) காலத்தில் பெண்கள் பள்ளிக்கு  தொழ வந்துகொண்டிருந்தார்கள். பெண்களுக்கு ஒருநாள் என்று முறை வைத்து நபி (ஸல்) அவர்களிடம் மார்க்கம் கற்றுக் கொண்டிருந்தார்கள். பெண்கள் பள்ளிக்கு வந்து தொழுவதையோ, மார்க்கம் கற்றுக் கொள்வதையோ அல்லாஹ்வோ அவனது தூதரோ தடை செய்யவில்லை. ஆனால் ன்று பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்துயிருக்கிறார்கள்.

வர்களின் அசல் நோக்கம் பெண்கள் பள்ளியுடன் தொடர்புடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு மார்க்க அறிவு ஏற்பட்டு விடும்; மூடச் சடங்குகளை கொண்டு பெண்களை ஏமாற்றி பிழைக்க முடியாது. பெண்கள் எந்த அளவு அறிவு சூன்யங்களாக இருக்கிறார்களோ அந்த அளவு அவர்களை மூடச் சடங்குகளில் அவர்களை மூழ்கடிக்க முடியும் என்பதேயாகும். பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி பள்ளிக்கு வருவதால் அவர்களின் ஒழுக்கம் சிதைகிறது என்று காரணம் இவர்கள், தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் அதேபோல் தர்ஹாக்களுக்குச் செல்லுவதையும் தடை செய்ய வேண்டுமல்லவா?

பெண்களின் ஒழுக்கக் கேடுகளுக்கு பள்ளிவாசல்களைவிட தர்ஹாக்களே அதிகமாக டமளிக்கின்றன. பெண்களின் ஒழுக்கத்தில் அக்கறைக் கொண்டு அவர்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் இந்த முல்லாக்கள் பெண்கள் தர்ஹாக்களுக்கு வருவதை அதைவிட கடுமையாக எதிர்க்க வேண்டுமே? அதற்கு மாறாக பெண்கள் தர்ஹாக்களுக்கு  வருவதை ஆதரிப்பதின் மர்மம் என்ன? ஆக முஸ்லிம்களிடம் தர்ஹா சடங்குகள் பெருக முழு முதல் காரணமாக இருக்கிறார்கள். வலிமார்கள் மாநாடுகள் நடத்தி தர்ஹா சடங்குகளை ஆதரிக்கிறார்கள்.

ஆனால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன்  அத்தியாயம் 18:102 106 வசனத்தில்

102. நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக க்காபிர்கள் றங்குமிடமாக நரகத்தையே சிததப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

103. (தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.

104. யாருடைய முயற்சி வ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் தான்.

105. அவர்கள் தங்களுடைய றைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம்  என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்.

106. அதுவே அவர்களுடைய கூலியாகும் (அதுதான்) நரகம் ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.

ந்த இறை வசனங்களை காட்டி முஸ்லிம்களை தர்ஹா சடங்குகளை விட்டும் தவிர்த்து கொள்ளுமாறு உபதேசம் செய்தால் என்ன சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? இந்த வசனங்கள் காஃபிர்களுக்கு இறங்கியது; முஸ்லிம்களுக்கு அல்ல என்று லேசாகக்கூறி முஸ்லிம்களை ஏமாற்றிவிடுகிறார்கள். ஒரு குற்றத்தை முஸ்லிம் செய்தாலும் குற்றம் தான்; காஃபிர் செய்தாலும் குற்றம்தான் என்ற சாதரண உண்மை கூட தெரியாதவர்களாகவா இந்த முல்லாக்கள்  இருக்கிறார்கள்.

காஃபிர் திருடினால் குற்றம்; முஸ்லிம் திருடினால் குற்றம் ல்லை. காஃபிர் சாராயம் குடித்தால்தான் குற்றம் முஸ்லிம் சாரயம் குடித்தால் குற்றம் இல்லை; காஃபிர் விபச்சாரம் செய்தால் குற்றம் முஸ்லிம் விபச்சாரம் செய்தால் குற்றம் இல்லை என்று இவர்கள் கூறுவார்களா? இல்லயே! குற்றங்களை யார் செய்தாலும் குற்றவாளிகள் தான்; தண்டனைக்குறியவர்கள் தான் என்ற சாதரண உண்மை கூட  இவர்களுக்கு தெரியாதா?

ஆதி மனிதர் ஆதம்(அலை)  ஒரு நபி அவர் பிறப்பால் முஸ்லிம் அவர்களின் மக்கள் அனைவரும் முஸ்லிம்கள்தான். பின்னர் எப்படி காஃபிர்கள் முளைத்தார்கள் என்று சிந்திக்க மாட்டார்களா? முஸ்லிமாக பிறந்தவர்கள் தான் இறைவனுக்கு மாறு செய்வதன் மூலம் காஃபிர்கள் ஆனார்கள் என்ற உண்மை இவர்களுக்குத் தெரியாதா?

அத்தியாம் 18: 102-106 ல் கூறப்படும் கண்டனங்கள் காஃபிர்களுக்காக றங்கியது என்கிறார்களே அந்த காபிர்கள் யார்? அந்த குறைஷிகள் யார்? இப்றாஹீம்(அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் நேரடி வாரிசுகள் காஃபத்துல்லாஹ்வை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்துல்லாஹ், ஆமினா, அப்பாஸ், ஹம்ஸா என்று அழகிய இஸ்லாமிய பெயர்களை உடையவர்களாக இருந்தார்கள். சுன்னத் செய்யப்பட்டிருந்தது. குர்ஆன் இறங்கிய அரபு மொழி பேசினார்கள்.

வருடா வருடம் ஹஜ் செய்தார்கள். தான தர்மம் செய்தார்கள். ப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொன்டார்கள். இவர்களின் அகராதிப்படி இன்றைய இந்திய முஸ்லிம்களைவிட பன்மடங்கு உயர்வான முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட முஸ்லிகளைப் பார்த்தே அல்லாஹ் காஃபிர் என்று கூறி எச்சரிக்கிறான் என்பதை இந்த முல்லாக்கள் சிந்திக்க வேண்டாமா?

அவர்கள் தங்களை ப்றாஹீம்(அலை) அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாறாக அவுலியாக்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைப்பவர்களாக இருந்தார்கள். அதாவது அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களை தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டார்கள். அவர்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் மன்றாடுவார்கள், சிபாரிசு செய்வார்கள் என்று நம்பியே தர்ஹா சடங்குகளைச் செய்து வந்தனர். அல்குர்ஆன் 18:10, 18:102-106, 39:3 ஆகிய இறை வசனங்களை ஓதினால் சிந்திப்பவர்களுக்கு உண்மை விளங்கும்.

ஸ்லாத்திலிருந்து குஃப்ர் தோன்றுகிறதேயல்லாமல் குஃப்ரிலிருந்து இஸ்லாம் தோன்றவில்லை. என்பதை உணர்வார்களாக. இந்த அடிப்படையில்தான் இப்றாஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷிகள் உண்மையில் தாங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தை பின்பற்றுவதாக எண்ணிக்கொண்டுதான் அல்லாஹ்வின் அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக்கி அவர்களின் சமாதிகளில், சிலைகளுக்கு முன்னால் தங்களின் வேண்டுதல்களை வைத்து, அதன் காரணமாக அல்லாஹ்வால் காஃபிராக்கப்பட்டார்கள்.

அதேபோல் ன்றைய முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கமான இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு அல்லாஹ் தடுத்துள்ளதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் அடியார்களான அவுலியாக்களைத் தங்களின் பாதுகாவலர்களாக ஆக்கி அவர்களிடம் தங்களின் வேண்டுதல்களை வைத்தால், அவர்களை அல்லாஹ்விடம் சிபாரிசு, மன்றாட்டம் செய்பவர்களாக ஆக்கிக் கொண்டால், இப்றாஹீம்(அலை) அவர்களின் சந்ததிகள் காஃபிராக்கப்பட்டது போல் இவர்களும் காஃபிராக்கப்படுவார்கள் என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?

எனவே 18:102-106 வசனங்கள் காபிர்களுக்கு றங்கியது; முஸ்லிம்களுக்கு என்று கூறி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி அவர்களை நரகில் கொண்டு தள்ளவேண்டாம். முஸ்லிமான ஆண், பெண் அனைவரையும் “தர்ஹா மாயை”யை விட்டு விடுபட்டு படைத்த இறைவனை மட்டுமே பாதுகாவலனாக எடுத்து அவனிடமே தங்களின் வேண்டுதல்கள் கோரிக்கைகள் அனைத்தையும் வைக்கும்படி அவர்களுக்கு உபதேசிக்க முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் அறிய நல்லடியார்கள்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பிரிவினை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நாம் இன்று ஒரு மோசமான சூழ்நிலைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாமிய குழுக்களிடையே காணப்படும் பிரிவினை வாதத்தால் முஸ்லிம் உம்மாவை கூறுபோடும் அவல நிலைதான் அது. இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் பல குழுக்களின் முயற்சிகளால் நன்மைகள் சில ஏற்பட்டிருப்பினும், இக்குழுக்களால் முஸ்லிம்களிடையே ஒற்றுமையின்மைக்கான விதை தூவப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடம் ஜக்கியமற்ற தன்மை நிலவுவதை அல்லாஹ் விரும்பவில்லை. அவன் இதனை தனது குர்ஆனில் இவ்வாறு கண்டிக்கிறான்.

مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)

மிகச் சாதாரண அளவில் தானும் முஸ்லிம்களுக்கிடையில் ஜக்கியமினை நிலவுவதற்கு எதிராக ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

ஒரு முறை ரசூலுல்லாஹ்(ஸல்) அவர்கள் போருக்காக தனது தோழர்களுடன் சென்றிருந்த போது முஹாஜிரீன்களில் ஒருவர், அன்சாரிகளில் ஒருவரை வேடிக்கைக்காக முதுகில் தட்டினார். இச்செயல் அந்த அன்சாரிக்கு ஆத்திரத்தை மூட்டியது. அவர் ‘ஓ’ அன்சாரிகளே! எனக் கூவினார். இதையடுத்து அந்த முஹாஜிர் ‘ஓ’ முஹாஜிர்களே! என சப்தமிட்டார். இதை செவியுற்று வெழியே வந்த நபி(ஸல்) அவர்கள் “ஏன் ஜாஹிலியத்தின் அழைப்புகளை விடுக்கிறீர்கள்!” எனக் கேட்டார்கள்.”அவர்களுக்கிடையில் என்ன தகராறு?” என வினவினர். அப்போது அங்கு நடந்த விஷயம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் ‘இந்த மோசமான விஷயத்தை விட்டுவிடுங்கள்’ என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்த இரு மனிதர்களும் முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் தமது உதவிக்காக அழைத்ததை இவ்விதமாகவே நபி(ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். இரு குழுவினரின் பெயர்களும் குர்ஆனிலும், சுன்னாவிலும் குறிப்பிடப்பட்டிருந்த போதும் நபி(ஸல்) அவர்கள் இவர்களின் செயலைக் கண்டிக்கத் தவறவில்லை. ஏனெனில் இவர்களின் அழைப்பில் பிரிவினைவாதம் மேலோங்கியதே காரணம்.

ஆனால் நாம்  இன்று  ஜமாஅத்துகளாகவும்  ஹிஸ்புகளாகவும்,   ஹரகா(இயக்கங்கள்)களாகவும்  பிரிந்து  போயுள்ளோம். “இது எமது இயக்கம்” “எமது தலைவர்” எனும்போது இயக்க அங்கத்துவமானது நமது விசுவாசத்தை விட பலம் மிக்கதாக இருக்கிறது.

ஆகவே உண்மையான இஸ்லாமிய சகோதரத்துவத்தை அழிக்கும் பிரிவினைவாதத்தை இல்லாதொழிக்க ஒன்றிணையுமாறு நாம் முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுகிறோம். அல்லாஹ்வை பயப்படுவதைவிட இயக்கங்கள், பிரிவுகளின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது ஆரோக்கியமானதல்ல.

பிரிவினை என்ற பாவத்துக்குள் வீழ்ந்தவர்களுக்கு நாம் தரும் அறிவுரை: உங்கள் தலைவர்களின் கூற்றைக் கொண்டு குர்ஆன் சுன்னாவை அளக்காமல் குர்ஆன் சுன்னாவைக் கொண்டு உங்கள் தலைவர்களின் வார்த்தைகளை அளந்து கொள்ளுங்கள்.

“யாரொருவர் ஒரு பிரிவின் கீழ் இருந்து அதற்காகப் போராடி அதன் நிமித்தமாகவே கோபமுற்று அதற்காக அழைப்பு விடுத்து அதற்கு உதவி செய்துவரும் வேளையில் கொல்லப்படுகிறாரோ அவர் ஜாஹிலியாவிலேயே மரணக்கிறார்” என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (நூல்: சுனன் நஸயீ)

அல்ஹிதாயா மாத இதழ் மே-2000

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

இகாமதுத்தீன்” இறையாட்சி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

“இகாமதுத்தீன்” (இறையாட்சி) என்றால் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் என்று இவர்களுக்கு தவறாக போதிக்கப்பட்டு விட்டது. இந்த  தவறான போதனை காரணமாக இவர்களது சிந்தனையெல்லாம் உலகிலுள்ள நாடுகளின் ஆட்சிகளைப் பிடிப்பதிலேயே சுழன்று வருகிறது. ஆட்சியைக் கைப்பற்றி விட்டால் மார்க்கத்தை எளிதாக நிலை நாட்டிவிட முடியும் என்று இவர்கள் நம்புகிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை இன்றைய இஸ்லாமிய நாடுகளை இவர்கள் நோட்டமிட்டு பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

உலக  நாடுகளில் இஸ்லாமிய நாடுகள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. ஆயினும் அந்த நாடுகளில் இஸ்லாம் நிலை நாட்டப்பட்டுள்ளதா? இறையாட்சி நடைபெறுகிறதா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வாறு சிந்திப்பார்களேயானால் மனிதன் தன்னில் இறையாட்சியை இகாமத்துத்தீனை நிலை நாட்டாதவரை தனக்கு வெளியில் இறையாட்சியை நிலை நாட்டமுடியாது. இறையாட்சியை தன்னில் நிலைநாட்டும் ஒரு சமுதாயம் அமையாதவரை நாட்டில் இறையாட்சியை நிலைநாட்ட முடியாது. இறையாட்சியை நிலை நாட்டும் சமுதாயம் அமைந்து விட்டால் அடுத்த கணமே ஆட்சி அதிகாரம் அவர்கள் கைக்கு வந்துவிடும் என்பதை எளிதாக விளங்க முடியும்.

பாக்கிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றது முஸ்லிம்களுக்கு கசப்பான சம்பவம். பாக்கிஸ்தான் பிரிவதற்கு ஹிந்து மதவாதிகளே மூலக்காரணமாக இருந்தாலும் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் நிர்ப்பந்த நிலையிலும் சற்று நிதானமாக நடந்திருந்தால் அது முஸ்லிம்களுக்கு நலமாக அமைந்திருக்கும். நடந்து முடிந்த ஒன்றை அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நடந்து முடிந்ததை படிப்பினையாக எடுத்துக் கொள்ளும் நோக்கத்தில் குறிப்பிடுகிறோம்.  ஆனால் அன்றைய முஸ்லிம் தலைவர்கள் ஹிந்து மதவாதிகளின் பிரிவினை வாதத்திற்கு துணை போனதற்கு காரணம் தங்களுக்கென்று ஒரு தனி முஸ்லிம் நாடு அமைந்து விட்டால் இஸ்லாத்தை இறையாட்சியை நிலை நாட்டிவிட முடியுமென்று தப்புக்கணக்கு போட்டதுதான். இதனை பாக்கிஸ்தான் 55 வருட கால அனுபவம் தெளிவாக உணர்த்துகிறது.

பாகிஸ்தானில் இன்றுவரை இறையாட்சி நிலைநாட்டப் படவில்லை என்பது உலகறிந்த உண்மை. பாகிஸ்தானில் இறையாட்சியை நிலைநாட்டப் போகிறோம் என்று கோஷமிட்டுக் தேர்தலில் போட்டியிட்டவர்களை பாகிஸ்தான் மக்கள் மண்ணைச் கவ்வச்  செய்ததும், முஸ்லிம்களே  இஸ்லாமிய ஆட்சியை விரும்பவில்லை என்று இஸ்லாமிய விரோத பத்திரிகைகள் உலகம் முழுதும் செய்தி பரப்பியதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம். இது இஸ்லாத்தின் குறையல்ல. இஸ்லாத்தின் போதனையை விட்டு தங்கள் மனித அபிப்பிராயத்தை புகுத்தி இவர்கள் செயல்பட்டதே காரணமாகும். ஒரு நாட்டின் ஆட்சியை பிடித்து விட்டால் இறையாட்சியை நிலை நாட்டி விடலாம் என்று இவர்கள் தப்புக்கணக்கு போட்டதேயாகும்.

இதனை நமது சொந்தக் கருத்தாகத் தெரிவிக்கவில்லை. நபி(ஸல்) அவர்களின் நடமுறையை வைத்தே சொல்லுகிறோம். நபி(ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மக்காவின் ஆட்சி அதிகாரம் குறைஷ்கள் வசமே இருந்தது. கஃபத்துல்லாஹ்வை தங்கள் மனோ இச்சையின்படி கோவிலாக்கி 360 விக்கரங்களை வைத்து வணங்கி வந்தனர்.  நபி(ஸல்) அவர்கள் இந்தச் செயல் இறைவனுக்கு இணை வைக்கும் அல்லாஹ்வினால் மன்னிக்கப்படாத கொடுஞ்செயல் எனவே அதனை விட்டுவிடுங்கள் என்று போதித்தார்கள். அதாவது அந்த மக்களின் உள்ளத்தில் இறையாட்சி ஏற்பட பாடுபட்டார்கள். அதல்லாமல் கஃபதுல்லாஹ்வை கைப்பற்றி அச்சிலைகளை எல்லாம் அகற்றிவிட்டால் இறையாட்சி ஏற்பட்டுவிடும் என்று கணக்கு போடவில்லை. நான் அல்லாஹ்வின் தூதன் கஃபத்துல்லாஹ் அல்லாஹ்வின் வீடு எனவே நீங்கள் கஃபத்துல்லாஹ்வை என்னிடம் ஒப்ப்டைத்துவிட வேண்டும் என்று வாதாடவில்லை. 10பேர் இருந்தாலும் கஃபத்துல்லாஹ்வை கைப்பற்றுவதற்காகப் போராடி மடிவதே ஜிஹாத் என்று சொல்லி குறைஷ்களை எதிர்த்து ஜிஹாதில் குதிக்கவில்லை.

ஏன் ஹுதைபிய்யா உடன்படிக்கை சமயம் நபி(ஸல்) அவர்களுடன் போராடி மடிவதற்கு உறுதி அளித்துத் தயாராக 1400 தோழர்கள் இருந்தும் காஃபத்துல்லாஹ்வை அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் குறைஷ்கள் கையில்  விட்டு வைக்கக் கூடாது என்று போராடி அதனை கைப்பற்ற எண்ணவில்லை.ஆயினும் அதற்கு முன்பு மதினா நோக்கி முஸ்லிம்களை அழிப்பதற்கென்று வந்த அதே குறைஷ்களுடன் தற்காப்பு யுத்தங்கள் நடத்தி வெற்றியும் அடைந்தனர். கஃபத்துல்லாஹ்வை கைப்பற்றிவிட முடியும் என்பதற்குறிய நம்பிக்கை இருந்தும் அந்த முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. நபித்துவத்திற்கு பின்பும் 21 ஆண்டுகள் கஃபத்துல்லாஹ் குறைஷ் காஃபிர்கள் வசமே இருந்தது. அதனுள் இறைவனுக்கு இணை வைக்கும் விக்ரகங்கள் இருந்து வந்தன. அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று காஃபாவை நோக்கி தொழுது கொண்டுமிருந்தனர். ஆயினும் காலம் கனியுமுன் கஃபாவை கைப்பற்ற எண்ணவில்லை.

ஹுதைபிய்யா உடன்படிக்கைக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இறையாட்சியை நிலை நாட்டும் ஒரு சமுதாயம் அமைந்து விட்டது. எவ்வித போராட்டமோ, இரத்தம் சிந்தலோ இல்லாமல் கஃபத்துல்லாஹ் முஸ்லிம்கள் கைக்கு வந்துவிட்டது. அங்கிருந்த இடையில் வைக்கப்பட்ட விக்ரகங்கள் எல்லாம் உடைத்தெறியப்பட்டு இறையாட்சி அங்கு நிலை நாட்டப்பட்டது. அல்லாஹ்வின் தூதருக்கே அல்லாஹ்வின் வீடான கஃபத்துல்லாஹ்விலேயே இறையாட்சியை நிலைநாட்ட 21 வருடங்கள் தேவைப்பட்டன. அதற்குமுன் அதனை கைப்பற்றும் கற்பனையில் நபி(ஸல்) அவர்கள் மூழ்கவில்லை என்பது தெளிவான ஒரு விஷயமாகும்.

அதுமட்டுமல்ல மக்கா வந்து கஃபத்துல்லாஹ்வை முஸ்லிம்கள் தவாஃபு செய்யும் அவர்களது உரிமையை குறைஷ்கள் மறுத்த சமயத்திலும்  அதனை கைப்பற்றும் முயற்சியில் இறங்காமல் குறைஷ்கள் கெளரவப் பிரச்சினை காரணமாக விதித்த நியாயமற்ற முட்டாள்தனமான கோரிக்கைகள் மூன்றையும் ஏற்றுக்கொண்டு பிரசித்திப் பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையைச் செய்து கொண்டு உம்ரா செய்யாமலேயே மதினா திரும்புகிறார்கள். ஆட்சியைப் பிடிக்குமுன் மக்களிடையே இறையாட்சி ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இதைவிட அழகிய முன்மாதிரி வேண்டுமா?

மக்கா வெற்றிக்கு  முன் மதீனாவில்  நபி(ஸல்)  அவர்கள்  ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் என்று சிலர் வாதிடலாம். மதீனாவின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியிலும் நபி(ஸல்) அவர்கள் இறங்கவில்லை. மதீனாவாசிகளின் அன்சாரிகளின் உள்ளங்களில்  இறையாட்சி ஏற்பட்டு விட்டது. அதனால் நபி(ஸல்) அவர்களை தங்கள் தலைவராக ஏற்று அவர்களுக்கு கீழ் ஒன்றுபட்டு செயல்பட்டார்கள் என்பதே உண்மையாகும். தன்னில் இறையாட்சியை ஏற்படுத்திக் கொண்டவர்களே நபி(ஸல்) அவர்களுக்கு  முற்றிலுமாக வழிபட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் இறையாட்சி ஏற்படுகின்றது என்பதற்கு அடையாளமாக தொழுகை, நோன்பு, ஜகாத் ஹஜ் போன்ற கட்டாய கடமைகளிலும்  மற்றும் நடைமுறைகளிலும் முழுக்க முழுக்க நபி(ஸல்) அவர்களை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

அதில் சிறிய விஷயம் பெரிய விஷயம் என தரம் பிரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சிறிய விஷயமாக இருந்தாலும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையை விட்டு வேறு யாருடைய நடைமுறையை எடுத்துக்கொண்டாலும்  அது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்வதாகும்.

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா? (42:21) என்ற வசனத்தின்படி இணைவைக்கும் கொடிய குற்றமாகும். இவற்றை விளங்கிச் செயல்படுபவர்கள் நபி(ஸல்) அவர்களின் நடைமுறை மட்டுமே அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெற்றது அல்லாஹ் விதித்ததையே நபி(ஸல்) அவர்கள் செயல்படுத்தியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு  மனிதனிடமும், குறைந்த பட்சம் ஒரு சமுதாயமாவது இவ்வாறு அமையாதவரை  ஆட்சியில் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது வீண் முயற்சியாகும். அவ்வாறு முயற்சி செய்து ஆட்சியைப் பிடித்தாலும் அது இறையாட்சியாக அமையாது மனித ஆட்சியாகவே அமையும் என்பதற்கு இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி நடைபெற்று வரும் பல நாடுகள் தக்க சான்றுகளாகும்.

இறைவனைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் உறுதியான நம்பிக்கை இல்லாதவர்களும் தங்களின் சுய வேட்கை காரணமாக இந்த முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபடவே செய்வார்கள். தங்களின் உயிரை பணயம் வைத்தும் பாடுபடுவார்கள். ஆயினும் அவர்கள் பெரும் பலனும் பூஜ்யம்தான். எனவே தன்னில் இறையாட்சியை இகாமத்துத்தீனை நிலை நாட்டாதவர்களைக் கொண்டு நாட்டின் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதைவிட மூடத்தனமான ஒரு முயற்சி இருக்க முடியாது. இப்படிப் பட்டவர்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை. அப்படியே சாதித்தாலும் அதனால் மக்கள் பலன் அடையப்போவதில்லை என்பதை அறிிஞர்கள் உணர வேண்டும்.

ஆட்சியைப்  பிடிக்கும்  மோகம்  ஏற்பட்டுவிட்டால்  மக்களின் ஆதரவைத் திரட்டவேண்டும் என்ற அவாவும் ஏற்பட்டுவிடும். மக்களின் மணங்கோணாதபடி நடக்கா விட்டால் மக்களின் ஆதரவும் கிடைக்காது. மக்களின் ஆதரவை இழந்து விடக்கூடாது என்பதற்காக இறைவனுக்கு இணை வைக்கும் கொடுங்குற்றமான தர்கா சடங்குகளை அவை கொடிய குற்றங்கள்தான் என்பதை நன்கு அறிந்து கொண்டே ஆதரிக்கும் நயவஞ்கர்கள்தான் இன்றைய முஸ்லிம் சமுதாய தலைவர்களாக காட்சி தருகிறார்கள். இப்படிப் பட்டவர்களைக் கொண்டு  முஸ்லிம் சமுதாயத்திற்கோ இஸ்லாத்திற்கோ என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் எப்படி மக்களிடையே வேரூன்றின?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மர்க்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில் அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதைக் காண்போம்.

பழமையை நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதை விரும்பக் கூடியதாகவே மக்களின் மனப்பான்மை அமைந்துள்ளது. ஷைத்தான் உண்மைக்கு முரணானதை மக்கள் மனங்களில் விதைத்து விடுகிறான். மக்களும் அவற்றில் மூழ்கிவிடுகிறார்கள். காலங்கள் சில கடந்தபின் “அவர்கள் செய்யும் காரியங்கள் எவ்வளவு தவறானவை” என்று எவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துக் காட்டினாலும், அந்தத் தவறான வழியிலிருந்து விடுபட்டு நல்வழியை நாட அவர்கள் விரும்புவதேயில்லை. தாங்கள் இவ்வளவு காலம் செய்ததே நேர்வழி என்று எண்ணி அதனைத் தொடர்ந்து  செய்யவே விரும்புகின்றனர்.

கடந்த காலங்களில் இறைவனின் செய்தியை மக்களுக்கு அறிவித்த நபிமார்களைப் புறக்கணித்ததற்கும் இந்த மனப்பான்மையே காரணமாக அமைந்திருந்ததது.  இன்றும் குர்ஆன் ஹதீதுகளை எடுத்துச் சொல்லும்போது அதே மனப்பான்மைத்தான் அவர்களை குர்ஆன், ஹதீஸ்களைப் புறக்கணிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. தங்கள் தவறிலேயே அவர்களை நிலைத்திருக்கச் செய்து விடுகின்றது.

உதாரணமாக ‘ பராஅத்’ விஷேச அமல்கள் பற்றிய பற்றிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டதும், பலவீன மானதாகும் என்று அன்றே ஹதீஸ் கலை வல்லுநர்கள் அடையாளம் காட்டி இருந்தும் அதனை அவர்கள் விடுவதற்குத் தயாராக இல்லை. தங்கள் செயலை எப்படியும் நியாயப்படுத்தியே தீருவது என்ற எண்ணத்தை அவர்கள் பெற்றிருப்பதை நாம் காணமுடிகின்றது. இந்த மனப்பான்மை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளதால், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் அடையாளம் காட்டப் பட்டிருந்தும் அவர்கள் இன்றளவும் அவற்றை நிராகரிக்க முன் வருவதில்லை.

மக்களின் இந்த மனப்பான்மையைப் புரிந்து கொண்ட மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட போலி அறிஞர்கள் அந்த மனப்பான்மையை மேலும் வளர்த்தனர். ‘கோயபல்ஸ்’ தத்துவப்படி அந்தப் பொய்களையே மக்கள் மத்தியில் திரும்பச் திரும்பச் சொல்லி அதை ஊண்மை என்று நம்ப வைத்தனர். வணக்கம் என்ற பெயரால் நன்மை தானே மறுமையில் நன்மையை மிக அதிகமாக அடைந்து கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் பாமர மக்களிடையே இந்த பலவீனமான  இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. இஸ்லாத்திற்கு குர்ஆன் ஹதீஸுக்கு முற்றிலும் முரணான சூபிஸ கொள்கையை இஸ்லாத்தின் பெயரால் மக்கள் மத்தியில் நுழைத்ததால் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நன்றாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திட இதுவும் ஒரு காரணமாகிறது.

ஒருபுறம் அல்லாஹ்வுக்கு அஞ்சிய அறிஞர்கள் போலி ஹதீஸ்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்க மறுபுறம் இந்த போலி அறிஞர்கள் அவைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்து கொண்டிருந்தனர். மக்கள் விருப்பத்தை நிறைவு செய்யும் விதமாக இந்தப் போலிகளின் போலி ஹதீஸ்கள் அமைந்திருந்ததால் உண்மை அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்கள் தான் மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற முடிந்தது. அன்றும் இன்றும் இதே நிலைதான்.

மக்கள் மனோ இச்சைப்படி நடந்தால் தான் அவர்களால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து  இல்லையென்று எண்ணிய முஸ்லிம் மன்னர்களும் இதற்கு ஒரு வகையில் காரணமானார்கள். மார்க்கத்தின் பெயரால் எவ்வளவு அனாச்சராங்கள் நடந்தாலும் நபி(ஸல்) அவர்கள் பெயரால் எவ்வளவு பொய்கள் கூறப்பட்டாலும் அதனை அவர்கள் கண்டு கொள்ளாமலிருந்தனர். அதற்கு எதிராக முயற்சியை மேற்கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த போலி அறிஞர்களின் எதிர்ப்பையும் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு  எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தனர்.

உலக ஆதாயத்தையே நோக்கமாக கொண்ட போலி அறிஞர்களுக்கு பதவி  அதிகாரங்களை வழங்கினர். அந்த அதிகாரத்தின் துணைக்கொண்டு இந்த போலி அறிஞர்கள் நன்றாகவே இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்தனர். தீமைகளில் ஒருவருகொருவர் துணை போனார்கள். இவையே பொய்கள் மக்கள் மனங்களில் மெய்யெனத் தோன்றியதற்கான காரணங்களாகும்.

நல்லாட்சி நடத்திய நாற்பெரும் கலீபாக்கள் கலத்தில் இதுபோன்ற பொய்கள் காணப்பட்டபோது உடனுக்குடன் அவற்றுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அனாச்சாரங்கள் தலைதூக்க அவர்கள் இடம் தரவே இல்லை. அதனால் மார்க்கம் கலப்படமில்லாமல் பாதுகாப்பாக இருந்தது.

ஹதீஸ்கள் என்றால் இஸ்லாமிய வழக்கில் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மட்டுமேயாகும். இன்று மக்களிடையே காணப்படும் ஹதீஸ்கள் தெளிவாகத் தரம் பிரிக்கப்பட்டு அதாரப்பூர்வமான ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் என சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு விட்டன.

மக்களின் அறியாமையையும், முன்னோர்களின் கண் மூடிப் பின்பற்றலும் தவறான பழக்கத்தையும் தங்களுக்கு சாதகமாகப் பயனபடுத்தி போலிகள் தங்கள் அற்ப  உலக ஆதாயத்திற்காக அடையாளம் காட்டப்பட்ட, இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களை நன்கு தெரிந்து கொண்டே மக்களிடையே பரப்பி வருகின்றனர். எனவே மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தத்தையும் உயர் பதவிகளையும் அடைய விரும்பும் உண்மை முஸ்லிம்கள் இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களை விட்டு,  ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் எடுத்து நடக்க அன்புடன் அழைக்கிறோம்.

நபிவழி தொகுப்பு வரலாறு
புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மத வியாபாரம்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாத்தில் ஜோதிடம் இல்லை; அதே நேரத்தில் இஸ்லாமியர்களிடம் இந்த ஜோதிடம் எந்த அளவுக்கு இடம் பெற்றுள்ளது என்பதை நாம் அலசக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்திய முஸ்லிம்களிடம் ஜோதிடம் சாதரணமாகப் புழக்கத்தில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதிலும் 50 சதவிகிதம் பேர் இஸ்லாமிய ஜோதிடர்களிடம் மட்டுமே  செல்லக்கூடிய அளவுக்கு ஈமானிய பலம்(!)  உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், ஜோதிடத்திற்கு எதிரான குர்ஆன் ஆயத்துகளும், ஹதீதுகளும் மாற்று மதத்தாரிடம் ஜோதிடம் கேட்பதைத்தான் தடுக்கின்றன; நம்ம மார்க்க மேதைகளான ஆலிம்களிடம் ஜோதிடம் பார்ப்பதை அல்ல என்றே நம்புகிறார்கள். அதாவது, நம்ம கையைக் கொண்டே நம் கண்ணைத் தோண்டினால் வலிக்காது என்ற மூட நம்பிக்கை.

அவர்களைச் சொல்லி குற்றமில்லை. காலங்காலமாய் மக்களுக்கு மார்க்கத்தில் இருந்த அறியாமையைப் பயன்படுத்தி, தங்களின் பிழைப்புக்காக அவர்களிடம் மூடநம்பிக்கைத் தீயை அணையவிடாமல் நெய்யூற்றிவரும் இந்தச் சமுதாயத்தின் ஒரு சில ஆலிம்கள் தான் இங்கே குற்றவாளிகள்.

நம்ம மக்களுக்கு அரபியில் இருப்பதெல்லாம் வேத வாக்கு. அரபி பேசத் தெரிந்தவர்கள் எல்லாம் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள் என்ற  நம்பிக்கை. அபூஜஹிலுக்கும், அபூலஹபுக்கும்  தெரியாத அரபியா? இன்று இஸ்லாத்தை கருவறுக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்ற யூதர்களுக்கெல்லாம் நம்ம ஆலிம்களைவிட இலக்கணச் சுத்தமாக அரபி தெரியும். அவர்களெல்லாம் அல்லாஹ்வின் நேசர்களா என்பதைச் சிந்தித்து பார்க்கவேண்டும்.

இந்த தவறான நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்டு ‘பால்கிதாபு’ என்கிற ஜோதிட புத்தகத்தை அரபிதமிழ் என்ற பாசையில் எழுதிவைத்துள்ளனர். உதாரணமாக ‘அவன்’ என்ற வார்த்தையை அலிஃப், வாவ், நூன் என்று எழுதுவது. இதுதான் பால்கிதாபு. நியுமராலஜி என்கின்ற எண் கணித சாஸ்திரமே இது. நம்ம பேரு, அத்தா பேரு, அம்மா பேரு எல்லாருடைய பேரையும் எழுதி கூட்டிவரக்கூடிய நம்பருக்கு ஜோதிடம் சொல்வது. இவை அரபியில் இருப்பதாலும், பார்ப்பவரும் ஏழு வருடம் மதரஸாவில் ஓதி ஸனது பெற்ற ஆலிமாக இருப்பதாலும் இந்த ஜோதிடம் ஹலாலான விஷயம்தான் என்று நம்மவர்கள் நம்பி விடுகிறார்கள்.

அல்லாஹ் விதித்த விதியை அவன் மறைவாய் வைத்திருக்கும் போது அதைக் கணித்துச் சொல்கிறேன் என்று  சொல்பவர் யாராக இருந்தாலும், அவர் அல்லாஹ்வுக்கு நிகராகத் தன்னைப் பிரகடனப் படுத்திவிட்டார் என்றே அர்த்தம். அவரிடம் சென்று தங்கள் காரியங்களுக்கெல்லாம் நல்ல நாள் பார்ப்பது உள்ளிட்ட எல்லாமே ஷிர்க் (இணைவத்தல்) என்பதை உணரவேண்டும்.

இது போன்ற ஆலிம்கள் ஜோதிடம் பார்ப்பதையும், மந்திரவாதம் பார்ப்பதையும் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். இந்த ஆலிம்களிடம் சென்று மறுமைக்கான பாவத்தைச் சேர்ப்பது ஒருபக்கம் இருக்க, இம்மையில் ஏற்படும் நஷ்டமோ சொல்லிமாளாது. இவர்களிடம் நோயென்று போனால் எந்த நோயையுமே நோயென்று பார்ப்பதில்லை. ஒன்று பேயென்று சொல்வார்கள்;  அல்லது செய்வினை என்று சொல்வார்கள். அதற்கு பரிகாரம் என்ற பெயரில் பெரிய லிஸ்ட் போட்டு பணத்தை கறப்பார்கள். அதையெல்லாம் சிறமேற்கொண்டு செய்தும் நோய் தீராமல் ஊரிலே இருக்கின்ற அத்தனை டாக்டர்களிடமும் போய் மாத்திரை வாங்கித் தின்பார்கள். என்னய்யா இப்படி? என்று கேட்டால் “பேய்க்கும் பார்க்கணும், நோய்ய்க்கும் பார்க்கணும்னு சொல்லியிருக்காங்கள்ள” என்பார்கள்.


நபிமார்களின் வரிசுகளாகிய ஆளிம்களே, ஆலிம்களை உருவாக்கும் மதரஸா முதல்வர்களே, பேராசிரியர்களே, இதுபோன்ற ஜோதிட ஆலிம்சாக்களைப் போலிகள் என்று இனம் காட்ட முன்வாருங்கள்.  முன்வருவார்களா?

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த