இஸ்லாம்தளம்

மார்ச்26, 2009

அழைப்புப் பணியில் தவறான சிந்தனை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அழைப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் அசல் நோக்கம் மறுமையாக அல்லாஹ்வைத் திருப்தி படுத்துவதாக ருந்தால் மக்கள் சத்தியத்தை மறுப்பதைக் கொண்டு விசனப்படாமல் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் நாம் செயல்பட வேண்டும் என்ற தப்பான முடிவுக்கு வராமல் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். மக்கள் அனைவரும் அவர்களை ஒதுக்கி தள்ளினாலும் அதனால் கவலைப்பட மாட்டார்கள். தன்னைப் பின்பற்றும் ஒரு நபர் கூட இல்லாத நிலையிலும் தனது பணியை செவ்வனே செய்த பல நபிமார்கள் அல்லாஹ்வின் திருப்தியுடன் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற நபிமொழியின் கருத்தை மனதில் கொண்டு உறுதியுடன் சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள்.

ஆனால் அதற்கு மாறாக மறுமையைக் குறிக்கொளாகக் கொள்ளாமல் இவ்வுலகில் பதவிகளையோ, புகழையோ, பொன்னையோ, பொருளையோ குறிக்கோளாகக் கொண்டு மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற மக்களின் திருப்தியைப் பெறவே குறியாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இது மனித இயல்பு. இதனை விட்டும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் தப்ப முடியாது. இது பற்றி நபி (ஸல்) அவர்களையே அல்லாஹ் இவ்வாறு எச்சரிக்கிறான்.

(நபியே) தீயவை அதிகமாக ருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும் “தீயதும், நல்லதும் சமமாகா எனவே அறிவாளிகளே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றி யடைவீர்கள்” என்று கூறுவீராக (அல்குர்ஆன் 5:100)

மேலும் மனிதர்களின் சில விருப்பங்களை ஏற்றுக் கொள்ளும்போது அவர்கள் நம்மை தங்கள் உற்றநன்பர்களாக ஆக்கிக் கொள்வார்கள். மக்களின் ஆதரவு அமோகமாக கிடைக்கும். அதே சமயம் அதன் பின் விளைவு மகா பயங்கரமானது என்பதை அழைப்புப் பணியாளர்கள் உணர வேண்டும். அது குறித்து அல்லாஹ் நபி (ஸல்) அவர்களையே எச்சரித்துள்ள வசனங்கள் வருமாறு :

(நபியே!) ன்னும் நாம் வஹீ மூலம் அறிவித்தோமே அதைவிட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பி விடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்)உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

மேலும், நாம் உம்மை (உண்மையான பாதையில்) உறுதிபடுத்தி வைத்திருக்க வில்லையெனில் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல்கூடும்.(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் 17:73-75)

குர்ஆனின் ந்த எச்சரிக்கைகளை எல்லாம் கூர்ந்து நிதானித்து செயல்படும் சத்தியப் பிரசாரகன் எந்த நிலையிலும் மக்கள் கோபப்படுகிறார்கள், தனது சொல்லை செவிமடுக்க மறுக்கிறார்கள் என்ற காரணத்திற்காக உள்ளதைத் உள்ளபடி சொல்லுவதிலிருந்தும் பின் வாங்க முடியாது. மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சிலதை விட்டு சிலதை சொல்லும் ஷைத்தானின் துர்போதனைக்கு ஆளாக மாட்டார்கள். இவர்கள் புத்தியில் சிறிய விஷயங்களாகப் படுபவற்றையெல்லாம் சொல்லாமல் விட்டு, இவர்கள் புத்தியில் பெரிய விஷயமாகப் படுபவற்றை மட்டும் சொல்லும் குற்றச் செயலுக்கு ஆளாக மாட்டார்கள். அதாவது மார்க்கப் பிரசாரத்தில் தங்கள் மனித புத்தியை நுழைக்க முற்படமாட்டார்கள். விளைவுகள் தங்களின் சொந்த முயற்சிகளிலும், தங்களின் அனுமானங்களிலும் தங்கி இருக்கின்றன என தப்புக் கணக்குப் போடமாட்டார்கள்.

விளைவைப் பற்றி அக்கறைப்படாமல் அல்லாஹ்வின் உத்திரவுகளை எடுத்து வைப்பதே எமது கடமை என்பதைச் செவ்வனே உணர்ந்து செயல்படுவார்கள். “ன்னும் எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (அல்குர்ஆன் 36:17)

ந்த அல்லாஹ்வின் தெளிவான கட்டளையை சிரமேற்கொண்டு குர்ஆனிலும் ஹதீஸிலும் இருப்பதை மக்கள் முன் எடுத்து வைப்பதைவிட வேறு அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து செயல்படுவார்கள். தங்கள் மனித அறிவைக் கொண்டும் அனுமானங்களைக் கொண்டும் மார்க்க பிரசாரத்தைத் திறம்பட செயல்படுத்த முடியும் என்ற அல்லாஹ்வை மறந்த எண்ணத்தை ஒரு போதும் மேற்கொள்ள மாட்டார்கள். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவர்களால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.

இது விஷயத்தில் யார் அல்லாஹ்வின் அருளைப் பெறவில்லையோ அவர்கள் மட்டுமே அல்லாஹ்வை மறந்து தங்கள் சொந்த புத்தியைக் கொண்டும், முயற்சிகளைக் கொண்டும், மக்களின் ஆதரவைக் கொண்டும் சாதித்துவிட முடியும் என்ற நச்சுக் கருத்துக்கு ஆளாவார்கள். தங்கள் சொந்த புத்தியில் உதித்ததைச் செயல்படுத்துவது கொண்டு மக்களில் ஒரு கூட்டம் அவர்களை நம்பி, அவர்கள் பின்னால் வர ஆரம்பித்து விட்டால் அவர்கள் தாங்கள் பெரிதாகச் சாதித்து விட்டதாக மனப்பால் குடிப்பார்கள். நேர்வழியில் இருக்கும் வரை கூட்டம் குறைவாக இருக்கும் நிலை மாறி வழிதவறி விட்டால் பெருங்கூட்டம் பின்னால் வர ஆரம்பித்துவிடும் என்ற உண்மையை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவிரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (6:116)

மக்கள் நம் கருத்துக்களை ஆர்வமாகக் கேட்டு ஏற்றுக் கொள்கிறார்கள், கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பதெல்லாம் நாம் நேர்வழியில் நடக்கிறோம் என்பதற்கு உரைகல் அல்ல.
ன்று வழிகேட்டில் உச்ச கட்டத்தில் இருப்பவர்களின் பின்னால்தான் பெருங்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் நேர்வழியில் ருக்கிறோம் என்பதற்கு சரியான அளவுகோல் குர்ஆனும் ஹதீஸும் ஆகும். அவை எடுத்துச் சொல்லுபவை சிறிய விஷயங்களாக இருந்தாலும், பெரிய விஷயங்களாக இருந்தாலும், சிறிது பெரிது என கொள்ளாமல் மக்கள் முன் எடுத்து வைப்பதே பிரசாரகனின் கடைமையாகும். நமது கடமைகளைச் செவ்வனே செய்யும் உண்மைப் பிரசாரகர்களாக அல்லாஹ் நம்மை ஏற்று அருள் புரிவானாக.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

கோஷ்டி மனப்பான்மை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்  சமுதாயம்  பேச்சளவில்  ஒரே  உம்மத்  எனும்  சமுதாயத்தவராகவே இருக்கிறார்கள். இத்தனை பெரிய சமுதாயம் உண்மையிலேயே ஒன்றுபட்டால் முழு ஒற்றுமையோடு இறைவனின் வார்த்தையை உயர்த்துவதற்கு வேலை செய்தால் கண்ணியமும், சிறப்பும் அவர்களின் காலடியில் விழ எந்த வினாடியும் தயாராக இருக்கும். ஆனால் இன்று பல கோஷ்டிகளாக பிரிந்து கிடக்கிறது. இப்படிப்பட்ட கோஷ்டி மனப்பான்மையால், தமது சமுதாயத்தையும், தமது பள்ளிவாசல்களையும் தனியாக்கிக் கொண்டார்கள். ஒருவன் மற்றவனை திட்டுகிறான். பள்ளிவாசலிருந்து அடித்து விரட்டப்படுகிறான்! வம்பும் வழக்கும் நடத்தப்படுகின்றன. இப்படி முஸ்லிம் சமுதாயத்தை துண்டு துண்டாக்கிப் போட்டுவிட்டார்கள்.

சண்டை போடுகிற போட வைக்கின்றவர்களின் உள்ளம் இதிலும் அமைதி அடையாத போது, சின்ன சின்ன விஷயங்களில் எல்லாம் ஒருவனை மற்றவன் காஃபிர் என்றும் பாவி என்றும் வழிகெட்டவன் என்றும் அழைக்க ஆரம்பிக்கிறான். கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்து போகிறார்கள். தனிக்குழு அமைக்கிறார்கள். தமது தொழுகையையும், பள்ளிவாசல்களையும்  தனியாக்கிக் கொள்கிறார்கள். ஒரு சாரார்  மறுசாராருடன் கலந்து  பழகுவது, மற்ற  வகையில் தொடர்பு வைப்பது அனைத்தையும் தடை செய்து விடுகிறார்கள். தாம் தனிப்பட்டதொரு சமுதாயம் என்பதுபோல் அவர்கள் தமது மத்ஹபுக்கென்று வழிமுறைக்கென்று தனிக்குழு அமைத்துக் கொள்கிறார்கள். இதனால் முஸ்லிம்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை உங்களால் கணக்கிட முடியாது.

ஆனால், உண்மையில் இப்படி கோஷ்டிகள் அமைந்த காரணத்தால் இந்தச் சமுதாயம் நூற்றுக்கணக்கான துண்டுகளாகி விட்டது; மேலும் சிதறிக் கொண்டிருக்கிறது. மிகக் கொடுமையான துன்பங்கள் சூழ்ந்திருக்கிற இந்த நேரத்தில் அவர்களால் ஒன்று சேர்ந்து நிற்க முடியவில்லை! ஒரு பிரிவில் இருக்கிற முஸ்லிம்கள் மற்றொரு  பிரிவினர் மீது  வெறுப்புக் கொள்கிறார்கள். இன்னும்  சொல்லப்போனால்  அதைவிட  அதிகமாகவே வெறுப்புக் கொள்கிறார்கள். ஒரு சாரார் மறு சாராரைத் தாழ்த்தும் எண்ணத்தினால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள்.

இந்தச் சூழலில் முஸ்லிம்களைத் தாழ்ந்தவர்களாகவும், இழிந்தவர்களாகவும் நீங்கள் காண்கிறீர்கள் என்றால் அது அவர்கள் கைகளாலேயே சம்பாதித்துக் கொண்டதுதான்! இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிட்டு இருக்கின்ற தண்டனை அவர்கள் மீது இறங்கியிருக்கிறது.

“உங்களை பல்வேறு கூட்டங்களாகப் பிரித்து, உங்களில் ஒரு கூட்டத்தார் கொடுக்கும் துன்பத்தை மற்றொரு கூட்டத்தார் சுவைக்கும்படிச் செய்யவும் ஆற்றலுள்ளவன்” (6:65)

மேற்குறிப்பிட்ட பிரிவினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை முஸ்லிம்கள் அனைவரும் அனுபவிக்கிற இந்தத்  தண்டனையிலிருந்து  விடுதலை  பெறவே முடியாது!  எனவே  நீங்கள் தாமதம் எதுவுமின்றி அந்தப் பிரிவினைகளை விட்டொழியுங்கள்! ஒருவருக்கொருவர் சகோதரராய் ஆகிவிடுங்கள்;  ஒரே சமுதாயமாய் ஆகி விடுங்கள். இறை மார்க்கத்தின் அடிப்படையில் அஹ்ல ஹதீஸ், ஜாக்ஹ், தவ்ஹீ ஜமாஅத், ஹனபி, ஷாபி, தேவ்பந்தீ, பரேலவி, ஷியா, ஸன்னி எனும் வகையில் தனிதனிக் குழுக்கள் உருவாக முடியாது. இந்தக் குழுக்கள் எல்லாம் அறியாமையினால் தோற்றுவிக்கப்பட்டவை. இறைவன் தனது உம்மத்தாக ‘இஸ்லாமிய சமுதாயம்’ என ஒரே ஒரு சமுதாயத்தைதான் அமைத்திருக்கிறான்.

எனவே அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே இக்குழுக்களை நம்பி செயல்படுவதை கைவிடுங்கள். இந்த நிலையில் இந்திய நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் தக்க கவனம் செலுத்தி குர்ஆன், ஹதீதுகளின் போதனைகளை எடுத்து நடக்க முற்படாவிட்டால் இன்னும் பல தீய விளைவுகளை முஸ்லிம் சமுதாயம் சந்திக்க நேரிடும் என்ற கசப்பான உண்மையை நம்மால் மறைக்க முடியாது.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அனாச்சார சடங்குகள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே நேரான மார்க்கத்தில் மனித அபிப்பிராயங்களையும், யூகங்களையும் புகுத்தியதால் பொதுவாகப் பல மதங்கள் தோன்றியிருக்கின்றன. எனவே மனித யூகங்களால் பெறப்பட்ட மதங்களில் மாற்றாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவுப்படுத்தப் பட்டிருக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.. எனவே மதவாதிகளால் தீய சக்திகளால் வகுப்பு, இன, மதக் கலவரங்கள் தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

இந்த நிலையில் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நாம் நமது கடமை என்ன? மாற்று மதத்தாருடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று குர்ஆனும் ஹதீதுகளும் போதிக்கின்றன என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இந்த தெளிவான் அறிவு இல்லாத காரணத்தினால் அறிந்தோ, அறியாமலோ தீய சக்திகளுக்கு இவர்களும் துணைபோகும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

இந்த நிலையில் இந்திய நாட்டில் சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்கள் தக்க கவனம் செலுத்தி குர்ஆன், ஹதீதுகளின் போதனைகளை எடுத்து நடக்க முற்படாவிட்டால் இன்னும் பல தீய விளைவுகளை முஸ்லிம் சமுதாயம் சந்திக்க நேரிடும் என்ற கசப்பான உண்மையை நம்மால் மறைக்க முடியாது.

இஸ்லாம் அனுமதிக்காத பல அனாச்சாரங்களை இஸ்லாத்தின் பேரிலேயே நடைமுறைப் படுத்தி வருவதால், வகுப்பு கலவரங்கள் ஏற்பட முஸ்லிம்களும் துணை போகிறார்கள் என்ற உண்மையை நாம் மறுக்க முடியாது. இந்தியாவில் நடந்துள்ள பெரும்பாலான கலவரங்களை நாம் உற்று கவனிக்கும்போது மீலாது, பஞ்சா, உரூஸ் ஊர்வலங்கள், தர்கா சடங்குகள், இன்னும் இதுபோன்ற இஸ்லாத்தில் எள்ளளவும் ஆதாராமில்லாத அனாச்சார புதுமைகள் (பித்அத்) சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் நடத்த முற்படும்போது கலவரங்கள் ஏற்பட்டுள்ளதை காண்கிறோம். இந்த அனாச்சார சடங்குகளை முஸ்லிம்கள் தவிர்த்திருப்பார்களானால் பல கலவரங்கள் இடம்பெற வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும் என்பதை முஸ்லிம்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும்.

தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு மாற்று மதத்தினர் நடைமுறைப் படுத்தும் அனாச்சாரங்களை ஒரு சில வித்தியாசங்களோடு இவர்களும் செய்துவருவதால் முஸ்லிம்களும் சடங்குகளில் நம்பிக்கை உள்ளவர்கள் தான் என்று மாற்று மதத்தினர் இஸ்லாத்தைப் பற்றி குறைவாக நினைக்கும் விதத்திலேயே இவர்களின் செயல்கள் அமைந்து விடுகின்றன.

இதற்கு மாற்றமாக குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஆதாரமில்லாத சடங்குகள் அனைத்தையும் ஒழித்துக்கட்டி இஸ்லாம் கூறும் மார்க்க நடைமுறைகளை உள்ளச்சத்தோடும், உறுதியோடும் கடைப்பிடிப்பார்களேயானால் இவர்களின் இச்செயலை பார்க்கும் மாற்று மத சகோதரர்களும் உண்மையான வாழ்க்கை நெறி இஸ்லாத்தில் தான் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து அவர்களும் இஸ்லாத்தை தழுவும் சந்தர்ப்பங்கள் பல ஏற்படலாம். குறைந்த பட்சம் துவேஷ மனப்பான்மையோடு முஸ்லிகளோடு நடந்து கொள்வதை விட்டு சிநேக மனப்பான்மையோடு பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

குர்ஆன்,  ஹதீதுகளை தவிர்த்துவிட்டு பின்னால்  வந்தவர்களின் அபிப்பிராயங்களை ஆதாரமாகக் கொண்டு  நாம் செயல் படுவதால்  மாற்று  மதத்தாருடன் இருக்க வேண்டிய உறவுகள்  துண்டிக்கப்பட்டு துவேஷ மனப்பான்மையும், அது முற்றிக் கலவரங்களும் ஏற்பட நமது இந்தச் செயல்களும் காரணமாக அமைந்து விடுகிறது. சடங்கு  சம்பிரதாயங்கள்  மூலம்  விஷக் கருத்துக்களை  முஸ்லிம்  சமுதாயத்தில்  விதைப்பவர்கள்  அவற்றின் தீய விளைவுகளைச் சிந்தித்து தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அல்குர்ஆன் யாருக்குச் சொந்தம்?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் ன்று அல்குர்ஆன் தங்களுடைய வேத நூல் எனவே அது தங்களுக்குறியதே என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். அதனால் அதனை முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்டால் அதனை அவர்களுக்கு கொடுக்க மறுத்து விடுகின்றனர். அவர்கள் அசுத்தமானவர்கள்; எனவே அவர்கள் அதைத் தொடக்கூடாது என்று சட்டம் வகுத்துள்ளனர். எனவே முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனைப் படித்து விளங்கி அதிலுள்ள உயர்ந்தகருத்துகளை அறியும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் குர்ஆனை தங்களுடைய  நூல் என்று சொந்தம் பாராட்டுவதால் அவர்களும் அதை நம்பி தங்களுக்கும் குர்ஆனுக்கும் எவ்வித சம்பந்தமில்லை என்று ஒதுங்கிக் கொள்கின்றனர்.

குர்ஆன் முஸ்லிம்களுக்குரிய வேதம் எனக்குறுகிய துவேஷ கண்ணுடன் பார்க்கின்றனர். அதே சமயம் முஸ்லிம்களாவது தினசரி ஓதி உணர முற்படுகிறார்களா? என்றால் அதுவும் ல்லை. முஸ்லிம்களுடைய வீடுகளில் பெரும்பாலும் குர்ஆன் அழகிய பட்டு உரையால் போர்த்தப் பட்டு பரணியில் கைபடாத இடத்தில் பத்திரமாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அதை எடுத்துப்பார்த்தாலே  அதன் மேல் தூசுகள் படிந்திருக்கும். அது கீழே இறக்கப்பட்டு தூசி தட்டப்பட்டு கூலிக்கு ஆள் பிடித்து இறந்தவருக்காக ஓதப்படும். அந்த சமயத்தில் கூட வீட்டிலுள்ளோர்  அதை ஓத முற்படமாட்டார்கள்.

உயிரோடுள்ளவர்கள் ஓதி உணர்ந்து அதன்படி செயல்பட வேண்டிய முஸ்லிம்கள், அந்த குர்ஆனை றந்தவர்களுக்கு கத்தம் பாத்திஹா என்று ஆக்கி வைத்திருக்கிறார்கள். மிஞ்சி மிஞ்சிப்போனால் தகராறு, பிரச்னை ஏதும் வந்துவிட்டால் குர்ஆனை வைத்து சத்தியம் செய்வார்கள். இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதும், குர்ஆனை வைத்துச் சத்தியம் செய்வதும் அந்த குர்ஆனின் போதனைக்கே முரணான செயல்கள் என்பதையும் பெரும்பான்மை முஸ்லிம்கள் அறியமாட்டார்கள்.

குர்ஆனை ஒளூ ல்லாமல் தொடக்கூடாது; அது பாவம் என்று இந்த முல்லாக்கள் சட்டம் வகுத்து வைத்திருப்பதை இந்த முஸ்லிம்கள் அப்படியே வேதவாக்காகக் கொண்டு குர்ஆனுக்கு அருகில் வருவதைக் கூட பயப்படுவார்கள். தொழுது வரக்கூடிய  ஒரு சில முஸ்லிம்கள்  தொழுது முடித்து வீட்டுக்குக் கிளம்பும் முன்னர் பள்ளியிலிருக்கும் குர்ஆனை  எடுத்து திறந்து தலையில் வைத்து பின்னர் முத்தம் கொஞ்சி அப்படியே மீண்டும் இருந்த இடத்தில் மூடி வைத்துவிடுவார்கள். அவர்கள் குர்ஆனுக்குச் செலுத்தும் அதிகபட்ச மரியாதை அவ்வளவுதான்.

தப்லீகில் சென்று வரும் முஸ்லிம்களோ தினசரி ஒரு ஜுஸ்வு ஓத வேண்டும் என்ற கட்டாயத்தில்  தவறாமல் பொருள் அறியாமல் கடகட என ஓதி அதன் பொருள் அறியாமல் ஓதி வருவார்கள். அவர்கள் அந்தக் குர்ஆனில் ஓதிவரும் எத்தனையோ வசனங்கள் அவர்கள் செய்து வரும் பல மார்க்க முரணான மத்ஹபு சார்ந்த செயல்களை வன்மையாகக் கண்டித்துக் கூறும். ஆனால் அவர்கள் பொருள் அறியாமல் ஓதி வருவதால்  குர்ஆனின் கண்டனங்கள் ஒன்றும் அவர்களின் உணர்வுகளைத் தூண்டாது. மவ்லவிகள் அப்படிப்பட்ட வசனங்களின் பொருள் உணர்ந்து ஓதினாலும்  அது தங்களூக்கு டப்பட்ட கட்டளைகள் அல்ல. காபிர்களைப்  பார்த்து சொல்லப்பட்ட கண்டனங்கள் என்று அசட்டுத்தனமாக இருந்து விடுகிறார்கள்.

குர்ஆன்  தமிழ் மொழி பெயர்ப்பைப் பார்த்து பொது மக்களில் யாரும் ந்த மவ்லவிகளிடம் வந்து இந்த வசனனங்களுக்குரிய விளக்கத்தைக் கேட்டால், இந்த மவ்லவிகள் சிறிதும் கூசாமல் இந்த வசனங்கள் முஸ்லிம்களூக்கு அல்ல; யூதர்களுக்கு அல்லது கிறிஸ்தவர்களூக்கு காபிர்களுக்கு என்று பதில் அளித்து விடுகிறார்கள். முஸ்லிம் பொதுமக்களும் மவ்லவிகளின் அசட்டுத் தனமான பதிலை அப்படியே வேதவாக்காகக் கொண்டு மீண்டும் அவர்கள் செய்து வரும்  அத்தவறுகளையே  செய்யத் துணிகின்றனர். எனவே குர்ஆன் அப்படிப்பட முஸ்லிம்களைச் சபித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிய மாட்டார்கள்.

பொதுவாக அல்குர்ஆன் யாருக்குச் சொந்தம் என்று வரும்போது அது எங்களுக்கே சொந்தம் என்று நெஞ்சில் அடித்துப் பேசும் முஸ்லிம்கள், அதனுள்ளே உள்ள வசனங்கள் பற்றி வரும்போது து யூதர்களுக்கு; இது கிறிஸ்தவர்களுக்கு; இது காபிர்களுக்கு என்று பெரும்பாலான வசனனங்களை முஸ்லிம் அல்லாதவர்களுக்காக ஆக்கிவிடுகிறார்கள். அதாவது அல்குர்ஆனின் பெரும்பகுதி முஸ்லிம்களுக்குரியதல்ல, முஸ்லிம் அல்லாத யூத, கிறிஸ்த்தவ, நிராகரிப்பாளர்களுக்குரியது என்று கூறி விடுகிறார்கள். அப்படியானால் அல்குர்ஆன் தங்களுக்குரியது என்று பெரும்பான்மை முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடுவதில் எதுவும் பொருள் இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

உண்மை என்ன தெரியுமா? அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்காகவும் அந்த மக்களை படைத்துப் போஷித்து வரும் அகிலங்களின் றைவனான அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இறுதி வேதமாகும்.(அல்குர்ஆன் 6:90, 42:7, 81:27)  அந்த குர்ஆனின் உபதேசங்களை ஏற்று அதன்படி வழி தவறாமல் நடப்பவர்கள், குர்ஆனின் நன்மாரயத்தைப் பெறுகிறார்கள். அந்த குர்ஆனின் உபதேசத்தை தங்களின் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு தங்களின் மூதாதையர்களின், முன்னோர்களின், இமாம்களின், பெரியார்களின், வலிமார்களின், மவ்லவிகளின், ஆலிம்களின் உபதேசங்கள் என்று கூறி மனிதக் கற்பனைகளை யாரெல்லாம் எடுத்துச் செயல்படுகிறார்களோ அவர்கள் அனைவரையும் குர்ஆன் சபிக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் உணர்ந்து கொள்வார்களாக.

அவர்கள் முஸ்லிம் அல்லது முஸ்லிம் அல்லாத குடும்பங்களில் பிற்ந்திருந்தாலும் சரி, முதலில் பிறப்பினால் நாங்கள் முஸ்லிம்கள்; அதனால் குர்ஆனுக்குச் சொந்தக்காரர்கள் என்ற வாதத்தை முஸ்லிம்கள் விட்டுவிட வேண்டும். பண்பில்லா, மனித நேயம் மறந்த மக்களால் மிகக் கேவலமாக ழிவாக மதிக்கப்படக்கூடிய ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும், அவர் இந்த குர்ஆனின் போதனைகளை ஏற்று அல்லாஹ்வை மட்டும் ஒரே இறைவனாக ஒப்புக்கொண்டு அவனை மட்டுமே வணங்கி அவனிடம் மட்டுமே தனது தேவைகளைக் கேட்டு, படைக்கப்பட்ட மலக்குகள், அவுலியாக்கள், இமாம்கள், பெரியார்கள், முன்னோர்கள், மூதாதையர்கள் ஆகிய படைப்பினங்களை வணங்குவதை விட்டும், அவர்களிடம் தனது தேவைகள் குறித்து முறையிடுவதை விட்டும், தனது வேண்டுதல்களை வைப்பதை விட்டும் முற்றிலுமாக விலகிக்கொண்டாரோஅவரே அல்லாஹ் பொருந்திக் கொள்ளும்  உண்மை முஸ்லிமாக இருக்க முடியும்.

ஸ்லாமிய வாழ்க்கை நெறியும் அல்குர்ஆனும் பிறப்பின் அடிப்படையில் யாருக்குமே சொந்தம் இல்லை. யாரெல்லாம் இஸ்லாத்தின் ஏவல் விலகல் கட்டளைகளை எவ்வித சுய விளக்கமும் கொடுக்காமல் அப்படியே ஏற்று, அதன்படி வழுவாமல் நடந்து வருகிறார்களோ அவர்களே அந்த குர்ஆனுக்குச் செலுத்த வேண்டிய மரியாதையை உரிய முறையில் செலுத்தியவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறப்பால் எக்குலத்தில் பிறந்தாலும், பிற மக்களால் மிக இழிவாக வெறுத்து ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருந்தாலும் அவர்கள் மக்களில் மிக உயர்ந்தவர்களே.

அதற்கு மாறாக பிறப்பால் மிக மிக உயர் குலத்தில் பிறந்தாலும், முஸ்லிம் தாய், தகப்பனுக்கே பிறந்திருந்தாலும் ஸ்லாத்தின் ஏவல் விலக்கல்களைப் புறக்கணித்து அல்லது அவற்றிற்கு சுய விளக்கம் கொடுத்து தங்களின் மனோ இச்சையின் படி நடக்கிறார்களோ அவர்களை நாளை மறுமையில் முஸ்லிம்களுடைய பதிவேட்டில் அல்லாஹ் சேர்க்க மாட்டான். உலக மக்கள் அனைவரின் இறைவனான அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்குர்ஆனை ஓதி உணர்ந்து அதன்படி செயல்படாதவர்களுக்காக நாளை மறுமையில் அந்த குர்ஆனும் பரிந்துரை செய்யாது.

எனவே முஸ்லிம்கள் முஸ்லிம் தாய், தகப்பனுக்குப் பிறந்த ஒரே காரணத்தால் தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதை விட்டும் விலகிக் கொள்வார்களாக. அது கொண்டு றைவனின் இறுதி வேதமான அல்குர்ஆன் தங்களுக்கே சொந்தம் என்ற குருட்டு வாதத்தையும் விட்டொழிப்பார்களாக. அல்குர்ஆனை முஸ்லிம் அல்லாத தாய், தகப்பனுக்குப் பிறந்தவர்கள் ஓதி உணர்வதை தடுக்காதிருப்பார்களாக. அவர்கள் அசுத்தமானவர்கள்;  அவர்களுக்குக் குர்ஆனை கொடுக்கமாட்டோம் என்று வீண்வாதம் செய்யாதிருப்பார்களாக.

குர்ஆன் முஸ்லிம்களாகிய எங்களுக்கே சொந்தம்; எங்களது வேதம் என்ற முட்டாள் தனமாக சொந்தம் கொண்டாடுவதை விட்டும் விலகிக் கொள்வர்களாக. அது கொண்டு மற்றவர்கள் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம்; அவர்களுக்குரிய வேதப்புத்தகம்; நமக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் ல்லை என்ற தவறான எண்ணத்தில் அதைப் புறக்கணிப்பவர்களாகவும், அறிவு குறைந்த முஸ்லிம்களை  கோபப்படுத்தி அதன் மூலம் அவர்கள் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்குடன் அல்குர்ஆனை எரிப்பவர்களாகவும் இருக்க முஸ்லிம்கள் துணை போகாதிருப்பார்களாக.

கடலிலும், கரையிலும் ஏற்படும் குழப்பங்கள் அனைத்தும் தங்கள் கரங்களால் ஏற்ப்பட்டவையே என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை ஓதி உணர்ந்து தங்களின் கரங்களை அல்லாஹ்வுக்குப் பொருத்தமான வழியில் ஈடுபடுத்தவார்களாக. துவே உண்மை முஸ்லிம்களின் இலட்சணமாகும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒன்று பட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால், பகமை மேலோங்கி, மூடத் தனத்தில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் கரையில் நெருங்கிய போதெல்லாம்,றைவன் தன் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழி காட்டுதலையும் அந்நபிமார்கள் மூலம் சிதருண்ட மக்களுக்கு அவ்வப்போது அருளி சகோதரர்களாக்கினான்.

வ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்தைய வேதங்களையும் உள்ளடக்கியதே றுதி மறையாம் அல்குர்ஆன். க்குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், மிகத்தெளிவாக விளக்கி எச்சரித்து, மக்களை பண்பட்ட றை நெருக்கமுள்ளவர்களாக வாழ வகை செய்துள்ளான் வல்ல அல்லாஹ்.

வ்வளவு தெளிவான றுதி வேதமுள்ள நிலையிலும் உலக மக்களும், குறிப்பாக தைப் பின்பற்றுகிறோம் என்று வானளாவ சொல்லும் முஸ்லிம்களும், றைவழி காட்டுதலுக் கொப்ப வாழ்கிறார்களா? முந்தைய ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கூறு போட்டுச் சிதைத்து, மக்களைச் சுரண்டி தங்களின் வயிறுகளை நிரப்புவதோடு மறுமையில் மிகப் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் புரோகித பூசாரிகள் என்பதை றைவன் தனது திரு மறையில் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறான்.எனினும் நாம் எவ்வித படிப்பினையும் பெறாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்றைய, இன்றைய யூத கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார்களை சுய சிந்தனையற்று, குறுட்டுத்தனமாக நம்பி மோசம் போனதோ, ப்போதும் போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் றுதிவேதம் கொடுக்கப்பட்ட நாமூம் மோசம் போய் கொண்டிருக்கிறோம்.

வல்ல அல்லாஹ் தனது திருமறையில் நன்மையை ஏவி, தீமயைத் தடுத்து அல்லாஹ்வைத் திடமாக நம்பும் இந்த உம்மத்தில் உள்ளவர்களைப் பார்த்து “மேன்மைமிக்க சமுதாயம்” என்கிறான் (3:110). மற்ற சமுதாயத்திலுள்ள மக்களுக்கு நம்மை சாட்சியளார்களாக ஆக்கி நம்மை “நடு நிலைச் சமுதாயம்” (2:143) என்று புகழாரம் வேறு சூட்டுகிறான்.

உண்மையில் நாம் மேன்மைமிக்க சமுதாயமா? சுயசிந்தனையற்று ஆடுமாடுகளைப் போல் முல்லாக்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டு குர்ஆன்-நபிவழிக்கு மாற்றமாக நடந்து கொண்டிருக்கும் நாம் நடுநிலைச் சமுதாயமா? சிந்தியுங்கள்! நம் நிலையைச் சீர்தூக்கிப் பாருங்கள்.

“முஸ்லிம்” என்ற அல்லாஹ் கொடுத்த ஒரே இயக்கமாக ஒரே தலைமயின் கீழ் ஒன்றுபட்டு இயங்கக் கடமைப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பிரிந்து பல இயக்கங்களாக பல தலைமைகளின் கீழ் செயல் படுவதால்தான் பதவி ஆசையால்தான் இந்த அலங்கோலம் என்பதை யாரால் மறுக்க முடியும்? ஒன்றுபட்ட் சமுதாயத்தை பிளந்து சுய ஆதாயம் தேடும் மதப்புரோகிதர்களையும், அற்ப உலக ஆதாயத்தைக் குறிக்கோளாகப் கொண்டுள்ள அரசியல் வாதிகளான இயக்கங்களையும் புறக்கணிப்போம்.

மக்களை மடையர்களாக்கி, பிரித்து சின்னாப்படுத்தி, சிதைத்து வழி நடத்திக் கொண்டிருக்கும் அவர்களைக் கண்மூடி பின்பற்றும் நீங்கள் அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடித்திருக்கிறீரகளா? நமது நிலைகளை ஒரு கனம் எண்ணிப் பார்ப்போம், சீர்திருந்துவோம். முஸ்லிம்களாக ஒரணியில் ஒன்றுபடுவோம்; அணி திரள்வோம். வல்ல அல்லாஹ் நம்மை நேர்வழியில் நடத்திச் செல்வானாக.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த