இஸ்லாம்தளம்

மார்ச்23, 2009

“பித்அத்” அனைத்தும் வழி கேடுகள்தான்.”

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி அவர் கூறுகிறார்கள்:-

எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும் ருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி அவர்கள் கூறினார்கள். (ப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள்  கூறினார்கள். (ப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)

உங்களிடையே ரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப்  பற்றிப் பிடித்திருக்கும்  காலமெல்லாம்  நீங்கள்  வழி தவறவே  மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம், ரண்டு எனது வழிமுறை. (மாலிக் ப்னு அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ முஅத்தா)

அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவித்துள்ளார்கள்:-

“எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

நபி அவர்கள் கூறியுள்ளார்கள்:-

“வெள்ளை  வெளேர்  என்ற  நிலையில்  உங்களை  நான்  விட்டுச் செல்கிறேன். அதன் ரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர  வேறுயாரும்  வழி தவறவே  மாட்டார்கள். (உமர்رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:ரஜீன்)

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு டமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி அவர்கள் நவின்றார்கள். (அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூது, நஸயீ.)

பித்அத் விசயமாக நபித்தோழர்களுடைய அறிவுரைகள்

நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகின்றான், அல்லாஹ்வுடைய ரஸுல் அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன் நீங்களோ அபூபக்கர் சொன்னார், உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன். என ப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.

நான் பின்பற்றுகிறவனே அல்லாமல்,  புதிதாக உண்டாக்குகிறவன் அல்ல. நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னை திருத்துங்கள் என அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.

ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக “திக்ரு” ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து ப்னு மஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், “நான் நபி அவர்களின் தோழர்களின் ஒருவனாக இருந்திருக்கிறேன். நபி அவர்களுடைய காலத்தில்  யாரும் இவ்வாறு திக்ரு,ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி அவர்கள் காட்டித்தராத  பித்அத்தைச்  செய்கிறீர்கள்” என்று  கூறி  அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி அவர்கள் கற்றுக்கொடுத்தபடி சொல்வதோடு” வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் “என்று ணைத்துக்கொண்டார். இதனை பித்அத் என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள்.

“பித்அத் அனைத்தும் வழி கேடுகள்தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது(ஹஸன்) என்று கருதினாலும் சரியே” என ப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.

“பின்பற்றுபவனாக ரு.புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே” என இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.

“நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும்  செய்யாதீகள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்துள்ளார்கள். “அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.” என தாபியீன்களின் தலை சிறந்தவரும்,சீரிய கலீபஃபாவுமான ப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நான்கு மாம்களின் மணியான உபதேசங்கள்

மாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய்
ருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.

மாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
“மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன் நபி அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து  விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், “அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்……என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக
ல்லாதது
இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.

மாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி,  அதை பித்அத்து ஹஸனா(அழகிய பித்அத்து) என்று  சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே  உண்டாக்கி விட்டான்.


மாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல் அவர்களும், அவர்களது தோழர்களும்
ருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும். நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

தன்னந்தனியே தனித்து நிற்கும் நாள்…!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்குர்ஆன்
73:14. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்ககளாகிவிடும்.
82:1. வானம் பிளந்து விடும்போது
82:2. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3. கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4. கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5. ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
81:1. சூாியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது
101:4.அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.
80:34.அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் – தன் சகோதரனை விட்டும் –
80:35.தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36.தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37.அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
22:2. அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்; எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதி மயக்கமல்ல
39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
50:41.மேலும், சமீபமான இடத்திலிருந்து கூவி அழைப்பவர் அழைக்கும் நாளை(ப் பற்றி நபியே!) நீர் செவிமடுப்பீராக.
50:42. அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மாித்தோர்) வெளியேறும் நாளாகும்.
36:51. மேலும், ஸுர் ஊதப்படடதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
36:52. ”எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?”” என்று அவர்கள் கேட்பார்கள்
39:68. ஸுர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் – அல்லாஹ் நாடியவர்களைத் தவிர – மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள்.
19:80.இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
50:22.”நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது.”” (என்று கூறப்படும்).
10:45.அவன் அவர்களை ஒன்று சேர்க்கும் நாளில், தாங்கள் (ஒரு) பகலில் சொற்ப காலமே இவ்வுலகில் தங்கியிருந்ததாக (அவர்கள் எண்ணுவார்கள் ; அப்போது) தம்மில் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்படுத்தியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்து விட்டார்கள்; மேலும் அவர்கள் நேர்வழி பெற்றிருக்கவில்லை.
79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
23:101.எனவே ஸ_ர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாாித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
44:41.ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.
82:19. அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;.
14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவாகளாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங்க கொண்டு) சூணியமாக இருக்கும்.
18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வாிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ”நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்”” (என்று சொல்லப்படும்).
18:49.இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ”எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பொியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவ வில்லையே!”” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
41:20.இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராகன அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.
41:21.அவர்கள் தம் தோல்களை நோக்கி, ”எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்?”” என்று கேட்பார்கள்; அதற்கு அவை; ”எல்லாப் பொருட்களையும் பேசம் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசம்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்”” என்று கூறும்.
70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாாிக்கமாட்டான்.
70:11.அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாாித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிாியப்படுவான்: தன் மக்களையும்-
70:12.தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
70:13.அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:14.இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிாியப்படுவான்).
52:46. அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
36:65. அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
69:25. ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ”என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
69:26. ”அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
69:27. ”(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
69:28. ”என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
69:29. ”என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!”” (என்று அரற்றுவான்).
69:30. ”(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அாிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.””
69:31. ”பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ”அத்தூதருடன் நானும் – (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?”” எனக் கூறுவான்.

பாவங்களை மன்னிப்பவன்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நாம் முஸ்லிம்களாக பிறந்தும் அதன் அருமைப் பெருமையை உணராமல் வாழ்ந்து இருக்கிறோம். கடந்த காலங்களில் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளோ மிக அதிகம். பொன்னான நேரத்தை வீணாக்கினோம். மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தோம். அல்லாஹ்வை மறந்து ஷைத்தானின் அடிச்சுவடியைப் பின்பற்றினோம்.

ஆனால் இன்று நாம் தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம் இன்னும் குர்ஆன் ஹதீஸ்களை படிக்கிறோம். ஆனால் இவைகளை ஒருகாலத்தில் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. நாம் இன்று திருந்தி வாழ்ந்தாலும் ஏனோ நாம் கடந்து வந்த பாதையை எண்ணிப்பார்த்தால் உள்ளம் நடுங்குகிறது. எப்படி எப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்து விட்டது. இப்படி நம் வாழ்க்கையில் எதுவும் நடக்காமலிருந்தால் நல்லாயிருக்குமே. ஆனால் நடந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறோம்.

இறைவன் நம் பாவங்களை மன்னிப்பானா? மன்னிக்கமாட்டானா? மன்னித்து நம்மை சுவர்க்கத்தில் நுழையவைப்பானா? அல்லது நரகில் தள்ளுவானா? போன்ற கவலைகள் நம் உள்ளத்தில் தேங்கியுள்ளது. நம்மில் எழும் இக்கேள்விகளுக்கெல்லாம் எல்லாம் வல்ல இறைவன் தன் இறுதி வேதத்தில் இவ்வாறு பதில் கூறுகிறான்.

7:153. ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அன்றைய அரபு மக்கள் அனாச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். என்பதை யாவரும் அறிவர். கொலை கொள்ளை, குடி, விபச்சாரம் போன்ற எல்லா பாவங்களையும் செய்தும் வந்தனர். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் திருந்தி உண்மையான இஸ்லாத்தின் பக்கம் வந்த பின் அவர்களைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப்பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்யமாட்டார்கள் ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நோிடும்.

25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.

25:70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமான் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.

இவ்வசனத்தை அறிந்த அன்றைய அரபு மக்களில் ஒரு சிலர் ரசூல் (ஸல்) அவர்களிடம் வந்து தாங்கள் இஸ்லாத்தில் இணைவதற்குமுன் கொலை கொள்ளை விபச்சாரங்களில் அதிகமாக ஈடுபட்டிருந்ததாகவும் மேற்படி வசனப்படி இறையடியாளர்களாக முடியுமா? அதற்கு ஏதும் பரிகாரமுள்ளதா? எங்களூக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் கிடைக்குமா? என வினவினார்கள். அதற்கு பதிலாக அல்லாஹ் அருளிய இறைவசனத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதி காட்டினார்கள்.

39:53 என் அடியாளர்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக.

மேலும் அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன் என்பதை அல்குர்ஆனில் நூற்றுக்கணக்கான வசனங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.

9:104 நிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை – மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள்புரிபவன்.

3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோாித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக்கிடைக்கக்கூடும்) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.

4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர்(மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

உணரப்படாத தீமை! பொய்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு பொய் மனித குலத்தால் கடைபிடிக்கப்படுகின்றது. இŠலாமும் மற்றைய எல்லா மதங்களும் பொய்ப் பேசுவது தவறு என்று அறிவுரை வழங்கிய போதும் பேசப்பழகிய குழந்தைகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வயோதிகர் வரை பொய் பேசுகிறார்கள். வாய்மை பேசுபவரைக் கண்டால் இவருக்கு என்ன பெரிய †ரிச்சந்திரன் என்ற நினைப்போ என்று ஏளனம் செய்யும் அளவிற்கு மனித சமூகம் சென்றுவிட்டது. இந்த தீமைக்கு இŠலாத்தை கொள்கையாகக் கொண்ட முŠலிம்களும் விதி விலக்கல்ல. இŠலாம் பொய் பேசுபவர்களுக்கு செய்யும் எச்சரிக்கையும் உண்மை பேசுவதற்கு மனித குலத்திற்கு செய்யும் அறிவுரையும் கீழே காண்போம்:

நீங்கள் அல்லா‹வை அஞ்சிக் கொள்ளுங்கள் இன்னும் நீங்கள் உண்மை பேசக் கூடியவர்களாக ஆகிவிடுங்கள்.(அல்குர்ஆன் 9:119)

அன்றைய தினம் பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)

நீங்கள் உண்மையைக் கடைபிடியுங்கள் ஏனெனில் உண்மையானது நன்மையின் பக்கம் இட்டுச் செல்கிறது. நன்மையோ சுவர்க்கத்தின்பால் இட்டுச் செல்லக் கூடியதாயிருக்கிறது. ஒருவர் உண்மை பேசிக்கொண்டும், உண்மைக்காகப் பெரும் முயற்சி செய்துகொண்டும் இருப்பார். அதன்பயனாக அல்லா‹விடம் …ித்தீக் சிறந்த வாய்மையாளர் என்று பதிவு செய்யப்பட்டுவிடுகிறார். மேலும் உங்களுக்கு பொய்யை எச்சரிக்கிறேன். ஏனெனில் பொய்யானது பாவத்தின் பக்கம் இட்டுச் செல்கிறது: பாவமோ நரகத்தின் பக்கம் இட்டுச் செல்லக்கூடியதாயிருக்கிறது. ஒருவன் பொய் பேசிக்கொண்டும் அதற்காக பிரயத்தனை செய்து கொண்டுமிருந்து இறுதியாக அல்லா‹விடம் பொய்யன் என்பதாக பதிவு செய்யப்பட்டு விடுவான் என்று நபி(…ல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு மŠவூத்(ரழி) பு†ாரி,முŠலிம்)

பொய் பேசுவது நயவஞ்சகனின் குணம்:

:    யாரிடம் நான்கு குணங்கள் உள்ளதோ அவன் ஒரு முழு நயவஞ்சகன் அவைகளாவன: கொடுத்த வாக்குறுதியை மீறுவான்: அமானிதத்தை மோசம் செய்வான்: பேசினால் பொய்யே பேசுவான்: சண்டையிடும் போது இழிமொழியில் வசைமாறி பொழிவான் என்று நபி(…ல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அப்துல்லா‹பின் அம்ரு(ரழி)பு†ாரி,முŠலிம்)

மூவர் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டார்கள்:

மூவரிடம் கியாமத் நாளையில் அல்லா‹ பேசமாட்டான் அவர்களின் பக்கம் கிருபையோடு பார்க்கவும் மாட்டான். அவர்களை பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுமுண்டு என்று நபி(…ல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்(ரழி) அவர்கள் (அப்படியாயின்) நாசமடைந்து மோசம் போய் விடுவார்கள் என்று கூறிவிட்டு,அல்லா‹வின் தூதரே! அவர்கள் யாவர்? என்று கேட்டார்கள். 1 ,இடுப்பில் அணியும் வே‰டி, கால்சட்டை முதலியவற்றை பெருமை என்ற அடிப்படையில் கரண்டை மொழிக்கும் கீழ் பூமியில் இழுபடும் வகையில் அணிந்து கொண்டிருப்பவர். 2, தாம் கொடுத்த தானத்தைப் பிறரிடம்சொல்லிக் காட்டுவர், 3, பொய் சத்தியம் செய்து தமது வியாபாரப் பொருள்களை விநியோகிப்பவர் என்று கூறினார்கள். (அபூதர்(ரழி), முŠலிம்)

ஆக முŠலிம் சமுதாயம் வாய்மைமிக்க சமுதாயமாக விளங்க வேண்டும் என்று அல்லா‹வாலும் அவன் அனுப்பிய தூதர் மு†ம்மது நபி (…ல்) அவர்களாலும் விரும்பப்படுகின்றது. ஆனால் இன்று வாய்மை எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்படுகின்றது. அது வியாபாரம், அலுவலகம்,ஆட்சி அதிகாரத்திலும் மட்டுமல்லாமல் மார்க்கத்துறையிலும் புறக்கணிக்கப்படுகின்றது.

இறைவன் பெயரால் பொய்:

(யூதர்கள்) மனிதர்களில் சிலர் அற்பக் கிரயத்தைப் பெருவதற்காக வேண்டி தங்கள் கரங்களால் நூலை எழுதி வைத்துக்கொண்டு பின்னர் இது அல்லா‹விடமிருந்து வந்ததுதான் (2:79) என்று இறைவன் பெயரால் பொய் கூறுகிறார்கள். (கிறிŠதவர்கள்) மர்யமுடைய மகனாகிய ம…ீ‹தான் அல்லா‹ என்று கூறுபவர்களும்நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.(5:72)

நிச்சயமாக அல்லா‹ மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்களும் காபிர்களே(5:73)

இŠலாத்தின் பெயரால் பொய்:

இறைமறைப் பற்றி பொய் சொல்வது குர்ஆனில் இல்லாத கருத்துக்கள் இருப்பதாக சொல்வது, (சமாதிச் சடங்கு சூஃபியி…ம், தக்லீது), இறை வசனத்தை மறைத்துக் கூறுவது திரித்துக் கூறுவது ஆயத்தைப் புரட்டுவது குழப்புவது உள் அர்த்தம் வெளி அர்த்தம் என்று சொல்வது †லாலை †ராமாக்குவது †ராமை †லாலாக்குவது, அல்லா‹ அறிந்ததை தாங்களும் அறிந்தவர்கள் அறிஞர்கள் என்றெல்லாம் தன் வாயில் வந்ததை மறுமையைப் பற்றிய அச்சமின்றி நாகூசாமல் பொய் சொல்வது. †தீ…ில் குழப்பம் உள்ளது ஆகவே இமாம்களை ஆலிம்களைத் தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று பொய் சொல்வது.

மு†த்தி…ீன்“கள் (நபிமொழி விற்பன்னர்கள்) அன்றே தரம் பிரித்து சொல்லிவிட்டார்கள். இது ஆதரப்பூர்வமானது …†ீ‹, இட்டுக்கட்டப்பட்டது மவ்ழுவு, இது பலகீனமானது லயீஃப் என்று ஆக பின்பற்றத்தக்கது …†ீ‹ மற்றவை ஆதாரமற்றவை பின்பற்றக்கூடாது. இப்படி தெளிவாக இருந்தும் இட்டுக்கட்டப்பட்ட பல†ீனமானவைகளை அறிந்து கொண்டே மக்களிடம் †தீŠ என்று சொன்னால் அதுவும் பொய்தான்.

அல்லா‹ அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்(மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு (அல்குர்ஆன்)

எவன் என்மீது அறிந்து கொண்டே பொய் சொல்கிறானோ அவன் இருக்குமிடம் நரகமாகட்டும் என்று நபி(…ல்) அவர்கள் கூறினார்கள். (அபூ†ுரைரா(ரழி) முŠலிம்)

இது பெரும்பாலும் எல்லா †தீŠ நூல்களிலும் காணப்படும் முதவாத்திரான (அதிக நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டது) †தீ…ாகும். இŠலாமிய அறிஞன் மீது பொய் பேசுவது , ஒரு பெண்ணின் கற்பின் மீது, குறிப்பிட்ட இŠலாமிய அழைப்பாளர்கள் மீது ,அந்த ƒமாத்தார்கள் மீது இல்லாததை இட்டுகட்டி, இவர்கள் …லவாத் சொல்லமாட்டார்கள் என்றும் பொய் சொல்வது, இவர்கள் பெருமானாரை …†ாபாக்களை இமாம்களை மதிக்க மாட்டார்கள் என்றெல்லாம் இட்டுகட்டி சொல்வது இவையும் பொய்தான்.

வியாபாரத்தில் பொய்:

ஒருவர் உணவுப் பொருள் விற்றுக் கொண்டிருக்கும்போது நபி(…ல்) அவர்கள் அவரிடம் சென்று நீர் எப்படி விற்கிறீர் என்று கேட்க அதற்கு அவர்(சரியாக) விற்கிறேன் என்று பதில் கூறினார்.அப்போது அவர் உணவுப் பொருளுக்குள் கையை ஓட்டிப் பார்க்கும்படி நபி(…ல்) அவர்களுக்கு வ†ீ மூலம் அறிவிக்கப்பட்டது. உடனே தமது கையை அதில் ஓட்டிப்பார்த்தபோது , உள்ளே ஈரமாக இருந்தது. அப்போது நபி(…ல்) அவர்கள் பிறருக்கு மோசடி செய்பவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர் என்றார்கள். (அபூ†ுரைரா(ரழி) அபூதாவூத்)

நாம் நினைப்பது போல் இல்லாமல் உண்மை பேசினால் வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும் என்பது நபி(…ல்) அவர்களின் அன்றைய காலத்தில் மட்டுமல்லாமல் இன்றைய நவீன காலத்திலும் நாம் காணும் உண்மை நிலை. இன்ன கம்பெனியின் ƒப்பான் நாட்டின் தயாரிப்பு என்றால் விலையைப் பற்றி கவலைப் படாமல் வாங்கக்கூடிய மக்கள் ஏராளம் .அத்தகைய கம்பெனிகள் பல ஆண்டுகளுக்கு செழித்து வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் வாங்கும் பொருட்களில் ஏமாற்றியவனை அடப்பாவி ஏமாற்றி விட்டானே 1 ரூபாய் 2 ரூபாய் கூட கேட்டிருந்தாலாவது கொடுத்திருப்பேனே! இப்படி தரம் கெட்ட பொருளை பொய் சொல்லி நம் தலையில் கட்டி விட்டானே இவன் ஒரு முŠலிமா? என்று வருந்தும் நாம் மற்றவர்களை ஏமாற்றலாமா?

நபி(…ல்) அவர்கள் கூறுகிறார்கள்: தான் விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் உண்மையுள்ள விசுவாசியாக ஆகமுடியாது.(அனŠ (ரழி) பு†ாரி,முŠலிம்)

நீதியை நிலை நாட்ட வேண்டிய வக்கீல்களே பொய் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. வக்கீல் தொழில் இப்படி பல்வேறு வகையான பொய்கள் வியாபாரத்திலும் சொல்லப்டுகின்றது. உத்தியோகத்தில் பொய், அது மட்டுமல்ல அரசுத் துறையில் வேலை பார்ப்பவர்கள் எழுத்தர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள், வக்கீல்கள் பெரும்பாலோர் பொய் சொல்கிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போனால் எல்லோரும் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு நியாயத்தை சொல்லத்தான் செய்கிறார்கள். பொய் பேசினால் தான் எங்கள் தொழில் நடக்கும். ஆகவே நாங்கள் என்ன செய்வது என்று ஒரு முŠலிம் வக்கீல் சொன்னால் அது கோழைத்தனத்தின் அடையாளம்.

ஆக இது போன்ற எஞ்சினியர்கள் கொடுத்த காண்ட்ராக்ட்டில் தரமில்லாத பொருட்களினாலும் ஏமாற்று வேலைகளை செய்து அதை சரிகட்ட அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் லஞ்சம் கொடுத்து பொய் சொல்லி சம்பாதிக்கிறார்கள். புகழ்வதில் பொய்: கஞ்சனை பிரபு என்றும் சில்லரை தர்மம் செய்தவனை சீதக்காதி என்றும் கோழையை வீரன் என்றெல்லாம் புகழ்வது. ஆட்சியில் உள்ளவர்களை புகழ்வதைப்பற்றி சொல்லத் தேவையில்லை. மாண்பில்லாத மானமில்லாத அரசியல் வாதிகளை மாண்புமிகு மானமிகு என்று அடைமொழி இட்டு அழைக்காதவர்கள் இல்லை. இதுதான் அவர்களை புகழ்வதில் மிகவும் சாதாரண தரம்.

பணக்காரர்களை புகழ்வதிலும் எல்லை இல்லை. பணக்காரர்கள் அவர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஏழைகளுக்கு உதவ அவர்களை அவர்கள் முன்னிலையிலேயே உங்களை விட்டால் இப்படிப்பட்ட உதவி செய்ய உலகில்யாரும் இலர் நீங்கள் தான் இறை இல்லக் கொடை வள்ளல் என்றெல்லாம் நல்ல காரியம் செய்பவர்களை அளவுக்கதிகமாக புகழ்வதால் அவர்களையும் அறியாமல் அவர்களிடம் ஆணவம் வந்துவிட நாம்தான் காரணமாகி விடுகின்றோம். அதனால்தான் நபி (…ல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு …†ாபி இன்னொரு …†ாபியை புகழ்வதைப் பார்த்த நபி (…ல்) அவர்கள் நீர் உம்முடைய சகோதரரின் தலையைக் கொய்துவிட்டீர் என்றார்கள். நேரடியாக அளவுக்கதிகமாக புகழ்வது அவனை கொலை செய்வதற்கு சமம்.(அபூபக்ரா பு†ாரி,முŠலிம்)

மேலும் யாராவது உங்களை புகழ்ந்தால் அவன் முகத்தில் மண்ணை அள்ளி வீசுங்கள் என்றார்கள் நபி(…ல்) அவர்கள்.(மிக்காத்பின் அŠவத்-முŠலிம்)

ஆக தவரான புகழ்ச்சி மனிதனை அழித்துவிடும். புகழும்போது நிதானம் தேவை உள்ளதைச் சொல்ல வேண்டும். அந்த மனிதரையும் அவருக்கு இந்த நல்ல மனதை தந்த இறைவனையும் புகழ்வதுதான் நபிவழியாகும்.

சாட்சி சொல்வதிலும் பொய்:

ஈமான் கொண்டவர்களே நீதியை நிலை நிருத்துவதில் இறைவனுக்கு உறுதியான சாட்சியாக இருங்கள்- அது உங்களுக்கோ பெற்றோருக்கோ உறவினர்கோ பிடித்தவர்களுக்கோ எதிராக இருந்தாலும் சரியே.(4:135)

மக்ƒீமிய்யாவெனும் குடும்பத்தைச் சார்ந்த பெண் ஒருவள் திருடி விட்ட வி„யம் ச†ாபாக்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது .இது வி„யமாக நபி(…ல்) அவர்களிடம் பரிந்துரைப்பது யார் என்பதை பேசிக் கொண்டிருந்தனர். உ…ாமத்து பின் &ை#402;த்(ரழி) அவர்களே இது வகையில் துனிந்து நபி(…ல்) அவர்களிடம் சென்று பரிந்துரைத்தார்கள். அப்போது நபி(…ல்) அவர்கள் அல்லா‹வின் சட்டத்தை நிறைவேற்றும் வி„யத்தில் பறிந்துரைக்கிறீர் என்று கூறி எழுந்து நின்று பிரசங்கம் செய்தவர்களாக உங்களுக்கு முன் உள்ளோர் நாசமாக்கப்பட்டதிற்கு காரணமே அவர்களில் செல்வாக்குள்ளவன் திருடிவிட்டால் அவனை விட்டு விடுவார்கள். அவர்களில் இயலாதவன் திருடிவிட்டால் உடனே அவனைத் தண்டித்து விடுவார்கள் என்று கூறி விட்டு அல்லா‹வின் மீது ஆணையாக மு†ம்மதுடைய மகள் பாத்திமா திருடிவிட்டால் அவளது கையையும் துண்டித்துவிடுவேன் என்றார்கள். (ஆயி„ா(ரழி) பு†ாரி,முŠலிம்)

ஆனால் இன்று நாமோ எந்த வி„யத்திலும் அட இவன் நம்ம ஊர்க்காரன் ƒாதிக்காரன் நம்ம பகுதிக்காரன் நம்ம இனத்தான் சொந்தக்காரன் நம்ம கொள்கைக்காரன் கூட்டம் என்றெல்லாம் நீதிக்கு புறம்பாக நடக்கிறார்கள். ஆனால் இறைவனோ ஏழை பணக்காரன் என்றோ சொந்தம் பந்தம் என்றோ பார்ப்பதில்லை. நல்லவன் தீயவன் என்ற பாகுபாட்டைத்தான் பார்க்கிறான். அதைத்தான் திருமறையில் உங்களில் தக்வா (பயபக்தி) உடையவர்கள் தாம் இறைவனிடம் உயர்வானவர்கள்.(50:13)

மேலும் இறைவன் கூறுகிறான். நீங்கள் ஊண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2:42) ஒரு வி„யத்தில் ஒருவருடைய சாட்சி தேவை ஆனால் அவரோ நமக்கேன் வம்பு என்று மெª‘னமாக இருப்பதோ அல்லது நமக்கு வேண்டப்பட்டவராயிற்றே அவருக்கு எதிராக சொல்ல வேண்டிவரும் என்பதால் மெªனமாக இருப்பதும் பொய் தான். பொய்யான சாட்சியைப் போன்று உண்மை சாட்சியை மறைப்பதும் தவறுதான். ஏனெனில் நிரபராதி தண்டிக்கப்பட்டு குற்றவாளி விடுதலை ஆக்கப்படுவதற்கும் நாம் தான் காரணமாக இருக்கின்றோம்.அது போன்றே நமக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்வது அநீதி .ஆக ஒரு முŠலிம் எந்த ஒரு முŠலிம் எந்தவொரு வி„யத்திலும் உண்மையைத்தான் உரைக்கவேண்டும் நீதிக்குத்தான் துணை போக வேண்டும். முŠலிமிடம் எல்லா வி„யங்களுக்கும் இŠலாம் வாய்மையைத்தான் எதிர்ப்பார்க்கிறது. இŠலாம் தமா…ூக்காக கேலிக்கைகாக பொய் சொல்வதைக்கூட அனுமதிக்க வில்லை.

அடுத்தவனை மகிழ்விப்பற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும் என்றார்கள் நபி(…ல்)அவர்கள். (பˆ†ன்பின் †கீம், திர்மிதீ,அபூதாவூத்,அ‹மத்)

குழந்தைகளிடம் கூட பொய் சொல்லக்கூடாது:

ஒரு நாள் நபி(…ல்) அவர்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் சென்றிருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார் வெளியில் உள்ள தனது குழந்தையை வா உனக்கு ஒன்று தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்பொழுது நபி (…ல்) அவர்கள் அவரிடம் உமது குழந்தைக்கு என்ன கொடுக்கப் போகின்றீர் என்று வினவ, அவர் பேரித்தம் பழம் கொடுக்கப் போகிறேன் என்றார். அதற்கு நபி(…ல்) அவர்கள் அப்படி செய்யாவிட்டால் உம்மீது ஒரு பொய் பதிவு செய்யப்படும் என்றார்கள். (அப்துல்லா‹ பின் ஆமிர்(ரழி) அபூதாவூத், பை†கீ)

சம்பிரதாயத்திற்காக பொய் சொல்வதும், சம்பிரதாயத்திற்காக ஒருவரை விருந்துக்கு அழைப்பதும் , சம்பிரதாயத்திற்காக அழைக்கப்பட்டவர் மறுப்பதும் பொய் தான். இத்தகைய பொய்யையே இŠலாம் அனுமதிக்கவில்லையென்றால் வியாபாராத்திலும் உத்தியோகத்திலும் இன்ன பிற கொடுக்கல் வாங்கலிலும் பொய் சொல்வதின் நிலை என்ன என்பதை முŠலிமாகிய நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

ஒரு முறை நபி(…ல்) அவர்களுக்கு பால் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் எங்களிடம் சாப்பிடுமபடி கூறினார்கள்.அதற்கு நாங்கள் எங்களுக்கு விருப்பமில்லை என்றோம்.அதற்கு அவர்கள் நீங்கள் பசியையும், பொய்யையும் சேர்த்துக் கூறாதீர்கள் என்றார்கள். (அŠமா பின்து யƒீத்(ரழி) இப்னு மாˆƒா)

பொய் நிச்சயம் நிலைக்காது:

இறைவன் கூருகிறான், சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81) ஆகவே பொய் தற்காலிக வெற்றிதானே தவிர நிரந்தர வெற்றியல்ல. இதனால் சமுதாயத்தில் பித்அத்துக்கள்(மார்க்கதில் புதுமை),குழப்பங்கள் அமைதியின்மை அவதூறுகள் உறவு கேடுகள் எல்லாம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தகைய படுபாதக விளைவுகளை ஏற்படுத்தும் பொய்யை நாம் விட்டு விட வேண்டும் என்று நபி (…ல்) அவர்கள் கூறினார்கள். எவன் பாவம் செய்துகொண்டே இருக்கின்றானோ அவன் உள்ளத்தில் ஒரு கரும் புள்ளி விழுகிறது. நாளவட்டத்தில் அவன் உள்ளம் முழுவதுமே இருளாகி கருப்பாகி விடுகின்றது.(அபூ†ுரைரா(ரழி) திர்மிதீ) இத்தகைய பொய்யிலிருந்து நம்மையும் உற்றார் உறவினர் சமூகத்தையும் காப்பாற்ற இறைவன் அருள் புரிவானாக.

ஆயிரம் முறை அழைத்தால்….

Filed under: ISLAM — islamthalam @ 12.24

وَمنْ يُناَدِي اسْمِــيْ أَلْفًا بِخلْوتِهِ   عَزْماً بِهِـمَّـتِـهِ صَرْمًا لِغَفْوَتِــهِ

أَجَـبْـتُهُ مُسْرِعًا مِنْ أَجْلِ دَعْوَتِـه   فَلْيَدْعُ يَا شَيْخُ عَبْدَ الْقَادِرْ مُحْيِ الدِّيْنِ

அன்புடையோர்களே! கனவான்களே! இந்த பதம் என்னவென்றுத் தெரிகிறதா? யாகுத்பா என்ற பெயரில் நமது ஏரியாக்களில் பக்திப்பரவசத்தோடும், மச்சானைப் பார்த்தீங்களா? என் மனவாழைத் தோப்புக்குள்ளே! கிளியக்கா கொஞ்சம் நீ பார்த்துச் சொல்லு! வந்தாராக் காணலியே! என்ற மெட்டிலும், கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே! காட்டினிலே வாழ்வதற்கோ கன்னி இளமானே! என்பன போன்ற பழைய மற்றும் புதுப்புது சினிமாப் பாட்டுக்களில் மெருகூட்டி பக்திபரவசத்தோடும் கோரஸாக அணிகள் பல அமைத்தும் நம் பகுதிகளில் பாடப்படுகின்றது. இந்தப் பாட்டின் அர்த்தமென்ன? தாங்களுக்குத் தெரியுமா? என்று ஓதக்கூடிய நம்மூர் சகோதரர்களிடம் கேட்டால், தெரியாதே என்றுதான் பதில் வரும். இதோ! அதன் பொருள்:

எவர் என்னை தனியாக இருந்து, தன் முயற்சியில் உறுதி கொண்டவராக தன்னுடைய சோர்வை முறித்து சுறுசுறுப்பானவராக என் பெயர் கூறி ஆயிரம் தடவை அழைப்பாரோ அவர் இவ்வாறு அழைத்ததன் நிமித்தம் விரைந்தோடி வந்து அவருக்கு பதில் அளிப்பேன். எனவே, ஷைகு அப்துல் காதிர் முஹைய்யத்தீனே! என்று அவர் என்னை அழைப்பாராக!

ஆயிரம் தடவை கூப்பிட்டதும் கூப்பிட்டக் குரலுக்கு பதிலளித்து அப்துல் காதீர் ஜீலானி (ரஹ்) அவர்கள் வருகிறார்களா? அதுவும் ஆத்தூரில் இருந்து அழைத்தாலும் அல்லது அமெரிக்காவிலிருந்து எவர் அழைத்தாலும் பக்தாதில் அடக்கப்பட்டுள்ள அப்துல் காதிர் வருகிறார்களா? இவ்வளவு ஆண்டுகளாக அறியாமையில் அல்லவா நாம் இருந்து விட்டோம். இதை பாகவீகளும், மிஸ்பாஹிகளும் நமக்குச் சொல்லித்தராமல் எவ்வளவு பெரிய அரும் பாக்கியத்தை அடைவதிலிருந்து நம்மைத் தடுத்துவிட்டார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் அவர்கள் பேரில் கொடியேற்றி, உண்டியல் குலுக்கி, அரிசி மாவு பவுடரை உண்டியலில் பைசா போடும் பெண்களிடம் லாவகமாகக் கொடுத்துப் பரவசமடைந்து, பத்து நாட்களாக புதுப்புது சினிமாப் பாடல்களில் மெட்டமைத்து பாக்களைப்பாடி, கடைசி நாளன்று அவர்கள் பெயரில் நெய்ச்சோறு ஆக்கி ஆக இப்படி என்னவெல்லாமோ அப்பன் பாட்டன் வழியாக கண்டதை செய்து எவ்வளவோ பக்தி பரவசத்தை வெளிக்காட்டுகிறோம்தான். ஆனால், அப்துல் காதிர் ஜீலானீ அவர்களைக் கூப்பிட்டு குளத்தாங்கரைத் தெருவில் அவர்களை ஆஜர்ப் படுத்துவது அல்லவா பக்தியின் உண்மை வெளிப்பாடு.

இவ்வளவு ஆண்டுகளாக இதுபற்றி வாய்த்திறக்காமல் மூடி மறைத்தவர்களை நான் கண்டிக்கிறேன். இருந்தாலும் பரவாயில்லை! இந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை அல்லாஹ் என் இதயத்தில் போட்டதற்காக நன்றி செய்வோம். கவலை வேண்டாம். இவ்வளவு காலமாக பெற முடியாத பாக்கியத்தை வரும் ஆண்டாவது பெற முயற்சிப்போம். அக்கம் பக்கத்திற்கெல்லாம் இப்போதிருந்தே அறிவிப்புகள் செய்வோம்.

இந்த ஆண்டு இன்னக்கிழமைக்கு நாங்கள் எங்கள் ஊருக்கு ஜீலானீ அவர்களை அழைக்கிறோம். எனவே, யாரும் அவர்களை அதே நாளில் அதே நேரத்தில் அழைத்து அவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். ஏனென்றால், பக்கத்து ஊர்க்காரர்களும் அதே சமயம் அழைத்து முடிப்பார்களேயானால் அவர்களுக்கு எங்கு போவதென்றே தெரியாமல் சங்கடமாகிவிடுமல்லவா? அதற்காகத்தான் சகல முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள உங்களை அழைக்கிறேன். நானும் என்னால் முடிந்த அளவுக்கு இண்டர்நெட்டின் மூலமாக இது பற்றிய அறிவிப்பைச் செய்கிறேன். கவலை வேண்டாம். தயாராகுங்கள். தீவிரமாக முழு முயற்சியோடு அக்கம் பக்கத்திலிருந்து வருவோர் போவோரிடமெல்லாம் தயவாக இந்த வருடம் நீங்கள் யாரும் கூப்பிடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்ளுங்கள். எல்லோரையும் வரும் திருவிழா நாளில் ஆத்தூரில் குளத்தாங்கரைத் தெருவில் அணி திரள அழைப்புக் கொடுங்கள்! இந்தப் பாக்கியத்தை ஒரு முன் மாதிரியாகச் செய்து நம் மாவட்டத்துக்கே இல்லை! இல்லை! நம் மாநிலத்துக்கே முன்னோடியாகத் திகழ முடிவெடுங்கள். ஈமான் வாழ்க! இஸ்லாம் வாழ்க! வாழ்க!

ஒன்று படுவோம்! ஒரே குரலில் கூப்பாடு போட்டு அழைப்போம்! அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களை குளத்தாங்கரைத் தெருவில் கொண்டுவந்து நிற்பாட்டி கண்டு களித்து தரிசனம் பெற்று தரணியில் பெருமைப் பட்டு பேசித்திரிவோம்! செய்வீர்களா?