இஸ்லாம்தளம்

மார்ச்19, 2009

என்னையே நோக்கி நிற்போரின் வழி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்களில் பெரும்பான்மையினோர் தங்கள் மார்க்கத்தை குர்ஆனைக் கொண்டும், சுன்னாவைக் கொண்டும் உரசி பார்க்காமல் முன்னோர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கும் என்று கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுகிறார்கள் அதற்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களை முன்வைத்து ஆலிம்கள் எனப்படுவோரும் தங்கள் தவறான கொள்கைக்கு சில இறை வசனங்களை எப்படியெல்லாம் திரித்து கூறுகின்றனர் என்பதை பார்ப்போம். அல்குர்ஆன் 31:15 (என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَى இறைவசனத்தின் ஓரு பகுதியை ஓதிக்காட்டி َّ இமாம்களை முன்னோர்களை தக்லீத் செய்வதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்.  முதலில் 31:15 வசனத்தையும் அதைத் தெளிவாகக் விளங்கிக்கொள்ள உதவும் 31:14 வசனத்தையும் முதலில் பார்ப்போம்.

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடையதாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே ”நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” 31:14

ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக்கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.” 31:15

இந்த இரண்டு வசனங்களையும் நிதானமாக கவனமாக படித்து பாருங்கள். எவ்வளவு தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ளும் விதத்தில் அவை அமைந்திருக்கின்றன. உண்மையில் குர்ஆன் வசனங்கள் நம்மோடு பேசுகின்றன. இவ்வளவு தெளிவாக வசனங்களின் ஒரு பகுதியை ஓதிக்காட்டி மக்களை தக்லீதின் பக்கம் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவதின் பக்கம் அழைத்துச் செல்கிறார்கள்.

31:14 வசனத்தில் ஒரு மனிதனுக்கு தனது பெற்றோரின் முக்கியத்துவம் பற்றி அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான். தாய் கஷ்டப்பட்டு கர்ப்பத்தில் சுமந்து பெற்றெடுத்து அதன் பின்னும் இரண்டு வருடங்கள் பால் கொடுத்து வளர்ப்பதையும் அல்லாஹ் சுட்டிகாட்டி அவர்களுக்கு நன்றி செலுத்தும்படியும் அவர்களுடன் அன்போடும் வாஞ்சையோடும், உபகாரத்தோடும் நடந்து கொள்ளச் சொல்லும் இறைவன் அதே சமயம் அவர்கள் இவனது அறிவில் இல்லாத ஒன்றைச் சொல்லி அதை இவன் செய்து அதன்மூலம் அல்லாஹ்விற்கு இனைவைக்கும் குற்றத்திற்கு ஆளாகிவிடக்கூடாது என தெளிவாக எச்சரிக்கிறான்.

இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டிய விஷயமாவது, நம் சமுதாயத்தில் காணப்படும் பல மார்க்க முரணான செயல்கள் எந்த அடிப்படையில் நம்மவர்களால் செய்யப்படுகின்றன? அந்தச் சடங்குகள் பற்றிய அறிவும் இவர்களுக்கு இல்லை. ஆனால் பெற்றோர்கள் செய்து வருவதைப் பார்க்கிறார்கள். மேலும் அந்தச் சடங்குகளைச் செய்வதால் நன்மைகளும், அபிவிருத்திகளும் உண்டாகும் என பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

ஆக இந்தச் சடங்குகளைப்பற்றி அறிவு இல்லாவிட்டாலும் பெற்றோர்கள் செய்கிறார்கள்  செய்யச் சொல்கிறார்கள் என்று அடிப்படையிலேயே பலர் பல மூடச்சடங்குகளில் ஈடுபடுவதை பார்க்கிறோம். அந்தச் சடங்குகள் தவறானவை, குர்ஆன் ஹதீஸுக்கு முரணானவை என்று நாம் சுட்டிக்காட்டினாலும் காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக நாங்கள் செய்து வருவதை நீங்கள் மூடச் சடங்குகள் என்று சொல்வதா? என்று கேட்பதிலிருந்தே அவர்களுக்கு அந்தச் சடங்குகள் பற்றிய ஞானம் இல்லை. முன்னோர்கள், பெற்றோர்கள் செய்து வந்ததால் மட்டுமே செய்கின்றனர் என்பதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

ஆக இப்படி தங்கள் பெற்றோர்கள் செய்தார்கள், செய்யச் சொன்னார்கள் என்ற காரணத்திற்காக, தங்கள் அறிவில் இல்லாத ஒன்றை மார்க்கமாக எண்ணிச் செய்வதையே தனக்கு இணை வைப்பதாகும் என அல்லாஹ் எச்சரிக்கிறான். காலங்காலமாக குடும்பத்தில் பெரியவர்கள் பெற்றோர்கள் ஒன்றைச் சொன்னால் அனுபத்தைக் கொண்டு சொல்கிறார்கள் அது சரியாகத்தான் இருக்கும். எனவே அவர்களின் பேச்சை எடுத்து நடப்பதே முறை என்ற நம்பிக்கை எல்லா சமூகத்தாரிடமும் காணப்படுகிறது. இது உலக காரியங்களில் சரியாக இருக்கலாம். கண்டு அனுபவித்து சொல்கிறார்கள். எனவே உலக காரியங்களில் அவர்களுக்கு இணங்கி நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான்.

ஆனால் மார்க்க விஷயங்களில் அவர்கள் மறுமையை கண்டு அனுபவித்து அவர்கள் கூறவில்லை. குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத ஒன்றை சொன்னால் அவர்கள் கற்பனையில், யூகத்தில் சொல்கிறார்கள். எனவே அவை சரியாக இருக்க முடியாது. மார்க்கமாக ஒன்றை சொன்னால் முன்னோர்களாயினும் பெற்றோராயினும், யாராயினும் அறிந்தே வழிபடுவது நமது கடமையாகும். கற்பனையில் யூகத்தில் சொல்வதை அதுதான் மார்க்கம் என நம்புவது தக்லீத் கண்மூடிப்பின்பற்றுவதாகும்.

என்னையே நோக்கி நிற்போரின் வழி 31:15 என்றால் யாருடைய வழி? நபிமார்கள் மார்க்க காரியங்களுக்கு அல்லாஹ்வை நோக்கி நின்று அவன் வஹீ மூலம் அறிவித்ததைச் செயல்படுத்தினார்கள். மாறாக தனது கற்பனையையோ, யூகத்தையோ சொல்ல முன்வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் மார்க்கமாக வஹி மூலம் பெற்றது இன்று நம்மிடையே குர்ஆனாக இருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் அந்தக் குர்ஆனை செயல்படுத்திக் காட்டிய நடைமுறைகள் ஹதீஸ்களாக நம்மிடையே இருக்கின்றன. எனவே இன்று அல்லாஹ்வை நோக்கி நிற்போர் அவனது பேச்சான (கலாமான) குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களை மட்டுமே நோக்கி நிற்பார்கள். வெறும் யூகங்களையும் கற்பனைகளையும் மார்க்கத்தில் நுழைக்கமாட்டார்கள்.

என்னையே நோக்கி நிற்போரின் வழி 31:15 என்று அல்லாஹ் குறிப்பிடுவது குர்ஆன், ஹதீஸ் மட்டுமே. குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாதது, மனித கற்பனையால் யூகத்தால் உருவானது ஒரு போதும் மார்க்கமாகாது. எனவே, குர்ஆன் ஹதீஸில் இருந்து யார் சொன்னாலும் அதுவே என்னை நோக்கி நிற்போரின் வழி – அந்த வழியைப் பின்பற்று, குர்ஆன் ஹதீஸைப் பின்பற்று என்றே அல்லாஹ் கூறுகிறான்.

வாக்குறுதி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாமிய நேர்வழியை முற்றிலும் கடைபிடிக்கும் முஸ்லிம் ஒப்பந்தத்தைப் பேணி, வாக்குறுதியை நிறைவேற்றுவார். வாக்கை நிறைவேற்றுவது முஸ்லிமின் சமுதாய வெற்றிக்கான அடிப்படையும் மனிதகுலத்தின் உயர்வுக்கான வழியுமாகும்.

முஸ்லிம் வாக்குறுதியைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பார். வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும். ஒருவருடைய ஈமான் சீரானது என்பதற்கும், அவரது இஸ்லாம் அழகானது என்பதற்கும் இப்பண்பே சான்றாகும். அதை கடைபிடிப்பது ஈமானின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும்.

விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்… (அல்குர்அன் 5:1)

….உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். எனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்அன் 17:34)

இன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது போல ஒப்பந்தம், வாக்குறுதி என்பது காற்றில் பறக்கவிடப்படும் வார்த்தையல்ல. அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்படும் மிகப்பெரிய பொறுப்பாகும்.

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்…. (அல்குர்அன் 16:91)

இவ்விடத்தில் மனிதர்களிடம் செய்யப்படும் உடன்படிக்கையை அல்லாஹ்வுடன் செய்யப்படும் உடன்படிக்கையைப் போன்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உடன்படிக்கையின் முக்கியத்து வத்தையும், அதன் கண்ணியத்தையும், அது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்துவதேயாகும்.

விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது. (அல்குர்அன் 61:2,3)

வாக்குறுதிக்கு மாறுசெய்வதும் அதை நிறைவேற்றாமலிருப்பதும் அல்லாஹ் தனது அடியார்களிடம் மிகவும் வெறுக்கும் பெரும்பாவமாகும். அல்லாஹ் மேற்கூறிய திருவசனத்தின் ஆரம்பத்தில் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வின் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1)பேசினால் பொய்யுரைப்பான் 2)வாக்களித்தால் மாறு செய்வான் 3)நம்பினால் மோசடி செய்வான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஸஹீஹ் முஸ்லிமின் ஒர் அறிவிப்பில்: “அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது. அப்போதுதான் உயர்ந்த நற்பண்புகளும், உன்னதமான நடைமுறைகளும் அவரிடம் பிரதிபலிக்கும். அல்லாஹ்வின் வரம்புக்குள் நின்று, ஏவலை செயல்படுத்தி, விலக்கலைத் தவிர்த்து வாழ்பவராகவும், அல்லாஹ்வின் நேர்வழியை எல்லா நிலையிலும் பின்பற்றுபவராகவும் இருப்பார்.

எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது.

இந்த கசப்பான உண்மையை வியாபாரிகளும் தொழிலாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள்.

பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடையவர்கள் நயவஞ்சகர்களாவர். அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டாலும் சரியே.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அல்குர்ஆன் விரிவுரை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்பாத்திஹா (தோற்றுவாய்)
மெªலவி E.M.அப்துர் ரஹ்மான்

1.சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்து) பரிபாலித்து இரட்சிப்பவன் 2.அளவற்ற அருவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 3.தீர்ப்பு நாளின் எஜமானன். 4.உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; இன்னும் உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். 5.நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 6.நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக!) 7.(உனது)  கோபத்திற்குள்ளானவர்களும் வழி தவறியவர்களும் சென்ற வழியல்ல.

இறக்கப்பட்ட வரலாறு

நபி (ஸல்) அவர்கள், மூமின்களின் தாயான கதீஜா (ரலி) அவர்களிடம் பின் வருமாறு கூறினார்கள். நான் தனித்திருக்குங்கால், மறைவிலிருந்து ஒரு சப்தத்தைச் செவியேற்கிறேன். அதனால் எனக்கு இதயத்திடுக்கம் ஏற்படுகிறது. இதைக் கேட்டு விட்டு கதீஜா(ரலி), “நாங்கள் அபூபக்கர்(ரலி)அவர்களை அழைத்துக்கொண்டு வரகா நவ்பலிடம்பின் சென்று இச்சம்பவத்தைப் பற்றிக் கூறுங்கள் என்று சொன்னார்கள்.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் வரகா என்பவரிடம் விஷயத்தைக் கூறினார்கள். இதைக்கேட்ட வரகாபின் நவ்பல் என்பவர் நபி (ஸல்) அவர்களை நோக்கி “தங்களுக்கு மறைவிலிருந்து சப்தம் வரும்பொழுது  முஹம்மதே! முஹம்மதே! என்று கூவிஅழைக்கப் பட்டால், தாங்கள் அப்படியே நின்று அவரின் வார்த்தையைக் கேளுங்கள்” எனச்சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அப்படியே செய்தார்கள். சப்தம் வந்த பொழுது “இதோ ஆஜாராக இருக்கிறேன் என கூறினார்கள். அப்பொழுது அசரீரி சொல்லுக! பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று கூறி இந்த பாத்திஹா சூராவை முழுதும் ஓதிக் காண்பித்தது அப்பொழுதுதான் இந்த ஸூரா இறங்கியது. மேற்கண்ட வரகா தான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வந்தபோது தாங்கள் தாம் நபியென்று ஆறுதல் கூறி அனுப்பியவர்.

ஒரு அடிமை சர்வபுகழும் அல்லாஹ்வுக்கே என மனதாரக்கூறும் பட்சத்தில் ஆண்டவன் ஒருவனே என்றும் அவனே வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அவன் உள்ளமையும் அவனது இலட்சனங்களும் அழிவற்றவை என்றும்  உறுதி கொண்டவனாக ஆகின்றான். இத்தன்மைகளை கொண்டவனே புகழுக்கு உரியவனாக இருக்க முடியும்.

உலகில் அவனது அடிமைகள் செய்யும் குற்றங்களுக்கு அளவு கிடையாது. அவ்வாறு இருந்தும் கூட அல்லாஹ் அளவற்ற அருளாளனாகவே இருந்து வருகின்றான். திருமறையில் அல்லாஹ் “என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து பரந்து) சூழ்ந்து நிற்கிறது. (7:156) அடியார்கள் குற்றங்கள் செய்தாலும் அவர்களது நன்றியை எதிர்பார்க்காமலும் மீண்டும் மீண்டும் அருள்புரிந்துகொண்டு வரக்கூடியவனே “ரஹ்மான்” அளவற்ற அருளாளன்.

“அளவற்ற அருளாளன் எவருக்கு அனுமதியளித்தானோ அவரைத் தவிர யாரும் (அதுசமயம்) பேசமாட்டார்கள்” (அல்குர்ஆன் 79:38) என்ற இறைவனின் வாக்குப்படி அல்லாஹ் அனுமதித்தவர்களைத் தவிர மற்றெல்லோரும் பேசுவதற்கு திராணியற்ற நிலையில் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் அந்நாளில் அவனேதான் எஜமானன்.

‘உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்’
என்ற வசனத்தின் மூலம் இறைவன் தன்னையே வணங்கும்படியும் தன்னிடமே உதவி வேண்டும்படியும் வணக்கத்திற்கு  தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் இலாபத்தையோ நஷ்டத்தையோ உண்டாக்கும் சக்தி அவனுக்கே அல்லாமல் வேறு யாருக்கும் இல்லையென்று நம்புவதும் இஸ்லாத்தின் கொள்கையாகும். இதற்கு மாற்றமாக வணக்கத்திற்கு தகுதியானவன் வேறுயாரும் உண்டு என்று நம்புவதும்  அவர்களுக்கு வணக்கம் செய்வதும் அவனைத் தவிர வேறு யாருக்கும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தியுண்டு என்று நம்புவதும் இஸ்லாத்தில் ஷிர்க்(இணைவத்தல்)என்னும் மன்னிக்க முடியாத குற்றமாகும். நபியோ, ரசூலோ, குத்போ,வலியோ,யாருக்காயினும் லாப நஷ்டத்தை உண்டாக்கும் சக்தி உண்டென்று நம்புவதும் அவர்களிடம் உதவி தேடுவதும் பெரும் குற்றமே. இதைப் போல் நட்சத்திரங்களுக்கோ, நாட்களுக்கோ, சகுனங்களுக்கோ லாப நஷ்டத்தை உண்டாக்கும் தன்மையுண்டு என்று நம்புவதும் கடுமையான குற்றமாகும். ஒவ்வொருவரும் தனது சிறு தேவை முதல் பெருந்தேவைகள் வரை எல்லாத் தேவைகளையும்  நிறைவேற்றும்படி அல்லாஹ்விடத்தில் மட்டுமே கேட்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக நபி(ஸல்) அவர்கள் “செருப்பின் வார் அறுந்துபோனால் அதையும் அல்லாஹ்விடமே கேட்பாயாக” எனக் கூறினார்கள் (திர்மிதீ)

வருங்காலத்தை அல்லாஹ்வைத் தவிர வேறும் யாரும் அறியமுடியாது. ஜோசியத்தின் மூலமாகவோ குறிகாரரின் மூலமாகவோ பின்னால் நடைப்பெறப் போகும் காரியங்களைத் தெரிந்துகொள்ள முடியும் அன்று நம்புவது இணைவைத்தல் ஆகும். இதைக் குறித்தே நபி(ஸல்)அவர்கள் “(எதிர்காலத்தைப் பற்றி) குறிகாரன் சொல்வதை ஒருவன் நம்புவானேயானால் அவனுடைய நாற்பது இரவுத் தொழுகைகள் (இறைவனால்) அங்கீகரிக்கப்பட மாட்டாது” எனக் கூறினார்கள். ஹதீஸ் சுருக்கம் (முஸ்லிம்)

நாட்களாலும் நட்சத்திரங்களாலும் காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை நம்புவது பெறும் குற்றமாகும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள். “அல்லாஹ்வின் அருளால் மழை பெய்தது என்று சொன்னவன் விசுவாசியென்றும் இன்னின்ன நட்சத்திரங்களால் தான் மழை பெய்தது என்று சொன்னவன் ஆண்டவனுக்கு மாறு  செய்தவன் என்றும் கூறினார்கள்” ஹதீஸ் சுருக்கம் (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வின் அடியார்களில் அவனது அருள் பெற்றவர்கள், அவனின் கோபத்த்திற்கு ஆளானவர்கள், வழி தவறியவர்கள் ஆகிய மூன்று வகையினர். அல்லாஹ்வின் அருள்பெற்ற முதல் பிரிவினர் வழியிலெயே தன்னையும் நடத்தும்படி ஒவ்வொரு அடியானும் இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டுமென்பதை 6 வது வசனம் கூறுகிறது.

உண்மைக் கொள்கைகளுடன் தப்பான கொள்கைகளையும் விசுவாசம் கொண்டு, இறைவனுடைய கட்டளைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவற்றிற்கு மாறு செய்ததன் காரணமாக இறைவனுடைய கோபத்திற் குள்ளானவர்கள்  இரண்டாவது பிரிவினர்.

அடிப்படையான உண்மையான கொள்கைகளில் விசுவாசம் கொள்ளாமல் நேர்வழியை விட்டும் விலகி நடந்தவர்கள் மூன்றாவது பிரிவினர்.

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீக்கீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களையுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள். (அல் குர்ஆன் 4:69)

கடைசியாக சூரா ஃபாத்திஹாவில் ஆமீன் என்ற  இவ்வாக்கியம் இந்த அத்தியாயத்தில் சேர்ந்த்தல்ல எனினும் இந்த சூராவை ஓதி முடித்தவுடன் ‘ஆமின்’ என்று கூறும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அவனது அருள் பெற்றவர்கள் சென்ற வழியில் நம்மை நடத்தி அருள் புரிவானாக ஆமீன்!

அல் அஸ்ரு – காலம்
மெªலவி E.M.அப்துர் ரஹ்மான்

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).

மனிதன் வயதையெல்லாம் அழிந்துபோகும் பொருளைத் தேடுவதிலும், தன்னை விட்டுப்பிரியும் மனைவி, மக்கள், சுற்றத்தார், சிநேகிதரோடு உல்லாசமாக இருந்து கொண்டு சந்தோச வாழ்க்கை நடத்துவதிலுமே செலவு செய்கிறான். விலை மதிக்க முடியாத ஒவ்வொரு மூச்சையும் இந்த முறையில்தான் வீணாக்குகின்றானே தவிர தான் பிறந்ததின் உண்மை நோக்கத்தைப் பற்றிக் சிறிதுகூட சிந்திப்பது கிடையாது. அவனது நோக்கம் தவறானது என்பதைக் காட்டுவதற்காகவே தான் இந்த சிறிய அத்தியாயம் இறக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில் அவனுடைய தவறான நோக்கமானது முடிவில் பெரும் நஸ்டத்தைத்தான் உண்டாக்கும் என இந்த சிறிய அத்தியாயத்தில் இறைவன் தெளிவுபட கூறுகிறான்.

இறக்கப்பட்ட வரலாறு
கல்தாபின் உஸைத்  என்ற  நபர் அபூபக்கர் ஸித்தீக் (ரலி)அவர்களின் பழைய நண்பராக இருந்தார். இஸ்லாம் தோன்றிய பின்பு அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். கல்தா என்பவர் நிராகரிப்பவராகவே இருந்தார்.

ஒருநாள் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை கண்ட கல்தாபின் உஸைத் ஸித்தீக்கை நோக்கி, அபூபக்கரே! உமது அறிவின் திறமையாலும் சுறுசுறுப்பாலும் வர்த்தகத்தில் பெருத்த லாபத்தைப் பெற்று வந்தீரே! இப்பொழுது உமக்கு என்ன நேர்ந்துவிட்டது? நஷ்டத்தில் வீழ்ந்து விட்டீர்: மேலும் உமது மூதாதையரின் மார்க்கத்தையும் புறக்கணித்து விட்டீர்; லாத், உஜ்ஜா வை வணங்குவதையும் விட்டொழித்து விட்டீர். எனவே, அவற்றின் அன்பையும் இழந்து விட்டீர் எனக் கூறினார்.

கல்தாவின் கடுஞ்சொற்களைச் கேட்ட அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் சத்தியத்தை ஏற்று நற்கிரியைகள் புரிந்து வரும் ஒருவன் எப்பொழுதும் நஷ்டத்தில் விழமாட்டான் என பதிலளித்தார்கள். இதை உறுதிப்படுத்தவே இவ்வத்தியாயத்தை அல்லாஹ் அருளினான்.

அஸ்ரு என்னும் பதத்திற்கு காலம் என்பது பொருள். இவ்விடத்தில் ஒரு மனிதன்  இருக்கும் காலம் அதாவது வாழ்நாளைக் குறிக்கிறது. மனிதனுடைய வாழ்நாள் அதிலுள்ள ஒவ்வொரு மூச்சும் விலை மதிக்க முடியாதது . சென்று போன காலத்தை என்ன ஈடு கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாது.வாழ்நாள் மிக அருமையானது என்பதை காட்டவே அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்து கூறியிருக்கிறான். ஒரு மனிதன் என்ன நோக்கத்திற்காக படைக்கப்பட்டிருக்கின்றானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றினால் தான் ஈடேற்றம் உண்டு. அவ்வாறு இல்லாதவரை அவன் நஷ்டமடைந்தவன் தான். இந்த நஷ்டத்தை விட்டுத் தப்பவேண்டுமானால், ஈமான் (நம்பிக்கை) கொண்டு நற்கருமங்களை செய்து பிறரும் நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டவேண்டும்.

ஈமான்: அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய உண்மையான இலட்சணங்களைப் பற்றியும் மறுமையைப் பற்றியும் அவன் அனுப்பிய நபிமார்களைப் பற்றியும் பூரணமாக நம்பிக்கை கொள்வதே ஈமானாகும். நற்கருமங்கள்: என்ற பதம் விரிவான பொருள்  தரக்கூடியது. அல்லாஹ்வை  மனதால் தியானிப்பது, நாவல் துதிப்பது, சரீரத்தால் வணங்குவது, பொருளினால் அவன்  கட்டளைப்படி தருமம் செய்வது, பிறருக்கு உபகாரம் செய்வது, படைப்புகளின்மீது இரக்கம் காட்டுவது பெற்றோருக்கு பணிவிடை செய்வது,  நீதியும்  நேர்மையும்  நிலைக்க  பாடுபடுவது,  ஏழைகளுக்கும்,  அனாதைகளுக்கும் உழைப்பது ஆகிய இவையெல்லாம் நற்கருமங்களில் சேர்ந்தவையாகும்.

தான் எதை நன்மையென்றும் உண்மையென்றும் உணர்ந்திருக்கின்றானோ அதை தன்னோடு மட்டும் வைத்துக்  கொள்ளாமல்  பிறருக்கும்  போதித்து அந்த உண்மையின்  பக்கம்  கொண்டு  வர பாடு படவேண்டும். அதற்கு  எதிர்ப்பிருந்த போதிலும் பொருமையுடன் சகித்துக் கொண்டு  லட்சியத்தை கைவிடாமல் அது மக்களின் மத்தியில் பரவ முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் அந்த உண்மையானது பிறருக்கு கசப்பாக தோன்றலாம். அதனால் மனம் குன்றிவிடக் கூடாது. “உண்மை கசப்பாயினும் அதைச் சொல்லிக் கொண்டே யிரு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புகாரியில் உள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாக்குப்படி ஒருவன்  நடந்து கொண்டால் நாளடைவில்  அந்தச் சத்திய  கொள்கையானது மக்களின் மத்தியில் வேறூன்றித் தழைக்க ஆரம்பித்துவிடும்.

நபி (ஸல்)அவர்கள் “ஒருவன் மற்றொருவனை நற்கருமங்களைச் செய்யும்படி தூண்டினால் நற்கருமங்கள் செய்தவனுக்கு எவ்வளவு நற்கூலி கிடைக்கிமோ அவ்வளவு நற்கூலி தூண்டியவனுக்கும் கிடைக்கும். ஒருவனைக் மற்றொருவன் கெட்ட காரியம் செய்யும்படி தூண்டினால் கெட்ட கரியம் செய்தவனுக்கு எவ்வளவு தண்டனை உண்டோ அவ்வளவு தூண்டியவனுக்கும் உண்டு. அதில் கொஞ்சமும் குறையாது. (முஸ்லிம்)

சத்தியத்தை போதித்தல்: ஹக் என்ற பதத்திற்கு உண்மை, உரிமை என்பது பொருளாகும். இவ்விடத்தில் உண்மையான மார்க்கத்தையும் உண்மை பேசுவதையும் பிறருடைய உரிமயைப் பாதுகாப்பதையும் குறிக்கும். ஒருவருக்கொருவர் பொருமையைப் போத்தித்தல்: ஸப்ரு என்ற பதத்திற்கு பொருமை என்பது பொருள். ஒருவருக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்கள், பிறரால் உண்டாகும் வசைகள் துன்பங்கள் முதலியவற்றைப் பொருத்துக் கொள்வதே பொறுமையாகும். முதலில் மனிதன் தன்னைச் சீர்திருத்திக்கொண்டு மற்றவர்களைச் சீர்திருத்த முயற்சிக்க வேண்டும். ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்து பிறரையும் நன்மை செய்யும்படியும் கெட்ட காரியங்களை விட்டு விலகும்படியும் தூண்டவேண்டுமென்று இதில் கூறப்படுகிறது.

அல்காபிரூன் – நிராகரிப்போர்
மெªலவி E.M.அப்துர் ரஹ்மான்

1.சொல்லுக: நிராகரிப்பவர்களே! 2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். 3.மேலும், நான் வணங்குகிறவனை நீங்களும் வணங்குபவர்களல்லர்.4. இன்னும் நீங்கள் வணங்கியவற்றை நான் வணங்குகிறவனுமல்லன். 5. மேலும், நான் வணங்குபவணை நீங்களும் வணங்குபவர்களல்லர். 6.உங்களுக்கு உங்களது மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.

சர்வ சக்தியும் உடையவன் இறைவன் ஒருவனேயென உணரும் ஒருவன், அழிவின் பக்கமே கொண்டு போகும் பலவீனமான படைப்புகளை ஒருக்காலும் வணங்க மாட்டான். எனவே அல்லாஹ்வை உண்மையாகவே நம்பும் நான், நீங்கள் அறியாமையின் காரணத்தால் வணங்கும் படைப்புகளை ஒருக்காலும் வணங்கமாட்டேன்.நான் கொண்டுள்ள உண்மையான தன்மைகளை நீங்கள் உணரும்வரை, என் வழியிலேயே என்னை விட்டுவிடுங்கள். உங்களுக்குத் தற்போது உங்கள் வழி சிறந்ததாகத் தோன்றலாம். அடுத்து எது உண்மையென்று தெரிந்து கொள்வீர்கள்.

இவ்வத்தியாயம் இறங்கிய வரலாறு
அபூஜஹீல், ஆஸ்பின்வாயில், வலீத்பின் முஙைரா, அஸ்வத் போன்ற குறைஷிக் காபிர்களான பிரமுகர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் அவர்கள் மூலம் ரஸூல் (ஸல்) அவர்களுக்கு பின்வருமாறு சொல்லி அனுப்பினார்கள்.

நமது தெய்வங்களைப் பற்றியும் அவைகளுக்கு வணக்கம் செய்வது பற்றியும் முஹம்மது தூஷணமாக பேசக்கூடாது. நமது கூட்டத்தாரில் தலைத்தனம் வகிக்க வேண்டுமென்று அவருக்கு விருப்பம் இருந்தால் அவரைத் தலைவராக்கி விடுகிறோம். பொருள் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் அதிகமான பொருளை சேகரம் செய்து கொடுக்கிறோம். அழகிய பெண் வேண்டுமென்ற ஆசை இருந்தால் நமது குலத்தில் அழகில் சிறந்த பெண்ணை கொடுக்கிறோம்.

இவ்விசயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டதும், இவை ஒன்றுமே எனக்கு தேவையில்லை. எனது சமூகத்தவராகிய நீங்கள் கேவலமான முறையில் நாசமடையாமல் நேர்மையான பாதையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதுதான் எனது விருப்பம் என்று பதில் சொல்லி அனுப்பினார்கள். ஆசைகளைக் காட்டி முஹம்மது அவர்களை வசப்படுத்த முடியாதென்பதைத் தெரிந்த குறைஷித் தலைவர்கள், வேறொரு சமரச யோசனையைச் சொல்லி அனுப்பினார்கள். அதாவது:

நமக்குள் ஒற்றுமை இருக்க வேண்டுமானால், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும். ஒரு வருஷம் அவர் நமது தெய்வங்களை வணங்கி வரவேண்டும். மறு வருஷம் நாம் அவருடைய கடவுளை வணங்குவோம். இவ்வாறு செய்து வருவது இருவரும் ஒற்றுமையாக இருப்பதற்கு நல்ல வழி. இச்சமரச யோசனைக்கு மறுப்பாகவே இந்த அத்தியாயத்தில் உள்ள விஷயங்களைக் கூறும்படி இறைவன் நபி (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளான்.

கருத்துரை
எல்லாவற்ரையும் படைத்து இரட்சித்து ஆளும் சர்வ சக்தியுள்ள ஒரே இறைவனை நான் வணங்குகிறேன். நீங்கள் அவனால் சிருஷ்டிக்கப்பட்ட சூரியன், சந்திரன், நட்சத்திரம் போன்றவைகளையும் உங்கள் கைகளால் உண்டாக்கப்பட்ட சிலைகளை வணங்கி வருகிறீர்கள். இந்த படைப்புகளும், சிலைகளும் உங்களைக் காப்பாற்றக் கூடியவை என நீங்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றீர்கள். இவைகளால் இலாபமோ நஷ்டமோ உண்டாக்க முடியாது. இந்த உணர்ச்சி உங்களுக்கு உதயமாகும் வரை என் வழியில் என்னை விட்டுவிடுங்கள் உங்கள் வழியில் நீங்கள் இருந்து கொள்ளுங்கள்.வணக்கத்திற்கு மூலமானது தவ்ஹீது எனும் இறைவன் ஒருவன் என்பதை நிலைநிறுத்துவதும், ஷிர்க் எனும் இறைவனுக்கு இணை வைத்தல் நிராகரிப்பாகும்.

இதன் சிறப்பு
நபித்தோழர் நெªபல் பின் முஆவியா அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் ரஸூல் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதரே நித்திரைக்குச் செல்லுங்கால் நான் எதை ஓத வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் குல்யா அய்யுஹல் காபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதிவிட்டு நித்திரை செல்லுங்கள் அது (ஷிர்க்) இணைவைத்தலை விட்டும் அகற்றக் கூடியதாகும். (மனத் தூய்மையுடன்) ஓதுபவன் ஷிர்க்கை விட்டும் காப்பாற்றப்படுகிறான். அப்படியே மரித்தாலும் (தவ்ஹீத்) ஏக தெய்வக் கொள்கியின் மீதே மரிக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அஹ்மது, அபூதாவூது,திர்மதீ, நஸயீ.)

அல் பீல் – யானை

மெªலவி E.M.அப்துர் ரஹ்மான்

1.யானை(ப்படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்க வில்லையா? 2.அவர்களுடைய சூழ்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 3.மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். 4.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 5.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப்போல் அவன் ஆக்கி விட்டான்.

யானைப்படை அழிந்த வரலாறு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன், அப்ரஹா என்ற பெயருள்ள அரசன் மக்காவிற்கு கிழக்கிலுள்ள எமன் நாட்டில் அரசு செலுத்தி வந்தான். இயற்கையில் அவன் துற்குணமுள்ளவன். மக்காவிலுள்ள  கஃபாவானது  அரபியர்களிடம்  விசேஷ மதிப்பு  பெற்றிருந்தது  பற்றி அவன் பொறாமை கொண்டு தன் நாட்டின் தலைநகர் ஸன்ஆ விலும்மொரு பெரிய கோவிலை கட்டினான். மக்காவிற்குச் ஹஜ்ஜு செய்யக் கூடாதென்றும் தன்னுடைய கோவிலுக்கே எல்லோரும் வரவேண்டுமென்றும் பிரகடன படுத்தினான். இவன் வார்த்தைக்கு ஒருவரும் மதிப்பு கொடுக்கவில்லை.

அரபியர்கள் வழக்கப்படி கஃபாவிற்கே யாத்திரை போனார்கள் இவன்கட்டிய கோவிலுக்கு யாரும் வரவில்லை. அதைப்பற்றி அவனுக்கு அதிக வருத்தம் உண்டு. இப்படியிருந்து வரும் சமயம் இவனுடைய கோவிலில் மலபாதை கழித்து ஆபாசம் செய்துவிட்டார்கள். அதைப்பற்றி  விசாரிக்கும்போது அவ்வாறு செய்தது  மக்காவாசி என்று தெரிந்தது. சிறிது  காலத்திக்குப்பின்  அந்தக்  கோவிலும்  தீப்பற்றி எரிந்து விட்டது. விசாரணையில்  மக்காவாசியே தீ வைத்ததாக  தெரிந்தது.  இவ்விரு  சம்பவங்களாலும் இயற்கையில் அவனுக்கு கஃபாவின் மீதும் மக்கா வாசிகளின் மீதும் இருந்து வந்த கோபம் மிகவும் அதிகமாகி விட்டது.

கஃபாவை இடித்து நாசம் செய்துவிட வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பெரிய படையுடன் மக்காவை நோக்கி புறப்பட்டான்.அப்படையில் யானைகள் அதிகம் இருந்ததால் யானைப் படைகள் என்று கூறப்பட்டது. அதில் மிகப்பெரிய யானையின் பெயர் மஹ்மூது. கஃபாவை மட்டும்தான் இடித்துத் தகர்க்கப் போவதாகவும் பொதுமக்களுக்கு எத்தகைய  இடையூறும் விளைவிக்கப்  போவதில்லையென்றும் ஆனால் இடிப்பதை எவராவது தடுத்தால் எல்லோரையும் தொலைத்து விடுவதாயும்  முற்கூட்டியே மக்காவாசிகளுக்கு  சுற்றறிக்கை அனுப்பி விட்டான். இதனால்  நபி (ஸல்) அவர்களின்  பாட்டனார்  அப்துல் முத்தலிபைத்  தவிர்த்து  பாக்கியுள்ள மக்காவாசிகள் அனைவரும் பீதியினால் நகரை விட்டும் பக்கத்திலுள்ள மலைகளில் போய் மறைந்து கொண்டார்கள்.

அப்துல் முத்தலிபும் அப்ரஹாவும்
அப்ரஹாவின் படைகள் மக்காவிற்குச் சிறிது தூரத்திலுள்ள வாதியே முகஸ்ஸர் என்ற இடத்தில் தங்கி இருந்தன. ஒரு தினம் அப்துல் முத்தலிப் அவர்கள் அப்ரஹாவிடம் விஜயம் செய்ய, அப்ரஹா அவர்களை வரவேற்று உமது தேவை என்ன என வினவினான். எனது ஒட்டகைகளை உமது படையினர் பிடித்துக் கொண்டார்கள், அதனைப் பெற்றுச் செல்லவே வந்திருக்கிறேன் என்றார். இதைக்கேட்ட அப்ரஹா வியப்புடன் உமது ஒட்டகையைப் பற்றிய விசயத்தைத்தான் தெரிவிக்கிறீர், நான் கஃபாவை இடிக்க வந்திருக்கிறேனே அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று அப்ரஹா சொல்ல அதற்கு முத்தலிப் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் என் பொருளை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் கஃபாவின் சொந்தக்காரன் வேறு. அவன் உடமையை அவன் காப்பாற்றிக்கொள்வான். என அர்த்தமுடன் பதிலுரைத்தார். ஒட்டகைகளைக் கொடுத்து அப்துல் முத்தலிபை அனுப்பிவிட்டு அப்ரஹா காஃபாவை இடித்து தரை மட்டமாக்கும்படி தனது யானைப்படைக்கு உத்தரவு பிறப்பித்தான். கட்டளையை நிறைவேற்ற யானைப்பாகர்கள், யானைகளை எவ்வளவுதான் அடித்து மிரட்டியும் அவை ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கவில்லை. ஏனேன்றால் மஹ்மூது என்ற தலமை யானை கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்து முன்னால் படுத்து விட்டது. அதைக் கிளப்ப அவர்களால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அவைகள் முழுச் சத்தியாக்கிரகம் செய்துவிட்டன.

கரு நிறமான பறவைகள்
இச்சமயம் ஜித்தா கடற்கறையின் திசையிலிருந்து கரு நிறமான பறவைகள் கூட்டங் கூட்டமாக பறந்து வந்தன. ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் அலகிலும் பொடிக் கற்கள் இருந்தன. யானைப் படையினர் நேருக்கு நேர் அவை வந்ததும் ஆகாயத்தில் பறந்துக்கொண்டே அப்பொடிக் கற்களை படைகள் மீது எறிந்தன. அக்கற்கள் யார்மீது விழுந்தனவே அவர்கள் மெல்லப் பட்ட வைகோள்களின் சக்கை போன்று ஆயினர்.

கஃபாவை இடித்துத் தள்ள கட்டளை பிறந்தபொழுது மறுத்துச் சத்தியாக்கிரஹம் செய்த யானைகளைத் தவிர்த்து மற்றெல்லாப் படையினரும் இக்கதிக்குள்ளாயினர். ஆங்காங்கே மலைகளில் மறைந்துக் கொண்டிருந்த மக்காவாசிகள், குரைஷிகள் கண்கூடாக பார்த்தனர். கஃபாவை தாக்க வந்த பெரும்படை சிறிய  பரவைகளால்  நாசமாக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னறிக்கையான அற்புதம் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் நடந்த 55 வது நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

எனவே, தங்களின் படை பலத்தாலோ, செல்வச் செருக்காலோ, நாவன்மையாலோ அல்லாஹ்வின் மார்க்கத்தை அழித்துவிடக் கணவு காண்பவர்கள், யானைப் படையின் கதியும், அதன் சம்பவமே போதிய சான்றாகும்.

கூட்டு துஆ

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி அவர்களும் அவர்களின் கலீபாக்களும், மற்றும் சஹாபாக்களும் பர்லு தொழுகைக்குப் பிறகு கூட்டாக துஆ ஓதியதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. அதாவது மாம் துஆ ஓத மற்றவர் “ஆமீன் ஆமீன்” என்று கூறும் நிலை (ன்று நமது பகுதிகளில் நடைமுறையில் ருப்பது போல்) அவர்கள் காலத்தில் கிடையாது.

நம்மைவிட துஆ கேட்கும் வகையில் பன்மடங்கு ஆர்வம் கொண்டுள்ள நபி அவர்களும், அவர்களின் உத்தம ஸஹாபாக்களும் ஒரு நேரத் தொழுகையிலும் கூட மாம் துஆ ஓத, மற்றவர் ஆமீன் கூறும் அமைப்பில் ருந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மாறாக நபி அவர்களும், சஹாபாக்களும் ஜமாஅத் முடிந்தவுடன் தனித்தனியே துஆ ஓதியுள்ளார்கள் என்பதையே ஹதீஸ்களின் வாயிலாக அறிய முடிகிறது.

நபி அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பிவிட்டால் “மும்முறை” أأَسْتَغْفِرُ اللهَ அஸ்தஃபிருல்லாஹ்” என்று (கூறி) பாவமன்னிப்புத் தேடுவார்கள். (பின்னர்)اللَّهُمَّ أَنْتَ السَّلأمُ وَ مِنْكَ السَّلأمُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلاَلِ وَ الإِكْرَم “அல்லாஹும்ம அந்த்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த்த யாதல் ஜலாலி வல்க்ராம்” என்று ஓதுவார்கள். என்று ஸவ்பான் (ரழி) அறிவித்துள்ளார்கள். (நூல்:முஸ்லிம், திர்மிதீ,ப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

பொருள்:யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன். மேலும் உன்னிடமிருந்தே சாந்தி பிறக்கிறது கண்ணியமும், மகத்துவமும் மிக்கவனாகிய நீயே மிக மேலானவனாகும். மேற்காணும் துஆவை நபி அவர்கள் தாம் தொழ வைத்துவிட்டுத் தனித்த நிலையில் ஓதினார்களே அன்றி அவர்கள் தொழ வைத்தபின் ஓதிய துஆக்களுக்கு எந்த ஸஹாபியும் ஆமீன் கூறினார்கள் என்பதை ஹதீஸ்களில் காணமுடியவில்லை. ஆகவே நபி அவர்கள் தனித்து ஓதியது போன்றே மற்ற ஸஹாபாக்களும் ஓதியிருப்பார்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது.

நபி அவர்கள், உங்களில் ஒருவர் தொழுதுவிட்டால் அவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்தோதி, பிறகு அவர் தாம், நாடியவற்றை (அல்லாஹ்விடம் கேட்டுப்) பிரார்த்திப்பாராக! என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபுழாலத்து பின் உபைத்(ரழி) நூல்: திர்மிதீ)

நான் ஒரு முறை நபி அவர்களுடன் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் ருக்கும் போது தொழுது கொண்டிருந்தேன். நான் தொழுதுமுடித்து உட்கார்ந்தவுடன் அல்லாஹ்வை போற்றிப் புகழ ஆரம்பித்து, பின்னர் நபி அவர்கள் மீது ஸலவாத்து கூறிவிட்டுப் பின்னர் எனக்காக துஆ கேட்டுக் கொண்டிருந்தேன், அப்போது நபி அவர்கள் நீர் கேளும்! தரப்படும் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) நூல்:திர்மிதீ)

அல்லாஹ்வின்  தூதரே!  (அல்லாஹ்விடம்) மிகவும்  ஏற்று  கொள்ளப்படுவதற்கு தகுதிவாய்ந்த துஆ (வின் நேரம்) எது? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், கடைசி ரவின் நடுப்பகுதியும், பர்லான தொழுகைகளுக்குப் பிறகும் என்றார்கள். (அபூ உமாமா(ரழி) திர்மிதீ)

மேற்காணும் ஹதீஸ்களின் வாயிலாக பர்லான தொழுகைகளுக்குப் பிறகுள்ள நேரம் துஆ கபூலாகக்கூடிய நேரம் என்பதையும் நமது தேவைகளை நாமே கேட்டுப்பெற முயற்சிக்க வேண்டும் என்றும் நபி அவர்கள் தமது ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள் என்பதையும் அறிகிறோம்.

மாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் நீங்கள் அனைவரும் ஆமின் கூறுங்கள்! நீங்கள் கூறும் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு ஒத்தாக அமைந்து விட்டால் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும் என்று தமது ஸஹாபாக்களுக்கு ஆமீன் கூறும்படி ஆர்வ மூட்டிய நபி அவர்கள் பர்லான தொழுகைகளுக்குப் பிறகு நான் மட்டும் துஆ ஓதுகிறேன் நீங்கள் அனைவரும் நான் ஓதும் துஆவுக்கு ஆமீன் சொல்லிக்கொண்டிருங்கள் என்று ஒருபோதும் ஒரு வார்த்தைகூட அவர்கள் கூறியதாக சரித்திரமே ல்லை. வ்வாறு எந்த ஸஹாபியும் தாம் மக்களுக்குத் தொழவைத்த பின் அவர்கள் துஆ ஓத மக்கள் ஆமீன் கூறினார்கள் என்று ஹதீஸ் நூல்களில் காணப்படவில்லையே என்று தான் ஹதீஸ் கலா வல்லுனர்கள் கேட்கிறார்கள்.

மாம் துஆஓத பின்பற்றி தொழுதவர்கள் ஆமீன் ஆமீன் என்று கூறுவது நல்லது தானே வ்வாறு செய்தால் என்ன தவறு? என்று பலர் கருதுகிறார்கள். நல்லது தானே என்று கூறுபவர்கள் அந்த நல்லதை நபி அவர்கள் நமக்கு காட்டித் தராமல் சென்று விட்டார்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

ஒன்றை நல்லதுதான் என்று நாமாகக் கருதிக் கொண்டு எதையும் செய்துவிட்டுப் போவதா? மார்க்கத்தில் நல்லதென்று ஒன்றிருக்குமானால், அது நபி அவர்கள் கூறிய, அல்லது செய்து காட்டிய, அல்லது அங்கீகாரம் செய்த ஒன்றாகத்தான் அது ருக்க வேண்டுமே அன்றி, நாமாக நடைமுறை படுத்தினால் நல்லதாகிவிட முடியாது.

உங்களை நரகத்தை விட்டும் தூரப்படுத்தி, சுவர்க்கத்தின் பக்கம் உங்களை அணுகச் செய்யும் (எந்த ஒரு நன்மையும் தீமையும்) உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படாது ஒரு விஷயமும் விடுபட்டு விடவில்லை என நபி அவர்கள் கூறினார்கள். (அபூதர்ரு(ரழி) நூல்: தப்ரானி)

“நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீகள். முன்சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.” அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி அவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை(பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.” என தாபியீன்களின் தலை சிறந்தவரும், சீரிய கலீபஃபாவுமான ப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மண்ணறை வாழ்க்கை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் இறப்பது நிச்சயம்! இதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் கூட ஏற்றுக் கொள்கின்றார்கள். எப்போதாவது ஒரு நாள் இறப்போம் என்பதை எல்லோருமே நம்புகின்றார்கள். ஆனால், அவர்கள் நம்பக்கூடிய மரணத்திற்கும், நாம் நம்பக்கூடிய மரணத்திற்கும் பொிய வித்தியாசம் இருக்கின்றது. அதாவது, ”மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இல்லையென” அவர்கள் கூறுகின்றார்கள் நாமோ, ”மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை இருக்கின்றது” என நம்புகிறோம். நாம் மரணித்துவிட்டால் நம்மை கப்ாில் அடக்கம் செய்வார்கள் அங்கே நமக்கு உயிர் ஊட்டப்படும். அதன்பின் இரு மலக்குகள் நம்மிடம் மூன்று கேள்விகள் கேட்பார்கள், சாியான விடை சொல்பவர்களுக்கு, சுவர்க்கமும், தவறான விடை சொல்பவர்களுக்கு நரகமும் என முடிவு செய்யப்படும் எனவும் நம்புகிறோம். இதனை, பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.

ஒரு அன்சாாித் தோழாின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்றபோது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ஸல்) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ாின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூாிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவாிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூாி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே” (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ாில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவாின் உயிரை அவாின் உடலில் மீட்டப்படும்) அவாிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ன அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தொியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும்.. ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விாிப்பை விாித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவாிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ாில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவாிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவைா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.

நிராகாிப்பவன் மரண வேளையை நெருங்கி விட்டால், கறுத்த (விகாரமான) முகத்துடன் சில வானவர்கள் வந்து அவனுடைய கண்பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்து விடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளித் துணி இருக்கும். அப்பொழுது உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனருகில் அமர்வர். அவர் அவனை நோக்கி, கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் அளிக்கவிருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஓட ஆரம்பித்து விடும். நனைத்த கம்பளி துணியிலிருந்து முள்ளுக் கம்பியை பிடுங்கி எடுப்பது போன்று உயிரைக் கைப்பற்றக்கூடிய வானவர் அவனுடைய உடலிலிருந்து (பலவந்தமாக) உயிரைப் பிடுங்கி எடுப்பார். (இவ்வாறு பலவந்தமாக அடித்துப் பிடுங்கி எடுத்த உயிரை) கொஞ்ச நேரங்கூட தன் கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கம்பளித் துணியில் வைத்துவிடுவார். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமான துர்நாற்றம் அதிலிருந்து வீசும். பின்பு அந்த உயிரை எடுத்துக் கொண்டு முதல் வானத்துக்குக் கொண்டு செல்வார் அந்த வானவர். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது எவனுடைய கெட்ட உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவனுக்குச் சொல்லப்பட்ட கெட்ட பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவனுக்காக முதல் வானத்தை திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், ஆனால் வானம் அவனுக்காக திறக்கப்படமாட்டாது என்று கூறிவிட்டு பின்வரும்; ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

நிச்சயமாக நம்முடைய வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை (ஏற்பதை) விட்டும் பெருமையும் கொண்டார்களே அத்தகையோர் – அவர்களுக்கு (அல்லாஹ்வின் அருளுக்குாிய) வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டாது, மேலும் ஊசியின் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள், மேலும் குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (7:40)

ஏக இறைவன், உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து, அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ”ஸிஜ்ஜீன்” (ஸிஜ்ஜீன் என்றால் தீயவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படும் இடமாகும்) என்ற இடத்தில் பதியுமாறு உத்தரவிடுவான். பின்னர், அந்த உயிர் (முதலாம் வானத்திலிருந்து ஸிஜ்ஜீன் என்ற இடத்துக்கு) எறியப்படும். பிறகு பின்வரும் ஆயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்) காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப் போன்றோ இருக்கின்றான். (22:31)

இவ்வாறு ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்பட்டு, பின்னர் அவனது உயிர் அவனுடைய உடலில் ஊதப்படும். அவனிடத்தில் இரு மலக்குகள் வந்து அவனை அமரவைத்து உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். கை சேதமே, கை சேதமே எனக்குத் தொியாது என்பான். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், கை சேதமே, கை சேதமே எனக்குத் தொியாது என்பான். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார். கை சேதமே, கை சேதமே எனக்குத் தொியாது என்பான். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து அவன் பொய் சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவனுக்கு நரகத்திலிருந்து ஒரு விாிப்பை விாித்து விடுங்கள். இன்னும் நரகத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவனுக்கு அதன் சூடும் விஷக்காற்றும் வந்து கொண்டிருக்கும். அவனுடைய விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று சேரும் அளவு கப்ரு அவனை நெருக்கும். இன்னும் அவனிடத்திலே கோர முகமுடைய, மோசமான ஆடை அணிந்த, துர்நாற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு கவலை தரக்கூடிய ஒன்றைக் கொண்டு கெட்ட செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ாில் அடக்கம் செய்யப்பட்டவர்) கெட்ட செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீ யார்? எனக் கேட்பார். நான்தான் உன்னுடைய கெட்ட செயல்கள் என அம்மனிதர் கூறுவார்.

அப்போது அவன், இறைவா! மறுமை நாளை கொண்டு வந்துவிடாதே என்று கூறுவான். (அஹ்மத், அபூதாவூத்)

அன்புள்ள சகோதர, சகோதாிகளே!
மேலே கூறப்பட்ட ஹதீஸின் மூலம் நல்லடியாாின் உயிரும், கெட்ட அடியானின் உயிரும் எப்படி பிாிகின்றது? அவ்விருவாின் கப்ருகளின் நிலை எப்படி அமைகின்றன என்பதை அறிந்தீர்கள். நமது மண்ணறையும் சுவர்க்கப் பூங்காவாக அமைய வேண்டுமானால் மரணிப்பதற்கு முன்பே அதற்குாிய அமல்களை அவசியம் செய்ய வேண்டும்.. அமல்கள் செய்யாமல் மரணிப்பவர், தன்னுடைய மரண நேரத்தில் இன்னும் கொஞ்ச காலம் இவ்வுலகில் வாழ்வதற்கு அல்லாஹ்விடம் அனுமதி கேட்பார். ஆனால், அவருக்கு கொஞ்ச நேரம் கூட கொடுக்கப்படமாட்டாது என்பதை அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; ”என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான். ”நான் விட்டுவந்ததில் நல்ல காாியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை); அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (23:99-100)

இவ்வளவுதான் இவ்வுலக வாழ்க்கை
மரணித்தவுடன் நாம் கஷ்டப்பட்டு உழைத்த பொருட்கள் மட்டும் பங்கு வைக்கப்படுவதில்லை நமது மனைவியையும் யாராவது மறுமணம் முடித்துக் கொள்வார்கள். நமது உடலை விட்டு உயிர் பிாிந்ததும், இவ்வுடலை எப்போது அடக்கம் செய்வது என்பதைப்பற்றித்தான் மக்கள் முதலில் பேசிக் கொள்வார்கள். இவ்வுளவுதான் இவ்வுலக வாழ்க்கை! நமது சொந்த பந்த உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடும். அல்லாஹ் இவ்வாறு தன் திருமறையில் கூறுகின்றான்.

ஆகவே, சூர் (குழல்) ஊதப்பட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்தங்கள் (பயனளிப்பது) இல்லை, ஒருவாின் செய்தியை மற்றொருவர் விசாாிக்கவும் மாட்டார்கள் (ஒவ்வொருவருக்கும் அவரவர் கவலையே பொிதாக இருக்கும்) (23:101)

அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் விரண்டோடுவான், தன் தாயையும், தன் தந்தையையும் (விட்டு) தன் மனைவியையும், தன் மக்களையும் (விட்டு விரண்டோடுவான்) அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதருக்கும் (தன் சுற்றத்தாரை விட்டும்) அவரைத்திருப்பி விடும் காாியம் உண்டு. (81:34-37)

கப்ாில் கேட்கப்படும் கேள்வியும் விடையும்!
மனிதன் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் தன் வாழ்வை இவ்வுலகில் அமைத்துக் கொண்டானோ, அதற்கேற்ற பதிலை மலக்குகளிடம் கப்ாில் கூறுவான்.

கப்ாில் கேட்கப்படும் கேள்விகளின் விடைகளை வைத்தே சுவர்க்கமும், நரகமும் முடிவு செய்யப்படுகிறது. அப்படியானால், கப்ாில் கேட்கப்படும் கேள்விகள் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தொிந்து கொள்ளுங்கள். அந்த கேள்விகளையும் விடைகளையும் நாம் எல்லோரும் தொிந்தே வைத்திருக்கின்றோம். அதனால் அக்கேள்விகளுக்குண்டான விடைகளை கப்ாில் அனைவராலும் சொல்லிவிட முடியுமா? நிச்சயம் முடியாது.

யார் இவ்வுலகில் அல்லாஹ்விற்கு, கட்டுப்பட்டு நடந்தாரோ அவர்தான் என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். யார் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் நடந்தாரோ அவர்தான் எனது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் என்று கூறுவார்;. யார் இஸ்லாத்தை மார்க்கமாகப் பின்பற்றினாரோ அவர்தான் என் மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார். பின்வரும் ஹதீஸ் இதைத் தெளிவு படுத்துகின்றது.

(சாியான விடை சொன்ன அம்மனிதரைப் பார்த்து, நீ இப்படி சாியான விடை சொல்வாய் என்பது எங்களுக்குத் தொியும், காரணம்) நீ அப்படித்தான் வாழ்ந்தாய், அப்படியே மரணித்தாய், அப்படியே எழுப்பப்படவும் போகிறாய் என அம்மலக்குகள் கூறுவார்கள். (முஸன்னஃப் இப்னு அபீஷைபா)

இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இம்மூன்று கேள்விகளுக்கும் விடை கூறும் விதமாக உங்களின் இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

கப்ரைப்பற்றிய சில நபி மொழிகள்
1- நீங்கள் (ஜனாஸாவை) அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற பயம் இல்லையென்றிருந்தால் எனக்கு கேட்கும் கப்ருடைய வேதனையை உங்களுக்கும் கேட்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் நான் துஆச் செய்திருப்பேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

2-மண்ணறையில் காலையிலும், மாலையிலும் அவருக்குாிய இடம் எடுத்துக் காட்டப்படும். சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கத்திலுள்ள அவரது இடம் அவருக்குக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகத்திலுள்ள அவனது இடம் அவனுக்குக் காட்டப்படும். ‘மறுமை நாளில் இறைவன் உன்னை எழுப்பும் வரை இது தான் உனது தங்குமிடம்” என்று அவர்களிடம் கூறப்படும். (புகாாி, முஸ்லிம்)

3- ஒரு ஜனாஸாவை (இறந்தவாின் உடலை) மனிதர்கள் சுமந்து செல்லும் போது அவர் ஒரு நல்லடியாராக இருந்தால், (நான் தங்குமிடத்துக்கு அவசரமாக) என்னை எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறும். அவன் பாவியாக இருந்தால், (எனக்கு) என்ன கேடுதான் பிடித்து விட்டதோ! என்று கூறியவாறு அலறும். இந்த ஓசையை மனிதர்கள், ஜின்கள் தவிர எல்லா உயிாினங்களும் செவிமடுக்கும். மனிதன் அச்சத்தத்தைக் கேட்டால் மயங்கிக் கீழே விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாாி)

ஜனாஸாவை பின் தொடர்வதின் சிறப்புகள்
யார் ஈமானுடனும் அல்லாஹ்விடம் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவை பின் தொடர்ந்து சென்று, ஜனாஸாத் தொழவைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் வரை அந்த ஜனாஸாவுடன் இருக்கிறாரோ அவர் இரண்டு ”கீராத்” நன்மைகளைப் பெற்றுத் திரும்புகிறார். ஓவ்வொரு கீராத்தும் உஹது மலயைப் போன்றதாகும். யார் அந்த ஜனாஸாவின் தொழுகையில் (மட்டும்) கலந்து கொண்டுவிட்டு (நல்லடக்கத்துக்கு முன்) திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு ”கீராத்” நன்மையைப் பெற்றுக் கொண்டு திரும்புகிறார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாாி)

கப்ாின் வேதனைக்குக் காரணம் என்ன?
கப்ாின் வேதனைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளை விடுவது.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளைச் செய்வது.
கப்ாின் வேதனையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு என்ன வழி?
1. செய்த தவறுகளுக்காக அல்லாஹ்விடம் உண்மையான தவ்பாச் செய்ய வேண்டும்.
2. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஏவியவைகளில் முடியுமானவைகளைச் செய்ய வேண்டும்.
3. அல்லாஹ்வும் அவனது தூதரும் தடுத்தவைகளை முற்றாக விட்டுவிட வேண்டும்.
கப்ாின் வேதனையிலிருந்து நம் அனைவரையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பாதுகாத்து, அதை சுவர்க்கப் பூங்காவாக ஆக்கிவைப்பானாக!.