இஸ்லாம்தளம்

மார்ச்18, 2009

நாம் சிந்திக்க வேண்டியவை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

@font-face { font-family: TheneeUniTx; src:url(http://readislam.net/THENEE.eot); }

கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?

அதாவது, பெயர் ரீதியான அடிப்படையைத்தவிர வேறு எந்த வகையிலும் நமக்கும் மற்றவர்களுக்கு மிடையில் வேறுபாடு கிடையாது. இறைவனை அலட்சியம் செய்வது, இறையச்சமின்மை, இறைவனின் கட்டளைக்கு கீழ்படியாமை முதலான செயல்களில் நாமும் அவர்களைப் போல் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றோம். திருக்குர்ஆன் இறைவன் அருளிய வேதம் என்று நமக்கு தெரிந்த போதிலும், ஒரு நிராகரிப்பாளன் அந்த தெய்வ நூலுடன் எவ்வாறு நடந்து கொள்கிறானோ அதே போல்தான் நாமும் நடந்து கொள்கிறோம்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனுடைய திருத்தூதர் என்று நமக்குத் தெரியும். அதே நேரத்தில் முஸ்லிம் அல்லாதவன் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதை விட்டு விலகிச் செல்வதைப்போல் நாமும் அவர்களைப் பின்பற்றுவதிலிருந்து விலகிச் செல்கிறோம்.

பொய் பேசுவது இறைவனுடைய சினத்தைத் தேடித்தரும். லஞ்சம் கொடுப்பவனையும் வாங்குபவனையும் நரகத்தில் தள்ளுவதாகவும், வட்டி கொடுப்பவனையும் வட்டி வாங்குபவனையும் மிக மட்டமான குற்றவாளிகள் என்று அவன் தீர்ப்பு வழங்கியிருக்கிறான். புறம் பேசுவது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்கு நிகரானது என்று தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறான். கெட்ட பேச்சு, வெட்கங்கெட்ட செயல், தரக்குறைவான நடத்தை ஆகியவற்றிற்குக் கொடிய தண்டனை உண்டு என்று அவன் குறிப்பிட்டு இருக்கிறான்.

இதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இப்படியெல்லாம் தெரிந்து கொண்ட பிறகும், இறைவனுடைய அச்சம் நமக்கு அறவே இல்லை என்பதைப்போல் நாம் இந்தச் செயல்கள் அனைத்தையும் மற்றவரைப் போல் தயங்காமல் தாராளமாகச் செய்கின்றோம். இதனால் ஏற்பட்ட விளைவு நாம் மற்றவரைக் காட்டிலும் கொஞ்சம் முஸ்லிமாக இருப்பதுபோல் காட்சி அளித்தாலும் நமக்கு அன்பளிப்பு கிடைக்க முடியாது; தண்டனைதான் கிடைக்கும். மற்றவர்கள் நம்மீது அதிகாரம் செலுத்துவது எல்லா வழிகளிலும் நம்மை அவர்கள் தாழ்த்துவது இதே குற்றத்தால் ஏற்ப்பட்ட விளைவுதான்! காரணம், இஸ்லாம் என்ற அருட்பேறு நமக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் அதனை நாம் மதிக்கத் தவறிவிட்டோம்.

திருக்குர்ஆனுடைய அறிவுரை என்ன, நபி (ஸல்) அவர்கள் போதித்த வழி என்ன, இஸ்லாம் என்றால் என்ன என்பனவற்றை ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவு இல்லாமல் ஒரு மனிதன் முஸ்லிமாக முடியாது. ஆனால் வேதனைக்குறிய விஷயம் என்னவென்றால், இந்த அறிவை அடைவதற்கு நீங்கள் சிந்திப்பதுகூட இல்லை. இதிலிருந்து நீங்கள் எத்துணைப் பெரிய அருட்பேற்றினை இழந்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணராமல்தான் இருக்கிறீர்கள்.

இறைவனுடைய நூல் உங்களிடம் இருக்கிறது ஆனால் அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் வேறு என்ன இருக்க முடியும்? நீங்கள் தொழுகிறீர்கள். ஆனால் அந்தத் தொழுகையில் நீங்கள் இறைவனிடம் எதைக் கேட்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாது. இதைவிடப் பெரிய நஷ்டம் ஒன்று உண்டா? இன்னும் சொல்லப்போனால் கலிமாவின் பொருள்கூட நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை. அந்தக் கலிமாவை கூறியதுடன் உங்கள்மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்கள் யாவை என்று நீங்கள் அறிந்து கொள்ளவில்லை.

வயல் எரிந்து பொசுங்கிப் போனால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். வேலை கிடைக்காவிட்டால் என்னவாகும் என்று உங்களுக்கு தெரியும். உங்கள் உடமைக்கு பாதகம் ஏற்பட்டால் அந்த நஷ்டம் உங்களுக்குத் தெரியும். ஆனால், இஸ்லாத்தைப் பற்றித்தெரிந்து கொள்ளாமலிருப்பது எவ்வளவு பெரிய நஷ்டமென்று உங்களுக்குத் தெரியவில்லை! இந்த நஷ்டத்தை நீங்கள் உணர்ந்து கொண்டால் நீங்களாகவே வந்து “எங்களை யாரேனும் இதிலிருந்து காப்பாற்ற மாட்டார்களா? என்று கேட்பீர்கள். நீங்கள் இப்படி கேட்கும்போது இறைவன் நாடினால், இந்த நஷ்டத்திலுருந்து மீளுவதற்கு உரிய வழியும் பிறந்துவிடும்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பிடரி நரம்பினும் அருகிலுள்ளவன்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

أَفَحَسِبَ الَّذِينَ كَفَرُوا أَن يَتَّخِذُوا عِبَادِي مِن دُونِي أَوْلِيَاء إِنَّا أَعْتَدْنَا جَهَنَّمَ لِلْكَافِرِينَ نُزُلًا

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை (த் தம்) பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம்ன்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்-18:102)

மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் ‘தர்கா’ மாயைகளில் விழுவார் களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்முடியும்?

ல்லாஹ் அல்லாத எதனிடமும் அவரிடமும் நமது தேவைகளைக் கேட்பதும் பாதுகாப்புத் தேடுவதும் இறைக்கு இணை வைத்தல் என்னும் மாபெரும் கொடிய பாவமாகும். அதாவது ‘ஷிர்க்’ஆகும். இது விஷயத்தில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள ேவண்டும்.

பச்சைத் தலைப்பாகைகளுடன் பவனி வரும் போலி வேடதாரிகளை ‘இறை நேசர்கள்’ என்றும், ‘நடமாடும் வலீ என்றும் கருதி, நமது ெபான்னான நேரத்தையும் – ெபாருளையும் செலவழித்து, நமது பகுத்தறிவையும் – இறைம்பிக்கையையும் இறையச்சத்தையும் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டுவர்கள் பின்னாலேயே செல்வோமேயானால் நம்மைவிட நஷ்டமடைந்தவர்கள் எவரும் இரார்!

ல்லாஹ், அருள் மறையிலே அழகாக நமக்குச்சரிக்கின்றான்.

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ

“நாங்கள்ல்லாஹ்ைவயும், இறுதி நாைளயும்ம்புகிறோம்” என்று வாயளவில் கூறுபவர்களும் மனிதர்களில் உள்ளனர் (ண்மையில்) அவர்கள் விசுவாசிகள்ல்லர்”. (அல்குர் ஆன் 2:8) ேமலும்,

உயிருடன் நடமாடும் ‘மஜ்தூப்களை‘ (பைத்தியக்கார நிைலயிலுள்ளவர்களை) ‘வலீ’ என்றுற்பனை செய்து கொண்டு,வர்களின் பிறந்த நாளின் போது அவர்களின் உடம்பில் சந்தனதைப் பூசுகின்ற கோலத்தையும் கேள்விப்படுகின்றேன்! அவர்கள் இறந்துவிட்டால் அடக்கம் பண்ணுவதற்கென்று தர்காக்கள் கட்டி வைத்திருப்பதையும் அறிகின்றேன். அம்மட்ேடா? பிணி முதலான மன நோய்களுக்குள்ளானோர், அந்தத் தர்காவே சரணென – 40 நாட்கள் – 3 மாதங்கள் – 6 மாதங்கள் – ஓராண்டு என நேர்ச்சைக்காக தங்கியும் வருகின்றனர். இவ்வளவும் உயிருடன் வாழ்கின்றருவரின்பயரால் கட்டிவைக்கப்பட்ட தர்காவில்?

கூத்துக்கள் கொஞ்சமா? ஞ்சமா? காகிதக் கூண்டுகளை இழுத்துகும்மாளம்‘ ேபாடும்யவஞ்சக நரிக் கூட்டங்களான வேடதாரிகளை, அப்பாவி பாமர மக்கள், ‘உயர்ந்தோர் எனவும், ‘சாலச் சிறந்தோர்’ எனவும்ம்பி, ‘மாலை – துண்டு‘ மரியாதை செய்வதையும் கண்ணுற முடிகின்றது! சிறு நீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யாத இந்த இறை நேச பக்தர் (?) ளின் கால்களில் விழும்ப்பாவிகள் எண்ணற்றோர்!

பசுத்தோல் போர்த்திய புலிகளாய் பவனி வரும் இவர்கள், தங்கள் வயிறுகளை எப்படியெலாம் நிரப்புகின்றார்கள் தெரியுமா? ஏமாந்த அப்பாவி மக்கள் ‘தர்கா’ உண்டியலில்பாடும் காணிக்கைகளை-தாங்களே அங்கு ‘அடக்க’ மாகியிருக்கும்பாவாவின் நேரடி வாரிசுகள்‘ என பாமரர்களை நம்பவைத்து பங்குபாட்டுக்கொள்கின்றனர்!

முகமூடிக் கொள்ளைக்காரர்களைவிட பயங்கரவாதிகளான இவர்களின் அட்டகாசங்களை இறைம்பிக்கைக் கொண்டவர்கள் உணர்ந்து தெளிந்து – வல்ல நாயனான அல்லாஹ்வை மட்டுமே தங்களுக்குப் பாதுகாவலனாக ஏற்று ஈடேற்றம் ெபற்று வாழ்வாங்கு வாழுங்கள்! எல்லாம் வல்லல்லாஹ் ஒருவனே நம் அைனவரையும்ன்கு உணர்ந்தவன்! நாம் செய்யக்கூடியவைகளைறிந்து கொள்பவனாகவும் பார்ப்பவனாகவும் செவியுறுபவனாகவும் இருப்பவன்ல்லாஹ் ஒருவனே! அல்லாஹ்வுக்கும்மக்கும் தடுப்பும் இல்லை! திரையும் இல்லை! ஆதலால் அல்லாஹ்வுக்கும்மக்கும் இடைத்தரகர்கள் தேவையில்லை! பிடரி நரம்பினும்ருகிலுள்ளல்லாஹ்விடமே நமது தேவைகளை எடுத்துரைத்து உதவி பெறுவோமாக! (ஆமீன்)

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

நபிமார்களின் வாரிசுகளே சிந்தியுங்கள்!!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ன்பு சால் ஆலிம்பரும் மக்களே! சற்று நடுநிலை வகித்து இந்தக் கட்டுரையைராய்ந்து படியுங்கள்.

நாெமல்லோரும் மெளலவி என்ற பட்டமும் நம் ெபயருக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவோ, அல்லது சாப்பாடு கிடைக்கின்றது என்பதற்காகவோ, மதரஸாக்களுக்குச் சென்று ஓதவில்லை. நம் ெபற்றோர்களும்ப்படி நிைனக்கவில்லை. யாரும்ப்படி நிைனக்கவும் மாட்டார்கள். மாறாக நம்பிள்ளைகள்ல்லாஹ்வுடைய வேதத்தைக் கற்றுத்தேரேவண்டும் நபி(ஸல்) அவர்களின் ஹதீதுகளைத் தெளிவாக உணர்ந்து மார்க்கத்தை அறிந்து, புரிந்து செயல்பட வேண்டும். பூரணமாக அறிஞர்களாகத் திகழ ேவண்டும்ன்று எந்தப் ெபற்றோரும் அவாவுறுவார்கள். நம்முடைய ஆசையும் அதுதான்!

னால், நமது அவா நிறைவேறியதா? என்றால் 100க்கு 95 சதவிகிதம் இல்லைன்று தான் சொல்ல வேண்டும். காரணம் குர் ஆன், ஹதீதுகளைப் படிக்கச் சென்றமக்கு குர்ஆனை நேரடியாகக் கற்றுத் தந்தார்களா? ஆதாரப்பூர்வமான ஹதீதுகள் பதிவாகியுள்ள கிரந்தங்களை நமக்கு பாட நூலாகக் கற்பித்தார்களா? அவைகளை சனதுகளோடு விளக்கிக்கூறி மனனம் செய்ய வைத்தார்களா? இல்லை.

ஏதோ அஜ்மீரிலே காட்டி மக்களை ஏமாற்றுவார்களே வருடத்திற்கு ஒரு முறை காஜாபந்தே நவாஸ் அவர்களின் சட்டை என்று, அதுபோல் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ புகாரி, முஸ்லிம், மிஷ்காத், அபூதாவூத், திர்மிதீ, பைஹக்கி, நஸயி ேபான்ற கிரந்தங்களை எடுத்து ஒரு சிலவற்றை வாசித்துவிட்டு, திரும்பவும் ைவத்து விடுவார்கள். பாட நூல்களாக ேமற்கூறியவற்றை போதித்தார்களா? மதஹபுகள் ேபரால் யார்,யாரோ எழுதிய தூர்ருல் முக்தார், ரத்துல் முக்தார், ஷரகுல்விகாயா, பத்தவாயே ஆலம்கீரி ேபான்ற குப்பைகளைல்லவா போதித்தார்கள். அதை ைவத்துத் தானே (நம்பித்தானே) இது நாள் வரை அமல் செய்து வருகிறோம்.

அறிவு தேடச் சென்றம்மை, இருக்கும்றிவையும்ல்லவா? காலிசெய்து அனுப்பி விட்டார்கள். இன்றும்மில் யாருக்காவது 40 ஸஹீஹான ஹதீதுகளை அவற்றின் சனதுகளோடு முழுமையாக ஒப்புவிக்க முடியுமா? எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணருங்கள். இன்று நம் கண்முன்னே நடக்கும் அனாச்சாரங்களை, ஷிர்க்கான காரியங்களைத் தடுப்பதற்கு ேவண்டிய சக்திகளை நபி(ஸல்) அவர்களின் கடுமையான கண்டனப் ெபான்மொழிகளை நம்முடைய இதயங்களில் புகுத்தத் தவறிவிட்டார்கள். ஆனால், இன்று இஸ்லாத்தின் உண்மை நிலையை அல்லாஹ் அறியச்செய்து இருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்! உண்மையை உணர்ந்த பின்னும் நமது வரட்டுக் கெளரவங்களைக் கருதி, வயிற்றுப் பிரச்சனைகளைக் கருதி வாய்மூடி மெளனமாக இருந்தால் நாம் நபிமார்களின் வாரிசுகளாக முடியுமா?

சத்தியத்தை எடுத்துச் சொல்வதால், தனது குடும்பமே பாதிக்கப்படுகின்றது. ஏழ்மையால் வாட நேரிடும் என்பதைத் தெளிவாக அறிந்த நிலையிலும், தந்தை ஆஜரின் கடுமையான ஏச்சுப் பேச்சுக்கிடையிலும், கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்ன்ற தந்தையின் மிரட்டலுக்கிடையிலும், நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் சத்தியத்தைச் சொல்லத் தயங்கினார்களா? சத்தியத்தை மறைத்தார்களா? ெமளனம் சாதித்தார்களா?

சுமார் இரண்டரை வருடங்கள் பனூஹாஷிம் கோத்திரத்தார் அரபு மக்களால் பகிஷ்கரிக்கப்பட்டுவர்கள் உண்ண உணவில்லாமலும், அவர்களின் பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் பசியால் அழுது துடிக்கும் பரிதாப நிைலயிலும், நபி(ஸல்) அவர்கள் சத்தியத்தை மக்களுக்குச் சொல்லத் தயங்கினார்களா? சத்தியத்தை மறைத்தார்களா? ெமளனம் சாதித்தார்களா? எந்தருமை ஆலிம்பருமக்களே! சிந்தித்துப் பாருங்கள். இந்த நிைலயில் சத்தியத்தை அறிந்துக் கொண்ட பின்பும், நாம் ெமளனம் சாதித்தால் யாருக்கு வந்த விருந்தோ? என்றிருந்தால் நாம் நபிமார்களின் வாரிசுகளாக திகழ முடியுமா? சிந்தியுங்கள்.

ம்மிலே பலர் கபுரு சம்பந்தப்பட்ட அனாச்சாரங்களையும் பாத்திஹாக்களையும் எதிர்த்துப் பேசிவிட்டால் போதும், சத்தியத்தைப் பேசி விட்டோம் என்று அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். உண்மைன்ன? குர் ஆனுக்கும், உண்மை ஹதீதுகளுக்கும் முரணாக எது காணப்பட்டாலும், அதை எடுத்துச் சொல்வதால் தலையே ேபாய்விடும்ன்ற நிலை வந்தாலும், தாங்கொன்னாத துன்பங்கள் அடுத்தடுத்து வந்தாலும், அவற்றைல்லாம் அழகிய பொறுமையோடு சகித்துக்கொண்டு, குர்ஆனையும், ஹதீதுகளையும் (கற்பனைக்ட்டுக் கதைகளை அல்ல) மக்களுக்குடுத்துச் சொல்வதே ஆலிம்களாகிய நமது கடமையாகும். அப்ேபாது தான் நபிமார்களின்ண்மை வாரிசுகளாக நாம் திகழ முடியும்.

ஆகவே எனதருமைச் சகோதர மெளலவிகளே! தவ்ஹீத் அடிப்படையில் ஒன்று சேருங்கள். ஆலிம்களே! பிமார்களின்ண்மை வாரிசுகளாகத் திகழுங்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

எது நபி வழி!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனிதன் சிந்தனை செய்யக்கூடியவன். சிந்தித்து தெளிவு பெறாத எவரும் முழு மனிதராகார். இப்புவியையும் விண்ணையையும் படைத்து அதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் படைத்து பயன் பெற மனிதனையும் படைத்து அம்மனிதனுக்கு தலையாய முதன்மையான கடமையான உணர்வுடன் தன்னை வணங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றான் எல்லாம் வல்ல இறைவன்!

பூந்தோட்டம் ஒன்றுக்கு செல்லுகின்ற ஒருவன் அம்மலர்களைப் பார்த்து பரவசப்பட்டு பூக்கள் சிலவற்றை பறித்துக்கொண்டு வந்து விட்டால் அவனுடைய பகுத்தறிவால் எப்பயனும் அவனுக்கு இல்லை. மாறாக இம்மலர்களுக்கு இத்தனை வண்ணங்களை கொடுத்துள்ள இறைவனின் ஆற்றல்தான் என்னே! என்று வியந்து ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று புகழ்ந்து நன்றியுணர்வை வெளிப்படுத்தினால் பகுத்தறிவால் பெற்ற பயன் அவனுக்கு ஏற்படும்.

ஏதோ மனிதனாக பிறந்து விட்டோம்; உயிர் உள்ளவரை வாழ்ந்தே ஆகவேண்டும்; அதற்காக பொருளீட்ட வேண்டும்; மணமுடிக்க வேண்டும். இவ்விரண்டுக்கும் சமுதாயத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றும் சிந்திக்காமல் மார்க்கம் கட்டளையிடாத மூதாதையர்கள், ஹஜ்ரத்மார்களின் சொல்லாகிய மெளலூது, மீலாது பாத்திஹாக்களை மார்க்கமாக கொள்கின்றனர்.

இம்மாதிரி சிந்திக்காமல் செயல்படும் சகோதர்களைப் பார்த்து நீ மார்க்கப்படி நடக்காமல் மூடத்தனமாக செயல்படுகின்றாயே! அல்லாஹ்வின் கட்டளையையும் நபி அவர்களின் போதனைகளையும் கவனித்தாயா? என்று கேட்டால், அதற்குத்தான் ஹஜ்ரத் இருக்கின்றாரே அவர் சொல்லாததை நீ ஏன் சொல்கின்றாய்? என்று நம்மைப் பார்த்து கேட்கின்றனர். நபிவழி அதுவே நல்வழி என்று வாயளவில் கூறுகின்றவர்கள் போர்டு எழுதி பள்ளிவாசலில் தொங்க விடுபவர்கள் ‘எது நபிவழி’ என்று தெரிந்து கொள்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. பெயருக்கு முஸ்லிம்களாக இருப்பவர்கள் வாயிலிருந்து வருகின்றவைகள் சிந்தனையுடன் கூடியவை அல்ல. ‘ஷரீஅத்’ நமது உயிர் ‘ஷரீஅத்படி நடப்போம்’ என்று கோஷம் போடுபவர்கள் ‘ஷரீஅத்’ என்பது எது? இறைக் கட்டளைகள் என்ன சொல்கின்றது? நபி அவர்கள் கூறுவது யாது? என்பதை கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

எவர் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் விசுவாசம் கொள்ளவில்லையோ நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நாம் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம். (அல்குர்ஆன் 48:13)

நபி அவர்கள் எப்படி வாழ்ந்து காட்டினார்களோ, அதுதான் நமக்கு முன்மாதிரி! மனித வாழ்க்கையில் நிகழக்கூடிய எந்த ஒரு சிறு செயலுக்கும் முன்மாதிரி இல்லாமல் இல்லை. உங்களுக்கு பிரியமானவர்கள் நடந்து காட்டுவது நபிவழி அன்று! மாறாக உண்மையான நம்பகமான நபிவழிகளை, நபிகளார் தம்வாழ்வு வாக்குகளிலிருந்து நீங்கள் அறிந்து நடப்பதுதான் மார்க்கத்தை புரிந்து செயல்படுவதாகும்.

காலங்காலமாக நடந்துவரும் செயல்கள் எல்லாம் நேரானவை ஆகா! எது நேரானவை என்று விளங்கிச் செயல்படுவதே மனித பகுத்தறிவுக்கு உகந்ததாகும். நபி அவர்கள் குறைஷிக் காபிர்களைத் திருத்தும் போது ‘எங்கள் மூதாதையர்கள் செய்து வந்தவைகளைத் தானே செய்கின்றோம் அவர்கள் அறிவீனர்களா?’ என்று கேட்டனர்; அவர்கள் வினவியது நியாயம்தான் என்று, அன்று நபி அவர்கள் சும்மா இருந்து விட்டால் இன்று நீங்களும், நாங்களும் எவ்வாறு முஸ்லிம்களாக இருப்போம்? அன்று அவர்கள் கூறியதையே இன்றைக்கு நீங்களும் கூறுகின்றீர்கள்; ‘இத்தனை காலமாக உலமாக்கள் சொல்லாததை இவர்கள் சொல்ல வந்துவிட்டார்கள்’ என்றும் கூறுகிறார்கள். உங்கள் கூற்றுக்கு ஆதாரத்தைக் காட்ட இயலுமா? என்று மார்க்கத்தை முறையாக விளங்கியவர்கள் கேட்டால் விழி பிதுங்குகின்றனர்.

அல்லாஹ் நமக்குக் கொடுத்திருக்கக் கூடிய பகுத்தறிவைப் பயன்படுத்தி எது உண்மையான நபிவழி என்பதை விளங்கி, செயல்பட்டு இம்மையிலும் மறுமையிலும் வல்ல அல்லாஹ்வின் பேரருளைப் பெற்று வாழ்வோமாக! ஆமீன்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

தூய்மையானவர்களைத் தவிர…

Filed under: ISLAM — islamthalam @ 12.24

குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா அல்லது கூடாதா என்பதில் பலர் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதனை நாம் சற்று கவனமாக ஆராய்வோம்.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

“நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. “தூய்மையானவர்களைத் தவிர (வெறெவரும்) இதனைத் தொடமாட்டார்கள்” (அல்குர்ஆன் 56:78,79)

நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘குர்ஆனைப் தூய்மையானவர்களைத் தவிர மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின் ஹஜ்மு (ரலி) நூல்கள்: நஸயீ, பைஹகீ, தாரகுத்னி

மேற்காணும் ஆயத்தில் இதனைத் தொடமாட்டார்கள் எனும் வாசகம் இருக்கிறது. இதனை என்று சொல்லப்பட்டிருப்பது “பாதுகாக்கப்பட்ட ஏட்டை” என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள்.

அடுத்து நபி (ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில் ‘குர்ஆனைப் பரிசுத்தமானவரின்றி மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியிருப்பதால்  நபி (ஸல்) அவர்களே பாதுகாக்கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனை என்று தானே பொருள் கொண்டிருக்கிறார்கள் எனலாம். அப்படி என்றால் அவர்கள் தொடவேண்டாம் என்று கூறாது “தொடமாட்டார்” என்றுதானே சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறிருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்கு தொட வேண்டாம் என்று பொருட்கொள்வது எங்கனம் பொருந்தும்?

அவ்வாறே ஒரு வாதத்திற்காக அதை ஏற்றுக்கொண்டாலும், அவர்களின் அந்த வாசகம் குர்ஆனைப் தூய்மையானவர்தான் தொடவேண்டும் என்பதைப் பொதுவாகக் காட்டுகிறதே தவிர ஒளுவில்லாதவர் அதைத் தொடக்கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டுவதாக அது அமைந்திருக்கவில்லை.

ஏனெனில் தூய்மையானவர் என்ற வார்த்தை பல கருத்துக்களைக் கொண்ட பொதுச் சொல்லாக அமைந்திருக்கிறது. அதற்கு [1] ஒளு செய்து சுத்தமானவர் [2] கையை மட்டும் களுவி சுத்தமானவர் [3] குளித்து சுத்தமானவர் [4] ஷிர்க் [இணைவைத்தல்] என்னும் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம் என்ற வகையில் சுத்தமானவர் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கொள்ள இடமிருப்பதால் ஒளு செய்து தூய்மையானவர் என்று மட்டும் பொருள் கொள்வதற்கு தக்க ஆதாரம் குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ இருந்தாக வேண்டும். அவ்வாறிருப்பதாக தெரியவில்லை. அல்லாஹ்வும், ரசூலும் பொதுவாக சொல்லியிருக்கும் ஒரு வார்த்தைக்கு அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அதற்கு குறிப்பிட்டு விளக்கம் தராதிருக்கும்பொழுது , தக்க ஆதாரமின்றி அதற்கு இதுதான் விளக்கம் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது?

ஆகவே மேற்காணும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் ஒளுவில்லாது குர்ஆனைத் தொட்டால், அவ்வாறு அவர் தொடுவதைத் தடுப்பதற்கு மார்க்க ரீதியாக நம்மிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த