இஸ்லாம்தளம்

மார்ச்15, 2009

இவர்கள் மார்க்க அறிஞர்களா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

குருடனும், பார்வையுடையோனும் சமமாக மாட்டார்கள். [அவ்வாறே] விசுவாசம் கொண்டு நற்செயல் புரிவோரும், [விசுவாசம் கொள்ளாது] பாவம் செய்வோரும் சமமாக மாட்டர்கள்.

நீங்கள் வெகு சொற்பமாகவே [இதனை கொண்டு] நல்லுணர்ச்சி பெறுகிறீர்கள்.

[விசராணைக்] காலம் [உறுதியாக வந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை.எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் [இதனை] நம்புவது இல்லை. [அல் குர் ஆன் 40:58& 59]

உண்மை இஸ்லாம் எவருள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து அதனால் அவர் தெளிவடைகிறாரோ அவரே பார்வை உள்ளவர்.

ஊடுருவி புரிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவன் குருடனாவான்.

சிந்தித்துத் தெளிவது மனித பகுத்தத்றிவுக்கு மகுடமாகும். உண்மை எது ? பொய்மை எது ?

நன்மை எது ? தீமை எது ? இதைக் கூட உணராத மனித சமுதாயம் உறுதியாக இருக்கவியலாது.

ஆனால் , உண்மை என்று தெளிந்த பின்பும் ,அதைகொண்டு செயல் படத் துணியாதவர்கள் உலகில் பலருண்டு. நன்மை என்று உணர்ந்த பிறகும் அதை நாடாதவர் எண்ணிக்கையில் அடங்காதவர் ஆவார்,

நியாயத் தீர்ப்பு நாள் உறுதியாக உண்டு என்று தெளிவாக பகிரங்கமாக திருமறை அறிவித்த பிறகும்கூட அதை நம்பி இறையச்சம் கொள்ளாதவர்கள் நம்மிடம் வாழ்கின்றார்கள். அவர்களின் வழிதவறிய வாழ்க்கையே இதற்கு சான்றாக உள்ளது.

நம்பிக்கையற்றவர்களுக்கு, நம்பிக்கை ஊட்டுவது கடினம்தான்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவத்தின் வழி தங்களின் உல்லாச-ஆடம்பர மனித தன்மையற்ற பேய் வாழ்க்கைக்கு எடுத்துக் காட்டாக வாழ்பவர்கள், எங்கனம் உண்மையை உணர முடியும்.

[மனித] வாழ்க்கையை [எல்லாம் வல்ல இறைவனை அடி பணிந்துவணங்கி] வாழ்வதற்கே என்பதை உணர்ந்து கொள்பவர்கள் எத்தனைபேர்?

உங்களில் எவர் செயல்களில் மிக்க அழகானவர் என்பதில் சோதிக்கும் பொருட்டே அவன் வாழ்வையும், மரணத்தையும் படைத்திருக்கிறான்.அவன் [யாரையும்] மிகைத்தோன்: மிக்க மன்னிப்புடையோன் அல் குர் ஆன் 67:20

[எனக்கு வழிபட்டு என்னை] வணங்குவதேயேன்றி ஜின்களையும், மனிதர்களையும் நான் படைக்கவில்லை, அவர்களிடத்தில் நான் யாதொரு பொருளையும் விரும்பவில்லை அன்றி [எனக்கு] ஆகாரம் கொடுத்துக் கொண்டிருக்குமாறு விரும்பவில்லை.

[நபியே நீர் கூறும்] உறுதியாக அல்லாஹ்தான் [யாவரையும்] உணவளிப்போனும், அசைக்க முடியாத பல சாலியுமாவான் அல்குர் ஆன் 51:56-58

பொதுவாக மனித வாழ்வு ஆணவத்திற்க்கும், அவசரத்திற்க்கும் இடையே அலைமோதி கொண்டிருக்கிறது.

நான் தான் பொருள் ஈட்டுகிறேன்: என்னால் தான் பலரும் உண்டு உடுத்தி உறைகின்றனர்.

என்னுடைய சொந்த அறிவை கொண்டே பதவியை உயர்த்திக்கொண்டு உல்லாச வாழ்வுக்கு அடித்தளமிடுகிறேன். என்றேல்லாம் கூறித் திரிபவனாக மனிதன் வாழ்கிறான். மேலும்தன் எண்ணத்திற்க்கும் ,செயலுக்கும் தன்னம்பிக்கை என விளங்குகின்றான்.

தன்னை படைத்தவன் மீது அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை வைப்பதையே [ தன் + நம்பிக்கை ] தன்னம்பிக்கையாகும். இதை ஓத்துக்கொள்ள மறுக்கும் மனிதனை எங்கனம் விமர்சிப்பது.?

உயிரிணங்களில் மிகச் சிறிய எரும்பு கடிக்கும்போது துடிக்காமல் இருக்கும் மனிதர்கள் எத்தனை பேர் ?

தன் அழகைப் பற்றியும், பலத்தை பற்றியும் பெருமையடித்து கொள்ளும் மனித இனம் சிந்தித்து பார்த்ததுண்டா ?

அறிவு-ஆற்றல்- அருள்- பலம்- அழகு- அன்பு யாவற்றையும் முழுமையா தன்னகத்தே கொண்டவன் அல்லாஹ் அன்றோ ?

மலர்களுக்கு வண்ணங்களைத் தந்து மணத்தையும் தந்தவன் மாபெரியவன் அல்லனோ? மற்றவர்கள் செய்த உதவிக்கு, நன்றி பாராட்டதவன் ‘நன்றி கெட்டவன்’ அல்லன்! இறைப் படைப்புகளைக் கண்டும் அதன் மகத்துவத்தை உணர்ந்தும் எல்லாம் வல்லவனைப் பற்றி எண்ணிப்பார்க்காதவனே ‘நன்றி கெட்டவன்’ ஆவான். ‘அவர் அப்படிச் சொன்னார்; இவர் இப்படிச் சொல்கிறார்’ என்று சிந்திக்காமல் சொல்வது தான் மனித தர்மமா?

கொலைக் குற்றத்தை இன்ன மனிதன் தான் செய்தான் என்று தெளிவாகத் தெரிந்த பிறகும், அவனுக்காக வழக்காடி அவன் குற்றத்தை மறைத்து ‘நிரபராதி’ முலாம் பூசி விடுதலை வாங்கித்தருபவன் சிறந்த வழக்குரைஞராகலாம்; ஆனால் நீதியைக் கொன்று,உலகில் குற்றங்கள் பெருக காரணமாக இருப்பவன் அவ்வழக்குரைஞன் என்பது தெரிந்த-பகிரங்கமான உண்மை தானே!

காலங்காலமாக சமுதாயத்தில் ஊடுருவி விட்ட ‘ஷிர்க்-பிதத்’துகளுக்கு புது விளக்கம் கொடுத்து-உலகியல் எடுத்துக்காட்டுகளை அள்ளி வீசி, இறைமறை கூற்றுகளையும்-நபிமொழி போதனைகளையும் மக்களுக்கு மறைத்து விட்டால்’ நெடுங்காலம் இவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக வாழ்ந்துவிடுவார்களா? என்ன! போலிமார்க்க அறிஞர்களே இன்றைய சமுதாய அநீதிகளுக்குக் காரணம் என்பதை உணரலாம்.

உண்மை வெளிப்பட்டே தீரும்! இதனை உணர்ந்து கொண்டால் போதும்!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

மனோ இச்சைக்கு வழிப்படுதல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

4:135. முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும்> உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும்> நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.

5:48. மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொ்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம்> இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக. உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி>) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும்> வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்். அல்லாஹ் நாடினால் ங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்். ஆனால்> அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்). எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும்> அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் ங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.

5:77. ”வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள். (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாாின் மனோ இச்சைகளை நீ்ங்கள் பின்பற்றாதீர்கள்். அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன்> தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்”” என்று (நபியே!) நீர் கூறுவீராக!

7:176. நாம் நாடியிருந்தால்> நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்் எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து> தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று> அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது> அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது – இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் – ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.

6:150. ”நிச்சயமாக அல்லாஹ் தான் இதனை ஹராமாக்கினான் என சாட்சி சொல்லக்கூடிய உங்கள் சாட்சிகளைக் கொண்டு வாருங்கள்”” என்று கூறும்் அவர்கள் சாட்சி கூறினால்> (அவர்கள் பொய்யராகவேயிருப்பர்) அவர்களுடன் சேர்ந்து நீர் சாட்சி சொல்ல வேண்டாம் – நம் வசனங்களைப் பொய்ப்பிக்கின்றவர்கள்> மறுமையை நம்பாதவர்கள் ஆகியோாின் வீணான மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம் – ஏனெனில் அவர்கள் தாம் தங்கள் இறைவனுக்குப் பல தெய்வங்களை இணையாக்குகின்றனர்.

6:56. ”நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்”” (என்று நபியே!) நீர் கூறுவீராக ”ங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்் (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்் மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்”” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.

18:28. (நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப்பொருத்த்தை நாடியவர்களாக காலையிலும்> மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ> அவர்களுடன் நீரும் பொறுமையை மேற் கொண்டிருப்பீராக! இன்னும் உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நாடி அ(த்தகைய)வர்களை விட்டும் உம் இரு கண்களையும் திருப்பி விடாதீர்் இன்னும்> எவனுடைய இதயத்தை நம்மை நினைவு கூர்வதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனை நீர் வழிபடாதீர்் ஏனெனில் அவன்தன் இச்சையைப் பின் பற்றியதனால் அவனுடைய காாியம் வரம்பு மீறியமாகி விட்டது.

25:43. தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா?

28:50. உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில்> நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்் இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட> மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்் நிச்சயமாக அல்லாஹ் அக்கரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.

30:29. எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்் ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ> அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்.

47:16. இன்னும்> அவர்களில் உம்மைச் செவிமடுப்பவர்களும் இருக்கின்றனர்் ஆனால் அவர்கள் உம்மை விட்டு வெளியேறியதும்> எவர்களுக்கு (வேத) ஞானம் அருளப் பெற்றதோ அவர்களைப் பார்த்து் ”அவர் சற்று முன் என்ன கூறினார்?”” என்று (பாிகாசமாகக்) கேட்கின்றனர்் இத்தகையோாின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். மேலும் இவர்கள்> தங்கள் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர்.

45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சாீர> மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ> அவனை நீர் பார்த்தீரா? மேலும்> அநிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு் இன்னும்> அவனுடைய பார்வை மீதும் திரையை அதை்துவிட்டான். எனவே> அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா?

79:37-41 எனவே> எவன் வரம்பை மீறினானோ – இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-  அவனுக்கு> நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ> நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

38:26. (நாம் அவாிடம் கூறினோம்்) ”தாவுூதே! நிச்சயமாக நாம் உம்மை புூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்் ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதுமாக)த் தீர்ப்புச் செய்யும்் அன்றியும்> அனோ இச்சையைப் பின் பற்றாதீர்் (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ> அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.

4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்். ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

53:23. இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை> நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை> நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும்> தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்> எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து> அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

மரணத்திற்குப் பின்பும் நற்செயல்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—

1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை அணுகி ‘என்னுடைய தந்தையார் மரண சாசனமும் அறிவிக்காமல் அவருடைய சொத்துக்களை விட்டு விட்டு இறந்து விட்டார். நான் அவருடைய சார்பில் ‘சதக்கா’ (தர்மம்) கொடுத்தால் அவரது பாவச் சுமைகளிலிருந்து அவருக்கு விடுதலை கிடைக்குமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என பதிலளித்தார்கள். (அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்)

வேறொரு நபிமொழி கீழ்வருமாறு அறிவிக்கப்படுகிறது:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் “என்னுடைய தாயார் மரண சாசனம் அறிவிக்காமல் திடீரென மரணம்  எய்திவிட்டார்கள். இறப்பதற்கு முன் பேச வாய்ப்பிருந்திருக்குமேயானால் அவர்கள் ‘சதக்கா’ செய்வது பற்றி கூறி இருப்பார்கள் என நான் நினைக்கிறேன். அவர்களுடைய சார்பில் நான் சதக்கா செய்தால் அவர்களுக்கு நன்மை கிட்டுமா?” என வினவினார். நபி(ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். (ஆயிஷா (ரலி) முஸ்லிம்

மேலே கூறிய நபிமொழி ஒருவர் செய்யும் நற்செயல்கள் தமது வாழ்நாளில் தமக்கு நன்மை பயப்பதுடன், தாம் இறந்த பின்பும் தமக்கு நன்மைகள் கிடைத்துக்கொண்டிருக்கும் என அறிந்து செயல்பட ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இறந்தவர்களுக்காக அவர்களது சார்பில் தர்மம் செய்வது கட்டாயக் கடமை அல்லவெனினும் அவர்களது சார்பில் செய்யும் தர்மங்களால் இறந்தவர்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்வதோடு தானும் நன்மை அடைகிறார்.

இறந்தவர் வாரிசுகளின் மீது சாட்டப்படும் கடமை யாதெனில், இறந்தவர் சொத்தின் மீது ஜகாத் கடமையாகி நிறைவேற்றாமல் இருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். இறந்தவர் உயில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரது கடன்களை அவரது சொத்திலிருந்து அடைத்து விடவேண்டும். இவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமான அளவு அவரது சொத்துக்களில் மதிப்பு இல்லையெனில் அவைகளை நிறைவேற்றுவது வாரிசுகளுக்கு கடமை இல்லை. இருப்பினும் வாரிசுகள் தாம் ஈட்டிய பொருளிலிருந்து நிறைவேற்றுவார்களாயின் அது மிகச் சிறப்புடைய செயலாகும்.

ஆனால், நம்மில் பெரும்பாலோர் துரதிஷ்டவசமாக இவை போன்ற நபிமொழிகளின் கருத்துக்களை  அறியாமலும், உணராமலும் மார்க்கத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பதாக எண்ணி 3ம், 7ம், 40ம் நாள் பாத்திஹா, வருடப் பாத்திஹா மற்றும் மெளலிதுகள் ஓதி சடங்குகள் செய்கின்றனர். இச்சடங்குகளால் இறந்தவர்கள் நன்மை அடைவர் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவற்றால் பொருள் நேரம் சக்தி விரயமாவதுடன் அல்லாஹ்வின் வெறுப்பிற்கும் ஆளாகி விடுகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

இத்தகைய சடங்குகள் இறந்தவர்களுக்கு நன்மையாக இருப்பின்  நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் செய்து காட்டி இருப்பார்கள். அவர்களின் மற்ற நற்செயல்களின் முறையும் ஹதீதுகளில் பதிவு  செய்யப்பட்டிருக்கும். ஆனால் இத்தைகைய சடங்குகள் நிறைவேற்றப்பட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே இவை நிச்சயமாக தவிர்க்கப்படவேண்டியவை.

அன்புச் சகோதரர்களே! மேற்கூறிய நபிமொழிகளில் கூறப்பபட்டிருப்பவைகளில் தான், நாம் இறந்தவர்களுக்கு நன்மை செய்ய முடியும். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

எவன் நேரான வழியில் செல்லுகிறானோ, அவன் தன்னுடைய நன்மைக்காக நேரான வழியில் செல்லுகிறான்; எவன் வழிகேட்டில் செல்லுகின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; ஒருவனுடைய பாவச்சுமையை மற்றெருவன் சுமக்க மாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை. (அல்குர்ஆன் 17:15)

அல்லாஹ் நம் அனைவரையும் நல்வழியில் செலுத்துவானாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ரபிஉல் அவ்வல்……

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ரபீஉல் அவ்வல் மாதம் முஸ்லிம் சமுதாயம் நாடு முழுவதும் மீலாது விழாக்கள் நடத்துவதையும், வீடுகள் தோறும் மவ்லூது ஓதுவதையும் கொண்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது தங்களுக்குள்ள அன்பையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதாக நம்பிக் கொண்டிருக்கிறது. இந்த சடங்கு, சம்பிரதாயங்கள் எல்லாம் நபி صلى الله عليه وسلم அவர்களின் மறைவிற்கும் 600 ஆண்டுகள் கழித்தே மக்களின் மனோ இச்சைகளுக்கு ஏற்றவாறு தோற்றுவிக்கப்பட்டவையாகும்.

மற்ற மதத்தவர்கள் எப்படி தங்கள் வேதங்களையும் மதச்சிறப்புகளையும் வேதாந்தமாகவும் வெற்று முழக்கங்களாகவும் ஆக்கி விட்டரனரோ அதே போல் முஸ்லிம்களும் இஸ்லாத்தின் தூய வாழ்க்கை நெறி முறைகளையும் வெற்று முழக்கங்களாகவும், பஜனை பாடுவதாகவும் ஆக்கிவிட்டார்கள் என்பதை இந்த மீலாது விழாக்களும் மவ்லூது சபைகளும் தெள்ளத் தெளிவாகப் பறை சாற்றுகின்றன. மாற்று மதத்தினரை அடி பிசகாமல் அப்படியே பின்பற்றி நடக்க ஆரம்பித்து விட்டனர் முஸ்லிம்களும்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த சமுதாயத்தின் வழிகேட்டைப்பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்.

“நீங்கள் உங்கள் முன்னோர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள். எதுவரை என்றால் அவர்கள் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் நீங்களும் அதனுள் நுழைவீர்கள்” என்று.அதற்கு நாங்கள் (நபித்தோழர்கள்) “அவர்கள் யகூதி, நஸரானிகளா? என்று கேட்டதற்கு, வேறு யார் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி) நூல்: முஸ்லிம்-இல்ம், புகாரி-இஃதிஸாம்.

முஸ்லிம்கள் தாங்கள் நடத்தும் இந்த மீலாது விழாக்களில் மாற்று மதத்தினரையும் அழைத்து அவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், நபி صلى الله عليه وسلم அவர்களைப் பற்றியும் ஏற்றிப் போற்றிப் பேசுவதை பெருமையாக எண்ணும் துரதிஷ்ட நிலையும் இன்று நாடு முழுதும் பரவிவிட்டது. நாங்கள் போடுவது வெற்றுக் கோஷங்கள்தான் – வீண் முழக்கங்கள்தான் என்பதை இது கொண்டு உறுதிபடுத்துகின்றனர்.

உள்ளும் புறமும் ஒருங்கே சீராகச் செயல்படும் உண்மையாளர்கள் ஒரு போதும் இவ்வாறு நடக்க முடியாது; பேச முடியாது. மேடைப் பேச்சு, கற்பனைப் பேச்சு, நயவஞ்சகப் பேச்சு என்பதுபோல் பீலாது மேடைகளையும் ஆக்கி வருகிறது இந்த முஸ்லிம் சமுதாயம். இது வேதனைக்குரிய விஷயமா இல்லையா?

அல்லாஹ்வும் அவனது ரஸூலும் காட்டித்தராது, மனித கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் நல்லவைகயாகக் கருதப்பட்டு செயல்படுத்தும் காரியங்கள் அனைத்தும் இறுதியில் சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பவையாக அமையுமே அல்லாமல் சமுதாயத்திற்குப் பலன் தரும் செயல்களாக ஒரு போதும் அமையாது.

உண்மையில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மீது உறுதியான அன்புள்ளவர்கள், அவர்களை அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் என்று மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் இப்படிப்பட்ட வெற்றுச் சடங்குகளில் ஈடுபடமாட்டார்கள். ரபீஉல் அவ்வல் மாதம் மட்டும் மேடைகளை அமைத்துக் கற்பனைக் கவிதைகளான மவ்லூதுகளை ஓதுபவர்களாகவும் மீலாது மேடைகள் அமைத்து நுனி நாவில் நயவஞ்சகப் புகழ் பாடுபவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.

நபி صلى الله عليه وسلم அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் உருவாக்கப்பட்டவற்றை மார்க்கமாக ஒரு போதும் எடுத்துச் செயல்படுத்தமாட்டார்கள். மாறாக வருடம் 365 நாட்களும், நபி صلى الله عليه وسلم அவர்களைத் தமது வழிகாட்டியாக மனப்பூர்வமாக ஏற்று அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி, குர்ஆனைக் கொண்டும் மட்டும் நிலை நாட்டப்பட்டுள்ள காரியங்களை மட்டும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவார்கள். அப்படிப்பட்ட உண்மை முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ அல்லாஹ்வின் அருள் கிட்டுமாக!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அற்புதம் விளைவிக்கும் அல்குர்ஆன்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

யூதர்கள், கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகத்தாரும் கொண்டாடும் இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு இரண்டு ஆண் மக்கள். ஹாஜரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்மாயீல் (அலை) சாரா (அலை) அவர்கள் மூலம் பிறந்த இஸ்ஹாக் (அலை).

அரபு நாட்டினர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். ஆரம்ப கால யூத, கிறிஸ்தவர்கள் இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழி வந்தவர்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிலிருந்து இறுதி நபி صلى الله عليه وسلم அவர்களது காலம் வரை சுமார் 3500 ஆண்டுகால வரலாற்றின் இடையில் அரபுகளிடம் ஒரு நபியும் வரவில்லை. ஆனால் இஸ்ஹாக் (அலை) அவர்களிலிருந்து ஈஸா (அலை) அவர்களது காலம் வரை ஆயிரக்கணக்கான நபிமார்கள், குர்ஆன் சிறப்பித்துக் கூறும் பனீ இஸ்ரவேலர்களிடையே தோன்றியுள்ளனர். இந்த விபரங்களை ஏன் எடுத்து எழுதுகிறோம் என்றால் 3500 ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் மக்களை நேர்வழிப் படுத்தும் ஒரு நபியும் அரபுகளிடையே தோன்றவில்லை என்றால் அவர்கள் எந்த அளவு வழிகேட்டிலும் மூட நம்பிக்கையிலும், மூடச்சடங்கு சம்பிரதாயங்களிலும் மூழ்கி இருந்திருப்பார்கள் என்பதை உணர்த்தத்தான்.

நபி صلى الله عليه وسلم அவர்கள் அந்த மக்களிடையே சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும்போது அந்த அரபு மக்களிடையே இருந்த அறியாமைக்கு வேறு எந்த சமூகத்தாரையும் உதாரணம் காட்ட முடியாது. அவர்களை விட வழிகேட்டில், மூட நம்பிக்கைகளில், மூடச் சடங்கு சம்பிரதாயங்களில் வேறு எந்த சமூகமும் அன்று உலகில் இருந்ததாகத் தெரியவில்லை. 365 சிலைகளை ஏக இறைவனின் வீடான கஃபத்துல்லாஹ்வின் உள்ளே வைத்து வணங்கி வழிபட்டு வந்தார்கள். குடி, விபச்சாரம், கொலை, கொள்ளை போன்றவற்றில் கொடிகட்டிப் பறந்தார்கள். பஞ்சமா பாதகங்கள் அனைத்தும் அவர்களிடம் வீர, தீரச் செயல்களாகப் பெருமை பேசப்பட்டு வந்தன.

பல்லாண்டு ஊற வைத்த மதுக்குடங்கள் இருப்பது கொண்டு பெருமை பேசினர். குடம் குடமாக குடித்த பின்னரும் நிதானமாக இருப்பதாக பெருமை பேசினர். தங்களுடைய வாட்களால் எத்தனை பேருடைய தலைகளைச் சீவியுள்ளோம் என்று பெருமை பேசினர். தந்தைக்கு நூறு மனைவிகள் என்றால் அந்தத் தந்தை இறந்தவுடன் அவனது பிள்ளைகள் அந்தத் தந்தையின் மனைவிகளை பங்கு போட்டு தங்களின் மனைவிகளாக ஆக்கிக் கொண்டு பெருமை பேசினர். இப்படி ஆகாத செயல்கள் அத்தனைகளிலும் பெருமை பேசினர்.

இப்படி பங்கு போடுவதிலும், வேறு பல சில்லரைக் காரியங்களிலும் மனவருத்தம் ஏற்பட்டுவிட்டால், அதற்காகத் தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொண்டார்கள். அன்றைய அரபு நாட்டில் பல்வேறு பிரிவினர்களாக, குழுக்களாகப் பிரிந்து நின்று பெறுமை பேசுவதோடு, மற்றப் பிரிவினரை இழிவாக, கேவலமாக எண்ணி ஏகத்தாளம் பேசுவதோடு, அதனால் போட்டி பொறாமை ஏற்பட்டு காலமெல்லாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படி மனித உள்ளம் படைத்தவர்கள் செய்யக் கூடாத அத்தனைக் காரியங்களையும், சுருக்கமாகச் சொன்னால் மிருகங்களாக வாழ்ந்து வந்தார்கள்.

மனித வர்க்கத்தின் இழிவான, மோசமான ஒரு நிலையே இல்லை என்றும் சொல்லும் அளவிற்கு வீழ்ந்து கிடந்தனர். இறுதி நபி அந்த அரபு மக்களிடையே வரும்போது அந்த மக்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாகவும், நரக நெருப்பின் விழிம்பில் இருந்ததாகவும் அல்லாஹ் அல்குர்ஆன் 3:103 வசனத்தில் தெளிவுபடுத்திவிட்டான். அப்படியானால் அதைவிட இழிவான, மோசமான கீழ்த்தரமான வேறு நிலையே மனித வர்க்கத்தில் இல்லை என்பதுதான் அதன் பொருள். அரபு மக்களிடையே இருந்த பிரிவுகள் போல் உலகில் வேறு எங்கும் இருக்கவில்லை.

அப்படிப்பட்ட அந்த மக்கள் தங்களின் அந்த நிலைக்கு நேர் மாற்றமாக ஒன்றுபட்டு, மனிதனின் ஆக உன்னத நிலை, மனிதப்புனிதன் என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஆக உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டார்கள். அகில உலக மக்களுக்குக் முன்மாதிரியாக, வழிகாட்டிகளாக ஆனார்கள். எப்படி? அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள் இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள் எப்படி? அதி அற்புதமான இந்த அதிசயத்தை எது நிகழ்த்திக் காட்டியது? ஆம்! அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கியருளப்பட்ட அல்குர்ஆனே இந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்டியது.

ஆயினும் இந்த அற்புத மாற்றம் மிக எளிதாக நிறைவேறிவிடவில்லை. மிகமிக கடின முயற்சிக்குக் பின்னரே இது சாத்தியமாயிற்று. வழமைப்போல் அந்த காலத்திலும் புரோகிதரர்களே மக்களிடையே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். “தாருந்நத்வா”(அறிஞர்கள் சபை) என்ற புரோகிதரர்களின் சபையினரே மக்களை ஆட்டிப்படைத்து வந்தனர். அந்த மக்கள் எளிதாக அல்லாஹ்வின் இறுதி வேதமான அல்குர்ஆனை ஏற்றுச் செயல்பட அந்த தாருந்நத்வா அறிஞர்கள் விட்டு வைக்கவில்லை. அல்குர்ஆனை விட்டு மக்களைத் தூரப்படுத்த என்ன என்ன தந்திரங்களைப் கையாள முடியுமோ அத்தனைக் தந்திரங்களையும் கையாண்டார்கள்.

இந்த முஹம்மது ஷைத்தானிடமிருந்து சில மந்திரங்களை அறிந்து கொண்டு அவற்றை மக்களிடம் ஓதிக்காட்டி மக்களை மயக்குகிறார்; வழிகெடுக்கிறார். அவர் ஒரு சூன்யக்காரர், கவிஞர், பொய்யர், சந்ததியற்றவர், பைத்தியக்காரர், மோசடிக்காரர் என்றெல்லாம் தொடர்ந்து துர்ப்பிரச்சாரம் செய்து மக்கள் இறுதி நபியையும், அல்குர்ஆனையும் நெருங்க விடாமல் செய்தனர். தப்பித்தவறி கூட குர்ஆன் ஓதுவதை கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மக்களை காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள தூண்டினார்கள்.  அல்குர்ஆனை நெருங்க விடாமல் இருக்க அத்தனை முயற்சிகளையும் தாருந்நத்வா புரோகிதரர்கள் செய்தனர்.

நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு சத்தியத்தை நிலைநாட்டுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு எத்தனை விதமான தொல்லைகள், துன்பங்கள் கொடுக்க முடியுமோ அத்தனையையும் கொடுத்தார்கள். சிலரைக் கோரமாகக் கொலை செய்தார்கள். எப்படியும் நேர்வழிக்கு வந்தவர்களை மீண்டும் தங்களது வழிகேட்டுப் பாதைக்கு கொண்டு வந்து சேர்க்க பெரும்பாடு பட்டார்கள். சிலரைக் கொலை செய்தல், கடும் வெயிலில் வெற்று மேனியினராகப் போட்டு வதைத்தல், சாட்டையால் அடித்துக் கொடுமைப்படுத்தல் நபி صلى الله عليه وسلم அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ஒரு பள்ளத்தாக்கில் ஊர் ஒதுக்கி வைத்தல், இப்படி அந்தப் புரோகிதரர்களால் முடிந்த அத்தனைத் துன்பங்களையும் கொடுத்து சித்திரவதை செய்தனர். சில முஸ்லிம்களும் இந்தத் துன்பங்களால் ஓய்ந்துபோய் அல்குர்ஆனை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று பின்வாங்கி இருப்பார்களானால் இன்று நாமெல்லாம் முஸ்லிமாக இருக்க முடியுமா? அல்குர்ஆன் வசனம் 5:67 என்ன கூறுகிறது?

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நிறவேற்றியவராக மாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

இந்த இறைக்கட்டளையில் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை அப்படியே மக்களிடம் எடுத்து வைத்துவிட வேண்டும். அதனால் மக்கள் துன்பம் இழைக்க முற்பட்டால் அல்லாஹ் உம்மை காப்பாற்றப் போதுமானவன். எனவே நபி صلى الله عليه وسلم அவர்கள் இந்த இறைக்கட்டளைகளை உணர்ந்து சத்திய பிரச்சாரத்தில் சிறிதும் கூடுதல், குறைவு செய்யாமல் நிறைவாகவே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் நபித்தோழர்களும் துன்பங்களின் எல்லைக்கே போய் இறைவனிடம் முறையிடும் அளவிற்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்.. சோதனைக்கு உள்ளாக்கப் பட்டார்கள்.

இத்தனை சோதனைகளுக்கும் உட்பட்டு நபி صلى الله عليه وسلم அவர்கள் அயராது, சளிக்காது அல்குர்ஆனை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அல்குர்ஆன் நடைமுறை சாத்தியமில்லை என்று சொந்த யூகங்ளைப் புகுத்த முற்படவில்லை. அதன் இறுதி முடிவு பல பிரிவினர்களாகப் பிரிந்து வீழ்ச்சியின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தவர்கள், ஒன்றுபட்டு ஒரே சமுதாயமாகி அகில உலகிற்கும் வழிகாட்டிகளாக, முனோடிகளாக இமயமலை உச்சிக்கே உயர்ந்தார்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த