முஸ்லிம் உலகம் இன்று பல்வேறு பிரிவுகளாகப் பிளவு பட்டுள்ள சூழ்நிலையை நாம் காண்கிறோம். அவரவர் தம்மனம் போன போக்கில் செல்ல அவரவர் தம் முன்னோர் காட்டிய வழியில் செல்ல விரும்புவதால் பல பிரிவுகள் இந்த இந்த சமுதாயத்தில் மலிந்து காணப்படுகின்றன
கடந்த காலங்களில் இஸ்லாத்தின் பெயரால் இந்த சமுதாயத்தில் நுழைந்துவிட்ட தவறான கொள்கைகள், ஆதாரமற்ற வணக்க முறைகள், அறியாமையின் காரணமாக புரையோடிப் போய்விட்ட மூட நம்பிக்கைகள், போலிச் சடங்குகள் ஏராளம். மக்கள் ஷிர்க்கிற்கு வெண்சாமரம் வீசி மார்க்கத்தில் “பித்அத்”களை நுழைத்து இஸ்லாம் மார்க்கத்தை சடங்கு மூட்டையாக ஆக்கிவிட்டார்கள். அல்லாஹ்வும், அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் நமக்கு காட்டிய அந்த ஒரே வழியைத் தவறவிட்டு பலவழிகளில் மக்கள் செல்வதை காண்கிறோம்.
அல்ஹம்துலில்லாஹ். இன்று இஸ்லாமிய வரலாற்றில் புதியதொரு சகாப்தம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக மார்க்கத்தை வைத்து வயிறு வளர்க்கும் நிலையையே இஸ்லாமிய உலகம் கண்டு வந்தது. குர்ஆனும், ஹதீஸும் விலைப்பேசப்பட்டு வந்தன. பணம் பெற்றுக்கொண்டு மார்க்கம் உபதேசிக்கப் பட்டு வந்தது. மார்க்கம் பிழைக்கும் வழியாகவும், மார்க்கத்தை உபதேசிப்பவர்களில் பெரும்பாலோர் தங்கள் உலக ஆதாயத்தையே குறியாகவும் கொண்டிருந்தனர். இந்த இழி நிலை மாறி தங்கள் கையிலிருக்கும் பணத்தைச் செலவழித்து மக்களுக்கு மார்க்கத்தைப் போதிக்கும் இவர்கள் அல்லாஹ்வின் பொருத்ததை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கப் புறப்பட்டிருக்கின்றார்கள்.
மக்களிடையே மார்க்கம் மதமாக்கப்படுவதற்கு மூல காரணங்களாக இருக்கும் முன்னோர்களை கண்மூடிப் பின்பற்றும் பழக்கம் மண்மூடிப்போக ஜிஹாத் செய்யவும் காலங்காலமாக வாழையடி வாழையாக பரம்பரை பரம்பரையாக நடந்துவரும் காரியங்கள் என்ற நம்பிக்கையில் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணாக சமுதாயத்தில் வேறூன்றிவிட்ட அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழியவும் சத்திய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து, பின்பற்றவும் மார்க்கத்தை பிழைப்புக்காக பயன்படுத்தாமல் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை மனித யூகங்கள் கலக்காமல் அனைவரும் புரிந்திட இஸ்லாத்தை முழுமையாக நிலை நாட்ட அயராது உழைக்க உறுதி பூண்டுள்ளார்கள்.
ஆகவே இவர்களின் கூச்சலிற்கு வளைந்து நெளிந்து குனிந்து போக வேண்டிய அவசியம் ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. குர்ஆனும், நபிவழியும் எவற்றை மார்க்கமாக போதிக்கின்றனவோ அவற்றை நெஞ்சுயர்த்திச் சொல்ல இவர்கள் அஞ்சப்போவதில்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்