இஸ்லாம்தளம்

மார்ச்8, 2009

இணைவைத்தல் அன்றும், இன்றும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அன்றைய அறியாமை காலத்தில் 360 சிலைகள் நிரம்பிய கஃபாவில், முஆவியா கோத்திரத்தார் கொடுத்த ஹுபைல் சிலையே பிரதானமானது. அடுத்து குறைஷியரின் பெருமைக்குறிய ஆலயங்களாக மூன்று விளங்கின.”கடவுளின் பெண் மக்கள்” என்று பக்தியோடு வணங்கப்பட்ட லாத், உஸ்ஸா, மனாத் கோவில்களாகும்.

1, மதீனாவிற்கு மேற்கே செங்கடலை ஒட்டிய ‘குதைத்’ என்னும் பிரதேசத்தில் ருந்தது. “மனாத்” கோவில்.

2, மக்காவிலிருந்து ஒரு நாள் பிரயாண தூரத்தில் இருந்தது  ‘நக்லா’ எனும்  சமவெளி பிரதேசம். இங்கிருந்தது  அல்-உஸ்ஸாவின்  குறைஷிகளின்  அதிக சிறப்பு வாய்ந்த ஆலயம்.

3, தாயிப் நகரில் ஹவாஸின் கோத்திரமான ‘தகீப்’ களின் நிர்வாகத்தில் இருந்த கோயில் “தாயிப்மாது” என்று பெருமையுடம் அழைக்கப்பட்ட சிலை ‘அல்-லாத்’ ஆகும்.

ஏகத்துவம் வெற்றி பெற்றதும் நபி (ஸல்) அவர்கள் இணை வைக்கும் கேந்திரங்களை அழித்தொழிக்க அலி(ரழி), காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள். “அல்-உஸ்ஸா”வின் ஆலயத்தை அழித்தபின் காலித்(ரழி) கூறினார். என் தந்தை வலீத் 100 ஒட்டகங்களையும் செம்மறி ஆட்டு மந்தைகளையும் கொண்டு சென்று உஸ்ஸாவிற்கு பலி கொடுத்து தம் நேர்ச்சைகளை நிறைவேற்றி வருவார்.

இன்று நபி (ஸல்) அவர்கள் அழித்தொழித்த இணைவைத்தலின் கேத்திரங்கள் இன்று நம்மிடையே இஸ்லாமிய பெரியார்களின் பெயர்களை தாங்கி தர்ஹா ஆலயங்களாக திகழ்கின்றன.

ஜாஹிலியா (அறியாமை) கால ‘வலீத்’கள் கூட்டம் இன்றும் தங்கள் நேர்ச்சைகளை, குர்பானிகளை அவ்வாலயங்களில் நிரைவேற்றி மகிழ்ச்சியோடு திரும்புகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் இணைவைக்கும் வியாபாரத்தலங்களை மக்கள் நடமாட்டமில்லாத வனாந்திரங் களாகவும், ஷிர்க்கின் (இணைவைத்தல்) பீடங்களாக இருந்த ஊர்களை, நகரங்களை ஜன சஞ்சாரமற்ற பாலைவனங்களாக மாற்றியிருந்தார்கள். இன்று நமது நாட்டில், ஷிர்க்கின் தலைமை பீடங்களாக இணை வைக்கும் வியாபாரத் தலங்களாக அஜ்மீர், நாகூர், ஏர்வாடி, முத்துப் பேட்டை போன்றவைகள் திருவிழா கோலத்துடன் ஊருக்கு ஊர் காட்சியளிக்கின்ற்ன.

கபுர் வணக்கம், பூப் போடுதல், உரூஸ், இசை நிகழ்ச்சி, ஸஜ்தா செய்தல், கபுர் கட்டிடம் கட்டுதல், தரைக்கு மேல் உயர்த்துதல், பிரார்த்தனை செய்தல் போன்ற அனைத்து செயல்களும் இன்று நேர்வழிகளாக மாற்றப்பட்டன. கபுருக்கு பெண்கள் செல்வது, விளக்கேற்றுவது, அல்லாஹ்வின் சாபத்திற்குறிய செயல்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அன்று கூறினார்கள். இன்று அடக்கஸ்தலங்கள் பெண்களுக்கு பரக்கத் தரக்கூடிய இடங்களாக காட்சி தருகின்றன. சபிக்கப்பட்டவைகள் (லஃனத்) இன்று பரகத்தாக மாறிவிட்டன.

இதுதான் இஸ்லாம் என்று எண்ணி ஏமாந்த அப்பாவி முஸ்லிம்கள் அங்கு பலியிட்டு பிரார்த்தனை செய்யக் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ஆம்! இங்கு இணைவைப்பு இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறுகிறது.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று இஸ்லாமிய சமுதாயத்தின் பெரும்பகுதியினர் ‘தக்லீத்’ (கண்மூடிப்பின்பற்றல்) மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கொண்டு குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வருகிறார்கள்.


هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
அவன்தான் எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2)

உண்மையில் குர்ஆன் எழுதப்படிக்க தெரியாத அறியாமையிலும் வழிகேட்டிலும் மூழ்கி கிடந்த மக்களுக்காகத் தான் இறங்கியது.  இந்த  வசனப்படி  95% சஹாபாக்கள்  குர்ஆனை   நபி(ஸல் அவர்களின் விளக்கத்தின் துணையோடு  தெளிவாகப் புரிந்து  கொண்டார்கள். ஆனால் அதே சமயத்தில்  நாங்கள் தான் கற்றவர்கள், அரபி  இலக்கண  இலக்கிய  விற்பன்னர்கள் என்று  மார்தட்டிய  “தாருன் நத்வா” (அறிஞர்கள் சபை)  தலை சிறந்த அறிஞர்கள் என்று மக்களால் போற்றப்பட்டவர்களை வடிகட்டிய ஜாஹில்கள் என்றும், ஜாஹில்கள் என்று தூற்றப்பட்டவர்களை தலை சிறந்த அறிஞர்கள் என்றும் உலகம் சொல்லும் ஒரு மாபெரும் புரட்சியை இஸ்லாம் நிகழ்த்தி காட்டியது. உண்மையில் இது மாபெரும் அதிசயம்தான்.

ஆம்! நாங்கள் தான் கற்றவர்கள் அரபி இலக்கண இலக்கியம் அறிந்தவர்கள் என்று அகந்தையுடன் மார் தட்டியவர்கள் அன்று குர்ஆனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதே வேளையில் அரபி இலக்கணம் இலக்கியம் அறியாத பாமர மக்களாகிய அன்றைய அரபிகள் பயபக்தியுடையவர்களாகவும் (புலன்களுக்கு எட்டாத) மறைவானவற்றை  நம்பியவர்களாகவும் தொழுகையை அதனதன்  நேரத்தில்  தவறாமல் நிறை வேற்றக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். உண்மையில் குர்ஆனை ஓதி விளங்க முற்பட்டால் நிச்சயமாக குர்ஆனை சரியாக விளங்கிக் கொள்ள முடியும். இது அல்லாஹ் கொடுக்கும் உத்திரவாதமாகும்.


ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ
து (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.(2:2)

الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُون
(பயபக்தியுடைய) அவர்கள் (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைபிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவு செய்வார்கள்.(2:3)

والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ
(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; ன்னும் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.(2:4)

أُوْلَـئِكَ عَلَى هُدًى مِّن رَّبِّهِمْ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். வசனம் (2:5)

குர்ஆனிலும், ஹதீஸிலும் பாடுபடும் முயற்சியும் அதற்கு மேல் அரபி இலக்கண இலக்கிய ஞானம் இருந்தால் அதை நாம் வரவேற்கிறோம். அதனை நாம் மறுக்கவில்லை. இன்னும் பாடுபடுபவர்களில் சிலருக்கு ஞானத்தை அல்லாஹ் அதிகமாகவும் கொடுத்துவிடலாம். இது அல்லாஹ் அவருக்குக் கொடுத்த சிறப்பு ஆகும்.

يُؤتِي الْحِكْمَةَ مَن يَشَاء وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيراً وَمَا يَذَّكَّرُ إِلاَّ أُوْلُواْ الأَلْبَابِ
தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு)ஞானம் எவருக்கு கொடுக்கப்படுகின்றதோ,  அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக  நிச்சயமாக  ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைத் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (2:269)

இந்த வசனப்படி இந்த சிறப்பைப் பெற்றவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டு அந்த ஞானத்தைக்கொண்டு மற்ற மக்களுக்கும் குர்ஆன், ஹதீஸை விளங்கவைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டுமே அல்லாது சமுதாயத்தை இரு பிரிவினர்களாக்கி நாங்கள்தான் மார்க்கத்தை போதிக்கும் உரிமை பெற்றவர்கள் நாங்கள் சொல்வதை  கண்ணை மூடிக்கொண்டு  ஆதாரங்களை கேட்காமல்  ஏற்று  நடக்க  வேண்டும் என்று சமுதாயத்தில் ஒருபோதும் முனையக்கூடாது. இதனால்தான்”தக்லீத்”எனும் கண்மூடிப்பின்பற்றலும் மதப்பிரிவுகளும் சமுதாயப் பிளவுகளும் வீழ்ச்சிகளும் ஏற்படுகின்றன.

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)

இந்த வசனத்தில் இப்போது நாம் எங்களுக்கு குர்ஆன் தெரியாது ஹதீஸ் தெரியாது அவற்றை அறிந்து கொள்ள அரபியும் தெரியாது அதற்கு நேரமும் இல்லை. அந்த நாதாக்கள் எல்லாம் தங்கள் வாழ்நாள் முழுவதும் மார்க்கத்திற்காக அர்பணித்தவர்கள். பகல் இரவென்று பாராது பாடுபட்டவர்கள். குர்ஆனையும் ஹதீஸையும் கரைத்துக் குடித்தவர்கள், அரபி இலக்கண இலக்கியங்களில் தேர்ந்தவர்கள், பதினாறு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். குர்ஆனைப் பற்றியும், ஹதீஸைப் பற்றியும் அவர்களுக்கு தெரியாததையா நாங்கள் தெரிந்து கொள்ளப் போகிறோம். ஆகவே அவர்களை எங்கள் பாதுகாவலர்களாக்கி அவ்ர்களை எங்கள் இமாமாக ஆக்கி அவர்க்ளைப் பின்பற்றுகிறோம் என்று நாம் சொல்கிறோமே இதைத்தான் மிக வண்மையாக அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.

நபி(ஸல்) அவர்களை பின்பற்றுகிறோம் என்றால் நாமாக பின்பற்றவில்லை. அல்லாஹ் தன் திருமறையில் அவர்களை பின்பற்றியே ஆக வேண்டுமென்று பல வசனங்களில் கட்டளையிட்டதை வைத்தே பின்பற்றுகிறோம். வேறு யாரையும் பின்பற்ற அல்லாஹ் உத்தரவிடவில்லை. அதனால் நபி (ஸல்) அவர்களைத்தவிர வேறு யாரையும் அது ஒருவராக இருந்தாலும், பலராக இருந்தாலும், நல்லவர்களாக இருந்தாலும் நாம் அவர்களை பாதுகாவலர்களாக்கி பின்பற்றவே கூடாது. அப்படி இருந்தும் நம்மில் வெகு சிலரே இந்த உண்மையைக் உணரக் கூடியவர்களாக இருக்கின்றனர்.

الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُوْلَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُوْلَئِكَ هُمْ أُوْلُوا الْأَلْبَاب
அவர்கள் சொல்லை – நல்லுபதேசத்தைச் செவியேற்று அதிலே அழகானதைப் பின்பற்றுகிறார்கள்.அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவது இத்தகையவர்களைத் தாம்; இவர்கள் தாம் நல்லறிவுடையோர்.(39:18)

விளங்கிச் செயல்படுவது கண்மூடிப்பின்பற்றல் அல்ல
பிக்ஹூ நூல்களை தந்த இமாம்கள், ஹதீஸ் நூல்களை தந்த இமாம்கள் அதற்கு பின்னால் வந்த பலநூறு இமாம்கள் ஏன்? சாதாரண நபர் முதல் யார் சொல்லி இருந்தாலும், அல்லது எழுதி வைத்திருந்தாலும் அவை குர்ஆன், ஹதீஸ்படி  இருக்கிறதா? என்று  பார்த்து விளங்கி ஏற்று  நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். அதே போல் யாருடைய சொல்லாக இருந்தாலும் அது குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக இருந்தால் அதை புறக்கணித்தலே குர்ஆன், ஹதீஸ் வழி நடப்பதாக இருக்கும்.

اتَّخَذُواْ أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِّن دُونِ اللّهِ وَالْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَمَا أُمِرُواْ إِلاَّ لِيَعْبُدُواْ إِلَـهًا وَاحِدًا لاَّ إِلَـهَ إِلاَّ هُوَ سُبْحَانَهُ عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.(9:31)

என்ற திரு வசனம் இறங்கியபோது கிறிஸ்த்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தில் இணைந்த ‘அதீ இப்னு ஹாதம்’ (ரலி) என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்க வில்லையே! (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகிறானே) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களூம் கருதினீர்கள் அல்லவா? அதுதான் அவர்களை கடவுள்களாக கருதியதற்கு நிகரானது என்று விளக்கம் தந்தார்கள். (ஆதாரம்: அஹ்மத், திர்மிதீ)

இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித்தனமாக பின்பற்ற எவருக்கும் மார்க்கத்தில் அனுமதியில்லை. மார்க்க அறிஞர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அதற்குறிய ஆதாரங்கள் அறிய முயற்சிக்காமல் கண்மூடித்தனமாக பின்பற்றுவது மிகப்பெரும் குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்குகின்றது.

அல்லாஹ் நம்  அனைவருக்கும்  இருளிலிருந்து  வெளிச்சத்திற்கு  வந்து  அவனது  நேர்வழியில்  நடக்க அருள் புரிவானாக! ஆமீன்!

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

அல்லாஹ்வும் அவனது தூதரும் போதுமே!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

(நபியே!) நீர் கூறும்! நீங்கள் அல்லஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். அல்குர்ஆன் 3:31

(நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால்அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான். அல்குர்ஆன் 48:16

அல்லாஹ்வுக்கும் (அவனது)  தூதருக்கும் வழிபடுங்கள்,  அன்றியும் நீங்கள் செய்பவற்றை  யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே. அல்குர்ஆன் 58:13, 3:33

நீங்கள் இறை நம்பிக்கையுடையோர் (மூஃமீன்)களாயின் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படியுங்கள். அல்குர்ஆன் 8:1

(மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.
அல்குர்ஆன் 24:56

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52

எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான பாக்கியத்தை வெற்றிகொண்டு விட்டார். அல்குர்ஆன் 33:71

நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அவன் உங்களது நற்செயல்களில் எதனையும்  உங்களுக்கு குறை வைக்கமாட்டான். அல்குர்ஆன் 49;14

இறைனம்பிக்கைக் கொண்டோர்(மூஃமீன்)களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; மேலும் அவனது தூதருக்கும் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்.  உங்களிடையே ஏதாவது ஒரு விஷயத்தில் பினக்கு ஏற்பட்டு விட்டால், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வையும், றுதி நாளையும் நம்புபவர்களாக ருப்பின் அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். துதான் உங்களுக்குமிகவும் சிறப்பான அழகான முடிவாகும். அல்குர்ஆன் 4:59

எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து  நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிளில்  பிரவேசிக்கச் செய்வான்; அங்கு கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் து மகத்தான பாக்கியமாகும். அல்குர்ஆன் 4:13

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

ஹஜ்ஜின் வரலாறு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஹஜ்ஜின் வரலாறு@font-face { font-family: TheneeUniTx; src:url(http://readislam.net/THENEE.eot); }

எப்படி எந்த நோக்கத்திற்காக ஹஜ் துவங்கிற்று என்பதை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலச்சூழ்நிலைகள் அறிவது அவசியம் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்

இப்ராஹீம்(அலை) அவர்களின் மகனார் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப்பிறகு அவர்களின் வழித்தோன்றல்கள் மார்க்கத்தில் எவ்வளவு காலம் நிலைத்து நின்றார்கள் என இறைவன்தான் அறிவான்! எப்படியோ சில நூற்றாண்டுகளில் இந்த மக்கள் வழிகேட்டில் புகுந்துவிட்டனர். ஒரே இறவனை வணங்குவதற்கும் அழைப்பதற்கும் அமைக்கப்பட்ட இறை ஆலயத்தில் நூற்றுக்கணக்கில் சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன.

இதில் விசித்திரம் என்னெவென்றால் சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்நாளெல்லாம் உழைத்த இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபி ஆகியோருக்கும் சிலைகள் தயாரிக்கப்பட்டு விட்டன. நேர்வழியில் நின்ற இப்ராஹீம் நபியின் சந்ததியினர் ‘லாத்’ ‘மனாத்’ ‘ஹூபல்’ ‘நஸ்ர்’ ‘யாகூது’ ‘உஸ்ஸா’ ‘அஸாப்’ ‘நாயிலா’ இப்படி பல பெயர்களில் சிலைகளை வடித்து வணங்கினார்கள். செவ்வாய், புதன், வெள்ளி, சனி இப்படி இன்னும் எந்த எந்தத் கோளங்களை அவர்கள் வணங்கினார்கள் என்றும் தெரியவில்லை. பேய், பிசாசு, வானவர்கள் இறந்து போன தங்களுடைய பெரியார்கள் ஆகியோரையும் அவர்கள் வணங்கினார்கள். அறியாமை இந்த அளவுக்கு முற்றிப் போயிருந்தது.

அவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டால் பயணத்தில் வணங்குவதற்கு தெய்வச் சிலை இல்லாவிட்டால் கல் ஒன்று கிடைத்தாலும் வணங்க ஆரம்பித்து விடுவார்கள். கல்லும் கிடைக்கவில்லை என்றால் மண்ணைத் தண்ணீரில் குழைத்து உருவம் அமைத்து ஆட்டு பாலைத் தெளித்து வணங்குவார்கள்.

ஹஜ்ஜின் தவறான வடிவங்கள்:

அந்த அஞ்சான காலத்தில் ஹஜ்ஜின் கதி எப்படி இருந்தது என்பத எண்ணிப்பாருங்கள்; ஒவ்வொரு ஆண்டும் அங்கே ஒரு திருவிழா நடைபெற்றது. பல குலத்தவர்கள் தம் இனத்தாரோடு இங்கே வந்து தனித்தனியே முகாம் போடுவார்கள். அவரவர்கள் தங்களைச் சேர்ந்த கவிஞர்கள் அல்லது துதி பாடர்கள் தம்மிடமும் தம் குலத்தாரிடம் உள்ள பெருமைகளை பாடி பெருமையடித்துக் கொள்வதில் மற்றவர்களை முந்துவார்கள். இறுதியில் அவர்கள் ஒருவரையொருவர் இழித்துரைக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவிடும்.

அப்புறம் எவர் தர்மப்பிரபு எவர் கொடைவள்ளல் என்கிற போட்டி நடக்கும்! குலத்தலைவரும் தமது பெருமையை பறைசாற்ற சமையலில் பெரிய பெரிய அண்டாக்களையும் குண்டாக்களையும் வரிசை வரிசையாக அடுப்புகளில் ஏற்றுவார்கள். ஒருவரையொருவர் மிகைப்பதற்காக ஒட்டகத்திற்கு மேல் ஒட்டகத்தை அறுத்துக்கொண்டே போவார்கள். இந்த வீண் செலவுக்காண நோக்கம் இதுதான். இந்தத் தடவை நடந்த திரு விழாவில் இத்தனை பேருக்கு உணவளித்தார் என்று பிரசாரம் ஆகவேண்டும். இந்தக் கூட்டத்தில் மதுபானம், விபச்சாரம், இசை படுமோசமான செயல்கள் அனைத்தும் தாராளமாக நடந்து கொண்டிருந்தன.

நிர்வாணமாக வலம் வருதல்

காபாவை சுற்றி வலம் வருதலும் நடந்துகொண்டுதான் இிருந்தது. ஆனால் எப்படி நிர்வாணமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள்? எங்கள் அன்னையர் எங்களை எந்த நிலையில் பெற்றெடுத்தார்களோ அந்த நிலையில்தான் நாங்கள் இறைவன் முன் செல்வோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

இறைவன் பெயரால் பலியும் தியாகச் செயல்களும் கூடச் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் எப்படியென்றால் பலியிடப்பட்டவற்றின் இரத்ததை கஃபாவின் சுவர்களிலெல்லாம் தடவுவார்கள். மாமிசத்தை வாசலில் பரப்புவார்கள்; இந்த இரத்தமும் மாமிசமும் இறைவனுக்கு தேவை என்ற எண்ணத்தில்!

இப்ராஹீம்  நபியவர்கள்  ஹஜ்ஜின்  நான்கு மாதங்களை  தடுக்கப்பட்டவை  என்றும்,  இந்த மாதங்களில் எந்த விதமான  சண்டையும் வம்பும் நடத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருந்தார்கள். இந்த  மக்கள் ஏதோ அந்த மாதங்களின் கண்ணியத்தை சிறிதளவு மனத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் மனம் சண்டையிட விரும்பினால் துணிச்சலான சந்தர்ப்பவாதத்தை வைத்துக்கொண்டு ஓர் ஆண்டில் தடை செய்யப்பட்ட மாதத்தை அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொண்டு அடுத்த ஆண்டில் அதற்கு ஈடு செய்து கொள்வார்கள். அத்துடன் தமது மார்க்கத்தில் நல்லெண்ணம் கொண்டிருந்த அவர்களில் ஒரு சிலரும் தமது அறியாமையின் காரணத்தினால் நூதனமான புதிய முறைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

நூதனமான தடைகள்:

சிலர் வழிச்செலவுக்கு எவ்வித ஏற்பாடும் இல்லாமல் ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு மற்றவர்களிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் ெ காண்டே போய்க்கொண்டிருந்தார்கள். இது புண்ணியமான செயல் என்றும் நினைத்தார்கள். தாங்கள் இறைவன்  வீட்டை  நோக்கிப் போய்க்  கொண்டிருக்கிறோம் எனவே  உலகப் பொருள்களை நாங்கள் ஏன் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஹஜ் பயணத்தில் வணிகம் செய்வதும் சம்பாதிப்பதற்காக  உழைப்பதும் தடுக்கப்பட்டவை என்று கருதிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலோர் உண்ணுவதையும், குடிப்பதையும் துறந்திருந்தார்கள். இதையும் இறை வழிபாடு என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

சிலர் ஹஜ்ஜுக்கு புறப்பட்டால் உரையாடலை நிறுத்திக் கொள்வார்கள். இதற்கு ‘ஹஜ்ஜெமுஸ்மித்’ மெளன ஹஜ் என்று பெயர். இப்படிப்பட்ட தவறான நடைமுறைகள் கணக்கின்றி இருந்தன.

இந்த நிலைமை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இருந்தன. பின்னர் இப்ராஹீம் நபியின் வழித்தோன்றலில் இருந்து முழுமையான மனிதர் ஒருவர் தோன்றினார். அவர்களின் திருப்பெயர் முஹம்மது பின் அப்துல்லாஹ்.  எவ்வாறு  இப்ராஹீம் நபி அவர்கள் பண்டிதர்களும் குருக்களும்  கொண்ட  குலத்தில் பிறந்தார்களோ அவ்வாறே முஹம்மத்(ஸல்) அவர்களும் பல நூற்றாண்டுகளாக கஃபாவுக்கு குருக்களாயிருக்கும் குடும்பத்தில் பிறந்தார்கள்.

இப்ராஹீம் நபியவர்கள் பொய்யான தவறான தெய்வ மூடக்கொள்கைகளை அழிக்க பெரும்பாடு பட்டதைப் போல் முஹம்மது(ஸல்) அவர்களும் தாங்கள் கொண்டு வந்த கலப்படமற்ற மார்க்கத்தை 21 ஆண்டு காலத்தில் இறைப்பணியை எல்லாம் செய்து முடித்தபோது அவர்கள் இறைக்கட்டளைப்படி முன்போலவே காபாவை முழு உலகத்துக்கும் இறைவனுக்கு வழிபட்டோருக்குரிய கேந்திரமாக எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஹஜ் செய்ய வாருங்கள் என முன்போலவே அறிவித்தார்கள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று வர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்கு ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான். (3:97)

சிலை வணக்கம் ஒழிந்தது:

கஃபாவிலுள்ள சிலைகள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டன. இறைவனைத் தவிர மற்றவருக்கு செய்த வழிபாடுகள்  அனைத்தும் நிறுத்தப்பட்டன. இணைவைக்கும் பழக்கங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. இறைவன் பெயரால் திருவிழாக்களும்,  வேடிக்கைகளும்  தடை செய்யப்பட்டன.

அவன் எவ்வாறு (தன்னை நினைவு கூறவேண்டுமென்று) உங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றானோ அவ்வாறு அவனை நினைவு கூறுங்கள்! இதற்கு முன்னரோ நீங்கள் வழி தவறியவர்களாய் இருந்தீர்கள். (2:198)

அபத்தமான செயல்:

ஹஜ்ஜின்போது இச்சைகளைத் தூண்டக்கூடிய சொல் செயல் மற்றும் தீவினை சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது! (2:197)

பின்னர் நீங்கள் உங்களுடைய ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றி விட்டீர்களானால், நீங்கள் (முன்னர்) உங்கள் மூதாதையரை நினைவு கூர்ந்தது போல- ஏன், அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூறுங்கள். (2:200)

விளம்பரத்திற்காக தடை:

பெயருக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யப்பட்டு வந்த ஆடம்பரமான தான தர்ம போட்டிகள் அனைத்திற்கும் முடிவு கட்டப்பட்டது. இந்த இடத்தில் இப்ராஹீன் நபியவர்கள் காலத்திலிருந்த அதே செயல்முறை மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டது. இறைவனின் திருப்பெயர் கொண்டு பிராணிகளை அறுங்கள், வசதியுள்ளவர்களின் தியாகத்தால் ஹஜ்ஜுக்கு வருகிற ஏழைகளுக்கும் உண்ணும் வாய்ப்பு கிடைக்கட்டும்.

உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால் விரயம் செய்யாதீர்கள்! திண்ணமாக அல்லாஹ் விரயம் செய்வோரை நேசிப்பதில்லை. (7:31)

குர்பானியின் இரத்தத்தை பூசத் தடை:

குர்பானியின் இரத்தத்தை கஃபாவின் சுவர்களில் தடவுவதும், இறைச்சியை கொண்டு வந்து  பரப்புவதும் நிறுத்தப்பட்டது.

அவற்றின் இறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில்லை. ஆயினும், உங்களின் இறையச்சமே அவனிடம் போய்ச் சேருகின்றது. (22:37)

நிர்வாணமாக வலம் வரத்தடை:

(நபியே! அவர்களிடம்) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள (ஆடை) அலங்காரத்தை தடை செய்தது யார்? (7:32)

நீர் கூறும்: அல்லாஹ் மானக்கேடானவற்றைச் செய்யும்படி எப்போதும் கட்டளை இடுவதில்லை. (7:28)

புனித மாதங்களை மாற்றத் தடை:

ஏதேனும் ஓர் ஆண்டில் (போர் தடுக்கப்பட்ட) ஒரு மாதத்தை (போருக்காக) அவர்கள் அனுமதிக்கப்பட்டதாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் மறு ஆண்டில் அதே மாதத்தில் போர் புரிவது கூடாது என்று தடுத்து விடுகிறார்கள். எனெனில் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்டுள்ள மாதங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தியாக்க வேண்டும் என்பதற்காக! (9:37)

வழிச்செலவுக்கு வசதியில்லாமல் ஹஜ்ஜுக்கு செல்வது தடுக்கப்பட்டது:

மேலும் நீங்க (ஹஜ்ஜுக்காக) வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள்! உண்மை யாதெனில், வழித்துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்தான். (2:197)

ஹஜ் காலத்தில் வியாபார அனுமதி:

ஹஜ் பயணத்தில் சம்பாதிக்காமலிருப்பது நற்செயல் என்றும், வருமானம் தேடுவது ஆகாத செயல் என்றும் கருதப்பட்டு வந்தது.

(ஹஜ் பயணத்தில்) உங்கள் இறைவனின் அருளை தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. (2:198)

மெளன ஹஜ்ஜும். உண்ணாமலும், பருகாமலும் இதர அறியாமைச் சடங்குகள் அனைத்தும் அழித்து விட்டு இறையச்சம், ஒழுக்கம், தூய்மை எளிமை ஆகியவற்றின் முழு வடிவமாக ஹஜ் ஆக்கப்பட்டது.

கஃாபாவிற்கு வருகிற பாதைகள் அனைத்திலும் கஃபாவிலிருந்து இருபது மைலுக்கு அப்பால் ஒவ்வோர் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய இல்லத்தில் எளியவராகவும், தாழ்மையுடையவராகவும் வருகை புரியவேண்டும். பணக்காரர்கள், ஏழைகள் எவராயினும் அந்த எல்லையை அடைந்ததும் ‘இஹ்ராம்’ எனும் எளிய உடைகளை அணியவேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

அமைதியான சூழ்நிலை ஏற்படுதல்:

சாந்தி சமாதானத்தை நேசிக்கும் மனப்பாங்கு ஏற்படவும் இறை ஆலயத்திற்கு வருவோர்க்கு எவராலும் எந்தத் தீங்கும் நிகழக்கூடாது என்பதற்காகவே ஹஜ்ஜுக்குறிய நான்கு மாதங்களை கண்ணியப்படுத்தி அம்மாதங்களில் போரிடுவது தடுக்கப்பட்டது. ஹாஜிகள் கஃபாவுக்கு வரும்போது அவர்களுக்கு அங்கே திருவிழாக்களோ, ஆடலோ பாடலோ இராது. மாறாக ஒவ்வோர் அடியிலும் இறைவனின் தியானம் இருக்கும்; தொழுகைகள் இருக்கும், வழிபாடுகள் இருக்கும்; தியாகங்கள் இருக்கும்; கஃபாவைச் சுற்றி வலம் வருதல் இருக்கும்; அங்கு உச்சரிக்கப்படும் வாக்கியங்கள் இவையே!

لًبّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ ، لَبَّيْكَ لا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ  وَالْمُلْكَ  لاشَرِيْكَ  لَك
“நான் வந்திருக்கிறேன். எனது இறைவனே! வந்திருக்கிறேன். உனக்கு இணை துணை கிடையாது. நான் வந்திருக்கிறேன். நிச்சயமாக புகழ் அனைத்தும் உனக்கே உரித்தானவை. அருட்கொடைகள் அனைத்தும் உன்னுடையவை. எல்லாவிதமான ஆட்சிகளும் உனக்கே உரித்தானவை. உனக்கு இணை எவரும் கிடையாது.”

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

நபி(ஸல்) கவி பாடினார்களா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி(ஸல்) அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாக வைத்து நபி(ஸல்) அவர்களுக்கு கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக்கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

‘புர்தா’ போன்ற அரபிக் கவிதையையும் ‘சீறா’ போன்ற தமிழ்க் கவிதைகளையும் அந்தக் கவிஞர்கள் பாடியபோது நபி(ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அதை அங்கீகரித்ததாகவும், அந்த கவிஞர்கள் கவிதை இயற்றும் வேளையில் அடுத்து எப்படி பாடுவது என்று தடுமாறியபோது நபி(ஸல்) அவர்கள் அடுத்த அடியை எடுத்து கொடுத்ததாகவும் கதைகள் பல உண்டு. அந்த கவிதைகளில் எவரும் குறைக் கண்டுவிடக்கூடாது என்று திட்டமிட்டு இப்படி பொய்யைச் சொல்லி அதற்கு மிகப்பெறும் மதிப்பை ஏற்படுத்தி விட்டனர்.

காசிம் புலவர் ‘திருப்புகழ்’ பாடும்போது, ஓரிடத்தில் தடுமாறும்போது நபி(ஸல்) அவர்கள் நேரடியாகவே தோன்றி அடுத்த அடியை எடுத்துக்கொடுத்தனர்.என்றுகூட எழுதி வைத்துள்ளனர். அல்லாஹ் தன் திருமறையில்

(நம்முடைய தூதராகிய)அவருக்கு கவிதையை கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்கு தகுமானதுமல்ல. (அல்குர்ஆன் 36:69)

திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே நபி (ஸல்) அவர்களுக்கு கவிதை தெரியாது என்றும், அவர்களுக்கு அது தகுதியானதுமல்ல என்றும் சொல்கிறது. நபி (ஸல்) அவர்களுக்கு சொந்தமாக கவிதை இயற்றத் தெரியாது என்பது மட்டுமின்றி பிறர் கவிதைகளை உதாரணத்துக்குக் கூறும் நேரங்களில் கூட முறையாகக் கூறமாட்டார்கள்.

“பிறர் கவிதைகளில் எதையாவ்து நபி(ஸல்) அவர்கள் உவமையாக குறிப்பிடுவதுண்டா?” என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. கவிதை அவர்களுக்கு மிகவும் பிடிக்காததாகும். சில சமயங்களில் ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துச் சொல்லும்போது அதன் ஆரம்பத்தை கடைசியிலும், கடைசியை ஆரம்பத்திலும் ஆக்கிவிடுவார்கள். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அந்தக்கவிதை அவ்வாறு இல்லை” என்று சுட்டிக் காட்டினார்கள்.  அதற்கு நபி(ஸல்)  அவர்கள் நான் கவிஞனல்ல. அது எனக்கு  தகுதியானதுமல்ல என்று  குறிப்பிட்டார்கள்  என அன்னை  ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) நூல்கள்: இப்னு ஜரீர், இப்னு அபீஹாதம்

அப்பாஸ் என்ற கவிஞரின் கவிதை ஒன்றை முன் பின்னாக மாற்றிச் சொல்லி “நீர் தான் இந்தக் கவிதையை இயற்றியவரோ?” என்று அந்தக் கவிஞரிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் அப்படி இயற்றவில்லை” என்று கூறி கவிதையை முறையாகச் சொல்லிக் காட்டினார். அபோது நபி(ஸல்) அவர்கள் எல்லாம் ஒன்றுதான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்பாஸ்(ரலி) நூல் பைஹகீ

பிறர் கவிதையை எடுத்துச் சொல்லும்போது கூட யாப்பிலக்கண அடிப்படையில் நபி(ஸல்)அவர்கள் கூறமாட்டார்கள் என்பதை மேற்கூறிய ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் யாப்பிலக்கணப்படி அந்தக் கவிஞர் கூறியதே முறையானது. இவைகளெல்லாம் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கவிதை இயற்றும் தன்மையை அறிவித்துக் கொடுக்கவில்லை என்ற குர்ஆன் வசனமே எடுத்துக்காட்டாகும்.

ஒரு சில சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் ஓரிருவரிகள் பாடியதாக வந்துள்ளவை தற்செயலாக கவிதை அமைப்பில் அமைந்தது என்றே முடிவு செய்யவேண்டும்.

நான் என்புறத்திலிருந்து கவிதயைச் சொன்னால், அது நான் திட்டமிட்டுச் சொன்னதல்ல என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) நூல்: அபூதாவூத்

இந்த தெளிவான ஆதாரங்களில் அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில கவிஞர்களுக்கு கவிதயை சொல்லிக் கொடுத்தார்கள் என்பது பச்சைப்பொய் என்று அறியலாம். இது கனவில் தானே நடந்ததது கனவில் எதுவும் நடக்கலாமே! என்ற ஜயம் சிலருக்கு தோன்றலாம்.

யார் கனவில் என்னைக் கண்டானோ அவன் என்னையே கண்டான். என் வடிவத்தில் ஷைத்தான் தோன்றமாட்டான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

மற்றவர்கள் தோற்றத்தில் கனவில் ஷைத்தான் விளையாடுவது போல நபி(ஸல்) அவர்களுடைய   தோற்றத்தில் விளையாட முடியாது. நபி(ஸல்) அவர்கள் வாழும்போது எந்த போதனையை சொன்னார்களோ அதற்கு மாற்றமாக கனவில் சொல்ல மாட்டார்கள் என்று இந்த ஹதீஸிலிருந்து விளங்கமுடியும்.

அந்த அப்பா பாடலில் அடியெடுத்து கொடுத்தார்கள் என்பதும், இந்த இமாமுடைய கவிதையில் பிழைதிருத்தம் செய்தார்கள் என்பதும் கொஞ்சமும் உண்மையல்ல.  கவிதைகள் பொதுவாக இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்பதையும், இஸ்லாத்தின் எந்த போதனைக்கும் முரண்படாத கவிதைகளுக்கு அங்கீகாரம் உண்டு.

கவிதைகளில்  நல்லதும் உண்டு,  கெட்டதும் உண்டு.  நல்லதை  எடுத்துக்கொள்  கெட்டதை  விட்டுவிடு. அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி)நூல்: புகாரி இமாமிம் அதபுல் முஃபரத்

மேலும் எந்தக் கவிஞர்களின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி அடி எடுத்துக்கொடுத்தார்கள் என்று கூறப்படுகின்றதோ அந்தக் கவிஞர்களின் கவிதைகளில் இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணானவை காணப்படுகின்றன. இத்தகைய கவிதைகளை நிச்சயம் நபி(ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கவே மாட்டார்கள் என்று நாம் உணரலாம்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த