இஸ்லாம்தளம்

மார்ச்7, 2009

முனாFபிக்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களே முனாபிக்குகள். தன்னைப் போன்று பரிசுத்தமானவர் என்று நம்பக் கூடிய வகையில் நடப்பவர்கள் வேஷம் போட்டு மோசம்  செய்பவர்கள். சமுதாய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்லவர்கள் சுருக்கமாகச் சொன்னால் சைத்தானின் எடுபிடிகளே நயவஞ்சகர்கள். þந்நயவஞ்சகர்களின் அடாவடித்தனத்தை முனாFபிக்கூன் என்ற அத்தியாத்தில் அல்லாஹ் படம் பிடித்து காட்டுகிறான்.

þவர்களின் அடையாளங்கள் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும்போது யாரிடம் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் முழு நயவஞ்சகன். அவைகளாவன 1. கொடுத்தால் வாக்குறுதியை மீறுவான் 2. அமானிதத்தை மோசடி செய்வான் 3. பேசினால் பொய்யே பேசுவான். 4. சண்டையிடும் போது þழி மொழியில் வசைமாறி பொழிவான். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்:முஸ்லிம், புகாரி

மேலும் þந்நயவஞ்சகத் தன்மை படைத்தவர்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் மனிதர்களின் மிகக் கெட்டவர்கள் þரு முகங்களையுடைவனாவான். þங்கொரு முகத்தைக் கொண்டு வருவான். அங்கொரு முகத்தைக் கொண்டு வருவான். என்று கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

முனாFபிக்கை முனாFபிக் என்று கூறலாமா? வெறுக்கலாமா?

பனூஹாஸிம்  என்ற  தன்னுடைய சமூகத்திற்கு  தனது வீட்டில் தொழுகை நடத்த ஒரு þடத்தை தேர்ந்து எடுக்க நபி(ஸல்) அவர்களை þத்பான்பின் மாலிக்(ரலி) அவர்கள் விருந்து சமைத்து அழைத்தார்கள்.  நபி (ஸல்)  அவர்கள்  வந்ததைக்  கேள்விப்பட்ட அங்குள்ள  மக்கள் þத்பான்(ரலி) வீட்டில் கூடினார்கள். மாலிக்பின் துவைஸின் மட்டும் வரவில்லை. அங்கு கூடியிருந்த மனிதர்களில் ஒருவர் மாலிக் ஏன் வரவில்லை என்று கேட்டார். மற்றொரு மனிதர் அவர் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்காத ஒரு முனாFபிக் என்று கூறினார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு கூறாதே! அவர் அல்லாஹ்வின் திருப்தியை நாடி லாயிலாஹ þல்லல்லாஹ் என்று கூறியதை நீர் அறிய மாட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் அல்லாஹ்வும்  அவனது   தூதருமே  நன்கறிந்தவர்கள். அல்லாஹ்வின்  மீது  ஆணையாக  அவரது  நேசமும், அவரது உரையாடலும் முனாFபிக்குகளிடமே þருப்பதை நாங்கள் பார்க்கிறோம் என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி யார் லாயிலாஹ þல்லல்லாஹூ சொல்கிறாரோ அவருக்கு நரகை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான் என்று குறிப்பிட்டார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மக்கள் கூறும் வரை அவர்களோடு போராட வேண்டும் என்று நான் ஏவ்ப்பட்டுள்ளேன்.

அந்த கலிமாவை கூறி, நமது தொழுகையைத் தொழுது, நமது கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொருத்ததாகும். அனஸ்(ரலி) அறிவிக்கும் þந்த ஹதீஸ் புகாரியில் þடம்பெற்றுள்ளது.

எனவே  அல்லாஹ்வின்  நல்லடியார்களே!  வெளிப்படையாக  ஒரு முஸ்லிமின் நயவஞ்சகச் செயல்களை அறிந்து விடினும் அம்முஸ்லிமை முனாFபிக் என்று சொல்ல வேண்டாம். ஏனெனில் அல்லாஹ்வின் திருப்தியை நாடி கலிமா சொன்னாரா þல்லையா என்பதை நாம் அறிய முடியாது. þது மறைவான அல்லாஹ் மட்டுமே அறியும் விஷயம். எனவே அந்த வல்ல அல்லாஹ்விடம் பொறுப்பைக் விட்டு விட்டு அச்சகோதரர்களை வெறுக்காமல் அன்போடு பழகி, பண்போடு பேசி ஒற்றுமையுடன் வாழ்வோமாக.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

நல்லடியார்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வின் நல்லடியார்கள் வெளி உலகுக்குத்தான் இறந்தவர்கள், உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பலரின் கற்பனையாக இருக்கிறது. நபிமார்களோ, அல்லது அவ்லியாக்களோ மரணித்துவிட்டார்கள் என்று கூறப்பட்டால்,  அவர்கள்  மரணித்து விட்டார்கள் என்பதுதான் பொருள். அவர்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களை அடக்கம் செய்த அனைவரும் உயிருடன் ஒருவரை கொலை செய்த குற்றத்தைத்தான் ஏற்கவேண்டிய நிலை ஏற்படும்.

ஆகவே நபிமார்கள், ஷஹீத்மார்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்து விட்டால், அவர்களின் உடல்களை கழுவிக் குளிப்பாட்டி கபனிட்டு ஜனாஸா தொழவைத்து அடக்கம் செய்தாக வேண்டும் என்று முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது.

وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُون   َ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள். (2:154) எனினும் நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள் என்பதிலிருந்து அதனைப்பற்றிய அறிவை நமக்கு கொடுக்கப் படவில்லை என்பதை இதன் மூலம் விளங்கலாம்.

நிச்சயமாக ஷுஹதாக்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு சுவர்க்கத்தில் தனது விருப்பத்திற்கேற்ப உலாவிக் கொண்டிருக்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) நூல்:முஸ்லிம்)

உங்கள் சகோதரர்கள் உஹது போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ்(ரலி) நூல்:அஹ்மத்

உயிர் தியாகம்(ஷஹீத்துகள்) செய்தவர்களைப் பற்றி அல்குர்ஆனில் “அவர்களை மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள்” என்று கூறி விட்டு “எனினும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் ஆனால் (இதனை) நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள் என்றும் கூறுகிற்து. ஆகவே நாம் கற்பனை செய்வதுபோல் அவர்கள் தமது கப்ருகளில் உயிராக இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தவறாகும். ஏனெனில் அவர்களின் நிலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அறிவிப்பின் படி சுவர்க்கத்தின் பறவை அமைப்பில் அவர்கள் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது தெளிவாகிறது.

மூமின்களின் உயிர் சுவர்க்கத்தின் மரத்தில் (உள்ளவற்றை) சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பறவையின் அமைப்பில் இருந்து கொண்டிருக்கும். பின்னர் அல்லாஹ் அவரை எழுப்பும்போது அவருடைய உடலில் அதை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (கஃபுபின் மாலிக்(ரலி) நூல்:அஹ்மத்)

ஏனைய மூமின்களாகிய நல்லடியார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.

கப்ரில் மனிதன் வைக்கப்பட்டு விசாரணைகள் முடிந்த உடன் “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று எனக்குக் கிடைத்த மகத்தான வாழ்வை பற்றி கூறிவிட்டு வருகிறேன்” என்று கேட்பார். (அதற்கு) புது மணமகனை போல் அயர்ந்து உறங்குவீராக! என்று அவருக்குக் கூறப்படும். ஆதாரம்: திர்மிதி அறி:அபூஹுரைரா(ரழி)

மேற்கூறிய நபிமொழிகளிலிருந்து இறந்துவிட்ட ஏனைய நல்லடியார்கள்  ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர் என்றே அறிய முடிகிறது.
மேலும் அறிய

றைவனுக்குமா இடைத்தரகர்

கப்ரில் நபி(ஸல்) அவர்களின் நிலை

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

கப்ரில் நபி(ஸல்)அவர்களின் நிலை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஜும்ஆவின் தினத்தில் என்மீது அதிகமாக ஸலவாத் ஓதுங்கள் அது எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கப்ரில் மடிந்தவர்களாயிருக்கும் போது எங்களின் ஸலவாத்தை உங்களுக்கு எவ்வாறு எடுத்துக் காட்டப்படும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி தின்பதை விட்டும் தடை செய்துள்ளான் என்றார்கள். (அறி: ஷத்தாத்பின் அவ்ஸ் (ரலி) நூல்: அபூதாவூத், இப்னு மாஜ்ஜா, நஸயீ, தாரமீ, அஹ்மத், இப்னுஹிப்பான்)

நிச்சயமாக பூமியில் உலா வந்து கொண்டிருக்கும் சில மலக்குகள் அல்லாஹ்வுக்கு உள்ளனர். அவர்கள் எனது உம்மத்துகளிடமிருந்து எனக்கு ஸலவாத்தைச் சேர்ப்பித்துக் கொண்டிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறி: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: நஸயீ, தாரமீ)

மேற்காணும் ஹதீஸின் மூலம் நபிமார்களின் உடலை மண் தின்பதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அறிகிறோம்.

இப்பாதுகாப்பு நபிமார்களின் உடலுக்கு உண்டு என்பதாகத்தான் ஹதீஸில் வந்துள்ளதே தவிர, சிலர் கூறுவது போல் குர்ஆன் மனனம் செய்த ஹாபிழ்கள் மற்றும் இறை நேசச் செல்வர்களுக்கும் உண்டு என்பதற்கான சரியான ஆதாரம் ஹதீஸ்களில் கிடையாது. அவ்வாறு உண்டு கூறப்படும் அனைத்து ஹதீஸ்களும் பலகீனமாகவும், இட்டுக்கட்டப்பட்டவையாகவும் உள்ளன.

அடுத்து நாம் நபி(ஸல்) அவர்களுக்குக் கூறும் ஸலாமும், அவர்கள் மீது ஓதும் ஸலவாத்தும் தமக்கு சேர்ப்பிக்கப்படுவதாக அவர்கள் கூறி இருப்பதை காணுகிறோம். அவர்களின் பால் சேர்ப்பிக்கப்படும் ஸலவாத்தையும், ஸலாமையும் எவ்வாறு அவர்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது என்பதப் பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது.

உங்களில் ஒருவர் எனக்கு ஸலாம் கூறினால், அல்லாஹ் எனது உயிரை என்னில் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கிறான். அதன் பயனாக அவருக்கு பதில் ஸலாம் அளிக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறி:அபூஹுரைரா(ரலி) நூல்; அபூதாவூத், பைஹகீ, அஹ்மத்)

இவ்வறிப்பின் மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறும்போதும், அவர்கள் மீது ஸலவாத்தோதும் போதும், அவற்றை அவர்களுக்கு சேர்ப்பிக்கக் கூடிய அந்த சந்தர்ப்பத்தில் மட்டும் அவர்களின் உயிரை அவர்களுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றது என்பதானது, அவர்கள் எப்போதும் கப்ரில் ஹயாத்தாக உயிரோடு இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

ஆகவே, நபி(ஸல்) அவர்களுக்கு கூறப்படும் ஸலவாத்தையும், அவர்கள் மீது  ஓதப்படும் ஸலவாத்தையும் மலக்குகளின் வாயிலாக சேர்ப்பிக்கப்படுகின்றது. அல்லது எடுத்துக் காட்டப்படுகின்றது என்ற  பொருளுள்ள வாசகமே இடம் பெற்றுள்ளது. மலக்குகளின் வாயிலாக தமக்கு சேர்ப்பிக்கப்படும் ஸலவாத், ஸலாம் முதலியவற்றைத்தவிர மற்றவர் பேசுவதையும் செவியுருகிறார்கள், கப்ரில்  உயிருடையவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கும் சரியான சான்று எதுவுமில்லை என்று ஹதீஸ்கலா வல்லுனர்கள்  குறிப்பிடுகின்றார்கள்.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

பெண்மணியே உன் வழி என்ன?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பெண்மணியே உன் வழி என்ன?@font-face { font-family: TheneeUniTx; src:url(http://readislam.net/THENEE.eot); }

இன்றைய இஸ்லாமிய சமுதாயத்தில் ஆண்கள் ஓரளவு விழிிப்புணர்வுடன் குர்ஆன், ஹதீது வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் சகோதரிகளே உங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோர் நிலையை சற்று சிந்தித்துப்பார். இஸ்லாம் இயம்பும் முறைப்படி உன் வாழ்க்கை அமைந்துள்ளதா? அன்னை பாத்திமா(ரலி) வாழ்ந்த வாழ்க்கை வாழ்கின்றாயா? நபி(ஸல்) அவர்களின் வழியை பின்பற்றுகின்றாயா? மறுமையை நினைத்து நரகத்தை நினைத்து வருந்தினாயா? ஏதோ! இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்ற இருமாப்பில் இன்பம் கண்டுக் கொண்டு இருக்கிறாய்.

உன் வாழ்க்கையை சற்றே குர்ஆன், ஹதீதுடன் ஒப்பிடு. மார்க்கத்தை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டு. மார்க்கக் கல்வி கற்றுக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது கடமை என்று அல்லாஹ்வும் ரசூலும்(ஸல்) கூறியுள்ளதைப் பார். குர்ஆன், ஹதீதை அறிந்துகொண்டால் அனாச்சாரங்களை அழிக்க நீயே முன்வருவாய்.

“(நபியே) அந்நாளில் பலூட்டிக் கொண்டிருந்த ஒவ்வொருத் தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பஸ்த்திரியின் கர்ப்பமும் சிதைந்து விடுவதை நீர் காண்பீர். மனிதர்களை சித்தமிழந்தவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (சித்தம் இழக்க காரணம்) போதையினால் அல்ல, அல்லாஹ்வுடைய வேதனையானது மிகவும் கடினமானது. (அதனைக் கண்டு திடுக்கிட்டு) அவர்கள் சித்தமிழந்து விடுவார்கள். (அல்குர்ஆன் 22:2) என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் சகோதரியே; சிந்தித்துப்பார்.

“நான் உங்களிடம் இரண்டை விட்டுச் செல்கிறேன். அந்த இரண்டையும் கடைபிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழி தவறவே மாட்டீர்கள் ஒன்று அல்குர்ஆன் இரண்டு என்னுடைய சுன்னத்தான வழிமுறை” (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்:முஅத்தா

என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்க நீ யாரைப் பின்பற்றுகிறாய்? யாருடைய பாதையை பின்பற்றி உன் வாழ்க்கைத் தேய்கிறது. பண்டிதர்கள், தலைவர்கள் என்று தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூறுவதையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்காமல் மார்க்கம் என்று எடுத்து நடக்கிறாய்.

இறைவன் கூறுவதைப்பார்,  ஈமன் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அனேகர் மக்களின் சொத்துக்களை தவறான முறையில் சாப்பிடுகின்றார்கள். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களை தடுக்கின்றார்கள். (அல்குர்ஆன் 9:34)

பெரியவர்கள் சொல்வதெல்லாம் சிந்தித்து விளங்காமல் மார்க்கம் என்று எண்ணினாயே? இறைமறை கூறுவதைப்பார். மேலும் (17:27, 24:51, 28:50, 20:124) ஆகிய வசனங்களையும் உற்றுநோக்கு. உன் நிலையையும் நீ எண்ணிப்பார்.

உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் அவ்லியாக்களின் கப்ரை நோக்கி ஓடுகின்றாய், யார் யாருக்கோ நேர்ச்சை செய்கின்றாய்,  முரீது கொடுக்கும் முல்லாக்களின் காலில் விழுந்து தன்மானம் இழந்து நிற்கின்றாய், மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு பாடுபட்டார்களோ அத்தனை மூட நம்பிக்கைகளையும் குத்தகை எடுத்துக்கொண்டு கும்மாளம் போடுகின்றாய். இதுதான் உன் இஸ்லாத்தின் பண்பா? இதுதான் நீ இஸ்லாத்தின் மீது வைத்துள்ள அன்பா?

அல்லாஹ்வையன்றி நீ அழைப்பவர்கள் அழிந்துவிடுபவர்கள் என்று நபி(ஸல்) அறிவுரை பகர்ந்தார்கள். ஆனால் நீ செய்வது என்ன? உன் தேவை நிறைவேற “யாமுஹய்யத்தீன்” என்று அழைக்கின்றாய். என்றோ மெளத்தாகி விட்டவர் உன் அழைப்பை கேட்கிறார் என்றால்  விந்தையாக உள்ளது. உனது கூற்று நியாயமானதா? குர்ஆனுடம் ஒப்பிடு.

நபியே! கப்ருகளில் உள்ளவர்களைச் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை. (35:22) உன் கூற்று சரியா? அல்லது குர்ஆனின் கூற்று சரியா? சிந்தித்துபார். இணைவைக்கும் காரியத்தில் நீ உன்னை ஈடுபடுத்திக்கொள்ளாதே. அல்லாஹ்வின் தகுதிகளை அவனது அடிமைகளுக்கு தந்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே.

எவர்கள் விசுவாசம் கொண்டு நற்கருமங்கள் செய்கின்றார்களோ அவர்கள் “பிர்தவ்ஸ்” என்னும் சுவர்க்கத்தில் உபசரிக்கப்படுவார்கள் அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (18:107,108)

நீ இறைவன்மீது வைத்த அன்பிற்காக இறைவன் உனக்கு சுவர்க்கத்தை நிரந்தரமாக தருவதாக வாக்களிக்கின்றான் இதைவிட மாபெரும் பாக்கியம்   உனக்கு என்னவேண்டும்.

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என்னுடைய அடியார்களை தம் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளலம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக அவர்களுக்கு நாம் நரகத்தையே தயார் செய்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 18:102)

அல்லாஹ்வையன்றி அவனது அடியாளர்களை அழைப்பதை குறித்து இறைவன் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கிறான் என்பதை ஆராய்ந்துபார்.

இவ்வுலக வாழ்க்கை உன்னை வீன் வழியில் அழைத்து சென்றுவிடாமல்  எச்சரிக்கையாக இரு. உனக்கு ஏதாவது ஒரு தீங்கு நேர்ந்தால் உடனே மண்ணறையை நோக்கி ஓடுகிறாய். உன் ஓட்டத்தின் முடிவு உன்னையே நரகிற்கு அனுப்பும்; அதற்கு முன் உஷாராகிவிடு உன் செயல்களை திருத்திக்கொள். கப்ரு மோகம் கொண்டு அலையும் உன் நிலையை உடன் மாற்றிக்கொள்.

கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சாபம் உனக்கு தேவையா? யோசித்து உன்செயலைத் திருத்திக்கொள். முரீது விற்பனை முல்லாக்கள் உன்னை முடக்க முற்படுவார்கள். முடங்கிவிடாமல் தவ்ஹீதின் பாதையில் முன்னேறிச் செல்.

அல்லாஹ்வின் குர்ஆனையும்,  நபி(ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளையும் கடைப்பிடித்துச் செல். அதுவே உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் சுந்தர வழியாகும்.

வஸ்ஸலாம்.

மேலும் விளக்கம் பெற நல்லடியார்கள்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

சஜ்தா ஓர் விளக்கம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! என்று சொன்ன போது இப்லீஸித் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவன் மறுத்து அகந்தை பேசினான். நிராகரிப்பவர்களில் ஒருவனாக அவன் ஆனான். (அல்குர்ஆன்2:34)

இந்த வசனத்தில் கூறப்படும் செய்தி எல்லா  முஸ்லிம்களுக்கும்  தெரிந்த ஒன்றே. மலக்குகள் எனும் வானவர்கள் முதல் மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்களுக்கும்  ஸஜ்தா செய்ததாக இந்த வசனம் கூறுகின்றது. இந்தக் கருத்து திருகுரானிலும் இன்னும் அனேக இடங்களில் கூறப்படுகின்றது.

15:30,37:73,7:11,17:61.18:50,20:11 ஆகிய வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வசனங்கள் பற்றி ஏகத்துவவாதிகளுக்கு இடையே ஒரு குழப்பம். இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் எனும் போது வானவர்களும் கூட இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய கடமைப்பட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் ஆதமுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்? அவ்வாறு செய்யுமாறு இறைவன் ஏன் கட்டளையிட வேண்டும்? இந்தக் கேள்விகளால் அவர்களுக்கிடையே குழப்பம்.

ஏகத்துவத்துக்கு எதிரானவர்களுக்கோ இந்த வசனம் ஒரு வரப்பிரசாதம். ஆதம் அவர்களுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததால் பெரியவர்களுக்கு மகான்களுக்கு சாதாரணமானவர்கள் ஸஜ்தா செய்யலாம் என வாதிடுவோருக்கு இந்த வசனமும் இந்தக் கருத்திலமைந்த  ஏனைய வசனங்களும் மிகப் பெரும் சான்றுகளாகத்  தெரிகின்றன.

இரண்டிலும் சேராதவர்களுக்கோ தடுமாற்றம்! எங்கே சாய்வது என்று தீர்மானிக்க முடியாதது அவர்களது நிலைமை. இஸ்லாத்திலேயே முரண்பாடுகள் உள்ளனவோ என்ற எண்ணத்தைக் கூட சிலர் இதனால் தங்கள் அடி மனதில் புதைத்து வைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இந்த வசனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகி விடுகின்றது.

ஆதம்(அலை) அவர்களுக்கு வானவர்கள் ஸஜ்தா செய்தனர்” என இங்கே கூறப்படுகின்றது. ‘ஸஜ்தா’ என்றதும் நெற்றியைத் தரையில் வைத்து பணிவது தான் நமது நினைவுக்கு வரும். ஸஜ்தா என்பதை இந்த ஒரு பொருளில் தான் நாம் பயன்படுத்தி வருகின்றோம் என்பது தான் இதற்குக் காரணம்.

‘ஸஜ்தா’ என்பதற்கு நாம் நினைக்கின்றது போல் நெற்றி தரையில் படுமாறு பணிதல், என்று அர்த்தம் ருப்பது போலவே அதற்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளன. இதற்கான சான்றுகளும் திருக்குர் ஆனிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. முதலில் ‘ஸஜ்தா’வுக்குரிய ஏனைய அர்த்தங்களை அறிந்துவிட்டு இந்த இடத்தில் எது பொருத்தமான பொருள் என்பதையும் தக்க சான்றுகளுடன் விளங்குவோம்.

மூசா(அலை)  அவர்களின்  சமுதாயத்தை  ஒரு  நகருக்குள்  பிரவேசிக்குமாறு  இறைவன்  கூறும் போது, “ஸஜ்தா செய்தவர்களாக இந்த வாசல் வழியாக நுழையுங்கள்” என்று இறைவன் கட்டளையிட்டான். இந்தக் கட்டளை 2:58,4:154,7:161 ஆகிய வசனங்களில் கூறப்படுகின்றது.

இந்த இடத்தில் பரவலாக நாம் விளங்கி வைத்திருக்கின்றவாறு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இந்தப் பொருளின்படி ஸஜ்தா செய்தால் உள்ளே செல்லுங்கள் என்றே இதற்கு பொருள் கொள்ள புடியும். மணிவுக்கும், அடக்கத்துக்கும் ‘ஸஜ்தா’ எனும் பதத்தை  இறைவன் இங்கே       பயன்படுத்தியிருக்கிறான். ” மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) ஸஜ்தா செய்கின்றன”. (அல்குர்ஆன் 55:6)

இந்த வசனத்தில் மரம் செடிகள் ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் கூறுகிறான். இந்த இடத்தில் முதலாவது அர்த்தமும் இரண்டாவது அர்த்தமும் கொள்ள முடியாது. ஏனெனில் மரம் செடிகளுக்கு நெற்றி கிடையாது அதை தரையில் வைப்பதென்பதும் கிடையாது.முதலாவது அர்த்தம் கொள்ள இந்த இடத்தில் வழியே இல்லை. இரண்டாம் அர்த்தம் செய்யவும் வழியில்லை. ஏனெனில் மரம் செடிகளிடம் பெருமையையும்,பணிவையும் கற்பனை செய்ய முடியாது,அவை எவ்வாறு இருக்க வேண்டுமென இறைவன் விதித்திருக்கின்றானோ அவ்வாறு அவை நடக்கின்றன என்பதே இதன் பொருளாக இருக்க முடியும்.அவை ஸஜ்தா செய்கின்றன என்றால் இறைவன் என்ன நோக்கத்தில் அதை படைத்துள்ளானோ அதன்படி அவை இயங்குகின்றன என்பதே பொருள்.

அல்லாஹ் படைத்திருப்பவைகளை அவர்கள் உற்று நோக்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும்,இடமுமாக இறைவனுக்காக ஸஜ்தா செய்தவையாக சாய்கின்றன. மேலும் அவை அல்லாஹ்வுக்கு பணிகின்றன. (அல்குர் ஆன் 16:48) வலமும் இடமுமாக பொருள்களின் நிழல்கள் சாய்வதை இங்கே இறைவன் ஸஜ்தா என்று குறிப்பிடுகிறான்.அதை தொடர்ந்து

வானங்களிலிலுள்ளவையும், பூமியில் உள்ளவையும், ஜீவராசிகளூம் மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 16:49)

வானம், பூமியில் உள்ள யாவும்,சகல ஜீவராசிகளூம் இறைவனுக்கு ஸஜ்தா செய்கின்றன என்று இறைவன் இங்கே குறிப்பிடுகின்றான்.நெற்றியை நிலத்தில் வைத்துப் பணிவது என்ற அர்த்தத்தை இங்கே இடம் பெற்ற ஸஜ்தா எனும் சொல்லுக்கு கொடுக்க முடியாது.

பதினோரு நட்சத்திரங்களூம், சூரியனும் சந்திரனும் எனக்கு ஸஜ்தா செய்யக் கூடியவையாக நான் கனவு கண்டேன். (அல்குர்ஆன் 12:4)

யூசுப் நபியவர்கள் இவ்வாறு கனவு கண்டதாக அல்லாஹ் கூறுகிறான். சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களூம் நாம் நினைக்கின்ற அர்த்தத்தில் ஸஜ்தா செய்திருக்க முடியாது. எனெனில் ஸஜ்தாவுக்குரிய உறுப்புகள் அவற்றுக்குக் கிடையாது இந்தச் சான்றுகளிலிருந்து ஸஜ்தாவுக்குப் பல பொருள்கள் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.

அப்படியானால் இந்த இடத்தில் ஆதம் [அலை] அவர்களூக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததாகக் கூறப்படும் இடத்தில் ஸஜ்தாவுக்கு எந்தப் பொருள் கொள்ள வேண்டும்.தொழுகையில் நாம் செய்கின்ற இந்த ஸஜ்தாவையே அவர்கள் செய்தார்களா? அவ்வாறு பொருள் கொள்ள முடியுமா?

நிச்சயமாக அவ்வாறு பொருள் கொள்ள முடியாது.இந்த ஸஜ்தாவை மலக்குகள் இறைவனைத் தவிர வேறு எவருக்கும் செய்ய மாட்டார்கள் என்று திருக்குர்ஆனே தெளிவுபடுத்தி விடுகின்றது.

உம்முடைய இறைவனிடத்தில் ருப்பவர்கள் (வானவர்கள்) அவனை வணங்குவதைவிட்டும் பெருமையடிப்பதில்லை.அவனைத் துதிக்கின்றனர்.மேலும் அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர். (அல்குர்ஆன் 7:206)

ந்த வசனத்தில் லஹுயஸ்ஜுதூன்’ என்று இறைவன்  குறிப்பிடுகிறான். ‘யஸ்ஜுதூன லஹு’ என்பதற்கும் ‘லஹுயஸ்ஜுதூன்’ என்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது. ‘யஸ்ஜுதூன லஹு’ என்று சொன்னால் ‘அவனுக்கு ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள் என்று சொன்னால்  ‘அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்’ என்பது பொருள்.அதாவது வேறு எவருக்கும் ஸஜ்தா செய்ய மாட்டார்கள் என்பது இதன் கருத்து.

மலக்குகள் இறைவனுக்கு ஸஜ்தா செய்வதுடன் வேறு எவருக்கும் ஸஜ்தா செய்யாமலிருப்பார்கள் என்று அவர்களைப் பற்றி இறைவன் குறிப்பிடுகிறான். இதிலிருந்து அவர்கள் இறைவனுக்குச்  செய்யப்படும் ஸஜ்தாவை ஆதமுக்கு செய்திருக்க மாட்டார்கள் என்பதைத் தெளிவாக விளங்கலாம் இந்த வசனத்திற்கு முரண்படாத வகையிலேயே 2:34 வசனத்தையும் நாம் விளங்க வேண்டும்.

அப்படியானால் மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்ற அந்த வசனத்தின் பொருள் என்ன? ஆதம்  (அலை)அவர்களைப் படைக்க இறைவன் விரும்பி மலக்குகளிடம் சொன்ன போது அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள்.அவரைவிட தாங்களே உயர்ந்தவர்கள் எனவும் கூறினார்கள்.அல்குர்ஆனின் 2:30 வசனத்திலிருந்து இதை அறியலாம்.மனிதனைவிடத் தங்களை உயர்ந்தவர்கள் என்று அவர்கள் கருதியிருந்ததை தவறென்று காட்டுவதற்காக அவர்களைவிட ஆதம்(அலை) அவர்கள் தமது ஞானத்தை வெளிப்படுத்தியபின், அவருடைய உயர்வை அவருக்கு இருக்கும் சிறப்பை மலக்குகள் ஒப்புக் கொண்டனர்.

மலக்குகள் ஸஜ்தா செய்தனர் என்றால் ஆதம்(அலை) தங்களை விட அறிவில் சிறந்தவர் என்று அவரது உயர்வை ஒப்புக் கொண்டார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் பொருள் கொள்ளக் காரணம் அல்குர்ஆன் 7:20ம் வசனத்தில் மலக்குகள் இறைவனைத்தவிர வேறு எவருக்கும் (சிரம்பணியும்)ஸஜ்தாவை செய்ய மாட்டார்கள் என்று இறைவன் குறிப்பிடுவதானாலேயே.

மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தார்கள் என்பதற்கு தவறான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு போலி ஷைகுகள் தங்கள் முரீதுகளைக் காலடியில் விழச் செய்வதற்கும்,ஸஜ்தா செய்ய வைப்பதற்கும் இந்த வசனத்தில் எந்தச் சான்றுமே கிடையாது.

ஸஜ்தா என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் கொள்ள வேண்டும் என்பது இப்போது தெளிவாகி விட்டது. ஒரு வாதத்துக்காக மலக்குகள் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்தது நாம் தொழுகையில் ஸஜ்தா செய்வது போன்றதே என்பதை எற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு சாதகமாக இதில் எந்தச் சான்றும் இல்லை என்பதை உணர வேண்டும். அவர்கள் செய்யும் அர்த்தம் சரி என்று வைத்துக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

மலக்குகளும், மனிதர்களும் வெவ்வேறானவர்கள். மனிதர்களுக்கு இருப்பது போன்ற சட்டதிட்டங்கள் மலக்குகளுக்குக் கிடையாது.மலக்குகள் செயததை எல்லாம் மனிதர்களும் செய்ய முடியாது. இது முதலாவது வித்தியாசம். ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளை யிட்டதனாலேயே மலக்குகள் ஸஜ்தாச் செய்தனர். சுயமாக அவர்கள் செய்யவில்லை. ஆனால் அல்லாஹ், ஷைகுகளுக்கும், பெரியார்களுக்கும் ஸஜ்தாச் செய்யுமாறு நமக்குக் கட்டளையிடவில்லை.மாறாக அவனது திருத்தூதர் மூலமாக இதற்கு இறைவன் தடையும் விதிக்கின்றான்.

“நான் ‘ஹியாரா’ எனும் பகுதிக்குச் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்கள் தலைவர்களுக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன்”. நபி(ஸல்) அவர்கள்தாம் ஸஜ்தா செய்யப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள் என்று (எனக்குள்) சொல்லிக் கொண்டேன். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஸஜ்தாச் செய்ய உங்களுக்கு மிகவும் தகுதி உண்டு என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் அடக்கஸ்தலத்தின் அருகே சென்றால் நீ அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று கேட்டார்கள். நான் ‘மாட்டேன்’ என்றேன். (அதே போல் உயிருடன் இருக்கும் போதும்) செய்யாதே! ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு அவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன்; என்று நபி(ஸல்) கூறினார்கள்”. கைஸ் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபுதாவுத், தாரிமீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இதே கருத்து முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிப்பதாக இப்னு மாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் தூதருக்கு கூட ஸஜ்தா செய்ய அனுமதியில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

ஆதம்(அலை) அவர்கள் மலக்குகளுக்கு கற்றுத்தரும் ஆசானாக ஆனதால் அவர்கள் ஸஜ்தாச் செய்தனர். எனவே இந்த அடிப்படையில் ஞானத்தை கற்றுத்தரும் ஷைகுகளுக்கு ஸஜ்தா செய்யலாம் என்ற இந்த ஷைகுகளில் வாதத்திற்கு இந்த ஹதீஸ் மறுப்பாக அமைந்துள்ளதை உணரலாம்.

நபி(ஸல்) அவர்கள் தாம் அஞ்ஞானத்தில் இருந்த மக்களுக்கு சரியான ஞானத்தைப் போதித்தவர்கள். அவர்களை விட சிறப்பாக உலகில் எவருமே போதிக்க அனுமதி கேட்ட நபித்தோழருக்கு அனுமதி மறுக்கின்றார்கள்.இந்த ஷைகுமார்கள் நபி(ஸல்) அவர்களை விடவும் தங்களை உயர்ந்தவர்களாக கருதுகின்றார்கள் என்பதைத்தான் இவர்களின் போக்கு காட்டுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கைஸர், கிஸ்ரா,அலெக்ஸான்ரிய மன்னர் ஆகியோரிடம் தூதர்களை அனுப்பினார்கள். என்னை நஜ்ஜாஷி மன்னரிடம் அனுப்பினார்கள். நான் நஜ்ஜாஷி மன்னரிடம் வந்தபோது சிறிய வாசல் வழியாக குனிந்தவர்களாக மக்கள் உள்ளே செல்வதைக் கண்டேன். (அரசரைச் சந்திக்க செல்லும்) அந்த வாசல் குனிந்து செல்லும் அளவுக்கு உயரம் குறைந்ததாகவே அமைக்கப்பட்டிருந்தது.

“நான் உள்ளே நுழையும் போது முதுகுபக்கம் திரும்பிக் குனிந்தவனாக உள்ளே சென்று நிமிர்ந்தேன். அபீஸீனிய மக்கள் இதைக் கண்டு திடுக்குற்றனர். என்னைக் கொல்ல அவர்கள் நாடினார்கள். நாங்கள் நுழைந்தது போலவே நீரும் ஏன் நுழையவில்லை? என்று என்னிடம் கேட்டனர்” நாங்கள் எங்கள் நபிக்கே இவ்வாறு (மரியாதை) செய்ய மாட்டோம். இவ்வாறு செய்வது (கூடுமென்றால்) நபி(ஸல்) அவர்களுக்கே தகுமாகும் என்று நான் கூறினேன்” என்று அம்ரு இப்னு உமய்யா அள்ளமீர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அவ்ஸத் நூலில் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது

அரசரை நோக்கிச் செல்லும் வாசல் உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்தால் அதில் குனிந்து தான் செல்லவேண்டும். அரசருக்காக் குனிந்ததாக ஆகிவிடுமோ என்று அம்ரு அவர்கள் முதுகைக்காட்டிக் குனிந்து உள்ளே சென்று நிமிர்ந்தார் என்றால் நபி(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தவர் எவ்வாறு சுயமரியாதை மிக்கவர்களாக உருவாக்கப் பட்டிருந்தார்கள் என்பதை விளங்கலாம்.

தனி மனிதனுக்காக குனிவதும் கூட கூடாது என்றால் ஒரு மனிதரின் காலில் விழுந்து ஸஜ்தா செய்வது எப்படி அனுமதிக்கப்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்கே வ்வாறு குனிந்து மரியாதை செய்யமாட்டோம் என்ற அம்ரு(ரலி) அவர்களின் கூற்றும் சிந்திக்கத்தக்கது.

ஆக ஆதம்(அலை) அவர்களுக்கு மலக்குகள் செய்த ஸஜ்தாவுக்கு நாம் சாதாரணமாக நினைக்கும் அர்த்தம் அல்ல. அதுதான் அர்த்தம் என்று வைத்து கொண்டாலும் மனிதர்களின் கால்களில் விழவோ அவர்களுக்காக குணிந்து மரியாதை செய்யவோ நமக்கு அனுமதி இல்லை என்பதையாவது சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும். இந்த வசனத்தை கொண்டு மக்களை ஏமாற்றி அடிமைப் படுத்த நினைக்கும் முரீது வியாபாரிகளிடம் ஜாக்கிரிதையாக நாம் இருக்க வேண்டும்.