இஸ்லாம்தளம்

மார்ச்6, 2009

பேங்க் வட்டி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் வட்டியை மிகக்கடுமையாக கண்டித்துள்ளது; மறுத்துள்ளது. ஆயினும் உலகளாவிய அளவில் முஸ்லிம் நாடுகள் உட்பட வட்டியின் அடிப்படையில் பேங்குகள் செயல்பட்டு வருகின்றன. விரல் விட்டு என்னப்படும் சில பேங்குகள் அதுவும் நம் நாட்டிலில்லை. வெளிநாடுகளில் வட்டி அடிப்படை யில்லாமல் செயல்படலாம். இந்த நிலையில் வட்டி அடிப்படையான பேங்குளில் வரவு செலவு வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்த நிலயிலுள்ளவர்கள், அவர்கள் அந்த பேங்குகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்குரிய வட்டியை வாங்காமல் விட்டுவிடுவது, அந்த வட்டி சமுதாயத்திற்கு விரோதமாகவே பயன்பட உதவுகிறது.

எனவே அப்படிச் செய்யாதீர்கள் அந்த வட்டிப்பணத்தை அங்கிருந்து அகற்றி  சமுதாயத்திற்கு தீங்கிழைக்க வழியில்லாத வகையில் ஹறாம், ஹலால் ஆகும் நிலையில் கடும் வறுமையில் வாடும் ஏழைகளுக்கு (அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கலாம்) கொடுத்துவிடுவதே பாதுகாப்பானது என்று தெளிவு படுத்தியிருந்தோம். இந்த எமது கருத்தை மறுத்து பல சகோதரர்களிடமிருந்து பலவிதமான கண்டனங்களுடன் பல கடிதங்கள் வந்துள்ளன. கண்டனக் கடிதங்களில் சில,  அப்படியானால் திருடி ஏழைகளுக்கு அவற்றைக் கொடுக்கலாமா? விபச்சாரம் செய்து அந்த வருவாயை ஏழைகளுக்குக் கொடுக்கலாமா? இப்படி ஹறாமான காரியங்களைச் செய்து அவற்றிலிருந்து பெறப்படும் பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாமா? என்றெல்லாம் வினா தொடுத்துள்ளனர். பேங்கில் போட்டு வட்டிப் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று நாம் சொல்லவில்லை. நிர்பந்தமான நிலையில் பேங்கில் பணம் போடுகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றே தெளிவு படுத்தி இருந்தோம்.

இந்த கடிதங்களிலிருந்து ஒன்று நமக்கு நன்கு புலப்படுகிறது. நம்  சகோதரர்களின் உள்ளங்களில் வட்டியின் கெடுதி மிக ஆழமாக வேறுன்றி இருக்கின்றது. இதை அறிந்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். அல்ஹம்துலில்லாஹ். காரணம் 2:275,276,278,279 4:161 30:39 வசனங்களையும் மற்றும் வட்டி பற்றிய ஹதீஸ்களையும் படித்து விளங்கியவர்கள் நிச்சயமாக இப்படித்தான் வேகப்பட செய்வார்கள். இது நியாயமானது தான். இதே வேகத்துடன் இவ்வுலகில் எந்த அளவு எனக்கு கஷ்டம் நஷ்டங்கள்  ஏற்பட்டாலும், வியாபாரம், தொழில் போன்றவற்றை விரிவாக பெரிதாக நடத்த முடியவில்லை என்றாலும், நான் கஷ்டப்பட்டு ஈட்டியுள்ள பணத்தை தகுந்த பாதுகாப்பு இல்லாமல் திருடர்கள் திருடிச் செல்வதால் பெரும் நஷ்டமே ஏற்பட்டாலும், அரசுகளினால் எப்படிப்பட்ட வரித்தொல்லைகள் ஏற்பட்டாலும், இப்படி எப்படிபட்ட கஷ்டங்கள் வந்து இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு  வறுமைப்பட்டாலும், கஷ்ட நஷ்டங்களால் சிரமப்பட்டாலும் வட்டியிலான பேங்குகளை நெருங்கவும் மாட்டேன்; அந்த பேங்குகளில் சல்லிக் காசும்  போடமாட்டேன் என்று அதே உறுதியுடனும் வேகத்துடனும் இருந்தால் அதை மிகமிகப் பாராட்டி நாம் வரவேற்போம்.

ஆனால் பேங்கு வட்டியை எடுத்து ஏழைகளுக்குக் கொடுப்பதை மிகக் கடுமையாக ஆட்சேபிக்கும் சகோதரர்களும், மேலே விவரிக்கப்பட்ட தங்களின் சொந்த நலன்களுக்காக வட்டி அடிப்படையிலான பேங்குகளில் வரவு செலவு வைத்திருப்பதுதான் ஆட்சேபணைக்குரியது. பேங்கில் அவர்கள் பணத்தை போட்டு விட்டாலே அது வட்டிக்குத் துணை போகத்தான் செய்கிறது. இவர்கள் எங்களுக்கு வட்டி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடுவதால், இவர்களது பணத்தை அப்படியே பொட்டலமாகக் கட்டித் தனியே போட்டு வைத்து, பின்னால் இவர்கள் போய் கேட்கும்போது அதிலிருந்து எடுத்துக்  கொடுப்பதில்லை. இவர்கள் எங்களுக்கு வட்டி வேண்டாம் என்று எழுதிக்  கொடுத்தாலும்  இவர்களது பணத்தையும் வட்டிக்கு விடத்தான் செய்கிறார்கள். இவர்கள் பணம்தான் வட்டிக்குத் துணை போகிறது.

ஒரு யாசகனுக்கு ஒருவர் பணம் கொடுக்கிறார். யாசகம் கொடுத்தவுடன் அந்தப் பணம் அந்த யாசகனுக்குச் சொந்தமாக ஆகிவிடுகிறது. அதன் பின்னர் அவன் அந்த பணத்தை தவறான வழியில் செலவிட்டாலும் அந்தக்குற்றம் யாசகம் கொடுத்தவனைச் சாராது. அவர் தீமைக்குத் துணை போனவராக மாட்டார். இதுவே சரியாகும். ஆனால் இங்கு யாசகம் கொடுத்த அந்த மனிதர் தீமைக்குத் துணைபோனதாகச் சொல்லும் சகோதரர்கள், இவர்கள் போட்டிருக்கும் பணம் மூலம் கிடைக்கும் வட்டிக்குத் தாங்கள் பொருப்பில்லை என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? வட்டி வேண்டாம் என்று எழுதி கொடுத்து விடுவதால் பேங்கில் போட்டிருக்கும் பணம் இவர்களுடயது இல்லை என்று ஆகிவிடுமோ? இல்லையோ? அது இவர்கள் பணம்தானே. அப்படியானால் அந்தப் பணம் மூலம் பெறப்படும் வட்டிக்கும் இவர்கள் தானே பொறுப்பு? அந்த வட்டி மூலம் ஏற்படும் சமுதாய தீங்கிற்கும் இவர்கள்தானே பொறுப்பு ஏற்க வேண்டிவரும்? இந்த சாதாரண விஷயத்தைக் கூட விளங்க முடியவில்லையா?

நிர்பந்த நிலையில் பேங்கில் பணம் போடுகிறவர்கள் இரண்டு தவறுகளைச் செய்யும் நிலை ஏற்படுகிறது. ஒன்று தங்கள் பணத்தை தங்கள் விருப்பமின்றியே வட்டிக்கு விட்ட குற்றம். இரண்டாவது குற்றம் இவர்களது அந்த வட்டிப்பணம் நம் சமுதாயத்திற்கு எதிராகவே பயன்பட வழி வகுத்துக் கொடுப்பது.

எனவே குர்ஆன்,ஹதீஸை முற்றிலும் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருப்பவர்கள் கண்டிப்பாக எந்த நிலையிலும், எப்படிப்பட்ட நிர்பந்தத்திலும் பேங்கில் பணம்  போடக்கூடாது. முற்றிலுமாக பேங் வரவு செலவைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். பேங் வரவு செலவு இல்லாமல் யாரும் இறந்துவிடுவதில்லை. மேலதிக பணம் வரும் போதுதான் பெரும் பணம் சேர்க்கத்தான் பேங்க் வரவு செலவு வைப்பது எந்த நிலையிலும் கூடாது என்று முஸ்லிம் சகோதரர்களின் யாரும் கூறுவதில்லை. நிர்பந்தம் காரணமாக வைத்துக் கொள்ளலாம் என்றே கூறுகிறார்கள். வட்டிப் பணத்தை எடுக்கவே கூடாது என்று பிடிவாதமாக சொல்பவர்களும் பேங்க் வரவு செலவு வைத்துக் கொள்வதை மறுப்பதில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நம் சகோதரர்களின் தனி மனித நிர்பந்தத்தை விளக்கும் அளவுக்கு சமுதாய நிர்பந்தத்தை விளங்குபவர்களாக இல்லை. தனி மனித நிர்பந்தம் நேரடியாக தங்களைப் பாதிப்பதால் அதனை எளிதாக விளங்கிக் கொள்கிறார்கள். அதே சமயம் சமுதாய நிர்பந்தம் ஒட்டு மொத்த  சமுதாயத்தைப் பாதிப்பதால், அதை அவர்களால் உணர முடிவதில்லை. வன்முறையில் பொது சொத்துக்களைச் சேதப்படுத்துபவன் அந்த சொத்தில் தனக்கும் உரிமை இருக்கிறது. தன்னையும் அங்கமாகக் கொண்ட சமுதாயத்தின் சொத்து என்பதை அவன் உணராததாலேயே சேதப்படுத்துகிறான். அதே சமயம் அந்த சொத்து தனக்கு மட்டும் என்றிருந்தால் நிச்சயம் சேதப்படுத்த மாட்டான். தனி நிர்பந்தத்தையும்  பொது நிர்பந்தத்தையும் மக்கள் இப்படித்தான் விளங்கி வைத்திருக்கிறார்கள்.

தனி நிர்ப்பந்தத்துக்குப் கொடுக்கும் முக்கியத்துவம் கூட பொது நிர்ப்பந்தத்திற்கு மக்கள் காடுப்பதில்லை. ஒரு தனி மனிதனின் குறைபாடுகள் சமுதாயத்திற்கு எவ்வளவு இழப்பை ஏற்படுத்தினாலும் அது பெரிதல்ல; ஆனால் அந்தத் தனி மனிதனின் குறைபாடுகளை வெளிப்படுத்துவதன் மூலம் அவன் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்று தவறாக எண்ணுகிறார்கள். இதே கண்ணோட்டத்தில் தான் தனி மனிதர்களுக்கு ஏற்படும் நிர்ப்பந்தத்தைக் காரணம் காட்டி வட்டி அடிப்படையிலான பேங்குகளில் வரவு  செலவு வைத்துக்  கொள்வதால், மேலும் தங்கள் பணத்தால் ஈட்டப்பட்ட வட்டியை வேண்டாம் என்று எழுதிக் கொடுப்பதால் அந்த பேங்குகளில் குவியும் அதே வட்டிப் பணத்தால் என்னென்ன கேடுகள் விளைகின்றன? நமது சமுதாயதிற்கு எப்படி எதிராகப் பயன்படுகின்றது? நமது சமூக நிர்ப்பந்தம் ஒன்று எப்படி உருவாகிறது என்பதை உணராதிருக்கிறார்கள்.

பேங்க் வட்டி கண்டிப்பாகக் கூடாதுதான். அதைத் தவிர்ப்பதே முறையாகும். அப்படியானால் எந்த நிலையிலும் பேங்குகளில் வரவு செலவு வைத்துக்கொள்ளக்  கூடாது. அதற்கு மாறாக பேங்குகளில் வரவு செலவு வைத்துக் கொள்வோம்; ஆனால் வட்டியை வாங்கி வறுமையின் பிடியில் சிக்கி ஹறாம், ஹலால் ஆகும் நிலையிலிருக்கும் ஏழைகளுக்குக் கொடுக்கமாட்டோம். அந்த வட்டிப் பணத்தை எடுத்து அதிகாரிகள் என்ன செய்தாலும் சரி என்று கூறுகிறவர்கள் சுயநலமிகள்;சமுதாய நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்றுதான் கூறமுடியும். அவர்கள்அந்த வட்டிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவது முற்றீலும் தவறாகும். அவர்களது பணத்தைக் கொண்டு பெறப்பட்ட அந்த வட்டிக்கு  அவர்களே  முழுப் பொறுப்பாகும்.

நிர்பந்த நிலையில் பேங்கில் வரவு செலவு வைத்திருப்பவர்கள் அந்த வட்டிப் பணத்தை எடுத்து ஏழைக்குக் கொடுத்து விட்டால் அவர்கள் ஒரே ஒரு குற்றத்திற்குத்தான் ஆளாகிறார்கள். அதாவது தங்கள் பணத்தைக் கொண்டு  வட்டி ஈட்ட துணைபோன குற்றம் அது. ஆனால் அந்த வட்டிப்பணத்தை அவர்கள் எடுத்து ஆதாயம் அடையவில்லை. நன்மையையும் எதிர்பார்க்கவில்லை. நிர்பந்த நிலையில் அவர்கள் செய்த அந்த ஒரு குற்றத்தை அல்லாஹ் நாடினால் மன்னிக்கவும் செய்யலாம்.

அதே சமயம் தங்களின் சொந்த நிர்பந்த நிலையை மட்டும் பேங்கில் வரவு செலவு வைத்துக் கொண்டு, அவர்களது பணத்தால் ஈட்டப்படும் வட்டியை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்காமல் அந்த வங்கியிலேயே விட்டு விடுபவர்கள் மூன்று குற்றங்களுக்கு ஆளாகிறார்கள். ஒன்று பேங்கில் வரவு செலவு வைத்துக் கொள்வதால் தங்கள் பணத்தைக் கொண்டு வட்டி ஈட்ட  துணைபோன குற்றம். இரண்டாவது தனது சொந்த நிர்பந்த நிலையை உணர்ந்தவர்கள், அதனால் ஏற்படும் சமூகம் நிர்பந்த நிலையை உணரத் தவறியது. மூன்று அவர்களின் பணத்திலிருந்து ஈட்டப்பட்ட வட்டிப் பணம் முஸ்லிம் சமுதாயத்திற்கு தீங்கிழைக்க உதவுவதற்கு இவர்களூம் துணை போனது ஆகும்.

ஆக நிர்பந்த நிலையில் பேங்கில் வரவு செலவு வைத்திருப்பவர்கள் ஒரு குற்றத்தோடு அல்லாஹ்வின் மன்னிப்பை எதிர்பார்ப்பது சிறந்ததா? அல்லது மூன்று குற்றங்களைச்செய்து ஏமாளியாய் அல்லாஹ்வின் தர்பாரில் நாளை நிற்பது சிறந்ததா? என்பதை சம்பந்தப் பட்டவர்களே முடிவு செய்து கொள்வார்களாக.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

இஸ்லாத்தில் பிரிவுகளில்லை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாத்தில் பிரிவுகளில்லை@font-face { font-family: TheneeUniTx; src:url(http://readislam.net/THENEE.eot); }

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை யுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்கு கடுமையான வேதனை உண்டு.  (அல்குர்ஆன் 3:105)

وَلا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாரயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள்; ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான்; இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். (அல்குர்ஆன் 2:213)

فَإِذَا قَضَيْتُمْ مَنَاسِكَكُمْ فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا فَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الآخِرَةِ مِنْ خَلاقٍ

நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்மந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது -அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:159)

إِنَّ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا لَسْتَ مِنْهُمْ فِي شَيْءٍ إِنَّمَا أَمْرُهُمْ إِلَى اللَّهِ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَفْعَلُونَ

நிச்சயமாக உங்கள் “உம்மத்து” சமுதாயம் (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம்தான்; மேலும் நானே உங்கள் இறைவன் ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள். (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள். (அல்குர்ஆன் 21:92,93)

إِنَّ هَذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاعْبُدُونِ وَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ كُلٌّ إِلَيْنَا رَاجِعُونَ

ஆனால் அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்சியடைபவர்களாய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 23:53)

فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ

அவர்களுக்கு (மார்க்க விஷயத்தில்) தெளிவான கட்டளைகளையும் கொடுத்தோம்; எனினும் அவர்களுக்கிடையே உண்டான பொறாமையினால், அவர்களுக்கு (வேத) ஞானம் வந்த பின்னரும்  அவர்கள் அபிப்பிராய பேதம்  கொண்டார்கள்; நிச்சயமாக உம் இறைவன் அவர்கள் எதில் அபிப்பிராயபேதம் கொண்டார்களோ அதில் கியாம நாளில் அவர்களிடையே தீர்ப்புச் செய்வான். (அல்குர்ஆன் 45:17)

وَآتَيْنَاهُمْ بَيِّنَاتٍ مِنَ الأمْرِ فَمَا اخْتَلَفُوا إِلا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ


உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

வலிமார்களிடம் உதவி?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கேள்வி: ஷிர்க் பற்றி எழுதி இருந்ததை என்னால் ஏற்க இயலவில்லை. உங்களுக்கு ஏதாவது வழக்கு என்றால் வக்கீலிடம் செல்கிறீர்கள்! உடல் நிலை சரியில்லாவிட்டால் மருத்துவரிடம் சென்று அவரது உதவியை  நாடுகிறீர்கள்! இதுவும் ஷிர்க் தானே? டாக்டர்கள் வக்கீலிடம் கேட்கும்போது வலிமார்களிடம் கேட்பதில் என்ன தவறு? மேலும் கலிமா சொன்னதன் மூலம்  அல்லாஹ் ஒருவன் என்று நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். மனதில் அல்லாஹ் ஒருவன் என்ற நம்பிக்கை உள்ள நிலையில் தானே வலிமார்களிடம் கேட்கிறோம்? இது எப்படி ஷிர்க் ஆகும்? உங்கள் சந்தேகம் நீங்க வேண்டுமானால் வலிமார்களின் தர்கா ஷரீபில் சில நாட்கள் தங்கிப் பாருங்கள்! பலன் கிடைக்கும். s.ஹமீது தமிழ்நாடு

பதில்: ஆம்! தமிழ் நாட்டிலிருந்து ஒரு வாசகர் இப்படி எழுதி இருக்கிறார். அவர் தனது முகவரியை எழுதாவிட்டாலும் அவர் கேட்டிருக்கின்ற சந்தேகம்  மக்கள் மனதில் பரவலாக உள்ளதால் அதற்கு விளக்கம் தருகிறோம். மறுத்துவரிடம் சென்று மருத்துவம் செய்வதற்கும், இறந்துவிட்ட  வலிமார்களிடம் கேட்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

முதல் வேறுபாடு மருத்துவரிடம் நான் மருத்துவ உதவியைத் தேடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அந்த சந்தர்ப்பத்திலோ அல்லது மற்றோர் சந்தர்ப்பத்திலோ என்னிடமிருந்து ஒரு உதவியை தேடுகிறார் பெற்றுக்கொள்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் நானும் டாக்டரும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்கிறோம். நல்ல காரியங்கள், இறையச்சமுடைய காரியங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிகொள்ளுங்கள் என்று அல்லாஹ் இதனை பரஸ்பரம் உதவிகொள்வதை அனுமதிக்கிறான்.

இறந்து போன வலிமார்களிடம் கேட்கின்ற உதவி இத்தகையது அல்ல. நம்மவர்கள் கபுராளிகளிடம் சென்று உதவி கேட்கிறார்களே எப்போதாவது கபுரில் உள்ளவர்கள் நம்மிடம் வந்து ஏதாவது உதவி கேட்டிருக்கிறார்களா? நாளைக்காவது கேட்டுவிடுவார்கள் என்று நம்பவாவது இயலுமா? சிந்தித்து பாருங்கள்! இங்கே நாமும், இறந்து போன அவ்லியாவும் பரஸ்பரம் உதவிக் கொள்ளவில்லை. மாறாக நாம் அவரிடம் உதவி பெற்றுக்கொண்டே இருக்கப் பிறந்தவர் போலவும், அவர் வாரி வழங்கிப் கொண்டிருக்கவே பிறவி எடுத்தவர் போலவும் மக்கள் கருதுகிறார்கள். எவரிடத்திலும் எந்தத் தேவையுமாகாமல் கொடுப்பதற்கே உள்ளவன் அல்லாஹ் மட்டுமே. இறந்துபோன வலிமார்களிடம் உதவி கேட்பது அவர்களை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிட்டதாகத்தான் கருதப்படும்.

பரஸ்பரம் உதவிக்கொள்ளுதல் என்பதை தாஆவுன் என்று அரபியில் சொல்வர். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஒரு தரப்பு உதவி தேடுதலை இஸ்திஆனத் என்று கூருவர். தஆவுன் என்பதை மேற்கூறிய வசனத்தின் மூலம் அல்லாஹ் அனுமதிக்கிறான். மருத்துவரிடம் பெரும் உதவி தஆவுன் என்ற வகையில் சேரும். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற வசனத்தின் மூலம் இஸ்திஆனத் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கப்படவேண்டும் என்று அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். இறந்துபோன வலிமார்களிடம் கேட்பது இந்த வகையைச் சேர்ந்தது என்பதால் அதனைக் கூடாது என்கிறோம்.

இரண்டாவது வேறுபாடு
நான் மருத்துவரிடம் உதவி தேடுகிறேன் என்றால் என்னைப்போல் ஒரு நூறு பேர்ஒரே நேரத்தில் தங்கள் நோயைச் சொல்லி அந்த மருத்துவரிடம் முறையிட்டால், அந்த மருத்துவரால் எதையும் செவிமடுக்க இயலாது. என்பதை அவரது வரையறைக்குட்பட்ட சக்தியை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு தான் நான் மருத்துவரை நாடுகிறேன்.

ஆனால் கபுராளிகளை ஒரே நேரத்தில் பல ஊர்களிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் அழைக்கின்றனர்.அத்தனையையும் அதே  நேரத்தில் அந்தக் கபுராளி செவிமடுக்கிறார் என்று எண்ணவும் செய்கின்றனர். எங்கிருந்து எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனையையும் அதே நேரத்தில் கேட்பவன் அல்லாஹ் மட்டுமே. அல்லாஹ்வின் தனிப்பண்பு அந்தக் கபுரில் உள்ளவருக்கு இருப்பதாகக் கருதுவது இணை வைத்தலில்லாமல் வேறு என்ன? மருத்துவரிடம் கேட்கப்படும் உதவிகள் இத்தகையது அல்லவே.

அடுத்து அல்லாஹ் ஒருவன் என்று கலிமாவின் மூலம் ஏற்றுக் கொண்டுவிட்டு தானே இப்படி அழைக்கிறோம். எப்படி ஷிர்காகும் என்று கேட்கிறார். குளித்து  விட்டுத் தானே சேற்றைப்பூசுகிறேன் என்று கேட்பதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. எப்போது கலிமாவின் தத்துவத்தை உணர்ந்து அதனைக் கூறுகிறானோ அப்போது அவன் முஸ்லிமாகிறான். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கடவுளில்லை என்று கூறி விட்டு அதற்கு மாற்றமாக இன்னும் பல தெய்வங்களை அவன் இறைவனுக்கு இணையாக்கும்போது அந்த ஈமான் போய்விடுகின்றது.

மக்கத்து காபிர்களும் அல்லாஹ் ஒருவன் என்பதை நம்பாமலா இருந்தனர்? மிக உறுதியாக நம்பினர். ஆனால் இன்றைக்கு இருப்பது போன்ற தவறான நம்பிக்கையின் காரணமாகவே அவர்களைக் காபிர்கள் என்று அல்லாஹ் அழைக்கிறான். தர்காக்களில் தங்கிப்பார்க்கச் சொல்கிறார். சந்தேகம் தீருமாம். நாம் உண்மையிலேயே அனுதாபப்படுகிறோம். அதனால்தான் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்வளவு விளக்கம் தருகிறோம்.

மேலும் அறிய

கப்ரில் நபி(ஸல்) அவர்களின் நிலை

நல்லடியார்கள்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த

கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கனடா நாட்டில் இருக்கும் Toronto நகரில் வாழும் மிகப்புகழ் பெற்ற கரு வளர்ச்சி நிபுணர் Dr.Keith L.Moore என்பவர் நயாகரா நீர் வீழ்ச்சி பகுதியில் நடை பெற்ற இஸ்லாமிய மருத்துவர் சபையின் 18 வது ஆண்டு கூட்டதில் ஓர் உரை நிகழ்த்தினார். அந்த உரையில் டாக்டர் மூர் மனிதக் கரு வளர்ச்சி மற்றும் இனப் பெருக்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய புனித  திருக்குர்ஆனின் வசனங்களை விளக்கினார். ”

திறுமறை நெடுகிலும் மனித வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தைப் பற்றிய வசனங்கள் காணக்கிடக்கின்றன” என அப்போது குறிப்பிட்டார். சமீபகாலமாக திருமறையின் ஒரு சில திரு வசனங்களின் பொருள் முழுமையாக விளங்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்றார். அவர் தனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வசனங்களையும், அவர் தரும் விஞ்ஞான விளக்கத்தையும் கான்போம்.


உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ்! உங்களுடைய இறைவன்! அவனுக்கே ஆட்சி அதிகாரம் (முழுதும் உரித்தாகும்) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை! அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீங்கள் எப்படித் திருப்பப்படுவீர்கள்? (அல்குர்ஆன் 39: 6)

கருப்பயில் உள்ள சிசுவைப் பற்றிய  முதல் படம்  கி.பி.15 ம்  நூற்றாண்டில் வாழ்ந்த Leonardo da vinchi என்ற  இத்தாலியரால் வரையப்பட்டது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த Galen என்பவர் தன்னுடைய “கரு உருவாக்குதல்” என்ற நூலிலும் (Placenta), கருவை மூடியிருக்கும் மெல்லிய சவ்வைப்பற்றியும், விளக்கியிருந்தார். “மனிதக்கரு கருப்பையில் வளர்ந்தது என்பது  பற்றி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த மருத்துவர்கள் அறிந்திருந்தனர்” என்பதர்கான சாத்தியக்கூறே கிடையாது. (ஏழாம் நூற்றாண்டில் தான் குர்ஆன் அருளப்பட்டது )

அப்படி இருக்கையில், குர்ஆன் இறங்கி மனிதக் கரு வளர்ச்சிப்பற்றி கூறக் கூடிய காலத்தில் வாழ்ந்த மருத்துவர்கள் மனிதக் கரு படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அறிந்திருக்க சாத்தியமே இல்லை! இன்னும்  சொல்லப்போனால் கி.பி.15 ம் நூற்றாண்டு வரை “மனிதக் கரு படிப்படியாக  வளர்ச்சியடைகிறது” என்பதைப் பற்றி எவரும் பேசவோ நிரூபிக்கவோ இல்லை!

கி.பி.16ம் நூற்றாண்டுக்குப்பிறகு Microscope கருவியை Leewenhook என்பவரால் கண்டு பிடிக்கப்பட்ட பிறகுதான் கோழிக் கருவின் ஆரம்ப நிலைகள் பற்றிய விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன . அப்போது கூட மனிதக் கரு வளர்ச்சி பற்றி எவரும் விளக்கிடவில்லை!

கி.பி.20ம்  நூற்றாண்டில்  Streeter(1941)  என்பவரும்  முதன்  முதல்  கரு நிலைகளைப் பற்றிய முறையான விளக்கத்தை தந்தனர். அதற்குமுன் எவரும்  மனித கரு வளர்ச்சிப்பற்றிய முறையான விளக்கத்தை விளக்க இயலவில்லை! ஆனால் திருக்குர்ஆன் எழாம் நூற்றாண்டிலேயே மிகத் துல்லியமாக இந்த உண்மைகளை விளக்கி, இறை மறை என்பதற்கு சான்றாகத் நிகழ்கின்றது.

இப்போது மேற்கூறிய திருக்குர்ஆன் வசனத்தைப் பாருங்கள்! ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான்.” என்ற சொற்றொடரைக் கவனியுங்கள்! வயிற்றுச்சுவர் கருப்பையின் சுவர் கருவின் மீது போர்த்தி இருக்கும் மெல்லிய சவ்வு ஆகிய மூன்று இருள்களுக்குள் மனிதனை வைத்துப் படைத்ததை அல்லாஹ் அழகாக விளக்குகிறான்.

பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்தோம்! பின்னர் அந்த இந்திரியத் துளியை “அலக்” என்ற நிலையில் ஆக்கினோம்! பின்னர் அலக் என்பதை ஒரு தசைப்பிண்டமாக்கினோம்! பின்னர் அந்த தசைப் பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்! பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவிதோம்! பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக் (மனிதனாகச்) செய்தோம்! (இவ்வாறு படைத்தவனாகிய) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (அல்குர்ஆன் 23:13,14)

கலப்பான் இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைதோம். (அல்குர்ஆன் 76:2)

முதல் வசனத்தில் இந்திரியத்துளியிலிருந்து படைத்ததாகவும், இரண்டாம் வசனத்தில் கலப்பான இந்திரியத் துளியிலிருந்து படைத்ததாகவும் அல்லாஹ் கூறுகிறான். கலப்பான இந்திரியதுளி என்பதன் பொருளை  பல நூற்றாண்டுகளுக்கு முன்வரை மனிதன் அறிந்த்திருக்கவில்லை .

ஆணுடைய இந்திரியத்துளி பெண்ணிடம்  தயாராக உள்ள முட்டையுடன் கலந்து  (zygote) என்ற கரு உருவாகுகின்றது. பின் அது பிரிந்து (Blastocyst) என்ற நுண்ணுயிராக மாறி கருப்பையில் விதைக்கப்படுகிறது என்பதை சமீப காலத்தில் தான் மனிதனால் கண்டுபிடிக்க முடிந்தது .இந்த பேருன்மையை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக்கிவிட்டது.

மேற்கூறிய 23:14 வசனத்தில் “அலக்” என்ற இரண்டாம் நிலையை மனிதக்கரு அடைவதாகக் கூறப் படுகிறன்றது. அலக் என்ற சொல்லுக்கு இரத்தக்கட்டி என்றே கடந்த காலங்களில் பொருள் செய்யப் பட்டுள்ளது. அந்த வார்த்தைக்கு அப்படி ஒரு பொருள் இருப்பதை எவரும் மறுக்க முடியாது .ஆனாலும் மனிதக்கரு இரத்தக்கட்டி என்ற நிலையை அடைவதில்லை என்பது விஞ்ஞானிகளின்  முடிவு. எனினும் அலக் என்ற சொல்லுக்கு வேறு பொருளும் உண்டு என்பதை மறுக்க முடியாது. அந்த அடிப்படையில் அலக் என்ற சொல் அட்டைப்பூச்சியையோ குறிக்கும். இந்த பொருள் இன்றைய விஞ்ஞான  முடிவுக்கு ஒத்துவருமா என்று பார்போம் .

கலப்பான விந்துத் துளியாகிய கருப்பையில் நுழைந்த மனிதக்கரு அட்டைப்பூச்சி தோலின் மீது கடித்துக் கொண்டு தொங்குவதைப் போல் கருப்பையின் உட்சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். 7ல் இருந்து 24 நாட்கள் வரை வளர்ச்சி நிலையில் இருக்கும் மனிதக் கருவைக் குறிக்க இதைவிடச் சிறந்த வார்த்தை இருக்க முடியாது. அட்டைப்பூச்சி தனக்கு வேண்டிய ச்த்தை ஒட்டிக் கொண்டிருக்கும் பிராணியிலிருந்து எவ்வாறு உறிஞ்சிக் கொள்கிறதோ அவ்வாறே மனிதக் கருவும் தனக்கு, வேண்டிய சத்தை கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டு அங்கிருந்து உரிஞ்சிக் கொள்கிறது. மனிதக் கருவின் இரண்டாம் நிலயை அட்டைப் பூசிக்கு ஒப்பிட்டது மிகப் பொருத்தமே!

7ல் இருந்து 24 நாட்கள் வரை உள்ள மனிதக் கருவை கருவிகளின் உதவியால் பெரிதாக்கிப் பார்த்தால் அது ஒரு அட்டைப் பூச்சி வடிவத்திலிருப்பது ஆச்சிரியமானது. மைக்ரோஸ்கோப் போன்ற எந்தக் கருவிகளும் இல்லாத 7 ம் நூற்றாண்டில் மனிதக்கரு அட்டைப் பூச்சியைப் போலிருகிறது .

அதே 23:14 வசனம் “அலக்” என்ற நிலையிலிருந்து தசைக்கட்டியாக மாறுவதாகக் குறிப்பிடுகின்றது. அதில் தசைக்கட்டி என்பதைக் குறிக்க  முழ்கத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லுக்கு “மெல்லப்பட்ட சதைத்துண்டு” என்பது பொருள். இப்போது இதுபற்றி விஞ்ஞானிகளின் முடிவைக் காண்போம்!

கரு உண்டாண நான்காவது மாத இறுதியில் கரு ஏறத்தாழ மெல்லப்பட்ட சதைத்துண்டைப் போல் தோற்றமளிக்கின்றது .தலைப் பகுதி, மார்பு,வயிறு, கால்கள் இவை எல்லாம் பிரிக்கப்பட்டு வளர்வதற்கு முன்னால் இவற்றின் சுவடு கருவில் உருவாக ஆரம்பிக்கும். முன்னால் இவற்றின் சுவடு கருவில் உருவாக ஆரம்பிக்கும். அந்த சுவடுகள் தான் பல்லால் சதைத் துண்டைத்மென்றால் ஏற்படும் பற்குறிகளைப் போன்ற தோற்றத்தை அந்தக் கருவிற்கு ஏற்படுத்தி விடுகின்றது .

கருவளர்ச்சியில் மூன்று அடுக்குகளாக உருப்புக்கள் உருவாகின்றன.  (Ectoderm) என்ற மேல் அடுக்கிலிருந்து தோல் பகுதிகளும், நரம்பு  மண்டலமும் மற்றும் தனிப்பட்ட உனர்வுகளை அறியக்கூடிய இன்ன பிற உறுப்புகளும்,  சுரப்பிகளும் உருவாகின்றன.

(Endo derm) என்ற கீழ் அடுக்கில் இருந்து உட்புற செல், திசு அடுக்கு உண்டாகிறது. (Mesoderm) என்னும் மத்திய அடுக்கிலிருந்து தான் மென்மையான எலும்பு முதலில் உருவாக்கப்பட்டு அதன் மீது சதை போர்த்தப்படுகின்றது. எட்டாவது வாரத்தை பல்வேறு வளர்ச்சி மாற்றங்களையும், நிலைகளையும் கடந்து கரு, மற்ற பிராணிகளைப் போன்றிருக்கிறது. எட்டாவது வாரத்தை ஒட்டித்தான் அந்தக்கரு மனிதப்  பண்புகளை அடைகின்றது. இந்தப் பேருண்மையை மேற்கூறிய திருவசனம் 23:14 எவ்வளவு தெளிவாக விளக்கி விடுகின்றது!

மனிதர்களே! இறுதித் தீர்ப்புக்காக் நீங்கள் மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தால் அறிந்துக் கொள்ளுங்கள்! நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும், பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு இரத்தக் கட்டியிலிருந்தும், பின்பு உருவாக்கப்பட்டதும் உருவாக்கப்படாததுமான சதைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். (அல்குர்ஆன் 22:5)

இந்த வசனத்தில் (பகுதி)உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான சதைக்கட்டி என்று கூறப்படுகின்றது. இதன் பொருள் என்ன? இப்படி ஒரு நிலை கருவளர்ச்சியில் உண்டா என்று ஆராய்ந்தால் நாம் வியப்படையும்  பேருண்மைதான் நமக்கு வெளிப்படுகின்றது.

பகுதி உருவான, பகுதி உருவாகாத என்பது, வித்தியாசப்படுத்த முடிகின்ற  வித்தியாசப்படுத்த முடியாத திசுவைக்குறிக்கும். இந்த இரண்டு நிலைகளும்  கருவளர்ச்சியில் இருப்பதை விஞ்ஞானம் தெளிவாக ஒப்புக் கொள்கிறது. மென்மையான எலும்புகளும், கெட்டியான எலும்புகளும் உர்வாக்கப்படும்போது பகுதி உருவான இணைப்புத் திசுக்களையும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளையும்  பிறித்தரிய முடியாது.இன்னும் சிறிது காலம் சென்றபின் அவை தசைப்பகுதியாகவும், எலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் நார் போன்ற இனைப்புத் தசையாகவும் பிரித்துவிடுகின்றது . இதைப் தான் 22:5 வசனம் தெளிவாகக் குறிப்பிடுன்றது.

கேட்கும், பார்க்கும், மற்றும் தொடு உணர்ச்சிகள், திருக்குர்ஆனின் 32:9 வசனத்தில் சொல்லப் பட்டிருக்கும் அதே வரிசைக்கிரமத்தில்தான் உருவாகின்றன என்பது அதைவிட ஆச்சரியமானதே! பகுத்து புரியச் செய்யும் மூளை உருவாவதற்கு முன்பு உள் செவி, மற்றும் கண்களின் ஆரம்பச் சுவடுகள் தோன்றுகின்றன.திருக்குர்ஆன் இந்த பேருண்மையைகளை ஜயத்த்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றன.

22:5 வசனத்தில் எந்தக்கருக்கள் கர்ப்பப் பையில் முழுமையான காலம் தங்கி இருக்கும் என்பதை இறைவன் ஒருவனே நிர்ணயிக்கிறான் என்ற கருத்தை இந்தத்திருவசனம் உணர்த்துகின்றது. அநேக கருக்கள் முதல் மாத வளர்ச்சியின் போதே சிதைந்து விடுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே! சுமார் 80% கருக்கள் தான் சிசுவாகி பிறக்கும் வரை உயிருடன் இருக்கின்றன.

ஏழாம் நூற்றாண்டில் மக்கள் பெற்றிருந்த மருத்துவ அறிவைக்கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள மனித வளர்ச்சி பற்றிய திருவசனங்களின் பொருளை  முழுமையாக உணரமுடியாது. கருவளர்ச்சியைப் பற்றிய ஆழ்ந்த விளக்கம் நமக்கே கடந்த 50 ஆண்டுகளில் தான் அதுவும் மைக்ரோஸ்கோப் போன்ற பல விஞ்ஞான கண்டு பிடிப்புக்களுக்குப் பிறகுதான் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் முன்பே எழாம் நூற்றாண்டிலேயே இந்த உண்மையைத் தெளிவாக விளக்கி குர்ஆன், இறைமறை  என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது.

The Muslim World League Journal May-June 1987
H.F.Nagamia M.D
Pof: Thajudeen M.A in Tamil

786 ஓர் விளக்கம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்கள் எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்றோ பிஸ்மில்லாஹி என்றோ கூறித்துவக்கவேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் பல பொன்மொழிகள் மூலம் நமக்கு தெரிகின்றது. இந்த முறையை இஸ்லாமியர் அனைவரும் செயல்படுத்தியும் வருகின்றனர். பிற்காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கும் கடிதத் தொடர்புகள் பரவலாக்கப்பட்டன. தங்கள் கடிதங்களில் பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் என்று எழுதினால் அதற்கு மரியாதை செய்யப்படாது. தூய்மையற்ற பலரது கைகளில் அது கிடைக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில்கொண்டு பிஸ்மில்லாஹ் என்று எழுதுவதற்கு சில முஸ்லிம்கள் தயங்கவும் செய்தனர். மாற்று வழி ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு எண்ணை குறியீடாக மாற்றிக்கொள்ளும் நியூ மராலஜி என்ற முறை மேலை நாடுகளில் தோன்றி அது பல நாடுகளையும் அது ஈர்த்தபோது அதனை அடிப்படையாகக் கொண்டு பிஸ்மில்லாஹ்வில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு எண்ணை குறியீடாக ஆக்கி அதனை மொத்தமாகக்கூட்டி அந்தக் கூட்டுத் தொகையான 786ஜ பிஸ்மில்லாஹ்வுக்கு பதிலாக எழுதத் துவங்கினர். நாளடைவில் அதுவே இஸ்லாத்தின் சின்னம் என்று கருதும் அளவுக்கு மக்கள் இதயங்களில் ஆழமாக பதிந்து விட்டது. தங்களில் வீடுகளில் முகப்புச் சுவர்களிலும், திருமண அழைப்பிதழ் களிலும், துண்டுப் பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும், புத்தகங்களிலும் எழுதப்படாமல் இருப்பதில்லை என்னும் அளவுக்கு முக்கிய இடத்தை 786 பிடித்துகொண்டது. இது 786 உடைய சுருக்கமான கதை. தூய்மையற்ற பலரது கையில் கிடைக்கக்கூடும் என்பதற்காக இப்படி ஒரு மாற்று வழி தேவைதானா என்று குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆராயும்போது இது தேவையில்லை என்ற முடிவுக்கே நாம் வரமுடியும். சுலைமான்(அலை) அவர்கள் தனது அண்டை நாட்டின் ராணிக்கு இஸ்லாத்திபால் அவளை அழைக்கும் எண்ணத்தில் கடிதம் ஒன்று எழுதுகிறார்கள். அந்த கடிதத்தின் துவக்கமாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதினார்கள் என்பதை திருக்குர்ஆனின்(27:30) என்ற வசனம் கூறுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத ஒரு பெண்ணுக்கு சுலைமான்(அலை) அவர்கள் முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதியதிலிருந்து அதனை அல்லாஹ் தன் திருமறையில் எடுத்துச் சொன்னதிலிருந்து எவருக்கும் எழுதுகின்ற கடிதத்திலும் பிஸ்மில்லாஹவை எழுதலாம் என்பதை தெளிவாகின்றது. இத்தாலி நட்டின் அதிபர் கைஸருக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “திஹ்யத்துல்கலபி” என்ற சஹாபி மூலம் இஸ்லாமிய அழைப்பை அனுப்பியபோது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதச் செய்திருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம். நபித்தோழர் காலித் இப்னு வலீத் (ரழி) அவர்கள் ஈரான் நாட்டின் மன்னன் ருஸ்தம் என்பவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்து எழுதிய கடிதத்தை “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்” என்றே துவங்கியிருந்தார்கள். (அபூவாயில்(ரலி) ஷரஹுஸ்ஸுன்னா) மேற்கூறிய இறைமறைக் கூற்றும், நபிவழியும், நபித்தோழர் வழியும் பிஸ்மில்லாஹ்வை தூய்மை யற்றவர்களுக்கு எழுதுவதனால் அதன் கண்ணியம் குறைந்துபோய்விடும் என்ற வாதத்தை நிராகரித்து விடுகின்றன. அல்லாஹ்வுக்கும், அவனது தூதர் சுலைமான்(அலை) அவர்களுக்கும், அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் அன்புத் தோழர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களுக்கும் தெரியாத கண்ணியத்தை 786 என்று எழுதுவோர் எங்கிருந்து கற்றனர் என்பதுதான் நமக்கு தெரியவில்லை. ஒரு முஸ்லிமை சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறவேண்டும் என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். எழுத்து மூலமாக ஸலாம் கூறவேண்டி வரும்போது அதனையும் எண் 632 என்று ஏன் எழுதுவதில்லை? 786 என்ற எண் பிஸ்மில்லாஹ்வுக்கு மட்டும் தான் வரும் என்பதில்லை. இன்னும் எத்தனையோ சொற்றொடர்களுக்கு இந்த எண்வரும் அவற்றில் சில விபரீதமான பொருள் தரக்கூடியதாகக் கூட இருக்கலாம். தாயத்து, தட்டு வியாபாரிகள் இதற்கு வக்காலத்து வாங்கினாலும் நபிவழி செல்வோர் இதனை தவிர்த்து, பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை முழுமையாக எழுதவேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதை சுருக்கமான முறையில் 786 என்று சொல்கிறோம் என்று கூறுபவர்கள் ஏன் அவரவர் தங்கள் பெயரை ஏன் முழுமையாக எழுத வேண்டும். அதற்கு உரிய எண்களைக்கூட்டி கைதிகளுக்கு உள்ளதுபோல் ஏன் எண் வடிவில் எழுதக்கூடாது? ஏனெனில் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் போன்ற பெயர்களை அப்படியே எழுதும்போது அந்தப் பெயர்களிலும் அல்லாஹ்வுடைய பெயர் இருக்கத்தானே செய்கிறது! அதற்கும் எண்களைக் குறிப்பிட்டுக் கொள்வதுதானே பொருத்தமானது ஏன் செய்யவில்லை? சிலர் 786 என்று எழுதும்போது எங்கள் எண்ணத்தில் பிஸ்மில்லா இருக்கின்றது எனவே எழுதலாம் என்கின்றனர். அப்படி எழுதவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது என்பது நமது முதல் கேள்வி? 247336 என்று ஒருவன் எழுதிவிட்டு எனது எண்ணத்தில் “பகரா” சூரா உள்ளது, அதற்கான நன்மை எனக்குக் கிடைத்துவிடும் என்றால் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை தரக்கூடிய ஒரு சொல்லை என்ன அவசியத்துக்காக சுருக்கவேண்டும். இந்த 786ஜ பிறை வடிவுக்குள் அமைத்து அந்த வட்டத்துக்குள் நட்சத்திரம் அமைப்பதும் வழக்கத்தில் உள்ளது அது இஸ்லாத்தின் சின்னமாகவும் ஆக்கப்பட்ட்டுள்ளது. பிறை வடிவுக்குள் இப்படி நட்சத்திரம் வருவது விஞ்ஞான ரீதியில் சாத்தியமானது தானா? பிறைக்குள் நட்சத்திரத்தை யாரேனும் பார்த்திருக்கின்றீர்களா? விஞ்ஞானத்திற்கு வித்திட்ட இஸ்லாத்தின் சின்னமே அஞ்ஞானமா?