இஸ்லாம்தளம்

மார்ச்4, 2009

வெற்றிக்கு வழி தூய எண்ணம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூற்கள்: புகாரி,முஸ்லிம்

இந்த ஹதீஸின் மூலம் நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் எண்ணம் அவசியம் என்பதை நன்கு விளங்கலாம். நம்முடைய எண்ணத்தின் அடிப்படையிலே தான் நம்முடைய அமல்களுக்கு அல்லாஹ் மறுமையில் கூலி வழங்குகிறான்.

“நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ, உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

“மறுமையில் தீர்ப்புக் கூறப்படும் அந்நாளில் ஒரு உயிர்த்தியாகி அல்லாஹ்விடத்தில் அழைத்து வரப்படுவார். அவரிடம் இறைவன் அம்மனிதருக்கு தான் செய்த அருட்கொடைகளை எடுத்துக் காட்டுவான். அவரும் அதை உணர்ந்து கொள்வார். அவரிடம் ‘எனக்காக என்ன செய்தாய்?’ என இறைவன் கேட்பான். ‘உனக்காகப் போர் செய்தேன். அதனாலேயே கொல்லப்பட்டேன்’ எனக் கூறுவார். அப்பொழுது இறைவன் ‘நீ பொய் சொல்கிறாய், நீ வீரன் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காகப் போர் செய்தாய். அவ்வாறு கூறப்பட்டு விட்டது’ என்று கூறுவான். பிறகு (மலக்குகளை அழைத்து) அம்மனிதரை நரகில் முகம் குப்புற தள்ளும்படி கட்டளையிடுவான்…” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ”ரைரா (ரலி) நூல்: முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸின் மூலம் தூய்மையான உள்ளம் எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். படைத்த இறைவனுக்கு ஒரு மனிதன் செய்யக்கூடிய அதிகபட்ச தியாகமாக என்ன செய்ய முடியுமோ, அந்த தியாகத்தை, அதாவது உயிரை அல்லாஹ்வின் பாதையில் இழந்துள்ளார். இதை யாரும் மறுக்க முடியாது. அவ்வளவு எளிதாக யாரும் செய்ய முடியாத தியாகத்தைச் செய்தபோது எண்ணம் சரியில்லாத காரணத்தினால் அவர் நரகத்திற்கு செல்வதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது. ஆனால், நாம் உணர்ந்திருக்கிறோமா? என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்று பெரும்பாலான மனிதர்கள் தங்களுடைய இறைவனுக்கு செய்ய வேண்டிய நல்ல அமல்களை பேருக்காகவும், புகழுக்காகவும், பணத்திற்காகவும் செய்யக்கூடிய பரிதாபகரமான சூழ்நிலைகளை பார்க்கிறோம். அவர்கள் இது குறித்து எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் மிக எளிதாக செயல்படுகிறார்கள். இவர்களைப் பற்றித் தான் படைத்த இறைவன் தன் திருமறை குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்.

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)

எனவே, நம்முடைய அமல்களை தூய எண்ணத்துடன் செய்ய செய்யவேண்டும். மற்றவர்கள் பார்ப்பதற்காக, புகழ்வதற்காக என்று செயல்பட்டால் மறுமையில் நாம் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டும். வல்ல இறைவன் நம் அனைவரையும் தூய்மையான எண்ணங்களுடன் வாழ கிருபை செய்வானாக! ஆமீன்.

THANKS : http://www.readislam.net

ஷைத்தானின் மாயவலை

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஸ்லிம்களில் பலர் நாங்கள் சாதரணமானவர்கள் குர்ஆன் ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழிபெயர்ப்புகளைத்தானே நம்ப வேண்டியுள்ளது என மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் அர்த்தமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். இது குர்ஆன் ஹதீஸையே பின்பற்றவேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்குக் கூட தடுமாற்றத்தை ஏற்படுத்தும் தவறான  வாதமாகும் இது.

குர்ஆனும் ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத்தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மைதான். இந்த காரணங்களுக்காகத்தான் அரபு மொழி அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியில்தான் சட்டங்களை எழுதினார்களா? நான்கு இமாம்களும் தங்கள் தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்டவர்களே. அவர்கள் எழுதிய அல்லது எழுதியதாக சொல்லப்படுகின்ற நூல்கள் யாவும் அரபு மொழியில் அமைந்தனவையே.

இதே வாதத்தின்படி இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதாலும், அந்த இமாம்கள் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும் அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையே அது ஏன்? இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால்தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாக கூறுகிறார்கள். அரபு மொழியில் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்டங்கள் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால், இந்த நியாயம் குர்ஆன் ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?

தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால், தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆனும் உண்மையான ஹதீஸ்களும் தமிழாக்கம் செய்யப்படும்போது மட்டும் ஏன் விளங்காது?

மொழி பெயர்ப்புகளில் மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன் ஹதீஸில் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். சிலவேளை அரபு மொழி அறியாதவர்களால் கண்டுபிடிக்காமலும் போகும். ஆனால் அதற்காக குர்ஆன் ஹதீஸை விட்டு விடமுடியுமா? விட்டுவிட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உட்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.

நம்மால் இயன்ற அளவு முயற்சித்துப்பார்த்து விட்டு மொழி பெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன் ஹதீஸை விளங்காது என்று அலட்சியம் செய்வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில், புத்தகங்களில் குர்ஆன் ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகிறார்களே! விளங்காத குர்ஆன் ஹதீஸை ஏன் மக்களிடம்  கூறவேண்டும். மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன் ஹதீஸ்கள் கூறினால் விளங்கும். மற்ற விஷயங்களுக்கு விளங்காதா? இதெல்லாம் ஏமாற்று வேலை. ஷைத்தானின் மாயவலை.

THANKS : http://www.readislam.net

இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பகுத்தறிவுகாரர்கள் கண்னுக்குத் தெரியாத கடவுளை நம்புவது காட்டு மிராண்டித்தனம். பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. கடவுளைக் காட்டினால் நம்புகிறோம், லட்சக்கணக்கில் பணம் பரிசும் தருகிறோம் என்று சவால் விடுகிறார்கள். இதை உண்மையான பகுத்தறிவு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? எந்த உண்மையான பகுத்தறிவுவாளனும் இதை பகுத்தறிவு என்று ஒப்புக் கொள்ளமாட்டான். இதனைப் பார்த்தறிவு அதாவது ஜயறிவு என்றே சொல்லுவான். இன்னும் பச்சையாகச் சொன்னால் இதை மிருக அறிவு என்றே சொல்ல வேண்டும்.

கண்ணியமிக்க ஒருவர் உங்களிடம் வந்து எதிர்வரும் ஒரு தேதியில் பெரிய தொரு விருந்துபசாரம் நடைபெற இருப்பதாகவும், அதில் நீங்கள் அவசியம் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுகிறார். பகுத்தறி ரீதியாக இதை எப்படி ஏற்பீர்கள்? அவர் வீட்டிற்குப் போய் அந்த விருந்துக்குறிய ஏற்பாடுகள் அனைத்தையும் கண்ணால் பார்த்த பின்னர்தான் ஏற்பீர்களா? அப்படியே அவர் வீட்டிற்குப் போய் நேரில் நீங்கள் பார்ப்பதால் நடைபெற இருக்கும் விருந்துக்குரிய அறிகுறிகள் ஏதும் அதற்கு முன்னரே உங்கள் பார்வையில் படுமா? இல்லையே?

அந்த கனவானின் நன்னடைத்தையில்  நம்பிக்கை வைத்து பகுத்தறிவு ரீதியாகச் சிந்தித்து அவரது கூற்றிலுள்ள  உண்மையை  ஏற்றுக்  கொள்கிறீர்கள். குறிப்பிட்ட தேதியில் அவர் வீடு  சென்று பார்க்கும் போது விருந்துக்குறிய அத்தனை ஏற்படுகளையும் கண்ணால் பார்க்கிறீர்கள். மகிழ்சியுடன் உண்டு அனுபவிக்கிறீர்கள் இது யாருக்கு பொருந்தும் பகுத்தறிவுள்ள மனிதனுக்கு மட்டும் தானே பொருந்தும்! மிருகத்திற்குப் பொருந்துமா?

ஒரு மாட்டையோ , ஒரு ஆட்டையோ விழித்து ஏய்! மாடே அல்லது ஆடே உனக்காக இன்ன தேதியில் பெரியதொரு  விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .நீ அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்த  மிருகத்திற்கு அது  புரியுமா?  ஜயறிவு  மிருகமான  அது பகுத்தறியும் திறன் பெற்றுள்ளதா? இல்லையே! அதற்கு முன்னால் ஒரு மரக்கொப்பைக் அசைத்துக் காட்டி அழைத்தால் அது வேகமாக ஓடிவரும். அதாவது கண்ணால் கண்டபின் வேகமாக ஓடிவரும். இது பகுத்தறிவு செயலா? பார்த்தறிவு செயலா -மிருக அறிவு செயலா?  சிந்தியுங்கள்.

எனவே கடவுளை பார்த்துத்தான் ஏற்றுக்கொள்வேன் என்று அடம் பிடிப்பது பகுத்தறிவு வாதமேயல்ல; பார்த்தறிவு வாதம் அதாவது மிருகவாதம்! இதைப் பகுத்தறிவுடன் முடிச்சுப் போடுவது அதைவிட  அறிவீனமாகும்.

இறைவனையும்,  மறுமையையும் கண்ணால் பார்த்த பின்னரே ஏற்பேன் என்பது பகுத்தறிவு வாதமே அல்ல. விருந்து கொடுத்த அந்த கண்ணியமான கனவானைப் போல் ஏன் அதைவிட ஆயிரம் மடங்கு கண்ணியத்திற்கும், உண்மைக்கும் உரித்தானவர்களான இறைத்தூதர்களை ஏற்று அவர்களின் உபதேசங்களை பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து ஏற்பதே பகுத்தறிவாகும்.

விருந்துடைய குறிப்பிட்ட தேதிக்கு முன்னால் விருந்து கொடுப்பவரின் வீட்டுக்குப் பொயே விருந்துடைய ஏற்ப்பாட்டைக் கண்ணால் பார்க்க முடியவில்லையே. இந்த நிலையில் மரணத்திற்குப் பின்னுள்ள மறுமையின் வாழ்க்கையை இவ்வுலகிலிருந்து கொண்டே கண்ணால் பார்க்க முற்படுவது எவ்வளவு பெரிய மதியீனம் என்பதைச் சிந்தியுங்கள்.

THANKS : http://www.readislam.net

மேலும் கண்ணால் கண்ட பின் ஏற்பதற்கு மனிதனுக்கு பகுத்தறிவு அவசியமில்லை. மிருகங்களுக்கு இருக்கும் ஜயறிவே தாரளாமாகப் போதும். இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவாளர்களா? அல்லது பார்த்தறிவாளர்களா அதாவது ஜயறிவாளர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

புகைப்பழக்கம்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.

சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் þல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் þருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் þவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு ‘சமூக விரோதி’ புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.

þறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?

þஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல  நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.

நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக þருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)

þன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள்.  (அல்குர்ஆன் 2:195)

உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)

மேலே கண்ட þறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?

மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக þருப்பது þஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.

புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது “புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே” என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட þதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.

THANKS : http://www.readislam.net

கொள்கையா? உறவா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று பல்வேறு மதங்கள் உலகில் இருப்பதை நாம் அறிவோம். அவற்றில் ‘இஸ்லாம்’ பல விஷயங்களில் தனித்தன்மை பெற்று விளங்குவதை அறிவுடைய எவரும் புரிந்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒன்றை இங்கே நாம் சுட்டிக்காட்டுகிறோம். பரம்பரை அடிப்படையில் ஒருவன் அல்லது ஒரு இனம் தன்னையோ அல்லது தங்களையோ உயர்வாகக் கருதிக்கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவே இல்லை. நடத்தையும், கொள்கையும் சரியாக அமையாத போது எவ்வளவு உயர்ந்தவரின் சந்ததியாக இருந்தாலும் அல்லாஹ் அந்த உறவுக்கு எந்த மதிப்பும் வழங்கமாட்டான் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாக நமக்குச் சொல்கின்றது. மிகச்சிறந்த நபிமார்களில் ஒருவராகிய நூஹ் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்துச் சொன்னபோது, அவர்களின் கொள்கையை மிகப் பெரும்பாலோர் ஏற்காதது போன்று அவர்களின் மகனும் ஏற்கவில்லை. இறுதியில் இறைவனை ஏற்காத கூட்டத்தை அல்லாஹ் அழித்துவிட முடிவு செய்து, அதை நூஹ் (அலை) அவர்களுக்கும் தெரிவிக்கிறான். வெள்ளப் பிரளயம் ஏற்பட்டபோது நூஹ் (அலை) அவர்கள் தன் மகனை சத்தியத்தின்பால் வருமாறு அழைக்கின்றார்கள். இறுதிவரை அவன் ஏற்கவே இல்லை. அவன் வெள்ளப்பிரளயத்தில் மூழ்கடிக்கப்படுகிறான். அப்போது பெற்ற பாசத்தின் அடிப்படையில், “இறைவா! என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்” என்று மகனைக் காப்பாற்றக் கோருகிறார்கள். அதற்கு அல்லாஹ், “உன் மகன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவனில்லை” என்று உறுதியாக கூறிவிடுகிறான். நபியின் மகனாக இருந்தாலும் ஓரிறைக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நபியின் மகனாக அல்லாஹ் ஏற்கிறான் என்பதை இதன் மூலம் அறியலாம். அதே நபியின் மனைவியும் இந்தக் கொள்கையை ஏற்காத காரணத்தால் நபியின் மனைவி என்று சலுகை காட்ட அல்லாஹ் தயாராக இல்லை. மாறாக நரகில் அவள் நுழையவிருப்பதாகச் சொல்லிக் காட்டுகிறான். இப்றாஹீம் (அலை) அவர்கள் மிகச் சிறந்த நபி. அவர்களின் தந்தை கொள்கையை ஏற்காத காரணத்தால், அவருக்குத் தனிச்சலுகை வழங்க அல்லாஹ் தயாராக இருக்கவில்லை என்பதையும் குர்ஆன் நமக்குப் போதிக்கின்றது! இது போன்ற ஏராளமான வசனங்களை குர்ஆன் நெடுகிலும் காணமுடிகின்றது. இதிலிருந்து பாடம் பெற்று, பரம்பரை அடிப்படையில் உயர்ந்து விடலாம் என்று எண்ணி ஏமாந்து விடாமல் நல் அமல்கள் மூலமும் ஓரிறைக் கொள்கையின் மூலமும் இறை நெருக்கத்தைப் பெறுவோமாக! ஆமீன்!

THANKS : http://www.readislam.net