இஸ்லாம்தளம்

மார்ச்3, 2009

உடல் உறுப்பு தானம் செய்யலாமா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒருவர் பணத்திற்காகவோ, பாசத்திற்காகவோ, அல்லது தர்மத்திற்காகவோ உயிருடன் இருக்கும்போது அல்லது இறந்த பின்போ தன்னுடை கண், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை பிற மனிதர்களுக்கு தானம் கொடுக்கலாமா? இதில் இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் பார்ப்போம்.

மனிதனின் உடற்கூறுகளை ஆராயும் மருத்துவத்துறையின் வளர்ச்சி சென்ற ஒரு நூற்றாண்டில் பல நூறு ஆண்டுகள் காணாத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மூலம் மனித இனம் பற்பல நன்மைகளை அடைந்துள்ளது. அதில் ஒன்று உடல் உறுப்புகளை மாற்றும் Transplantation முறையாகும்.

முழுமை பெற்ற இஸ்லாம் இவ்விதம் உடல் உறுப்புகளை உயிருடனோ, மரணித்த பின்போ தானமாக தரலாமா? போன்ற நியாயமான கேள்விகள் முஸ்லிம்களிடையே எழுந்துள்ளது. இதற்கு ஒரிரு வார்த்தைகளில் பதிலலிப்பது விவேகமாகாது. குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்தால் எக்காலத்திற்கும் உகந்தது இஸ்லாம் என்ற கருத்து அனைவரிடமும் நிலவும். எனவே நாம் இதனை சிறிது விளக்கமாகவே பார்ப்போம்.

வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்். அவன் நாடியதைப் படைக்கிறான்். இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குா்ஆன5:17)

வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! (அல்குா்ஆன24:64)

அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்் பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்் அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (அல்குா்ஆன2:29)

போன்ற திருக்குர்ஆன் வசனங்களின்படி அல்லாஹ் அனைத்திற்கும் அதிபதி என்பதை அறிகிறோம். இப்படிப் படைக்கப்பட்ட அனைத்தும் எதற்கு? ஏன் அல்லாஹ் படைத்தான்? என்ற வினாவுக்கு அல்லாஹ் பதிலலிக்கிறான்.

அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்் (அல்குா்ஆன 2:29)

நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்் இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்் அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்் நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (அல்குா்ஆன31:20)

இவ்விதமாக அகத்திலும் புறத்திலும் அருட்கொடைகளாக அளித்திருப்பவை தனது உடலிலும் உண்டு. வானங்களிலும் பூமிகளிலும் உள்ள அனைத்திலும் உள்ளன. அவற்றை பயன்படுத்திக்கொள்வது நமது கடமையாகும். அவற்றை செம்மையாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான்.

அவனே வானங்களிலுள்ளவை, பூமியிலுள்ளவை அனைத்தையும் தன் அருளால் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்் அதில் சிந்திக்கும் சமூகத்தாருக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. (அல்குா்ஆன45:13)

அல்லாஹ் படைப்புகளில் மிக உயர்ந்த படைப்பான மனித இனத்திற்கு மற்ற படைப்பினங்களை கட்டுப்படுத்தி தந்திருக்கிறான். அதே நேரத்தில் மனிதனுக்கு மனிதன் உபயோகமாக இருக்க வேண்டுமென்பதையும் இஸ்லாம் கூறாமலில்லை. அதன் அடிப்படையில்தான் தர்மங்கள் நல்லெண்ண உறவுகள் பந்தப்பினைப்புகளை அல்லாஹ் அவசியமாக நற்செயலாக நமக்கு காட்டுகிறான்.

நன்மையிலும்் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்். (அல்குா்ஆன5:2)

நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குா்ஆன3:92)

அவனது படைப்பில் எப்பொருளும் வீணுக்காகவோ விளையாட்டுக்காகவோ படைக்கப்படவில்லை என்பதை அலுத்தம் திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான்.

வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை.(38:27) இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்் காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு. (38:27)

என எச்சரிக்கையும் செய்கிறான். எனவே எதனையும் வீணாக்கவோ, உதாசீனப்படுத்தவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஒரு சிட்டு குருவியைக்கூட முறை தவறி கொள்வதை அல்லாஹ் விசாரிப்பான் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவர் ஒரு சிட்டுக்குருவியை அல்லது அதைவிடப் பெரிய பிராணியை அதற்குரிய முறையின்றி கொன்று விடுவாராயின் அதைக் கொன்றது குறித்து அல்லாஹ் அவரிடம் (கேள்வி) கேட்கவே செய்வான் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அதற்குரிய முறை என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அதை அவர் அறுத்து புசித்திட வேண்டும். அதன் தலையைத் துண்டித்து அதை(க்கொன்று வீணாக) வீசிவிடக் கூடாது என்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் அம்ர்பின் ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்: அஹ்மது, நஸயீ, தாரமி.

எனவே அல்லாஹ்வின் படைப்புகளில் எதனையும் உரிய முறையில் உபயோகப்படுத்துவதையே அல்லாஹ் விரும்புகிறான். உபயோகிக்க தகுதியுள்ள நிலையில் அதனை வீணாக்குவதை வெறுக்கிறான். அதனைப்பற்றி கேள்வியும் கேட்பான் என்பது தெளிவாகிறது.

இதன் அடிப்படையில் இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் உயிருடன் உடல் உறுப்புகளை மாற்றுவது விஷயத்திலும், இறந்தவர்களின் உறுப்புகளை உயிருடனிருப்பவருக்கு தர்மம் செய்வது விஷயத்திலும் இஸ்லாம் காட்டும் வழியை நோக்கவேண்டும்.

நாம் வானங்களையும், பூமியையும், இவை இரணிடிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (அல்குா்ஆன15:85)

அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை. (அல்குா்ஆன30:8)

ஒரு மனிதன் இறக்கிறான் அவனைப் பொருத்த வரையில் அவனது தவணை முடிவடைகிறது. அவன் உடல் அமைப்பிலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையையும் அல்லாஹ் வைத்திருக்கிறான். எனவேதான் ஒருவன் இறந்த பின்பும் அவனது உறுப்புகள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை மீண்டும் உபயோகிக்கும்படியான உயிர் தன்மையுடன் இருக்கின்றன.

எனவே, இறந்து விட்டவரின் உடலிலுள்ள கண், சிறுநீரகம், இதயம் போன்றவை அக்குறிப்பிட்ட நேரத்திற்குள் இறந்தவரின் உடலிலிருந்து சரியான முறையில் பிரிக்கப்பட்டால் அதனை உயிருடன் இருப்பவர்களுக்கு பொருத்தி பயன் அடையலாம் என்பதை மருத்துவ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். அதனை செயல்படுத்தி வருவதையும் கன்கூடாக பார்க்கிறோம்.

அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன – ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்் அவர்களுக்குக் கண்கள் உண்டு் ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் – இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்் இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (அல்குா்ஆன7:179)

இதயங்களைக் கொண்டும், கண்களைக் கொண்டும், காதுகளைக் கொண்டும் நல்லுபதேசங்கள் பெறவேண்டும். அவ்வுறுப்புகள் மூலம் பெறாதவன் மிருகத்தைவிட மோசமானவன் என்பதை (7:179) வசனத்தின் கருத்தாக இருக்கிறது.

மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார் (அல்குா்ஆன5:32)

உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்் காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்்  எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பாிகாரமாகும்். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (அல்குா்ஆன5:45)

பலிக்கு பழி வாங்குவதைவிட அதனை மறந்து மன்னித்து விடுவதையே பெரும் தர்மமாகவும், பாவத்திற்கு பரிகாரமாகவும் காட்டும் இஸ்லாம், சமுதாயத்தில் வாழ தவணையுள்ளவர்களுக்கு தனது தவணைக்குப்பின் தனது உறுப்புக்குள்ள தவணையைத் தந்து வாழ வைப்பது எவ்வளவு சிறப்புக்குறியது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்் (அல்குா்ஆன67:2)

இவ்வசனத்தில் முதலில் மரணத்தையும், வாழ்வையும் என முதலில் மரணத்தை குறிப்பிடுகிறான். எனவே, ஒருவரின் மரணத்தின் மூலமும் அவரது அழகிய செயல் வெளிப்படுவதை அறியலாம். மரனமடைந்தவர் தனது உடல் உறுப்புகளை தேவையுடையோருக்கு கொடுப்பதன் மூலம் அழகிய செயல் செய்தவராகவே கணிக்கப்படுகிறார் என்பது தெளிவு.

உயிரோடு இருப்பவர்கள் தனது உறுப்புகளை தரும்போது தன்னைத்தானே அழித்துக்கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. உயிரோடி இருப்பவர் தனது உறுப்புகளை தருவதால் அவரது உயிருக்கு ஊறு விளையுமானால் அதனை இஸ்லாம் உண்மையாக கண்டிக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் உதவ நாடுகிறவர் வரம்பு மீறி தன்னை அழித்துக் கொள்ளக் கூடாது என்பதை அல்குர்ஆன் இப்படி கூறுகிறது.

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்். இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்். (அல்குா்ஆன2:195)

எனவே உயிரோடு இருப்பவர் இதயம் போன்ற ஒரு உறுப்புகளைத் தானம் செய்து தன்னை மாய்த்துக்கொள்ள இஸ்லாத்தில் இடமில்லை. இரு உறுப்புகளில் ஒன்றைத் தானமாக தந்து மற்றொன்றைக் கொண்டு எவ்வித ஊனமும் இடையூறுமின்றி வாழ முடியுமென்றால் கொடுப்பது தவறில்லை. மறு உறுப்பால் வாழ்க்கையில் அது வீணாகி அதன் மூலம் தனக்கு உயிர் வாழும் பிரச்சனை ஏற்படுமெனில், சந்தேகம் வந்தால் மற்றெவரின் உறுப்பை பெறவும் வாய்ப்பிருக்காது என நினைத்தால் இரண்டில் ஒன்றை தானமாகத் தருவதை இஸ்லாம் தடுக்கிறது.

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்் (அல்குா்ஆன17:36)

உனக்கு சந்தேகமானவற்றை விட்டுவிடு, உனக்கு சந்தேகமற்ற உறுதியான விஷயங்களில் பால் சென்றுவிடு என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரி)

eநிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான் (அல்குா்ஆன9:111)

என்ற இறைவசனப்படி மூமின்களின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அல்லாஹ்வின் அமானிதமாகும். அதனை விலை பேசுவதற்கு நமக்கு உரிமையில்லை. எனவே உறுப்புகளுக்கு பணம் வாங்குவது தடுக்கப்படுகிறது. ஒருவரின் எண்ணம் நிய்யத்தை பொருத்துதான் அவரது செயல்கள் கணிக்கப்படும் என்பதையும் நபி صلى الله عليه وسلم எடுத்துரைத்துள்ளார்கள்.

நபி صلى الله عليه وسلم கூறியதாக, எவரொருவர் மக்களிடம் இரக்கம் காட்டவில்லையோ அவரிடம் அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். (ஜாபிர் பின் அப்துல்லாஹ் رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:புகாரி, முஸ்லிம்)

பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுவோருக்கு வானில் உள்ளவர்கள் இரக்கம் காட்டுவார்கள். இப்னு உமர்  رَضِيَ اللَّهُ عَنْهُ  நூல்:திர்மிதீ, அஹமது)

தாகத்தால் வருந்திய நாய்க்கு உதவிய ஒரு தீய பெண்ணுக்கு பாவமன்னிப்பு அளிக்கப்பட்டது என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். மேலும் ஈரமான இதயமுள்ள பிராணிகளுக்கு உதவுவதாலும் நன்மையுண்டு என்றார்கள். (அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்:புகாரி, முஸ்லிம்

மேற்காணும் ஹதீஸ்களில் நபி صلى الله عليه وسلم அவர்கள் மனித இனத்தின்மீது முழுமையாக இரக்கம் காட்டுவதையே குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம்கள், மூமின்கள் மீது மட்டும்தான் இரக்கம் காட்டவேண்டும் என குறிப்பிடவில்லை. அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் அருளப்பட்ட இறுதி வேதம். நபி صلى الله عليه وسلم அவர்கள் முந்திய நபிகளைப்போல ஒரு இனத்திற்கோ நாட்டுக்கோ அனுப்பப்படவில்லை. நபி صلى الله عليه وسلم அவர்கள் அகில உலகிற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்கள்.

ஆனால், அதே நபி صلى الله عليه وسلم அவர்கள் மரணித்து விட்டவரின் உடல் எலும்பை முறிப்பது அவர் உயிருடனிருக்கையில் எலும்பை முறிப்பது போலாகும். எனவும் கூறினார்கள். (ஆயிஸாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஅத்தா, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)

இந்த நபி மொழியில் எவ்வித நலனும் கருதாமல் மரணித்தவரை ஊனப்படுத்தவும், வெறுப்பை, குழப்பத்தை ஏற்படுத்தவும் செய்யப்படும் செயலாக செய்வதையே தடுத்தார்கள். உதாரணமாக உஹது போரில் மரணித்த ஹம்ஸா رَضِيَ اللَّهُ عَنْهُ  அவர்களை ஹிந்தா என்ற பெண்மனி அசிங்கப்படுத்திய  செயல் போன்றவற்றையே தடுத்தார்கள் என கொள்ளவேண்டும்.

வளரும் எதிர்கால  சமுதாய நலன் கருதி மருத்துவத்துறையில் ஆபரேஷன், போஸ்ட்மார்டம் போன்றவற்றால் பற்பல உண்மைகள் உலகுக்குத் தெரிய வருகிறது. மரணித்தவரின் உண்மைக் காரணங்கள் தெரிய வருகின்றன. எனவே அல்லாஹ்வின் பொருத்தம் நாடி உலக ஆதாயங்களை எதிர்பாராமல் ஒருவர் தர்மத்திற்காகவோ, மனிதாபிமானத்திற்காகவோ  தனது உறுப்புகளை பிர மனிதர்களுக்கு கொடுப்பது இஸ்லாமிய அடிப்படையில் கூடும். உயிரோடு இருப்பவர்கள் தனது உயிரை பாதிக்காத வகையில் தேவையுள்ளவர்களுக்கு  தானம் கொடுப்பது கூடும். அவ்விதம் தானம் செய்பவரின் எண்ணம் நிய்யத்துக்கொப்ப அல்லாஹுவிடம் அவர் கூலி பெறுவார்.

அல்லாஹ்் உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்் இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான். (அல்குா்ஆன6:3)

ஒரு சிலர் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் ஊனத்துடன் மறுமையில் எழுப்பபடுவார்கள் என ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் மறுமையில், மனிதன் இறை கட்டளைப்படி வாழாத காரணத்தால் அவர்கள் குருடர்களாக செவிடர்களாக எழுப்பப்படுவவார்கள், மறுமையில் அவர்களின் கண் பார்க்கும் சக்தியை இழந்து விடும் என்பது போன்ற பல கருத்துகளை குர்ஆன் எடுத்துக் கூறுகிறது. எனவே இப்புற உறுப்புகளுக்கும், மறுமையில் எழுப்பப்படும் நிலைக்கும் வேறுபாடு உள்ளது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

சிலர் உடல் அல்லாஹ்வுக்கு சொந்தம், இதனை பிறருக்கு கொடுக்க இவனுக்கு உரிமையில்லை. அவ்வுடலை மண்ணுக்கே சொந்தப் படுத்த வேண்டுமென மார்க்க தீர்ப்பு அளிக்கின்றனர். உண்மையில் உடல் மட்டுமல்ல உயிர், உடல், செல்வம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை. அல்லாஹ்வுக்கு சொந்தமான செல்வத்தை தேவையுடையோருக்கு கொடுப்பதை அல்லாஹ் வரவேற்று வலியுறுத்துகிறான் எனில் அவனுக்குச் சொந்தமான உடல் உறுப்புகளையும் தேவையுடைவர்களுக்கு கொடுப்பதை அல்லாஹ் வரவேற்கவே செய்வான் என்பதில் ஐயமில்லை. மேலும் அவ்வுறுப்புகள் அதன் தவணை முடிந்ததும் மண்ணில்தான் போய்ச்சேரும் என்பதிலும் ஐயமில்லை.

மணங்கள் ம‎ணக்க மனங்கள் மாறட்டும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை (கடமையெனக் கருதி) ம

னமுவந்து அளித்துவிடுங்கள்! ஆயினும், அந்த மஹ்ரிலிருந்து ஒரு பாகத்தை அவர்கள் உங்களுக்கு மனமுவந்து விட்டுக் கொடுத்தால், அதனை நீங்கள் தயக்கமின்றி அனுபவிக்கலாம். ல்குர் ஆன்:4-4

பிற மதங்களில் þறைவைன [þறைவனின் பொருத்தத்தை] அடைதலை முத்தி நிலை என்கிறார்கள். þதனை அடைய ஆசைகளை துறத்தல் ேவண்டும். þல்லற வாழ்க்கையை வாழ்ந்தோ வாழாமலோ அனைத்தையும் துறந்த பின்பே ஆண்டவனை அடைய முடியும்ன்கிறார்கள்.

þயற்கை மார்க்கமான þஸ்லாத்தில் துறவரம்ன்பதே þல்லை. திருமணம் செய்யாதவர் நம்மை சார்ந்தவர் அல்ல என நபிகள் நாயகம்[ஸல்] சொல்லியிருக்கிறார்கள். முற்றும் துறந்த [எகூறிக்கொள்ளும்] மத போதகர்கள், மத குருக்கள், அப்பாக்கள் ஆடிய ஆட்டங்களை கண்டு பத்திரிக்கை வடித்த செய்திகள் பல பக்கங்களை நிறைத்தன. þன்னும் வந்து கொண்டுதான் þருக்கின்றன.

மனிதனின் þயற்கை உணர்வுகளை மதித்து  குடும்ப வாழ்க்கையை ஒரு þபாதத்தாக [வணக்கமாக] þஸ்லாம் கூறுகிறது. ஆனால் அப்படிப்பட்ட மணவாழ்க்கையின் தொடக்கமான திருமணத்தில் உலவும் பழக்வழக்கங்கள் நம்மை மலைக்க வைப்பதோடு கலங்கவும்வக்கின்றன.

“வரதட்சணை, கைக்கூலி, வச்சுகொடுத்தல், சீர்வரிசை, பலகாரங்கள், நகைகள், வாகனங்கள், பரோட்டாக்கள் மற்றும் பிரியாணிகள்“ என்ற வழக்கமான வழியிலிருந்து மாறி வெளிநாடு செல்ல விசா  என்ற முறை ஏற்பட்டது. þப்போதுவளிநாட்டில் வசிக்கும் “பசையான” ெபற்றோர்கள் தங்களது மக்களை மணந்தால்  ெவளிநாட்டு PR [வெளி நாட்டில் தங்கும் நிரந்தரவாச  தகுதி] எ‎‎ன்ற ேபரம்பசுதலும்  நம் காதுகளில் விழாமல் þல்லை. ஆடம்பரம், பகட்டு, படோடபம் þவைகள்தான் þன்றைய திருமணங்களில் காணப்படுகி‎‎ன்றன.ன்று நாயகத்தின் தோழர் நறுமணம் பூசி வருவதைக் கண்ட நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள், என்னண்பரே தங்களிடம் நறுமனம் வீசுகிறதே என கேட்க , நேற்று தான் னக்கு திருமணம் நடந்தது என கூறுகிறார். நாயகத்தின் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்த தோழர்கள் நாயகத்திடம் கூட கூறாமல் எளிமையாக திருமணம் செய்தார்கள். திருமணங்களில் ெபரும்பாலும் பண பொருத்தத்திற்கே முன்னுரிமைளிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை நான்கு விசயங்களுக்காக மணமுடிக்கலாம், ஆனால் அப்பெண்ணிடம் உள்ள மார்க்பற்றுக்காக மணமுடியுங்கள் என நபிகள் நாயகம்[ஸல்] நவின்றுள்ளார்கள். ஆனால் þன்றோ மணமகளின் பெற்றோரிடம் உள்ள நாணயத்திற்காக [பணத்திற்காக] மணமுடிக்கலாம் என கருதுகிறார்கள்.

மணமக்களின்

பற்ேறார்கள் ,தங்களி‎‎ன் சம்பந்திமார்கள் தங்களைவிட  அதிகமான அந்தஸ்தில்   þருக்க ேவண்டும்ல்லது தங்களுக்கு சமமான அந்தஸ்தில் þருக்கவேண்டும் என கருதுகிறார்கள்.

நமது [நபிவழி] சகோதரர் ஒருவர் த

ன் மகளுக்கு வசதியான மாப்பிள்ளையை தேடி அதற்குரிய ‘விலையை’ கொடுத்து மகளின் நிலைைய  [தன்னுடைய நிைலயயும் தான்] உயர்த்த நினைத்தார். ஆனால் தன் மகள், மணமான சில தினங்களியே மணமகனின் குடும்ப குருவின் கால்களில் விழ ேவண்டிய நிலை !!! பல ேவளைகளில் மணமகன் சம்மதித்தாலும் ெபற்றோர் சம்மதிப்பது þல்லை.

ல்லாஹ் நினைத்தால் ????????????????.

மாட மாளிகைகளில் சுவையான பல வகையான உணவு உண்ட பணக்காரர்கள், ஓரிரு வினாடிகளில் ஏற்பட்ட மாற்றத்தால் பழைய செய்திதாள்களை கையில் ஏந்தி உணவுக்காக வரிசை பிடித்து நின்ற காட்சிகளை மறந்து விட்டோம் [ குஜாராத் நில நடுக்கம் ].

வளிநாட்டில் நிரந்த வாச தகுதியுடன் நிலையான வருமானத்துடன் வாழ்ந்த மனிதர்களின்  ேவலை þடங்கள்  þருந்த  அடையாளம்  கூட  காணப்படவில்லை

[ ந

ியுயார்க் உலக வர்த்தக கட்டிடங்கள் ].

வளிநாட்டில் கொடிகட்டி வாழ்ந்த பல வியாபாரிகள் þன்று அந்த நாடுகளுக்கே செல்ல முடியாத நிலைமை [ முன்னாள் சைக்கோன்]

எடை முறை புழக்கத்திற்கு முன்னாள் ,ஒரு பிடி கோழி þந்த விலை [ஒரு கையால்வ்வளவு கோழியை பிடிக்கமுடியுமோ அந்த அளவு] எ

ன்ற போது கோழியின் ஒரு காைலமட்டும் பிடித்து வியாபாரம் செய்த வியாபாரிகளை மறந்து விட்டோம் [முன்னாளய பர்மிய வியாபாரிகள்].

பணத்தை மட்டுமே கணக்கு ேபாட்டுல்லாஹ்வி

ன் பொருத்தத்தை þழக்கும் மனிதர்களே சிந்தியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு கொடுத்துள்ளவற்றை நினைவு கூறுங்கள்.

பிள்ளைகளை

பெரிய காசு செலவு செய்துளாக்கி þருக்கிறோம். அதற்காகத்தான்… குழந்தைகளுக்கு செய்த கடமைக்கான கூலிைய  þவ்வுலகிலேயே எதிர்பார்க்கிறோமா? ஏன்? அதற்கான கூலியை அல்லாஹ் கொடுக்கும்வரை பொறுமை þல்லையா?ல்லது கொடுப்பன் என்ற நம்பிக்கை  þல்லையா ? எந்த கோணத்தில் பார்த்தாலும் ஒன்று மட்டும் தெரிகிறது. நம்முடைய மனபோக்கு மாற ேவண்டும். அப்படி மாறிவிட்டால் எத்தனையோ ஏழை குமருகள் நரை விழாமல் கரை சேர முடியும்.

ல்லாஹ் நம்முடைய ஒவ்வொரு செயலையும் பார்த்து கொண்டு þருக்கிறான். அவனது பொருத்தமே முக்கியம்

ன்ற மன மாற்றம் அைனவருக்கும் வர ேவண்டும். அத்தகையன மாற்றத்தை அைனவருக்கும் கொடுக்க அல்லாஹ்விடம் துவாச் செய்வோமாக. ஆமீன்.

“பித்அத் ஓர் ஆய்வு”

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாகி வைக்கக்கூடிய ணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா?  மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்ககூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் அவர்களுக்கிடயில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (அல் குர்ஆன் 42:21)

(நபியே நீர்கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியுலுள்ளவற்றையும்  நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக ருக்கிறான் (அல்குர்ஆன் 48:16)

ந்த இரண்டு குர்ஆன் வசனங்களும், அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொந்தம்  அவனே அனைத்தையும்   அறிந்தவனாக இருக்கிறான். ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது. அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்கமாக்கப்பட்டதை. அதாவது புதியவை ஒன்றை ஏற்படுத்தி பித்அத்துக்களை  எடுத்து நடப்பவர்கள்  அல்லாஹ்வின்  கட்டளையை  மீறி  செயல்படுகிறார்கள்.

நபி صلى الله عليه وسلم அவர் கூறுகிறார்கள்:- எனக்குமுன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களூம், தோழர்களும் ருந்திருக்கிறார்கள்.  அவர்கள் அந்தந்த நபியுனுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்தாகச் சொல்வார்கள்; அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ, அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான்.எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும்  மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது. என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (ப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ முஸ்லிம்)

வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி صلى الله عليه وسلم அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி صلى الله عليه وسلم அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள்  கூறினார்கள். (ப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)

உங்களிடையே ரண்டை விட்டுச்செல்கிறேன் அவற்றைப்  பற்றிப் பிடித்திருக்கும்  காலமெல்லாம்  நீங்கள்  வழி தவறவே  மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்,இரண்டு எனது வழிமுறை. (மாலிக் ப்னு அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ முஅத்தா)

அன்னை ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவித்துள்ளார்கள்:- “எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்:- “வெள்ளை  வெளேர்  என்ற  நிலையில்  உங்களை  நான்  விட்டுச் செல்கிறேன். அதன் ரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர  வேறு  யாரும்  வழி தவறவே  மாட்டார்கள். (உமர்رَضِيَ اللَّهُ عَنْهُநூல்:ரஜீன்)

மக்கா மாநகரம் வெற்றிக்  கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் அங்கு புறப்பட்டனர், குராவுல் கமீம் என்ற டத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி صلى الله عليه وسلم அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்கள் அதனைப்பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன்பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக  நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُமுஸ்லிம்,திர்மிதீ)

எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு டமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது  என நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள். (அலிرَضِيَ اللَّهُ عَنْهُ அபூதாவூது,நஸயீ.)

நபி صلى الله عليه وسلم அவர்கள், நபிதோழர் பராஉபின் ஆஜிப்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களுக்கு, ரவில் படுக்கப்  போகும் பொழுது ஒதும் துஆ  ஒன்றை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி صلى الله عليه وسلم  அவர்கள்,………..வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த………என்று கற்றுக்கொடுத்ததை,  நபித்தோழர் அதை………வ ரசூலி கல்லதீ…….என்று ஓதிக்காண்பித்த போது, இதைக் கேட்டவுடன் நபி صلى الله عليه وسلم அவர்கள், இல்லை”வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த…..” என்று ஒதுமாறு கூறினார்கள். (புகாரீ)

[வ நபிய்யி கல்லதீ என்பதை ரசூலி கல்லதீ என்று சொன்னதையே நபி صلى الله عليه وسلم அவர்கள் அனுமதிக்காமல், அதை கண்டித்து திருத்தி ருக்கும்போது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை, அது அழகானதுஎன்று கூறிச்செய்ய முற்பட்டால் அவருடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திக்ககடமைப் பட்டுள்ளோம்.] மேற்காணும் குர்ஆன் வசனங்களும் நபிصلى الله عليه وسلم அவர்களின் போதனைகளும், மார்க்கத்தில் புதிதாக ஒன்றை இணைக்க முடியாது, என்பதை நடுநிலையோடு சிந்திக்க வேண்டுகிறோம்.

னி பித்அத் விசயமாக நபித்தோழர்களுடைய அறிவுரைகளைப் பார்ப்போம்.

நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகின்றான், அல்லாஹ்வுடைய ரஸுல்صلى الله عليه وسلم அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன் நீங்களோ அபூபக்கர் சொன்னார், உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன். என ப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.

நான் பின்பற்றுகிறவனே அல்லாமல்,  புதிதாக உண்டாக்குகிறவன் அல்ல. நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னை திருத்துங்கள் என அபூபக்கர் சித்தீக் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறுகிறார்கள்.

ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக “திக்ரு” ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களை பார்த்து ப்னு மஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள், “நான் நபி صلى الله عليه وسلم அவர்களின் தோழர்களின் ஒருவனாக இருந்திருக்கிறேன். நபி صلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில்  யாரும் இவ்வாறு திக்ரு,ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித்தராத  பித்அத்தைச்  செய்கிறீர்கள்” என்று  கூறி  அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி صلى الله عليه وسلم அவர்கள் கற்றுக்கொடுத்தபடி சொல்வதோடு” வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ் “என்று ணைத்துக்கொண்டார். இதனை பித்அத் என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள்.

“பித்அத் அணைத்தும் வழி கேடுகள்தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது(ஹஸன்) என்று கருதினாலும் சரியே” என ப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.

“பின்பற்றுபவனாக ரு.புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே” என இப்னு அப்பாஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ கூறியுள்ளார்கள்.

“நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும்  செய்யாதீகள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபாرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவித்துள்ளார்கள். “அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபிصلى الله عليه وسلمஅவர்களின் நடை முறைகளைக் கொண்டும் மார்க்கத்தை போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டுவிடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.” என தாபியீன்களின் தலை சிறந்தவரும்,சீரிய கலீபஃபாவுமான ப்னு அஜீஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். இதற்கு மேலும் இது விசயத்தில் சந்தேகிப்பவர்கள் மறியாதைக்குறிய இமாம்கள் கூறுவதைப் பார்ப்போம்.

மாம் அபூஹனிபா (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபிதோழர்களின் நடை முறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய்
ருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்தும் பித்அத்துக்களும் வழிகேடுகளேயாகும்.

மாம் மாலிக் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
“மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு பித்அத்து ஹஸனா என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன் நபிصلى الله عليه وسلم அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்து  விட்டார்கள் என்றே கருதுகிறான்.எனேன்றால், அல்லாஹ், “அல்யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்……என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக
ல்லாதது
இன்றும் மார்க்கமாக இருக்க முடியாது.

மாம் ஷாபிஈ (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி,  அதை பித்அத்து ஹஸனா(அழகிய பித்அத்து) என்று  சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே  உண்டாக்கி விட்டான்.

மாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) கூறியுள்ளார்கள் :-
எங்களிடம் சுன்னாவின் அடிப்படையாவது:ரசூல்صلى الله عليه وسلم அவர்களும், அவர்களது தோழர்களும்
ருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துக்களை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும். நூல்:அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

மேற்கூறிய நான்கு மாம்களின் மணியான உபதேசங்களுக்கு நேர் முரணாக பித்அத்துக்களில் நம்மவர்கள் மூழ்கி கிடக்கிறார்கள்.மேலும் பித்அத்துக்களை வகை வகையாக தரம் பிரித்துக் கொண்டு தாங்களும் குழம்பி போய், மக்களையும் குழப்புகிறார்கள்.

கால மாறுதலினால், விஞ்ஞான வளர்ச்சியினால், ஏற்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை காரணமாகக் காட்டி, வையெல்லாம் நபிصلى الله عليه وسلم அவர்கள் காலத்தில் இல்லாதவை தானே! புதுமைகள் தானே! பித்அத்து ஹஸனா தானே! என்று நியாயம் கற்பித்து மார்க்கத்திலும் புதுமைகளை நுழைக்க முற்படுகிறார்கள்.

உதாரணமாக நவீன வாகனங்களை, கட்டிடங்களை, கடிகாரங்களையெல்லம் பயன்படுவதை பித்அத் என்கின்றனர்.வையெல்லாம் தவிர்க்க முடியாது என கூறி பித்அத்து ஹஸனா என்கின்றனர். ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இக்கூற்றில் உள்ள தவறை உணர்ந்து கொள்ள முடியும். நபிصلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ் விடமிருந்து வஹீ மூலமாகவும், அவனது அங்கீகாரத்தின் மூலமாகவும் போதித்த மார்க்கத்தில், மனித அபிப்பிராயத்தில் நல்லதாகத் தெரியும் விஷயங்களை புகுத்துவதையே பித்அத்து என்று  கண்டித்துள்ளார்களே அல்லாமல், இவையல்லாத உலகக் காரியங்களில் உலகிலேயே நிதர்சனமாக இலாபத்தை பெறும், அதே சமயம் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண் இல்லாத நவீன கண்டுபிடிப்புகளை பற்றி பித்அத் என்று கூறவில்லை. இதற்கு ஆதாரமான ஹதீஸ்களைப் அடுத்து பாருங்கள்.

நபிصلى الله عليه وسلم அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில்,அங்கு நடந்து வந்த ஒரு விவசாய முறையைத் தடுத்து விட்டார்கள். அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. து விசயம் நபிصلى الله عليه وسلم அவர்களுக்குத் தெரிந்ததும், நானும் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்களின் மார்க்கம் பற்றி கட்டளையிடுவேனாயின் அதை ஏற்று நடங்கள். அன்றி, நான் எனது ஆலோசனையைக் கொண்டு ஒன்றைக் கூறினால், உங்கள் நோக்கப்படி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தனர்.  (ராபிஃ ப்னு கதீஜ்رَضِيَ اللَّهُ عَنْهُமுஸ்லிம்)

தே போல் விடுதலைப் பெற்ற பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ தனது அடிமைக் கணவர் முகீஸைرَضِيَ اللَّهُ عَنْهُ வேண்டாம் என்று அறிவித்தபோது, முகீஸின்رَضِيَ اللَّهُ عَنْهُ மண வேதனையைக்கேட்டு, நபி(சல்) அவர்கள் வருந்தி பரீராவைرَضِيَ اللَّهُ عَنْهُ முகீஸோடுرَضِيَ اللَّهُ عَنْهُ வாழும்படி சொன்னதற்கு, இது மார்க்க கட்டளையா? என்று பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ கேட்டனர். எனது சிபாரிசு என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். நபிصلى الله عليه وسلم அவர்களின் சிபாரிசை பரீராرَضِيَ اللَّهُ عَنْهُ ஏற்றுக் கொள்ளவில்லை. நபிصلى الله عليه وسلم அவர்களும் அதற்காக அவர்களை கண்டிக்கவில்லை. (ப்னு அப்பாஸ்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,அபூதாவூத்,நஸயீ,திர்மிதீ)

பத்ருப்போரின் போது முஸ்லிம்கள் தங்கள் முகாமை எந்த டத்தில் அமைத்துக்கொள்வது என்ற விசயத்தில், நபிصلى الله عليه وسل அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றமாக வேறு இடத்தை ஹப்பாப் இப்னுல் முன்திர் என்ற நபித்தோழர் தேர்தெடுத்து, இது முகாம் அமைப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று சொன்ன போது அதை நபிصلى الله عليه وسلم அவர்கள் ஏற்று தன் கருத்தை மாற்றிக்கொண்டார்கள். காரணம் நபிصلى الله عليه وسلم அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடத்தில் தான் முகாம் அமைக்க வேண்டுமென்பது இறைக்கட்டளை அல்ல. இதை நபிصلى الله عليه وسلم அவர்கள் தன் கருத்தை மாற்றிக்கொண்டதன் மூலம் விளங்க முடிகிறது.

மேற்காணும் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து உலக காரியங்களிலிருந்து நிதர்சனமாக பலனைப்பெறும் விஷயங்களை செய்வது பித்அத்து ஆகாது. விபரம் அறியாதவர்களே வற்றை பித்அத் என்று கூறுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.

பித்அத் போல் தோன்றும் காரியங்கள்:-

அபூபக்கர் சித்திக்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் காலத்தில் குர்ஆன் ஒரே நூலாக ணைக்கப்படது. உதுமான்رَضِيَ اللَّهُ عَنْهُ காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டது. குர்ஆனை எளிதாக ஓத அரபி லிபியில் அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது. உமர்رَضِيَ اللَّهُ عَنْهُஅவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை மீண்டும் ஜமாத்தாக ஆக்கியது. இவற்றை ஆதாரமாக காட்டி, இவற்றிற்கு பிஅத் ஹஸ்னா  என்று பெயரிட்டு பித்அத்தை நியாயப்படுத்த முயல்கின்றனர். அறிவாளிகளும் இவற்றில் தடுமாறவே செய்கின்றனர். எனவே இவற்றை நுட்பமாக அராய்ந்து விளங்குவோம்.

குர்ஆன் ஒரே நூலாக ணைக்கப்படுவது:-

நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்திலேயே குர்ஆனின் முதல் அத்தியாயத்திலிருந்து 114 ம் அத்தியாயம் வரை முறையாக நபிصلى الله عليه وسلم அவர்களாலேயே கோர்வை செய்யப்பட்டன என்பதே உண்மையாகும். புதிதாக சில வசனங்கள் றங்கியவுடன் நபிصلى الله عليه وسلم அவர்கள் அவற்றை ஓதிக்காட்டி இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்திற்கும், இன்ன வசனத்திற்கும் இடையில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாகக் கூறி அவ்வாறே பதிவு செய்யப்பட்டன.

ஒவ்வொரு அத்தியாயத்தினுடைய பிஸ்மி முதற்கொண்டு நபிصلى الله عليه وسلم அவர்களின் கட்டளைப்படியே எழுதப்பட்டன. 9ம் அத்தியாயமான சூரத்துத் தவ்பாவிற்கு பிஸ்மி எழுதும்படி நபிصلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிடவில்லை.ன்று வரை பிஸ்மி எழுதப்படாமலே இருக்கிறது. இன்று யாரும் அதுவும் ஒரு அத்தியாயம் தானே பிஸ்மி தவறுதலாக விடப்பட்டு இருக்கின்றது என்று கூறி 9ம் அத்தியாயத்திற்கு பிஸ்மி எழுத முற்ப்பட்டால் அது பித்அத்தே ஆகும். ஆக மார்க்க அடிப்படையில்  குர்ஆனில் எவ்வித கூடுதல்,குறைதல் ஏற்படவில்லை, என்பதே உண்மையாகும்.

நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில் நிறைவு செய்யப்பட்டு,  நபித் தோழர்கள் சிலர் சிலரிடம் இருந்த சில வசனங்கள்  அனைத்தயும் அபூபக்கர் சித்திக்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களின் ஆட்சி  காலத்தில் ஒன்று திரட்டப்பட்டு ஒரே நூலாக ஆக்கப்பட்டது. உஸ்மான் رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டன. இதனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களிலோ அவற்றின் கருத்துக்களிலோ புதிதாக ஒன்றும் இணைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். முறையோடு சிந்த்திப்பவர்கள்  இதனை மறுக்க மாட்டார்கள். இதே போல் அன்று தோலிலும்,எழும்புத் துண்டுகளிலும் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் இன்று அழகிய காகிதத்தில் எழுதப்படுகின்றன.

தற்கு மேலும் முன்னேறி குர்ஆன் வசனங்கள் இனிமையான குரல்களில் பதிவு செய்யப்பட்டு இன்று இண்டர்நெட்டில் மிக எளிதாக பலமொழிகளில் அதன் விளக்கத்தையும், குறிப்பிட்ட் ஹதீஸ்களை  விபரமாக தெளிவாக பெறலாம். எனவே அவற்றையெல்லாம் பித்அத் எனச்சொல்வது, நபிصلى الله عليه وسلم அவர்கள் எவற்றை பித்அத் என்று குறிப்பிட்டார்கள் என்பதை முறையாக விளங்கிக் கொள்ளாததேயாகும்.

உஸ்மான்رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டதின் நோக்கம்,பரந்து விரிந்த ஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கு முறையாக கோர்வை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைத்து, அவற்றை அவர்கள் பார்வையிட்டு  விளங்கிச்  செயல்  பட வேண்டும்  என்பதேயாகும்.  அதல்லாமல்,  நபிصلى الله عليه وسلم அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, மறுமையில் இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுத்தும் மார்க்க காரியங்களைப் போல் செய்யப்பட்டது அல்ல. பரகத் உண்டாகும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டதும் அல்ல.எனவே இச் செயலையும் பித்அத் என்று குறிப்பிடுவது அறியாமையாகும்.

குர்ஆன் நபிصلى الله عليه وسلم அவர்களுடைய காலத்தில், குறிகள்ல்லாமல் எழுதப்பட்டு நடை முறையில் இருந்து வந்தது.நபிصلى الله عليه وسلم அவர்களது காலத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி,அஜமி  (அரபி அல்லாதவர்கள்)களும் குர்ஆனை ஓதும் நிலை ஏற்பட்டது.எனவே அவர்கள் எளிதாகவும், முறையாகவும் ஓதி விளங்கி, செயல்படும் நோக்கத்தோடு குர்ஆனுக்கு அகர, இகர,உகர குறிகள்  இடப்பட்டன. உண்மையில்இது அரபி லிபியில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றமே யல்லாமல் மார்க்கத்தில் ஏற்பட்ட அல்லது குர்ஆனில் ஏற்பட்ட ஒரு புதுமை (பித்அத்) அல்ல.அரபி தெரிந்தவர்,ஓர் அரபி குர்ஆனை எப்படி ஓதுகின்றாரோ,அதை எப்படி விளங்கி செயல்படுகிறாரோ,அதே போல் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஓர் அஜமி (அரபி அல்லாதவர்) அந்த குறிகள் இடப்பட்ட குர்ஆனை ஓதவும், விளங்கிச் செயல்படவும் செய்கிறார்.எனவே,  நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதில் எவ்வித மாற்றமும் இதனால் ஏற்படவில்லை. ஆகவே இதனையும் பித்அத் என்று கூறுவது தவறேயாகும்.

வ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பின் கலீபாக்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்ப்பட்ட இந்த நடை முறைகளை ஆதாரமாகக் காட்டிபித்அத் ஹஸனாவை நியாயப்படுத்த யாரும் முற்பட்டால் அவர்களுக்கு நாம் கூறும் இன்னொரு விளக்கம். நபி صلى الله عليه وسلم அவர்கள் எனது ஸுன்னத்தையும், நேர்வழி நடந்த எனது கலீபாஃக்களின் சுன்னத்தையும், பற்றிப் பிடித்துகொள்ளுங்கள் என்று கருத்துப்பட வரும் ஸஹீஹான ஹதீஸ் ஒன்று காணப்படுகின்றது.இதில் நபி صلى الله عليه وسلم அவர்கள் எனது ஸுன்னத்து என்று குறிப்பிட்டது வஹீயின் தொடர்போடு இருந்த நபி صلى الله عليه وسلم அவர்களுடைய சொல், செயல்,அங்கீகாரம் ஆகும்.

நேர்வழி நடந்த கலீபாக்களின் ஸுன்னத்து என்று குறிப்பிட்டது, நபி صلى الله عليه وسلمஅவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு மாற்றமில்லாத கலீபாக்களின் நடைமுறையாகும்.ந்த அடிப்படையில், கலிபாக்களுடைய இச்செயல்களுக்கு நபிصلى الله عليه وسلم அவர்களின் ஒப்புதல் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது. மேலும், அந்த நடவடிக்கைகள் நபி صلى الله عليه وسلم அவர்களின் சொல்,செயல், அங்கீகாரத்திற்கு முரணாக இல்லை என்பதும் தெளிவான விஷயமாகும்.

ந்த நிலையில், பின்னால் வந்தவர்கள், கலீபாக்களின் இந்த நடவடிக்கைகளை “பித்அத் ஹஸனாவிற்கு ஆதாரமாக காட்டி, இவர்கள் மார்க்கத்தில் புதுமைகளை உண்டாக்க (பித்அத்) இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? கலீபாக்களின் நடைமுறைகளுக்கு மேலே உள்ள ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போல் இவர்களின் நடைமுறைகளுக்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை என்பதே உண்மையாகும்.

மேலே நாம் பார்த்த விளக்கங்கள் எந்த வகையிலும் மார்க்கத்தில் பித்அத் ஒன்றை உண்டாக்க  முடியாது! உண்டாக்கக் கூடாது! தற்கு மேலும், புதிய புதிய விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு வகை வகையாக பிரித்திக்கொண்டு, பித்அத்தை நியாயப்படுத்த முற்படுவது மார்க்க முரணான செயலே என்பதில்  எவ்வித ஜயமும் இல்லை. ஆதத்தினுடைய சந்ததிகளை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்க்க ஷைத்தான் பயன்படுத்தும் இரண்டு மிக முக்கியமான பயங்கர ஆயுதங்கள் ஷிர்க்கும், (இணைவைத்தல்) பித்அத்து (மார்க்கதில் புதுமுமை)களேயாகும். எனவே முஸ்லிம்கள் இவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்,”செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி வ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)

எனவே, பித்அத்தான (புதுமையான) செயல்களை வை அழகானவை தானே! என்று இவர்களே, தம்மைதாமே திருப்தி செய்துகொண்டு பித்அத்துக்களில், இவர்கள் மூழ்குவது ஷைத்தானின்  சூழ்ச்சியேயாகும்.அல்லாஹ் எச்சரிப்பது போல் நரகம் புக நேரிடும்.

உண்மையான உள்ளச்சத்துடனும், தெளிவான சிந்தனையுடனும் அறிந்த விஷயங்களில் அல்லாஹ்வை  அஞ்சி  முறையாக  மார்க்க  கடமைகளை  நிறைவேற்றி  வருபவர்கள்  மட்டுமே ஷைத்தானின் ந்த மாய வலைகளிலிருந்து, அல்லாஹ்வின் அருள் கொண்டு தப்பமுடியும். அந்த பாக்கியம் பெற்ற கூட்டதில் அல்லாஹ், அந்த பாக்கியம் பெற்ற கூட்டத்தில் அல்லாஹ், நம் அனைவரையும் இணைத்தருள்வானாக! ஆமின்!

உணரப்படாத தீமை: வட்டி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்றைய உலகில் பணம் அதிகமாக சேர்க்கவேண்டும் என்ற பேராசையால் பல தீமைகள் மனித வர்க்கத்தால் தீமை என்றே உணரப்படவில்லை. இவற்றில் சினிமா, வட்டி, வரதட்சனை போன்றவை முதலிடம் வகிக்கின்றன. இன்னும் சில தீமைகள் தீமை என்று தெளிவாக அறிந்தும் பணத்தின் மீதுள்ள பேராசையால் அரசாங்கமே அத்தீமைகளை அங்கீகாரம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானவை லாட்டரி, குதிரைப் பந்தயம், விபச்சாரம், குடி போன்றவையாகும். இத்தகைய அரசாங்கத்திற்கு சமூக நலனைவிட பணமே பெரிதாகத் தெரிகின்றது.

தனி மனிதன் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அது குற்றம், ஆனால் அரசாங்கமே அதை லாட்டரி, குதிரைப் பந்தயம் என்ற பெயரில் செய்தால் அது குற்றமில்லை. இரட்டை வேடம் குளறுபடி ஆகியவற்றின் மொத்த உருவமே இன்றைய அரசாங்கம்.

அரசாங்கமும் தனிமனிதனும்  வட்டியை ஒரு தீமையாகவே கருதுவதில்லை. ஆனால் சமுதாயத்தில் இது எவ்வளவு பெரிய சுயநலவாதிகளையும், பேராசைக்காரர்களையும், சகோதர மனப்பான்மை அற்றவர்களையும், பொருளாதார வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை யாரும் உணருவதில்லை ஏன்? அரசாங்கத்திற்கும் இது மிகப்பெரிய இழப்பாகும்.

இத்தகைய சமுதாயத் தீமையாகிய வட்டியை விட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் விலகாமல் இருப்பது மிகவும் வேதனைக்குறியதே. இதற்கு முக்கிய காரணம் பலர் இதை ஒரு பெரும் பாவமாகக் கருதவில்லை என்பதேயாகும். ஆனால் இறைமறையும், நபி மொழியும் இதை மிகப்பெரும் பாவமாகக் கருதி மனித குலத்தை எச்சரிப்பதை பாருங்கள்.

ஒட்டுமொத்தமாக எல்லா வட்டியும் ஹராம் என்று கூறும் வசனம்:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

ஈமான் கொண்டோரை! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக்கொண்டால்) வெற்றியடைவீர்கள். (3:130)

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لاَ يَقُومُونَ إِلاَّ كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُواْ إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَن جَاءهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىَ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللّهِ وَمَنْ عَادَ فَأُوْلَـئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ

யார் வட்டி(வாங்கித்) தின்றார்களோ, அவர்கள் (மறுமையில்)  ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல்  (வேறுவிதமாய்)  எழமாட்டார்கள்;  இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைத் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது  என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின்பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும்  தங்கிவிடுவார்கள். (2:275)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَذَرُواْ مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُّؤْمِنِينَ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையான மூஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278)

فَإِن لَّمْ تَفْعَلُواْ فَأْذَنُواْ بِحَرْبٍ مِّنَ اللّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُؤُوسُ أَمْوَالِكُمْ لاَ تَظْلِمُونَ وَلاَ تُظْلَمُونَ

இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது. நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள். (2:279)

உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை வட்டி தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா? உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் தவ்பா (இப்பாவத்திலிருந்து) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல்-முதல் உங்களுக்குண்டு. (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள்- நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.

மேலும் பலர் வட்டியும், வியாபரமும் ஒன்றுதான் என்றும் திருமறையில் வட்டியைப்பற்றி கூறிய வசனம் இக்காலத்திற்கு பொருந்தாது. அது அன்றைய நிலையில் உள்ள கொடும் வட்டியைத்தான் குறிக்கும். அதுவும் இரட்டிப்பு (கூட்டு) வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது என்று பணத்தின் மீது கொண்ட பேராசையால் தாமாகவே தாம் செய்யும் தவறுகளை நியாயப்படுத்திக் கொள்கின்றனர். இன்னும் சிலர் வட்டி வாங்குவது தான் பாவம். கொடுப்பது பாவமில்லை என்றும் வட்டியை அடிப்படையாகக் கொண்ட வங்கியில் வேலை செய்வது கூடும் என்றெல்லாம் கருதுகின்றனர்.

வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்

இறைவன்  நான்கு பேர்களை  சுவர்க்கத்திற்கோ  அல்லது  அதனுடைய  சுகத்தை  அனுபவிப்பதற்கோ விட மாட்டான். அவர்கள்

1.  குடிப்பதை வழமையாகக் கொண்டவர்கள்.

2. வட்டி வாங்கித் தின்றவர்கள்.

3. அநாதைகளின் சொத்தை அநியாயமாக அபகரித்தவர்கள்.

4. பெற்றோரைத் துன்புறுத்தியவர்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: ஹாக்கிம்)

வட்டி என்றால் என்ன?

بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் மனிதர்களுக்கு அருளப்பட்டதை (நபியே!) நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (16:44)

மேலே உள்ள இறைவசனத்தின் மூலம் குர்ஆனில் வரும் வட்டிக்கு விளக்கம் தர அங்கீகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்கள் அதைப்பற்றி கூறுவதை கீழே காண்போம். பலவித கொடுக்கல் வாங்கலில்  நபி(ஸல்) அவர்கள் இவையெல்லாம் கூடும், இவையெல்லாம் வட்டி (ஹராம்) கூடாது என்று கூறியுள்ளதால் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகாமல் எல்லா ஹதீஸ்களையும் கருத்தில் கொண்டு அதைப்பற்றி அறிய முற்படவேண்டும்.

வட்டி எல்லாம் தவணை முறையில்தான். கைக்குகை மாற்றும் பொருட்களில் வட்டி இல்லை. (உஸாமத்துபின் ஜைத் (ரழ) நூல்: புகாரி, முஸ்லிம்

தங்கத்தை தங்கத்திற்கு பதிலாகவும், வெள்ளியை வெள்ளிக்கு பதிலாகவும், மணிக்கோதுமையை மணிக்கோதுமைக்கு பதிலாகவும்,  தொலிக்கோதுமையை  தொலிக்கோதுமைக்கு பதிலாகவும், பேரிச்சம் பழத்தை பேரிச்சம் பழத்திற்கு பதிலாகவும், உப்பை உப்பிற்கு பதிலாகவும் சம எடையில், சம தரத்தில், கரத்திற்கு கரம் விற்றுக்கொள்ளுங்கள். இவ்வினங்கள்  பேதப்படுமானால் கரத்திற்கு கரம் நீங்கள் விரும்பிய பிரகாரம் விற்றுக் கொள்ளுங்கள். எவர் கூடுதலாகக் கொடுக்கவோ அல்லது கூடுதலாக வாங்கவோ செய்த போதினும் அது வட்டியாகும். விற்பவரும் வாங்குபவரும் சமமானவரே. (உபாதாத்துப்னிஸ்ஸாமித் நூல்: முஸ்லிம், திர்மிதி)

நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரழி) அவர்கள் பர்னீ வகையைச் சார்ந்த பேரீச்சம் பழத்தை கொண்டு வந்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இது உமக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று வினவினர். அதற்கு அவர்கள் என்னிடம் தரத்தில் குறைந்த பேரிச்சம் பழம் இருந்தது. அதில் நான் இரண்டு மரக்கால் கொடுத்துவிட்டு அதற்கு பகரமாக ஒரு மரக்கால் பர்னீ பேரிச்சம்பழம் வாங்கினேன் என்றார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் ஆ! இது வெளிப்படையான வட்டி முழுக்க முழுக்க வட்டி, இவ்வாறு செய்யாதீர், இவ்வாறு நீர் செய்ய நாடினால் முதலில் (உமது) பேரிச்சம் பழத்தை விற்றுவிட்டு பின்னர் இதனை வாங்கிக் கொள்வீராக! என்று கூறினார்கள். (அபூ ஸயீது  நூல்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக வட்டிப் பொருள் வளர்ந்த போதிலும், உண்மையில் அதன் இறுதிப் பலன் நாசம்தான். (இப்னுமஸ்ஊத் (ரழி). திர்மிதி, நஸயீ)

வட்டித்தொழில் செய்து சாப்பிட்டவர் மறுமையில் தட்டழிந்து தடுமாறும் பைத்தியக்காரராகவே எழுப்பப்படுவார். (இப்னு அப்பாஸ் (ரழி). இப்னு அபீஹாத்திம் )

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தவர் தமது சம்பாத்தியம் ஹலாலானதா? ஹராமானதா? முறையானதா? முறையற்றதா? என்பனவற்றைப் பொருட்படுத்தாது இருப்பர். (அபூஹுரைரா (ரழி) புகாரி)

வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்(ரழி) ஆதாரம்:முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

மக்கள் மீது நிச்சயமாக ஒரு காலம் வரும். அக்காலத்தில் வட்டி உண்பவனைத் தவிர வேறெவரும் இருக்கமாட்டார்கள். அவ்விதம் வட்டி உண்ணாதிருப்பவர்மீது வட்டி உண்பவரின் மூச்சாவது படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

இத்தகைய பெரும்பாவமான வட்டியிலுருந்து விலகி இன்றைய உலகில் நாம் வாழமுடியாது. அப்படி வாழமுற்பட்டால் நாமும்  நமது சமுதாயமும் மிகப்பெரும் பொருளாதர  வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று அஞ்சவேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வும் அவனது தூதரின் வாக்கும் எக்காலத்திலும் பொய்யாகாது.

يَمْحَقُ اللّهُ الْرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ அல்லாஹ் வட்டியை (எந்த பரகத்தும் இல்லாமல்) அழித்து விடுவான். இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான். (2:276)

நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: இறைவன் எனது உள்ளத்தில் போட்டான். நிச்சயமாக எந்த நபரும் அவரது ரிஜ்கு முடியாதவரை ஒருபோதும் மரணிக்க  முடியாது. ஆகவே, அல்லாஹ்வை பயந்து ரிஜ்கை சம்பாதிக்கும் வகையில் ஹலாலான (ஆகுமான) சிறந்த முறையைக் கடைபிடிப்பீர்களாக! (இப்னுமஸ்வூத்(ரழி) நூல்: பைஹகீ, ஸ்ரஹுஸ்ஸுன்னா)

எனவே நாம் எவ்வளவு அதிகமாக கஷ்டப்பட்டு உழைத்தாலும், இறைவனால் நமக்கு அளித்த ரிஜ்க்கு மேல் அடைய முடியாது. அடையுமுன் யாரும் மரணிக்க முடியாது. ஆகவே வட்டி என்ற ஹராமை தவிர்த்து ஹலாலான வழியிலேயே முயற்சி செய்வோம். நமக்குள்ள ரிஜ்க்கு நம்மை வந்தே அடையும் என்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தையில் உறுதிகொண்டு உழைப்போமாக.

அவ்லியாக்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாக இருந்தாலும் அல்லது அவர் அவுலியாவாக இருந்தாலும் இறப்பை தழுவிதான் ஆக வேண்டும். ஆனால் மக்களில் சிலர் அவ்லியாக்கள் வெளி உலகத்துக்குத்தான் இறந்தவர்கள். உண்மையில் அவர்கள் கப்ருக்குள் உயிருடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறி சமாதி வழிபாடு செய்கிறார்கள். நபிமார்களோ, அல்லது அவ்லியாக்களோ மரணித்து விட்டார்கள் என்று கூறப்பட்டால் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று தான் பொருள். அவர்கள் மரணித்த பிறகு உயிருடன் இருக்கிறார்கள் என்று சொன்னால் அவர்களைக் கப்ரில் அடக்கம் செய்தவர்கள் அனைவரும் உயிருடன் இருந்த ஒருவரை பூமிக்குள் புதைத்து கொலை செய்து விட்டார்கள் என்ற குற்றத்தை ஏற்கவேண்டிய நிலை ஏற்படும். அப்படி இவர்கள் மரணிக்கவில்லையென்றால் இவர்களின் சொத்துகளுக்கு யாரும் பங்குதாரராக முடியாது. இவர்களின் மனைவிகள் இத்தா இருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இஸ்லாம் தெளிவு படுத்தியிருக்கும். ஆகவே, மனித இனத்தில் மாபெரும் பதவிகளுடைய நபிமார்கள், ஷஹீத்மார்கள், அவ்லியாக்கள் ஆகியோர் மரணித்து விட்டால், அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று வைத்துதான் அவர்களை கழுவி குளிப்பாட்டி கபன் இட்டு ஜனாஸா தொழவைத்து அடக்கம் செய்தாக வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள். அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்துகொள்ள மாட்டீர்கள்’. (2:154) என்று ஷஹீதுகளைக் குறித்து மட்டும் குறிப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ஷுஹதாக்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உயிர் பறவைகளின் உடல் கூட்டில் விடப்பட்டு, சுவர்க்கத்தில் தமது விருப்பத்திற்கேற்ப உலவிக் கொண்டிருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.) அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்) உங்கள் சகோதரர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டபோது அல்லாஹ் அவர்களின் உயிர்களை பச்சைப் பறவையின் உடல் கூட்டில் அமைத்து விட்டான். அவை சுவர்க்கத்துடைய ஆறுகளில் தண்ணீர் அருந்திக் கொண்டும், சுவர்க்கத்தின் (மரங்களின்) பழங்களை புசித்துக் கொண்டுமிருக்கின்றன. (இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அஹ்மத்) அல்லாஹ்வின் பாதையில் மரணமடைந்த சஹீத்களைப் பற்றி குர்ஆனின் வசனம் அவர்களை (நல்லடியார்களை) மரணித்து விட்டார்கள் என்று நீங்கள் கூறாதீர்கள் என்று கூறிவிட்டு எனினும் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள். எனினும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான். ஆகவே நாம் கற்பனை செய்வதுபோல் அவர்கள் தமது கப்ருகளில் உயிராக இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தவறாகும். ஏனெனில் அவர்களின் நிலைப்பற்றி நபி(ஸல்) அவர்களின் ஹதீஸின் வாயிலாக நல்லடியார்கள் சுவர்க்கத்தில் பறவை அமைப்பில் உலாவிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருப்பதால் இதுவே உண்மை என்பது தெளிவாகிறது.