இஸ்லாம்தளம்

பிப்ரவரி27, 2009

இஸ்லாம் சமய(மத)மல்ல!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மற்ற சமயங்களைப் போல் மதங்களைப்போல் “இஸ்லாம்” ஒருசமய(மத)மாகவே மாற்றார்களால் கணிக்கப் பட்டுள்ளது. இது வி„யத்தில் அவர்களைக் குறைகூறி விமர்சிக்கும் இடம்பாடு மிகக்குறைவாகத் தான் இருக்கும் என்றாலும், இன்றைய முஸ்லிம்களின் புரோகித மோகம், உண்மை மார்க்கத்தை சமயமாய் மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கிறது.

மற்ற சமயங்களில் நியதியாக்கப்பட்டுள்ள மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் பெரும்பாலானவைகள் அப்படியே  அல்லது சிற்சில மாற்றங்களுடன் இன்றைய முஸ்லிம்களின் நடைமுறையை அனுசரித்து நன்மை, புண்ணியம் என்ற போர்வையில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மார்க்க அறிஞர்களின் அங்கீகாரத்துடன், இவைகள் அவர்களாலேயே நடத்தி வைக்கப்படுகின்றன. அதனால், இதுவும்  இஸ்லாத்திற் குட்பட்டதே என்பது இன்றைய முஸ்லிம்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

இஸ்லாத்திற்கு இன்றைய  முஸ்லிம்கள்  மாற்றாருடன்  போட்டிக் போட்டுக்கொண்டு  பாரம்பரிய  சொந்தம் கொண்டாடுவதால் மற்ற சமயத்தவர்கள் மூடச்சடங்கு சம்பிரதாயங்களை நியாப்படுத்த செய்யும் விதண்டா வாதங்களே இங்கும் நியாயங்களாகின்றன.

இந்நிலையில்,இன்றைய  முஸ்லிம்கள்  நன்றாகச் சிந்திப்போர் கூட இஸ்லாத்தைப் பாரம்பரிய அடிப்படியில் அணுகி, இஸ்லாமும், மற்றசமயங்களைப் போல் ஒருசமயம் என்ற மாயையில் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் போன்றவர்கள் மூலம்தான் மாற்றார்கள் இஸ்லாத்தை அறியும் சூல்நிலை பரவலாகக் காணப்படுகின்றது.

ஏற்கனவே மூடச்சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கிக்கிடக்கும் இன்றைய முஸ்லிம்கள் (தவறான) நடை முறைகளைக் கண்டு இஸ்லாத்தை மாற்றார்கள் தவறாகக் கணித்து வைத்துள்ளனர். சில போற்றத்தக்க நடைமுறைகள் முஸ்லிம்களிடத்தில் காணப்பட்டாலும், அவைகள் மாற்றார்களிடம் இஸ்லாத்தை நிƒத் தோற்றத்தில் அறிமுகப்படுத்த ஏற்றதாய் இல்லை.அதனால் மற்ற சமயத்தவர்கள் போல் இன்றைய முஸ்லிம்களும்  ஒரு சமயத்தவர்களே!

சடங்கு சம்பிரதாயங்களைத் தோற்றுவித்தவர்கள் புரோகிதர்கள். இறைவன் கூறுகிறான்:
மனிதர்களில் சிலர் இருக்கின்றனர்; அவர்கள் (பொய்யான கட்டுக் கதைகள் முதலிய) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி,  அல்லா‹வுடைய வழியிலிருந்து, அறிவின்றி (ƒனங்களை) வழிகெடுத்து, அதனைப் பரிகாசமாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனை நிச்சயமாக உண்டு.(அல்குர்ஆன் 31:6)

மற்ற சமயங்களைப் போல் இஸ்லாமும் ஒரு சமயமே மதமே என்ற (தவறான) தோற்றம் எப்படியோ ஏற்ப்பட்டுவிட்டது. இது போலித் தோற்றம், உண்மையல்ல. இதற்கு இன்றைய முஸ்லிம்களும், அவர்களின்  முன்னோர்களும், மார்க்கத்தைப் புரோகிதமாக்கிய முல்லா வர்க்கமும் முழுப் பொறுப்பாளர்களாகிறார்கள்.


இஸ்லாம் பொறுப்பு அல்ல!
இஸ்லாம்
ஒரு மதமல்ல!
இஸ்லாம் ஒரு சமயம் அல்ல!
இஸ்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல!
இஸ்லாம் இறைவன் அருளிய மார்க்கம்.
அல்லா‹ முஸ்லிம்கள் அனைவரையும் உண்மையான மார்க்கத்தை  விளங்க வைப்பானாக.

இறைவனை சிந்திக்காதவர்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்னும் அவர்கள் (சிந்தித்து) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக (பல்வேறு) விளக்கங்களைகூறியுள்ளோம். (அல்குர்ஆன் 17:41)

நிச்சயமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் விவரித்துள்ளோம். (அல்குர்ஆன் 17:89 )

இன்னும் நிச்சயமாக நாம் இந்த குர்ஆனில் ஒவ்வோர் உதாரணங்களையும் மனிதர்களுக்காக   விளக்கியுள்ளோம் எனினும் மனிதன் அதிகமாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 39:27)

மேலுள்ள நான்கு வசனங்களும் வெவ்வேறு வசனங்களாக இருந்தாலும் சிந்திக்க வேண்டும் என்ற ஒத்த கருத்தை ஓங்கி  ஒலிக்கின்றன.

ஷைத்தான் மனிதர்களின் சிந்தனையை மழுங்கச் செய்து பகுத்தறிவு என்ற வார்த்தைக்கு ஒரு மங்கலான விளக்கமளித்து அவர் அவர்கள் செய்வதுதான் சரி என்ற நிலையில் அழகாகக் காண்பித்து மனிதர்களில் அனேகரை இணை வைக்கும் கொடிய பாவத்திலும், அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத பாவங்களிலும் இறை நிராகரிப்பிலும் இட்டுச் செல்கின்றான்.

இறைவனை நம்புவது நன்மையான காரியம்தான். அந்த இறையை வணங்குவதற்காக நாமாகவே ஒன்றை உருவாக்கி, ஒரு தோற்றத்தை ஏற்படுத்திஇறைத்தன்மை யெல்லாம் நாம் உருவாக்கிய உருவங்களுக்கு இருப்பதாக நினைக்கின்றார்களே? நம்மை படைத்தவன் தான் இறைவனாக இருக்க இயலும் நாம் படைத்தவைகள் இறைவனாக கடவுளாக இருக்க சாத்தியமில்லை. அப்படியானால் நம்மை படைத்தது யார்? அந்த இறைவனின் தன்மை, ஆற்றல், ஆட்சியதிகாரம் என்ன? என்பதை சிந்திப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் தன்மைகள் அவற்றிற்கு இருக்கின்றனவா? என்பதையாவது சிந்திக்க வேண்டும்.

அவர்களுக்கு நடக்க கூடிய கால்கள் உண்டா? அல்லது பிடிப்பதற்குறிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்கு பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு கேட்கக் கூடிய காதுகள் உண்டா? நபியே கூறும்! நீங்கள் இணை  வைத்து  வணங்கும்  தெய்வங்களை எல்லாம் அழைத்து எனக்கு தீங்கு  செய்திட சூழ்ச்சி செய்து பாருங்கள். இதில் எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள். (அல்குர்ஆன் 7:195)

இவ்வாறு ஒவ்வொரு விசயத்தையும் அறிவுக்கு பொருத்தமாக
கூறி,  சிந்தனையில் ஆழ்த்தி, பகுத்துணரச் செய்வதுதான் குர்ஆனின் தன்மையே. இவ்வாறு எதையும் பற்றி சிந்திக்காதவர்களை குர்ஆன் உவமையாக கூறி விமர்சிப்பதை கீழுள்ள வசனங்களை படித்து பாருங்கள்.

நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தை) கேட்கின்றார்கள். அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைகின்றீரா? அவர்கள் கால் நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை அல்ல (அவற்றை விடவும்) அவர்கள் மிகவும் கேடு கெட்டவர்கள். (அல்குர்ஆன் 25:44)

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர் பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாத செவிடர்களும் ஊமையர்களும் தான். (அல்குர்ஆன் 8:22)

குர்அன் போன்று எவ்வேதமும் சிந்தனையை  தூண்டவுமில்லை. சிந்திக்காதவர்களை குர்ஆன் போன்று எவ்வேதமும் விமர்சனம் செய்யவுமில்லை. குர்ஆன் சிந்தனை செய்ய திறந்த மடலாக திகழ்கின்றது. தன்னையே சிந்தித்து ஏற்றுக் கொள்ளும்படி அறை கூவல் விடுகின்றது.

உண்மையை சிந்திக்காதவர்கள் இறவனிடம் இழிவானவர்கள்; மேலும் சிந்திக்காதவர்கள் கண் இருந்தும் குருடர், வாய் இருந்தும் ஊமையர், செவி இருந்தும் செவிடர்கள் என்று ஊனமுற்றவராக சித்தரிக்கின்றது. கால்நடைகள் என்றெல்லாம் சிந்திக்காதவர்களை ஒப்பிட்டு வர்ணிக்கிறது. இப்படிப்பட்ட விமர்சனங்கள் இனியாவது சமுதாயத்தின் சிந்தனைக்கதவை திறக்குமா? நல்லறிவுடையோர்தான் குர்ஆனை சிந்திப்பார்கள் என அல்லாஹ்   கூறுவதால் எங்களுக்கு நல்லறிவு கொடுக்கப்படவில்லை, எவ்வாறு சிந்திப்பது என கேட்கப் போகின்றார்களா? இறைவன் நம்அனைவருக்கும் சிந்தித்து உணரும் நல்லறிவை தந்து அருள்வானாக!

இஸ்லாத்தின் எல்லைக்கோடு

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நீங்கள் “லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி” என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நேரத்தில் இறைவன் கொடுத்த சட்ட திட்டங்கள் தாம் உங்களுக்குச் சட்ட திட்டம்; இறைவன் தான் உங்களுக்கு ஆணையாளன். இறைவனுக்குத் தான் உங்கள் வழிபாடு; திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையையும் கடைபிடிப்பது தான் நேர்மையானது என்னும் கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டு வாக்குறுதி அளித்தவர்களாக இருக்கின்றீர்கள்.

இதன் கருத்து நீங்கள் இஸ்லாத்தை தழுவியவுடன் உங்கள் சுதந்திரம் அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டீர்கள்! எனவே ஒரு பிரச்னை குறித்து “இது என் கருத்து” என்றோ “உலக நடைமுறை அப்படி இருக்கிறது” என்றோ “இது குடும்ப நடைமுறை” என்றோ “இன்ன பெரியார் இப்படிச் சொல்லியிருக்கிறார்” என்றோ சொல்லும் உரிமையே உங்களுக்கு இப்போது கிடையாது.

திருக்குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் எதிராக எதையும் உங்களால் செய்ய முடியாது. இப்போது உங்கள் வேலை திருக்குர்ஆனுக்கும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கும் எதிரில் உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் அலசிப் பார்ப்பதுதான்! அவற்றின் ஒப்புதலைப் பெறும் விஷயங்களை எடுத்துக் கொளுங்கள்; அவற்றிற்கு முரண்பட்ட விஷயத்தைத் தூக்கி எறியுங்கள்! அது யாருடைய பேச்சாக இருந்தாலும் சரி, எவருடைய பாதையாக இருந்தாலும் சரியே!

தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வதும், அப்படி சொல்லிக்கொண்டு திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மேலாகத் தன் கருத்தையோ, உலக நடைமுறையையோ, வேறொரு மனிதனின் கருத்தையோ, செயலையோ மேலானது எனக் கருதி அவற்றைக் கடைபிடித்தால் அவை ஒன்றுகொன்று முரண்பட்ட செயலாகும்.

கண்களை இழந்தவன் தன்னைப் பார்வையுள்ளவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது. இதைப் போலவே தன் வாழ்கையில் குறிக்கிடுகின்ற பிரச்னைகள் அனைத்திற்கும் திருக்குர்ஆனையும் நபிவழியையும் பின்பற்ற மறந்துவிட்டு அவற்றிற்கு மாறாக சொந்த சிந்தனையையோ உலக நடைமுறையையோ, வேறொரு மனிதனின் கருத்தையோ, செயலையோ மேலானது எனக் கருதி அவற்றைக் மேலோங்கச் செய்கிறவன் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள முடியாது.

ஒருவன் முஸ்லிமாக இருக்க விரும்பவில்லை என்றால் அவனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. எந்த மார்க்கத்தை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை, எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருக்கின்றது. ஆனால் அவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் இஸ்லாத்தின் எல்லைக்கு உட்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் ஒருவன் தன்னை முஸ்லிமெனச் சொல்லிக் கொள்ள முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

இறைவனின் வாக்கு எனப்படும் திருக்குர்ஆனையும், அவனது திருத்தூதரின் நடைமுறையையும் நேர்மைக்கும் உண்மைக்கும் உரை கல்லாகக் கொண்டு, அவற்றிற்கு முரண்பட்டவை அனைத்தையும் தவறானவை, அசத்தியமானவை என்று விட்டு விடுவதுதான் இஸ்லாத்தின் எல்லைக்கோடு! இந்த எல்லைக் கோட்டுக்குள் இருக்கிற மனிதனே முஸ்லிம்! இந்த எல்லைக்கு வெளியே கால் வைத்ததும் மனிதன் இஸ்லாத்தை விட்டு வெளியே போய் விடுகிறான். இதற்குப் பிறகு தன்னை ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டால் தான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் தன்னையும் உலகத்தையும் ஏமாற்றுகிறான்.

இமாம்களும் குர்ஆன், ஹதீஸைத் தான் பின்பற்ற சொல்கிறார்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இமாம்கள் ஜீவித்த வருடங்கள்

அபூ†னிபா (ரஹ்) 70 ஆண்டுகள் ஹிˆரி 80 முதல் 150 வரை
மாலிக் (ரஹ்) 86 ஆண்டுகள் ஹிˆரி 93 முதல் 179 வரை
„ாஃபி (ரஹ்) 54 ஆண்டுகள் ஹிˆரி 150 முதல் 204 வரை
†ம்பல் (ரஹ்) 77 ஆண்டுகள் ஹிˆரி 164 முதல் 241 வரை

மரியாதைக்குறிய இமாம்கள் குர்ஆன், †தீ&ை#8230; இறுதி தீர்வாக கூறுகிறார்கள்.

இமாம் அபூ†னீபா கூறுகிறார்கள்:


…†ீ†ான †தீஸ் கிடைக்கும் போது அதை ஏற்றுக் கொள்வதே என் வழியாகும்
ஆதார நூல்கள்: ரஸ்முல் முஃப்தி, †ாஷியா பின் ஆபிதீன், ஈகாலுல் ஹிமம்

“எந்த ஆதார அடிப்படையில் நாம் முடிவெடுத்தோம்?” என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் †லால் இல்லை.
ஆதார நூல்கள்: அல்இன்திகா, †ாஷியா இப்னு ஆபிதீன், ரஸ்முல் முஃப்தி.

என் ஆதாரத்தை அறியாதவன் என் சொல்லை பயன்படுத்தி ஃபத்வா கொடுப்பது †ராமாகும்.
ஆதாரம்: மீஜான் அ‰„ஃரானி

நாங்கள் இன்று ஒன்றை கூறிவிட்டு நாளை அதிலிருந்து வாபஸ் வாங்கிக்கொள்ளும் மனிதர்தாம். (எனவே குர்ஆன், †தீ&ை#8230; ஒப்பிட்டு பார்க்காமல் பின்பற்றாதீர்கள்.) ஆதாரம்: அல்மீஜான் „ஃரானி.

அல்லா‹வின் வேதத்திற்கும் நபி (…ல்) அவர்களின் வழி முறைக்கும் மாற்றமாக நான் ஒன்றை சொன்னால் என் சொல்லை ஆதாரமாக எடுக்காமல் விட்டு விடுங்கள். ஆதாரம்: ஈகாழுல் ஹிமம்

இமாம் மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்:


நபி (…ல்) அவர்கள் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்க தக்கவைகளும் உண்டு. விடப்படக் கூடியவைகளும் உண்டு. நபி (…ல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக ஏற்க வேண்டியவைகளாகும். ஆதார நூல்கள்: இர்„ாதுஸ்…ாலிக், ஜாமிவு இப்னு அப்துல்பர், உ…ூலுல் அ‹காம்

நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான். எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொறுத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் உட்படாதவற்றை விட்டு விடுங்கள். ஆதாரங்கள்: ஈகாழுல் ஹிமம், ஜாமிவு இப்னு அப்துல்பர், உ…ூலுல் அ‹காம்

இமாம் ஷாஃபி (ரஹ்) கூறுகிறார்கள்:

எவராக இருப்பினும் அவரை விட்டும் ர…ூல் (…ல்) அவர்களின் வழி முறைகளில் ஏதேனும் தவறிவிடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு தீர்வை கூறும்போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்து  தரும்போது “அல்லா‹வின் தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், டூறைத் தூதருடைய கூற்றே ஏற்கப்படவேண்டும்”. ர…ூல் (…ல்) கூற்றே ஏற்கப் படவேண்டும்”. ர…ூல் (…ல்) கூற்றை ஏற்பதே என் கொள்கையாகும். ஆதார நூல்கள்: இப்னு அ…ாகீர், ஈகாழுல் ஹிமம்

ர…ூல் (…ல்) அவர்களின் வழிமுறை எவருக்கு தெரிகின்றதோ, அதை எவருடைய  கருத்துக்காகவும் விடுவது †லால் அல்ல என்று இக்கால முஸ்லிம்கள் ஏகோபித்து முடிவு செய்துள்ளார்கள்.
ஆதார நூல்: ஈகாழுல் ஹிமம்

எனது நூலில் நபி (…ல்) அவர்களின் சுன்னத்துக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (…ல்) உடைய சுன்னத்தையே எல்லோரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்! என் சொல்லை விட்டு விடுங்கள். ஆதார நூல்கள்: அல் மˆவு நவவி, இப்னு அ…ாகீர், தம்முல் கலாம், ஈகாழுல் ஹிமம், இˆதி†ாத்.

…†ீ†ான †தீஸ் கிடைக்கும்போது அதை ஏற்பதே எனது வழியாகும்.
ஆதார நூல்கள்: அல் மˆவு நவவி, மீ…ான் ஸஃரானி.

நான் கூறிய சொற்கள் ஆதாரப்பூர்வமான நபி மொழிக்கு முரண்படும்போது நபியின் வழி முறைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். என்னை(தக்லீத் கண்மூடி) பின்பற்றாதீர்கள். ஆதாரனூல்கள்: இப்னு அபீ†ாதமின், அல்அதாப், அபூநயீம்.

அ‹மத் இமாம் கூறுகிறார்கள்:

என்னையே, மாலிக், „ாஃபிஈ, அவ்…ாயி, ஃதெªவ்ரி போன்றவர்களையோ “தக்லீத்” கண்மூடி பின்பற்றாதே. மாறாக அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ அதிலிருந்து ( குர்ஆன், †தீஸிலிருந்து) நீயும் புரிந்துகொள்.
ஆதார நூல்:ஈகழுல் ஹிமம்.

நபி(…ல்) அவர்களின் †தீஸை நிராகரிப்பவர்கள் அழிவின் விளிம்பிலே இருக்கிறார்கள். ஆதார நூல்: இப்னு …வ்ஸி.

இதுவரை மரியாதைக்குறிய நான்கு இமாம்களும் குர்ஆனையும், †தீ&ை#8230;யும் சிந்தித்துச் செயல்படுங்கள் என்று எச்சரித்து விட்டு சென்றுள்ளார்கள்.  வல்ல நாயன் நம் அனைவரயும் குர்ஆன், †தீஸ் வழியில் நடக்க துணை புரிவானாக! ஆமீன்.

எங்கள் இறைவா!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201
__________________________________________________

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا

எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! 2:250
___________________________________________________________________

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلاَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286
___________________________________________________________________

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّاب

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! 3:8
___________________________________________________________________

ربَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி பூிவாயாக! 3:147
_____________________________________________________

رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ  أَنصَارٍ

எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர் 3:192
___________________________________________________________________

رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأبْرَارِ

எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; ”எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக! 3:193
___________________________________________________________________

رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ

எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல 3:194
___________________________________________________________________

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்;டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம். 7:23
___________________________________________________________________

رَبَّنَا لاَ تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ

எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே 7:47
___________________________________________________________________

رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக! 7:126
___________________________________________________________________

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ

எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85
___________________________________________________________________

رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ وَمَا يَخْفَى عَلَى اللّهِ مِن شَيْءٍ فَي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء

எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை 14:38
___________________________________________________________________

رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தைச் சீர்திருத்தித் தருவாயாக! 18:10
___________________________________________________________________

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامً

எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! 25:74
___________________________________________________________________

رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَعِلْمًا فَاغْفِرْ لِلَّذِينَ تَابُوا وَاتَّبَعُوا سَبِيلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيمِ

எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 40:7
___________________________________________________________________

رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

எங்கள் இறைவனே! நீ எங்களை விட்டும் இந்த வேதனையை நீக்குவாயாக! நிச்சயமாக நாங்கள் முஃமின்களாக இருக்கிறோம் 44:12
___________________________________________________________________

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ

எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன் 59:10

_______________________________________________________________

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது, 60:4
___________________________________________________________________

رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் 66:8
___________________________________________________________________

رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ

எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக – தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன் 7:89