இஸ்லாம்தளம்

பிப்ரவரி26, 2009

நபி வழியை பின்பற்றுவதின் அவசியம் முஜீபுர்ரஹ்மான் உமரி

Filed under: ISLAM — islamthalam @ 12.24

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே! ஸலவாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதும் உண்டாகட்டுமாக!

சிறந்த சமுதாயம் என்று
றைவனால்  பாராட்டப்பட்ட முஸ்லிம்  சமுதாயம்  அந்தத்  தகுதியை ழந்து நிற்பதை ன்று நாம் காண்கிறோம். நேர்மை, நாணயம், நல்லொழுக்கம், வீரம், தியாகம், ஒற்றுமை, பிறர் நலம் பேணல் மற்றும் அனைத்து  நற்பண்புகளுக்கும் முஸ்லிம்கள் ஒரு காலத்தில் முன்மாதிரிகளாகத் திகழ்ந்தனர். ன்றோ அனைத்து நற்பண்புகளையும் ழந்து நிற்கின்றனர்.

ந்த நிலைமைக்கு என்ன காரணம்? திருமறைக் குர்ஆனையும் நபி அவர்களின் வழி காட்டுதலையும் புறக்கணித்துவிட்டு வேறு வழிகளைத் தேடிக் கொண்டனர் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் ல்லை. மக்கள் திருக்குர்ஆனின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்ப வேண்டும். நபி அவர்களின் வழிகாட்டுதலின்பால் கவனம் செலுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல நூறு ஆண்டுகளாகத் தமிழாக்கம் செய்யப்படாதிருந்த திருக்குர்ஆன் ந்த நூற்றாண்டில் தமிழாக்கம் செய்யப்பட்டு மக்களைச் சென்றடைந்து வருகின்றது. பொருளுணர்ந்து குர்ஆனைப் படிப்போர் பெருகி வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்!

திருக்குர்ஆனின் தமிழாக்கம் மனிதன் நேர்வழியில் நடக்கத் துணைபுரியும் என்றாலும் முழுமையாக நேர்வழியில் பிசகின்றி நடைபோட நபி அவர்களின் வாழ்க்கையை அறிந்து பின்பற்றுவது மிகமிக அவசியம். தைத் திருக்குர்ஆனே பல டங்களில் வலியுறுத்துகின்றது.

“மக்களுக்கு அருளப்பட்டதை (நபியே) நீர் விளக்கிட வேண்டுமென்பதற்காகவும் அவர்கள் சிந்திக்க வேண்டுமென்பதற்காகவும் உமக்கு இப்போதனையை நாம் அருளினோம்”. (அல்குர்அன் 16:44)

“மக்கள் எதில் கருத்து வேறுபட்டுள்ளனரோ அவற்றை நீர் தெளிவுபடுத்த வேண்டு மென்பதற்காகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அருளாகவும் தான் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்”. (அல்குர்ஆன் 16:64)

திருக்குர்ஆனைப் பூரணமாகப் புரிந்து கொள்ள நபி அவர்களின் விளக்கவுரை அவசியம் என்பதை இவ்விரு வசனங்களும் வலியுறுத்துகின்றன. நபி அவர்களைப் பின்பற்றுவது எந்த அளவு அவசியம் என்பதை மேலும் சில வசனங்கள் விளக்குகின்றன.

“:உமது இறைவன் மேல் ஆணையாக! தங்களிடையே பிணக்கு ஏற்படும்போது உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் அளித்த தீர்ப்பில் எந்தக் குறையும் காணாமல் முழுமையாகக் கட்டுப்பட்டால் தவிர அவர்கள் மூஃமின்களாக மாட்டார்கள்”. (4:65)

“இத்தூதர் தங்களிடம் எதைக்கொண்டு வந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களை விலக்குகிறாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்”. (59:7)

“அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் (3:132)

“யார் இத்தூதருக்குக் கட்டுப்பட்டாரோ அவர் அல்லாஹ்வுக்கு கட்டுப் படுகிறார்”. (4:180)

“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்: மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் ருக்கிறான். (அப்போது) அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்கள் பாவங்களையும்  மன்னிப்பான் என்று (நபியே) நீர் கூறுவிராக!” (அல்குர்ஆன் 3:31)

“இவரது (த்தூதரின்) கட்டளைக்கு மாறு செய்வோர் தங்களுக்குச் சோதனை ஏற்படுவதையோ அல்லது கடுமையான வேதனை அவர்களுக்கு ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளட்டும்” (அல்குர்ஆன் 24:63)

அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப் படுங்கள்! என்று (நபியே) கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் அத்தகைய காபிர்களை அல்லாஹ் விரும்பமாட்டான் (அல்குர்ஆன் 3:32)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் சுய விருப்பம் கொள்ளமூஃமினான ஆணுக்கோ,மூஃமினான பெண்ணுக்கோ உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன் 33:36)

அல்லாஹ்வையும் இத்தூதரையும் நாங்கள் நம்பினோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அதன் பின்னர் அவர்களில் ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர். அவர்கள்மூஃமின்களல்லர்.
(24:47)

அல்லாஹ்வின் பக்கமும் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவனது தூதரின்பாலும் அழைக்கப்படும்போது நாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதுதான் மூஃமின்களின் பதிலாக இருக்க வேண்டும். மேலும் அவர்களே வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24:51)

இந்த கருத்தில் ன்னும் நாம் ஏராளமான வசனங்களை திருக்குர்ஆனில் காணலாம். வை யாவும் நபி அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்  அதில் தான் வெற்றியிருக்கின்றது; அவ்வாறு பின்பற்றுவோர் தான் மூஃமின்கள்  பின்பற்ற மறுப்போர் வழிகேடர்கள் என்பதை ஜயத்திற்கிடமின்றிக் கூறுகின்றன. அல்லாஹ் நம் அனைவரையும் நபிவழியைப் பின்பற்றுவதின் அவசியத்தை உணரச்செய்வானாக ஆமின்.

வாழ்வை சீரழிக்கும் வரதட்சணை சமீமா அன்சாரி, குடவாசல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்று மனித குலத்தை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் பிரச்னைகள் ஏராளம் ஏராளம். ஏழ்மை, பசி, பிணி, பணத்தாசை பதவிப்பித்து, லஞ்ச லாவண்யம், ஊழல், இனவெறி, நிறவெறி, மொழிவெறி, என்று அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த வரதட்சணை. இப்பழக்கம் இந்தியாவைத் தவிர வேறெங்கும் இருப்பதாக தெரியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் இது அவாளின் அன்பளிப்பு. இது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து முடிவில் தமிழக முஸ்லிம்களை கடிக்க வந்திருக்கும் நச்சுவரம். இவ்வரதட்சணை கொடுமை எய்ட்ஸ் நோயாகப் பரவி ஜாதி மத பேதமின்றி எல்லோரையும் துன்பத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்னரே அறியாமைக்கால அரேபியர்களிடம் நிலவிய சில நடைமுறை பழக்க வழக்கங்களை இஸ்லாமிய நெறிமுறைகளாக அங்கீகரித்தார்கள். உதாரணத்திற்கு மிஸ்வாக் செய்தல், கத்னா செய்தல் போன்றவற்றை கூறலாம். அவை மனிதனுக்கு நன்மை பயக்கும் நற்பழக்கங்கள் என்பதால் அவற்றை இஸ்லாத்தில் சுவீகரித்துக் கொண்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டல்லவா? அந்த அடிப்படையில் அப்படிப்பட்ட நற்செயலில் ஒன்றானதா இந்த வரதட்சனை? இல்லையே! பின் எப்படி இந்த இஸ்லாமிய சமுதாயம் வரதட்சணையை வரவேற்று ஏற்றுக்கொண்டது? அதுவும் பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் இந்த அன்னிய மதத்தவரின் கலாச்சாரமான இவ்வரதட்சணை எப்படி நுழைந்தது?

அன்னிய மதத்தவரின் கலாச்சாரத்தை எந்த ஒரு முஸ்லிம் பின்பற்றுகிறாரோ அவர் அந்த மதத்தைச் சார்ந்தவரே (எம்மைச் சார்ந்தவரல்லர்) என்ற நபி(ஸல்) அவர்களின் அமுத மொழியை எச்சரிக்கையை அறியாதவர்களாக அல்லது அறிந்தும் அலட்சியப்படுத்தியவர்களாக அழிவைத் தரும் இந்த அனாச்சாரத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம். எதற்காக யாருடைய நலனுக்காக நாம் சிந்திக்க வேண்டாமா?

ஒரு பெண்ணை மண மேடையில் அமர்த்துவதற்காக வரதட்சணை என்னும் மரணப் படுகுழியில் விழும் பெற்றோர்கள் எத்தனை பேர்? குமர் காரியம் என்று பிச்சைக்காரர்களாக கையேந்தி வரும் முஸ்லிம்கள் எத்தனை பேர்? உடன் பிறந்த சகோதரிகளை ‘கரை’ ஏற்றுவதற்கு கடல் கடந்து சென்று உழைத்து உருக்குலைந்து வளைகுடா நாடுகளில் வாலிபத்தை தொலைத்து நிற்கும் சகோதரர்கள் எத்தனை பேர்? கல்யாணம் என்பதே கானல் நீராகி கண்ணீர் சிந்தி நிற்கும் கன்னியர் எத்தனை பேர்? வாழ்க்கையில் விரக்தியுற்று வேலி தாண்டி ஓடிய வெள்ளாடுகள் எத்தனை, எத்தனை? என்றேனும் இந்த சமுதாயம் இதனை எண்ணிப் பார்த்து இருக்குமா?

அறியாமைக் கால அரேபியர்களாவது பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தனர். நவீன காலத்தில் வரதட்சணைக்கு பயந்து வயிற்றில் உள்ள கருவை ஸ்கேன் செய்து பெண் என்று தெரிந்தாலே கருவறையை கல்லறையாக்கி விடுகின்றனர். இதையும் மீறி பிறக்கும் பெண் சிசுக்களுக்கு இருக்கவே இருக்கிறது கள்ளிப்பாலும், நெல்மணியும் இதுதான் 21ம் நூற்றாண்டின் நாகரீகம்.

இதில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் “வாங்குகின்ற வரதட்சணையை வாங்கிக் கொள்ளுங்கள் கவலையில்லை, பள்ளிவாசலுக்கு செலுத்தவேண்டிய கமிஷனை கொடுத்து விடுங்கள் என்று நிர்வாகிகளும் ஜமாஅத்துகளும் தங்களுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றனர்.

“அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாக) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வெறெதற்கும் அஞ்சாதவர்களே என குர்ஆன் கூறுகிறது. (அல்குர்ஆன் 9:18)

இத்தகைய தகுதி படைத்தவர்களா தமிழகத்தின் பெரும்பான்மை பள்ளிகளை பரிபாலனம் செய்து வருகின்றனர்? அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாக இருந்தால் தானே பள்ளிவாசலின் வருமானத்திற்கென வரதட்சணைக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள்.

நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள். (4:4) என்ற அருள்மறையின் கட்டளைகளை மணமக்களும் அவர்தம் பெற்றோர்களும் எண்ணி பார்க்க வேண்டாமா? ஜம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மணப்பெண்ணிடம் வரதட்சணை வாங்கிக்கொண்டு அதிலிருந்து சிறு அற்ப தொகை 1001 ரூபாயை மணபெண்ணுக்கு மஹராக வழங்கி மணமுடிக்கும் மகா கெட்டிகாரர்கள் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கிறார்கள். ‘மஹர் வழங்கி மண முடியுங்கள்” என்ற மறை மொழியை அப்படியே பின்பற்றுகிறார்களாம்! அல்லாஹ்வை எமாற்ற நினைக்கும் இந்த அயோக்கியர்கள்.

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)

மேற்கண்ட இறைவசனங்களின் படி நிராகரித்து வழிகேட்டிலும் குஃப்ரிலும் விழுந்து நாசமாவதா? என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். ஒருத்தியை வாழ வைக்க ஒரு குடும்பத்தையே வறுமையிலும் கடன் தொல்லையிலும் தள்ளிவிடுவது என்ன நீதி? தமிழகத்தில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு அறிவிலி தொடங்கி வைத்த இந்த தீமை இப்போது காட்டுத்தீயாக பரவி பெரும் நாசம் விளைவித்து வருகின்றது.

“ஜந்தாறு பெண் பிறந்தால் அரசனும் ஆண்டி” இது முதுமொழி. இப்போது “ஒரே ஒரு பெண் பிறந்தால் அவனும் ஓட்டாண்டி” இது புதுமொழி.

வசதிப்படைத்த பெண்ணின் பெற்றோர் சிலர் தங்களின் மகளுக்கு மனமுவந்து அன்பளிப்பாக வழங்குவதை நாம் குறைகூற இயலாது. அதை திருமணத்தன்று செய்யாமல் பிரிதொரு சமயத்தில் மணமக்களுக்கு செய்யலாமே! திருமணத்தன்று பலர் முன்னிலையில் இப்படி செய்வது மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அல்லவா அமைந்து விடுகிறது. இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்? எனவே எக்கோணத்திலிருந்து பார்த்தாலும் இவ்வரதட்சணை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒரு கொடிய தீமையே என்பது மறுக்க முடியாத உண்மை.

இத்தீமையை ஒழிக்க அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே விட்டுச் சென்ற குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவது ஒன்றுதான் ஒரே வழி. நம் சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் கட்டுப்பட்டு நடப்பது என்ற திடமான உறுதியான முடிவை மணமக்களும், பெற்றோர்களும், ஜாமாஅத்தார்களும் மேற்கொண்டு நடைமுறைக்கு கொண்டு வருவோமேயானால் வரதட்சணை என்ன – மனிதனை வாட்டி வதைக்கும் அத்தனை தீமைகளுக்கும் நாம் சமாதி கட்டிவிடலாம்.

இறைவன் தன் திருமறையில் “விசுவாசிகளே நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்” என்று கூறுகின்றான். அத்துடன் நம் சந்ததிகளையும் பிள்ளை பிராயம் முதல் இஸ்லாமிய நெறியில் வளர்த்திடல் வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறையாவது வரதட்சணையைப் பற்றி எண்ணிப்பார்க்காது மேலும் திருமணம் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி இறையச்சத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்ற நிலை வர வேண்டும்.

அப்போதுதான் வரதட்சணை ஒழிந்து வாடி வதங்கும் வனிதைகளுக்கு வாழ்வு கிடைக்கும். இல்லறமும் நல்லறமாகி இன்பம் பொங்கும். இன்ஷா அல்லாஹ்…..

நான்கு வழிகள்-நான்கு ஆறுகள் S.அப்துல் ராஸிக்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இஸ்லாம் கற்றுத்தராத நான்கு வழிகள் இமாம்கள் பெயரில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. அவை ஹனபி, ஷாபி, மாலிகி, ஹம்பலி எனத் தெரிந்த ஒன்றுதான். இந்த நான்கு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் சுன்னத் வல் ஜமாஅத்தின்  கொள்கையாம். உலகத்தில் எந்த தத்துவமாக இருந்தாலும் ஒரு வழிமுறையைத்தான் அவர்கள் கொள்கையாகக் கூறுவார்கள். ஆனால் மத்ஹப்வாதிகளிடம் நான்கு வழிமுறைகள்.

ஒவ்வொரு மத்ஹப்வாதிகளும் தங்கள் மத்ஹபை உயர்த்திப் பேசுவதும் மற்றதை தாழ்த்துவதும் வாடிக்கை. ஹனபி பிக்ஹூ நூலில் ” இந்த அடியானின் மீது அல்லாஹுத்தஆலா ஷரியத்தைப்பற்றி மெய்ஞான ரகசிய ஒழியை பாய்ச்சியபோது அந்த வெளிச்சத்தில் அனைத்து மத்ஹபுகளையும் குறிப்பாக நான்கு மத்ஹபுகளையும் நன்கு நோட்டமிட்டேன். அவை ஒவ்வொன்றும் ஆறுகள் வடிவத்தில் ஓடிக்கொண்டிருந்தன.

அந்த நதிகளில் அதிகப் பெரியதாகவும் அதிக நீளம் உடையதாகவும் ஹனபி மத்ஹபைக் கண்டேன். அதாவது எல்லா மத்ஹபுகளிலும் பெரிய மத்ஹபும், நீண்ட காலம் நிலைத்திருப்பதும் ஹனபீ மத்ஹப் ஒன்றுதான் என்பது எனக்குப் புலனாகிறது.”

இவ்வாறு மெய்ஞான ஒழியில் ஹனபீ ஆறு ஓடுவதைப் பார்த்ததாகப் பகல் கணவு கண்டவர் அல்லாமா ஷாஃரானீ அவர்கள் தமது நூலான ‘மீ ஜானுல் இஃதிதாலில்’ சிறப்பித்து கூறுகிறார். மேலும் இதே நூலில் நபித்துவத்தின் பரிபூரண சுடர்கள் ஹனபீ மத்ஹப்புடன் இணைந்து நிற்கின்றன என்பதும் அவருக்குப் புலனாகின்றதாகப் புலம்புகிறார்.

ஈஸா(அலை) அவர்களும் ஹனபி மத்ஹப்தான்

இவர்களின் ஹனபீ மத்ஹபு வெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறதென்றால்  நபிமார்களுக்கும் ஹனபீ லேபிள் ஒட்டும் அளவிற்கு முற்றி உள்ளது. அதாவது கற்பனையாக ஒரு நபி இந்த சந்தர்ப்பத்தில் அனுப்பபடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அப்போது அவர் ஹனபீ மத்ஹபு பிரகாரமே செயல்படுவார். நூல்: ஃபுஸிலே ஸித்தா

ஹழரத் ஈஸா(அலை) அவர்கள் மீண்டும் இறங்கிய பின்னர் ஹனபீ மத்ஹப்பிற்காகவே செயல்படுவார் என்று இமாமே ரப்பானீ முஜத்திதே அல்ஃபதானி அவர்கள் போற்றி புகழ்ந்து கூறுகிறார்களாம். இப்லீஸ் அல்லாஹ்விற்கே பாடம் போதித்தது போல் இப்லீஸ் ஏஜண்டுகளும் அல்லாஹ்விடமிருந்து ஷரியத் சட்டத்தை வாங்கி வந்த நபிமார்களுக்கே மத்ஹப் சட்டத்தை போதிக்க துணிந்து விட்டார்கள்.

தமது  மத்ஹப்தான் சரியானது  மற்றவர்களின் மத்ஹப்  தவறானது  என்று  கூறுகிறது (ஹிஜ்ரி 1004 ல் எழுதப்பட்ட துர்ருல்முக்தார் பாகம்1 பக்கம்18) ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷஃபியாக மாறிவிட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் (துர்ருல் முக்தார் பாகம்2 பக்கம்443) மத்ஹபுகளை பின்பற்றுவதுதான் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழியாம். அந்த நான்கில் ஒன்றை பின்பற்றுவதுதான் சரியான வழியாம் என்ன குழப்பமான கொள்கை! மத்ஹப்வாதிகளின் கொள்கைப்படி இஸ்லாத்திற்கு ஒரே வேதம்; ஆதம், ஹவ்வா என்ற ஒரு ஜோடியில் இருந்து பெருகிய மனித குலம். மனித குலத்திற்கு ஒரே இறுதித்தூதர். ஆனால் மத்ஹப் சட்டங்கள்  மட்டும் நான்கு. இந்த குழப்ப தத்துவத்தையே ஆலிம்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்.

இந்த மத்ஹப் சட்டங்கள் இஸ்லாத்திற்கு முரணானவை என்பதை விளக்க ஒரு சிறிய உதாரனத்தை பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான் “கடலில் வேட்டையாடுவதும், புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளது (5:96) ஆனால் “பிக்ஹின் கலைக்களஞ்சியம்”  என்ற “ஹனபி மத்ஹப்பின் சட்ட விளக்கக் கடல்” என்ற  நூலில் நண்டு,  இரால் ஆகியவை ஹராம்” எனக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் படைத்த கடலில் வேட்டையாடும் மீன்கள் எல்லாம் ஹலால் ஆனால் ஹனபீ சட்ட விளக்கக் கடலில் உள்ள நண்டு இரால் போன்றவை ஹராமானது எப்படி? வேதமும் இறுதி வேதம், இறுதித் தூதர் வஹீ முற்று பெற்றபின் முகவரியற்ற பொய்ச் செய்தியைத் தருவது யார்?

எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம்  (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே. (26:221,223)

நீ எனக்கு கியாமல் நாள்வரை அவகாசம் கொடுத்தால், நான் இவருடைய சந்ததிகளில் சிலரைத்தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன் என்று (இப்லீஸ்) கூறினான். (17:62)

அல்லாஹ்விடமிருந்து அவகாசம் பெற்று முதல் மனிதரில் ஆரம்பித்து இன்று முதல் இறுதிவரை மனிதர்களை வழி கெடுத்துக் கொண்டிருப்பான். இந்த வலையில் மாட்டிய ஆலிம்கள் எழுதிய நூல்களில் எல்லாம் குர்ஆன் ஹதீஸிற்கு முரணானச் செய்திகளை அதிகம் காணலாம்.

ஷைத்தான் முஸ்லிம்களை ஏகத்துவப் பாதையில் செல்ல விடாமல் தனது ஏஜண்டுகள் மூலம் முன்னால் வந்து ஹனபீ மத்ஹபைப் பின்பற்றச் சொல்கிறான். பின்னால் வந்து ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுவது தான் சரியானது என்கிறான். வலது பக்கம் மாலிக் மத்ஹப் மகத்தானது என்கிறான். இடது புறம் சென்று  ஹம்பலி மத்ஹபே கண்ணியமானது என்று கூறி முஸ்லிம்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறான். ஆகவே முஸ்லிம்களே! சிந்தியுங்கள். உங்களுக்கு நேர்வழியில்  செல்ல அல்லாஹ்  இறக்கிய சட்டம்  வேண்டுமா? வேண்டாமா? தேர்ந்தெடுங்கள் உங்கள் இறுதி முடிவை.

‘ஜம் ஜம்’ தண்ணீர்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

1971 ல் எகிப்திய டாக்டர் ஒருவர் ஐரோப்பிய  ஆங்கில பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததல்ல என்றும்  ஜம் ஜம் கிணறு அது ஒரு பள்ளத்தாக்கில் இருப்பதால் மக்கா நகரில் உள்ள கழிவு நீர்கள் பள்ளத்தாக்கில் தேங்கி பூமிக்குள் சென்று ஜம் ஜம் கிணற்று நீரோடு கலந்து விடுகிறது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

இதை நான் படித்தவுடனே தெரிந்துகொண்டேன், இது இஸ்லாத்திற்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் என்று. ஏனென்றால் அது ஒரு பள்ளத்தாக்கில் இருக்கும் அமைப்பை வைத்து ஒரு யூகமாய் கூறப்பட்டதே அல்லாமல் விஞ்ஞானப் பூர்வமாய் அல்ல. இதை அறிந்த அப்போதைய சவூதி மன்னர் ஃபைசல் அவர்கள் கோபமடைந்து எகிப்திய டாக்டரின் யூகத்தை தவறு என்று நிரூபிக்க முடிவெடுத்தார்.

மன்னர் ஃபைசல் அவர்கள் (Ministry of Agriculture and Water Resources ) அமைச்சகத்துக்கு ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பாவிலுள்ள (European laboratories)ஆய்வு நிலையத்திற்கும் ஜித்தாவிலுள்ள (Jeddah Power and Desalination Plants கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையம்)ஆய்வு நிலையத்திற்கும் அனுப்பி வைத்தது. அப்போது நான் கடல் தண்ணீரை குடி நீராக மாற்றும் சுத்தகரிப்பு நிலையத்தில் இன்ஜீனியராக பணி புரிந்து கொண்டிருந்தேன். ஜம் ஜம் தண்ணீரை ஆய்வு செய்யும் பணியை எங்கள் நிலையத்துக்கு ஓப்படைக்கப்பட்டது.

அதன்படி நான் கஃபாவில் உள்ள அதிகாரிகளிடம் விளக்கினேன். அவர்கள் ஆய்வுக்கு ஜம் ஜம் தண்ணீரை எடுக்க ஒரு ஆளை நியமித்து அனுப்பினர். நான் ஜம் ஜம் கிணற்றை பார்க்க நேரிட்டபோது அது 18×14 அடிதான் இருந்தது. பல ஆயிரக்கணக்கான ஹாஜிகளுக்கு பல ஆயிரம் மில்லியன் கணக்கான கேலன் தண்ணீரை நபி இபுராஹீம் அலைஹிஸ்ஸலாம் காலத்திலிருந்து பல நூறு நூற்றாண்டுகளாக அல்லாஹ் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.

நான் எனது ஆய்வை தொடங்கினேன். எனக்கு துணையாக அனுப்பப்பட்ட ஆளிடம் கிணற்றின் ஆழத்தை காட்ட சொன்னேன். அவர் குளித்து விட்டு கிணற்றில் இறங்கிய பொழுது அவரது தோள்பட்டைக்கு சிறிது மேலாகத்தான் கிணற்றின் நீர் மட்டம் இருந்தது, அதாவது சுமார் ஐந்தடி எட்டு அங்குலம். மேலும் அவர் அங்கு வேறு  குழாய்கள் இல்லை என்பதையும் கூறினார். தண்ணீரை ஆய்வு செய்வதற்காக வேண்டி மேலாக உள்ள தண்ணீரை குழாய் மூலம் வேறொரு இடத்திற்கு மாற்றினோம். பிறகு அவரை ஒரே இடத்தில் நிற்கும்படி கூறினேன்.

சிறிது இடைவெளிக்குப்பிறகு இரு கைகளையும் உயர்தியபடி ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறினார். ஊற்று நீர் சுரப்பதை காலில் உணரப்பட்டது. கிணற்றின் ஒவ்வொரு மூலையிலும் ஒரே அளவாக நீர் சுரந்தது. தண்ணீரிலிருந்து சிறிது மாதிரி  எடுத்துக்கொண்டோம். காஃபா அதிகாரிகளிடம் காஃபா அருகில் உள்ள மற்ற கிணறுகளையும் பார்வையிட கோரினேன். அவைகள் எல்லாம் வற்றிய நிலையில் இருந்தன. எங்கள் ஆய்வின் படியும், ஐரோப்பிய ஆய்வின் முடிவின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. ஜம் ஜம் தண்ணீருக்கும் மற்றைய தண்ணீருக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் கால்சியமும், மாக்னீசியமும் அளவில் சற்று அதிகம். கால்சியம் சத்து அதிகமிருப்பதால் ஹாஜிகளுக்கு களைப்பை நீக்கி விரைவில் புத்துணர்ச்சி ஏற்பட செய்கிறது. மேக்னீசியம் அதிகமிருப்பதால் தண்ணீரில் கிருமிகள் சேராமல் தடுக்கிறது.

மேலும் ஐரோப்பிய ஆய்வின் படியும் ஜம் ஜம் தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது என்று தெரிய வருவதால் எகிப்திய டாக்டரின் கூற்று ஆதாரமற்றது என்பது தெளிவாகிறது. எங்கள் ஆய்வும் ஐரோப்பிய கூடத்தின் ஆய்வும் ஒன்றாக இருப்பதை அறிந்து மன்னர் ஃபைசல் மகிழ்ச்சியடைந்தார். ஜம் ஜம் தண்ணீர் எவ்வளவு சுத்தமானது என்று அறிய இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து கொண்டோம். இவையெல்லாம் அல்லாஹுத்தாஆலாவின் நாட்டப்படியே நடக்கிறது.

நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் தமிழில்: மாஜிதா, சிங்கப்பூர்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்குர்ஆன் 5:3)

என் பெயர் இஹ்ஸான் சுவா கிம்சாம் வயது 23 நான் பிறப்பால் தாவ்யிஸம் (சீன மதம்) (Taoஃism philosophy & religion of China  in the 6th century B.C.) நான் ஒன்பது வயதாக இருக்கும்போது கிறிஸ்தவ மதத்தை தழுவினேன். சிறிது காலம் சென்று புத்தமதத்தை படித்தேன். எனக்கு ஒன்பதாவது வயதில் எனது ஆசிரியர், நீங்கள் அனைவரும் கிறிஸ்தவ மதத்தை தழுவ வேண்டும் இல்லையேல் மரணத்திற்குப் பின் நரகத்தில் தள்ளப்படுவீர்கள் என்று சொன்னார். அந்த பயத்தின் காரணத்தால் நான் கிறிஸ்த்தவ மதத்தையும் நம்பினேன், எனது பெற்றோர்களுக்காக சீன மதத்தையும் நம்பினேன்.

நான் உயர் நிலை 3, 4 படிக்கும்போது ஏதாவது ஒரு மதத்தை எடுத்து படிப்பது கட்டாயமானதால் பாடங்களும் சுலபமானதால் நான் புத்தமதத்தை தேர்ந்தெடுத்து படித்து வந்தேன். அதில் சொல்லப்பட்ட மனித நேயம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. ஆனால் அங்கு இறைவன் இல்லை. பிறகு நான் ஜூனியர் காலேஜ் சேர்ந்தேன். அது ஒரு கிறிஸ்தவ மிசினரி ஸ்கூல். அங்கே எல்லா மாணவர்களும் (முஸ்லிம் மாணவர்களைத் தவிர) வாரத்தில் ஒரு நாள் தேவாலயத்துக்கு கண்டிப்பாக செல்லவேண்டும். அங்கு நாங்கள் உபதேசங்களையும், மத பாடல்களையும் பாடுவோம். இவ்வேளையில்  அங்கு ஒரு பாதிரியாரின் உபதேசம் என்னை கவர்ந்தது. அவர் பழைய ஏற்பாட்டில் உள்ள பைபிளிலும் புதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளிலும் உள்ள தொடர்புகளை விளக்குவார். அப்போது எனக்கு வயது பதினேழு.  இருந்த போதிலும் அந்தப் போதனையால் நான் அதில் உறுதியாக இருக்க முடியவில்லை.

நான் பல பிரிவுகளை உடைய சர்ச்சுகளுக்கு மாறி மாறி வந்தேன். பிறகு ஒரு நன்பர் அவரது சர்ச்சுக்கு (St.John St.Margaret) அழைத்துச் சென்றார். இந்தக் கொள்கை எனக்கு பிடித்திருந்தது. சர்ச்சுடைய நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டேன். அங்கு பயிலும் சிறார்களுக்கு மறைமுகமாக கிறிஸ்தவ கொள்கைகளை கதை வடிவத்தில் கூறுவோம். உதாரணமாக வகுப்பு ஆரம்பிக்கும் முன் பிரார்த்தனையும், பைபிள் சம்பந்தப்பட்ட சிறு கதைகளையும் சொல்லி விட்டுத்தான் வகுப்புகளை ஆரம்பிப்போம். மேலும் எங்கள் சர்ச்சில் கால்பந்து, கூடைப்பந்து, மேசைப்பந்து இன்னும் பலவித விளையாட்டுகளை ஏற்பாடுகள் செய்து சுற்று வட்டாரத்தில் உள்ள இளைஞர்களையும், மற்றவர்களையும் அழைத்து நடத்துவோம். அவர்களை பைபிள் வகுப்புக்கும் அழைப்போம். சர்ச்சுகள் விளையாட்டை மதப் பிரச்சாரத்திற்கு பாவிப்பது  உலகலவில் புதிது அல்ல என்றாலும் சிங்கப்பூரில் இவ்வகைப் மதப்பிரச்சாரம் அறிமுகம் செய்தது நான் சார்ந்த சர்ச்சுதான்.

இந்நிலையில் நான் அறிந்த ஒரு முஸ்லிம் பெண்மனியை அனுகி அவளிடம் கிறிஸ்த்தவத்தை பற்றி எடுத்துரைத்தேன். ஆனால் அவளோ தன்னுடைய மார்க்கம் உண்மையானதும் என்றும் உறுதியானதும் என்றும் ஆனால் தனக்கு அதுபற்றி எப்படி விளக்கம் அளிப்பது என்று தெரியவில்லையென்றும் கூறினாள். இதற்கு மேலும் நான் கிறிஸ்த்தவ மதத்தை எடுத்து கூற வழியில்லாமல் போய்விட்டது. இந்தச் சம்பவம் என்னை சிந்திக்கத் தூண்டியது.

முஸ்லிம்களில் பலர் மது அருந்துகிறார்கள், போதைக்கு அடிமையாகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மதங்களை கைவிடுவதில்லை ஏன்? என்று எனக்கு தெரிந்த நன்பரிடம் கேட்டேன். அவருக்கும் விளக்கம் அளிக்க முடியாமல் என்னை தாருல் அர்க்கம் (Darul Arqam Muslim Converts Association of Singapore) சென்று விளக்கம் கேட்கச் சொன்னார். சரி என்று அங்கு போய் கேட்க முடிவெடுத்தேன். இஸ்லாத்தின் மீது உள்ள நம்பிக்கையினால் அல்ல. என்னை பொறுத்த வரை இஸ்லாமிய மதம் ஒரு தீவிரவாத மதம். அதில் ஒரு உண்மையும் இருக்காது என்று தான் நினைத்திருந்தேன். காரணம் இஸ்லாம் ஓர் நல்ல மதமாக இருந்திருந்தால் முஸ்லிம்களும் நல்லவர்களாக இருப்பார்களே என்றே எண்ணினேன்.

எனக்கு தெரிந்த முஸ்லிம்கள் யாரும் எனக்கு நல்லவராக தெரியவில்லை. ஆனால் ஒருவரைத் தவிர. அவர் என்னோடு ஜூனியர் காலேஜில் படித்துகொண்டிருந்தார். ஆனால் அவர் இஸ்லாத்தை என்னிடம் எடுத்து வைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மேலும் நான் இஸ்லாத்தை விரும்பாததற்கு என் குடும்பமும், மத்திய கிழக்கில் நடக்கும் சம்பவங்களும் காரணமாகும்.

நான் தாருல் அர்க்கம் சென்று சகோதரர் ரெமி அவ்ர்கள் நடத்தும் வகுப்பில் முதன் முதலில் கலந்துக்கொண்டேன். அவர் சொன்ன இரண்டு விஷயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒன்று இஸ்லாம் கிறிஸ்தவத்தை போன்று உணர்வுப்பூர்வமானது அல்ல. இரண்டாவது இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்றால் உங்கள் சந்தேகம் தீரும் வரை பொருத்திருங்கள். இஸ்லாத்தைப் பற்றி வேறு கேள்வி இல்லையென்ற பிறகு நீங்கள் இஸ்லாத்தை தழுவிக் கொள்ளலாம் என்று சொன்னார். ஆனால் கிறிஸ்த்தவத்தில் அப்படி இல்லை. கேள்வி மேல் கேள்வி கேட்க குழப்பம்தான் மிஞ்சும்.

மறு சில வாரங்களில் நான் தாருல் அர்க்கம் சென்று “Pllar of Islam” என்ற வகுப்பில் இடையில் கலந்து கொண்டதால் ஆர்வமில்லாமையால் ஓரிரு வகுப்பு மட்டும் சென்று நிறுத்திக்கொண்டேன். அதன் பிறகு அஹமத் டீடாட் எழுதிய (Ahmad Deedat) எழுதிய “The Choice”, “Islam and Christianity” கேரி மில்லர் எழுதிய “The Basis of Muslim Belief” புத்தகங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. பிறகு நான் மீண்டும் ரெமியை சந்தித்தபோது அவர் உஸ்தாத் ஜுல்கிப்லீயை எனக்கு அறிமுகம் செய்தார். பிறகு நானும் அவரும் பல வாரங்கள் இஸ்லாத்தைப் பற்றி கலந்துரையாடினோம்.

அவர் கிறிஸ்த்தவத்தைப் பற்றி  என்னிடம் கேள்வி எழுப்பியபோது நான் சரியான பதில் கூற முடியாத காரணத்தால் அதே கேள்விகளை எங்கள் சர்ச்சிடமும், சிங்கப்பூர் பைபிள் காலேஜிடமும் கேட்பேன். அவர்களின் பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை. அதே வேளையில் அவர்களின் பதிலை நான் ஏற்றுக்கொண்டால் இறைவனை நான் அவமதிப்பதாகிவிடும். அதாவது பைபிளில் (Trinity) எனப்படும் (மாதா, பிதா, பரிசுத்தஆவி) என்ற கோட்பாடு இயேசுவுக்கு பிறகு 325AD அறிமுகமானது.

பைபிளில் எனக்கேற்படும் சந்தேகங்களை குறித்து எங்கள் சர்ச்சுகளில் கேட்டால் சிறு பிழைகள் என்றும் அச்சுப் பிழைகள் என்றும் சொல்லி விடுகிறார்கள். மேலும் கிறிஸ்த்துவத்தைப் பற்றி தாருல் அர்க்கம்மில் கிடைத்த தகவல்கள் மூலம் நான் திருப்தியடயவில்லை. அவைகள் எல்லாம் சரியானதா என பல நூல்களை (Encyclopedia) பார்வையிட்டதில் அவைகள் யாவும் உண்மை என தெரிய வந்தது. மேலும் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு பைபிளில் இருப்பதையும் அறிந்தேன். இனிமேலும் நான் ஒரு கிறிஸ்த்தவனாக இருப்பதில் எந்தக் காரணமும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

பிறகு ஒரு நாள் தாருல் அர்க்கமில் உஸ்தாத் ஜுல்கிப்லீ அவர்கள் என்னை எப்பொழுது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள போகிறீர்கள்? என்று கேட்டார். நான் சொல்வதற்கு வார்த்தையின்றி மெளனமானேன். நான் மீண்டும் மீண்டும் சிந்தித்ததில் இனிமேலும் தூய இஸ்லாத்தை தழுவாமல் இருப்பதற்கு  எந்தக் காரணமும் இல்லை என்று முடிவுக்கு வந்து உண்மை மார்க்கத்தை தழுவினேன்.

ஆரம்பத்தில் என் குடும்பத்தார் நான் இஸ்லாத்தை தழுவியதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. நான் எப்பொழுதும் போலவே பன்றிக்கறி சாப்பிடுவேன் என்றும் மற்றவர்களைப் போலவே இருப்பேன் என்றும் நினைத்துக் கொண்டார்கள். நான் இஸ்லாத்தை கடைபிடிக்க ஆரம்பிததும் வீட்டில் பிரச்னை ஆரம்பமானது. அடுத்து நான் தொழுவதையும், ரமழான் மாதம் நோன்பு வைப்பதையும் கண்டவுடன் மேலும் பிரச்னையாகி அதிகமாகியது. இப்படியே பல மாதங்கள் கடந்தன. ஹலால் உணவை கிட்டாது என்பதால் வீட்டில் உண்ணுவதையும் நிறுத்திக்கொண்டேன்.

என் குடும்பத்தின் மீது எனக்கு எந்தப் பாசமும் இல்லையென்று குறை கூறினார்கள். எங்களுக்கிடையில் எப்பொழுதும் வாக்குவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. நான் எவ்வளவோ இஸ்லாத்தைப் பற்றியும் எடுத்து கூறியும், அவர்கள் புரிந்துக்கொள்ளத் தயாரில்லை. நான் வெளியே சென்று இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப பயந்தேன். ஒரு நாள் எனது தாயார் என்னை அனுகி வீட்டுக்கு தாமதமாக வரவேண்டாமென்றும் என்னைப் பற்றி எனது தந்தை கவலைபடுவதாக கூறினார். எனக்கு தனியாக ஹலால் உணவு சமைத்து தருவதாகவும் கூறினார். இப்பொழுது தன் முஸ்லிம் மகனின் வசதிக்காக எல்லோருமே பெரும்பாலான நேரத்தில் என்னுடன் சேர்ந்து ஹலால் உணவு சாப்பிடுகிறார்கள். முன்பைவிட இப்பொழுது குடும்பத்தின் நிலைமை சுமூகமாய் உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

Ihsan’s story was published in the “Muslim Reader”, Oct-Dec 1994. This is a publication of the Muslim Converts’ Association of Singapore.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த