இஸ்லாம்தளம்

பிப்ரவரி24, 2009

இறைவனுக்கும் இறைத்தூதருக்கும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ أَطِيعُواْ اللّهَ وَأَطِيعُواْ الرَّسُولَ وَأُوْلِي الأَمْرِ مِنكُمْ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلاً

“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.” (4:59)

நீங்கள் இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றவேண்டும். இதனால் மற்றவரின் வார்த்தையை நீங்கள் எந்தக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதன் கருத்து, கண்களை மூடிக்கொண்டு நீங்கள் எவருக்குப் பின்னாலும் நடக்கக்கூடாது.

ஒருவர் உங்களிடம் ஒரு செயலைச் செய்யச் சொன்னால், அவர் இறைவனுடைய, இறைத்தூதருடைய கட்டளைக்குத் தக்கபடிச் சொல்கிறாரா அல்லது முரணாகச் சொல்கிறாரா என்று நீங்கள் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தக்கபடி சொன்னால், அவர் சொல்வதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில்,  இந்தக் கட்டத்தில்  நீங்கள் இறைவனையும்  இறைத்தூதரையும்  தான்  பின்பற்றுகிறீர்கள்; அந்த மனிதரை நீங்கள் எங்கே பின்பற்றுகிறீர்கள்? இறைக்கட்டளைக்கு, இறைத்தூதரின் கருத்துக்கு முரனாக அவர் சொன்னால், அவர் யாராக இருந்தாலும், அவர் வார்த்தையை அவர் முகத்திலேயே அடித்து விடுங்கள்! ஏனெனில் இறைவனையும், இறைத்தூதரையும் தவிர வேறு எவருடைய கட்டளையையும் நீங்கள் பின்பற்ற உங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இதை நீங்கள் உணர முடியும்; உங்களுக்கு எதிரில் இறைவனே  நேரில் வந்து கட்டளையிடுவதில்லை. தான் இடவேண்டிய கட்டளைகள் அனைத்தையும் தனது திருத்தூதர் மூலம் அனுப்பி வைத்துவிட்டான். நபி (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் பிறப்பித்த கட்டளைகள் அனைத்தும் குர்ஆனிலும், ஹதீஸ் எனப்படும் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலும் இருக்கின்றன. என்றாலும், திருக்குர்ஆனும், ஹதீஸும் உங்களுக்கு எதிரில் வந்து ஒரு செயலைச் செய்யச் சொல்வதற்கோ, ஒரு செயலைத் தடுப்பதற்கோ அவை தாமாகவே நடந்து திரிந்து, பேசிக் கட்டளையிடுபவை அல்ல!

திருக்குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் கட்டளைப்படி உங்களை நடக்க வைப்பவர்கள் எந்தவிதத்திலும் மனிதர்களாகத்தான் இருப்பார்கள். எனவே மனிதர்களைப் பின்பற்றாமல் இருப்பதற்கு வழியில்லை என்றாலும் இங்கு முக்கியமான பணி ஒன்று இருக்கிறது; நீங்கள் மற்ற மனிதர்களுக்குப் பின்னால் கண்களை மூடிக்கொண்டு நடக்கக்கூடாது.

இப்போது  உங்களுக்கு  நான்  சொன்னபடி  ஒருவர்  உங்களை  திருக்குர்ஆன், ஹதீஸ்  ஆகிய வற்றுக்குத் தக்கபடி நடக்க வைக்கிறாரா, இல்லையா என்று நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்! திருக்குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் தக்கபடி நடக்க வைத்தால், அவரை பின்பற்றுவது உங்களுக்கு கடமையாகும். முரண்பட்ட விதத்தில் நடக்க வைத்தால் அவரைப் பின்பற்றுவது உங்களுக்கு (ஹராம்) தடுக்கப்பட்டதாகும்.

செல்வந்தர்களே

Filed under: ISLAM — islamthalam @ 12.24

செல்வந்தர்களே! நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் செல்வத்தைக் கொண்டு நீங்கள் உண்மையில் அனுபவிப்பது எவற்றை என்பதை நிதானமாகச் சிந்தியுங்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் மனிதன் ஒரு வயிற்றுக்குத்தானே சாப்பிட முடியும். இரண்டு வயிற்றுக்கு சாப்பிட முடியுமா? இரண்டு வாகனங்களில் தான் பிரயாணம் செய்யமுடியுமா? மனிதன் அனுபவிப்பதற்கென்று அல்லாஹ் ஒதுக்கியதற்கு மேல் ஒரு ஊசி முனை அளவுதானும் அனுபவிக்க முடியுமா? இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு ஏழை நடுத்தர வர்க்கத்தினன் அனுபவிக்கும் உலக சுகங்களைக்கூட அனுபவிக்க விடாமல் உங்களது செல்வம் உங்களைத் தடுத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

செல்வத்தை பெருக்குவதற்கு அதே லட்சியமாக வாழ்ந்து வரும் மனிதனைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான். “செல்வத்தை பெருக்கும் ஆசை உங்களைப் பாராக்கி விட்டது” அல்குர்ஆன் (102:1) என்று அல்லாஹ் கூறுவது மறுமையை மறந்த நிலைதான். ஆனால் செல்வந்தர்களில் பலர் இவ்வுலகில் அவர்கள் அனுபவிக்க வேண்டியவைகளையும் அனுபவிக்காமல் மறந்து செல்வங்களைச் சேர்ப்பதில் மூழ்கி இருப்பதையே பார்க்க முடிகிறது. ஆக பெரும்பாலான செல்வந்தர்கள் செல்வங்களைச் சேர்த்து குவிப்பதில் குறியாக இருப்பது அனுபவிப்பதற்காக அல்ல, மக்களிடையே கிடைக்கும் பெரும் செல்வந்தன் என்ற பெயரையும், அந்த மக்கள் கொடுக்கும் மரியாதையையும், கூழைக்கும்பிடையும், உலகில் கிடைக்கும் அற்ப பதவிகளையும் எதிர் பார்த்தே. இவற்றால் தனக்கு இவ்வுலகில் உரிய பயனில்லை, மறுமயிலும் பயனில்லை அதற்கு மாறாக மிகப்பெரும் வேதனை தண்டனை காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்.

ஆக எவ்வளவு பெரிய செல்வந்தனாக இருந்தாலும் அவன் உண்டு கழித்தது, உடுத்தி கிழித்தது, மறுமைக்கென்று அவன் முன்கூட்டியே அனுப்பி வைத்தது மட்டும்தான் அவனுடையதாகும். எஞ்சிய செல்வங்கள் அனைத்தும் அவனது வாரிசுகளுக்குரியதாகும். அந்த வாரிசுகளாவது அது கொண்டு அனுபவிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. அந்த செல்வங்களைப் பங்கிட்டு கொள்வதில் கூடப்பிறந்த அண்ணன் தம்பிகளிடையே சண்டை சச்சரவு, அடி தடி தகராறு, கோர்ட் கச்சேரி என்ற அவல நிலையையே பார்க்க முடிகிறது. செல்வந்தன் சேர்த்து வைத்த செல்வம் அவனது வாரிசுகளையும் நிம்மதி இழக்கச் செய்து வழக்கு வம்பு என்று அச்செல்வம் கரைந்து போகும் நிலையே ஏற்படுகிறது.

மிதமிஞ்சிய பெரும் சொத்து சுகங்களைச் சேர்த்து வைத்து விட்டுச் சென்றவர்களின் மக்கள், சொத்தைப் பிரித்துக் கொள்வதில் சண்டை சச்சரவு, வழக்கு வம்பு என செல்வத்தை கரைத்து வருவதையும் பார்த்து வருகிறோம். அண்ணன் தம்பிகளிடையேயுள்ள தகராறினால் பல சொத்துக்கள் பாழடைந்து கிடப்பதையும் பார்த்து வருகிறோம். இப்படி பெருங்கொண்ட சொத்து சேர்த்து வைத்த குடும்பங்கள் அவற்ரை முறையாக அனுபவிப்பதற்கு மாறாக சீரழிந்து கொண்டு வருவதையே பார்க்கிறோம். 10 தலை முறை 20 தலை முறை என சொத்து சேர்த்து விட்டுச் செல்கிறார்கள். அவர்களது வாரிசுகள் அவற்றை அழித்துவிட்டு பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்படுவதயும் நாம் பார்த்துத்தான் வருகிறோம்.

வாரிசுகளுக்கு நீங்கள் அளிக்கும் செல்வம்!
செல்வந்தர்களே! இதை எல்லாம் இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் தெரியுமா? பெரும் சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டுச் செல்கிறவர்கள் தங்களின் வாரிசுகளுக்குப் பெரும் துரோகத்தைச் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிய வைக்கத்தான். அவர்களின் இவ்வுலக வாழ்க்கையும், மறு உலக வாழ்க்கையும் பாழாக்குகிறார்கள் என்பதே உண்மையாகும். சொத்து சேர்க்கும் பேராசையாகப்பட்டது உங்கள் வாரிசுகளை நல்லொழுக்க முடையவர்களாக, மார்க்கத்தில் பேணுதல் உடையவர்களாக பயிற்றுவிப்பதை விட்டும் உங்களைத் தடுத்து விடுகிறது. அதற்கு மாறாக உங்களின் மிதமிஞ்சிய செல்வம் அவர்களைப் பல தவறான வழிகளில் இட்டுச் செல்ல வழிகாட்டுகிறது. பல தீய பழக்க வழக்கங்களுக்கும் ஆளாகி விடுகிறார்கள். பல செல்வந்தக் குடும்பங்களில் இதை நிதர்சனமாகப் பார்க்க முடிகிறது.

சொந்த உழைப்பே உயர்வுக்கு வழி!
சொத்து சுகங்களைச் சேர்க்காவிட்டாலும், தங்கள் குழந்தைகளை நல்லொழுக்கம் உடையவர்களாக மார்க்கம் பேணக்கூடியவர்களாக ஐங்காலத் தொழுகைகளைப் பேணித் தொழுபவர்களாகப் பழக்குவதோடு, தங்கள் கைகளால் உழைத்து ஹலாலான முறையில் தங்களின் வாழ்வாதாரங்களைத்த் தேடிக்கொள்ள அவர்களை பயிற்றுவிப்பதே சாலச் சிறந்ததாகும். உங்கள் சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்ததைக்கொண்டு அவர்கள் வாழ்வதைவிட அவர்களே அவர்களது வாழ்வாதரங்களைத் தேடிக்கொள்ள பயிற்றுவிப்பதே மிக மிக ஏற்றமாகும்.

அல்குர்ஆனை பொருள் விளங்கி நீங்கள் படிப்பீர்களானால் எண்ணற்ற இடங்களில் அல்லாஹ்வுடைய பாதையில் பந்துக்களுக்கும், அனாதைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், கடனாளிகளுக்கும் செலவிடுவதை உற்சாகப்படுத்து வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். அவற்றை நன்கு படித்து விளங்கினால் வருடா வருடம் ஜகாத் கொடுப்பது மட்டுமல்லாமல் தாராளமாக இந்த வகைகளுக்கு அதிகம் அதிகமாக செலவிடுவதை எந்த அளவு அல்லாஹ் வலியுறுத்துகிறான் என்பதை விளங்க முடியும். அந்த வசனங்கள் வருமாறு:

2:3,177,195,219,254,261,267,270-274,3:92,134,4:34,38,39,95, 5:64, 8:3,36,60,72, 9:20,34,44,53,54,91,98,99,13:22,14:31,16:75, 22:35,24:33,25:7,26:88,89,28:54,29:15, 32:16,34:39,35:29,36:47,42:38, 47:38,57:7,10,59:8,60:10,11,63:7,10,64:16,65:7,70:24

இந்த வசனங்கள் அனைத்தையும் கவனமாக பொருள் அறிந்து படித்துப் பார்ப்பவர்கள், அல்லாஹ் அளித்துள்ள செல்வத்தை எந்த அளவு இல்லாதவர்களுக்கும் கொடுத்து
உதவ வேண்டுமென்பதை விளங்க முடியும்.

நம் தலைவர்கள்???

Filed under: ISLAM — islamthalam @ 12.24

என் அன்புக்குறிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,

இறைவனைப் புகழ்ந்தவனாக துவங்குகிறேன்..

ஒரு சாதாரண தமிழ் நாட்டின் முஸ்லீம் குடிமகனாக தற்போது நம் சமுதாயத்தில் உள்ள ஒற்றுமை நிலை குறித்து என் மனதில் தோன்றுபவைகளை கொட்டி வைத்திருக்கிறேன். தவறுகள் இருப்பின் இறையோனுக்காய் மனம் பொறுக்கவும்.

நம்முடைய சங்கங்கள்:

இந்த தலைவர்களும், அவர்களுடைய சங்கங்களும் நம் சமுதாயத்திற்காக எதையாவது செய்யாதா என்ற ஏக்கத்தில், எதிர் காலம் எம் சமுதாயத்திற்கு எதையாவது ஒரு நல்ல பாகாப்புத் தன்மையை அளிக்காதா என்ற நோக்கில் நானும் ஒவ்வொரு நாளும் இந்த அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கூர்ந்து நோக்கி கவனித்துக் கொண்டுதான்  வருகின்றேன். என்னால் முடிந்த அளவில் உடலாளும், உழைப்பாலும், பணத்தாலும் ஒரு சாதாரண தொண்டனாக இந்த சங்கங்களுக்கு, அமைப்புகளுக்கும்  உழைத்தும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்தும் என்னுடைய கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் இந்த கழகங்களுக்காக நன்கொடையும், நிதியுதவியும் செய்து அவர்களின் புத்தக, ஆடியோ, வீடியோ, சி.டி போன்றவைகளையும் நானும் வாங்கியும், பிறருக்கு விற்பனை செய்தும் அதன் மூலமாகவும் இந்த  சங்கங்களின், அமைப்புகளின்  நிதி நிலையை கூட்டி இருக்கிறேன். ஆனால் இந்த சங்கங்களும், தலைவர்களும்  நமக்காக இதுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்று ஒரு தொலைநோக்கு பார்வையில் பார்த்தால்  எஞ்சி நிற்பது பூஜ்யம்தான்;. இந்த சங்கங்களையும், அமைப்புகளையும் அதன் தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் இந்த அமைப்புகளுக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்கள் சண்டைகளையும் நினைத்தால் சலிப்பும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. நம்முடைய ஓற்றுமை மற்றும் நம் சமூக மக்களின் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

இந்த சங்கங்கள் அமைப்புகள் என்ன செய்தார்கள் நமக்காக:

நம் சமுதாயத்திற்காக இந்த அமைப்புகள்  ஓன்றுமே செய்யவில்லை பூஜ்யம்தான் என்று நாம் சொல்லும் போது, தான் என்ற கர்வம் பிடித்து உழலும், தாம் சொல்வதே சிறந்தது, தாம் நடத்தும் அமைப்பே சிறந்தது என்று மார்தட்டிக் கொள்ளும்  நம் தலைவர்களுக்கு கோபம் வரலாம். சிலவைகளை செய்கிறார்கள். அவைகளை பற்றியும் காண்போம்.

கூட்டங்கள், மாநாடுகள் போடுகிறார்கள்:

நாங்கள் கூட்டங்கள் போடுகிறோம், மாநாடு போடுகிறோம் என்று சொல்வார்கள் அதில் கூட மார்க்க அறிஞர்களைப் போல யாரும் உரைகளை நிகழ்த்துவதில்லை. மற்ற அமைப்பினரை சாடுவதற்காகத்தான் அதிக நேரம் வாய் கிழிய பேசுகிறார்கள். மற்றவர்களை திட்டுவதற்காகவே எம் மக்களிடம் வசூல் செய்து மாநாடு போட்டு மார்தட்டி பேசி பிற அமைப்புகளை குறை கூறுவதிலேயே விரயம் செய்கிறார்கள். தம் அமைப்புக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள், வேறு எதாவது உபயோகமான விளைவுகள் அந்த மாநாடுகளால் நிகழ்ந்தது என்று இந்த தலைவர்கள் சொல்வார்களா. கூட்டத்தை கூட்டி நம் மக்களின் நேரத்தையும், செல்வத்தையும் செலவழித்ததை தவிர எதையாவது உருப்படியாக இந்த அமைப்புகள் செய்திருக்குமா என்று இந்த தலைவர்கள் சொல்லட்டும்.

பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள்:

பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள் செய்கின்றார்கள், இதில் இறைமறை தமிழில், மற்றும் பயனள்ள ஹதீஸ் தொகுப்புகளை வெளியிட்டவர்களுக்காக நம் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்காக நாம் எப்பவும் நம் ஆதரவை தெரிவித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்கள் உழைப்பும், பணியும் பாராட்டத்தக்கது. இவைகளை தவிர்த்து குப்பைகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் பத்திரிக்கை வெளியீடுகள் பற்றிப் பார்ப்போம்.

இந்த பத்திரிக்கைகளின் தரம் கூட அதை பார்த்தால் தெரிந்துவிடும். ஏதோ பெயருக்கு சங்க நிதிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், தம் அமைப்பின் கொள்கை விளக்க வெளியீடாகவும் வெளியிடப்படும் சஞ்சிகைகளாகவும், மற்ற அணியினரை தாக்கி அறிக்கைப் போர் நடத்தவும்தான் அவைகள் உதவி இருக்கின்றனவே தவிர அவைகள் நம் இளைஞர்களுக்குள் ஒரு எழுச்சியையோ, எம் பெண்களுக்கு உள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதையோ புரிந்து கொள்ள முடியாத அளவில்தான் இருக்கிறது. அதில் வெளிவரும் கட்டுரைகள் மிக பழைய செய்திகளை தாங்கியிருக்கும். அது கூட எதாவது இணையத்தில், அல்லது ஆங்கில பதிப்பின் தழுவல்களை சுட்டு எழுதியிருப்பார்கள். கூடுவாஞ்சேரியில் பள்ளியில் நடந்த கலவரத்தை பற்றி தெரியாத அந்த ஊர்க்கார இளைஞரின் கையில் தவழும் நம் சங்க கொள்கை முழக்க பத்திரிக்கையில் ஈராக்கையும், பாலஸ்தீனையும், அமெரிக்காவையும்  பற்றிய கட்டுரைகள். ஈராக், பாலஸ்தீனம் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் முதலில் நம் ஊர் அரசியல், சமூக சதிகளை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பரப்ப வேண்டும். மற்ற பத்திரிக்கைளை பார்த்தாவது நமது பத்திரிக்கைகளின் தரத்தை கூட்ட எந்த தலைவராவது தாம் நடத்தும் பத்திரிக்கைகளில் முயன்றதுண்டா… ?

ஏற்கனவே படிப்பறிவிலும், பொது அறிவு, அரசியல், சமூக சிந்தனைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நம் சமுதாய மக்களை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இந்த பத்திரிக்கைகள் விளங்கி வருகின்றன. நாமும்  இந்த குப்பைகளை வாங்கி நம் காசை கரியாக்கிக் கொண்டிருக்கிறோம்.  மக்களிடம் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்க எந்த பத்திரிக்கையாவது முயன்றதுண்டா என்று சிந்தித்துப் பார்க்கவும்.

இணையத்தளங்கள், மற்றும் மிண்ணணு ஊடகங்கள் :

நம்முடைய அமைப்புகள், சங்கங்களிடையே இணையத்தளங்களுக்கு குறைவில்லை, ஆனால் அவைகள் இதுவரை என்ன பணியாற்றிருக்கிறது என்று காண்போம்.

அந்த இணையத்தளங்களை திறந்தாலே முதல் பக்கத்தில், தலைப்பு செய்தியாக, குண்டர்கள், ரவுடிகள் என்று மற்ற நம் அணியினரை தாக்கியே செய்திகள் அனுதினம் வந்து கொண்டிருக்கிறது. மற்ற அணியினரை சாடியே அதிக பக்கங்களை செலவிடுகிறார்கள் இன்டர்நெட் என்பது இன்றைக்கு எத்தனை வலிமையான ஊடகம் அவற்றை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்று என்றைக்காவது இந்த சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் ஒரு நொடியேனும் சிந்தித்திருப்பார்களா. ?

சின்ன சின்ன குழுக்களாகவும். தனி நபர்களின்  ஆர்வத்தாலும் நம் சமுதாய சகோதரர்களால் நடத்தப்படும் இனையத்தளங்கள் எத்தனை வலிமையாக நடை போடுகிறது என்பதையாவது இவர்கள் உணர்ந்திருப்பார்களா ? அழைப்புப்பணி மற்றும் குர்ஆன், சுன்னாவையும் பரப்புவதில் தனிநபர் இணையத்தளங்கள் எத்தனை நன்றாக இயங்குகிறது  என்பதை ஏற்றுக் கொள்வதற்கு கூட முடியாத நிலையில்தான் இன்று நம்   சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் தான் என்ற அகந்தையில் உழல்கின்றார்கள். எப்போதாவது நம்மிடம் இருக்கும் சிறிய ஊடகங்களை வலிமையாக்க, ஆக்கபூர்வமாக உபயோகிக்க எந்த சுயநல தலைவர்களாவது சிந்தித்திருப்பார்களா ?

ஆடியோ, வீடியோ, சி.டி வெளியீடுகள் :

நம் அமைப்புகளின் மற்ற அணியினரை தாக்கியும், சுய நிலை விளக்கம் என்று வரும் ஆடியோ, வீடியோ சீ.டி வெளியீடுகளை மாற்று மதத்தினர் பார்த்தால் உங்களுக்குள்ளே இவ்வளவு குழுக்களும், குழப்பங்களும் பிரச்னைகளும் இருக்கிறதா என்று ஓடியே போய்விடுவான். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து மற்றவரை தாக்கி வரும் வெளியீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உபயோகமான வெளியீடுகள் பற்றி மட்டும் இனி யோசிப்பார்களா இந்த தலைவர்கள்.

பாதிக்கப்பட்ட நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் :

கலவரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர், ஆனால் கலவரம் வருவதற்கு முன்பாக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை, நமக்குள் ஒற்றுமை நிலையை ஏற்படுத்தி வைத்தீர்கள் என்பதுதான் நம் கேள்வி. அதில் கூட பொது வசூல் செய்த பணத்தை பொதுவாக உதவிகள் செய்வது கிடையாது. பாதிக்கப்பட்ட எல்லோரையும் ஒன்றாக பார்ப்பது கிடையாது. தம் அமைப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உதவிகள் செய்வது என்ற பாகுபாட்டையும், பிரிவினையையும் இந்த தலைவர்கள் என்றாவது களைய முயற்சித்து இருப்பார்களா ?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

இனக் கலவரங்களால் நம் மக்கள் பாதிக்கப் படுவதற்கு முன் இந்த அமைப்புகள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வைத்தார்கள்;. பாதிக்கப் படும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு எதிரிகளிடம் அடி வாங்கியும், வெறித்தனமாக எம் பெண்களை சூறையாடி மானபங்கம் செய்தும், எம் குழந்தைகளையும், இளைஞர்களையும், வெட்டி நெருப்பில் வீசி எறிந்தும், நம் சமுதாய மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தும், அழித்தும்  எல்லாம் முடிந்த  பின்னர் அவர்களுக்காக பொது வசூல் செய்து நாடோடி கேம்ப்களில் வீடு, வாசல், சொத்து உறவினர்களை இழந்து நிற்கும் அவர்களுக்கு எதாவது உதவியை செய்து விட்டு அவர்களுக்காக பரிதாபப்படும் ஏஜெண்டுகளாகதான் நம் சங்கங்கள் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இத்தனை அடிபட்டும், உதைபட்டும் நம்மில் ஒற்றுமை வேண்டும் என்றும், நம் எதிரிகளை சந்திக்க அவர்களின் சதிகளை முறியடிக்க நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்று எந்த தலைவராவது அதற்காக பாடுபட்டார்களா.

ஈகோ மற்றும் தான் என்ற கர்வம் பிடித்த தலைவர்கள் :

ஏதேதோ பெரிய லாஜிக்கெல்லாம் பேசும் தலைவர்கள், கூட்டங்களில் சவால் விடும் தலைவர்கள் மிக சாதாரண விஷயமாக நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று எம் தலைவர் நபி (ஸல் ) அவர்கள் போதித்ததை மட்டும் காதில் போட்டுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இதைப்பற்றி நினைத்தாவது பார்த்திருப்பார்களா.

எல்லா தலைவர்களும் ஈகோவால், தான் என்ற மமதையால். தான் சொல்வதே சிறந்தது, தன் கட்சியே உயர்ந்தது என்றும். வறட்டு பிடிவாதம் பிடிக்கின்றார்களே ஒழிய நம் சமுதாயத்திற்கும் அதிலும் குறிப்பாக நம் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் நாம் என்ன நிலையில் இன்று இருக்கின்றோம் என்று இந்த தலைவர்கள் உணர்வார்களா. அநேக குடும்பங்களில் ஆண்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க பெண்களும், குழந்தைகளும், முதியவர்களுமே இருக்கும் நம் சமுதாய மக்களின் பாதுகாப்பு நிலை என்ன என்று உணர்வார்களா இந்த தலைவர்கள்.

பம்பாய், குஜராத், பாபரி மஸ்ஜித், கோவை  (இன்னும் எத்தனையோ)  சம்பவங்கள் நடந்து நடு ரோட்டில் எம் பெண்களை மானபங்கப்படுத்தி, எம் குழந்தைகளை கொன்று தீயில் போட்டு எரித்த பின்னர் எஞ்சி அறைகுறையாக செத்து ஏதாவது ஒரு அகதிகள் கேம்பில் இருப்பவர்களுக்கு பொது வசூல் செய்து உதவி செய்வதுதான் நம் கழகங்கள் செய்யும் பணியா ? அதற்காகத்தான் இவர்கள் கழகம் நடத்துகிறார்களா ?

இந்த சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் எல்லாம் கூடி ஆர்பாட்டம் செய்ததில் என்ன நன்மையை இதுவரை கண்டோம் என்று நம் எல்லோரும் அறிந்ததே. அதையேனும் இந்த தலைவர்கள் உணர்வார்களா.?

போர்களமாய் பிற அணியினருடன்:

இவை எல்லாவற்றையம் விட அசிங்கமான செயல் இப்பபோது நம்மிடையே பிரிந்து கிடக்கும் கழகங்களிடையே காண முடிகிறது. நமக்குள்ளாகவே அடித்துக் கொள்வதும். ஒருவர் மற்றவரை தாக்கி அறிக்கைப் போர் என்று எல்லா ஊடகங்களிலும் எவரையாவது திட்டியும், புறம் பேசியும் வசை பாடியும் போர்களமாகதான் காட்சியளிக்கிறது. காவல் நிலையங்களுக்கு கூட சென்று மற்ற அணியினர் மீது புகார்கள் தந்தும். வழக்குகள் தொடர்ந்தும் தங்கள் தரத்தையும் தாழ்த்திக் கொள்ள இந்த மார்க்க அறிஞர்களும், இந்த அமைப்புகளும், தலைவர்களும் தயங்குவதில்லை.

இந்த தலைவர்களுக்கு:

இந்த தலைவர்களுக்கு ஒன்று நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நம் எதிரிகள், அந்நிய சக்திகள் நம்மை வேறறுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு முன்னால் நீங்களாகவே நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பலவீனப்பட்டுப் போகாதீர்கள் அவர்களிடமும் கொஞ்சம் உதை வாங்குவதற்காக பிரிந்து கிடந்து பலவீனப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சக்தியை கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். நம் எதிரிகள் எல்லோரும் ஓரணியில் நின்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க தருணம் பார்த்து நம் மீது பாயவும் காத்திருக்கிறார்கள் என்பதை எப்பவும் மனதில் வைத்து செயல்படுங்கள்.

நம் அரசியல் நிலை :

அரசியலில் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தித்தான் நம் எதிரிகள் நம்மை பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நாமும் பல்வேறு மதங்கள் வாழும் இந்த சமுதாயத்தில் நம் குரல் பாராளுமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் ஒலிக்க வேண்டும், நமக்கென்று நம்முடைய குறைகளை எடுத்து வைக்க நம் பிரதிநிதிகள் அரசியலில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணமாவது தோன்றியிருக்கிறதா இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றீர்கள். அரசியலே வேண்டாம் என்று நாம் ஒதுங்கி விலகிப் போய்விட முடியாது.

என்ன நிலையை தேர்வு செய்வது:

அரசியலையும், ஆண்மீகத்தையும் ஒன்றாக போட்டு  நாம் குழப்பிக் கொள்ளவும் வேண்டாம்.

இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்புவதால்தான் பிரச்னைகள் அதிகம் வருகிறது. ஆகவே இரண்டு பிரிவுகளாக பிரித்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது.

மதம் சார்ந்த பிரச்னைகளை அணுக தனிப் பிரிவும், அரசியல், சமூக பிரச்னைகளை அணுக அரசியல் பிரிவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆன், சுன்னா, தொளஹீத் இப்படி எந்த விதமான பிரச்னைகளையும், தீர்வையும் தருவதற்காக அதற்கான அறிஞர்களைக் கொண்ட பிரிவை ஏற்படுத்தி அவர்கள் முற்றிலும் மதம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தொப்பி போட்டு தொழலாமா, வேண்டாமா, விரலசைத்து தொழலாமா வேண்டாமா என்ற பிரச்னைகளை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அது போலவே ஒரே அமைப்பாக, ஒரே தலைவர், ஒரே குடையின் கீழ் ஒரு அரசியலமைப்பில், நம்மிடம் உள்ள அரசியல், சமூக சிந்தனைகள் அதிகம் நிறைந்தவர்கள், படித்தவர்கள், அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள், சமூக அரசியல் ஞானம் அதிகம் உள்ளவர்களை அரசியல் பிரிவில் ஏற்படுத்தி தேர்தல் காலங்களில், மற்றும் சமூக, அரசியல், சட்ட பிரச்னைகள் நமக்கு வரும்போது அவர்கள் பாடுபடும் வகைக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். நிச்சயமாக நம்மிடம் அரசியல் பிரிவு வேண்டும். நாமும் அரசியலில் பங்காற்றித்தான் நம் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற முடியும் என்பது மிக தெளிவானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதில் மார்க்க விஷயங்களை நுழைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.

இன்று நம் நிலை:

நம் எதிரிகள் அவர்கள் செய்ய துடிப்பதை நாமே செய்து கொள்கிறோம் சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து கிடக்கிறோம். நம் எதிரிகள் நம்மை பகடைக் காய்களாக ஆக்கி அரசியல் களத்தில் நம்மை பந்தாடி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டில் வாழும் ஆண்கள் எல்லோரும் இந்த அமைப்புகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு நல்ல தீர்வையும், நம் மக்களுக்கு நல்ல பாதுகாப்புத் தன்மையையும் தராதா என்று காத்திருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் புதிய அமைப்புகள் தோன்றுவதும், நான்தான் தலைவர் என்று புதிய தலைவர் வருவதும் தினசெய்திகளாக இருக்கிறது. ஒன்றாக பலமாக இருந்த அமைப்புகள் தனிப்பட்ட தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களின் அகம்பாவத்தால், தான் என்ற கர்வத்தால் நாளுக்கொரு அமைப்பாக உடைந்து மக்கள் மத்தியில் பலவீணப்பட்டு கிடக்கிறார்கள். சில நேரங்களில் இவர்கள் ஒருவேளை நம் எதிரிகளின் கைக்கூலிகளோ என்று சந்தேகப்படும்  அளவிற்கு இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ஒருவர் மற்ற சகோதரரையும், மற்ற அணியினரையும் அப்படித்தான் நடத்திக் கொள்கிறார்கள். நம் சமுதாயத்தின் முன்னேற்றம், பாதுகாப்புத் தன்மை என்பது இன்னும் ஒரு பெரிய கேள்விக் குறியாகத்தான் தொக்கி நிற்கிறது.

இளைஞர்களுக்கு:

கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே…செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக் கேட்டிருக்கின்றீர்களா. அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருக்கின்றீர்களா. இந்த வாழ்கையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள். எப்போதாவது ஒற்றுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா. செத்த பிணம் போல, ஆட்டு மந்தைகளைப் போல சுயமாக சிந்திக்காமல் எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் ஓடி உழைக்கப் போகிறீர்கள். எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் கொடி பிடித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள். சுயமாக சிந்தியுங்கள், உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், தலைவர்களையும் கேள்வி கேளுங்கள். நாளை நம் சமுதாயம் ஒற்றுமையாய் ஓரே அணியின் கீழ் ஒரே குடையின் கீழ் நிற்க பாடுபடும் தலைவரை இனம் காணும் வரை எந்த தலைவரின் பின்னாலும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

தலைவர்களுக்கு:

அரசியலையும் மதத்தையும் போட்டு மக்களை குழப்பாதீர்கள், அரசில் பிரிவு, மதம் சார்ந்த பிரிவுகளை ஏற்படுத்தி அந்தந்த பிரச்னைகளை அந்தந்த துறைகளில் நிபுணத்துவம், முதிர்ச்சியும் பெற்ற நம் பெரியார்களை, அறிஞர்களை கொண்டு தீர்வுகாண முயலுங்கள், எல்லாம் எனக்கு தெரியும், நான்தான் தலைவர் என்ற அகந்தையில், தலைவர்கள்  தான் என்ற கர்வத்தில், சுயமாக மமதையில் உழலாதீர்கள்.

தலைவர்களே நாங்கள் நன்றாக உங்கள் முகம் நோக்கி கேள்வி கேட்போம்தான். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மக்களின் உழைத்த பணங்களில் சந்தா, நன்கொடை, புத்தக விற்பனை செய்து உங்கள் கழகத்தை மட்டும் பலப்படுத்த அல்ல எங்கள் சமுதாயத்திற்கும் பாதுகாப்பும், சமூக உரிமையையும் பெற்றுத் தரத்தான். நம்மிடையே ஒற்றுமையை வளர்க்கத்தான். இதையெல்லாம் செய்ய இயலாது என்றால் நல்ல ஒரு பர்தாவை போர்த்திக் கொண்டு உங்கள் வீட்டிலேயே முடங்கிப்போங்கள், உங்களை எவனும் கேள்வி கேட்க மாட்டான். நீங்கள் முடங்கிப் போவதால் எம் சமுதாயம் ஒன்றும் அழிந்து விடாது. ஒரு புரட்சியையும், ஒற்றுமையையும் எங்களுக்குள் கொண்டு வர எம்மில் ஒருவன் பிறந்திருப்பான் அல்லது இறைவன் பிறக்க வைப்பான் இன்ஷா அல்லாஹ்…

ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் இல்லையேல் புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓடிப்போய் வீட்டோடு ஒளிந்து கொள்ளுங்கள்.

எம் சமுதாயத்தில் எல்லோரும் ஓற்றுமையாக ஒரே குடையின் கீழ் ஓரே அணியாக எல்லோரும் சகோதரர்களாக நின்று குரல் கொடுக்கும் நாளை (இன்ஷா அல்லாஹ்) மிக ஆதங்கத்துடன், ஆவலுடன் எதிர் பார்த்தவனாக இறைவனிடம் கையேந்தியவனாய்.

சுலைமான்

sulai_sa@yahoo.com

உலகம் தன் முடிவை நோக்கி…!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا. பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது

وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-

وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا ”அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.

بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வ†ீ மூலம் அறிவித்ததனால்.

يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْஅந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிாிவினர்களாகப் பிாிந்து வருவார்கள்.

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُஎனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குாிய பல)னை அவர் கண்டு கொள்வார்.

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குாிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99: 1-8)

قُل لاَّ أَمْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلاَ نَفْعًا إِلاَّ مَا شَاء اللّهُ لِكُلِّ أُمَّةٍ أَجَلٌ إِذَا جَاء أَجَلُهُمْ فَلاَ  يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلاَ يَسْتَقْدِمُونَ(நபியே!) நீர் கூறும் ”அல்லா‹ நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”  (அல்குர்ஆன் 10:49)

சமீப காலத்தில் சுனாமி பேரலைகள், கட்ரினா, ரீட்டா வில்மா என அடுக்கடுக்காக கடும் புயல்கள், நில நடுக்கங்கள், கடும் மழை பெரும் வெள்ளம் காட்டுத் தீ என பல இயற்கை சீற்றத்தால் உலகில் பல்லாயிரம் மக்கள் மாண்டு வருகிறார்கள். பல்லாயிரம் கோடி பொருள் சேதம் ஏற்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதல்லாமல் ஓ&ே#402;ானில் ஓட்டை, சுற்றுச் சூழல் மாசுபடல் துருவங்களிலுள்ள பனிப்பாறைகள் வெப்பத்தால் உருகி வடியும் நிலை. அதனால் கடல் நீர் மட்டம் உயர்ந்து பல ஊர்கள், நாடுகள் நீரில் மூழ்கி அழியும் நிலை என உலகம் அழிவை நோக்கி விரைகிறது.

எல்லாம் வல்ல ஏக இறைவன் தன் இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆன் மூலம் எச்சரித்த எச்சரிக்கைகள் இன்று நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றன. நிச்சயம் உலகம் அழியத்தான் போகிறது. உலக அழிவுக்குச் சமீபமாக உள்ள இந்த நிகழ்வுகள் கொண்டு மனிதன் பாடம் கற்க வேண்டும். தன்னை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மனிதன் மனிதனாக மனித நேயத்துடன் வாழ, வாழ வைக்க முன்வரவேண்டும்.

இந்த பேரழிவுகளால் பாதிக்கப்படும் மக்களின் துயரங்களை போக்க மனித ஆர்வலர்கள் எண்ணற்றோர் களத்தில் குதித்து பெரும் முயற்சிகள் எடுப்பதை கடந்த டிசம்பர் 26லிருந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மனித நேயத்தின் வெளிப்பாடாகும். இந்தப் பேரழிவுகளால் மக்கள் படும் கடும் துன்பத்தை நேரடியாகப் பார்த்ததால் உள்ளம் உருகி, அத்துன்பத்தைப் போக்க தன்னால் முடிந்ததைச் செய்ய முன்வருகிறார்கள் மனித நேய ஆர்வலர்கள். இதுவே மனித பண்பாடாகும். சகமனிதர்களின் துன்பங்கள், துயரங்களில் தானும் பாங்கு கொண்டு அத்துன்பங்களைப் போக்க பாடுபடுவது புனிதமான செயலாகும்.

மனிதர்கள் தங்களின் புறக்கண்களால் பார்க்கும் இந்தக் கொடிய துன்பங்களைவிட பல மடங்கு கொடிய துன்பங்களை தங்களின் அகக்கண்களால் காணத்தவறிவிடுகிறார்கள். இவ்வுலகின் துன்பங்கள் அனைத்தும் மரணத்தோடு முடிந்துவிடும். அதன்பின் தொடர்வதில்லை. ஆனால் மறுமைத் துன்பங்களுக்கோ எல்லையோ முடிவோ இல்லவே இல்லை. தொடர்ந்து துன்பங்களை அனுபவிக்க நேரிடும். இவ்வுலகில் மனிதர்கள் படும் துன்பங்களைப் பார்த்து நெஞ்சுருகி இரவு பகலாகப் பாடுபட முன்வரும் மனிதநேய ஆர்வலர்கள், மறுமைத் துன்பத்தைப் போக்க முன்வராத காரணம் என்ன? ஒன்றில் மறுமையைப்பற்றி அவர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருக்கலாம்; அல்லது அரைகுரை நம்பிக்கையுடன் இருக்கலாம். மனிதர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் மறுமை என்று ஒரு அசலான நிரந்தரமான வாழ்க்கை நிச்சயமாக இருக்கிறது.

தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் போது மனிதன் எப்படி இவ்வுலக வாழ்க்கைப்பற்றி நம்பிக்கையற்றவனாக இருந்தானோ, அதேபோல் இவ்வுலகில் இருக்கும் மனிதன், மறு உலகைப்பற்றி நம்பிக்கையற்றவனாக இருக்கிறான். ஆனால் அதற்கு மாறாக எப்படி இவ்வுலக வாழ்க்கை உண்மையானதோ அதேபோல் மறு உலக வாழ்க்கையும் நிச்சயம் உண்டு. இவ்வுலக வாழ்க்கையை மனிதன் கர்ப்பப்பையிலிருந்து இவ்வுலகிற்கு வந்த பின்னரே எப்படி அறிந்து கொண்டானோ அதே போல், இவ்வுலகிலிருந்து மறு உலக அடைந்த பின்னரே அதை அறிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறான்.

அந்த மெய்யான மறு உலக வாழ்க்கையில் துன்பங்கள் துயரங்கள் இல்லாத இன்பகர வாழ்க்கையை ஒருவன் அடைய விரும்பினால் தன்னையும் மக்கள் அனைவரையும் மற்றும் அகில உலகங்களையும் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவனுக்கு இறைவனால் படைக்கப்பட்ட மலக்குகளையோ, ƒின்களையோ, மனிதர்களையோ, சிலைகளையோ இதர எந்த படைப்பையுமே இணையாக்காமல் மார்க்கத்தை பிழைப்பாகக் கொண்டிருக்கும் புரோகிதரர்கள் பின்னால் செல்லாமல் அவர்களை இடைத்தரகர்களாக, ரப்புகளாகக் கொள்ளாமல், இறைவனுடைய இறுதி வழிகாட்டி நூல் அல்குர்ஆனையும், அதன் செயல் வடிவமான இறுதி நபியின் ஆதாரப்பூர்வமான நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றக் கடமைப்பட்டுள்ளான்.

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெருகிறீர்கள். (7:3)

உயர்ந்தோனை நோக்கி…

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி அவர்களின் அழைப்புப் பணி நிறைவுற்று, இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன. ஹிஜ்ரி 10, ரமழான் மாதத்தில் நபி இருபது நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். பொதுவாக 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பதுதான் நபி அவர்களின் வழக்கமாக இருந்தது. இம்முறை வானவர் ஜிப்ரயீல் நபியவர்களிடம் வந்து இருமுறை குர்ஆனைப் பரிமாறிக் கொண்டார்கள். இறுதி ஹஜ்ஜில் ‘இந்த ஆண்டிற்குப் பின் இந்த இடத்தில் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம்’ என்று நபி கூறியிருந்தார்கள். ஜம்ரத்துல் அகபாவில் நபி நிற்கும் போது ”உங்களது வணக்க வழிபாடுகளை, ஹஜ் கடமைகளை என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆண்டிற்குப் பிறகு நான் ஹஜ்ஜுக்கு வர முடியாமல் போகலாம்” என்றும் கூறியிருந்தார்கள். ஹஜ் பிறை 12ல் சூரத்துன் நஸ்ர் நபி அவர்களுக்கு அருளப்பட்டது. இவற்றிலிருந்து நபி இவ்வுலகை விட்டு விடைபெறப் போகிறார்கள், அவர்களது மரணச் செய்தி அவர்களுக்கு வந்துவிட்டது என்பதைத் தெளிவாக உணரலாம். துல்ஹஜ் முடிந்து முஹர்ரமும் முடிந்தது. ஸஃபர் மாதம் பிறந்தது. ஹிஜ்ரி 11, ஸஃபர் மாத தொடக்கத்தில் நபி உஹ{துக்குச் சென்றார்கள். அங்கு ஷஹீதானவர்களுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சித் தொழுதார்கள். இருப்பவர்களுக்கும் இறந்தோருக்கும் விடை கூறுவது போல் நபி அவர்களின் இச்செயல் அமைந்தது. பின்பு தங்களது பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி ”நான் உங்களுக்கு முன் செல்கிறேன். நான் உங்களுக்கு சாட்சியாளன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தற்போது எனது நீர் தடாகத்தைப் பார்க்கிறேன். எனக்கு பூமியிலுள்ள பொக்கிஷங்களின் சாவிகள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குப் பின் நீங்கள் இணை வைப்பவர்களாக மாறிவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை. இவ்வுலகத்திற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீீஹ் முஸ்லிம்) ஒரு நாள் நடுநிசியில் ‘பகீஃ’ மண்ணறைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக பாவ மன்னிப்புத் தேடினார்கள். மேலும் ”மண்ணறைவாசிகளே! மக்கள் இருக்கும் நிலையைவிட உங்களது நிலை உங்களுக்கு இன்பம் பயக்கட்டும். இருள் சூழ்ந்த இரவுப் பகுதிகளைப் போன்று குழப்பங்கள் வரவிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக தொடராக வந்து கொண்டிருக்கும். பிந்தியது முந்தியதைவிட மோசமானதாக இருக்கும்” எனக் கூறிவிட்டு ”நிச்சயமாக நாமும் உங்களிடம் வந்து சேருவோம்” என்ற நற்செய்தியையும் அவர்களுக்குக் கூறினார்கள். நோயின் ஆரம்பம் ஹிஜ்ரி 11, ஸஃபர் மாதம், திங்கட்கிழமை பிறை 28 அல்லது 29 ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்ள பகீஃ சென்றார்கள். நல்லடக்கம் செய்துவிட்டு திரும்பும் வழியில் நபி அவர்களுக்குக் கடும் தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. தலைமேல் கட்டியிருந்த துணிக்கு மேல் புறத்திலும் அனலை உடனிருப்போர் உணர்ந்தனர். பதினொரு நாட்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். 13 அல்லது 14 நாட்கள் கடினமான நோயில் கழித்தார்கள். இறுதி வாரம் நபி அவர்களுக்கு நோய் கடுமையாகவே ”நாளை நான் எங்கிருப்பேன்ஹ நாளை நான் எங்கிருப்பேன்ஹ” என துணைவியரிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். நபி அவர்களின் துணைவியர் நபி விரும்பிய வீட்டில் தங்குயூதற்கு அனுமதித்தனர். ஒருபுறம் ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி), மறுபுறம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தாங்கலாக, கால்கள் தரையில் உரசிக் கோடு போட்ட நிலையில் ஆயிஷா (ரழி) வீட்டிற்குச் சென்றார்கள். அவர்களின் தலை துணியால் கட்டப்பட்டிருந்தது. ஆயிஷா (ரழி) வீட்டிலேயே தங்களது வாழ்வின் இறுதி வாரத்தை நபி கழித்தார்கள். அன்னை ஆயிஷா (ரழி) சூரா ஃபலக், நாஸ் மற்றும் நபி அவர்களிடம் தான் கற்ற துஆக்களை ஓதி ஊதி வந்தார்கள். பரக்கத்தை நாடி நபி அவர்களின் கரத்தாலேயே அவர்களைத் தடவி விட்டார்கள். மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை உடல் நெருப்பாய் கொதித்தது. வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது ”பல கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏழு துருத்திகள் என் மீது ஊற்றுங்கள். நான் மக்களிடம் சென்று ஒப்பந்தம் வாங்கப் போகிறேன்” என்று கூறினார்கள். தோழர்கள் நபி அவர்களை ஒரு பெரியபாத்திரத்தில் அமர வைத்து நீர் ஊற்றினார்கள். நபி ”போதும்! போதும்!” என்று கூறினார்கள். அப்போதுதான் நபி அவர்களின் சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள். அதுதான் நபி அவர்களின் கடைசி சபையாகும். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு ”மக்களே! என்னிடம் வாருங்கள்” என்று கூறியபோது மக்கள் நபி அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி கூறியவற்றில் இதுவும் ஒன்று. ”யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்! தங்களின்தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.” மற்றொரு அறிவிப்பில்: ”யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழிப்பானாக! தங்களதுதூதர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை வணங்கும் இடங்களாக மாற்றி விட்டனர். எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்) தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம் தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன் வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும். பின்பு மிம்பலிருந்து இறங்கி ளுஹரைத் தொழ வைத்தார்கள். மீண்டும் மிம்பரில் ஏறி முன்னர் உரை நிகழ்த்தியவாறே பழி தீர்த்துக் கொள்ள வேண்டுவோர் பழி தீர்க்கக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து ”எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்” என்று கூறவே, ”ஃபழ்லே! நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள். பின்னர் அன்சாரிகளைப் பற்றி விசேஷமாக சிறப்பித்துக் கூறினார்கள்: ”அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.” மற்றொரு அறிவிப்பில், ”மக்கள் அதிகமாகினர். ஆனால் அன்சாரிகள் குறைகின்றனர். இறுதியில் அவர்கள் உணவில் உள்ள உப்பைப் போன்று குறைந்து விடுவார்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்யும் அளவு அதிகாரம் பெற்றால், அன்சாரிகளில் நல்லோன் சொல்லை ஏற்கட்டும். அவர்களில் தவறிழைப்போரை மன்னிக்கட்டும். (ஸஹீஹுல் புகாரி) இவ்வாறு உபதேசம் செய்த பின்பு ”ஓர் அடியாருக்கு இவ்வுலகில் உள்ளவற்றை உங்களுக்கு வழங்கட்டுமாஹ அல்லது மறுமையில் என்னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமாஹ என்று அல்லாஹ் வினவ, அதற்கு அந்த அடியாரின் அல்லாஹ்விடமுள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று நபி கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ சயீத் அல் குத் (ரழி) கூறுயூதாவது: நபி அவர்களின் இப்பேச்சைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அழ ஆரம்பித்து ”எங்களது தந்தையரையும் தாய்மாரையும் உங்களுக்கு அர்ப்பணமாக்குகிறோம்” என்று கூறினார்கள். நாங்கள் அவரைக் கண்டு ஆச்சரியமுற்றோம். ”இம்முதியவரைப் பாருங்கள்! அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை வழங்கட்டுமாஹ அல்லது தன்னிடம் மறுமையில் உள்ளதை வழங்கட்டுமா என வினவினான் என்றுதான் நபி கூறினார்கள். அதற்குத் தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று கூறுகிறாரேஹ” என்று மக்கள் பேசினர். அபூபக்ர் (ரழி) எங்களில் மிகுந்த அறிஞராக இருந்தார். எனவேதான் இவ்வாறு கேட்கப்பட்ட அடியார் இந்தத்தூதர்தான் என்பதை புரிந்து கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீீஹ் முஸ்லிம்) மேலும் நபி கூறினார்கள்: ”தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்யூதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். என்றாலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது. பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும் அபூபக்ருடைய வீட்டு வாசலைத் தவிர!” (ஸஹீஹுல் புகாரி) நான்கு நாட்களுக்கு முன்பு மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி ”வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது வீட்டில் இருந்த பலல் உமர் (ரழி) அவர்களும் ஒருவர். ”நபி (ரழி) அவர்களுக்கு வலி அதிகமாகிவிட்டது. உங்களிடம் குர்ஆன் இருக்கிறது. அல்லாஹ்வின் வேதமே உங்களுக்குப் போதுமானது” என்று உமர் (ரழி) மக்களிடம் கூறினார்கள். இதனால் அங்கிருந்தவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை நிலவியது. சிலர் ”நபி நமக்கு எழுதித் தரட்டும்” என்று கூற, மற்றும் சிலர் உமர் (ரழி) கூறியது போல கூறினார்கள். இரு சாரார்களிடையே கருத்து வேற்றுமை விவாதமாக மாறவே ”நீங்கள் இப்போது என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என நபி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) அன்றைய தினம் நபி மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்: 1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். 2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும். 3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர் மறந்துவிட்டார். அது இம்மூன்றில் ஒன்றாக இருக்கலாம்: 1) அல்லாஹ்வின் வேதத்தையும் நபி வழியையும் நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். 2) உஸாமாவின் படையை அனுப்பி விடுங்கள். 3) தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் பேணுங்கள். தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றைய தினத்தின் (மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி அவர்களே தொழ வைத்தார்கள். அன்றைய தினத்தின் மஃரிபு தொழுகையில் ‘வல் முர்சலாத்தி உர்ஃபன்’ என்ற சூராவை ஓதித் தொழ வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி) அன்றைய தினம் இஷா நேரத்தில் மேலும் நோயின் வேகம் அதிகமானது. நபி அவர்களால் பள்ளிக்கு வரமுடியவில்லை. இந்நிலையைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதைக் கேட்போம். ”மக்கள் தொழுதார்களாஹ” என நபி கேட்டார்கள். ”இல்லை இறைத்தூதரே! தங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்றோம். எனக்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள் எனக் கூற, நாங்கள் தண்ணீர் வைத்தோம். நபி குளித்து விட்டு செல்யூதற்கு முனைந்தார்கள். ஆனால், அவர்களை மயக்கம் ஆட்கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து ”மக்கள் தொழுதார்களாஹ” என்றார்கள். நாங்கள் முதலில் கூறியது போல் இம்முறையும் பதில் கூறினோம். மீண்டும் தண்ணீர் வரவழைத்து முன்னர் போல குளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அபூபக்ரை தொழ வைக்கும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீீஹ் முஸ்லிம்) அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி நோயுடன் இருக்கும் போது அபூபக்ர் (ரழி) மக்களுக்குத் தொழ வைத்தார்கள். (வியாழன் இஷாவிலிருந்து திங்கட்கிழமை ஃபஜ்ரு தொழுகை வரை) ”இந்நாள்களில் அபூபக்ர் (ரழி) அவர்களைத் தொழ வைக்க சொல்ல வேண்டாம், காரணம், மக்கள் அதைத் துர்குறியாக எடுத்துக் கொள்வர்” என ஆயிஷா (ரழி) மூன்று அல்லது நான்கு முறை நபி அவர்களிடம் கூறினார்கள். நபி அதனை மறுத்து விட்டார்கள். ”நீங்கள் தானே ரூசுஃபுடைய அந்தத் தோழிகள். அபூபக்ரே மக்களுக்கு தொழ வைக்கட்டும்” என நபி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீீஹ் முஸ்லிம்) மூன்று நாட்களுக்கு முன்பு… நபி இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: ”அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.” (தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாூது, முஸ்னத் அபூ யஃலா) இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு… அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை. நபி உடல் நலனில் முன்னேற்றத்தை உணர்ந்தார்கள், இரண்டு பேர் உதவியுடன் தங்களது அறையிலிருந்து பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) ளுஹர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்களை அபூபக்ர் (ரழி) பார்த்தவுடன் நகர்ந்து கொள்ள முயன்றார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என சைகை செய்தார்கள். பிறகு, என்னை அபூபக்ர் அருகில் அமர வையுங்கள் என்று கூற, அவர்களை அபூபக்ரின் இடப்பக்கத்தில் உட்கார வைத்தார்கள். நபி தொழ வைக்க அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூபக்ர் (ரழி) தொழது கொண்டு, நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு கேட்கும்படி சப்தமிட்டுக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) ஒரு நாள் முன்பு… நபி மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத் தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அன்றிரவு நபி அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா (ரழி) கூறினார்கள். நபி அவர்களின் கவச ஆடை முப்பது ‘சாஃ’ கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹமது) வாழ்வின் இறுதி நாள் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி அவர்கள் ‘உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி) இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுயூதாவது: இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தால் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி கூறியபோது நான் சித்தேன்” என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) மேலும், ”அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி நற்செய்தி கூறினார்கள். (ரஹமத்துல் லில் ஆலமீன்) நபி அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) ”எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!” என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) ஹசன், ஹ{சைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள். முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி உணர ஆரம்பித்தார்கள். ”ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்” என்று நபி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி) தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை நபி கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.” (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்) தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி) மரணத் தருவாயில்… இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுயூதாவது: ”நபி என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹமான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹமான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். ”நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவாஹ” என்று கேட்டபோது, ”ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. ”நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமாஹ” என்று கேட்டேன். தலை அசைத்து ”ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.” இன்னொரு அறிவிப்பில் வருயூதாவது: ”நபி மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். ”லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி) பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள். நபி அப்போது ”இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்… அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை… (ஸஹீஹுல் புகாரி) கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன். ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.