இஸ்லாம்தளம்

பிப்ரவரி23, 2009

போலி முல்லாக்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஸ்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்கிய, அதனை மதமாக்கிய முல்லாக்கள் பிடியில் முஸ்லிம் சமுதாயம் கட்டுண்டுக் கிடக்கிறது. முஸ்லிம்கள், அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். தன் கையே தனக்குதவி என்று பாடு படுகிறார்கள். பட்டம், பதவி, சொத்து, சுகங்களை அடைகிறார்கள். பல தலைமுறைகளுக்குத் தேவையானதை இவர்களே சேர்த்து வைக்கிறார்கள். அது மட்டுமல்ல! இவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முல்லாக்களுக்கும் அள்ளித் தருகிறார்கள்.

இங்கு இவர்களது கை மேலேயும் (கொடுப்பதாகவும்) முல்லாக்களின் கை கீழேயும் (வாங்குவதாகவும்) இருப்பதைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். தங்களின் இவ்வுலகத் தேவையைக்கூட  சாதாரண மக்களிடம் கையேந்தி  நிற்கும் இந்த போலி முல்லாக்கள், இவர்கள் எப்படி நாளை மறுமையில் நமக்குச் சொர்க்கத்தைப் பெற்றுத்தர முடியும்? என்று முஸ்லிம்கள் சிந்திப்பதில்லை. அப்படி சிந்தித்தால் உண்மையை இவர்களாலும் உணர முடியும்.

“கூறையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா?” என்று தமிழ் வழக்கில் கூறுவது போல இவ்வுலக அற்பத் தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்கள்; சாதாரண மக்களிடம் கையேந்தி நிற்பவர்கள்; மறு உலக வாழ்க்கைக்கு உரியவற்றை இந்த மக்களுக்கு எப்படி பெற்றுத்தர போகிறார்கள்? சிறிது சிந்தித்து பாருங்கள். அவர்களின் ஏமாற்று வித்தை எளிதாகப் புரிந்துவிடும். இவர்களின் பிடியில் இருந்து விடுபடாதவர்கள் பரிதாபத்துக்குறியவர்களே.

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءنَا فَأَضَلُّونَا السَّبِيلَا “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவருக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (33:67)

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே முல்லாக்களின் பிடியிலிருந்து விடுபடுங்கள். அவர்களை நம்பிச் செயல்படாதீர்கள். நீங்களே களத்தில் இறங்குங்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் குர்ஆன், †தீஸ் துணையோடு சரிபாருங்கள். எப்படி உலக காரியங்களில் நீங்களே உழைத்து பாடுபடுகிறீர்களோ அதே போல் மார்க்க காரியங்களில் நீங்களே முயற்ச்சி செய்து குர்ஆன், †தீஸ் மொழிபெயர்ப்புகளை பாருங்கள். “குர்ஆன், †தீஸ் விளங்காது” என்று ஓலமிடுவதை நீங்கள் நம்பாதீர்கள்.

குர்ஆன், ஹதீஸ்  விளங்க 16 கலைகள் கற்ற பண்டிதர்களே  விளங்க முடியும் என்று ரீல் விடுவார்கள். கலப்படம் மூலம் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் வியாபாரிகள் கலப்படம் இல்லாத பொருள்களை எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதை மறைப்பதிலேயே குறியாக இருப்பார்கள். காரணம் மக்களுக்கு அது தெரிந்துவிட்டால் அவர்களது வியாபாரம் படுத்துவிடும். அதுபோல் இந்த போலிகளும் மார்க்கத்தை கலப்படமாக்கி மதமாக்கிவிட்டதால், உண்மை மார்க்கத்தை அறிந்துகொள்ள வகைசெய்யும் குர்ஆன், †தீ&ை#8230; மக்கள் நெருங்குவதிலிருந்து தடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

அவர்களை நம்புவதைவிட, உங்களைப் படைத்த அல்லா‹வை நம்புங்கள். அவன் குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது என்று பல இடங்களில் வாக்களித்துள்ளான். மேலும் நபி (…ல்) அவர்கள் நடைமுறைகளுக்கு தேவையானவற்றை விளக்கியும், நடைமுறைப்படுத்தியும் காட்டித் தந்திருக்கிறார்கள். எனவே குர்ஆன், †தீஸ் முயற்சிப்பவர்களுக்கு தாராளமாகவே விளங்கும்.

எவர்கள் நம்முடைய வழியில் முயல்கின்றார்களோ நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்துவோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். அல்குர்ஆன் (29:69)

குர்ஆனும் சுன்னாவும்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. அல்குர்ஆன் 33:21

குர்ஆனையும் சுன்னாவையும் மறுத்து வாழ்வது என்பது நம்முடைய நம்பிக்கையில் – ஈமானில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அது மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடியதாக இருக்கின்றது. குர்ஆனிலும் மற்றும் சுன்னாவிலும் தகுந்த பரீட்சயம் அல்லது அறிவு இல்லாததன் காரணமாக இன்றைக்கு முஸ்லிம்கள் தாங்கள் கண்களில் காண்பதெல்லாம் இஸ்லாம் என்று ஷேக்மார்கள் பின்னாலும் முரீதுகள் பின்னாலும் அவ்லியாக்கள் பின்னாலும் உலமாக்கள் பின்னாலும் ஓடிக்கொண்டு இஸ்லாம் அல்லாதவைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருவதைப் பார்த்து வருகின்றோம். மேலும் இவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடம் தங்களது கோரிக்கைகளை வைப்பதும் அவர்களது கப்றுகளுக்கு ஜியாரத் செய்வதும் நன்மையான காரியங்கள் என்றும், அவை நன்மைகளைகளையும் இறைப் பொறுத்தத்தையும் பெற்றுத் தரும் என்றும் நம்பிக்கொண்டு அவர்களைப் புனிதமானவர்களாகக் கருதி தங்களது பிழை பொறுத்தருளப் பிரார்த்திப்பதும் இன்று நடைமுறையில் முஸ்லிம்களிடம் காணப்பட்டுக் கொண்டிருக்கும் வழிகேடுகளாகும்.

இன்னும் முக்கியமான நாட்களாக சில நாட்களைத் தேர்வு செய்து கொண்டு அந்த நாட்களில் சூரா ஃபாத்திஹாவை ஓதுவது குர்ஆனைக் குழுவாக அமர்ந்து ஓதி அதனை கத்தம் செய்வது மேள தாளத்தோடு சந்தனக் கூடு எடுப்பது அவுலியாக்களின் பிறந்த மற்றும் இறந்த தின வைபவம் கொண்டாடுவது இவைகளெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை என்றும் இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இறைவனுடைய நெருக்கத்தையும் பாவ மன்னிப்பையும் நன்மைகளையும் பெற்றுத்தரக் கூடியவைகள் என்று நம் முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள். இவைகளெல்லாம் குர்ஆனைப் பற்றியும் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல் நடைமுறைகளான சுன்னாவைப் பற்றியும் அறியாதவர்களினால் பின்பற்றப்படுகின்ற வழிகேடுகளாகும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. இறைவனுடைய குர்ஆனையும் இறைத்துாதர் (ஸல்) அவர்களின் போதனைகளைப் பின்பற்றுவது ஒன்றே ஒரு மனிதனை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கக் கூடியதாக இருக்கும்.

இன்றைக்கு வழிகேடுகள் எல்லாம் காட்டுத் தீ போல மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதில் ஒரு உண்மையான முஸ்லிம் தன்னை இழந்து விடாமல் பாதுகாக்க விரும்பினால் அவன் குர்ஆனைப் பற்றியும் இறைத்துாதர் (ஸல்) அவர்களது போதனைகளைப் பற்றியும் மிகத் தெளிவாக அறிந்திருப்பதோடு தன்னுடைய வாழ்க்கையில் முழமையாக அவற்றை பின்பற்றவும் வேண்டும். மேலும் நாம் அறிந்து கொண்ட இந்த சத்தியத்தை பிறருக்கு எடுத்து வைப்பதிலும் நாம் கண்ணுக் கருத்துமாக இடைவிடாது பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

இன்று துரதிருஷ்டவசமாக சிலர் சுன்னாவையும் அதனைப் பின்பற்றுவதன் மதிப்பையும் மறுக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் தாங்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் நடைமுறைகள் உண்மையானவை தானா என்று அறிந்து கொள்ள முற்படாமலேயே இருக்கின்றார்கள். மேலும் சிலர் சுன்னாவைப் பற்றிய சந்தேகத்திலேயே தங்களது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் இப்பொழுது ஒரு கடைத்தெருவுக்குப் போகின்றோம் என்றால் நமக்குத் தேவையான பொருள்களில் எது சிறந்தது என்பதைத் தேர்ந்தெடுத்து வாங்கின்றோமில்லையா? அதைப் போல சுன்னாவிலும் எது ஸஹீஹானது (ஆதாரமுள்ளது) எது ழயீஃபானது (புனைந்துரைக்கப்பட்டது பொய்யானது) என்பதை இனங் கண்டு பின்பற்றுவதும் அவசியம் தானே! அதே போல புத்தகக் கடைக்குச் சென்றால் நமக்குப் பிடித்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து அந்தப் புத்தகத்தின் மீது நம்முடைய முகங்களைத் தொலைத்து விடும் அளவுக்கு அதில் மூழ்கி விடுகின்றோம் அதைப் போலவே நமக்குப் பிடிக்காத புத்தகத்தை தொட்டுக் கூடப் பார்ப்பதில்லை. இதே போல மனநிலையை சுன்னாவிலும் செலுத்துவது எவ்வாறு? எனக்குச் சுன்னாவைப் பின்பற்றுவது பிடிக்கவில்லை அதனால் நான் அதனை அறிந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என ஒதுங்கி விடலாமா?!

ஓருவர் இறைத்துாதர்கள் செய்து காட்டிய அற்புதங்களை மறுக்கின்றார் ஒருவர் ஐந்து நேரத் தொழுகைகளுக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று நேரத் தொழுகைகள் போதுமென்கின்றார் நோன்பு நோற்க வேண்டும், அதற்கு எதற்கு 30 நாட்கள் ஒன்றிரண்டு நாட்கள் இருந்தால் போதும் தானே!  என இன்னும் சிலர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கீழ்படிவது அவர்களது வாழ்நாளுடன் முடிந்து விட்டது இப்பொழுது அதற்கு அவசியமில்லை என்று சுன்னாவை மறுப்பதில் ஒவ்வொரு அளவுகோள்களை வைத்துக் கொண்டு அதனை மறுத்துக் கொண்டு இருப்பதை நம் நடைமுறையில் காண முடிகின்றது. இவர்கள் தங்களது அலுவல்கள் மற்றும் நேரங்களை இந்த சுன்னாவை எதிர்ப்பதிலும் அதனைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதிலேயே கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தெளிவான ஹதீஸ்களுடன் பொய்யான ஹதீஸ்களும் கலந்து விட்டிருக்கின்ற காரணத்தால் அதனை இனம் பிரிக்கும் அளவுக்கு அதற்கான கல்வி ஞானம் இல்லாத காரணத்தால் ஹதீஸ்களை என்னால் பின்பற்ற இயலாது அதனைப் பின்பற்றுவதிலிருந்து நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன் என்று சிலர் கூறிக் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னாவிற்குக் கட்டுப்படாமல் அவற்றைப் புறக்கணித்துக் கொண்டு இருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த இவர்களது பிடிவாதத்தை விளக்க வேண்டுமென்றால் : ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவனுக்கு மருந்துகள் தேவைப்படுகின்றது. இன்று உண்மையில் மருந்துக் கடைகளில் உண்மையான மற்றும் போலி மருந்துகளும் விற்கப்படுகின்றதெனில் போலியைத் தவிர்த்து விட்டு நல்ல மருந்துகளை வாங்குவதற்கு நாம் எவ்வாறு அதில் பரிச்சயப்பட்ட நபரைத் தேடி அவரது துணையை நாம் பெற்றுக் கொள்வதில் எதுவும் நம்மைத் தடுத்து விடாது என்பது நடைமுறை உண்மையாகும். தனக்குாிய அந்த அசலான மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருவன் விரும்புவானா அல்லது அசலும் போலியும் கலந்திருக்கின்றது. எனவே நான் எந்த மருந்தையும் வாங்கப் போவதில்லை யாருடைய துணையையும் தேடப் போவதில்லை என்று கூறி சாவை எதிர்கொள்வானா?

இன்றைக்கு கடவுளே இல்லை என்ற கொள்கையும் நன்மைகளும் தீமைகளும் நம்மைச் சுற்றி இருந்து கொண்டிருக்கும்பொழுது நம்முடைய இந்த நிலைப்பாடு இத்தகைய தீமைகளில் நாம் ஈடுபட்டு விடுவதிலிருந்து நம்மைத் தடுத்து விடாது. எனவே ஆதாரமான ஹதீஸ்களும் ஆதாரமற்ற ஹதீஸ்களும் கலந்து இருக்கின்றது என்ற காரணத்தைக் கூறி நான் சுன்னாவைப் பின்பற்ற மாட்டேன் என்று கூறுவது சுன்னாவை அவமிதிக்கும் செயலாகும். இந்த உலக வாழ்க்கையில் நமக்கு எது நல்லது எது கெட்டது என்று நாம் தேர்ந்தெடுத்து அனுபவிக்கின்றோமோ அது போல சுன்னாவையும் நாம் எது ஆதாரமுள்ளது எது ஆதராமற்றது என்று அறிந்து சுன்னாவைப் பின்பற்றுவதும் அந்த சுன்னாவிற்குக் கட்டுப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும்தான் ஒரு முஸ்லிமின் மீது உள்ள அடிப்படைக் கடமையாகும். சுன்னாவைத் தேர்ந்தெடுக்கின்ற விசயத்தில் எது ஆதாரமற்றது என்று தெரிய வருகின்றதோ அதனை அறிந்த மாத்திரத்திலேயே உதறித் தள்ளிவிடுவதும் ஒரு உண்மையான முஸ்லிமின் மீதுள்ள கடமையுமாகும்.

தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். அல்குர்ஆன் 16:44

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 5:92

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

மோசம் போகும் மனிதர்கள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

உலகில் பெரும் பெரும் அறிஞர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள் மற்றும் பல துறை மன்னர்கள், அவர்களின் அறிவு ஆற்றலில் குறைவு இல்லை. ஆயினும் மனிதனை தெய்வமாக்குவதும், தெய்வத்தை மனிதனாக்குவதும் தெய்வத்தால் மன்னிக்கப்படாத குற்றம். கல்லை சிலையாக வடித்து அதனை தெய்வமாக வழிபடுவது தெய்வத்திற்கு இணை வைக்கும் செயல், மாபெறும் குற்றம் என்ற மறுக்க முடியாத உண்மையை அவர்களால் ஜீரணிக்க முடிகிறதா? கல்லை தெய்வமாக நம்பி மோசம் போகும் உலகியல் அறிஞர்களின் எண்ணிக்கை தெரியுமா?

இறந்தவர்கள் இறந்தவர்கள்தான்; அவர்கள் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதாக நம்பி, அவர்களால் மற்றவர்களின் கோரிக்கைகளை கேட்க முடியும், கோரிக்கைகளை நிறைவேற்றித்தர முடியும் என்பது மூட நம்பிக்கையாகும் என்ற இறைவனின் அழகிய உபதேசத்தை ஜீரணிக்க முடியாத எஞ்சினியர்கள் மற்றும் பலதுறை அறிஞர்கள்களின் எண்ணிக்கை தெரியுமா?

அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை மட்டுமே மார்க்கமாக எடுத்து நடக்க வேண்டும். மனித யூகங்களை மார்க்கமாக எடுத்து நடப்பது, நம்பிச் செயல்படுவது மோசம் போய் நரகில் கொண்டு சேர்க்கும்  செயலாகும் என்ற அல்லாஹ்வின் எச்சரிக்கையை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தெரியுமா?

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இறப்பிற்குப்பின் உண்டான மத்ஹபுகள், தரீக்காக்கள், மற்றும் பல சடங்குகள் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராதவை பின்பற்றக் கூடாதவை என்பதை உரிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் நிலை நிறுத்தினாலும் அவற்றை ஜீரணிக்க முடியாத முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகள் எண்ணிக்கை தெரியுமா?

அல்லாஹ் இந்த உம்மத்திற்கு கொடுத்த மார்க்கம் இஸ்லாம். பிரச்சார பணி புரிகிறவர்கள் தங்களை முஸ்லிம் என்றே அழைத்துக்கொள்ள வேண்டும் என்பது அல்லாஹ்வின் அழகிய உபதேசமாக இருந்தும் (41:33) அதனை ஜீரணிக்க முடியாமல் தங்கள் சொந்த கற்பனையில் தோன்றிய காரணங்களை  காட்டி பல இயக்கங்களாக பிரிந்து செயல்படுவதை நியாயப்படுத்தும் முஸ்லிம் அறிஞர்களின் உலகியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தெரியுமா?

இப்படி எண்ணற்றோர், கோடிக்கணக்கானோர் சத்தியத்தை ஜீரணிக்க முடியாமல் அசத்தியத்தை அணைத்துக்கொள்ளக் காரணம் என்ன? காரணம், அவர்களின் உள்ளங்களில் ஏற்கனவே ஊறிப்போயிருக்கின்ற, புரையோடிப் போயிருக்கிற உண்மைக்கு புறம்பான தத்துவங்களேயாகும். உள்ளங்களில் புரையோடிப் போயிருக்கிற குருட்டுத் தத்தவங்களை விட நம்மைப் படைத்த எஜமானனாகிய அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடி பணிவதே அடிமையாகிய நமது நீங்காக் கடமையாகும் என்பதை தெளிவாகக் புரிந்து கொண்டவர்களே வெற்றியடைவார்கள். அவர்களால் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளை என்று அறிந்த மாத்திரத்தில் அவர்களால் ஜீரணிக்க முடியாவிட்டாலும், தங்களின் மனோ இச்சைகளை தூக்கி எறிந்து விட்டு, அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிய முடியும்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் உள்ளம் ஜீரணித்தா அருமை மனைவியையும், பாசமுள்ள மகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்லத் துணிந்தார்கள்? எண்ணிப் பாருங்கள். துள்ளித் திரியும் அருமை மகனை அறுத்துப் பலியிடத் துணிந்தார்கள்? எண்ணிப் பாருங்கள். ஆம்! தங்கள் பகுத்தறிவை எஜமானனாகக் கொள்ளாமல், படைத்த அல்லாஹ்வை மட்டுமே தங்கள் எஜமானனாகக் கொண்டவர்களால் மட்டுமே இப்படிச் செயல்பட முடியும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஜீரணிக்க முடியாதவர்கள் தங்கள் பகுத்தறிவை தங்களின் எஜமானனாகக் கொண்டுள்ளார்கள் என்பதில் ஐயமுண்டா?

பகுத்தறிவால் ஜீரணிக்க முடிந்த அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பவர்கள், பகுத்தறிவுக்கு அடி பணிந்தார்களா? அல்லது படைத்த அல்லாஹ்வுக்கு அடி பணிந்தார்களா? இதனை எப்படி அறிந்து கொள்வது? அதனால்தான் பகுத்தறிவால் ஜீரணிக்க முடியாத சில விஷயங்களையும் அல்லாஹ் கட்டளைகளாகக் கொடுத்து மனிதனைச் சோதிக்கிறான்.

பகுத்தறிவை புறம் தள்ளி, அல்லாஹ்வின் தெளிவான கட்டளைக்கு அடி பணிகிறவன் வெற்றி பெறுகிறான், இப்றாஹீம்(அலை) அவர்கள் வெற்றி பெற்றது போல்.

அல்லாஹ்வின் கட்டளையைப் புறந்தள்ளி, தனது பகுத்தறிவுக்கு அடிபணிகிறவன் தோல்வியடைந்து நரகம் புகுகின்றான், ஷைத்தானைப்போல்.

அல்லாஹ்வுக்கு மட்டுமே சுஜூது செய்ய வேண்டியவன், செய்து கொண்டிருந்தவன், நெருப்பால் படைக்கப்பட்ட தன்னைவிட, மண்ணால் படைக்கப்பட்ட படைப்பான ஆதமுக்கு சுஜூது செய்வதா? என்பதுதானே ஷைத்தானின் பகுத்தறிவின் வாதம்? ஆம்! தனது பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தான்; தன்னையும், ஆதத்தையும் படைத்த இறைவனின் கட்டளையைப் புறந்தள்ளினான்; விளைவு? நரகம் புகுந்தான். அதே போல் அல்லாஹ்வின் கட்டளையை ஜீரணிக்க முடியவில்லை என்பதற்காக பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நாசமடைந்து நரகம் புக நேரிடும். அல்லாஹ் அதைவிட்டும் பாதுகாப்பானாக.

இஸ்லாத்தின் பெயரால் போலிச்சடங்குகள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? ஒரு கணம் சிந்திப்போமாக!

நாம் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்கள்!
புனித இஸ்லாத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் நாம், மார்க்கத்தின் பெயரால் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் பின் பற்றிக்கொண்டு நமது வசதிக்கேற்ப தொழுகை, நோன்பு போன்ற சில வணக்கங்களை மட்டும் செய்துவிட்டு நாமும் முஸ்லிம்கள் என மார்தட்டிக் கொள்கிறோம்.

உண்மையில் நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா?
அல்லாஹ்வை நமது ஏகநாயனாகவும், அவன் இறுதித்தூதரை நமது வாழ்வின் ஒரே வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொண்டுள்ள நாம், இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்லாஹ்வின் அருள் மறையாம் அல்குர்ஆனையும் அவனது தூதரின் தூயபோதனையாம் அல் ஹதீஸையும் பின் பற்றுகிறோமா ? அவற்றின்படி செயலாற்றுகிறோமா?

இவற்றைப் பின்பற்றாது மனம்போன போக்கில் விரும்பியவாறு வாழ்ந்துவிட்டால் நாம் உண்மையான முஸ்லிம்களாக இருக்க முடியுமா? என நாம் நம் நெஞ்சைத் தொட்டு நம்மையே நாம் கேட்டுப்பார்ப்போம். எத்தனை சதவிகிதம் நாம் பின்பற்றுகிறோம் எனத் தெரிந்துவிடும்.

இதோ இஸ்லாத்தின் பெயரால் நாம் செய்யும் பித்அத்துகள்! சடங்குகள்!!
முதன் முதலில் நமக்குக் குழந்தை பிறந்ததும் மதபோதகர் ஒருவரை அழைத்து பொருள் புரிந்தோ புரியாமலோ அழகாகத் தெரியும் ஒருபெயரை தேர்வு செய்து பாத்திஹா, துஆ ஓதி பெயர் சூட்டி மகிழ்கிறோம்.

பின்னர் அரபி மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்காக அனுப்பிவைக்கிறோம். எப்படி ஓதிவருகிறார்கள்? என்னென்ன மார்க்க அறிவுகளைப் பெற்று வருகிறார்கள்? என்பதை எந்தப் பெற்றோரும் கவனிப்பதே இல்லை. பிற்காலத்தில் கல்லூரியில் காலெடுத்து வைக்கும் நாட்களில் சரியாக ஓதத்தெரியாததால் மறந்துவிட்டது என பரிதவித்து ஓலமிடும் பலரை நாம் இன்று காணமுடிகிறது.

அது மட்டுமா?
பிள்ளைகளுக்கு ஊர்வலம் நடத்தி சுன்னத் வைபவம், புனித நீராட்டு விழா, திருமண வைபவங்கள் போன்றவற்றை சீதனப் பகட்டுகள், மேளதாளங்கள், வாணவேடிக்கைகள், பாட்டுக்கச்சேரிகள் என ஊரே வியக்கும்படி நமது வீட்டு வைபவங்களை குருமார்களின் தலைமையில் ஃபாத்திஹா, துஆ போன்றவற்றை ஓதி கோலாகலமாக அரங்கேற்றி பெருமைப்படுகிறோம்.

நடை மவ்லிது, விடி மவ்லிது
நல்லவை நிகழவும், பயணம் போகவும் நாடியது நடக்கவும் நடை மவ்லிது, விடி மவ்லிது ஓதி ‘பரக்கத்தும் பொருளும்’ குவிய விடிய விடிய சினிமா மெட்டுகளில் கச்சேரிகள் நடத்தி அமர்க்களப்படுத்துகிறோம்.

ராத்திபு, குத்பிய்யது, ஞானப்பாடல்
இவை போதாது என இறைவனின் விசேச அருளைப்பெற ராத்திபு, குத்பிய்யத்து, தரீக்காக்களின் பல்வேறு செய்குகள் அரங்கேற்றிய திக்ருகள், ஹல்காக்கள், ஞானிகள் இயற்றிய ஞானப்பாடல்கள், 4444 தடவைகள் என்ற எண்ணிக்கையில் ஸலவாத்துந் நாரியாவெனும் நரகத்து ஸலவாத்துகளை ஓதி வருகிறோம்,

மாயமந்திரங்கள்
பேய் பிசாசுகளை ஓட்ட தாவீசுகள், முடிச்சுக் கயிறுகள், மாய மந்திரங்களை தட்டைப் பீங்கானில் இஸ்முகள் என்ற பெயரில் எழுதிக் கரைத்துக் குடிப்பது, அரபி எழுத்துகளில் அழகாக வடித்து வீட்டுச்சுவர்களில் மாட்டுவது, நோய் நொடிகள் தீர பெண்களுக்கு தனியாக ஓதிப் பர்ப்பது போன்ற ஆயிரமாயிரம் போலிச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றிவரும் அவலக்காட்சிகளையும் காணுகிறோம்.

இவையெல்லாம் போலிச்சாமியார்கள், சாயிபாப்பாக்கள், வேடதாரிகள் நடத்தும் கபடநாடகங்கள்! ஏமாற்று வித்தைகள்!! கம்பியெண்ணவைக்கும் ஈனச் செயல்கள்!!

போலிகளிடம் ஏமாறாதீர்!
இவர்கள் வழியில் ஷெய்குகள்.மகான்கள் என்ற போர்வையில் இறையருள் பெற்ற மனிதப்புனிதர்கள் என்ற மாயையை எற்படுத்தி மக்களை ஏமாற்றும் எத்தர்களை இனம் கண்டு கொள்ள வேண்டாமா? இவர்களிடம் மண்டியிட்டு ஏமாறும் அப்பாவி ஆண்களையும், பெண்களையும் என்னென்பது?

இவற்றையெல்லாம் அறிவார்ந்த நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?
மரணச்சடங்குகளும் கர்மாதிகளும்

மரணச் சடங்குககளோ இந்துக்களை மிஞ்சுமளவுக்குச் சென்று விட்டது. மூன்றாவது நாள் ஃபாத்திஹா, பத்தாவது நாள் ஃபாத்திஹா, நாற்பதாவது நாள்-ஃபாத்திஹா என அரபி மத்ரஸாக்களில் படிக்கும் அப்பாவி மாணவர்களை வாடகைக்கு அமர்த்தி முழுக் குர்ஆனையும் ஓதுவது, இவற்றைக் கடன் பட்டாவது, சொத்துகளை விற்றாவது விருந்து வைபவங்களை கோலாகலமாக நிறைவேற்றி கர்மாதிகளை நடத்தி வருவதையும் பர்க்கிறோம்.

அகிலத்திற்கெல்லாம் வழி காட்டும் வான்மறை இதற்காகவா அருளப்பட்டது ?
முகவரியில்லா மகான்கள்

அடுத்து ஊர் பெயர் வரலாறே இல்லாத கப்ருகளுக்கு தெய்வீகப் பெயர்சூட்டி, அவ்லியாக்கள், ஷெய்குமர்ர்கள், நாதாக்கள் என அங்கீகாரமளித்து ஆண்டுதோறும் உற்சவங்கள், சந்தன உரூஸ்கள், கூடு கொடிகள், யானை ஊர்வலங்கள், கரக ஆட்டங்கள் என ஊரே அமர்க்களப்படும்படி விழாக்கள் எடுப்பதையும் கண்டு வருகிறோம்.

பாட்டுக்கச்சேரியும் நடனமும்
கப்ருகளைச் சுற்றி கராமத்துகளை விளக்கும் பாட்டுக்கச்சேரிகள், கதா காலட்சேபங்கள், மக்களை மயக்கும் நடன நிகழ்ச்சிகள், கப்ரு ஆராதனைகள், நேர்ச்சை தபர்ருக்கள், விஷேச மந்திரங்கள், கந்தூரிக் காட்சிகள் என அனாச்சாரங்களை வகைப்படுத்திக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மார்க்கத்தின் பெயரால் அர்ச்சனை செய்யப்படுகின்ற கைங்கரியங்கள் என்பது தான் வேதனையிலும் வேதனை!

பக்கவாத்தியங்கள்
இதற்கு போலி மத குருமார்களும், ஷைகுமார்களும், முல்லாக்களும் வயிறு வளர்க்கும் சில சில்லரை உலமாக்களும் பக்கவாத்தியங்களாக விளங்குவது தான் வேடிக்கையாக உள்ளது.

பிறந்த நாள் விழாக்கள்
இந்துக்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் எல்லாப்பழக்க வழக்கங்களையும் தவறாது பின்பற்றி ‘பிறந்த நாள் விழா, இறந்த நாள் விழா, ஆண்டு விழா’ என பல்வேறு விழாக்களையும் விடாது நடத்திக்கொண்டு நாங்கள் தான் உண்மையான முஸ்லிம்கள் என வீர முழக்கமிடுகிறோம்.

இவை போதாதென்று நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா, கௌதுல் அஃலம் நினைவு விழா, ரிஃபாயி ஆண்டகை விழா, நாகூர் நாயக விழா, காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி உரூஸ் விழா, மோத்தி பாவா ஆண்டு விழா, குணங்குடி மஸ்தான் விழா, பொட்டல் புதூர் மைதீன்(யானை) ஆண்டகை விழா, ஆத்தங்கரை செய்யிதலி அம்மா விழா, பீமாப்பள்ளி பீஅம்மா விழா, பீடி மஸ்தான் விழா, தக்கலை பீரப்பா விழா, மெய்நிலை கண்ட ஞானிகள் விழா என மிகவும் பக்தியோடு தேசிய விழாக்களாக கரக ஆட்டங்களுடன் யானை ஊர்வலம் சகிதமாக கொண்டாடப்பட்டு வரும் புதுமையான விழாக்களையும் நாடெங்கிலும் பரவலாகக் காண முடிகிறது.

ஞானமர்ர்க்கத்தின் பெயரால் தீட்சைகள்
நம்மை வழி நடத்தும் குருமார்களோ நமது பலவீனங்களையும், அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு சுவர்க்கத்திற்கு வழிகாட்டுகிறோம் எனக் கூறி ஆதாயம் தேடி வழிகெடுத்து வருகின்றனர். பால் கிதாபு என்றும், தாவீசு என்றும், இஸ்மு என்றும், தீட்சை யென்றும், பைஅத் என்றும், முரீது என்றும் கூறி ஞான மார்க்கத்தின் பெயரால் நம்மை அதல பாதாளத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பித்அத்கள் (புதுமைகள்) பெயரால் சமுதாயத்தில் அரங்கேறிவிட்ட சீர்கேடுகளைப் பார்த்ததீர்களா?

விஞ்ஞானயுகத்தில் கற்காலம்
விஞ்ஞானத்தின் உச்சிக்குச் சென்று வியத்தகு விந்தைகள் புரியும் இந்த அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டு கற்கால மனிதர்களைப்போல் இயங்கும் நம் மக்களின் அறியாமையையும் பேதமையையும் என்னென்பது? இஸ்லாம் கூறும் அறிவியல் நுட்பங்களையும், அற்புதமான தத்துவங்களையும் தனிசிறந்த நாகரிகத்தையும் மிக உயர்ந்த கலாச்சாரத்தையும் அலட்சியப்படுத்தும் அவல நிலையை யாரிடம் சொல்வது?

இந்த போலிச் சம்பிரதாயங்களையும், சடங்குககளையும் புனித இஸ்லாம் அனுமதிக்கிறதா? இவற்றிற்கெல்லாம் சாவு மணியடிக்க வேண்டாமா? கண்மூடித்தனமான பழக்கங்களையெல்லாம் மண் மூடச்செய்ய வேண்டாமா? குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ இவற்றுக்கெல்லாம் ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா? என்றால் இல்லவே இல்லை. பின் எங்கிருந்து இவை இறக்குமதியாயின? யூதர்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் போன்ற மாற்றாரிடமிருந்து படிப்படியாக இறக்குமதியாகி தொற்றிக் கொண்ட சாத்திரங்கள்! ஒட்டிக்கொண்ட நோய்கள்!! பேயாட்டம் போடும் போலிச்சடங்குகள்!!!

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?
1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்
2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு
3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்
4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு
5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி
6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்
7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு
8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.
9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்
10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்
11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை
12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்
13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை
14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்
15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.
16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்
17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்
18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி
19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து
20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.
21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு
22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.
23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை
24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு
25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.
26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.
27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.
28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.
29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,
30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.
31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.
32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.
33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.

இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !
இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?

முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?
இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’

‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,

‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!

இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

வாருங்கள்.இன்று நாம் சபதம் ஏற்போம் !
அறிவுக்கேற்ற மார்க்கமாம் இஸ்லாத்தை நோக்கி அகில உலகமும் மிக வேகமாக வரும் இந்த கணினியுகத்தில், முஸ்லிம்களாகிய நாம், இனியும் அறிவுக்கே பொருந்தாத மூட நம்பிக்கைகளை நம்பி,

சடங்கு சம்பிரதாயங்களைச் செய்து மோசம் போக மாட்டோம்! போலி மதவாதிகளால் ஏமாற மாட்டோம்!! என சபதம் ஏற்போமாக!

இஸ்லாத்தின் தூய கொள்கைகளை உயிருள்ளவரை உறுதியுடன் பின்பற்றி அறநெறி வழுவாது வாழ்வோம்.
என இன்று வீரசபதம் ஏற்போமாக!

‘இஹ்தினஸ்ஸராத்தல் முஸ்தகீம்’

இறைவா! எங்களுக்கு நேரான வழியைக் காட்டுவாயாக! (அல்குர்ஆன்: 1:06)

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَة ً وَفِي الآخِرَةِ حَسَنَة ً وَقِنَا عَذَابَ النَّار

‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபந்நார்’
எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையை நல்கும் நல் வாழ்வை வழங்குவாயாக! (அல்குர்ஆன்: 2:201)

source  http://albaqavi.com/

குர்ஆனின் குரல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ரமலான் மாதம் என்றவுடன் திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் என்று முஸ்லிம்களில் மனதில் சிந்தனை பிறக்கும். பேரண்டத்தையும் மனிதனையும் படைத்த இறைவன் மனிதனுக்கு நேர்வழி காட்டுவதற்காக தூதர்களை அனுப்பினான். மனித குலத்திற்கு அருளப்பட்ட இறுதி வேதமே திருக்குர்ஆன் ஆகும். குர்ஆன் என்றவுடன் இது மத சம்பந்தப்பட்ட நூல்; பழைய வரலாறுகள் இருக்கும்; சொர்க்கம் நரகம் பற்றி மட்டுமே இருக்கும்; என்றெல்லாம் நினைத்தால் அது சரியான பார்வையாகாது. திருக்குர்ஆன் நாம் வழக்கமாகப் படிக்கும் நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமைந்திருக்கிறது. பொதுவாக மதத்தைப்பற்றி இன்று உலகம் கொண்டுள்ள கருத்தின்படி உள்ள ஒரு மத நூலன்று இது! மாறாக ஓர் இயக்கத்தை உருவாக்க வந்த வேதமாகும். ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க வந்த நூல் இது. இந்நூல் வந்ததுமே சாந்த குணமும் இனிய சுபாவமும் கொண்ட ஒருவரை தனிமையிலிருந்து வெளிக்கொணர்ந்து தீமைக்கு எதிராக குரல் எழுப்புமாறு தூண்டிற்று. போதைக்கு எதிராகவும் விபசாரத்தை ஒழிப்பதற்காகவும் இன்னபிற அனைத்து அசத்தியத்துக்கு எதிராகவும், மூடபழக்க வழக்கங்களை மூட்டை கட்டவும் போர்க்குரல் கிளம்பிற்று. ஒவ்வொரு வீட்டிலுருந்தும் இனிய பண்பும் நல் ஒழுக்கமும் உடைய ஒவ்வொருவரையும் ஈர்த்துச் சத்தியத்தின்பால் அழைப்பு விடுக்கும் அளவிற்க்கு திருக்குர்ஆனின் போதனைகள் வலிமையானவையாக இருந்தன. கிபி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் நபியாக வந்த நபி(ஸல்) அவர்கள் முலமாக இவ்வுலகிற்கு குர்ஆன் அருளப்பட்டது. அவர்களது 40 வயதில் தொடங்கி 63வது வயதுவரை சிறிது சிறிதாக இடம் பொருள் சூழ் நிலைகளைத் தாங்கி 23 ஆண்டுகளில் முழு குர்ஆன் நிறைவடைந்தது. இறையச்சத்தை மையமாக வைத்து சத்திய பிரச்சாரம் செய்தார்கள் முஹம்மது நபி அவர்கள். இறைபோதனைக்கு இசைவாக உலகைச் சீர்திருத்தவும் பாடுபடக்கூடிய ஒரு குழுவாக (உம்மத்தாக) அமைத்து விடுவதுதான் நபி(ஸல்) அவர்களின் ஒப்படைக்கப்பட்ட பணியாக இருந்தது. அந்த அழைப்பும் நற்போதனையும் கொண்ட வேத நூல்தான் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களுக்கு அருளிய அல்குர்ஆன். இஸ்லாத்தை ஓர் இயக்கமாக – உலகளாவிய இயக்கத்துக்கு தகுதியான முழு அமைப்பாகத்தான் நபி(ஸல்) அவர்கள் ‘இஸ்லாம்’ எனும் இயக்கத்துக்கு முகவரியிட்டுக் காட்டினார்கள். ஆனால் இன்றோ முஸ்லிம்கள் பலர் இஸ்லாம் எனும் வாழ்க்கைத் திட்ட இயக்கத்தை மதாமாகப் பார்க்கிறார்கள். இதனால் இஸ்லாத்தின் தூயவடிவம் உலக மக்களுக்கு சரிவரத்தெரியாமல் போய்விடுகிறது. இஸ்லாத்தை அறிய திருக்குர்ஆனின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அது விவாதிக்கும் விஷயம் என்ன? அதன் மையக் கருத்து என்ன? அதன் இலக்கும் குறிக்கோளும் என்ன? என்பனவற்றையெல்லாம் சாதாரனமாகத் தத்தமக்குத் தெரியும் மொழியில் குர்ஆனை படிப்பவர்களுக்கு மிக எழிதில் விளங்கும்! அது விவாதிக்கும் விஷயம் மனிதனைப்பற்றியாதாய் இருக்கிறது. எனவேதான் மனிதனின் வெற்றியும் நற்பேறும் அவனுடைய வீழ்ச்சியும் இழப்பும் எந்த அம்சங்களில் அமைந்துள்ளன என்பதை அது விரிவாக ஆராய்கிறது. இதன் மையக் கருத்து இதுதான் இறைவன் பிரபஞ்சத்தின் அமைப்பு முறை இவற்றில் மனிதனுடைய அந்தஸ்து அவனுடைய உலக வாழ்வு ஆகியவை பற்றி தன் புலனுணர்விற்கு உட்பட்டவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மனிதன் ஏற்படுத்திக்கொண்ட சித்தாத்தங்கள் அல்லது தன் கற்பனைக்கு ஏற்ப உருவாக்கிக்கொண்ட தத்துவங்கள் அல்லது மன இச்சைக்கு அடிமைப்பட்டு வகுத்துக்கொண்ட கருத்தோட்டங்கள் ஆகியன யாவுமே அடிப்படையில் தவறானதாகவே இருக்கின்றன. விரும்பத்தகாத விளைவுகளையும் அழிவையும் தரக்கூடியனவாகவுமிருக்கின்றன. ஆகவே மனிதனுடைய பலம் பலவீனம் ஆகியவற்றை முழுமையாக விளங்கிக்கொண்டு ஒழுக்கமுள்ள இறையச்சமுள்ள சீரிய நேரிய வாழ்க்கையை அமைப்பது தேவையாகிறது. அப்படிப்பட்ட வாழ்வை மேற்கொண்டால்தான் அவனுடைய இறுதி முடிவு வெற்றியுடையதாயும் நற்பேறு கொண்டதாயும் இருக்கும் எனப் புலனாகிறது. பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டுவரும் மூடப்பழக்க வழக்கங்களைத் துடைத்தெறியும் கருத்துக்கள், வானம் பூமி ஆகியவற்றின் அமைப்பு, மனிதனைப் படைத்தல், பிரபஞ்சத்தின் சான்றுகள், சென்றுபோன சமுதாயங்களின் வரலாற்று நிகழ்ச்சிகள், தனி மனிதனின் இல்லற கடமைகள், பொது வாழ்வின் ஒழுக்கங்கள், இறைவணக்கம், ஏழைவரி, மனித சமுதாய ஒற்றுமை……. ஆகியவை பற்றியெல்லம் குர்ஆன் பேசுகிறது .மக்களுக்கு மத்தியில் உண்மையான சகோதரத்துவத்தையும், ஒற்றுமையும் நிலவவும், ஏற்றதாழ்வுகள் நீங்கிடவும் குர்ஆன் வழிகாட்டுகிறது. அப்படிப்பட்ட உலக பொதுமறை நூலான திருக்குர்ஆன் இவ்வுலகிற்கு கிடைக்கப்பெற்ற மாதம்தான் ரமழான். திருமறையை மட்டும் இறைவன் வழங்கவில்லை. அத்தோடு இவ்வுலகிற்கு ஒரு தூதரையும் மக்களுக்கு வழிகாட்ட அனுப்பியிருந்தான். ஒரு கட்டடத்தை கட்டுவதற்கு வரைபடமும் அதன்படி நிர்மானிக்க ஒரு பொறியியளாளரும் தேவைப்படுவதைப்போல முழு மனித சமுதாயத்துக்கும் குர்ஆனையும் முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் வழங்கியிருக்கிறான். திருக்குர்ஆனின் விளக்க உரையாக தம் வாழ்க்கையை நபி(ஸல்) அவர்கள் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சொல்லும் செயலும் அங்கீகரித்த விஷயங்களும் குர்ஆனின் வரையரைக்குட்பட்டே அமைந்திருந்தன. ஆக, குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய வாழ்வு முறையையும் பேணி வாழ்வதே உண்மை இஸ்லாம் ஆகும்.