இஸ்லாம்தளம்

பிப்ரவரி10, 2009

திசை திருப்பும் உள் நோக்கம்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களையும் முட்டளாக்கும் முயற்சியில், அவதூறுகளை சுமந்து களமிறங்கிய நேசகுமார் ”தனியொருவனாக பதிலளிப்பதின் சங்கடங்கள்” என்று இப்போது புலம்புகிறார். மந்தையில் அமர்களமாய் புகுந்த தனி நரியைப்போல, இஸ்லாத்தின் மீது அவதூறுச் சேற்றை வாரியிறைக்க தமிழ்மணம் வலைப்பதிவில் 3.12.2004ல் ”நபிகள் நாயகத்தின் வாழ்வு” என்று தொடங்கி.. நேசகுமார் தனி நபராகத்தான் வலிய களமிறங்கினார்.

நொங்கு தின்ன ஆசைப்பட்டவன், நோண்டித்தின்ன சங்கடப்பட்டானாம்.
இஸ்லாத்தின் மீது பெய்யானக் குற்றங்களை அடுக்கடுக்காய் சுமத்துவதில் நேசகுமார் தன்னையொரு தன்னிகரற்ற அறிவாளி(?)யாகத்தான் அடையாளம் காட்டிக் கொண்டார். 3.12.2004ன் முதல் பதிவிலேயே பல குற்றச்சாட்டுக்களை பதிந்திருக்கிறார். அதைத் தொடர்ந்த பதிவுகளிலும், இஸ்லாத்தைப் பற்றி அவர் எழுதியவற்றில்தான் முஸ்லிம் சகோதரர்கள் குறுக்கு விசாரணை செய்திருக்கிறார்கள். அதற்கு விளக்கம் தர முன் வராமல் ”தனியொருவனாக பதிலளிப்பதின் சங்கடங்கள்” என்று தனது பன்முகத்தன்மையைக் காட்டுகிறார்.

இது தனியொருவராகக் களமிறங்குவதற்கு முன் யோசித்திருக்க வேண்டிய விஷயம். அல்லது ஒவ்வொரு வாதமாக வைத்து விவாதித்திருக்க வேண்டும். (நான் பதிலளிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை என்று அவர் சொன்னாலும் பின் ஏன் இரட்டை வேஷம்?)


கால அவகாசமெடுத்து பதிலளிப்பதன் உறுதித்தன்மை, வசதிகள்

காலம் தாழ்த்துவது தடம் புரண்ட கருத்துத் திசை மாற்றத்திற்கும் உதவியாக இருக்கும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இஸ்லாத்தின் எதிர்ப்பு.

இஸ்லாத்தின் பன்முகத்தன்மையைப் பற்றி நான் எழுதியபோது அதை இஸ்லாமிய எதிர்ப்பு எனத் தவறாகக் கருதிய முஸ்லிம் அன்பர்கள்,..

நேசகுமார் இதுவரை இஸ்லாத்தை வன்மையாக எதிர்க்கும் தீவிரவாதியாகவே தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். எதிரியை எதிரி என்று சொல்லாமல் பூசி மொழுகச் சொல்கிறாரா?

இவையனைத்தும் இஸ்லாத்திற்கு எதிராக எழுதப் படுபவை அல்ல. இஸ்லாத்தில் மாற்றம் வேண்டும் என்றுதான் நான் கோருகிறேனே தவிர, இஸ்லாமே இல்லாமல் போகவேண்டும் என வேண்டவில்லை, விரும்பவும் இல்லை.

வென்னீரில் வாய் வைத்த பூனை, தண்ணீரைக் கண்டாலும் அலறும். என்பது போல் நேசகுமார் ஏதோ ஒரு அதிர்ச்சியில் பாதித்திருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. முஸ்லிம்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் இஸ்லாத்தில் ஒன்றை சேர்க்கவோ, நீக்கவோ முடியாதே! இஸ்லாத்தின் இந்த அரிச்சுவடியை விளங்காமலேயே இஸ்லாத்தில் மாற்றம் வேண்டும் என விமர்சிப்பது நேசகுமாரின் அறியாமையை வெளிப்படுத்துகிறது.

சில முஸ்லிம்களின் குறையை இஸ்லாத்தின் குறைபாடாக முன்னெடுத்துச் செல்கிறார் என்பதை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

சிறு பிள்ளைத்தனம்.

ஆனாலும், நான் மட்டுமே அடிப்படைவாதத்திற்கு எதிராக எழுதிக் கொண்டிருக்கவில்லை. வலைப்பதிவர்களில் இணையத்தில் எழுதுபவர்களில் பலரும் அவர்களது பதிவுகளிலும், குழுமங்களிலும், வலையிதழ்களிலும் பலவித முறைகளில் இஸ்லாமிஸ்ட்டுகளுக்கு எதிரான கருத்துக்களை தத்தம் பாணியில் வெளிப்படுத்தியே வருகின்றனர். ஆனால், எனக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டும் என அனைத்து இஸ்லாமிய அன்பர்களும் விழைகிறார்களேதவிர, மேலே குறிப்பிட்டுள்ளபடி ஏனையோர் எழுதுவதில் இருக்கும் வாதங்களுக்கு பதிலளிப்பதோ, அல்லது தொடர்ந்து பதிலளிப்பதோ இல்லை.

தனது கருத்தின் மீதான எதிர்கருத்தைச் சந்திக்க முடியாமல், ”அவனும்தான் வேலியைத்தாண்டி என்னோடு சேர்ந்து மாங்காய் பறித்தான், அவனையும் கண்டியுங்கள்” என்று சொல்லும் சிறுவனின், சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது.

ஹாமீத் ஜஃபருக்குத்தான் பதிலளிப்பேன் என்ற சாதிப்பு எதற்கு?
விவாதம் நேரடியானதாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அது வரிசைப்படியாகவும் அமைந்திருக்க வேண்டும். இது விவாத விஷயத்தில் தெளிவையேற்படுத்திட உதவியாக இருக்கும். சுற்றி வளைத்தல் என்பது விவாத மையக் கருத்தை விட்டு விலகச் செய்து – திசை திருப்பவே உதவும் என்பதில் என்னிடம் மாற்றுக் கருத்தில்லை.

டிசம்பர் 3.2004ல் நேசகுமார் முதல் வலைப்பதிந்து பல பதிவுகளுக்குப்பிறகே ”கயமை வேண்டாம்” என்று 23.12.2004ல்(திண்ணையில்) ஹாமீத் ஜாஃபர் எழுதுகிறார். (நேசகுமார் இதை 7.1.2005ல் தான் வலைப்பதிவில் அறிமுகப்படுத்துகிறார்) இடைப்பட்ட ஒரு மாத நாட்களில் முஸ்லிம் சகோதரர்கள் வலைப்பதிவில், வைத்த கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்காமல் ஹாமீத் ஜாஃபருக்குத்தான் பதிலளிப்பேன் என்று சுற்றி வளைத்து ஜல்லியடிப்பது திசை திருப்பும் நோக்கமா இல்லையா?

தான் நினைப்பது போலவே பிறர் எழுத வேண்டும்.
தான் நினைப்பது போலவே மற்றவர்கள் எழுத வேண்டும் என்று நினைப்பவரின் புத்தியில் கோளாறு இருக்கும் என்பதை எவரும் மறுக்க முடியாது. நேசகுமாரும் இந்த சுபாவத்தையுடையவர்தான் இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. அவரே அப்படி எழுதியிருக்கிறார்.

ஹமீது ஜா·பருக்கு உடனடியாக அபூமுஹை எதிர்வினை புரிந்திருக்க வேண்டும்.

என்னே அறிவு!? ஹாமீத் ஜாஃபர் திண்ணையில் எழுதுகிறார். திண்ணைக்கும் நமக்கும் சம்மந்தமில்லை. 7.1.2004ல் நேசகுமாரின் வலைப்பதிவில் ”இஸ்லாம் முன் வைக்கும் இறைவன் – ஹாமீத் ஜாஃபருக்கு சில கேள்விகள்” என்ற தலைப்பில் ”கயமை வேண்டாம்” என்ற கட்டுரைக்கு சுட்டி கொடுக்கப்பட்டிருந்தது.

நான் பின்பற்றும் மதத்தை ஒருவன் குறை சொன்னால், நான் பின்பற்றும் மதம் அந்தக் குறைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது என்பதையே நான் நிரூபிக்க வேண்டும். இதை விடுத்து நீ பின்பற்றும் மதம் யோக்கியமா? என்று நான் திரும்ப அவனைக் கேட்டால், நான் பின்பற்றும் மதம் யோக்கியமானதல்ல என்பதை என்னை அறியாமலேயே ஒப்புக் கொள்கிறேன்.

நேசகுமார் இஸ்லாத்தைப் பற்றி விமர்சித்து விட்டார் என்பதற்காக, நான் என் நண்பர்களின் முதுகிலேறி அவர்கள் பின்பற்றும் மதத்தை விமர்சிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை!

கயமை வேண்டாம் ஆக்கத்தில் இந்து மதத்தைச் சாடியும் எழுதப்பட்டிருந்தது. இதில் இஸ்லாம் உடன்படவில்லை என்பதாலும், ஹாமீத் ஜஃபருக்கு என்று பெயர் குறிப்பிட்டே நேசகுமாரின் வலைப்பதிவுத் தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாலும் சம்மந்தப்பட்டவர்களே விவாதிக்கொள்வதுதான் சிறப்பாகும்.

உதாரணமாக ஹமீது ஜா·பரின் இஸ்லாம் பற்றிய கருத்துக்கு நான் எழுதும் பதிலை விட, அதை மறுத்து அபூமுஹை அளித்துள்ள பதில் படிப்பவர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஹாமீத் ஜஃபருக்கு – அதாவது ஒரு முஸ்லிற்கு, முஸ்லிமல்லதோர் பதிலளித்தால் அது இன்னும் கணமாக இருந்திருக்குமே!

பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.
நேசகுமார், முன்பு பின்னூட்ட வாசலை அடைத்து, விவாத நாகரீகமற்றவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இப்போது ”பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்” என்று ஏலம் விடுகிறார். ஒருமுறை முகத்திலறைந்தாற்போல் சாத்திய கதவை எவரும் மீண்டும் தட்டுவார்களா?

தகுதியற்ற தம்பட்டம்.

நான் இஸ்லாம் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருக்கவில்லை. வரலாறு, சமூகம், சினிமா, இலக்கியம், மொழி, கலை என பல்வேறு விஷயங்களைப் பற்றி – சித்தர்களிலிருந்து விண்கோள் வரை எழுதியிருக்கிறேன், எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் புத்தகமாய் இவற்றைப்(இஸ்லாம் பற்றியவை) பதிப்பிப்பதற்கு கேட்டு வந்த ஆ·பர்களுக்கும் கூட மாதங்கள் பல ஆகியும், கமிட் செய்யாமல் இருக்கிறேன் – நேரமின்மையால். இந்நிலையில் மூச்சுவிடாமல் இஸ்லாம் பற்றி எழுதுவது, நாளுக்கு நாலு பதிவு செய்வது, சாத்தியமில்லாமல் போகிறது.

எனது இவ்வலைப்பதிவு இதுவரை நாலாயிரத்துக்கும் அதிகமான முறை படிக்கப் பட்டிருக்கிறது (கவுன்ட்டரில் தெரிவது உள்ளே வரும் ஐபி எண்ணிக்கை மட்டுமே. மீண்டும் மீண்டும் படிப்பவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை), இது மட்டுமல்லாது திண்ணையில், மரத்தடியில், பதிவுகளில் என பல்வேறு இடங்களில் பலர் படித்திருக்கின்றனர். பின்னூட்டங்கள் போன்று பதிக்க ஆரம்பித்தேனென்றால், எனது எழுத்துக்கள் தமது மதிப்பை இழந்துவிடும்.

1. வரலாறு, சமூகம், சினிமா, இலக்கியம், மொழி, கலை, சித்தர்களிலிருந்து விண்கோள்வரை எழுதியிருக்கிறேன்.
2. (இஸ்லாம் பற்றியவை) பதிப்பிப்பதற்கு கேட்டு வந்த ஆ·பர்களுக்கும் கூட மாதங்கள் பல ஆகியும், கமிட் செய்யாமல் இருக்கிறேன் –
3. எனது இவ்வலைப்பதிவு இதுவரை நாலாயிரத்துக்கும் அதிகமான முறை படிக்கப் பட்டிருக்கிறது.

தற்புகழ்ச்சி விரும்பியைத் தவிர வேறு எவரிடமிருந்தும் இந்த தம்பட்டம் வெளிப்படாது. இவையெல்லாம் 3.12.2004ல் நேசகுமார் முதல் வலைப்பதிந்து, தொடர்ந்து பதிந்த இஸ்லாத்தின் வரலாற்றுப் புரட்டலுக்கு எந்தளவிற்கு வலுசேர்க்கும்? உண்மைப்படுத்தும்? என்பதை நடுநிலையாளர்கள் புரிந்தால் சரி.

பொதுவாக
நேசகுமார் 23.3.2005 பதிவில் கவ்வைக்குதவாத வாதங்களையே வைத்திருக்கிறார். திண்ணையில் எழுதியது, மரத்தடியில் சூடு பறந்தது, யமுனா ராஜேந்திரனுக்கு மறுமொழியிட்டது, நாகூர் ரூமி வந்தது போனது இன்னும் இது மாதிரியான உளறலெல்லாம் ”இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்” என்ற பெயரில் ”நபிகள் நாயகத்தின் வாழ்வோடு” எப்படி சம்மந்தப்படும்? என்பதை பொறுத்திருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுவரை பழைய பாக்கிக்கான கருத்துக்களை வைக்கிறேன்.

விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட நேசகுமாரின் பதிவு.

http://islaamicinfo.blogspot.com/2005/03/blog-post_23.html

<!– tag script Begins

tag script end –>

உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

‘சரிவரத் தெரிந்துக்கொள்ளாமல் எதைப்பற்றியும் ஒரு வார்த்தைக் கூட பேசி விடாதே!அது உன் அறியாமைக்கு விளக்கமாகி விடும்’ – முஸ்லிம்களின் நான்காவது கலீபாவான அலீ (ரலி) அவர்கள் தன் மகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காணப்படுகிற வாசகங்கள் இவை!

குர்ஆனில் ஒரு வசனம் இருக்கிறது: ‘தொழுகையாளிகளுக்கு கேடு தான்’ என்று!இதை வைத்து இஸ்லாத்தின் இறைவன் தொழுகையாளிகளைச் சபிக்கிறான் என்று விமர்சனம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் இஸ்லாமைப் பற்றிய இன்றைய விமர்சனங்களும் – அரைகுறையாக!

இஸ்லாம் என்கிற நெறி எல்லா துறைகளிலும் எல்லா வகை மனிதர்களிடத்திலும் (முஸ்லிம்களாயினும் முஸ்லிம்கள் என்ற பெயரிலோ வேறு பெயர்களிலோ வாழ்பவர்களாயினும் நாத்திகர்களாயினும்) தனது தாக்கத்தை நிகழ்த்தியுள்ளது.

இன்றைக்கும் அறிஞர் பெருமக்களிடையே அதிக விவாதத்துக்கு உள்ளாவதாகவும் இயல்பான ஈர்ப்புத்தன்மை வாய்ந்த ஒன்றாகவும் அதன் காரணமாகவே மிகுந்த பொறாமைக்காளானதாகவும் இஸ்லாம் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீத வளர்ச்சி பெற்றது என்கிற புள்ளிவிவரமும் – செப் 11 நிகழ்வுக்குப்பின் இஸ்லாமை ஆராயத்தலைப்பட்டு அமெரிக்காவில் மட்டுமே 80,000க்கும் மேலானோர் இரண்டு வருட காலக்கட்டத்தில் இஸ்லாமை ஏற்றனர் என்று சென்னையிலுள்ள அமெரிக்கத் துணை தூதரக அதிகாரி ஏஞ்சலா வில்லியம்ஸ் குறிப்பிடுவதும் சிந்திக்கத்தக்கது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறையாக அதுவும் சிலுவைப் போர்களின் சமயத்தில் இஸ்லாமை மனம் போன போக்கில் விமர்சித்து- அதன் பிம்பத்தை உடைத்தெறிய கங்கணங் கட்டிச் செயல்பட்ட சதிகார எழுத்துக்களை வாசித்து பின் அதையே தனது நவீன விமர்சனமாக ‘ஜல்லி’ அடிக்கிற நபர்கள்-அவ்வாறு இஸ்லாமை விமர்சிப்பதன் மூலம் தன்னை அறிவுஜீவியாக (இஸ்லாமை அறியாதவர்களிடம்)காட்டிக்கொள்வதும் உண்டு.

(சிலுவைப்போர்களின் சமயத்தில் கிறித்தவர்களால் உமிழப்பட்ட துவேஷங்களுக்காக மறைந்த போப் ஜான்பால் அவர்கள் மன்னிப்புக் கோரியதும் – குர்ஆனை பகிரங்கமாக முத்தமிட்டு இஸ்லாமின் சிறப்புகளை உலகறியும் வண்ணம் உரத்துப் பேசியதும் சமீப கால சரித்திரம் எனினும் அந்த துவேஷ விஷம் மேற்குலகில் முழுமையாக முறிந்துவிட்டதாகவோ அதன் பாதிப்பு கீழை தேசத்து ‘அறிவுஜீவி’களின் மூளையில் ஏறவேயில்லை என்றோ சொல்லி விட இயலாது).

முஹம்மதிய மதத்தவர்கள் என்று முஸ்லிம்களைக் குறித்து சொல்லத் தொடங்கியதும் இந்த காலக் கட்டத்தில் தான்.

இயேசு கிறிஸ்துவை கடவுளாக்கியவர்கள் கிறிஸ்தவர்கள்
கவுதம புத்தனை கடவுளாக்கியவர்கள் புத்த மதத்தினர்.
ஆனால் முஸ்லிம்கள் முஹம்மது நபியை என்னதான் உயிரினும் மேலாக நேசித்தாலும் கடவுள் தன்மை பெற்றவராக கருதுவதில்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்களே அதற்கான வழியை பூரணமாக அடைத்து விட்டார்கள்.

இஸ்லாம் என்கிற இந்த மார்க்கமானது கி.பி ஆறாம் நூற்றாண்டில் முஹம்மது நபியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றல்ல. மாறாக முஹம்மது நபி(ஸல்) அவர்களைக்கொண்டு முழுமைப்படுத்தப்பட்ட நெறியாகும்.

‘அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே நாம் அனுப்பினோம்! – அவ்வாறு அனுப்பப்படாத ஒரு சமுதாயமும் இல்லை’ என்று திருக்குர்ஆன் சொல்லிக்கொண்டிருக்கிறது.

அதை வைத்துப்பார்க்கும் போது இந்தியத்திருநாட்டுக்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கும் கூட திருத்தூதர்களை இறைவன் அனுப்பியிருக்கத்தான் வேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியைப்போல உறுதியானதே.

ஹிந்து மதத்தின் ரிக் மற்றும் அதர்வண வேதமும் பவிஷ்ய புராணமும் முஹம்மது நபியைப் பற்றிய துல்லியமான தெளிவான முன்னறிவிப்புகளை தந்திருப்பதைப் பார்க்கும் போது குர்ஆனுடைய மேற்கண்ட வசனத்தை அது மேலும் உறுதிப்படுத்துவதாகவே உள்ளது.

அப்படி இந்தியாவுக்கோ அல்லது அதன் பல சமூகங்களில் ஒன்றான தமிழ்ச் சமூகத்துக்கோ அனுப்பப்பட்ட தூதுவர் இவர் தான் என்று யாரையும் சுட்டுவதற்கு வேதங்களிலோ வரலாற்றிலோ ஆதாரமான முகாந்திரங்களில்லை என்பதால் யாரையும் நாம் அறுதியிட்டு கூறுவதற்கு வழி ஏதுமில்லை.

எது எப்படி இருப்பினும் முஹம்மது நபிக்கு அருளப்பட்ட வேதமான திருக்குர்ஆன் ஒன்றே இஸ்லாம் என்கிற நெறியின் இறுதியான பதிப்பு என்பதும் அதுவே இறை மன்றத்தின் நடைமுறைச்சட்டம் என்பதுமே முஸ்லிம்களின் முதன்மை நம்பிக்கை. குர்ஆனில் பெயர் காட்டப்படுகிற ஒரு சில பிற வேதங்களான இன்ஜீல் (பைபிள்) தவ்ராத் (யூத வேதம்) ஆகியவற்றையும் வாசித்துப்பார்க்கும் படி இன்றைக்கும் இஸ்லாம் சொல்லிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அவற்றில் (முந்தைய வேதங்களில்) சுவை கருதியோ சுயநலம் கருதியோ மனித கையாடல்கள் நடந்துவிட்டதையும் அது அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.

போதிக்க வந்த நூல்கள் தனது பாதையிலிருந்து விலகி தனி மனித துதியையும் கற்பனை ரசத்தினையையும் மிதமிஞ்சி உற்பத்தி செய்கிற வெறும் ‘களஞ்சியங்’களாகவே இன்று கருதப்படுவதை ‘கோபியர்களைக் கொண்டு கொச்சைப்படுத்தப்படும் கிருஷ்ணனை வைத்தும் – ராமன் சீதை உறவுமுறை குறித்து பல்வேறு முரணான வகை இராமாயணங்கள் புனையப்பட்டிருப்பதிலிருந்தும் அறியலாம்.

இவ்வாறு தனது நோக்கங்களிலிருந்து மத நூல்கள் விலகி விட்டிருப்பதையே அவை ‘முன் நகர்ந்து சென்று விட்டதாக’ ‘அறிவு ஜீவி’களால் பெருமிதத்துடன் குறிப்பிடப்படுகிறது.

கல்கி அவதாரம் முஹம்மது நபி தான் என்று தத்தம் ஆதாரங்களுடன் அடித்துச் சொல்கிற ஒரு சில ஹிந்து மத அறிஞர் கூற்றுக்களையும் ‘அனைத்துத் தரப்பாருக்கும் நல்லதை வலியுறுத்தவும் தீமையை தடுக்கவும் தூதர்களே அனுப்பி வைக்கப்பட்டனர்’ என்கிற குர்ஆனின் குரலையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் யாருக்கும் இறைதூதர்களே அவதாரங்களென திரித்து அறியப்பட்டிருக்கலாம் அல்லது அறிந்து திரிக்கப்பட்டிருக்கலாம் என்கிற அனுமானம் வலுப்பெறுவதைக் காணலாம்.

இவை ஒரு புறமிருக்க, இஸ்லாம் என்பது வெறுமே சடங்குகளால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள மதம் அல்ல. அது நோக்கத்தையும் அதனடிப்படையிலமைந்த செயற்பாடுகளையும் வலியுறுத்துகிற நெறி!. அதனால் தான் ‘சக மனிதனை நோக்கிய புன்னகையை தருமமாக அறச்செயலாக கருதுகிற அதே நேரத்தில் ‘(பிறருக்கு காண்பிக்கவென்றே தொழுகிற) தொழுகையாளிகளுக்கு கேடு தான்’ என்றும் இஸ்லாம் சொல்கிறது. மனித எண்ணங்களை மனிதாபிமானத்துக்கு உகந்ததாக மேன்மையாக்குவதே இஸ்லாத்தின் நோக்கம் என்பதை இவை விளக்கவில்லையா….?

சுருங்கக் கூறிடின் ஒரு மனிதன் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி தனது சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துகிற அனைத்துமே இஸ்லாம் சொல்லித்தருகிற வணக்க வழிபாடு வகையைச் சார்ந்ததே!

நேர்மையான உழைப்பும் ஒரு இறை வணக்கமாக- சக மனிதனுக்கு வாளியில் நீரெடுத்துத் தருகிற அற்ப உதவிகளும் இறை வணக்கமாக கருதப்படுவது இஸ்லாத்தில் தான்.

சக மனிதனுக்கு துன்பம் விளைந்து விடக்கூடாதே என்கிற நன்னோக்கில் பாதையில் கிடக்கிற கல்லையும் முள்ளையும் அப்புறப்படுத்துவதை மிகப்பெரிய நற்செயலாக நம்பிக்கையாளரின் தன்மையாக இஸ்லாம் கருதுகிறது.

(இதையெல்லாம் உணராத சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் வெடிகுண்டுகளாலும் – வன்முறையாலும் இஸ்லாமிய நோக்கத்திற்கு விரோதிகளாயினர் – என்ன தான் எதிர்வினையாகவே வெளிப்பட்டாலும்).

தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று போற்றி தனக்கு வேண்டும் நாட்களில் மட்டும் ‘ஆசி’ தருபவளாக தாயை கருதி ‘மதர்ஸ் டே’ என்றெல்லாம் கொண்டாடுவது ஒரு புறமிருக்க –
அதே தாய்மார்கள் மற்ற தினங்களில் பசிக்கு உணவும் தரப்படாமல் கோயில் வாசல்களில் பிச்சை எடுக்கிற அவலக் காட்சிகளும் மறு புறமிருக்க ……….

இஸ்லாம் தெளிவாக சொல்கிறது:
‘பெற்றோரை நோக்கி ‘சீ’ என்ற வார்த்தையைக்கூட சொல்லாதீர்கள்.’ (குர்ஆன்)
‘இந்த உலகத்தில் நீங்கள் மிகவும் கடமைப்பட்டிருப்பது உங்கள் தாய்க்கே’ (நபிமொழி).

அதே இஸ்லாத்தில் தான் தாயைக்கூட வணங்குவதற்கு உரிமையில்லை.

ஆங்கிலத்தில் சொல்வார்கள்: ‘சீசருக்கு உடையதை சீசருக்கு கொடுங்கள்அது போல போப்புக்கு உடையதை போப்புக்கு கொடுங்கள்’. அதாவது, எதையும் மிகைப்படுத்தாதீர்கள். எதையும் குறைப்படுத்தாதீர்கள்.

தாயாகவே இருந்தாலும் கடவுள் நிலைக்கு மிகைப்படுத்தாதீர்கள் (தன் வயிற்று உணவுக்கும் தன் வயிற்றுப் பிள்ளைகளை எதிர்பார்க்கிறாள் தாய்;)
கடவுளை படைப்பினங்களின் நிலைக்கு இறக்கிவிடாதீர்கள். (படைப்பினங்களுக்கு ஏதேனும் ஒரு பலவீனமுண்டு-அது யாராக இருந்தாலும்! – இறைவனோ பலவீனங்களுக்கு ஆட்படாதவன்).

இஸ்லாம் தன்னுடைய இறைக் கோட்பாட்டில் சிறிதளவும் இளகியோ விலகியோ இடம் கொடுக்காமல் உறுதியாக நிற்கிறது இதுவே இஸ்லாத்தின் இயல்பும் சிறப்புமான நிலை. வலிமையுங்கூட.

இறைவன் என்பவன் எப்படி இருக்கவேண்டுமென்று ஒரு சுயமரியாதையுள்ள மனிதன் நினைக்கிறானோ அந்த இலக்கணத்தின் படியே இஸ்லாம் இறைவனை அறிமுகப்படுத்துகிறது.

இறைவன் என்பவன் சர்வ வல்லமையுடையவனாகவும் மிகக் கருணை நிரம்பியவனாகவும்நீதி தவறாதவனாகவும் பெற்றோரோ மற்றோரோ தேவைப்படாதவனாகவும் எந்த வித தேவையுமற்றவனாகவும் நிகரில்லாதவனாகவும் இருக்க வேண்டும். இந்த எல்லாவிதமான கடவுள் தன்மைகள் தனித்தன்மைகளாக இருக்க வேண்டுமானால் அவன் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும்(அதாவது, இரண்டு இறைவர்கள் இருக்க முடியாது).

(நபியே!) நீர் கூறுவீராக: அவன் – அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் (யாவற்றை விட்டும்) தேவையற்றவன். (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன).அவன் (எவரையும்) பெறவில்லை: (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை. (திருக்குர் ஆன்)

இறைவனைப்பற்றிய இஸ்லாத்தின் இந்த இலக்கணம் ‘இஸ்லாம் காட்டுகிற இறைவன் பொறாமைக்குணம் படைத்தவனாக இருக்கிறான்’ என்று சிலர் சுட்டிக்காட்டுமளவுக்கு!

தன்னுடைய மனைவியோ (அ) கணவனோ தன்னையன்றி பிறரிடம் இல்லற சுகம் பெறுவதை அனுமதிக்காத வாழ்க்கைத்துணைகளை நாம் ‘பொறாமைக்குணம்’ பிடித்தவர்களாக கருதுவதில்லை! அதை அவர்களுடைய உரிமையாகவும் ‘ரோஷம்’ உள்ள தன்மையாகவுமே பார்க்கிறோம் – ஆனால் இறைவனை வணங்கும் விஷயத்தில் இறைவனாலேயே படைக்கப்பட்ட படைப்பினங்களையும் அவனுக்கு அற்பத்திலும் அற்பமான சக்தி கூட பெறாதவற்றையும் வணங்கத்தலைப்பட்டு அதை உரிமையுள்ள இறைவன் எச்சரிக்கை செய்தால் கூட ‘பொறாமை’ முத்திரை குத்துமளவுக்கு சிறுமைப் பட்டு போகவேண்டுமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தமக்குள்ளே கேட்டு கொள்வது நலம்.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்றே குர்ஆனின் 113 அத்தியாயங்களில் இறைவனை இஸ்லாம் அறிமுகப்படுத்துவதையும் ‘ஒரு தாய் தன் மகவிடத்து செலுத்தும் அன்பை விட பன்மடங்கு படைப்புகளிடத்தில் இறைவன் அன்புடையவன்’ என்ற நபிமொழியையும் இவர்கள் மறுக்கிறார்கள் அல்லது மறைக்;கிறார்கள் என்றே அர்த்தம்.

இறைவன் எந்தஅளவுக்கு கருணையாளனோ அந்த அளவுக்கு நீதியை நிலைநாட்டக் கூடியவனாகவும் இருக்கவேண்டுமல்லவா? தாய் கூட தனது பிள்ளைகள் சண்டையிட்டுக் கொள்ளும் போது இரண்டு அடி கொடுக்கத்தானே செய்வாள். பிள்ளை திருந்தும் பொருட்டு அடிக்கிற அந்த தாய் கருணையற்றவளாக கருதப்படுவாளா?

மேலும் குர்ஆனின் ஒரு வசனம் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறது:
‘தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொண்ட எனது அடியார்களே! – நீங்கள் கடலளவு பாவங்களைச் செய்திருந்தாலும் இறைவனுடைய அருளில் நம்பிக்கையிழந்துப் போகாதீர்கள்!நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பாளனும் கிருபையுடையவனுமாவான்’

நிற்க, அரசியல் இஸ்லாம் ஆன்மிக இஸ்லாம் என்று கூறு போடத் துடிப்பவர்களுக்கு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தன்னை முன்னிலைப்படுத்தும் வாயிலை எவ்வாறு அடைத்தார்கள் என்பதை ‘Islam The Misunderstood Religion’ என்கிற நூலில் James A. Michener கூறுவதிலிருந்து:

‘In all things Muhammad was profoundly practical. When his beloved son Ibrahim died, an eclipse occurred, and rumours of God’s personal condolence quickly arose. Whereupon Muhammad is said to have announced, ‘An eclipse is a phenomenon of nature. It is foolish to attribute such things to the death or birth of a human being’..

தன்னுடைய மகனின் இறப்பின் காரணமாகவே ‘இறைவன் தரப்பிலிருந்து துக்கம் அனுஷ்டிப்பதாக’ கிரகணத்தை சுட்டிக்காட்டி மக்கள் பேசிய போது, அந்த துக்கச் சூழலிலும் உண்மை மறைந்துப் போகக் கூடாது என்று ‘கிரகணங்கள் இயற்கை நிகழ்வுகள்-யாருடைய பிறப்போடும் இறப்போடும் சம்பந்தப்படுத்துவது அறிவீனம் என்று முழங்கி தனக்குச் சாதகமாகவே வந்தாலும் மூட நம்பிக்கை முறியடிக்கப்பட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து அரசியல் இஸ்லாம் என்றெல்லாம் எழுத இந்த அரைகுறை விமர்சகர்கள் வெட்கப்பட வேண்டாமா…?
சுனாமிக்கும் அரசியல் சூத்திரங் கண்ட ‘விஞ்ஞானிகள்’ சிந்திப்பார்களா….?

நிற்க, முஸ்லிம்களாகவே இருந்தாலும், என்ன தான் சமாதிகள் சிலைகள் பிற படைப்பினங்களை வணங்காது இருந்தாலும், பணத்துக்காகவும் புகழுக்காகவும் பதவிகளுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்கிறவர்கள் எப்படி வேண்டுமானலும் நடந்துக்கொள்ளத் தயங்காதவர்கள் (சுருக்கமாக- பணத்தை, புகழை, பதவியை வணங்கியும் இணங்கியும் வாழ்பவர்கள்) அவர்கள் முஸ்லிம் என்கிற வார்த்தையால் குறிக்கப்பட்டாலும் முஸ்லிம் என்கிற அர்த்தத்துக்குள் வர மாட்டார்கள்.

அதே போல முஸ்லிம் என்கிற வார்த்தையால் குறிக்கப்படாவிட்டாலும் முஸ்லிம் என்கிற அர்த்தத்தோடு வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் இல்லாமல் இல்லை என்பதையும் நாம் மறுக்க இயலாது

உதாரணங்களுக்கு:

‘திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என்னுடைய விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனுடைய கொள்கைக்கிணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை’ என்று சொன்ன மாவீரன் நெப்போலியன்.

‘வழமையான அர்த்தத்தில் நான் முஸ்லிமாக கருதப்படாவிட்டாலும் ஏக இறைவனுக்கு அர்ப்பணித்துக்கொண்ட ஒரு முஸ்லிமாகவே என்னை நம்புகிறேன்……… தேவையான அடிப்படை கருத்தாக்கங்களைக் கொண்டுள்ள இஸ்லாமே எதிர்கால மதம் என்பது நிச்சயம்’ W.Montgomery Watt தனது ‘Islam and Christianity today’ என்கிற நூலில்.

இறைவனே மிக்க அறிந்தவன்.

உண்மைக்கு வழிகோலும் விமர்சனங்களுக்கு நன்றி செலுத்துவோம்!.

<!– tag script Begins

tag script end –>

மரணிக்கும் போது நபியின் சொத்துக்கள்.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக் கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும் கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் – பொருட்களை நபி (ஸல்) அவர்களின் காலடியில் வைக்கவும் தயாரானார்கள் – பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக அழகிகளையும் உமக்குத் தருகிறோம் – ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து – ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள்.

ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அல்லாஹ்விடமிருந்து சத்தியத்தைப் பெற்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், பொன் – பொருள் – பதவியின் மீது ஆசை கொண்டிருந்தால் இவையெல்லாம் தம் காலடியில் மண்டியிடத் தாயாராக இருந்த போது அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கலாம். மாறாக இறைத்தூதர் பதவிக்கு முன் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக – துச்சமாக மதித்து அனைத்தையும் தூக்கியெறிந்தார்கள். இறுதியாக மக்கா நகர நிராகரிப்பாளர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை கொலை செய்யத் திட்டங்களைத் தீட்டி நாளும் குறித்தார்கள்.

நிராகரிப்பாளர்களின் கொலை முயற்சி திட்டங்களை முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியாக இறைவன் அறிவிக்க நாடு துறந்து மதீனா சென்றார்கள். நாடு துறந்து சென்ற நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து மக்கத்து நிராகரிப்பாளர்கள் மேலும் வன்செயல்களைப் புரிந்து நபியையும், நபியைப் பின்பற்றிய முஸ்லிம்களையும் துன்புறுத்தினார்கள். இதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் – மதீனாலிருந்த நிராகிப்பாளர்களும் நயவஞ்கச் செயல்களின் மூலம் நபியின் – நபியைப் பின்பற்றிவர்களின் முதுகில் குத்தினார்கள்.

இத்துன்பங்களையும் – சோதனைகளையும் இறைவழியில் சகித்துப் புறக்கணித்து சத்தியமே பெரிதென வாழ்ந்து மதீனாவில் ஆட்சியை நிறுவினார்கள். சிறிது காலத்தில் எவ்வித சண்டையும் இல்லாமல் மக்காவும் நபி(ஸல்) அவர்களின் ஆளுமைக்கு வந்து முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார்கள். பெயரளவிற்குத்தான் மன்னரே தவிர நபி(ஸல்) அவர்களும், நபியைப் பின்பற்றியவர்களும் பட்டினிப் பட்டாளங்களாகத்தான் இருந்தார்கள். (முஹம்மது (ஸல்) அவர்கள் நபித்துவம் பெறுவதற்கு முன்பிருந்த வசதிகளையும் – நபித்துவம் பெற்ற பின் இழந்தார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை)

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் சொத்து மதிப்பீடு.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து – தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)

நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)

நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இதுதான். அதிலும் வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை அய்லாவின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகத் தந்தது என்று ஆவணங்கள் கூறுகின்றன. உணவுக்காகக் கடன் வாங்கிய கோதுமைக்காக, நபி (ஸல்) அவர்களின் இரும்புக் கவசம், ஒரு யூதரிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. (புகாரி)

நபி (ஸல்) அவர்கள் தர்மமாக விட்டுச் சென்ற தோட்டம் பெரிய மதிப்புடைய சொத்தாக இல்லை. அன்றைய காலத்தில் நிலத்திற்கென்று எந்த மதிப்பும் இருக்கவில்லை. அவரவர் நிலத்திலுள்ள மேடு, பள்ளத்தை சமண் படுத்தி தமக்குச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். நபித்தோழர் அபூ கதாதா (ரலி) அவர்கள் தமது கவசத்தை விற்று ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கியதாக அறிவிக்கிறார்கள் (புகாரி) ஒரு இரும்புக் கவசத்தின் மதிப்புத்தான், ஒரு விவசாயத் தோட்டத்திற்கான மதிப்பும். இதிலிருந்த அன்று, நிலத்தில் விளையும் உணவுப் பொருட்களுக்குத்தான் மதிப்பீடாக இருந்தது, நிலத்திற்கு மிகக் குறைந்த மதிப்பீடே இருந்திருக்கிறது என்பதை விளங்கலாம்

அன்றைய மதீனாவில் பெரும் செல்வந்தர்கள் குடிமக்களாக இருந்தார்கள். பிரஜைகளை ஆட்சி செய்யும் – ஆட்சித் தலைவர் மிகச் சாதாரணச் செல்வந்தராகக்கூட இருக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் நபியின் வீட்டில் அடுப்பெரியும் அளவிற்கும் வசதியைப் பெற்றிராத ஏழையாகவே வாழ்ந்தார் – அதே நிலையில் மரணிக்கவும் செய்தார் என்று இஸ்லாத்தின் ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. அது மட்டுமல்ல நபிமார்களின் சொத்துக்களுக்கு எவரும் வாரிசாக முடியாது – நபிமார்கள் விட்டுச் சென்று சொத்துக்கள் அனைத்தும் தர்மமேயாகும்.

அள்ளிப்போட்டதை விமர்சிக்காமல்!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

பெயரில்லாதவரின் (அனானிமஸ்) பின்னூட்டத்திற்கு பதிலளிப்பது போல் நேசகுமார் சில கருத்துக்களை தமது பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார். ”இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்” எனத் தொடங்கிய இவ்விவாதம் நேசகுமார் – ஸலாஹூத்தீன் என்ற இருவருக்கு மட்டும் சம்மந்தமுடையதல்ல. 03.12.2004ன் முதல் பதிவிலேயே ”அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கு குறிப்பிட விரும்வது இதுதான்” என்றே தனது பொய்ப் பிரச்சாரத்தைத் துவங்கினார்.

//*நான் ஆரம்பத்திலேயே சலாஹ¤த்தீனுக்கு (9.02.2005 பதிவு) சொல்லியிருந்தது போன்று இது போன்றவைகளுக்கு நான் உடனடியாக பதில் அளிக்க விரும்பவில்லை.*//

03.12.2004ல் துவங்கிய வலைப்பதிவு இரண்டு மாதம் கழித்து 09.02.2004ல் எழுதப்பட்டது ஆரம்பத்திலேயே சொல்லியதாகாது. இதற்கிடையில் நிறையக் கருத்துக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தாம் என்ன எழுதுகிறோம் – தனது கருத்துக்கு எதிரணியில் என்ன விளக்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையெல்லாம் புரிந்தும், புரியாதது மாதிரி தன்னைக் காட்டிக்கொள்கிறார்.

அள்ளிப்போட்டதை விமர்சிக்காமல், அள்ளிப்போடும் போது சிந்தியதை (ஹாமீத் ஜாஃபரின் கருத்தை) விமர்சிப்பதே நேசகுமாரின் வாடிக்கை. முஸ்லிம்கள் எதிலேனும் சறுக்கட்டும் என்ற இவரின் காத்திருப்புக்குப் பந்தாவாக ”நான் உடனடியாக பதிலளிக்க விரும்பவில்லை” என்று போலியாக காலரை நிமிர்த்தி விட்டுக்கொள்வார். இவரைப்பற்றி ஜாஃபர் அலி என்பவர் எனது பதிவின் பின்னூட்டத்தில் எழுதியது,

சகோதரரே! நான் இதுவரை அவர் வலைப்பதிவை பார்வையிட்ட வகையில் (நேச குமார்) அவர் இஸ்லாத்தை குறை கூறும் நோக்கோடு மட்டுமே வாதிடுகிறார். இவருக்கு பதிலளித்து நம் நேரத்தை தான் விரயமாக்கி வருகிறோம், அறிந்து கொள்ளவோ. இல்லை அடுத்தவருக்கு எடுத்து சொல்லவோ அவர் இஸ்லாத்தின் மீது குற்றம் சொல்ல வரவில்லை. அவர் நோக்கம் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு ஒரு தவறான புரிதலுடன் விளங்க வைப்பது. (ஜாஃபர் அலியின் கருத்து நூற்றுக்கு நூறு சரி என்பதையே நேசகுமார் நிரூபித்து வருகிறார்)

இதுவரை நேசகுமார் முன்வைத்த, இஸ்லாத்தின் வரலாற்றுப் புரட்டலுக்கு, முஸ்லிம்கள் சரியான – உண்மை வரலாற்றுச் சான்றுகளை முன்வைத்திருக்கிறார்கள். வரலாற்று ஆவணங்களை வைக்கும் போது – கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? கட்டுரையாக எழுத வேண்டும் என்கிறார் – ஒருவேளை இஸ்லாத்தின் மீது களங்கத்தை சுமத்தி தனது பதிவுகளை நிறைப்பது போல், நாமும் அவ்வாறு விளக்கம் என்ற பெயரில் எழுத வேண்டும் என்று அவர் எண்ணினால் அது அவரின் அறியாமை. இஸ்லாத்திற்கு வெளியிலிருந்து ஒருவன் இஸ்லாத்தைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அவனுக்கு வரம்பெதுவும் கிடையாது. இஸ்லாத்திற்கு உள்ளேயிருந்து ஒருவன் இஸ்லாத்தை எழுதும் போது அவன் விருப்பத்துக்கு இஸ்லாத்தை எழுத முடியாது – எழுதக்கூடாது.

பெயரில்லாதவரின் (அனானிமஸ்) பின்னூட்டத்திற்கு நேசகுமார் எழுதியது.
//*அபூ முஹை தெரிவித்திருக்கும் கருத்துக்களில் எனது கூற்றுக்களை உடைத்தெறியுமாறு அமைந்திருக்கும் சிறந்த 2,3 கருத்துக்களை நீங்களே தெரிவு செய்து இங்கே பின்னூட்டமாக உள்ளிடுங்கள். அடுத்த பதிவில் அவற்றுக்கு பதிலளிக்கிறேன்.*//

நேசகுமார் கேட்டுக் கொண்டதற்காக.
1. நபி (ஸல்) அவர்கள், ஜைனப் (ரலி) இருவரின் திருமணம் பற்றிய அவதூறுச் செய்திகள் முழுக்க. முழுக்கக் கட்டுக்கதை என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது – அதாவது புனையப்பட்ட செய்தியின் அடிப்படையில் அப்பட்டமாக நபி (ஸல்) அவர்களின் மீது நேசகுமார் அவதூறைச் சுமத்தியிருக்கிறார்.

2. நபி (ஸல்) அவர்கள், ஜைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் அதிர்ச்சியடைந்து எதிர்ப்பாயிருந்தார்கள் என்று நேசகுமார் கதையளந்திருக்கிறார்.

3. 24:3ம் வசனம் மாற்று மதப்பெண்டிர்களையெல்லாம் ”விபச்சாரிகள்” என்று சொல்வதாக – நேசகுமார் திருக்குர்ஆன் மீது களங்கம் சுமத்தியிருக்கிறார். இந்த வசனத்திற்கு இதுதான் பொருள் என்பதை அவர் நிரூபிக்கட்டும்.

இதற்கு நேசகுமார் பதிலளிக்கட்டும் மேலும் தொடர்வோம்.

பெயரில்லாதவர் பின்னூட்டிய நேசகுமாரின் பதிவு.
http://islaamicinfo.blogspot.com/2005/04/ii.html

குறிப்பு:- நாம் ஏற்கெனவே சொன்னது போல், நேசகுமாரின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதை வெறுக்கிறோம். முன்பு பின்னூட்ட வாசலை அடைத்து தன்னை நாகரீகமற்றவர் என்று அவர் அடையாம் காட்டிக் கொண்டார்.

 1. அதிரைக்காரன்on 02 May 2005 at 1:23 am 1

  நேசகுமார், தன் அதி மேதாவித்தனமான வாதத்தால் “இஸ்லாமும் மற்ற மதங்களைப்போல் விமரிசனத்திற்குட்பட்டது” என இஸ்லாத்தைப் பற்றி இணையத்தில் தேடுவோருக்கு தவறான தகவலை கொடுக்கும் நோக்கத்தில் உள்ள ஒரு குழுவின் அல்லது நபர்களின் அவதூறுகளை பதிந்துள்ளார்.

  அவரின் நோக்கம் இஸ்லாத்தை நோக்கி வருபவர்களை எந்த வகையிலாவது திசை திருப்ப வேண்டுமென்பதே. அதனால்தான் அவரின் தளத்திற்கு “இஸ்லாமிக் இன்ஃபோ” என பதிந்து தவறான வழி நடத்துகிறார்.

  குழப்பவாதிகளுக்கு ஆதாரங்கள் தேவையில்லை. முஹம்மது நபி மீது தனக்கு இருக்கும் காழ்ப்புகளை மேலோட்டமாக எடுகோல்களை காட்டி தன் வழியில் அவதூறு செய்துள்ளார்.

  தான் நேர்மையான விமரிசகன் எனில் முதலில் அவர் வைக்கும் இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு, மறுமலர்ச்சி அடந்து கொண்டிருப்பதாக நம்பும் அவர் மதத்தில் என்ன தீர்வு சொல்லப் பட்டுள்ளது என சொல்லட்டும்.

 2. சுட்டுவிரல்on 02 May 2005 at 2:51 am 2

  நேச குமார் என்பவர் தன்னுடைய இஸ்லாம் குறித்த பதிவுகளில் வெளிப்படுத்துவதெல்லாமே இஸ்லாம் மீதான அவருடைய வன்மத்தைத் தான்.

  எப்படியாவது இஸ்லாத்தின் மீதும் அதன் நபி மீதும் களங்கம் சுமத்த வேண்டும் என்பதே அவருடைய முயற்சியாக இருக்கிறது.இதற்கான மனவியல் ரீதியான காரணங்கள் ஆராயப்படவேண்டுமென்பது ஒரு புறமிருக்க, இதை உணர்ந்துத் தானோ என்னவோ நிறைய பேர் ‘பதிலளித்துப் பிரயோசனமில்லை’ என்று மவுனமாக!

  சில முஸ்லிம் அன்பர்களும் பல முஸ்லிமல்லாத அன்பர்களும் இதே கருத்தையே என்னிடம் சொன்னார்கள்:
  ‘விவாதத்துக்கு பதில் தரலாம். வீம்புக்கு பதில் தந்து ஏன் டயத்தை வேஸ்ட் பண்றீங்க’

  ஆனால் அவருக்கு என்று இல்லாவிட்டாலும் அவரால் வழி மாற்றப்படுகிறவர்கள் (சொற்ப அளவு) யாரேனும் இருந்தால் அவர்களுக்கு பயனளிக்கும் என்பதே நேச குமாருக்கான எதிர்பதிவுகளின் நோக்கமாக அமைய வேண்டும். ஆகவே தான் என் சமிபத்திய பதிவினை விமர்சகர் பெயர் குறிப்பிடாமல் எழுதினேன். (உண்மைக்கு வித்திடும் அறியாமைகள்)

  எனவே நாம் நேச குமார்களுக்கு பதிலளிக்க முனைவதை விட, அவர் எழுத்தால் மாற்றப்படுகிற அந்த சொற்ப பேர்களை கவனத்தில் கொள்வது தான் நல்லது என்பது என் கருத்து. என்ன சொல்றீங்க?

  (ஓன்று உறுதி: அவருடைய பதிவுகளை சரியென்றும் ஆஹா ஓஹோ என்றும்
  சொல்பவர்கள் ஏற்கனவே அதே மன நிலையில் இருக்கிற ‘பரிவாரங்கள்’ மட்டுமே).

  தவிர, பின்னூட்டஙளுக்கு அளிக்கிற கவனத்தை எதிரான தனிப்பதிவுகளுக்கு அவர் அளிப்பதில்லை (முழுமையாக படிப்பதுக் கூட இல்லை) என்பது சமீபத்தில் பின்னூட்டங்களுக்கு அவர் அளித்த பதில்களின் வேகத்திலிருந்தும் அதற்கான முனைப்பிலிருந்தும் அறிய முடிகிறது.

  மேலும் அதிரைக்காரன் குறிப்பிட்டுள்ளது போல் ‘இஸ்லாமிக் இன்ஃபோ’ என்று அவர் பெயர் வைத்துள்ளதிலிருந்தே அவருடைய நோக்கம் தெளிவாகிவிடுகிறதே.!

 3. Jafar Alion 02 May 2005 at 4:43 am 3

  அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் சுட்டு விரல் அவர்கள் குறிப்பிட்டது போல் அவருடைய எழுத்தால் மாற்றப்படுகிற அந்த சொற்ப நபர்களுக்காக பதிலளிப்பது என்பது நம் கடமையாகிறது. ஆனால் எவரேனும் நேசகுமாருக்கு மட்டும் பதிலளிப்பதாக நினைத்து கொண்டு எழுதினால் அவரும் அவரைச் சார்ந்தவரே! ஏனெனில் விளங்கவும், விளக்கவும் இஸ்லாத்தை ஆராயும் ஒருவருக்கு இஸ்லாத்தின் உள்ளே உள்ள நாம் பதிலளிக்க முடியும். குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு குளத்தின் நீருக்குள் இத்தனை மீன் தான் இருக்கிறது என்று வம்படிப்பவருக்கு எதைக் கொண்டு விளங்க வைப்பது. மறைவான விசயங்களை நம்பிக்கைக் கொண்ட நாம் அவர் கேட்கும் அத்தனை விசயங்களையும் விளக்க முடியும் என்று நினக்கிறீர்களா?

 4. அபூ முஹைon 06 May 2005 at 1:19 am 4

  அதிரையாருக்கு!

  இஸ்லாமிக் இன்ஃபோ – இஸ்லாம் ஓர் முழு அறிமுகம் என்று தனது வலைப்பதிவின் தலைப்பை அர்த்தப்படுத்திக் கொண்டு, முஸ்லிம்களின் குறைபாடுகளையே எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது நேசகுமாரின் அறியாமையா? அல்லது விஷமத்தனமா? என்றால் விஷமத்தனம் என்பதே சரி. இஸ்லாத்தையும் – முஸ்லிம்களையும் கலந்து – குழப்பி, கலக்கிய குட்டையில் மீன் பிடிக்கும் நோக்கம்.

  இஸ்லாமிக் இன்ஃபோ அனைத்தும் இவரின் விரல் நுனியின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் இவரின் தற்பெருமையையும் – தலைக்கணத்தையும் பாருங்கள்.

  //*இஸ்லாம் விஷயத்தில் ஒன்றைச் சொல்வதற்கு, செய்வதற்கு முன் நிறைய யோசிக்கவேண்டியிருக்கிறது. நேசகுமாரே இஸ்லாத்தைப் பற்றி இப்படிப் புகழ்ந்து சொல்லியிருக்கிறார் என்று ஒற்றை வரியில் மிஸ்கோட் செய்துவிட்டு, மணலாக மற்ற எல்லாவற்றையும் தட்டிவிட்டுப் போய்விடுவார்கள்.*//

  நேசகுமாரே…. என்பதில் தன்னடக்கம் துளியுமில்லை.- நேசகுமாரே இஸ்லாத்தைப் பற்றி இப்படிப் புகழ்ந்து சொல்லியிருக்கிறார் – அதை சுயசிந்தனையில்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு அவர் அகில உலகும் அறிந்த தீர்க்கத்தரிசியா(?) – தன்னை பல்சமய சிந்தனையாளராக(?) பிற்றிக் கொள்ளும் இவர் தமிழுலகம் முழுவதும் அறியப்பட்டவரா? – அறியப்பட்டிருந்தாலும் அவரின் எழுத்துக்கு தமிழுலகம் அடிமைப்பட்டுக் கிடக்கிறதா?

  வலைப்பூக்களை நாரில்லாமல் தொடுத்து – மொத்த முஸ்லிம்களின் காதுகளில் சுத்தப் பார்க்கிறார்.

  அவர் இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் இஸ்லாம் விரிவடைவதைத் தடுக்க முடியாது. நேசகுமார் பிறப்பதற்கு முன்பும் இஸ்லாம் இருந்தது. நேசகுமாரும், நானும் மறைந்தாலும் இஸ்லாம் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

 5. அபூ முஹைon 06 May 2005 at 1:20 am 5

  சுட்டு விரலுக்கு!

  நேசகுமாரின் முனைப்பெல்லாம் இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவதுதான். இதில் தன் பங்குக்காக அணில் போல் மண் சுமந்திருக்கிறார் – பாகிஸ்தான் வரை சென்று ”மலம்” சுமக்கிறார். இவரின் இன்னொரு பொய் முகம் முஸ்லிம்கள் திருந்த வெண்டுமென நீலிக்கண்ணீர் வடிப்பது – முஸ்லிம்கள் மட்டுமே இன்னும் திருந்தாமல் இருக்கிறார்கள் என்பது இந்த மேதாவியின் கணிப்பு(?)

 6. அபூ முஹைon 06 May 2005 at 1:21 am 6

  ஜாஃபர் அலிக்கு!

  இந்த விவாதம் பொது இடத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது. தனியொரு மனிதனுக்காக நடக்கவில்லை.

<!– tag script Begins

tag script end –>

நபியின் சொத்துக்கு வாரிசுண்டா?

Filed under: ISLAM — islamthalam @ 12.24

நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் நடந்த வரலாற்று சம்பவங்களை இஸ்லாத்தின் வரலாறாக மேற்கோள் காட்டுவது அறியாமையே என்று மீண்டும் இங்கே சொல்லிக்கொண்டு – நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்றச் சொத்துக்கள் தனியொரு மனிதர் விட்டுச் சென்றச் சொத்துக்களை மாதிரி வாரிசுரிமையைப் பெற்றிருக்கவில்லை. நபிமார்கள் விட்டுச் செல்லவதெல்லாம் தர்மமாகும் என்பதைப் பார்ப்பதற்கு முன் ”குமுஸ்” என்றால் என்னவென்பதை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.

குமுஸ்
போரில் எதிரிகள் விட்டுச் சென்றதில் – போரில் பங்கெடுத்தவர்களுக்கு எண்பது சதவீதமும், நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும் சேர்த்து இருபது சதவீதமும் என்று பிரிக்கப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் தர்மமாக (ஸகாத்தாகக்) கிடைக்கும் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளது. ஸகாத் – தர்மமாக வரும் நிதியிலிருந்து எதையும் தொடக்கூடாது என்று தடை விதித்திருப்பதால், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பங்கு ஒதுக்கினான். இதை இவ்வசனத்திலிருந்து விளங்கலாம்.

8:41. (முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக குமுஸ் – ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

போரில் எதிரிகள் விட்டுச் செல்லும் பொருட்களுக்கு ஃகனீமத் (போர்ச் செல்வம்) எனப்படும் இவ்வாறு கிடைக்கும் போர்ச் செல்வத்தை ஐந்து பாகங்களாகப் பிரித்து, நான்கு பாகங்கள் போரில் கலந்து கொண்ட வீரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். மீதியுள்ள ஒரு பாகம் (குமுஸ்) அல்லாஹ்வின் தூதருக்கு உரியதாகும். இந்த ஐந்தில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகத்தை இறைத்தூதர் தமக்குரிய நிதியாக – ஆட்சித் தலைவர் நிதியாக வைத்துக் கொண்டு உரிய இனங்களில் செலவிடுவார்கள். இறைத்தூதருக்குப் பின் அரசு கருவூலத்தில் இந்தப் பங்கு சேர்க்கப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டது. (பத்ஹுல் பாரீ)

குமுஸ் – ஐந்தில் ஒரு பங்கு போர்ச் செல்வமும், ஃபய்வு – என்னும் போர் செய்யாமலேயே எதிரி நாட்டிலிருந்து கிடைக்கும் செல்வமும் ஆட்சியாளரின் பொறுப்பில் சிறப்பு நிதியாக இருக்கும். பய்வு என்னும் செல்வம் பற்றி திருக்குர்ஆன்..

59:7. அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும், மேலும் உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.

ஃபய்வு என்றால் போர் செய்யாமலேயே எதிரி நாட்டிலிருந்து கிடைக்கும் செல்வமாகும். ஃகனீமத் என்பது போரில் எதிரிகள் விட்டுச் செல்லும் பொருளாகும். இதிலிருந்து ஃகனீமத் மற்றும் ஃபய்வு இரண்டுக்குமிடையிலான வித்தியாசத்தை அறியலாம். ஃகனீமத்தில் போராளிகளுக்குப் பங்கு (5ல் 4பங்கு) உண்டு ஃபய்வில் போராளிகளுக்குப் பங்கு கிடையாது. அது ஆட்சியாளர்களின் பொறுப்பில் நிதியாக இருக்கும். (உம்தத்துல் காரீ)

குமுஸ் – ஃபய்வு இவ்விரண்டு சொத்துக்கள் பற்றி விளங்கிக் கொள்ள மேலே எடுத்தெழுதிய ஆதாரங்களே போதுமானதாகும். முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதராகவும், ஆட்சியின் தலைவராகவும் இருந்ததால் அவர்களின் கட்டுப்பாட்டில், கருவூலத்தில் பொது நிதியாக இச்சொத்துக்கள் வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின் ஆட்சித் தலைவராக அபூ பக்ர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

நபியின் சொத்துக்கு வாரிசுரிமை இல்லை.
நபி(ஸல்) அவர்கள் மரணித்தப் பின், நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் – நபியின் மகள் என்ற முறையில் தமக்குச் சேரவேண்டிய வாரிசுச் சொத்தைப் பங்கிட்டுத் தருமாறு அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார். அதற்கு ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘(நபிமார்களான) எங்கள் சொத்துகளுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள்விட்டுச் செல்பவையெல்லாம் தருமம் செய்யப்பட வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று அபூ பக்ர் (ரலி அவர்கள் பதிலளித்தார்கள். (முழு விபரங்களுக்கு பார்க்க புகாரி, 3092, 3093)

அபூ பக்ர் (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பின், உமர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்கிறார்கள். உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் – நபி (ஸல்) அவர்களின் உறவினர்களான, நபி (ஸல்) அவர்களின் தந்தை அப்துல்லாஹ்வின் சகோதரரான அப்பாஸ் (ரலி) அவர்களும் – நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவராகிய அலி (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களை சந்தித்து, மதீனாவின் புறநகர் ஃபய்வு சொத்துக்களைப் பராமறிக்கும் பொறுப்பை தங்களிடம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள், இது பற்றிய நீண்ட ஹதீஸில் (புகாரி, 3094) பார்க்கலாம். அந்த ஹதீஸின் விளக்கக் குறிப்புக் கீழே.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி) ஆட்சியிலும் ஃபதக் போன்ற (ஃபய்வு) சொத்துக்கள் ஆட்சியாளர்களான அவர்களின் பொறுப்பிலேயே இருந்து வந்தன. அவற்றிலிருந்து கிடைத்த வருமானத்தை எடுத்து நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திற்கும், மீதி ஏழைகளுக்கும் செலவிடப்பட்டது. உமர் (ரலி) அவர்களும் ஆரம்பத்தில் இதே நடைமுறையையே பின்பற்றி வந்தார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்களின் வாரிசுகளில் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த அப்பாஸ் (ரலி) அவர்களும் – ஃபாத்திமாவுக்காக அலி (ரலி) அவர்களும் கலீஃபா உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, அந்தச் சொத்துக்களின் பராமரிப்புப் பொறுப்பை அரசிடமிருந்து தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். அதையேற்று அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இருவரும் இணைந்து அவற்றைப் பராமரித்து வந்தனர்.

பின்னர் இருவரிடையேப் பிரச்சனை எழுந்த போது தங்களிருவருக்கும் தனித்தனியேப் பிரித்துக் கொடுத்து விடுமாறு அப்பாஸ் (ரலி) அவர்களும், அலி (ரலி) அவர்களும் கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் கோரினர். அவ்வாறுப் பிரித்துக் கொடுத்து விட்டால், அவைக் காலப்போக்கில் அவ்விருவருக்கும் சொந்தமான வாரிசுச் சொத்தாகி விடலாம் என்பதால் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் சம்மதிக்கவில்லை. (உம்தத்துல் காரீ)

நபி (ஸல்) அவர்கள் விட்டுச் செல்வதெல்லாம் தருமமாகும்.

”எங்கள் (நபிமார்களின்) சொத்துக்களுக்கு யாரும் வாரிசு தாரர்கள் அல்ல! நாங்கள் விட்டுச் சென்றவை தர்மமாகும்”. (புகாரி, முஸ்லிம்)

”என் வாரிசுகள் பொற்காசையோ, வெள்ளி நாணயத்தையோ பங்கிட்டுக் கொள்ள (வாரிசுரிமையாகப் பெற) மாட்டார்கள். என் மனைவிமார்களின் ஜீவனாம்சத்தையும் என் ஊழியரின் கூலியையும் தவிர நான் விட்டுச் செல்வதெல்லாம் தருமமேயாகும்.” அறிவிப்பாளர், அபூ ஹூரைரா (ரலி) (தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 2776, 3096)


இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த சொத்துக்களெல்லாம் மறு ஆட்சியாளரின் பொறுப்பில் பொது நிதியாகவே இருந்தது. இச்சொத்துக்களிலிருந்து வரும் வருமானத்தையே, நபி (ஸல்) அவர்கள் தன் மனைவிமார்களின் ஜீவனாம்சமாகக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். ”என் ஊழியரின் கூலியையும் தவிர” என்பது, அடுத்த ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் ஊதியத்தையும் – சொத்துக்களைப் பராமரிப்பவர்களுக்கான கூலியையும் குறிக்கிறது. இவை தவிர அனைத்தும் தர்மம் செய்யப்பட வேண்டும்.

( இது பற்றி விரிவாக, சம்மந்தப்பட்டவர் தனிப்பதிவு எழுதிய பின் நாமும் எழுதுவோம்.)