இஸ்லாம்தளம்

பிப்ரவரி9, 2009

மறைத்தல், திரித்தல், பொய் பேசுதல்

Filed under: ISLAM — islamthalam @ 12.24

கருப்பண்ணசாமியின் வரவால் நேசகுமாருக்கு ‘கருப்பாவேசம்’ வந்து மயிலாடுதுறை சிவாவின் ‘இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மெக்காவிற்கு போக முடியுமா’ என்ற பதிவில் வதவத (நன்றி ஆரோக்கியம்) என்று எனக்கு பதில் எழுதிவிட்டார். மூன்று மாத காலமாக இந்த கருப்பண்ணசாமி எங்கே போயிருந்தார்?

ஆக நான் கண்ணியமாகவும், மரியாதையாகவும் கேட்ட கேள்விகளுக்கு சரக்கில்லை என்பதால் பதில் இல்லை. கேட்டால், இன்னும் படிக்கவில்லை, யாராவது படித்து அதிலிருந்து ஒன்றிரண்டு முக்கியமானதை எடுத்துச் சொன்னால் பதில் சொல்கிறேன், பதில் சொல்வேணா என்று தெரியவில்லை என்று சமாளிப்புகள், தடுமாற்றங்கள் முடிவில் தலைமறைவு. வார்த்தை விளையாடல்கள் செய்து, ஒன்றை இரண்டாக்கி அல்லது ஒன்றுமே இல்லாததாக்கி எழுத சந்தர்ப்பம் கிடைத்தால் வதவத பதில்கள் வந்துவிடும்.

இரண்டில் இரண்டைக் கூட்டினால் நாலு வரும் என்று சொல்லத் தெரியாதவன், அல்ஜிப்ரா கணக்கு சொல்லிக் கொடுக்க மீசையை முறுக்கிக் கொண்டு வந்த கதையாய், சாதராணமாக நேசகுமார் எழுதியதிலிருந்தே கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் தற்போது தான் கண்ணியம் காத்ததாக கதை எழுதுகிறார். உலகில் கோடான கோடி மக்கள், முஸ்லீம் முஸ்லீமல்லாதவர் என்ற பாகுபாடில்லாமல் போற்றும் நபிகள் நாயகம் அவர்களை, இவர் இகழ்ந்து பேசும் போது எங்கே அய்யா உங்கள் கண்ணியம் காணமல் போனது? அடுத்தவர்களுக்கு கண்ணியம் கொடுத்துப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள், உங்களின் கண்ணியம் பாதுகாக்கப்படும் என்ற பொதுவான சாதாரண உண்மை உங்களுக்கு தெரியாமல் போனதேன்.

பொய் பேசுவது யார்?
எதைப் பொய் என்கிறீர்கள் அப்துல்லாஹ்? திருக்குர்ஆன் பொய் என்கிறீர்களா? இப்மு சஅது யூதர் என்கிறீர்களா? ஸஹி முஸ்லிம் இஸ்லாத்தின் எதிரி என்கிறீர்களா? அல்லது நபிகளார் பொய்யும் புரட்டுமாய் தனக்கு வசதிப்பட்டவாறு எதையெதையோ பேசிவிட்டுப் போனார் என்கிறீர்களா?

நீங்கள் பேசுவதுதான் பொய். எனது ‘நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும்’ என்ற பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இல்லை, நான் பொய் சொல்லவில்லை என்று நிரூபித்துக் காட்டுங்கள் நேசகுமார் அவர்களே? நீங்கள் பேசுவது உண்மைதான் என்று நிரூபிக்க சந்தர்ப்பம் கொடுக்கும் போது ஏன் உதறிவிட்டு போகிறீர்கள்? இதைத்தான் திராணியில்லை என்று உலகத்தார் சொல்வது, உங்களுக்கும் புரியும் என்று நினைக்கிறேன். ஒருவேளை உங்களுக்குப் புரியும் என்று நான் நினைப்பது தவறோ என்னவோ தெரியவில்லை.

மனைவியிடம் காமத்தை அடக்க முடியாதவர் வழி காட்டியா?
நான் கேட்கிறேன், மனைவியிடம் ஏன் ஒருவர் காமத்தை அடக்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை, விளக்கம் கொடுங்கள் நேசகுமார் அவர்களே! மனைவியிடம் காமத்தை அடக்கிக் கொண்டு, மற்ற பெண்களிடம் செல்பவர்களைத்தான் முற்றும் துறந்த முனிவர்கள் என்று ஏற்றுக் கொள்வீர்களோ? அப்படிப் பட்டவர்களின் வழிகாட்டுதலைத்தான் ஏற்றுக் கொள்வீர்களோ? கணவன் மனைவிகள் ஜாக்கிரதை! காமத்தை மனைவியிடம் அடக்கி வாழ்வதுதான் சிறப்பு என்று நேசகுமார் அவர்கள் புது விதி செய்து புரட்சி செய்ய இருக்கிறார். மனைவி இருப்பவர்கள் எல்லாம் இனி காமத்தை அடக்கி மோட்சம் பெறும் வழியை நேசகுமார் அவர்கள் சொல்லித் தருவார்! மனைவியிடம் தனது இச்சைகளை, உடல் பசியை தீர்த்துக் கொள்பவர்களின் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் எல்லாம் இனி ஏற்றுக் கொள்ள அறுகதை அற்றவை என்று நேசகுமார் ஆலோசனை வழங்க வந்துவிட்டார்.

‘சஹி முஸ்லிம், யாரோ ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து உணர்ச்சி வயப்பட்ட முகமது நபியவர்கள் வேலை செய்து கொண்டிருந்த ஜைனப் அவர்களை இழுத்து உடலுறவு கொண்டார்’

இது நேசகுமாரின் கூற்று.

இந்த செய்தி இங்கே அரை குறையாக நேசகுமாரால் சொல்லப்பட்டுள்ளது, இதற்கு பெயர்தான் ‘மறைத்தல்’ என்று பெயர். முழு செய்தியையும் சொல்லாமால் தனது வசதிக்கேற்றவாறு அதை கொச்சைப்படுத்திச் சொல்வதற்கு பெயர்தான் ‘திரித்தல்’. இந்த இரண்டையும் செய்யும் மனிதர்களுக்குப் பெயர்தான் ‘பொய்யர்’.

இங்கே குறிப்பிடப்படும் ஜைனப் என்பவர் யார்? நபிகாளாரின் மனைவி. இந்த செய்தியை சொன்னவர் யார்? நபிகள் நாயகம் அவர்கள். ஏன் சொல்கிறார்? காமப்பசி ஏற்படுபவர்கள், இவ்வாறு உணர்ச்சிவசப்படுபவர்கள், அதை தனது மனைவியிடம் மட்டுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினைக்காகத்தான் அவ்வாறு அறிவிக்கின்றார். அதைத்தான் அந்த செய்தியின் முடிவில் இருக்கிறது. ஏன் இவ்வாறு சொல்லப்பட்டது? அந்த காலக் கட்டங்களில் உடலுறவு ஒழுக்கமற்ற, உணர்ச்சிகளுக்கு உந்துதலாகி தனக்கு சொந்தமில்லாத பெண்களிடம் உடலுறவு கொள்வது வழக்கமாக இருந்தது. அதை முஸ்லீம்கள் செய்யக் கூடாது என்பதுதான் இதிலிருந்து அன்றைக்கு கற்றுக் கொடுக்கப்பட்ட பாடம். இதை புரிந்துக் கொள்ள இயலாதவர்கள்தான் இதைக் கொச்சைப் படுத்தி இன்றைய கால மன நிலையுடன் ஒப்பிட்டு விளக்கம் தேட முற்படுகின்றனர்.

இப்படி அநாகரீகப்படுத்தி பேச சந்தர்ப்பம் கிடைத்தால் கருப்பண்ணசாமியின் தயவில் நேசகுமார் வதவத என எழுதிவிடுவார். ஆனால் அறிவுப்பூர்வமான ஆழமான விவாதங்கள் என்று வந்தால் என்னவோ இவருக்கு மட்டும்தான் ஒரு நாளைக்கு 24 மணி நேரம், மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்பது போல் அலுத்துக் கொள்வார்.

இந்த செய்தியைப் பற்றிய விவாதத்தில் இருக்கும் போது மனைவியின் அனுமதியின்றி உடலுறவு கொள்வது தவறு, அது அவளுடைய உரிமையை மதிக்காதது என்றெல்லாம் இச்செய்திக்கு சம்பந்தமில்லாத விவாதங்கள் செய்யப்பட்டன. முதலாவதாக இங்கே ‘அனுமதி இல்லாமல்’ என்ற வார்த்தையே இல்லை. இரண்டாவதாக உடலுறவு என்பது கணவனும் மனைவியும் ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து பேசி, இன்றைக்கு உடலுறவு வைத்துக் கொள்வோமா, அனுமதிக்கிறீர்களா என்று பேச்சு வார்த்தை நடத்திவிட்டா உடலுறவு கொள்வார்கள்? அப்படி செய்வதற்கு பெயர் கணவன் மனைவி உறவு இல்லை. காசு கொடுத்து நடத்தும் விபச்சாரம் என்று பெயர். என்னய்யா இது.. கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இலக்கணம் தெரியாமல் அதன் தவிப்புகள் தெரியாமல் எழுதுகிறீர்கள். ஒருவேளை இப்படி எழுதுகிறவர்கள் தனது மனைவியிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, உத்தரவு பெற்றுக் கொண்டுதான் படுக்கையறைக்கே நுழைவார்களோ என்னவோ?

எங்கிருந்து வந்தார் இல்லாத மருமகள்?
நபிகளாரின் வரலாற்றில் மறைக்கப்பட்ட செய்திகள் அல்லது பதியப்படாத செய்திகள் என்ற ஒன்றும் இல்லை. நபிகாளாருக்கு பிறந்த ஆண் குழந்தைகள் எல்லோரும் குழந்தைப் பருவத்திலேயே மரணமடைந்துவிட்டார்கள் என்றுதான் வரலாற்று குறிப்புகளும், ஆவணங்களும் தெரிவிக்கின்றன? அப்படியிருக்கும் போது எங்கிருந்து வந்தார் இந்த இல்லாத மருமகள்? இதற்கு பெயர்தான் ‘திரித்தல்’ நேசகுமார் அவர்களே.

பதில் தாருங்கள். காத்திருக்கிறேன்.

கஃபாவில் ஏன் முஸ்லீம்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்?
பொதுவாக அனுமதி என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டது என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரியும். மனிதர்களாக உருவாக்கிக் கொண்ட எல்லைகளுக்குக் கூட வரையறைகள், விதிமுறைகள் இருக்கும் போது இறைவனால் அங்கீகரிக்கப் பட்ட ஆலயமாக உலகத்தாருக்கு அறிவிக்கப்பட்ட மக்காவிற்கும் இறைவனால் வழங்கப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றது. அந்த விதிமுறைகளை ஏற்றுக் கொண்டால் கஃபாவில் நுழைவதற்கு அனுமதி இருக்கிறது. எப்படி அமெரிக்காவிற்கு செல்ல வேண்டுமென்றால் விசா வாங்க வேண்டும், அந்த நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு நேர வகையில் நடந்து கொள்வேன், அந்த நாட்டின் சட்டங்களை மதிப்பேன் என்றெல்லாம் உறுதி மொழி அளிக்க வேண்டுமோ அதே போன்று இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட கஃபாவிற்கு வருவதற்கு அந்த இறைவனிடம் உறுதி மொழி அளிக்க வேண்டும், அந்த உறுதிமொழிதான் ஏக இறைவனை ஏற்றுக் கொள்வதும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை தூதராக ஏற்றுக் கொள்வது. இதை உளமாறச் சொல்லிவிட்டு நேசகுமார் அவர்களும் செல்லலாம், அவரை புலிப் பாண்டியும் தொடரலாம்.

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப்பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் – அல்லாஹ் நாடினால் – அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் – நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் வசனம் 9:28)

இந்த மேற்கண்ட வசனம், இணை வைத்து வணங்குபவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கின்றது. இறைவனுக்கு இணை வைக்காமல், முஹம்மதை நபி என்று ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக செல்லலாம். இந்த வசனங்களில், கீழ் சாதி, சானாதனி என்ற பாகுபாடுகளெல்லாம் எங்கிருந்து வந்தது. நேசகுமாருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் சனாதனியாக, மேல் சாதியாக அல்லது கீழ் சாதியாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் அந்த இறைவனை, சிலைகளை இன்னும் என்னென்ன மாரியாதைக்கு உரியவைகளாக அவர்கள் கருதுகிறார்களோ அவை அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்கள்தான், அவர்களுக்குள் வணங்குவதில் வேறுபாடு இல்லை, ஆனால் வெறுபாடுகள் பிறப்பினால்தான். விஷ்ணுவை மேல்சாதிக்காரணும் வணங்கலாம், கீழ்சாதிக் காரணும், ஆனால் கர்ப்பகிருகத்தில் செல்ல அனுமதி மேல் சாதிக்காரர்களுக்கு மட்டுமே.

ஆனால் இந்த இறை வசனத்தில் இணை வைப்பவர்களைத்தான் அசுத்தமானவர்கள் என்று சொல்கிறது. அது மேல் சாதியாக அல்லது கீழ் சாதியாக இருந்தாலும் சரி.

இந்த வசனத்திற்கும், நேசகுமாரின் கீழ்சாதி விளக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இதைத்தான் ‘திரித்தல்’ என்று சொல்வது.

கஃபாவின் கஸ்டோடியனுக்கு மிகுந்த மரியாதை
அது என்ன மிகுந்த மரியாதை? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன். நாங்களும் புரிந்துக் கொள்கிறோம். இப்படி இல்லாததை சொல்வதற்கு பெயர்தான் பொய் பேசுதல் என்று பெயர்.

என்னவோ உலகத்திற்கு தெரியாத ஒரு விஷயத்தைச் சொன்னதுபோல் நேசகுமாரின் இந்த கண்டுபிடிப்புக்கு புலிப்பாண்டியின் ஜால்ரா? முடிந்தால் புலிப்பாண்டிக்கூட சொல்லலாம் அது என்ன பொல்லாத மரியாதை என்று, நாங்களும் தெரிந்துக் கொள்ளலாம்.

அஹமதியாக்கள்
அஹமதியாக்களைப் பற்றி ஏற்கனவே நேசகுமார் வேறு சில தளங்களில் எழுதிய திரித்தல் மறைத்தல் வேலைகளை படித்துதான் இருக்கிறேன். ஒன்று செய்வோமா நேசகுமார் அய்யா? எனது பழைய கேள்விகளுக்கு விரைவில் பதில் சொல்லுங்கள், பிறகு இந்த அஹமதியாக்களைப் பற்றி நாம் ஒரு சிறப்பான விவாதத்தைத் தொடங்கலாம்.

கஃபா உலக மக்கள் அனைவருக்குமான இறை இல்லம்
சரிதான். யார் இல்லை என்றது. அல்லாஹ்வின் அறிவிப்பின்படி கஃபா என்பது உலக மக்கள் அனைவருக்குமான இறை இல்லம். இதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அதே இறைவன் அதே திருக்குர்ஆனில் சொன்ன முஹம்மது நபி உங்களுக்கோர் ஒரு அழகிய முன் மாதிரி என்ற எடுத்துக்காட்டை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்? ஒன்றை ஏற்றுக் கொண்டு, இன்னொன்றை மறுப்பதென்பது, யூதர்களின் வழியாக இருந்தது. அவர்கள் இவ்வாறு ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். அதையேதான் நீங்களும் சொல்கிறீர்கள். தனது மனதின் விருப்பு வெறுப்பிற்கேற்ப ஏற்பதும் மறுப்பதும் நியதி அல்ல, அது நம்பிக்கையும் அல்ல.

நேசகுமாரின் திருக்குர்ஆன் விளக்கங்களைப் பார்க்கும்போது அது அவருடைய புரிந்துக் கொள்ளும் கடினத்தையும் மற்றும் வேண்டுமென்றே கையாளப்படும் வன்முறை வாதமாகத்தான் தெரிகிறது.

ஒன்றை நேசகுமாரும், மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். திருக்குர்ஆன் வாழ்வின் பெரும்பாண்மையான இடற்பாடுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைத்தான் சொல்கிறது. அதே நேரம் அதன் தீர்வுகள் இன்றைக்கு கடினமாகவோ அல்லது அறிவிற்கு ஏற்றுக் கொள்ள முடியாததகவோ இருந்தாலும் அது பிரிதொரு (எதிர்) காலத்தில் அவசியமாக இருக்கும். அதனால்தான் அது எக்காலத்திற்கும் ஏற்ற மறையாக இருக்கிறது. திருக்குர்ஆன் அனுமதிப்பதை கட்டளையாக அர்த்தம் செய்து கொண்டு அதற்கு விளக்கமளித்து வில்லங்கம் செய்யும் நேசகுமார் இதைத் தெரிந்தே செய்கிறார் எனும்போது அவரை “பொய்யர்” என்று சொல்லுவதில் என்ன தவறு?.

<!– tag script Begins

tag script end –>

பூமியில் முதல் ஆலயம் காஃபா.

Filed under: ISLAM — islamthalam @ 12.24

மக்காவில் இருக்கும் காஃபா என்னும் ஆலயத்தின் வரலாற்றுச் சான்றைச் சொல்லும் நபிமொழியை எடுத்தெழுதி அதில் குறிப்பிட்டிருக்கும் வரலாற்றுத் தகவல் தவறானது என்று நிரூபிக்கும் நோக்கத்தோடு முன் வைக்கப்பட்ட நபிமொழி இது..

நான் நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?’ என்று கேட்டேன். அவர்கள் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம் – மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்” என்று பதிலளித்தார்கள். நான் ‘பிறகு எது?’ என்று கேட்டேன். அவர்கள் (’ஜெரூஸத்தில் உள்ள) ”அல் மஸ்ஜிதுல் அக்ஸா” என்று பதிலளித்தார்கள். நான் ‘அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது” என்று கேட்டேன். அவர்கள் ‘நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு ‘நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே அதைத் தொழுதுவிடு. ஏனெனில் நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது” என்று கூறினார்கள். (அறிவிப்பாளர், அபூதர் (ரலி) தமிழ் புகாரி 3366)

இந்நபிமொழியில், பூமியில் முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் மக்காவில் அமைந்த காஃபா என்னும் ஆலயம், பூமியில் இரண்டாவதாக அமைக்கப்பட்டது ஜெருஸத்தில் உள்ள அக்ஸா பள்ளிவாசல், இரண்டுக்கும் உள்ள கால வித்தியாசம் நாற்பது ஆண்டுகள் என்றும் விளக்குகிறது. இதில் முரண்பாடு காண்பவர்கள் கீழ் காணும் கருத்தை வைக்கிறார்கள்.

//**குறிப்பு:
பிரச்னை என்னவென்றால், காபா (அல் மஜிதுல் ஹரம்) கட்டப்பட்டது ஆபிரஹாமால் என்று கூறிக்கொள்கிறார்கள். அவர் இருந்தது 2000 கிமு என்று சுமாராகச் சொல்லலாம். சாலமன் கட்டிய கோவில் கட்டப்பட்ட வருடம் என்று சுமார் 958 கிமு என்று கூறுகிறார்கள். இடையே ஆயிரம் வருடங்கள். முகம்மது கூறுவதோ 40 வருடங்கள்!*//

ஆப்ரஹாம், (நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தான் பூமியில் முதன் முதலாக காஃபா பள்ளிவாசலைக் கட்டினார்கள் என்பது தவறு. காஃபாவை மறு நிர்மாணம் செய்தார்கள் என்பதே சரி.

ஆப்ரஹாம் தமது இரண்டாவது மனைவி ஹாஜர் (அலை) அவர்களையும், தாய்ப்பால் அருந்தும் பருவத்திலிருந்த தமது மகன் இஸ்மவேல் (நபி இஸ்மாயீல் (அலை) அவர்களையும் இறைவனின் கட்டளைப்படி, அன்று யாருமே வசிக்காத – தண்ணீரைக் காண முடியாத, பறிதவிப்பான நிலையில் மக்காவில் குடியமர்த்திவிட்டுச் சென்று விடுகிறார். இந்த வரலாற்று சம்பவத்தில்தான் வானவர் ஜிப்ரீல் மூலம் ஸம் ஸம் நீருற்றை அங்கு இறைவன் ஏற்படுத்துகிறான். ”நீங்கள் (கேட்பாரற்று) வீணாகி விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். இங்கு அல்லாஹ்வின் ஆலயம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சிறுவரும் (இஸ்மவேலும்) அவருடைய தந்தையும் (ஆப்ரஹாமும்) சேர்ந்து கட்டுவார்கள். அவருடைய குடும்பத்தை அல்லாஹ் வீணாக்கி விட மாட்டான்” என்று ஹாஜர்(அலை) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் கூறினார். அப்போது காஃபா ஆலயம், தரையிலிருந்து உயரமாக ஒரு மேட்டைப் போன்று அமைந்திருந்தது. வெள்ளம் வந்து அதன் வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் (வழிந்து) சென்றுவிடும். (தமிழ் புகாரி 3364, நீண்ட ஹதிஸிலிருந்து)

இந்த செய்திலிருந்து ஏற்கெனவே இருந்த காஃபா ஆலயம் சிதிலமடைந்து விட்டதால் அதே இடத்தில் மீண்டும் இறைத்தூதர் ஆப்ரஹாம் என்ற இப்ராஹீம் (அலை) அவர்களால் காஃபா மறு நிர்மாணமாகக் கட்டப்பட்டது அதுவும் இறைவனின் கட்டளைப்படி.

திருக்குர்ஆன் கூறுவது.
3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

முதல் மனிதர் படைக்கப்பட்டு அவர் இறைவனை வணங்குவதற்காக எழுப்பிய ஆலயம்தான் காஃபா என்பதை 3:96 வசனத்திலிருந்து விளங்கலாம். மேலும் முதல் மனிதர் ஆதாம் என்ற ஆதம் (அலை) அவர்கள் மக்காவில் தான் இறக்கப்பட்டார்கள் என்பதையும் இவ்வசனம் கூறுகிறது. சுவனத்திலிருந்து கொண்டு வந்த கருப்புக் கல் (ஹஜருல் அஸ்வத்) காஃபாவின் ஒரு மூலையில் பதிக்கப்பட்டிருப்பதும் இதை உறுதி செய்கிறது.

இறைவனை வணங்குவதற்காக முதன் முதலாக ஆலயத்தை எழுப்பிவர் ஆப்ரஹாம் என்பது – ஆப்ரஹாம் காலத்திற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளாகவே மனிதயினம் இருந்திருக்கிறது, நபிமார்களும் இருந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் இறைவழிபாட்டிற்காக ஆலங்களை ஏற்படுத்திக் கொண்டதில்லை என்ற தவறானக் கருத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே புகாரி 3366 வது ஹதீஸில் சொல்லப்படும் வரலாற்றுக் குறிப்புகளில் முரண்பாடு இல்லை. மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராமும், ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸாவும் முதலில் எழுப்பப்பட்ட ஆலங்களில் மிகப் பழமையான இரு ஆலயங்கள்.

முஹம்மது (ஸல்) அவர்கள் நபி ஆவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு – அவர்களின் 35வது வயதில், மக்காவாசிகள் காஃபாவை அடிமட்டம் வரை இடித்து விட்டு மீண்டும் கட்டியிருக்கிறார். முஹம்மது (ஸல்) அவர்கள் மறைவுக்குப் பின்னும் மக்காவை ஆட்சி செய்தவர்கள் காஃபாவை இடித்து விட்டு மீண்டும் கட்டியிருக்கிறார்கள் என்பது வரலாறு. அதுபோல் மஸ்ஜிதுல் அக்ஸாவும் நபி சுலைமான் (சாலமன்) அவர்களால் மறு நிர்மாணம் செய்யப்பட்டது என்பதே சரியாகும்.

திருக்குர்ஆன் சில வசனங்கள் விளக்கம்!

Filed under: வகைப்படுத்தப்படாதது — islamthalam @ 12.24

இறைத்தூதர், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் பல கடவுட்க் கொள்கையாளர்களும், யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை ஒழித்துக்கட்டி இஸ்லாத்தையும் அழித்துவிட வேண்டும் என்பதில் வெறியாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் அதனால் முஸ்லிம்கள் பல போர்களை சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரிறைக் கொள்கையாளர்களாகிய முஸ்லிம்களும் பல தெய்வக் கொள்கையாளர்களாகிய நிராகரிப்பாளர்களும் உறவினர்களாக இருந்தார்கள். உதாரணமாக: அலி (ரலி) சிறு வயதிலேயே இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக இருந்தார், அவரின் தந்தை அபூ தாலிப் நிராகரிப்பாளராக இருந்தார். அது போல் பத்ருப் போரில் அபூ ஜஹ்ல் கொல்லப்பட்டபின் நிராகரிப்பாளர்களின் தலைவராக அபூ ஸுஃப்யான் பொறுப்பேற்று இஸ்லாத்தை மிக வன்மையாக எதிர்த்தார். இவரின் மகள் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் இவர்) ஆரம்பகாலத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக தந்தை அபூ ஸுஃப்யானின் கொடுமை தாங்க முடியாமல் அபீஸீனியாவுக்கு (ஹஜ்ரத்) நாடு துறந்து சென்றார்கள்.
இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் இருந்தனர் இதே நிலையில் அவர்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்கு தகவல் கிடைத்து விடக்கூடாது என்பதற்காகவே திருக்குர்ஆன் பல வசனங்களில் இவ்வாறு கட்டளையிடுகிறது.

3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள். நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள். அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).

3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால் (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

4:89. (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்;. ஆகவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்;. (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் – அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.

4:139.இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். என்ன! அவர்களிடையே இவர்கள் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது.

5:57. முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும் காஃபிர்களிலிருந்தும் யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

60:1. ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும் உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள் ”நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக இத்தூதரையும் உங்களையும் வெளியேற்றுகிறார்கள். என் பாதையில் போரிடுவதற்காகவும் என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்” ஆனால் நீங்கள் மறைத்துவைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும் உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.

60:2. அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும் தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள். தவிர நீங்களும் காஃபிர்களாக – நிராகரிப்பாளர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.

60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்ளோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.

60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

வெளிப்படையாக எதிப்பைக் காட்டி உள்ளுக்குள் உங்களை ஓழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள். (3:118)
உங்கள் மார்க்கத்தை பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நண்பராக்கிக் கொள்ளாதீர்கள். (5:57)
உங்களுக்குப் பகைவர்களாக இருப்பவர்களையும், கைகாளாலும், நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்.(60:2)
ஒரே இறைவனை ஏற்றுக் கொண்டதற்காக உங்கள் பகைவர்களாக இருந்து உங்களையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் ஊரை விட்டே விரட்டியவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (60:1)
மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும், உங்களையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் வீடுகளை விட்டும் வெளியேற்றியவர்களையும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (60:9)
உங்களோடு போரிடாமலும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை விரட்டாத முஸ்லிமல்லாதவர்களிடம் நீங்கள் நட்பு பாராட்டுவதுடன் அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள். (60:8) என்று இஸ்லாம் திறந்த புத்தமாக – வெளிப்படையாகத் தெளிவாகவே உள்ளது.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள், கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே. அல்லாஹ்வின் பாதையில். யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

போரில் எதிரிகளை சந்திக்கும் போது வெட்டுங்கள், கொல்லுங்கள் என்று சொல்லாமல், எதிரிகளுக்கு முதுகு சொறிந்தவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. எதிரிகளை வெட்டித் தாக்காவிட்டால் எதிரிகள் முஸ்லிம்களை வெட்டுவார்கள் போரில் இருபக்கமும் தாக்குதலும், உயிரழப்பும் ஏற்படுவது போர் மரபு. போரில் சொல்லப்படும் ஒரு வசனத்தை போருக்கு வேளியே – சாதாரண நிலையிலும் நிராகரிப்பாளர்களை வெட்டச் சொல்வதாகத் தொடர்ந்து திரித்துச் சொல்வது ஒருவித நோயின் அறிகுறியே!

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் – இணை வைப்போர்களில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால் அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக – ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

போரிடாமல் அபயம் கேட்கும் நிராகரிப்பாளர்களை ஆதரிக்கச் சொல்லும் 9:6வது வசனம் இவர்களின் நோயை உறுதி செய்கிறது. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்களும் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தார்கள் (புகாரி, 1356) முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது கவச உடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். (புகாரி, 2068,2916) யூதப் பெண்ணின் விருந்தை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்றார்கள், (புகாரி, 2617) யூதர்களே நியாயம் கேட்டு முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். (புகாரி, 2412,2417) இவர்கள் அனைவரும் போர்ப் பிரகடனம் செய்யாமல் முஸ்லிம்களுடன் சகோதரத்தனத்துடன் பாசமாகப் பழகியவர்கள். நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சர்கள் கூட வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர்.

9:23. ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும் ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால் அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால் அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

29:8. தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்; எனினும் (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம், என்னிடமே உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்.

31:14.நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள், இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன ஆகவே ”நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

31:15. ஆனால் நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேணடாம், ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள், (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும், நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”

ஒரிறைக் கொள்கையை வெறுத்து, நிராகரித்தவர்கள் தந்தை, தனயன்களாகிய குடும்பத்தார்ளேயானாலும் மார்க்க விஷயத்தில் அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளக்கூடாது என்று 9:23 வது வசனம் கட்டளையிடுகிறது. இணைவைக்கும் விஷயத்தில் தாய் தந்தைக்குக் கட்டுப்படக்கூடாது என்பதைத் தவிர மற்ற அனைத்து உலக விஷயங்களிலும் பெற்றோருக்குக் கீழ்படிய வெண்டும் என்றும் 29:8, 34:14,15 ஆகிய வசனங்கள் அறிவுறுத்துகிறது. ”நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!” என்று இறைவன் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரிய வசனம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அடுத்து திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பில் ஒரு லேட்டஸ்ட் அவதூறு.

47:4. (முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின் அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள், கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள். அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான். ஆயினும் (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே. அல்லாஹ்வின் பாதையில். யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.

இது ஜான் டிரஸ்ட் வெளியிடும் தமிழ் மொழி பெயர்ப்பு குர்ஆன் ஆகும். தமிழில் படிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்தற்காக வசனத்தின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிக்குள் விளக்குவதற்கு இந்த வசனம் போரைப் பற்றித்தான் பேசுகிறது என்பதற்கு அரபு மூலத்தில் நேரடியாக வசன வாக்கியங்கள் இருக்கின்றன. அதிலிருந்துதான் தமிழில் மொழி பெயர்த்த அறிஞர்கள் 47:4ம் வசனத்தின் ஆரம்பத்தில் அடைப்புக் குறிக்குள் விளக்கியுள்ளார்கள். இதை சப்பைக்கட்டுகள் என்பவர்கள் இப்படி விமர்சித்துள்ளார்கள்..

//*அடைப்புக்குறிக்குள் உள்ளவை தமிழில் குரான் http://www.tamililquran.com/ மொழிபெயர்த்தவரின் சப்பைக்கட்டுகள். அவை ஒரிஜினலில் இல்லை என்ற ஞாபகத்துடன் படிக்கவும். இதன் நேரடி அரபி மொழிபெயர்ப்பு இன்னும் கடுமையானதாக இருக்கும். நேரமிருந்தால் அதனையும் தருகிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கவும். இதில் இருக்கும் வார்த்தைகள் எப்படி தமிழில் சப்பைக்கட்டு கட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் பார்க்கவும்.*//

அடைப்புக் குறிக்குள் உள்ளவை அசல் மூலத்தில் இல்லை என்பவர்கள் //*அரபி மொழிபெயர்ப்பு இன்னும் கடுமையானதாக இருக்கும். நேரமிருந்தால் அதனையும் தருகிறேன்.*// என்று கூறியுள்ளதால் இதை பற்றி சப்பைக்கட்டியவர் விளக்கிய பின் சப்பைக்கட்டுவது யார்? என்று திருக்குர்ஆனிலிருந்தே விளக்கங்களை வைத்து நாம் நிரூபிப்போம். (இன்ஷா அல்லாஹ்)

<!– tag script Begins

tag script end –>

முஹம்மது நபி தமக்காக யாரையும் பழி வாங்கியதில்லை!

Filed under: ISLAM — islamthalam @ 12.24

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனக்காக யாரையும் பழி வாங்கியதில்லை என்று இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்கள் கூறுகிறது. ஆரோக்கியம் என்பவர் “முகம்மது செய்த கொலைகள்” என்ற தலைப்பில் கவ்வைக்குதவாத – இஸ்லாத்திற்கு வெளியே எழுதியதை இஸ்லாத்தின் ஆதாராமாகக் காட்ட முயற்சி செய்திருக்கிறார். இஸ்லாத்திலிருந்து ஆதாரங்களை முன் வைத்து இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டும் அதுதான் அறிவு சார்ந்த விமர்சனமாக இருக்கும் இது பற்றி பலமுறை முஸ்லிம்கள் வலைப்பதிவில் எழுதி விளக்கியிருக்கிறார்கள்.

டாக்டர் ஏ.என் சலீம் எழுதியதாக, முகம்மது செய்த கொலைகள் என்று அடுக்கியுள்ள ஆரோக்கியம் அவர்கள் அந்தக் கொலைகளின் செய்திகள் இடம் பெற்ற நேரடி ஹதீஸ் நூல்களின் பெயர்களைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், அதுவரை இது அவதூறாகவே இருக்கும்

ஒரு ஹதீஸின் விளக்கம்.

பனூ முஸ்தலிக் போரின்போது பெண் போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக்கு கிடைத்தனர். அவர்களுடன் கருவுற்று விடக் கூடாதென்றும் நாங்கள் விரும்பினோம். எனவே புணர்ச்சி இடை முறிப்பு ‘அஸல்” செய்து கொள்வது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதைச் செய்யாமலிருப்பதால் உங்களுக்கு எந்தத் தீங்கும் நேர்ந்துவிடப் போவதில்லை ஏனெனில் அல்லாஹ் மறுமை நாள்வரை நான் படைக்கவிருப்பவற்றை எழுதி முடித்துவிட்டான்” என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பில் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ‘படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர், அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புகாரி,7409)

உடலுறவின் போது கர்ப்பம் தரிக்காமல் இருக்க உச்சக்கட்டத்தில் விந்தை வெளியேற்றுவதற்கே அரபியில் ”அஸல்” என்று சொல்லப்படும். இப்படிச் செய்யலாமா? இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? என்று நபித்தோழர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள். ”நீங்கள் அஸல் செய்தாலும் செய்யா விட்டாலும் கருவறையில் இறைவன் படைக்க நாடியதை படைத்தே தீருவான்” இறைவன் படைக்க நாடியதை யாராலும் தடுக்க முடியாது இறைவன் படைக்க நாடாததை யாராலும் படைத்து விட முடியாது” என்கிற கருத்தில் நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு தொடர்ந்து ஆணுறையைப் பயன்படுத்தி தாம்பத்தியத்தில் ஈடுபட்டு வந்த தம்பதியருக்கு குழந்தை ஜனித்தது என்று செய்திகளில் படித்த நினைவு முழுச் செய்தியும் சரியாக நினைவில்லை இந்த செய்தியை அறிந்தவர்கள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி!

கரு ஏற்பட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தாலும் இறைவன் நாடினால், பல லட்சம் உயிரணுக்களில் ஒரேயொரு உயிரணு நீந்திச் சென்று கருவை ஏற்படுத்திவிடும் – இறைவன் நாடியதை படைத்தேத் தீருவான். இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே தற்காலிகக் கருத்தடையை இஸ்லாம் அனுமதிக்கிறது என்று முஸ்லிம்கள் ஆதாராமாகக் கொள்வார்கள்.
மேற்கண்ட நபிமொழிக்கு அச்சில் ஏற்றுவதற்கு கை கூசும் அளவுக்கு, ஆரோக்கியம் அவர்கள் விளக்கவுரை!? எழுதினார். கண்டு கொள்ள நாதி இல்லை!

பனூ முஸ்தலிக் போர் பற்றி நான் கண்ணியமாகவே விளக்கமளித்திருந்தேன். ”அப்புறம் ஏன்லா உங்கள் ஊரில் அங்கங்கு குண்டு வெடிக்காது? என்று ஆரோக்கியம் நாகரீகமற்ற தலைப்பை வைத்திருந்தார். கண்டு கொள்ள நாதி இல்லை!

நல்லாடியாரின் ஜுலை 15,2005ன் பதிவு சற்று நிதானமிழந்து – அவசரத்தில் பதிந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நல்லாடியாரின் பதிவைக் கண்டித்து களமிறங்கிய நடுநிலையாளர்கள், ஆரோாக்கியம் அவர்களின் நாகரீமற்ற எழுத்தை ஏன் கண்டு கொள்ளவில்லை என்று கண்டிப்பாக நான் கேட்க மாட்டேன். இங்கே முஸ்லிம் வலைப்பதிவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்..

எழுதுகின்ற விஷயத்தைக் கவனியுங்கள், எழுதுபவர் யார் என்ற கவனம் வேண்டாம். வேண்டுமென்றே எழுதும் – பிறர் எழுத்துக்களில் உள்ள வன்முறையை ஊதாசீனப்படுத்துங்கள். நிதானத்தை இழந்துவிட வேண்டாம், நீங்கள் நடுநிலை சமுதாயம் என்பதை மறந்து விட வேண்டாம். இஸ்லாத்தை விமர்சிப்பவர்களுக்கு, தாமதம் ஆனாலும் தக்க ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் அளியுங்கள். தரக்குறைவான வார்த்தைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவமரியாதையாகப் பேசுவது நயவஞ்சகத் தன்மையிலொன்றாக இஸ்லாம் கூறுகிறது. (எழுதியவற்றில் பிழையிருந்தால் திருத்துங்கள்.)

அன்படன்,
அபூ முஹை

<!– tag script Begins

tag script end –>

நரகத்தில் பெண்கள்-ஓர்விளக்கம்

Filed under: வகைப்படுத்தப்படாதது — islamthalam @ 12.24

நரகத்தில் பெண்களே அதிகம்.

”இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்- 2911)

உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ”நரகத்தில் பெண்களே அதிகம்” என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.)

”நான் (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையேக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்”. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி- 3241, 5198)

மேற்கண்ட நபிமொழியை முன்வைத்து, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும், ஆணாதிக்க மதம் என்று வழக்கம் போல், விமர்சிக்கக் கிளம்பியுள்ளார்கள். இதனால் இவர்கள் பெறும் ஆதாயம் என்ன? ”ஆஹா அப்படியா?” என்று நாலு பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள், என்ற எதிர்பார்ப்பா? அல்லது ”நரகத்தில் பெண்களே அதிகம்” என்று சொல்லும் மதம் எங்களுக்குத் தேவையில்லை என, முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள் என்ற ஆவலா? திறந்த கண் கனவாளிகள்!

ஒரு பேரூந்தில் 42 பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். 20 ஆண்களும், 22 பெண்களிருந்தால், பேரூந்தில் அதிகமாக இருப்பவர்கள் பெண்களே. அதற்காக, பேரூந்தில் ஆண்களே பயணிக்கவில்லை என்று அர்த்தம் செய்வது அனர்த்தமாகும், நரகத்தில் பெண்களே அதிகம் என்ற வார்த்தையே, நரகத்தில் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1000 ஆண்களும், 1010 பெண்களுமிருந்தால், ஆண்களை விட பெண்களே நரகத்தில் அதிகம். இதில், ஆணாதிக்கமும் – பெண்ணடிமைத்தனமும் எங்கிருந்து வந்தது.

முழுமையான விபரங்களுடன் மற்றொரு நபிமொழி.
”எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது, ‘இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?’ எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்’ என்றார்கள்” (புகாரி- 29, 1052, 5197)

நரகத்தில் பெண்கள் அதிகமாவதற்குக் காரணம் என்ன? என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம். கவனிக்க:-

”அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள்.”

”உதவிகளை நிராகரிக்கிறார்கள்.”

”நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் ‘உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை’ என்று பேசிவிடுவாள்”

மனைவியின் தேவைகள் அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்து – மனைவி விரும்பியதையெல்லாம் கணவன் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அற்பமான சிறு குறைகளுக்காக ”உனக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்? என்று கணவனை எடுத்தெறிந்து பேசி விடுவார்கள் பெண்களில் சிலர். உண்டா, இல்லையா?

மாலையில் கடை வீதிக்கு, அல்லது சினிமாவுக்கு அழைத்துப் போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு காலையில் கணவன் வேலைக்குப் போவான். போன இடத்தில், எதிர்பாராத விதத்தில் மேலதிகாரியின் வருகை, அல்லது கூடுதலான பணியின் காரணமாகவும், அப்பணியை அன்றே முடிக்க வேண்டுமென்றக் கட்டாயத்தாலும் கணவன் வீடு திரும்ப தாமதம் ஆகிவிடும். இந்த தாமதம் மனைவிக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பது உண்மைதான் ஆனாலும் கணவனின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பெண்களில் சிலர், ”உன்னைக் கட்டிக்கிட்டு ஒரு சுகத்தையும் நான் காணவில்லை” என்று நன்றி கெட்டத்தனமானப் பேசிவிட்டு, பெட்டியுடன் தாய் வீட்டுக்குச் செல்ல தயராகி விடுவார்கள். உண்டா இல்லையா? (இவற்றை மறுப்பவர்கள் மனசாட்சியை மறைத்து விட்டுத்தான் மறுக்க வேண்டும்)

இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. ”கணவனை நிராகரிக்கும்” ”கணவன் செய்யும் நன்மைகளை நிராகரிக்கும்” பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியே, ”நல்ல கணவனுக்கு நன்றி மறக்கும்” பெண்களே நரகத்தில் அதிகம் என்று நபிமொழியில் விளக்கப்படுகிறது. ”நல்ல மனைவிக்கு நன்றி மறக்கும்” கணவனுக்கும் நரகம்தான் என்பதற்கும் இது பொருந்தும் – (இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் ஆதாரங்களுடன் பார்ப்போம் இறைவன் நாடட்டும்) – துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு சிந்தித்தால் மட்டுமே இதிலுள்ள நடுநிலையை விளங்க முடியும்.

அன்புடன்,
அபூ முஹை