இஸ்லாம்தளம்

ஹராமென்றால் இழிவானதா?

இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி நீலகண்டன் – http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_20.html – சொல்கிறார், ”ஹராம்” என்றால் ”இழிவானது” என்று.

கணவனுள்ள பெண்களும் – ”ஹுர்ரிமத் அலைக்கும்”… – (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளார்கள். 004:024)

எப்படியிருக்கிறதென்று பாருங்கள்? ஏற்கெனவே ஒருவனுக்கு மனைவியாக இருப்பவள் இன்னொருவனைத் திருமணம் செய்து அவனுக்குப் பிள்ளையும் பெற்றாளாம். (இன்னும் மூவரைக் கட்டிக் கொண்டால் சுத்தமாக இருக்கும்) ஒருவனுக்கு மனைவியாய் இருப்பவள் அவனிடமிருந்து விவாகரத்துப் பெறாமல் வேறொருவனை மணமுடிக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. இதில் பிற மதங்கள் என்ன சொல்கின்றன என்பது தெரியவில்லை. இந்திய சட்டமும் இதைத் தடை செய்கிறது என்றே கருதுகிறேன்.

”ஹராம்” என்பதற்கு நீலகண்டன் அவர்களின் விளக்கவுரை…

//இப்போது இன்னொரு விசயத்தை பார்ப்போம். பெற்றவர் தவறு செய்ததாகவே வைத்துக்கொள்வோம். பிறந்த குழந்தை என்ன செய்யும்? இந்த நவீன உலகில் திருமண பந்தத்தில் பிறந்தாலும் மத நெறிக்கு வெளியே பிறந்ததால் பச்சிளம் குழந்தையை பாவ பிறவி எனக் கூறும் கொடுங்கோரர்களை என்ன என்று சொல்ல? இதுதான் பகுத்தறிவா?
இந்த பகுத்தறிவான பதில் வெளிவந்தது ‘முஸ்லீம் முரசு’ இதழில் (மார்ச் 1989) இந்த பகுத்தறிவு பெட்டகத்தின் அட்டையை அலங்கரித்த ‘பகுத்தறிவு’ யார் தெரியுமா?//

ஹராம் என்றால் பாவப் பிறவி, இழிபிறவி என்று தமக்குத் தோன்றியதை அடுக்கிக் கொண்டே போகிறார் நீலகண்டன். ஹராம் என்றால் விலக்கப்பட்டது, தடைசெய்யப்பட்டது, கூடாத உறவு, தகாத உறவு. என்றே பொருள். இஸ்லாமிய வழக்கில் இறைவன் அனுமதிக்காததை ”ஹராம்” என்று சொல்லப்படும்.

”ஹுர்ரிம அலைக்கும்” உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும். (003:050)

ஹராம் என்றால் இழிவானது எனப் பொருள் என்றால் ஹராமாக்கப்பட்ட ஒன்றை, இங்கு மீண்டும் இறைவன் அனுமதிக்க மாட்டான். ஹராம் என்பது தடை செய்யப்பட்டவை, இறைவனால் தடை செய்யப்பட்டவற்றிலிருந்து முஸ்லிம்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

”ஹுர்ரிமத் அலைக்கும்” – தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை – உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. (005:003) இதே வசனத்தில், ஹராமாக்கப்பட்டவைகளை – நிர்ப்பந்த நிலையில் பாவம் செய்யும் எண்ணமில்லாமல் – புசித்தால் அவர் மீது குற்றமில்லை என்றும் இறைவன் கூறுகிறான்.

விபச்சாரத்தில் பிறந்த குழந்தையின் நிலைப்பாடு.

ஒரு பெண் ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக நான் (தகாத உறவினால்) கர்ப்பமுற்றுள்ளேன்’ என்று கூறினார்.

”இல்லை நீ சென்று குழந்தை பெற்றெடு’ (பிறகு திரும்பி வா) என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தை எடுத்துக்கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இது நான் பெற்றெடுத்த குழந்தை’ என்று கூறினார்.

”நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்தபின் திரும்பி வா” என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண் ‘அல்லாஹ்வின் தூதரே இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்’ என்று கூறினார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். (முஸ்லிம், நபிமொழியின் சுருக்கம்)

ஒன்றிரண்டு நபிமொழிகளை எடுத்துக்காட்டி, அதோடு //பாகிஸ்தானில் மத சட்டத்தின் படி ‘தவறான’ உறவில் பிறந்த குழந்தையும் கல்லால் அடித்து கொல்லப்பட்டது குறித்து படித்த ஞாபகம்.// என்று எழுதி விட்டால் ”இஸ்லாம் தவறான உறவில் பிறந்த குழந்தையைக்கூடவாக் கொல்லச் சொல்கிறது” என்று படிப்பவர்கள் இமைகளை விரிக்கமாட்டார்களா? போகட்டும்.

விபச்சாரத்தின் மூலம் கர்ப்பமடைந்த பெண் – அவர் குழந்தை பெறும் காலம்வரை, குழந்தை பெற்று அந்தக் குழந்தைத் தாய் பால் குடிக்கும் காலம் வரை, பின் பால்குடி மறக்கடிக்கப்பட்டு ரொட்டியை உணவாக உண்ணும் வரை – அந்தப் பெண்ணுக்கு தண்டனை காலம் தள்ளி வைக்கப்படுகிறது. பின் அச்சிறுவனைப் பராமரிக்கும் பொறுப்பு வேறொருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, விபச்சாரம் செய்த பெண்ணுக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இவ்வளவும், இஸ்லாம் தடை செய்த விபச்சாரத்தைச் செய்தவர்கள் தகாத உறவு கொண்டவர்கள் என்றாலும், தகாத உறவில் – ஹராமான உறவில் பிறந்த குழந்தை எந்தப் பாவமும் செய்யவில்லை, தாகாத உறவால் விபச்சாரம் செய்தவர்களுக்காக அந்த உறவில் பிறந்த குழந்தை பொறுப்பாளியாகாது என்பதனால் இஸ்லாம் அந்தக் குழந்தையின் பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் நீலகண்டன் அவர்கள் இஸ்லாத்தின் மீது வலிய தமது இட்டுக் கட்டலைத் திணித்திருக்கிறார்.

//அவள் பெற்ற குழந்தையும் ஹராமான பிறப்பே.//

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை, இஸ்லாம் தடை செய்துள்ள தகாத உறவில் பிறந்த குழந்தை என்று முஸ்லிம் முரசு சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தகாத உறவில் பிறந்த குழந்தையை இஸ்லாம் இழிபடுத்துவதாகத் தவறாக விளங்கிக் கொண்டு இஸ்லாத்தை விமர்சத்திருப்பதுதான் அபத்தம்.

அதே அபத்தத்தோடு பெரியாரையும் சாடியிருப்பது பேரபத்தம். மேல்ஜாதி, கீழ்ஜாதி, தீண்டத்தகாதவன் எனும் தீண்டாமையை ஒழித்த ஒரே மார்க்கம், இஸ்லாம் மார்க்கம் என்று பெரியார் மட்டுமல்ல, அன்றும் இன்றும் நாளையும் யார் சொல்லியிருந்தாலும், சொன்னாலும் அதற்குப் பொருத்தமான – தீண்டாமை இல்லாத மார்க்கம் இஸ்லாம் என்பதில் நேர்மையானவர்களிடையே மாற்றுக் கருத்து இருக்கவா முடியும்?

நீலகண்டன் அவர்கள் எதிலோ உள்ள ஆத்திரத்தை நிதானமிழந்து இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்…

//”தமிழ் மக்களுக்கு இஸ்லாமே பொருத்தமானது” கூறியவர் ஈவேரா (24-2-1935) 1980களிலும் 2000களிலுமே இப்படி என்றால் 1930களில் இந்த கும்பல் எப்படி இருந்திருக்க வேண்டும். அவர்களிடம் போய் இளித்தபடி ஈவேரா இப்படி அறிக்கை விட்டிருந்தால் அந்த ஆள் எப்படிப்பட்ட நயவஞ்சக பசப்பு வார்த்தை ஆசாமியாக இருந்திருக்க வேண்டும்! இப்படிப்பட்ட போலி பகுத்தறிவு ஆசாமி, சுயமரியாதை இல்லாத காட்டுமிராண்டி நயவஞ்சக முட்டாளை, ‘பெண் விடுதலை போராளி’ என்று சொன்னால், தெரியாமல்தான் கேட்கிறேன்…பெண் ஏன் அடிமையாக மாட்டாள்?//

பொருத்தமில்லாத வசவு மொழிகள்.

அன்புடன்,
அபூ முஹை

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: