இஸ்லாம்தளம்

ஸலாம் கூறுதல்

”உங்களுக்கு நம்பிக்கை (ஈமான்) பிறக்கும் வரை நீங்கள் சுவனத்தில் நுழைய முடியாது. உங்களில் ஒருவரையொருவர் உளமாற நேசிக்கும் வரை நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களாக ஆக முடியாது. எச்செயல் பிறரை உளமாற நேசிக்கவைக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (அது உங்களுக்கிடையில் நேசத்தை ஏற்படுத்தி நம்பிக்கையைப் பலப்படுத்தி, சுவனத்தில் நுழைவதற்கு வழி வகுத்துவிடுகிறது) என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்” என அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம், அபூதாூது, மற்றும் திர்மிதீ)

”இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார், (நூல்: புகாரி, முஸ்லிம்)

நபி صلى الله عليه وسلم அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் அருள், சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும்!) என்று சொன்னார். அதற்கு, நபி صلى الله عليه وسلم அவர்கள் பதில் சொன்னார்கள். அவர் அமர்ந்தார், நபி صلى الله عليه وسلم அவர்கள், பத்து (நன்மைகள்) என்றனர். பின்பு மற்றொருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்றார் அதற்கு, நபி صلى الله عليه وسلم அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் உட்கார்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் இருபது (நன்மைகள்) என்றார்கள். மேலும் ஒருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பாக்கியமும் உங்கள் மீது உண்டாகட்டும்!) என்றார். அதற்கு, நபி صلى الله عليه وسلم அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் அமர்ந்தார். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் முப்பது (நன்மைகள்) என்றார்கள்”” என இம்ரான் இப்னு ஹுஸைன் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: திர்மிதீ, நஸயி மற்றும் அபூதாூது

இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது என்று ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டதற்கு, ”பசித்தோருக்கும், ஏழைகளுக்கும் உணவு வழங்குவது. இன்னும் உனக்கு அறிமுகமான, அறிமுகமல்லாத அனைவருக்கும் ‘ஸலாம் சொல்வதுமாகும்” என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்”” என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம் மற்றும் அபூதாூத்

”(இருவர் சந்திக்கும்போது) யார் ஸலாமை முதலில் சொல்கிறாரோ, அவர் மக்களிலேயே அல்லாஹ்விடம் மிகுந்த சிறப்பிற்குரியவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்.” நூல்: அபூதாூது, அஹ்மத்

”இரண்டு பேர் சந்திக்கும்போது யார் முதலில் ஸலாம் கூறுவார் என, நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ”அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக மேன்மைக்குரியவர் முதலில் ஸலாம் கூறுவார்” என்று அவர்கள் பதிலளித்தார்கள்” என அபூ உமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: திர்மிதீ)

”வாகனத்தில் செல்பவர், நடந்து வருபவருக்கு ஸலாம் கூறுவார். நடந்து வருபவர், அமர்ந்திருப்பவருக்கு ஸலாம் கூறுவார். சிறுகூட்டம் பெருங்கூட்டத்திற்கு ஸலாம் கூறும்” என அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூத் மற்றும் திர்மிதீ புகாரியின் மற்றோர் அறிவிப்பில் சிறியவர்கள், பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவர் என்று உள்ளது.

”இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் ‘ஸலாம்” (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூ அல் அன்ஸாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூத்

”இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றோர் இறைநம்பிக்கையாளரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து (பேசாமல்) இருப்பது ஆகுமானதல்ல. மூன்று நாட்கள் இப்படிக் கழிந்துவிட்டால் (ஒருவர் மற்றொருவரைச்) சந்தித்து ‘ஸலாம்” கூறட்டும். (மற்றொருவர்) பதில் ‘ஸலாம்” கூறிவிட்டால், இருவருமே சன்மானத்தில் கூட்டாகி விடுகின்றனர். பதில் ‘ஸலாம்” கூறாவிட்டால் (பதில் கூறாதவர்) பாவத்திற்கே திரும்பிவிடுகிறார். ஆரம்பமாக ‘ஸலாம்” கூறியவர் (இறைவனுடைய) வெறுப்பை விட்டும் நீங்கி விடுகிறார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்”” என அபூஹ{ரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: அபூதாூத்

நபி صلى الله عليه وسلم அவர்களின் தோழர்களிடம் (இருவர் சந்தித்துக் கொள்ளும்போது) (முஸாஃபஹா எனும்) கை கொடுத்தல் இருந்ததா என்று நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ”ஆம்”” என்றார்கள்”” என கதாதா(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, திர்மிதி

உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே என்று என்னிடம் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் என அபூதர்رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: முஸ்லிம்

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: