சகோதரர் இப்னு பஷீரின் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்களை ஜீரணிக்க முடியாமல் அது போன்ற தருணங்களிலெல்லாம் ஒவ்வொரு தடவையும் வழக்கம் போல் என்ன செய்வாரோ அதே ஆட்டத்தை ஆடியிருக்கிறார் ஒரு இந்துத்வவாதி.
இவர் ஒரு நேரத்தில், அதாவது வலைப்பதிவுக்கு வருவதற்கு முன் இஸ்லாத்தை விமர்சிப்பதில் ஹீரோவாக இருந்தாராம். வலைப்பதிவில் இவர் காலடி வைத்த நேரம், இவருடைய விமர்சனம் வெறும் பிதற்றல் + புரட்டலாகி வெளிச்சத்திற்கு வந்து விட்டது. வரலாற்றைப் புரட்டினார், பொய்களைப் பரப்பினார் எல்லாமே, இவரது பாஷையில் சொன்னால் பம்மாத்து.
சமீபத்தில் இவரைச் சீண்டுவார் யாருமில்லை. வேறு பெயர்களில் இவர் எழுதுவதாக சொல்லப்பட்டாலும் அதற்கும் சரியான பதிலடி கொடுக்க பல முஸ்லிம்களும் வலைப்பதிவில் நுழைந்து விட்டார்கள் அதனால் இவருக்கு எரிச்சல்.
முஸ்லிம்களை சீண்ட வேண்டுமென்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்களைத் தரக்குறைவாக எழுதினால் போதும் என்ற லாஜிக்கை தொடர்ந்து இவர் பயன்படுத்துவது அறிந்ததே. அந்த வழக்கமான எழுத்தைத்தான் இப்போதும் எழுதியிருக்கிறார். முஸ்லிம்கள் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டால் பொதும், எல்லம் வழக்கமான உளறல்தான் -வழக்கம் போல் புலம்பி பின் ஓய்ந்து விடுவார்.
நேர்மையென்றால் என்னவென்றே தெரியாத இந்த வேடதாரியின் அவதூறுகளில் ஒன்று, இவரை எதிர்த்து எழுதிய என்னை, இவரது பிறப்பு பற்றி நான் வசைபாடியதாக என் மீது குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு விளக்கம் கேட்டு எழுதி இரண்டு வருடங்கள் ஆகப் போகின்றன. இவர் நேர்மையாளராக இருந்தால் முதலில் என் மீது சுமத்திய அவதூறை நிரூபிக்கட்டும்.
//*இந்நிலையில் என்னை வசைபாடுவதை விடுத்து (குறிப்பாக அபூ முஹை அவரது ஒரு பதிவில் என்னையும் எனது பிறப்பையும் பற்றி வசைபாடியிருந்தார்),*//
மனித குலம் அனைத்தும் தொடக்கத்தில் ஒரே தாய், தந்தையிடமிருந்தே பல்கிப் பெருகியவர்கள் என்பதை ஆழமாக நம்புபவன் நான். நேசகுமாரின் கர்வத்தையே நான் சாடியிருக்கிறேன், அவரது பிறப்பைப் பற்றி எங்கும் வசைபாடியதில்லை. என் மீது சுமத்தும் இந்தக் குற்றச்சாட்டு தவறான புரிதல், அல்லது அவதூறாகவே இருக்க வேண்டும்.
எடுத்துக் காட்டினால் அது பற்றி விளக்கவும், பிறப்பைப் பற்றி வசை பாடியது உண்மையென்றால் அதை வாபஸ் பெறுவதில் நமக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நேசகுமார் தயவு செய்து என் மீது சுமத்தும் குற்றத்தை சுட்டிக் காட்டி நிரூபிக்கவும். (இது ஒரு அவசரப் பதிவு) அபூ முஹை
நன்றி!
அன்புடன்,
அபூ முஹை
<!– tag script Begins
tag script end –>
மறுமொழியொன்றை இடுங்கள்