கேள்வி : மார்க்க சம்பந்தமான கேள்விகள் எழுகின்ற போது சபையிலுள்ள மக்கள், கருத்துக்கள் வெளியிடவும், மார்க்கத் தீர்ப்பு (ஃபத்வா) வழங்கவும் முற்பட்டு விடுகின்றனர். இவ்வாறு முற்படுவோர் பெரும்பாலும் மார்க்க ஞானம் அற்றவர்களாகவே உள்ளனர். இச்செயல் அல்லாஹ் ரசூலுக்கு பொருத்தமானதா? இதைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?
ஃபத்வா: மார்க்க அறிவில்லாதோர் மார்க்கம் பற்றிப் பேசுவது தடைசெய்யப்பட்டதாகும், அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது:
‘வெட்கக் கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானவற்றையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும் எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இரட்சகன் தடை செய்துள்ளான் என (முஹம்மதே!) கூறுவீராக!’ (அல்குர்ஆன் அல்அஃராப்:33)
எனவே அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுவதிலிருந்து தவிர்ந்து கொண்டு பேணுதலாக இருப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். எனெனில் கருத்துச் சொல்வதற்கு இடம்பாடான உலக விவகாரங்களுடன் தொடர்பான விஷயம் அல்ல இது.
மறுமொழியொன்றை இடுங்கள்