கேள்வி : மனிதனில் ஜின் நுழையும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறதா?
ஃபத்வா: மனிதனில் ஜின் நுழைய முடியும் என்பதற்கு குர்ஆன் சுன்னாவில் ஆதாரம் இருக்கிறது.
‘வட்டியை உண்போர் (மறுமையில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்’ (அல்குர்ஆன் அல்பகரா 2:275)
இவ்வசனத்திற்கு விரிவரை எழுதும் போது பிரபல தஃப்ஸீர் ஆசிரியர் இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் ‘வட்டி சாப்பிடுவோர் (இவ்வுலகில்) ஜின் பிடித்தவன் எழுவது போன்றே மறுமையில் கப்ரிலிருந்து எழுவார்கள்’ என்று கூறுகிறார்கள்.
‘ஆதமுடைய மகனின் நாடி நாளங்களிலெல்லாம் ஷைத்தான் ஓடுகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஜின் மனிதனில் நுழைய முடியுமென்பதே அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினினரின் நிலைப்பாடாகும் என்று இமாம் அல் அஷ்அரீ தனது மகாலாது அஹ்லிஸ் ஸுன்னா வல்ஜமாஆ என்ற நூலில் குறிப்பிடுகிறார். இதற்கு ஆதாரமாக 2:275 வசனத்தை முன் வைக்கிறார்.
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களது மகன் அப்துல்லாஹ் இமாம் அவர்களிடம் தந்தையே! சிலர் மனிதனில் ஜின் நுழைய முடியாது என்று கூறுகின்றனரே? என்று வினவினார். அதற்கு இமாம் அவர்கள் மகனே! அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று கூறினார்கள்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் பைத்தியம் பிடித்த ஒரு குழந்தையை கொண்டு வந்து காட்டினார். அக்குழந்தையைத் தமது கையில் எடுத்த நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் விரோதியே! வெளியே செல்! அல்லாஹ்வின் விரோதியே வெளியே செல்! நான் அல்லாஹ்வுடைய தூதர்!’ என்று கூறினார்கள். குழந்தை குணமடைந்தது. (அஹ்மது, ஹாகிம், பைஹகீ)
ஆக, மனிதனில் ஜின் நுழைய முடியும் என்பதற்கு குர்ஆனிலிருந்து ஒரு ஆதாரமும் சுன்னாவிலிருந்து இரண்டு ஆதாரங்களும் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதுவே அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரதும் ஸலஃபிய அறிஞர்களதும் நம்பிக்கையாகும். அத்துடன் பல நிகழ்வுகளும் இதற்குச் சான்றாக இருக்கிறது.
அதேவேளை பைத்தியம் ஏற்படுவதற்கு மூளைக்கோளாறு நரம்புத் தளர்ச்சி போன்றவையும் காரணமாக அமையும் என்பதை நாம் மறுக்கவில்லை.
hi
have any doubt ? contact me
+94776031152
or add me in fb= fazlandot
பின்னூட்டம் by fazlan — ஜூன்17, 2011 @ 12.24