இஸ்லாம்தளம்

பித்அத் என்றால் என்ன?

கேள்வி : பித்அத் என்றால் என்ன? நல்ல பித்அத் என ஒன்று உள்ளதா? ‘இஸ்லாத்தில் ஒரு நல்ல வழிமுறையை யார் உண்டாக்குகிறாரோ…’ என்று வரக்கூடிய நபிமொழியின் கருத்து என்ன?

ஃபத்வா: நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத, நேர்வழி நடந்த நான்கு கலீபாக்களுடைய முன்மாதிரிகள் எதுவும் இல்லாத ஒரு காரியத்தை மார்க்கமாகக் கருதிச் செய்வது பித்அத்தாகும்.

‘அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(யான) தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா?’ என அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் அஷ்ஷுரா:21)

‘எனது வழிமுறையையும், நேர்வழி நடப்போரான எனது கலீபாக்களின் வழி முறையையும் எடுத்து நடப்பதுடன் அவைகளை கடவாய்ப் பற்களால் கவ்விப்பிடித்துக் கொள்ளுங்கள்! புதுமையான காரியங்கள் அனைத்தையும் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது)

எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் நேர்வழி நடந்த கலீபாக்களும் காட்டித்தராதவற்றை மார்க்கமாகச் செய்வோர் பித்அத்வாதிகளே!

இறைவனின் திருநாமங்கள், ஷரீஅத் சட்டங்கள் போன்ற அனைத்திலும் பித்அத் தோன்ற வாய்ப்பிருக்கிறது.

மக்களின் வழக்காறுகள் மொழி ரீதியான நூதனமானவை என்று அழைக்கப்பட்டாலும் அவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த மார்க்க ரீதியான பித்அத்துகளாகக் கருதப்பட மாட்டாது.

மார்க்கத்தில் நல்ல பித்அத் என ஒன்று கிடையாது. ஏனெனில் நல்ல வழிமுறைகள் என்பது குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் அமைந்தவைகளாகும்.

ஸுன்னத் ஹஸனா என்பது ஏற்கனவே இருந்த ஒரு ஸுன்னத்தை புதிதாக அமல் செய்ய ஆரம்பித்தல். விடுபட்டுப்போன ஒரு ஸுன்னத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தல். ஒரு இபாதத்தை நிறைவேற்ற துணையாக அமைகின்ற ஒரு விஷயத்தை செய்தல் போன்ற அனைத்தையும் உள்ளடக்குகின்றது. எனவே ஸுன்னா என்ற பதம் இங்கு மூன்று கருத்துக்களில் பிரயோகிக்கப்படுகிறது.

அ. ஏற்கனவே இருந்த ஒரு ஸுன்னத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தல்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கூட்டத்தினர் வந்தனர். இவர்களின் வறுமையைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு தர்மம் கொடுக்குமாறு ஸஹாபாக்களை ஆர்வமூட்டினார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு நபித்தோழர் ஒரு பை நிறைய வெள்ளியைக் கொண்டு வந்து நபிகள் நாயகத்திடம் ஒப்படைத்தார். அப்போது தான் ‘யார் ஒரு ஸுன்னத்தை உயர்பிக்கிறாரோ அவருக்கு அதனுடைய நன்மையும் அதனைச் செயபவருடைய நன்மையும் உண்டு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)

எனவே இந்த நபித்தோழர் ஏற்கனவே இருந்த ஒரு ஸுன்னத்தை அமல் செய்து காட்டினாரே தவிர புதிதாக ஒரு செயலை ஆரம்பித்துச் செய்யவில்லை.

ஆ. விடுபட்ட ஒரு ஸுன்னத்தை திரும்பவும் அமல் செய்ய ஆரம்பித்தல்.

இ. ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு இபாதத்தை நிறைவேற்றுவதற்குத் துணையாக அமைகின்ற ஒரு விஷயத்தைச் செய்தல். மத்ரஸாக்களை நிர்மாணித்தல், புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுதல் போன்றவை நேரடியாக இபாதத்தாக இல்லாவிட்டாலும் இன்னொரு இபாதத்திற்கு உதவியாக அமைகின்ற காரணத்தால் இவைகளும் ஸுன்னாவைச் சார்ந்த இபாதத்துகளே தவிர பித்அத்கள் அல்ல.

ஆக இவை அனைத்தையும் மேற்கூறப்பட்ட நபிமொழி உள்ளடக்கிக் கொள்ளும்.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: