இஸ்லாம்தளம்

நியாயமற்றதாக தோன்றினாலும் ஸஹீஹான ஹதீஸ்களை பின்பற்ற வேண்டும். (இப்னுமாஜா)

حدثنا محمد بن رُمْحِ بن الْمُهَاجِرِ الْمِصْرِيُّ أَنْبَأَنَا اللَّيْثُ بن سَعْدٍ عن بن شِهَابٍ عن عُرْوَةَ بن الزُّبَيْرِ أَنَّ عَبْدَ اللَّهِ بن الزُّبَيْرِ حدثه أَنَّ رَجُلًا من الْأَنْصَارِ خَاصَمَ الزُّبَيْرَ عِنْدَ رسول اللَّهِ في شِرَاجِ الْحَرَّةِ التي يَسْقُونَ بها النَّخْلَ فقال الْأَنْصَارِيُّ سَرِّحْ الْمَاءَ يَمُرُّ فأبي عليه فَاخْتَصَمَا عِنْدَ رسول اللَّهِ فقال رسول اللَّهِ اسْقِ يا زُبَيْرُ ثُمَّ أَرْسِلْ الْمَاءَ إلى جَارِكَ فَغَضِبَ الْأَنْصَارِيُّ فقال يا رَسُولَ اللَّهِ أَنْ كان بن عَمَّتِكَ فَتَلَوَّنَ وَجْهُ رسول اللَّهِ ثُمَّ قال يا زُبَيْرُ اسْقِ ثُمَّ احْبِسْ الْمَاءَ حتى يَرْجِعَ إلى الْجَدْرِ قال فقال الزُّبَيْرُ والله إني لَأَحْسِبُ هذه الْآيَةَ نَزَلَتْ في ذلك ( فلا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حتى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا في أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا )


பேரீத்த மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக உள்ள ‘ஒரு வாய்க்கால்’ விஷயத்தில் ஸுபைர் (ரலி) மீது அன்சாரிகளைச் சேர்ந்த மனிதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தார். (வழக்கு என்னவென்றால்) தண்ணீரை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும், (தடுத்து தன் தோட்டத்திற்குப் பாய்ச்சக் கூடாது) என்பது அன்சாரி மனிதரின் வாதம். (தனது தோட்டத்துக்கு) நீர் பாய்ச்சும் வரை வாய்க்காலை அடைத்துக் கொள்வேன், அதன் பிறகே திறந்து விடுவேன் என்று ஸுபைர் (ரலி) மறுக்கிறார். இதுதான் வழக்கு!)

ஸுபைரே! (உனது தோட்டத்திற்கு) நீ நீர் பாய்ச்சி விட்டு, அதன் பின் உன் பக்கத்துத் தோட்டத்தாருக்காக தண்ணீரை விட்டு விடு!’ என்று நபி (ஸல்) அவர்கள் நீதி வழங்கினார்கள்.

‘அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மாமி மகன் என்பதனால் தான் (ஸுபைருக்கு சாதகமாக) தீர்ப்பு வழங்குகிறீர்களா?’ என்று அந்த அன்சாரி கேட்டார்.

(இதைக் கேட்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம், நிறம் மாறியது. பின்னர் (ஸுபைரை நோக்கி) ஸுபைரே! உனது தோட்டத்திற்கு நீ நீர் பாய்ச்சிக் கொள். அதன் பின்பும் தண்ணீரை தடுத்துக் கொள்! அது வரப்பு (வழியாக நிரம்பி வழிந்து) செல்லட்டும்! என்று (கோபமாகக்) கூறினார்கள்.

‘தங்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகளில் உம்மை நீதிபதியாக ஏற்று, நீ அளித்த தீர்ப்பு பற்றி தங்கள் உள்ளத்தில் அதிருப்தியும் கொள்ளாது, முழுமையாக கட்டுப்படும் வரை உமது இறைவன் மேல் ஆணையாக அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள். (4:65) என்ற வசனம் இவருக்காகவே இறங்கியதாக அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கருதுகிறேன் என்று ஸுபைர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: புகாரி 4585, முஸ்லிம் 2357, அபூதாவூத் 3630, இப்னுமாஜா 2480, திர்மிதி 1374, 5017 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. புகாரி, திர்மிதி ஆகிய நூல்களில் ‘ஹர்ரா’ என்னும் இடத்தில் இருந்த வாய்க்கால் விஷயத்தில்’ என்ற விபரம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.)

நமது விளக்கம்:

1. இந்த திருக்குர்ஆன் வசனத்தில், அல்லாஹ் தன் மீதே சத்தியம் செய்கிறான். முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யார் மீதும் எதன் மீதும் சத்தியம் செய்யக் கூடாது. அல்லாஹ் தான் படைத்தவற்றின் மீது சத்தியம் செய்வதை குர்ஆனில் பொதுவாக பார்க்க முடியும். ஆனால் இங்கே தான் சொல்ல வரும் விஷயத்தின் வீரியத்தை கவனத்தில் கொண்டு மனிதர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தன் மீதே சத்தியம் செய்கிறான்.

2. இந்த திருக்குர்ஆன் வசனம், நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பு சம்பந்தமான வசனமாக இருந்தாலும், இந்த வசனத்தின் மற்றொரு புறம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதையும் விளங்க முடியும்.

3.  நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பிலும் அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களிலும் அதிருப்தி கொள்ளக் கூடாது.

4. நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகள் நியாயமற்றதாக நமக்கு தோன்றினாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், அதிருப்தி கொள்ளக் கூடாது. ஏனென்றால் இந்த ஹதீஸில் அன்சாரி மனிதருக்கு நபிகளாரின் தீர்ப்பு அநீதியாக தோன்றியது.

5. நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் அதிருப்தி கொள்வதும், அறிவுக்கு பொருந்தவில்லை என வாதிடுவதும் கட்டுப்பட மறுப்பதற்கு ஒப்பானதாகும். இப்படிப்பட்டவர்கள் உண்மையான விசுவாசிகளாக ஆகமாட்டார்கள்.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: