கேள்வி : தாடி வளர்த்தல், கரண்டைக்கு மேல் ஆடையணிதல் போன்றவற்றைச் ‘சில்லறைப் பிரச்சினை’ என்று கூறுவோர் பற்றி ஷரீஅத் என்ன கூறுகிறது?
ஃபத்வா: இவ்வாறு கூறுவது ஆபத்தானதும் மிகப் பெரிய குற்றமுமாகும். மார்க்கத்தில் சில்லறை என்று எதுவுமே கிடையாது. மார்க்கத்தில் உள்ள எல்லாமே முக்கியமானவைகளாகவும் சீர்திருத்தத்தை உண்டுபண்ணக் கூடியனவாகவும் உள்ளன. எனினும் அவை அடிப்படை அம்சங்கள் (உசூல்) எனவும் கிளை அம்சங்கள் (ஃபுரூஉ) எனவும் இரண்டாகப் பிரிகின்றன. தாடி, ஆடை என்பன கிளைகளேயன்றி அடிப்படையானவையல்ல. என்றாலும் மார்க்கத்தில் எதனையும் சில்லறை என்று கூறுவது கூடாது. குறைகாணும் நோக்கத்தில், கிண்டல் செய்யும் பாணியில் அவ்வாறு கூறுபவர் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிவிடும் (முர்தத் என்ற) நிலைக்குப் போய் விடுவாரோ என்று அஞ்சப்படுகிறது. ஏனெனில் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
‘அல்லாஹ்வையும் அவனது வசனங்களையும் அவனுடைய தூதரையுமா நீங்கள் பரிகசித்துக் கொண்டு இருந்தீர்கள்? என்று நபியே நீர் கேட்பீராக. நீங்கள் நியாயம் கூற வேண்டாம். ஈமான் கொண்ட பின் நிச்சயமாக நிராகரிப்போராய் விட்டீர்கள்’ (அத்தவ்பா 9:65,66)
நபி (ஸல்) அவர்களே தாடி வைக்குமாறும், மீசையைக் கத்தரிக்குமாறும் எவினார்கள். எனவே எல்லாவற்றிலும் அவர்களது ஏவல் விலக்கல்களை மதித்து நடப்பது கட்டாயமாகும்.
மறுமொழியொன்றை இடுங்கள்