பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம்?
36 கேள்வி : பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் வரலாற்று ஆதாரங்களுடன் விளக்கவும். (மெஹ்ராஜ் ஹாட்மெயில் டாட் காம் மூலமாக)
பாபர் மசூதி இருந்த இடம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம். கேடுகெட்ட அரசியல் நடத்தி ஆட்சியை பிடிப்பதற்காக தேர்தல் நேரத்தில் பாபர் மசூதி இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்ற தார் பாயில் வடிகட்டிய பொய்யை அவிழ்த்து விட்டு பாரதீய ஜனதா என்ற கட்சியும் இந்துத்துவ அமைப்புகளும் இந்துச் சமுதாய மக்களிடம் அவர்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு ஓட்டுக்ளை பெறுகின்றன, கலவரங்களை தூண்டிவிடுகின்றன.
பாபர் மசூதி இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவாள்களிடம் இருக்கும் ஆதாரங்களே அவர்களுக்கு எதிராகத்தான் இருக்கின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இங்கே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளோம்.
ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றால், அது எங்குள்ளது?
வால்மீகி ராமாயணத்தில் சரயூ ஆற்றின் தென் கரையில் ஆற்றுக்கு ஒன்னரை யோஜன் (சுமார் 23 கி.மீ) தொலைவில் அயோத்தி அமைந்திருப்பதாக வர்ணிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமாயணம், அயோத்தி அருகே சரயூ ஆறு மேற்கு நோக்கி ஓடுவதாக கூறுகின்றது. ஆனால் தற்போதைய அயோத்தி சரயூ ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. அது 23 கி.மீ. தொலைவில் அமையவில்லை. மேலும் ராமாயணம் சரயூ ஆறு கங்கையுடன் இணைவதாகக் கூறுகின்றது. ஆனால் இன்றைய அயோத்தி அருகே ஓடும் சரயூ ஆறு ராப்தி நதியுடன் தான் இணைகின்றது. கங்கை நதியுடன் இணையவில்லை. இது குறித்து விரிவாக ஆய்வுகளை மேற்கொண்ட வின் ஷர்சிங் (ஐ.ஏ.எஸ்) குழுவினர் மேற்கு நோக்கி ஓடும் சரயூ ஆறு நேப்பாளத்தில் தான் உள்ளது என்றும், பாபாய் என்னுமிடத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த பிறகு ‘ம’ வடிவில் திசை திரும்பும் சரயூ ஆறு கிழக்கு நோக்கி ஓடுகின்றது என்றும் கூறுகின்றனர். எனவே ராமாயணம் குறிப்பிடும் அயோத்தி, நேப்பாளத்தில் மேற்கு நோக்கி ஓடும் சரயூ ஆற்றின் தென்கரையில் தான் அமைந்திருக்க முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வருகின்றனர். (‘The Secular Emperor Babar” P.18 Published by Lokgeet Parkashan. P.B.29. SIRHIND 140406)
சங்பரிவாரக் கும்பல் இந்து நாடான நேப்பாளத்திற்கு சென்று அங்கே ராமர் கோவிலைக் கட்டுவது தான் வால்மீகி ராமாயணம் படி பொருத்தமாக இருக்கும். அது இந்து நாடு என்பதால் இவர்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்