ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம்.
25 கேள்வி : ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? அதாவது எனது சேமிப்பிற்காக ஒரு கிலோ தங்கம் வாங்கினேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து 2.5 சதவிகிதம் ஜக்காத்தை முதல் வருடம் மட்டும் கொடுத்து விட்டால் போதுமா? அல்லது அதற்கு ஒவ்வொரு வருடமும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தாருங்கள். (பீர் முஹம்மது, ஜித்தா, சவூதி அரேபியா, சவூதி ஆன் லைன் மெயில் மூலமாக)
‘நிஸாப்’ என்ற குறிப்பிட்ட அளவை நம்மிடமுள்ள நகையோ அல்லது பணமோ அடைந்து விட்டால் அதற்காக ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுக்க வேண்டுமென்பதே எல்லா இஸ்லாமிய அறிஞர்களதும் முடிவாகும்.
அதற்குச் சான்றாக பல ஹதீஸ்கள் காணப்பட்ட போதிலும் பின்வரும் ஹதீஸை உங்கள் கவனத்திற்கு தருகிறோம்.
‘மூன்று விஷயங்களைச் செய்யும் ஒருவர் ஈமானின் சுவையை அனுபவித்தவராவார். அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு இல்லை என்று நம்பிக்கை கொண்டு, தனது செல்வங்களிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஸகாத் கொடுப்பவர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முஆவியா அல்காழிரி (ரழி), நூல்: அபூதாவூது)
இந்த ஹதீஸ் ஸஹீஹானது என அஷ்ஷெய்க் நாஸிருத்தீன் அல்-அல்பானீ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஸஹீஹ் சுனன் அபூதாவூது, ஹதீஸ் எண் 1580)
மறுமொழியொன்றை இடுங்கள்