மரணித்த பின் ஒருவரது ஸாலிஹான பிள்ளைகள் தொடர்வார்களா?
24 கேள்வி : ஒரு மனிதன் இறந்தபின் அவனை தொடரும் மூன்று விஷயங்களில் அவனுக்காக துஆ கேட்கும் ஸாலிஹான பிள்ளைகள் என்று ஒரு விஷயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளைகள் தொடரும் (தொடருவார்கள்) என்பது சரியா? விளக்கவும். (சலீம்தீன், சிங்னெட் மெயில் மூலமாக)
ஒரு மய்யித்தைப் பின்தொடர்ந்து மூன்று விஷயங்கள் செல்லும்: 1. அவனுடைய குடும்பம் 2. சொத்து 3. அமல் அவற்றில் இரண்டு திரும்பி விடும். ஒன்று மாத்திரம் அதனுடன் இருக்கும். குடும்பமும் சொத்தும் திரும்பி விடும். அமல் மாத்திரம் கூட இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்றைத் தவிர அவனது செயல்பாடுகள் முடிவுக்கு வந்து விடுகின்றன. அவைகளாவன: நிலையான தர்மம், பயனளிக்கும் கல்வி, தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள குழந்தை ஆகியனவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
முடிவுக்கு வராத செயல்பாடுகள் என்பதில் தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள குழந்தை என்று வந்துள்ளது உண்மை தான்.
ஆனால் அதற்கு அவ்வாறு பொருள் கொள்ளக்கூடாது.
முந்தைய இரண்டு விஷயங்களுக்கு எவ்வாறு பொருள் கொண்டோமோ அவ்வாறே மூன்றாவது விஷயத்திற்கும் பொருள் கொள்ள வேண்டும். அதாவது
நிலையான தர்மம், இறந்த பின் அவரைப் பின் தொடரும் என்றால் அதனால் கிடைக்கும் நன்மைகள் அவரை சென்றடையும் என்பதாகும்.
பயனளிக்கும் கல்வி அது போன்றே அதன் நன்மைகள் அவரைச் சென்றடையும்.
தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள குழந்தை என்றால் அவர் செய்யும் துஆவின் பலாபலன்கள் அவரைச் சென்றடையும், அதாவது துஆவின் மூலம் நன்மைகள் கிடைக்கும், தீமைகள் அழிக்கப்படும்
இவ்வாறு பொருள் கொண்டால் குழப்பம் இருக்காது.
இரண்டாவது, மரணத்திற்குப் பின் ஒரு மனிதனின் முக்கியப் பிரச்சனையே நன்மைகள் அதிகமாக்கப்பட வேண்டும் என்பதே, அதற்கு முன் பிள்ளைகள் பின்தொடர்வார்கள் என்பது ஒன்றும் மிகப்பெரிய முக்கியத்தும் வாய்ந்தது அல்ல.
மூன்றாவது, ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்று செயல்பாடுகள் முடிவுக்கு வராது, அவனுடைய அமல்களோடு தொடர்பு கொண்டிருக்கும். இந்த மூன்றும் அவனது அமல்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
மறுமொழியொன்றை இடுங்கள்