தலைவாரிக் கொள்ள தடை – ஹதீஸின் விளக்கம் என்ன?
22 கேள்வி : அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் தோழமை கோண்டது போன்று தோழமை கொண்ட நபித்தோழர் ஒருவரை நான் சந்தித்தேன். எங்களில் ஒருவர் தினந்தோறும் தலைவாரிக் கொள்வதையும், தான் குளிக்குமிடத்தில் சிறுநீர் கழிப்பதையும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர் என்று அவர் அறிவித்தார் என ஹுமைத் அல் ஹிம்யரி என்பார் அறிவிக்கிறார். ஹதீஸ் எண்: 28 அபூதாவூது. தினந்தோறும் தலைவாரிக் கொள்வதை தடை செய்துள்ள இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா? விளக்கம் தரவும். (நாஸர், யாகூ மெயில் மூலமாக)
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதே. அது ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்தது என ஷேய்க் நாஸிருத்தீன் அல்பானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.(ஆதாரம்: ஸஹீஹ் சுனன் அபூதாவூது 1-19)
இந்த ஹதீஸில் தடுக்கப்பட்டுள்ள ‘ஒவ்வொரு நாளும் தலைவாரிக் கொள்வது’ என்பது பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் கருத்துக்களைக் கூறுகின்றனர்.
இங்கு வந்துள்ள தடை ‘ஹராம்’ என்பதைக் குறிக்காது. மாறாக அதை ‘மக்ரூஹ்’ என்றே கொள்ள வேண்டும்.
‘தலைவாருதல்’ என்பது தலையைக் கழுவி அதற்கு எண்ணை இட்டு அலங்காரம் செய்வதையே குறிக்கும். ஏனெனில் அவ்வாறு செய்வது அதிகமான நேரத்தை எடுக்கும், அன்றி வழமையாக தலைவாரிக் கொள்வதைக் குறிக்காது.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
மறுமொழியொன்றை இடுங்கள்