நோன்பின் நிய்யத்தை எவ்வாறு எப்போது செய்வது?
21 கேள்வி : நோன்பிற்கான நிய்யத் (வாஜிபு) எவ்வாறு செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? (ராஷித், சூபாநெட் மெயில் மூலமாக)
‘ரமழான் நோன்பு வாஜிபானது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக நம்ப வேண்டும். நாளை ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது என்று அறிந்தால் நோன்பு நோற்பதற்கு நிய்யத் வைப்பது அவசியம். நிய்யத்திற்குரிய இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயால் மொழிவது வாஜிப் அல்ல என்பது எல்லா முஸ்லிம்களாலும் ஏகோபிக்கப்பட்ட விஷயம்’ என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (மஜ்மூகூ ஃபதாவா 24-214)
ரமளான் நோன்பிற்குறிய நிய்யத்தை ஒவ்வொரு நாள் இரவும் வைக்க வேண்டும். வாயால் (நவைத்து……) என்று கூறுவது கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ அவ்வாறு கூறியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
மறுமொழியொன்றை இடுங்கள்