ஜக்காத் கொடுப்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளன, எதை பின்பற்றுவது?
20 கேள்வி : ஜக்காத் கொடுப்பது பற்றி அபூ ஆமினா பிலால் பிலிப்ஸ் அவர்களின் விளக்கம் வேறு மாதிரியாகவும் (ஒவ்வொரு வருடமும் சென்ற முந்தைய வருடம் கொடுத்த செல்வங்களுக்கும் சேர்த்து கொடுக்க வேண்டும் என்றும்) சகோதரர் பி.ஜே அவர்களின் விளக்கம் வேறுமாதிரியாகவும் (ஒரு வருடம் கொடுத்த செல்வத்திற்கு மறுவருடம் கொடுக்க தேவையில்லை என்றும்) இரு வேறு கருத்துக்கள் உள்ளனவே இதில் எதை நாம் பின்பற்றுவது? விளக்கவும். (அப்துல் குத்தூஸ் – ரஹிமா, அராம்கோ மெயில் மூலமாக)
நாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் பின்பற்றுமாறே ஏவப்பட்டுள்ளோம்.
அல்குர்ஆன், சுன்னாவை எடுத்து வைப்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்ளும் வேளையில் அவர்களது கருத்துக்களில் அல்குர்ஆன் சுன்னாவுக்கு எக்கருத்து மிக நெருக்கமாக இருக்கின்றதோ அதுவே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அந்த வகையில் ஜக்காத் கொடுக்கும் விஷயத்தில் அபூ ஆமினா பிலால் பிலிப்ஸ் அவர்களது கூற்றே அல்குர்ஆன், சுன்னா மற்றும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களது முடிவுக்கும் ஒத்ததாக இருக்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
மறுமொழியொன்றை இடுங்கள்