நோன்பு திறக்க வசதியிருந்தும் பள்ளிக்குச் சென்று நோன்பு திறக்கலாமா?
19 கேள்வி : பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? என்ற கேள்விக்கு வழிமுறை என்பது இல்லை என கூறியுள்ளீர்கள். இங்கு உள்ள பள்ளிகளில் குறிப்பாக ரஹிமாவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யும் தஃவா சென்டரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் (ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பள்ளி வெளி வாயிலில் வைத்து) வசூல் செய்து அதிலிருந்து தான் ஏற்பாடு செய்கிறார்கள். நோன்பு திறக்க தம்மிடம் வசதியிருந்தும் சில சகோதரர்கள் பள்ளிக்கு சென்று நோன்பு திறப்பதினால் அவர்களுக்கு வசூல் செய்யும் சுமை கூடுதலாகின்றது, இவ்வாறு செய்வது கூடுமா? விளக்கவும். (அப்துல் குத்தூஸ் – ரஹிமா, அராம்கோ மெயில் மூலமாக)
‘யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டு’ என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (நூல்கள்: அஹ்மது, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி)
நோன்பு திறக்க வைப்பது மிகச் சிறந்த அமலாகும். அந்த அமலின்பால் மக்களை ஆர்வப்படுத்தும் வகையில் பள்ளிவாசலில் வைத்து வசூல் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது. குறிப்பாக இப்படியான நல்ல அமல்களின் மீது மக்கள் நாட்டமில்லாமல் ஒதுங்கிக் செலலக்கூடிய இன்றைய காலத்தில் இந்தச் செயல் மிகவும் முக்கியமானதாகும். அதேவேளை இந்த வசூல் பலவந்தமாக செய்யப்படுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.
மறுமொழியொன்றை இடுங்கள்