வேகமாக தொழும் இமாமை பின்பற்றலாமா?
18 கேள்வி : சிறிது வேகமாக தொழும் இமாமை பின்பற்றி தொழலாமா? (ஹமீது ஜுல்பிஹ் – யாகூமெயில் மூலமாக)
இமாமத் செய்கிறவர் அதிகம் நீட்டாமலும், மிக வேகத்தில் அல்லாமலும் தொழுவிக்க வேண்டுமென்பதே நபிவழி.
அதிகம் நீட்டித் தொழுவித்த முஆத் (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். அதேவேளை, ‘திருடர்களில் மிக மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன். அவன் தான் தொழுகையில் ருகூவையும் சுஜுதையும் பூரணமாக செய்யாதவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் கேட்டிருக்கும் ஒரளவு வேகமாகத் தொழுவிக்கும் இமாமுக்குப் பின் நின்று தொழலாம். இன்ஷா அல்லாஹ் தொழுகை கூடும்.
மறுமொழியொன்றை இடுங்கள்