பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத்தா?
17 கேள்வி : பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? (இக்பால் ரஹீமா சவூதி அரேபியா – யாகூமெயில் மூலமாக)
நோன்பு திறப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்.
‘ஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சி ஒன்று. மற்றது அல்லாஹ்வை சந்திக்கும் போது மறுமையில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி’ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நோன்பை எங்கு திறந்தாலும் சுன்னத் நிறைவேறிவிடும். பள்ளியில் திறப்பது சுன்னத் என்பதைக் கூறும் நபி மொழி ஏதும் கிடையாது. எனவே பள்ளியிலும் திறக்கலாம், வேறு இடங்களிலும் திறக்கலாம்.
மறுமொழியொன்றை இடுங்கள்