வட்டி வாங்கும் உறவினர் வீட்டில் சாப்பிடலாமா?
16 கேள்வி : வட்டி வாங்கும் உறவினர் என்று தெரிந்தும் அவர்கள் விருந்துக்கு வரச் சொன்னால்.. அவர்கள் வீட்டில் உணவு உண்ணலாமா? அவர்கள் மனம் புண்படுமே என்று தவிர்க்க முடியாமல் அவர்கள் வீட்டில் சாப்பிட்டால் பாவமா? (சாஜுனா அய்யூப் – ஹாட்மெயில் மூலமாக)
வட்டிக்கு வாங்கக் கூடிய மற்றும் கொடுக்கக் கூடிய மக்களிடமிருந்து வந்த அன்பளிப்புகளை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டதாக அறிய முடிகிறது. எனவே அவர்கள் நமக்கு வழங்கும் உணவு ஹராமாக ஆகாது.
இருந்தும் நீங்கள் அந்த விருந்தில் கலந்து கொள்ள மறுப்பதன் மூலம் அவர்கள் திருந்த வாய்ப்பிருக்குமெனில் அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகும். அல்லாஹ் அறிந்தவன்.
மறுமொழியொன்றை இடுங்கள்