காயிப் ஜனாஸா தொழுகைக்கு அனுமதி உண்டா?
14 கேள்வி : காயிப் ஜனாஸா தொழுகை நடத்த மார்க்கத்தில் அனுமதியுண்டா? ஆதாரத்துடன் விளக்குங்கள். (ஜஹபர் சாதிக் ஈடிஏ அஸ்கான் மெயில் மூலமாக)
அபீசீனிய நாட்டு மன்னர் நஜ்ஜாஷி (அஸ்ஹமா) அவர்கள் மரணித்த அன்று நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் அவருக்காக (காயிப்) ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். (ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம் 951, அபூதாவூது 3204, இப்னுமாஜா 1534, திர்மிதி 1022)
இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு காயிப் ஜனாஸா தொடர்பாக மூன்று விதமான கருத்துக்கள் அறிஞர் பெருமக்களிடம் காணப்படுவதாக இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1. காயிப் ஜனாஸா தொழுகை பொதுவான ஒரு சுன்னா. முஸ்லிம்களில் யார் மரணித்தாலும் அவருக்காக தொழலாம்.
2. இது நஜ்ஜாஷிக்கு மட்டும் குறிப்பானது, ஏனையோருக்கு இது பொருந்தாது.
3. இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகிறார்கள்: யாராவது ஓர் ஊரில் மரணிக்கிறார். அவ்வூரில் அவருக்குத் தொழுகை நடத்தப்பட வில்லை என்று உறுதியானால் அவருக்காகத் தொழுகலாம். நபி (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷிக்காக தொழுகை நடத்தினார்கள், ஏனென்றால் அவர் காபிர்களுக்கு மத்தியில் வாழ்ந்து மரணித்தார். அவருக்குத் தொழுகை நடத்தப்பட வில்லை. அவருக்குத் தொழுவிக்கப்பட்டிருப்பின் அவருக்காக உள்ள கடமை நீங்கி விடுகிறது.
(பார்க்க: ஸாதுல் மஆத் பாகம் 1, பக்கம் 519, தாரு ஆலமில் குதுப் பதிப்பு)
இவற்றில் மூன்றாவது கருத்தே ஆதாரத்திற்கு நெருக்கமானதாகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
மறுமொழியொன்றை இடுங்கள்