உறவினர் இறந்திருக்க மற்றவர்கள் இல்லறத்தில் ஈடுபட தடை உண்டா?
13 கேள்வி : குடும்பத்தில் உள்ள ஒருவர் இறந்து விட்டிருந்தால்…அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் தாம்பத்திய உறவு மேற்கொள்ளலாமா? விளக்கம் தாருங்கள். (சலீம் யாகூ மெயில் மூலமாக)
‘முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய துதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால் அவர்கள் சொல்(வது) எல்லாம் ‘நாங்கள் செவியேற்றோம் (அதற்குக்) கீழ்படிந்தோம்’ என்பது தான், இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்’. (அல்குர்ஆன் 24:51)
எந்த விஷயமாக இருந்தாலும் குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரம் இருந்தால் அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் கூறுகிறது.
உங்கள் கேள்விக்கான தடை குர்ஆனிலோ அல்லது ஹதீஸ் கிரந்தங்களிலோ காணப்பட வில்லை. எனவே இதற்கான தடை ஏதும் இல்லை.
மறுமொழியொன்றை இடுங்கள்